Thursday, December 12, 2013

ஆன்றோர் சான்றோர் போற்றும் தலைவர் வைகோ

ஆன்றோர் சான்றோர் போற்றும் தலைவர் #வைகோ என்று விருதுநகர் #மதிமுக மாநாட்டில் கவிஞர் தமிழ்வென்றி (எ) ராஜா முகமது புகழாரம் சூட்டி னார். அவரது உரை வருமாறு

எந்த மொழிப்போர் இந்த மண்ணில் என்னை தமிழ் வென்றி யாக ஆக்கியதோ, அரைக்கால் டவுசர் பருவத்தில், எந்த மொழிப் போர் ஏற்றி வைத்த கனல் என்
தலைவன் வைகோவைப் பார்த்து அந்த முதல் நொடியிலேயே காந்தம் இரும் பை ஈர்ப்பதைப்போல, அன்றுதொட்டு இன்று வரை அவரது தம்பி என்கிற தகுதி யோடு நிற்கின்ற அந்த வாழ்க்கையைக் கொண்டிருக்கிற தகுதியைக் கொண்டி ருக்கிற காரணத்தினாலே,மொழிப்போர் தியாகிகளின் படத்தைத் திறந்து வைக் கின்ற ஒப்பற்ற வாய்ப்பை வழங்கியிருக்கிற தலைவருக்கு என்னுடைய நன்றி யைத் தெரிவித்தனாக என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

Yes; We Can, ஆம்; நம்மால் முடியும்! என்றாரே பாரக் ஒபாமா.அதைப்போல நாம், நம்மால் முடியும் என்பதற்கு அடையாள மாகத்தான் இந்த மேடையில் சம்பத் சந்திரா வந்தார். இன்றைய ஆளுங்கட்சி அராஜக ஆட்சியின் அத்தனை அடக்கு முறைகளையும், சக்கர வியூகங்களையும் தகர்த்து எரிந்து தன் தம்பி சம்பத்
சந்திராவை மத்திய வங்கியினுடைய தலைவராக ஆக்கியிருக்கின்றாரே, இது தொடக்கம்.இதுதான் திருப்புமுனை. இந்தத் திருப்புமுனை இனி தொடரும்.கன் னியாகுமரியில் தொடங்கிய இந்த திருப்புமுனை, வியூகத்தை உடைக் கின்ற இந்த ஆற்றல் தொடரும்.

நேற்றைய காலை இதே வேளையில் நெல்லையில் 89 வயது முதிர்ந்த இலக் கியவாதி தி.க.சி. அவர்களைச் சந்தித்தேன்.என்னை இராமாயண சாகிபு என்று அன்போடு அழைக்கக் கூடிய அந்த பெருமகன் சொன்னார், நான் அரசியல் சாக்கடை கட்சிகளில் இணைந்தவன் அல்ல.

ஆனால், நான் ஒரு பொதுவுடைமைக்காரன். நான் சொல்கின்றேன். மாநாட் டுக்குச் செல்லுங்கள். அங்கே வைகோவிடம் சொல்லுங்கள். அவரிடம் மட்டு மல்ல, அந்தத் தொண்டர்படையின் முன்னே நின்று நீங்கள் சொல்லுங்கள், “வைகோ ஒரு போராளி, சாதாரண போராளி அல்ல. இடைவிடாது களப்பணி
ஆற்றுகின்ற போராளி. அந்தப் போராளியினுடைய குரல் டெல்லியிலே ஒலிக்க வேண்டும்.

டெல்லியிலே மட்டுமல்ல,ஐக்கிய நாடு அளவிலே ஒலிக்கின்ற காலம் வர வேண்டும். அந்த ஐக்கிய நாட்டு அவைக்கு முன்னாலே பறக்கின்ற தமிழனின்
கொடியை ஏற்றுகின்ற காலம் வரவேண்டும். அதற்கு இந்தத் திருப்புமுனை மாநாடு பயன்பட வேண்டும். செய்வீர்களா?” என்று கூறினார். 89 வயது முதி யவர்.அவரால் வேகமாக நடக்க முடியாது.

ஆனால், உணர்ச்சி ததும்ப என்னுடைய கரங்களைப் பற்றிக் கொண்டு சொன் னார். அவர் சொன்ன வாழ்த்துச் செய்தியைச் சொல்கின்ற அதே நேரத்தில்,கரி சல்காட்டுக்குயிலாக இலக்கிய மேதையாகத் திகழக்கூடிய நம்முடைய கி.ராஜ நாராயணன்.அவரை விட மூத்தவர். 93 வயதுக்காரர்.

கடந்த நூற்றாண்டில் ரசிக மணியாகத் திகழ்ந்த டி.கே.சி.அவர்களை 16 வயது இளைஞராக வித்வான் நா.சண்முகசுந்தரம் என்கின்ற அந்த இளைஞர் சந்திக் கின்றார். ஐந்து நிமிடம் பேசிக்கொண்டு இருக்கிறபோதே அங்கே மூதறிஞர் ராஜாஜி வருகின்றார்.

ராஜாஜியிடம், ரசிகமணி அறிமுகப்படுத்துகிறார், “கரிசல் காட்டில் பருத்தி விளையும் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள்,இதோ தமிழ் விளைந்து வந்திருக்
கின்றது. தமிழின் உணர்ச்சியை,தமிழின் வேகத்தை இந்த இளைஞனிடம் நான் பார்க்கிறேன்” என்று சொன்னார்.

அந்த நா.சண்முகசுந்தரத்தை நேற்று பார்த்து, மாநாட்டுக்குப்போகிறேன் என்று சொன்னபோது அவர் சொன்னார், எங்கள் தலைவரோடு இலஞ்சியில் பெரும்
புலவர் நடேசனாரோடு நான் பேசியிருக்கின்றேன். அவரிடம் சொல்லுங்கள், “கரிசல் காட்டில் பருத்தி மட்டும் விளைய வில்லை. வீரம் விளைந்திருக்கின் றது.தன்மானம் விளைந்து இருக்கின்றது.அதற்கு உருவமாக வைகோ விளைந் திருக்கின்றார். இந்தத் தன்மானச் சிங்கத்தின் தலைமையில்தான், தமிழ் இனம் தலைநிமிர முடியும் என்பதனை மாநாட்டில் நம்முடைய வாழ்த்துச் செய்தி யாகச்சொல்லுங்கள்” என சொன்னார்.

அரசியலைக் கடந்தவர்கள்,ஆன்றோர்கள், சான்றோர்கள்,தமிழ்கூறும் நல்லுல கத்தின் சிற்பிகளாகத்திகழக்கூடிய பெருமக்கள் எல்லாம் என் தலைவனுடைய
புகழ் உயர வேண்டும். நம் தலைவர் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த் திக் கொண்டு இருக்கிறார்கள்.

நினைத்துப் பார்க்கின்றேன், ஒரு நள்ளிரவு நேரம். கட்டிய மனைவியை, பெற்ற பச்சிளம்குழந்தை திராவிடச் செல்வியை படுக்கை யில் துயில வைத்துவிட்டு,
தன்னந்தனியாக அந்த நள்ளிரவில் புறப்பட்டு, திருச்சி இரயில் நிலையத்துக்கு வந்து, அந்த முற்றத்தில் ஒரு மாபெரும் திட்டத்தை வகுத்துக்கொண்டு அந்த நெருப்பு வளையத்துக்குள் புகுந்து, யாரும் தன்னை காப்பாற்றிவிடக்கூடாது
என்பதற்காக, அதன் மத்தியில் நின்றுகொண்டு தன்னுடைய தேக்குமரத் தேகத் தைத் தீயின் நாக்குகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டானே சிங்கத் தமிழன்
சின்னச்சாமி, அந்தச் சின்னச்சாமி மட்டுமா? சிவலிங்கம், அரங்கநாதன், மாயூ ரம் சாரங்கபாணி,கீரனூர் முத்து, ஆசிரியர் வீரப்பன் என்று அன்றைக்குத் தொடங்கிய தியாக நெருப்பு இன்றைக்கு வரைக்கும் அணையவில்லை என்ப தற்கு அடையாளமாகத் தான் இங்கே படத்தைத் திறந்து வைக்கவில்லை. பாடத்தைத் திறந்து வைக்கின்றோம். நம் முடைய நெஞ்சிலே அந்தக் கனல் என்றைக்கும் இருக்கும். 


அக்கினிக் குஞ்சு ஒன்று கண்டேன்
அதை ஆங்கொரு மரத்தினில்
பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு -தணல்
வீரத்தில் குஞ்சொன்றும்
மூப்பென்றும் உண்டோ
தீம் தரிகிடட தீம் தரிகிடட
தித்தோம்!

என்று பாடினானே பாரதி. அந்த அக்கினிக் குஞ்சு, தலைவனுடைய நெஞ்சத் தில் இருக் கின்றது. என் தலைவன் இயக்கி வைத்த நெருப்பு, நம் அத்தனை
பேர் நெஞ்சத்திலும் இருக் கின்றது.

நான் நெருப்பின் வடிவமாகத் தான் தலைவரைப் பார்க்கிறேன்.ஏன் தெரியுமா? நெருப்பு எப்போதும் தலை கவிழாது. அது தலைநிமிர்ந்துதான் நிற்கும். அதைப் போல் தன்மானத்தோடு இந்தத் தமிழினத்தைத் தலை நிமிர்த்தக்கூடிய தலை வன் என்னுடைய தலைவன் என்ற காரணத்தினால் நான் சொல்கிறேன். நெருப்பின் வடிவமாக நிற்கின்றோம்.

திருவண்ணாமலையிலே திரியுடன் விரிந்த விரிசடைக் கடவுள் விசுவரூபம் எடுத்து,விண்ணுக்கும் மண்ணுக்கும் நெருப்புப் பிழம்பாக நின்றாரே அப்படி இந்தத் தொண்டர்கள் நெருப்புப் பிழம்பாக இருப்பாய் தமிழா நெருப்பாய்! இது வரை இருந்தது போதும் செருப்பாய்! என்ற நிலையை மாற்றி நெருப்பாக நிமிர் வார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான்,நெருப்பிலே குளித்த இந்தத்தங்கங் களுடைய படத்தைத் திறந்து வைத்திருக்கின்றேன்.

பெருமக்களே,ஒன்றை நினைத்துப்பாருங்கள்.இங்கே,கம்பனைப் பற்றிச்சொன் னார்கள். கம்பன் பாடுவான், தசரத மன்னன் தன்னுடைய காதோரம் நரைமுடி வந்தவுடன் இராம பிரானை அழைத்து ஒரு வரம் கேட்கிறேன், நீ இந்த ராஜ்ய
பாதத்தை ஏற்றுக்கொள் என்று சொல்கிறார்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இப்படிப் பட்ட உறவுதான் நியாயமாக இருந்திருக்க வேண்டும். இந்த மண்ணில் இருக்கிறதா? இன்றைக்கு. அப்படிப் பட்ட நிலையில், ஆட்சி பீடத்தில் ஏறக் கூடிய தகுதியோடு இராமபிரான் வரு கின்றார்.தேரிலே வரு கின்றார். மக்கள் நின்று ஆரவரிக் கின்றார்கள்.

இதோ, கழகக் கண்மணிகளாக இருக்கின்றார்களே,இப்படி ஆராதிக்கின்ற அந்த மக்கள் சொல்கிறார்கள், மைந்த நீகோடி வாழ்க்கை யாவும் யாம் வாழும் வாழ்க்கை நாளும் நீ கோடி என்று அந்த மக்கள் கூறு வதாக கம்பன் சொல்கின் றான்.

என்ன பொருள் தெரியுமா?இந்த மண்ணில் நாங்கள் வாழ்கின்ற நாளெல்லாம் நீ வாழ வேண்டும் இராமா. அந்த இராமபிரான் பெயர் தான் கோபாலசாமி என்ப தும்.இராமனுக்கும் என் தலைவனுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? இமயத் திலே இருந்து குமரி வரை நடையில் நின்றுயிர் நாயகன் என்று கம்பன் போற் றக் கூடிய தன்மையில் நடந்து வந்தவன் இராமன்.

இன்றைக்கும் நடையால்,தொண்டால், உல களக்கின்ற என் தலைவனுடைய அந்த பின்னணியில் சொல்கின்றேன்.நடையில் நின்றுயர் நாயகன் மட்டுமா? இலங்கையின் மீது அன்று இராமன் தொடுத்த போர் தான் இறுதிப் போராக
அமைந்தது. அதைப்போல இறுதிப்போரை முடிக்கின்ற ஆற்றல் இராம பிரா னாக உங்களுக்கும் உண்டு என்கின்ற காரணத்தினால் சொல்கின்றேன்.

அதுமட்டுமல்ல, சிறுமுது முடிகிழான் என்று ஒரு புலவன், தன்னன் என்கின்ற வள்ளலைப் பற்றிப் பாடுவான். அவன் சொல்வான், யாம் வாடினாலும், தன் னன் வாழிய! ஏன் தெரியுமா? நான் சாதாரணமானவன். நான் வாழ்வதாலே இந்த நாட்டுக்கு ஒன்றும் பெரும் பயன் வந்து விடப்போவது இல்லை. ஆனால்
இந்தத் தன்னன் வாழ்ந்தால்,தமிழ் வாழும். தமிழ் புலவர்கள் வாழ்வார்கள். இந்த நாடும் வாழும் என்று, யான் வாடினாலும்,தன்னன் வாழியவே! என்று பாடி னான்.

அந்த மரபிலேதான், ஒளவைக்கு அதியமான் நெல்லிக் கனியைக்கொடுத்தான். தன் வாழ்நாளும் அவ்வைக்குக் கிடைக்கட்டும், தமிழுக்குக் கிடைக்கட்டும் என்று கொடுத்தான். அந்த மரபிலே வந்த காரணத்தினாலேதான் 1989 இல் என் தலைவன் ஈழம் சென்றிருந்த நேரத்தில் அமைதிப் படையினுடைய செல் தாக் குதலில் என் தலைவனின் கதை முடிந்துவிட்டது என்று எல்லோரும் சொன்ன நேரத்தில், என் ஒரே பிள்ளை வள்ளல் வைகோ என்கின்ற அந்தப் பிள்ளைப் பார்த்து நான் வேண்டினேன்,இந்தப் பிள்ளை போகட்டும்.

என் தலைவனை மீட்டுக்கொடு என்று நான் இறைவனிடம் வேண்டினேன். 
அதே உணர்வில் ஒரு துளிகூட குறையாமல் இந்த மேடையில் சொல்கின் றேன்,யான் வாழினாலும் என் தலைவன் வாழ வேண்டும். ஏனென்று சொன் னால், என் தலைவன் வாழ்ந்தால் தமிழ் வாழும், தமிழ் இனம் வாழும். தமிழன் தலை நிமிர்வான் என்பதோடு மட்டுமல்ல, வையம் ஆண்ட வண்டமிழ் மரபே, கையிருப்பைக் காட்ட எழுந்திரு என்று அழைக்க வேண்டிய தருணம்.

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!

எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்,
புலிஎனச் செயல் செய்யப் புறப்படுவெளியில்!

நம்பினை பகலினை நள்ளிருள் என்றே!
சிம்புட் பறவையே சிறகை விரி எழு!

சிங்க இளைஞனே! திருப்புமுகம்! திறவிழி!
இங்கு உன் நாட்டுக்கு இழி கழுதை ஆட்சியா?

கைவிரித்து வந்த கயவர், நம்மிடைப்,
பொய்விரித்து நம் புலன்கள் மறைத்துத்

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி,
நமக்கு உள உரிமை, தமக்கு என்பார் எனில்,

வழி வழி வந்த என் மறத்தனம் எங்கே?
மொழிப் பற்று எங்கே? விழிப்புற்று எழுக!

இகழ்ச்சி நேர்ந்தால், இறப்போம்!என்றும்
புகழ்ச்சியே எம்பூணாம்! என்றும்

வையம் ஆண்ட வண்தமிழ் மரபே!

என்று பகைப்புலத்தை அழிக்கின்ற ஆற்றல்மிக்க இந்தக் கண்மணிகள் முன் னிலையிலே நான் சொல்கின்றேன். மூன்று முதல்வர்களைத் தந்தது இந்த
மாவட்டத்தின் பெருமை என்று சொன்னார்கள். ராஜகோபுரத்தில் முத்திரை யாக இருக்கக்கூடியது இந்த மாவட்டத்தினுடைய பெருமை என்று சொன்னார் கள்.

என் தலைவனின் தகுதி ஐக்கிய நாடுகள் மன்றத்திலே முழங்கு கின்ற தகுதி. ஐக்கிய நாட்டு அவை முன்னே ஈழப் புலிக் கொடியை ஏற்றுகின்ற தகுதி.அந்தத் தகுதியைத் தருவதற்கான வெற்றிக்கு திருப்புமுனையாக அமைக்கின்ற மாநாடு இந்த மாநாடு.

இவ்வாறு கவிஞர் தமிழ்வென்றி (எ) ராஜா முகமது உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment