Wednesday, December 11, 2013

‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு-பாகம் 1

சிவகாமியின் சபதம்’#வைகோ வின் இலக்கியச் சொற்பொழிவு

அனைவருக்கும் வணக்கம். “விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு, விட்டகுறை வந்து தொட்டாச்சு” என்ற சொற்களால் தூண்டப்பட்டு இந்த சிவகாமியின் சப தத்தை எழுதினேன்’ என்று கூறிய கல்கி ஆசிரியர் அவர்களுக்குப் புகழ் விழா நடத்துகிறோம்; உரையாற்ற வாருங்கள்’ என்று கலைமாமணி விக்ரமன் அவர் கள் அழைத்தவுடன், கிடைத்தற்கு அரிய வாய்ப்பாகக் கருதி இசைவு அளித் தேன். இத்தகைய விழாவில் என்னை உரையாற்றுகின்ற தகுதிக்கு உடையவ னாக, உங்கள் முன்னால் நிறுத்தி இருக்கின்ற தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் திற்கு, அதன் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது தலையாய கடமை ஆகும்.


நான் பெற்ற பெரும்பேறு


இலக்கிய உலகில் கல்கி அவர்களின் பெருமைகளை எடுத்துசொல்ல, தஞ்சை யில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. புகழ்மிக்க பூண்டி வாண்டையார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தஞ்சை விழாவில், ‘பொன்னியின் செல்வன்’ பற்றி உரையாற்றுகின்ற பெரும்பேறு பெற்றேன். இன்று தலைநகர் சென்னையில், ‘சிவகாமியின் சபதம்’ குறித்து உரையாற்றுக எனப் பணித்து இருக்கிறீர்கள்.

சின்னஞ்சிறு வயதில் பள்ளி மாணவனாக இருந்தபோது என் இல்லத்திற்கு வழக்கமாக வந்து கொண்டு இருந்த கல்கி வார ஏடுகள் முழுமையாகப் பாது காத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தால், அவ்வப்போது தொடர்கதையாக வந்த ஒரு சில அத்தியாயங்களை, ஆர்வத்தின் காரணமாக பொன்னியின் செல் வனை - பார்த்திபன் கனவை - சிவகாமியின் சபதத்தைப் படித்ததால் ஏற்பட்ட உணர்ச்சிதான், பள்ளி மாணவனாக இருந்தபோது பழந்தமிழ் மன்னர்களைப் பற்றிய உணர்வு, தமிழர்களின் கலையைப் பற்றிய, கடல் கடந்து பல நாடு களுக்குப் படையெடுத்துச்சென்று பெற்ற வெற்றிகள், போற்றப்பட்ட கலைகள், இசையும், சிற்பியும், சித்திரமும் அவர்கள் பாராட்டி வந்த பாண்பாடும் இவை எல்லாம் இதயத்தை முழுமையாக ஈர்த்த காரணத்தால் வந்த உணர்வுதான் தமிழ் மேல் ஏற்பட்ட எல்லையற்ற காதல். அது ஊனில் உதிரத்தில் ஊடுருவி விட்ட காரணத்தால், தமிழருக்குப் பெரும் சிறப்புச் செய்த பேரறிஞர் அண்ணா வின் இயக்கத்திலே நான் போய் இணைந்தேன்.


கல்கியின் படைப்புகள்


வரலாற்று நாவல்களைப் பற்றி இங்கே உரையாற்ற வேண்டும். கல்கி ஆசிரி யரின் படைப்புகள், எழுத்து உலகில் அவர் சாதித்த சாதனைகள் பல. 1930 களில் அவர் ‘ஆனந்த விகடன்’ வார ஏட்டில் அவர் இணைந்த காலம். முதல் முதலாக ‘ஏட்டிக்கு போட்டி’ என்று எழுதியதை,‘கல்கி’ என்ற பெயரில் எழுதினார். அவர் பல பெயர்களில் எழுதி இருக்கிறார். அதை அவரே சொல்கிறார். ‘குகன் - அகத் தியன் - கர்நாடகம் - லாங்கூலன் - எமன் - விவசாயி - பெற்றோன் - ஒரு பிராம ண இளைஞன், தமிழ்மகன் - இரா.கி. என்றும் எழுதிக் குவித்தார்.

இத்தனையும் தீட்டி இருக்கின்ற கல்கி அவர்களின் முதல் சிறுகதை, ‘விஷ மந் திரம்’கடைசியாக அவர் எழுதிய 119 ஆவது சிறுகதை, ‘திருடன் மகன் திருடன்’ அவருடைய நாவல்களை வரிசையாக படம் பிடித்துக் காட்டுவதற்கு நேரம் இல்லை.



வரலாற்று நாவல்களின் வரலாறு


அவருடைய படைப்புகளில் சரித்திர நாவல்களைப்பற்றி குறிப்பிடுகிறபோது, தமிழகத்தில் சரித்திர நாவல்களை முதலில் எழுதியவர்கள் யார்?


மனுமுறை கண்ட வாசகம்’


மோகனாங்கியைத் தந்த சரவணமுத்துப்பிள்ளைதான் முதன்முதலாக சரித்திர நாவலை எழுதினார். அதற்கும் முன்னரே ஒருவர் எழுதினார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று சொன்ன வடலூர் வள்ளலார் எழுதி னார். ‘மனுமுறை கண்ட வாசகம்’இது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வள்ளலார் தீட்டிய வரலாற்று நூல். மனுமுறை கண்ட வாசகம், தமிழர்களின் வரலாற்றில், சோழ மாமன்னர்களின் சரித்திரத்தில், இராஜபாரத்தைப்பற்றி சிவகாமியின் சபதத்தில் மகேந்திரவர்மன் வாயிலாகக் கல்கி சொல்வது.

அரசன் எப்படி இருக்க வேண்டும்? அவன் எந்த உணர்வுகளைக் கடந்து இருக்க வேண்டும்? மணிமுடி தாங்குகின்ற மன்னர்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்த துதான்;

‘மன்பதை காக்கும் தென்புலம் காவல்
துன்பம் அல்லது தொழுதகவில்’

என்று வாழ்ந்த தமிழகத்தில், மன்னர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு, ‘இப்படித்தான் இருந்தான் சோழ நாட்டில் திருவாரூரில் மனு நீதிச் சோழன்’ என்று அவன் வரலாற்றை, ‘மனுமுறை கண்ட வாசகம்’ என்று எழுதினார் வடலூர் வள்ளலார்.

1895 ஆம் ஆண்டு சரவணமுத்துப்பிள்ளை அவர்கள், ‘மோகனாங்கி’ என்ற வர லாற்று நாவலைத் தீட்டினார். அதனை அடுத்து கூடலிங்கப்பிள்ளை அவர்கள், 1903 இல் ‘மங்கம்மாள்’என்ற சரித்திர நாவலைத் தீட்டினார். அதனைத் தொடர்ந் து குழந்தைசாமிப் பிள்ளை அவர்கள்,‘சத்தியவல்லி’ என்ற சரித்திர நாவலை எழுதினார். ஆக, வரலாற்று நாவல்கள் என்று சொல்கிறபோது, நடந்த சம்பவங் களை, கல்வெட்டுகளில் ஏடுகளில் கண்டு, அவற்றை எதிர்காலத் தலைமுறை யினர் பயன் பெறுகிற விதத்தில் தருகின்ற பணியைத்தான் சரித்திர நாவல் ஆசிரியர்கள் செய்து இருக்கிறார்கள். இந்த விழாவுக்குத் தலைமை தாங்கு கிற கலைமாமணி விக்கிரமன் அவர்கள் தகுதி வாய்ந்தவர். அவர் அமுதசுரபியில் ‘நந்திபுரத்து நாயகி’யைத் தீட்டினார்.

தொடரும் .....

No comments:

Post a Comment