Thursday, December 12, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 10

இரயில் தண்டவாள நாசவேலைகள் பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்திட
வெளிப்படையான விசாரணை தேவை!

நாடாளுமன்றத்தில் இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவாதத் தில் கலந்துகொண்டு #மதிமுக உறுப்பினர்அ.கணேசமூர்த்தி அவர்கள் (ஈரோடு
தொகுதி)19.8.2010 அன்று ஆற்றிய உரை:

தலைவர் அவர்களே, இரயில்வே துணை நிதி நிலை அறிக்கை மீதான விவா தத்தில் கலந்து கொள்ள தந்த வாய்ப்பிற்கு நன்றி.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட பல அறிவிப்புகள் இது வரை நடைமுறைக்கு வராமலே அறிவிப்பாகவே உள்ளன.

இந்த ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நான் பேசும் போது இம்மன்றத்திலும் இரயில்வே அமைச்சருக்கு கடிதம் மூலமாகவும் நான் வைத்த கோரிக்கைகளை ஏற்று நிதி நிலை அறிக்கையில் நிறைவேற்ற அறி விப்பு செய்தமைக்கு நன்றி தெரிவித்தேன்.

அதில் ஈரோட்டிலிருந்து கோவைக்கு இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட ME MU இரயில்; புதிதாக கட்டப்படுவதாக அறிவித்த பல் நோக்கு வணிக வளாகம்; ஈரோடு இரயில்வே மருத்துவமனையை தரம் உயர்த்துவது;ஈரோடு சாஸ்திரி நகர் இரயில்வே மேம்பாலம் போன்ற அறிவிப்புகள் எந்த வேலையும் தொடங் கப்படாமல் அறிவிப்பாகவே உள்ளன. இவற்றை உடன் நடைமுறைப்படுத்த வேண்டுகிறேன்.

சென்ற நிதி நிலை அறிக்கையில் மனித வள மேம்பாட்டுத் துறையோடு
இணைந்து இரயில்வே துறை புதிதாக 50 இடங்களில் கேந்திர வித்யாலயா
பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அப்போது ஈரோட்டில் இயங்கிக்
கொண்டுள்ள ரயில்வே மிக்செட் பள்ளியை கேந்திர வித்யாலயா பள்ளியாக மாற்றி அமைத்திட கோரிக்கை வைத்தேன்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி அமைந்துள்ள ஈரோடு, நாமக்கல் பகுதியில் மட்டும் 22 பொறியியல் கல்லூரிகளும் 2 மருத்துவக் கல்லூரிகளும், 15 பாரா மெடிக்கல் கல்வி நிறுவனங்களும்,32 கலை அறிவியல் கல்லூரிகளும்,18 பாலி டெக்னிக்களும் உள்ளன.இருந்தும் அதற்குரிய அளவில் உயர்நிலைப்பள்ளிகள் குறிப்பாக CBSE பாடப் பிரிவு உள்ள பள்ளிகள் இல்லை.எனவே, ஈரோட்டில் இரயில்வே துறை மூலமாக கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்கிட நடவ டிக்கை எடுத்திட மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.அடுத்து வரும் கல்வி ஆண்டிலே இப்பள்ளி தொடங்க ஆவன செய்யுமாறு அமைச்சர் அவர் களை உங்கள் மூலமாகக் கேட்டுக் கொள்கிறேன்.


அதேபோல் புதிதாக அறிவிக்கப்பட்டு இன்னும் இயக்கத்துக்கு வராமல் உள்ள
காட்பாடியிலிருந்து சேலம் வரையிலான ஈரோடு இரயில், சென்னை முதல் சேலம் வரையிலான 879/880;883/884 எண் இரயில்கள் திருவனந்தபுரத்திலிருந்து
பாலக்காடு வரையிலான 6344/6345 அமிர்தா எக்ஸ்பிரஸ்.பெங்களூரு முதல் சேலம் வரை இயங்கும் 573/574 பாசஞ்சர் இரயில் ஆகிய இரயில்களை ஈரோடு வரை நீட்டிப்புச் செய்து இயக்கிட வேண்டுகிறேன்.

கடந்த இரண்டு ஆண்டாக நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திலே பேசும்
போது மாண்புமிகு அமைச்சருக்கு கடிதம் மூலமாகவும் நானும் இரயில்வே துணை அமைச்சர்கள் மாண்புமிகு இ.அகமது அவர்கள் கொடுமுடி இரயில்
நிலையத்தை பார்வையிட, கொடுமுடி வந்தபோது பொது மக்கள் நேரடியாக
அமைச்சரிடத்திலும் எடுத்து வைத்த கோரிக்கையான கொடுமுடி ரயில் நிலை யத்தில் நடைமேடை நீட்டிப்புசெய்ததன் காரணமாக அடைக்கப்பட்டு விட்ட லெவல் கிராசிங் இருந்த இடத்தில் ரயில் பாதையைக் கடப்பதற்கு ஒரு மேல் நிலை நடைமேடை அமைத்துத் தர மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள் கிறேன்.

அறிவிக்கப்பட்டுள்ள கோவை-திருப்பதி புதிய இரயில் ஈரோட்டில் நின்று செல் லவும், சோதனை ஓட்டமாக விடப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் -கோவை பாசஞ்சர் இரயிலை பயணிகள் நலன் கருதி தொடர்ந்து நிரந்தரமாக இயக்கவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்.

விழுப்புரம் - காட்பாடி மீட்டர்கேஜ் இருப்புப்பாதை அகலப்பாதையாக மாற்றும் பணி முடிந்து விட்ட நிலையிலும் இரயில்கள் அப்பாதையில் இயக்கப்படாமல் உள்ளது.எனவே,அப்புதிய அகலப்பாதையில் இரயில் போக்குவரத்து தொடங்க் கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

வண்டி எண்2867 ஹவுரா புதுச்சேரி இரயில் மற்றும் வாரம் இருமுறை இயங் கும் மதுரை - திருப்பதி இரயில்கள் திருவண்ணாமலையில் நின்று செல்லவும் உரிய நடவடிக்கை எடுக்க தலைவர் அவர்களே உங்கள் மூலமாக அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இரயில் வண்டிகளின் உணவு வழங்கும் பொறுப்பை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந் து இரயில்வே எடுத்துக் கொண்டதை வரவேற்கிறேன். உணவு வழங்குவதில்
இருந்த குறைபாடுகளைப் பற்றிய புகார்களைக் களைந்திட ரயில்வே எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன்.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட எடுப்புச் சாப்பாடு (pick up Food) முறையிலும் பல குறைபாடுகள் உள்ளன.இரயில்வண்டி தாமதமாகச் செல்லும் போது குறிப் பிட்ட நேரத்தில் பயணிகளுக்கு உணவு வழங்கப்படாமல் தாமதமாகிறது. பல இடங்களில் உணவை எடுப்பதால் இடத்துக்கு இடம் உணவும் சுவையும், தர மும் மாறுபடுகின்றன.

எனவே, இரயில் வண்டியிலேயே உணவு தயாரிக்க வழி வகை செய்ய வேண் டும்.தற்போது Pantry Car பற்றாக்குறையாக உள்ளது. போதிய அளவு Pantry Car
ஏற்பாடு செய்ய வேண்டும்.

சமீபத்தில் தமிழத்தில் இரண்டு இடங்களில் இரயில் தண்டவாளத்தின் அடியில் தாங்கும் கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டு நாசவேலைகள் நடந்துள்ளதாக பத்திரிக்கை செய்தி வந்துள்ளது. அது தொடர்பாக நடந்த விசாரணைகள் பற்றி யும் யார் அந்த நாசவேலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்றும் தெரியப் படுத்த வில்லை. எனவே, அதைப்பற்றி வெளிப்படையான விசாரணை நடத் தப்பட்டு நடந்த உண்மைகளையும் அதன் பின்னணிகளையும் பொதுமக்களுக் கு தெரியப்படுத்த வேண்டும்.அதற்கு உண்டான நடவடிக்கை எடுத்திட உங்கள் மூலம் இரயில்வே அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அ.கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரையாற்றினார்.

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 09

No comments:

Post a Comment