Saturday, December 14, 2013

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது -வைகோ

விவசாயிகளை மீறிய சக்தி எதுவும் கிடையாது; கரும்பு விவசாயிகளின் அறப் போர் வெல்லும்! என்று சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் 09.12. 2013 அன்று டெல்லி செல்லும் விவசாயிகளை வழி அனுப்பி #மதிமுக  பொதுச் செயலாளர் #வைகோ வாழ்த்துரை வழங்கினார். அவரது உரை வருமாறு:

தேனாகத் தித்திக்கின்ற கரும்பை, வியர்வை கொட்டி விளை விக்கின்ற விவ சாயிகளே, இரும்பினும் உறுதியாகப் போராடினால்தான், உங்கள் கவலையும்,
கண்ணீரும் துடைக்கப்படும். எந்த வொரு போராட்டமும், கடைப்பிடிக்கின்ற ஒழுங்கு, நிலை நாட்டப்படுகின்ற உறுதியினால் தான் வெற்றியைத் தேடித் தரும்.விவசாயிகளை மீறிய சக்தி,இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது.

ஒரு காலகட்டத்தில் விவசாயிகள் பிரளயமாகப் புறப்பட்டபோது,அரசுகள் நடுங்கின; அதன்பின்னர் அடக்குமுறையை ஏவினர்;விவசாயிகளின் கை கால் களை முறித்து, மண்டையை உடைத்து,அவர்கள் மீதே பொய்வழக்கு களைப் போட்டு நசுக்கியதாலும்,அரசியல் கட்சிகள் சுயநலத் திற்காக விவசாயிகளின்
போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டதாலும், விவசாயிகளின் சக்தி சிதறி யது. இனி நாம் போராடிப் பயன் இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். வாழ வழி இன்றித் தவிக்கிறார்கள்.

நான் பல்லடம் விவசாயிகள் மாநாட்டில் சொன்னேன்:விவசாயிகள் ஒருசேர எழுந்தால்,எந்த அரசும் தலைவணங்கியே தீர வேண்டும். இந்த நாட்டில் பல் வேறு அமைப்புகள், தங்கள் கோரிக்கையை நிலைநாட்டு வதற்காகப் போராடு கிறார்கள்;வெற்றி பெறுகிறார்கள். அவர் களை நான் வாழ்த்துகிறேன். ஒரு
ஓட்டுநருக்குப் பாதிப்பு என்றாலும், அனைத்து ஓட்டுநர்களும் ஒன்றாகப் போ ராடு கிறார்கள். கோடிக்கணக்கான விவசாயிகளால் ஏன் ஒன்றுசேர முடிய வில்லை? விவசாயிகளை விடப் பாதிக்கப்பட்டவர்கள் யார்? இன்றைக்கு அடி யோடு நொறுங்கிக் கிடப்பவர்கள் விவசாயிகள் மட்டும்தான்.

சோறு போடுகிற விவசாயி, ஆடை களுக்காகப் பருத்தியை விளை வித்துத் தருகின்ற விவசாயி,சர்க்கரைக்குக்கரும்பை விளைவிக்கின்ற விவசாயி, நான்
ஒரு கிராமத்து விவசாயி. அரைக்கால் சட்டை போட்ட மாணவனாக, ஒவ்வொ ரு நாளும் காலை யிலும் மாலையிலும், பள்ளி விடுமுறை நாள்களில் பகல்
முழுவதும் எங்கள் நஞ்சைக் கரும்புத் தோட்டத்தில்,மாட்டாலையில் கரும்பு களைப் போட்டு அரைத்துச் சாறு பிழிந்து, சர்க்கரை வடிக்கின்ற காட்சிகளைப்
பார்த்து ரசித்தவன். இப்போது மழையும் பொழியாமல்,கண் மாயில் தண்ணீரும் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத துன்பத்தில் இருக்கிறோம்.


ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஒன்றுதிரட்டி, இந்தியத் தலைநகர் தில்லி யில் போராட்டம் நடத்துவதற்கு, என்னுடைய ஆருயிர்ச்சகோதரர் கணேச மூர்த்தி ஏற்பாடு செய்து இருக்கின்றார்.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகத்தை நிறுவிய தூண்களுள் ஒருவர் அவர். ஆனால், கட்சியைக் கடந்து, விவசாயிகளின் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.அனைத்துத் தரப்பு விவசாயி களும் நேசிக்கக்கூடிய ஒருவராக இருக்கிறார்.

சென்னை மையத் தொடர்வண்டி நிலையத்தில் இருந்து,இப்படி ஒரே நேரத்தில் 1200 விவசாயிகள் ஒன்றுசேர்ந்து தில்லி நோக்கிப் புறப்படுவதைப் போன்ற நிகழ்வு,இதுவரையிலும் நடந்தது இல்லை.ஒருங்கிணைத்தவர், நம்முடைய
கணேசமூர்த்தி அவர்கள். இந்தப் போராட்டத்திற்காக, கர்நாடகத்தில் இருந்து வருகிறார்கள். ஆந்திரப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் சட்டீஸ்கர் என பல மாநி லங்களில் இருந்தும் வருகிறார்கள்.

அந்தந்த மாநில விவசாயிகள் சங்கத் தலைவர்களை எல்லாம் கணேச மூர்த்தி சந்தித்து ஆதரவு திரட்டினார். காங்கிரஸ் கட்சியைத் தவிர, அனைத்துக் கட்சி
அலுவலகங்களுக்கும் சென்றார்.இந்தப் பயணத்தின் ஒருங்கிணைப்பாளரும், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவருமான பொன்னையன் அவர்கள் அதைத் தெளிவாகச் சொன்னார்.

வாழ்நாளெல்லாம் விவசாயிகளுக்காகப் போராடி வருகின்ற, சட்டமன்ற முன் னாள் உறுப்பினர் கே.எஸ். பழனிச்சாமி அவர்கள்,இந்தப் போராட்டத்தின் நோக் கங்களைத் தெளிவுபடுத்தினார்.தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் இங்கே வந்து இருக்கின்றீர்கள். பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் வந்து இருக்கின்றார்கள். நீங்கள் வெறும் 1200 பேர் மட்டும் அல்ல;நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் பிரதிநிதிகள் நீங்கள்.

நமது கோரிக்கை மிகத் தெளிவானது. கரும்பு டன்னுக்கு 3500ரூபாய் கொடு. தற் போது தமிழ் நாட்டில், 2350 ரூபாய் கொடுக் கின்றார்கள். வேறு சில மாநிலங்
களில் கூடுதலாகக் கொடுக்கின்றார்கள். அந்தத் தொகையை,அந்தந்த மாநில அரசுகளே ஏற்றுக் கொள்கின்றன. தமிழ்நாட்டில் அந்த நடைமுறை இல்லை.

எம்.எஸ். சுவாமிநாதன் சொல்லுகிறார்: கரும்பு விளைவிப்பதற் கான செலவு எவ்வளவு ஆகிறதோ, அதைவிட 50 விழுக்காடு கூடுதலாகக் கொடுத்தால்தான்
கட்டுபடியாகும் என்கிறார்.
பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்வதில் பெரும் பணம் செலவாகிறது என்று சொல்லிக்கொண்டு, பெட்ரோல் டீசல் விலையை அடிக்கடி உயர்த்துகிறீர்கள்; அந்தச் சுமையை அனைத்து மக்களின்தலையிலும் சுமத்துகிறீர்கள். பிரேசில் நாட்டில், பெட்ரோலில் எத்தனால் 100 விழுக்காடு கலக்கப்படுகிறது

ஆனால், நாம் இங்கே 25 விழுக்காடாவது கலக்க வேண்டும் என்று முதற்கட் ட மாகக் கோரிக்கை வைக்கின்றோம். நம்மை ஏமாற்றுவதற்காக, சரத்பவார்
தலைமையில், அமைச்சர்கள் சிதம்பரமும், தாமசும் சேர்ந்து, ஒரு மோசடி நாட கம் நடத்தி இருக்கின்றார்கள். 10 விழுக்காடு எத்தனால் கலக்கப்படும் என்றும்,
சர்க்கரை ஆலைகளுக்கு வட்டி இல்லாமல் 7200 கோடி ரூபாய் தரப்படும் என் றும் அறிவித்து இருக்கின்றார்கள்.நான் இதற்குக் கண்டனம் தெரிவிக்கின் றேன்.

சர்க்கரை ஆலைகளுக்குக் கொடு;வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆ னால், விவசாயிகளுக்கு ஏன் வட்டி இல்லாக் கடன் கொடுக்க முன்வரவில் லை? ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியை ரத்துச் செய். எத்தனாலை முழு மையாகப் பயன்படுத்தினால், இந்திய அரசுக்கு 20,000 கோடி ரூபாய் அயல் நாட்டுச் செலாவணி சேமிக்கப்படுமே?

இப்போது, எத்தனாலையும் மொலாசசையும் நீங்கள் எதற்காகப் பயன்படுத்து கின்றீர்கள்? 

டாஸ்மாக் மது வகைகளுக்கு,சாராயக் கடைகளுக்கு, ஒயின், பிராந்தி உற்பத் திக்குப் பயன் படுத்துகின்றீர்கள்.மக்களின் உடல்நலத்தைக் கெடுப்ப தற்கு, உயிரைக் குடிப்பதற்குப் பயன் படுத்துகின்றீர்கள். இப்போது நம்மிடம் 88  இலட் சம் டன் சர்க்கரை இருப்பு இருக்கின்றது.

இந்த வேளையில், வெளிநாடுகளில் இருந்து ஏன் இறக்குமதி செய்கின்றீர்கள்?

காங்கிரஸ் தலைமையிலான அரசு,மரணப் படுக்கையில் விழுந்து விட்டது. மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றது. எந்த நேரமும் கதை முடியலாம். இனி எந்தக் காலத்திலும் நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது. எனவே, கடைசிக் காலத்திலாவது,விவசாயிகளுக்கு எதையாவது செய்து விட்டுப் போங்கள்.

இன்று உங்கள் பயணத்திற்காக ஒரு தொடர்வண்டியை ஏற்பாடு செய்து இருக் கின்றார். இதைக் கேட்டுத்தான் மற்ற மாநில விவசாயிகளும், ஆர்வத்தோடு
புறப்பட்டு வருகின்றார்கள்.

கடந்த ஆண்டு சாஞ்சியில் நாங்கள் நடத்திய அறப்போர் குறித்து, பொன்னை யன் அவர்கள் இங்கே எடுத்து உரைத்தார்கள்.அங்கே எங்களை மறிப்பதற்கு,
இராணுவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

இந்தத் தொடர்வண்டி நிலையத்தில் நீங்கள் சிமெண்டுத் தரையில் அமர்ந்து இருக்கின்றீர்கள். அங்கே நாங்கள் தேசிய நெடுஞ்சாலையில், கொதிக்கின்ற வெயிலில்,சுற்றிலும் மலக்கழிவு களுக்கு நடுவே அமர்ந்து இருந்தோம். அங் கேயே படுத்துக் கிடந்தோம்.

இந்த உங்களது பயணத்தில் ஒழுக்கம் தேவை. யாராவது மது அருந்தினால், அவரை அடுத்த நிலையத்தில் கீழே இறக்கி,ஊருக்குத் திருப்பி அனுப்பிவிடுங் கள். யாராவது பாட்டிலைப் பதுக்கி வைத்துக் கொண்டு,இரவு நேரத்தில் குடித்து விடலாம் என்று திட்டமிட்டால், வாடையைக் கண்டுபிடித்து விரட்டி விடுங் கள்.கருணை காட்டாதீர்கள், ஈவு இரக்கம் பார்க்காதீர்கள்.தில்லியில் இது கடுங் குளிர் காலம்.

எனவே, கம்பளியோடு வாருங்கள்; தலைக்குல்லாயோடு வாருங்கள் என்று முன்கூட்டியே அறிவித்து இருக்கின்றோம். அப்படியா? தில்லியில் கடுங்குளி ரா? ஒரு குவார்ட்டர் அடிச்சால் சரியாகப் போய்விடும் என்று யாரேனும் கருதி னால், அவர்கள் இங்கிருந்தே ஊருக்குத் திரும்பிப் போய் விடுங்கள். (பலத்த சிரிப்பு). நான் உங்களோடு இந்தப் பயணத்தில் வருவதாக இருந்தால், ஒவ்வொ ரு வராகச் சோதித்துப் பார்த்துக் கண்டுபிடித்து விடுவேன்.

நான் எதற்காக இவ்வளவு கண்டிப்பாகச் சொல்லுகிறேன்? ஆயிரம் பேர் ஒழுங் காகப் போகின்ற இடத்தில், ஒரு ஐந்து பேர் நமது பேரணிக்குக் கெட்ட பெயரை
வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அங்கே நீங்கள் தங்குவதற்கு,உணவுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் தனி மனித இராணுவம் போல இருந்து கணேசமூர்த்தி செய்து வைத்து இருக்கின் றார்.பயணத்தில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒருவர் தலைவராக இருந்து கவ னித்துக் கொள்ள வேண்டும். உடல் நலம் இல்லை என்றால், உடனே சொல் லுங்கள்.நீங்கள் பத்திரமாகச் சென்று திரும்ப வேண்டுமே என்ற கவலையோடு தான் சொல்லுகிறேன்.

இந்தப்போராட்டம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.தமிழகத்தில் விவ சாயிகள் பிரச்சினை என்றால், அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர வேண் டும்; அரசியல் கட்சிப் பிளவுகள் கூடாது. யாருக்கு வேண்டுமானாலும் வாக்கு
அளியுங்கள். அப்படி நாம் திரண்டால், அரசுகள் அடிபணிந்து தான் தீர வேண் டும். காவல்துறை,இராணுவ அடக்குமுறைகள் எடுபடாது. கலப்பையும் பிடிக் கத் தெரியும்; கம்பு எடுத்து அடிக்கவும் தெரியும்.

ஆனால், அமைதியாக இருக் கின்றார்கள். நான் கலப்பை பிடித்தவன்; கமலை யில் தண்ணீர் இறைத்தவன். எங்கள் வீட்டுத் தொழுவத்தில் மாடுகள், குதிரை
களைப் போல ஓங்கி வளர்ந்து செழிப்பாக இருந்தன. இப்போது எல்லாம் போய் விட்டது.

நாம் இப்படியே இருப்போம் என்று கருதாதீர்கள். இந்த அறப்போராட் டத்தில் கரும்பு விவசாயிகள் பெறுகின்ற வெற்றியின் பலன்,அனைத்து விவசாயிக ளுக்கும் கிடைக்கும். அது காவிரிப்பிரச்சினையா, அட்டப்பாடியா, முல்லைப் பெரியாறா, பாலாறா,அனைத்துக்கும் நம்பிக்கை தரும்.தமிழகத்து விவசாயி களின் வாழ்வாதாரங்களைக் காக்க முன்னோட்டமாக அமையும்!

உங்கள் போராட்டம் வெற்றி பெறும். வாழ்த்துகிறேன், வழி அனுப்புகிறேன்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment