Monday, December 2, 2013

மூன்று தமிழரை விடுதலை செய்க!

சங்கொலி தலையங்கம் 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் பேர றிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழர்களும் அநியாயமாகத் தண் டிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.மூவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையில் சென்று #மதிமுக பொதுச்செயலாளர் #வைகோ அவர்கள் சட்டப் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். இந்த வழக்கில் அப்பாவி களான மூன்று பேரும் 22 ஆண்டு களாகக் கொட்டடியில் பூட்டப்பட் டும் கிடக்கின்றார்கள்.ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேண்டு மென்றே இவர் கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கின்றது என்று இதுவரை கூறப்பட்டு வந்தது உண்மை என்பதற்கு ஒரு ஆதாரம் இப்போது வெளியாகி இருக்கின்றது.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள “உயிர்வலி”
என்ற ஆவணப்படம் ராஜீவ்காந்தி கொலை வழக்கு விசாரணையின் குளறுபடி களை அம்பலப்படுத்தி உள்ளது.மேலும் அரசியல் சக்திகளால் வழக்கு விசார ணை நடத்திய அதிகாரிகள் இயக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் வெளிச் சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையின் போது சி.பி.ஐ. எஸ்.பி.பணியில் இருந்த அவருக்கு ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பெற்றவர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு ஆணை வழங்கப் பட்டு இருந்தது. இது குறித்து, “உயிர்வலி” ஆவணப்படத்தில் தியாகராஜன் அப் போது நடந்தவற்றை ஒப்புதல் வாக்கு மூலமாகப் பதிவு செய்து இருக்கிறார்.
“என்னிடம் அறிவு (பேரறிவாளன்) வாக்குமூலம் கொடுக்கும்போது, ‘அந்த பேட் டரிகளை எதற்காக வாங்கி வரச்சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது’ என் றார். ஆனால் வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததால், அவரது வாக்கு மூலத்தை நான் முழுமையாகப் பதிவு செய்யவில்லை.அவரது வாக்குமூலத் தை முழுமையாக பதிவு செய்திருந்தால், வழக்கின் போக்கே மாறி யிருக்கும். தவிர, பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் மட்டுமே அவ ருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால், 22 ஆண்டு களுக்கு முன்பு நடந்த இச்செயல் எனக்கு மிகவும் வேதனை அளிக்கி றது” என்று தனது நேர்காணலில் கூறி உள்ளார்.

தற்போது ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வரில் வசிக்கும் அவர், ஒரு நாளித ழுக்கு ( தி இந்து, நவம்பர் 20,2013) அளித்துள்ள பேட்டியிலும் இதனை உறுதிப்ப டுத்தி இருக்கிறார்.

“வழக்கை விசாரித்த ஆரம்ப கால கட்டத்திலேயே அறிவு மீது தவறு இருப்பதா கப் படவில்லை. இதனால்,அறிவுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் வாக்கு மூலம் பதிவு செய்த போது, அறிவு சொன்னதை அப்படியே முழுமையாகப் பதிவு செய்வதா? அல்லது ஒரு பகுதி யை மட்டும் பதிவு செய்வதா? என்கிற தர்மசங்கடம் நிலவியது.

ஆனால்,அன்றைக்கு நான் சி.பி.ஐ.அதிகாரி.அன்றைய காலகட்டம் எனது சூழல் வேறு மாதிரி இருந்தது.இன்றைக்கு எனக்கு வருத்தமாக இருந்தாலும் அன் றைக்கு என்னால் ஒன்றும் செய்திருக்க இயலாது. எனக்கு வேறு வழியே இல் லை. நான் பதிவு செய்தது மட்டும் பிரச்சினை இல்லை.சிவராசன் தகவல் பரி மாற்றத்திலும் ராஜீவ் காந்தி கொலைத்திட்டம் வேறுயாருக்கும் தெரியாது என் கிற தகவல் ஆதாரப்பூர்வமாக சி.பி.ஐ.க்கு கிடைத்தது.அதன்படி அறிவுக்கு இதில் எந்த முகாந்திரமும் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது.

ஆனால், அதிகாரிகள் எதையும் கருத்தில் கொள்ளவில்லை. இவை தவிர, வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு செல்லும்போது தமிழிலிருந்த வாக்கு மூலத்தை
ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள்.அதிலும் குளறுபடிகள் நடந்தன. இதுவும்
பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது.
இனியும் உண்மையைச் சொல்லாமல்,இருந்தால் என் மனசாட்சியே என்னைக்
கொன்றுவிடும். அது ஒருநாளும் என்னைத் தூங்கவிடாது என்பதாலேயே
காலம் கடந்தாவது உண்மைகளைச் சொன்னேன்.”

இவ்வாறு சி.பி.ஐ. முன்னாள் அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ள கருத்து,
பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைக்குற்றச்
சாட்டு இட்டுக்கட்டப்பட்டது, ஆதாரமற்றது, அநியாயமானது என்பது வெள்ளி டை மலையாகத் தெரிகிறது.

ராஜீவ் கொலை வழக்கில் சி.பி.ஐ.அதிகாரி கருத்து மட்டுமல்ல, நீதி வழங்கிய மாண்பமை நீதிபதியின் கருத்தும் மூன்று தமிழர்களும் நிரபராதிகள் என்பதை நிரூபித்துள்ளது. ஆம்! 1999 மே 11 அன்று உச்சநீதி மன்றத்தின் அமர்வில் தலை மை நீதிபதியாக வீற்றிருந்து மூன்று தமிழர்களின் தூக்குத்தண்டனையை உறு தி செய்த நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் 2013 பிப்ரவரி 14 இல் ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக் கிறார்.

“உச்ச நீதிமன்றத்தில் என் தலைமை யிலான பெஞ்ச் ராஜீவ்காந்தி கொலை
வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டவர்களின் அப்பீல் மனுவை விசாரித் தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் இயல்பு மற்றும் குணாதி சயங்களை நாங்கள் பரிசீலிக்கவில்லை.அவற்றைக் கருத்திலும் எடுத்துக் கொள்ளவில் லை.ஆகவே, அவர்களின் மரண தண்டனை அரசியல் சட்டத்தின் பிரிவு 22க்கு விரோதமானது. மிகவும் காலதாமதமாக அவர்களை தூக்கில் போடுவது அரசி யல் சட்டத்துக்கு விரோதமானதும் ஆகும்.

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகிய
மூவரும் 20ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரு கிறார்கள். ஆயுள் தண்டனையைப்பொறுத்தவரை ஒவ்வொரு கைதியும் தனது தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோர உரிமை உள்ளது.அவரது தண்டனை குறைத்து அறிவிக்கப் பட்டாலும் அறிவிக்கப்படாவிட்டாலும் அவர் களுக்கு இவ்வாறு கோர உரிமை உள்ளது.

மரண தண்டனை கைதிகளுக்கும் அந்த உரிமை இருக்கிறது. மரண தண்டனை
விதிக்கப்பட்டதால், மிக நீண்டகாலமாக சிறையில் வாடும் இவர்கள் மூவரும்
தங்களின் தண்டனையை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு அளிக்கப் படாமல் ஆயுள் தண்டனை காலத்தையும் தாண்டி அனுபவித்து விட்டார்கள்.அவர் க ளுக்கு இது மூன்றாவது தண்டனையாக உள்ளது.இதுபோன்ற தண்டனை கேள் விப்படாத ஒன்றாகவும் அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகவும் உள்ளது.”

உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக பணிபுரிந்த நீதிய ரசர் கே.டி.தாமஸ், மூன்று தமிழர்கள் இன்னும் சிறையில் அடை பட்டுக் கிடப் பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி இருக்கிறார்.மனித உரிமை ஆர்வலரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மாண்பமை வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள், மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை இரத்து செய் வது மட்டுமல்ல, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி இருக் கிறார். (The Hindu, November 25, 2012)

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்து ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த டி.ஆர். கார்த்திகேயன் அவர்கள், மூன்று தமிழர்களின் தூக்குத்தண்ட னைக்கு எதிரான கருத்தைத் தெரிவித்து இருக்கின்றார்.

இவையெல்லாம் பேரறிவாளன், சாந்தன்,முருகன் ஆகிய மூன்று தமிழர் களை யும் உடனடியாக விடுதலை செய்யப் போதுமான சான்று ஆதாரங்கள் ஆகும்.
டெல்லி காங்கிரஸ் ஆட்சி தமிழர்களின் உணர்வுகளுக்கும் சுயமரியாதைக்கும்
இம்மி அளவுகூட மதிப்புத் தராமல்,அலட்சியப்போக்குடன் நடந்து கொள்கிறது. மூன்று தமிழர் விடுதலை என்பது டெல்லி ஆட்சி பீடத்திலிருந்து காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டால்தான் சாத்தியம் ஆகும் என்பதை அவர்களே உணர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.

நேரத்துக்குத் தக்கபடி, மேடைக்கு ஏற்றபடி நாடகம் ஆடுவதில் ஆற்றல் கை
வரப்பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி, பேரறிவாளனுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார். அதிலேகூட தூக்குத் தண்டனையை இரத்து செய்து,விடுதலை செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவிக் க கருணாநிதிக்கு காங்கிரஸ் பயம் ஆட்டிப் படைக்கிறது. இனியாவது இதைப் பற்றி முழு விசாரணை நடத்திட அரசு முன்வர வேண்டும் என்கிறார்.இனி விடு தலை மட்டுமே தீர்வே ஒழிய, மறு விசாரணை என்பது நீதியை குழிதோண்டிப்
புதைக்கும் செயல் ஆகும்.

பேரறிவாளன் நீண்ட காலம் சிறையில் இருப்பது இப்போதுதான் தெரியுமாகரு ணாநிதிக்கு? முதல்வர் பதவியில் இருந்தபோது,நளினியின் தூக்குத்தண்டனை யை ஆயுள் தண்டனை யாகக் குறைப்பதற்கு ஒப்புதல் வழங்கி ஆளுநருக் கு பரிந்துரை செய்த கருணாநிதிதான், பேரறிவாளன், சாந்தன்,முருகன் மூவரின் தூக்குத்தண்டனையை இரத்து செய்ய தேவை இல்லை என்று பரிந்துரைத்தவர் என்பதை நாடு மறந்து விடவில்லை.

“20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டேன். 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை காலத்தைக் கழித்தவர்கள் விடுதலை செய்யப்படுவதைப் போல,என்னையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று 2010 இல் நளினி சென் னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அன்றைய தமிழக அரசின் சார் பில் தி.மு.க. அமைச்சரவை முடிவு உயர்நீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யப்பட்டது.அதில், “நளினியை விடுதலை செய்யக் கூடாது.


இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஆகிவிடும்” என்று கருணாநிதி அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இவையெல்லாம் தமிழ் நாட்டில் எவ ருக்கும் நினைவில் இருக்காது என்று கருணாநிதி கருதிக் கொண்டிருக்கிறார். சிறை விதிகளை மீறி எந்தவித பதிவுகளும் இன்றி, ராஜீவ் காந்தியின் மகள் பிரி யங்கா, வேலூர் சிறையில் நளினியை சந்தித்துப் பேச 2007 இல் ஏற்பாடு செய்த தும் கருணாநிதி அரசுதான். அதன் விளைவு தான் தமிழீழமே அழிக்கப்பட்டது.
இலட்சோப இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டார்கள். மூன்று தமிழர் களின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கும் போது, சந்து முனையில்
சிந்து பாடும் இனத்துரோகிகளின் முகத்திரையைக் கிழித்து எறிவதும் அவசிய மாக இருக்கிறது.

இந்தியாவில் நீதி உயிரோடு இருக்கிறதா? இல்லையா? என்பதை உலகமே இந்த வழக்கில் உற்றுக் கவனிக்கிறது.எவ்விதத்திலும், இம்மூவர் மீது வீசப் பட்ட தூக்குக் கயிறு அறுக்கப்படும். அவர்கள் விடுதலை பறவைகளாக சிறை யிலிருந்து வெளிவரும் நாளை நம்பிக்கையோடு எதிர்நோக்குவோம்.

No comments:

Post a Comment