Saturday, December 14, 2013

வாழும் கலை , தலைவர் பண்டிட் ரவிசங்கருடன் வைகோ சந்திப்பு

வாழும் கலை அமைப்பின் தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜியுடன்

#வைகோ சந்திப்பு

வாழும் கலை அமைப்பு உலகில் 180 நாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்த அமைப்பு நதிநீர் ஆதாரங்களை வளப்படுத் துதல்,நோயுற்றுவர்களுக்கு சிகிச்சை தருதல்,உடல் நலம் காக்க மூச்சு பயிற்சி கொடுத்தல், பழங்குடி மாணவர்களுக்கு இலவச பள்ளிகள் நடத்துதல் போன்ற மனிதநேய சேவை செய்து வருகிறது.

இதனுடைய தலைவர் பண்டிட் ரவிசங்கர் குருஜி அவர்கள், ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில்,2008 ஏப்ரலில் தெற்கு ஆசிய அமைதி மாநாட்டை நடத்தினார். அதில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந் து நாடாளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்ற னர்.இலங்கையில் இருந்து புத்த பிட்சுகளும்,அமைச்சர் ஆறுமுகம் தொண்டை மானும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயலத் ஜெயவர்த்தனேயும் கலந்துகொண்டனர்.

தமிழர்களின் பிரதிநிதியாக வைகோ மட்டும் பங்கேற்றார். இதில் நார்வே அரசு அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இன்று டிசம்பர் 14 ஆம் தேதி அன்று, மதுரை பசுமலையில் தங்கியிருந்த பண் டிட் ரவிசங்கர் குருஜி அவர்களை வைகோ காலை 9.30 மணிக்கு சந்தித்து, அவ ருக்கு பூங்கொத்து வழங்கினார். பண்டிட் ரவிசங்கர் குருஜி வைகோவுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

இருவரும் 45 நிமிடம் தனிமையில் நாட்டு நிலைமைகள் குறித்தும், ஈழத் தமி ழர்கள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
 
‘தாயகம்’                                                            தலைமைக் கழகம்
சென்னை-8                                                     மறுமலர்ச்சி தி.மு.க.
14.12.2013

No comments:

Post a Comment