‘சிவகாமியின் சபதம்’ வைகோவின் இலக்கியச் சொற்பொழிவு
ஏன் எழுதினேன்?
அந்தக் கல்கி அவர்கள் சிவகாமியின் சபதத்தை ஏன் படைத்தேன் என்று சொல் கிறார். அலைகள் துள்ளி விளையாடுகின்றன. மாமல்லபுரம் கடற்கரை மண லில் அமர்ந்து இருக்கிறார். அருகில், ரசிகமணி டி.கே.சி. அமர்ந்து இருக்கிறார். அந்த நேரத்தில் கல்கி அவர்கள், ‘விட்டகுறை வந்து தொட்டாச்சு’என்று கோபா லகிருஸ்ண பாரதியார் எழுதி இருக்கிற கவிதையை அழுத்தமாகச் சொன்னார். கல்கியின் மனத்திரையில் பல காட்சிகள் வெளிவருகிறன்றன. பல நிகழ்ச்சி கள் தெரிகின்றன. அவர் காதுகளில் சிற்பிகளின் ஓசை கேட்கிறது. கல்லிலே உளிபடுகிற காரணத்தால், அந்த உளி செதுக்குகின்ற சத்தம் கேட்கிறது. நடனக் கலை கண்ணுக்கு தெரிகிறது. ஆயிரம் ஆயிரம் படகுகளில் வீரர்கள் பவனி வரும் காட்சி தெரிகிறது’ என்று பழம் பெருமைக்கு உரிய தமிழ் மன்னர்கள் வாழ்ந்த நிகழ்ச்சிகள், மாமல்லபுரத்தில் வடிக்கப்பட்ட அந்தச் சிற்பங்கள், அவற் றை எல்லாம் பார்த்துவிட்டு, இவை எல்லாம் என் மனக்கண்ணில் தெரிகின் றன என்று வரிசையாக பாத்திரங்களைச் சொல்கிறார்.
ஆம், ஆயனர், சிவகாமியைச் சொல்கிறார். மகேந்திரவர்மர், மாமல்லர், கண் ணன் - கமலி, பொன்னன் - வள்ளி, நாகநந்தி - புலிகேசி, பரஞ்சோதி என இவர் களைப் பற்றியெல்லாம் குறிப்பாகச் சொல்லி, இத்தனைபேரும் என் முன்னால் வந்து போகிறார்கள். இந்தப் புத்தகம் என் கனவாக இருக்கும் சிவகாமியின் சபதம்’. என்கிறார்.
பார்த்திபன் கனவு
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் அல்லவா, அபாரமான புத்தகம் என்று நேயர்கள் ஒரு முடிவிற்கு வந்து இருப்பீர்கள். ஆனால் இந்தப் புத்தகத்தை இந் த பாரத்தை 12 ஆண்டுகள் நான் சுமந்து கொண்டு இருந்தேன் என்று எழுதுகிறா ரே, அப்படியானால் 1932 ஆம் ஆண்டில் இருந்து இந்த எண்ணத்தை அவர் கொண்டு இருக்க வேண்டும். 1944 ஜனவரி 1ஆம் தேதி அவர் ‘சிவகாமியின் சப தத்தை’ எழுதத் தொடங்குகிறார். அதற்கு முன்னரே, 1941 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில், ‘கல்கி’ ஏடு தொடங்கப்படுகிறது. ஆனந்த விகடனில் பணியாற்றி விட்டு, அதற்குப்பிறகு கல்கியைத் தொடங்குகிறார். அதே ஆண்டிலேயே அவர் ‘பார்த்திபன் கனவு’எழுதத் தொடங்குகிறார். 1941 அக்டோபர் 16ஆம் நாள் பார்த்தி பன் கனவு தொடர்கதையை எழுதத் தொடங்கி, 1943 பிப்ரவரி 10ஆம் தேதி அதை நிறைவு செய்கிறார். இதில் ஆண்டுகளை நீங்கள் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இறைஞ்சுகிறேன்...
ஏதோ சம்பிராயத்திற்கு அழைத்தார்கள், என்னைப் பெருமைப்படுத்தினார்கள், எதையாவது பேசிவிட்டுப் போகவேண்டும் என்ற உணர்வில் நான் இல்லை. என் மனக்கண்ணில் கல்கி இருக்கிறார். நான் பேசுவதற்கு ஒலிபெருக்கிக்கு முன்னால் வருவதற்கு முன்பு, இதயத்தில் கல்கியைத்தான் நினைத்தேன். “ஐயா, உங்களைப் பற்றிப் பேசப் போகிறேன். வருங்காலத் தமிழர் சமுதாயம் மறந்து விடக்கூடாது என்பதற்காக இது ஒளிப்படமாகவும் பதிவு செய்யப்படு கிறதே, நான் பிழை இன்றிப் பேச, நல்ல முறையில் எடுத்துச் சொல்லும் ஆற் றலை, கல்கி அவர்களே எனக்குத் தாருங்கள்” என்று இதயத்தில் இறைஞ்சிய வாறுதான் இந்த இடத்தில் வந்து நிற்கின்றேன்.
மானசீகமாக அந்த உணர்வோடுதான் வந்து நிற்கிறேன். வாழ்க்கையில் ஒவ் வொரு முறையும் ஒவ்வொரு நாளும் நம்மைக் கடந்து செல்கிற நாட்கள் திரும்ப நமக்கு வராது. எதைச் செய்வதாக இருந்தாலும் அதை இன்றே செய்து விடு. இந்தப் பயணம் இன்னொரு முறை நமக்கு வராது. ஒரேஒரு முறைதான் இந்த வாழ்க்கைப் பயணம். அது திரும்ப வராது. இந்தப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் பயனுள்ள நாட்கள். இதில் வாய்ப்பு என்பது, புனிதமான கடமை உணர் வோடு சொல்கிற காரணத்தால், தமிழர் சமுதாயத்திற்குத் தெரிய வேண்டும் கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும்.
நம்பிக்கையை விதை
போர் மூண்டுவிட்டது, யுத்தம் வந்துவிட்டது 15,000 போர் யானைகளோடு 5 இலட்சம் படைவீரர்களோடு புறப்பட்டு வந்து விட்டான் சாளுக்கிய புலிகேசி. நெருங்கி விட்டான். வடபெண்ணை ஆற்றின் கரையில் இருக்கிறான் என்று நினைக்கிறபோது, தக்க ஆயத்தம் செய்யவிலையே என்று கவலைப்படுகிற விசித்திரசித்தர், சித்தரக்காரப் புலி ஆம், மத்தவிலாசன் என்று சொல்லப்படு கிற மகேந்திரவர்மன், மனம் உடைந்த நிலையிலும் அவர் சொல்கிறார்.
அவருக்கு அன்றைக்கு இருந்த நம்பிக்கையைக் கல்கி வைக்கிறார். ‘ஊருக்கு ஊர் மகாபாரதத்தைப் படிக்கச் சொல்லுங்கள். மக்கள் நெஞ்சிலே வீரம் பிறக்
கட்டும். அதன் மூலமாகப் போர்க்களத்தைச் சந்திக்கூடிய நிலைமைக்குப் பல் லவ நாடு ஆயத்தம் ஆகட்டும்’ என்று சொல்கிறார் இதே சிவகாமியின் சபதத் தில்.
பதிய வேண்டும்
என் கருத்து, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற நூல்கள் தமிழ் இளைஞர்கள் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டும் என்பது, கல்கி அவர்கள் அந்தக் காலகட்டத்திற்கு தேவையாக மகேந்திரவர்ம பல்லவன் இப்படிச்சொன் னதாகச் சொன்னால், தமிழ் உள்ளங்களில் நமக்கு என்று ஒரு வரலாறு வீரவர லாறு, புகழ்மிக்க வரலாறு, ஒரு பழம்பெரும் பண்பாடு உண்டு இவற்றைப் பாது காப்பதற்கு, தமிழர் இதயங்களில், அரசியல் எல்லைகளைக் கடந்து, இந்தச் தமிழ்ச் சமுதாயத்தின் வருங்காலத் தலைமுறை தேர்ந்து படிக்க வேண்டிய நூல்களில், ‘பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு’ இடம்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் சொல்கிறேன்.

1941 இல் அக்டோபரில் தொடங்கி, 1943 பிப்ரவரியில் பார்த்திபன் கனவு முடி கிறது. 1944 ஜனவரி 1ஆம் நாள், சிவகாமியின் சபதத்தைத் தொடங்குகிறார். சரி யாக இரண்டரை ஆண்டு காலம், 1946 ஜூன் 30இல் சிவகாமியின் சபதத்தை முடிக்கிறார். ‘முற்றும்’ என்று கொட்டை எழுத்தில் போட்டேன் என் பாரம் நீங் கியது’ என்று சொல்கிறார்.
அதற்குப் பிறகு, 1948 ஆம் ஆண்டு ‘அலை ஓசை’ வருகிறது. மீண்டும், 1951 இல் அக்டோபர் 29ஆம் தேதி, ‘பொன்னியின் செல்வன்’ தொடங்குகிறார். 1954 ஆம் ஆண்டு, மே 16 ஆம் தேதி பொன்னியின் செல்வனை நிறைவு செய்கிறார். ஏன் ஆண்டுகளைச் சொல்கிறேன் என்றால், எந்த எழுத்தாளருக்கும் இல்லாத சிறப் பு கல்கிக்கு உண்டு. நியாயமாகப் பார்த்தால் சிவகாமியின் சபதம் எழுதிய தற் குப் பிறகுதான் பார்த்திபன் கனவு எழுதி இருக்க வேண்டும்.
அடடா விட்டுப்போய்விட்டதே, நாம் தெரியாமல் முதலில் பார்த்திபன் கனவை எழுதி விட்டோம் என்று நினைக்க வேண்டிய தேவை கல்கிக்கு வரவில்லை. ஏன் தெரியுமா? சிவகாமியின் சபதத்தைத் பின்னர் எழுதினாலும், அந்த சிவகா மியின் சபதம் மொத்தக் காவியத்தின் நெடுகிலும் வருகின்ற, எந்த ஒரு இலக்கி யத்திலும், எந்த நாடக காப்பியத்திலும் அது எந்த மொழியிலும் காண முடியாத ஒரு கதாபாத்திரமாகிய ‘நாகநந்தி’ ‘பார்த்திபன் கனவிலும் வருகிறார். இது தான் பிரச்சனை. ஆக முரண்பாடு இல்லாமல் காப்பியம் வருகிறது. இந்த நாக நந்திதான், பார்த்திபன் கனவில், ‘நீலகேசி’ என்ற பெயரில் வருகிறான்.
தொடரும் ....
No comments:
Post a Comment