நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதிக்கு #மதிமுக வேட்பாளர் அறி விக்கப்பட்டவுடன் அவரது வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என மதிமுக மாநில துணை பொதுச்செயலர் மல்லை சி.ஏ.சத்யா பேசினார்.
உத்தரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஒன்றிய கழகம் சார்பில் ம.தி.மு.க. கொடி யேற்று விழாவும், பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை நெல்வாய் கூட் ரோட்டில் நடைபெற்றது.
மல்லை சி.ஏ.சத்யா பேசியது:
காஞ்சி மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்தரமேரூர் வைர மேகன் தடாகம் ஏரி நீரின்றி வறண்டு கிடக்கிறது. இதனால் பல்வேறு கிராமங் களில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள் ளனர்.
இதேபோல் 15 மாவட்டங்களில் கால்நடைகளான ஆடு, மாடுகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகின்றன.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இறந்த ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், மாடு களுக்கு ரூ.25 ஆயிரமும் வீதம் நஷ்டஈடு தர வேண்டும்.
இறந்த மாடுகளை ஆழமாக குழி தோண்டி அடக்கம் செய்ய 5 ஆயிரம் தர வேண்டும் என அரசுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய தொல்லியல் துறை பிரச்னை, படாளம் கரும்பு சர்க்கரை ஆலையை தனியாரிடம் தாரை வார்த்து தர போவதைக் கண்டித்தும், மதுராந்தகம் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் செயல்படவும் விவசாயிகள் பலன் அடைய வேண்டும் என்றும், நெசவாளர்கள் நலிவடைந்து போவதை கண்டும் குரல் கொடுத்தவர் வைகோ மட்டும்தான்.
நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பாளரை அறிவித்தவுடன் அவரது வெற்றிக்காக கட்சி நிர்வாகிகள் பாடு பட வேண்டும் என்றார் சத்யா.
விழாவுக்கு, மதுராந்தகம் வடக்கு ஒன்றியச் செயலர் க.ராஜா தலைமை தாங் கினார். உத்தரமேரூர் மேற்கு ஒன்றியச் செயலர் எல்.மணிவண்ணன் முன் னிலை வகித்தார்.
கிழக்கு ஒன்றியச் செயலர் எ.தயாளன் வரவேற்றார். ம.தி.மு.க. மாநிலப் பொரு ளர் டாக்டர் மாசிலாமணி, மாவட்டச் செயலர் தளபதி க.சோமு உள்ளிட்டோர் கழக நிர்வாகிகளுடன் மதுராந்தகம், வடபாதி கிராமத்தில் ஆரம்பித்து உத்தர மேரூர் தாலுக்கா அ.பி.சத்திரம் ஆகிய 13 கிராமங்களில் ம.தி.மு.க. கொடி ஏற் றப்பட்டது.
மதுராந்தகம் வடக்கு ஒன்றியப் பொருளர் பி.துரை நன்றி கூறினார்.
No comments:
Post a Comment