Tuesday, December 10, 2013

வைகோவின் கரத்தை வலுப்படுத்துவோம்!

தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப் பட்டோர் #வைகோ வின் கரத்தை வலுப்படுத்து வோம் என்று விருதுநகர் #மதிமுக  மாநாட்டில் வாகை முத்தழகன் உரை
ஆற்றினார். அவரது உரை வருமாறு

மறுமலர்ச்சி திமுகவில் எங்களுக்கு கிடைத்திருக்கிற ஆசைத் தம்பி என் ஆரு யிர் அண்ணன் இமயம் ஜெபராஜ் அவர்களே,மறுமலர்ச்சி திமுக பொதுச் செய லாளர் இனமானத் தலைவர் அண்ணன் வைகோ அவர்களே,கழகத்தோழர்களே வணக்கம்.

நாட்டிலே சிலருக்கு, அதிகாரத்திலே இருப்பவருக்கும் பிரதமர் பைத்தியம்.அறி வாலயத்திலே இருப்பவருக்கு அதிகாரத்திலே பங்கு கேட்டு ஒரு பைத்தியம்.
கோயம்பேட்டிலே ஒரு குடிகாரப்பைத்தியம். நமக்கோ சமூக நீதியிலே ஏற்பட் டிருக்கிற தாக்கம்.


கரூரிலே ஒரு மாநாடு நடந்தது.அது ஒரு தேர்தல் புறக்கணிப்பால் ஏற்பட்ட தாக்கத்தால் நடந்தது.அது திராவிட இயக்கத்தினுடைய நூற்றாண்டு மாநாடு, சரித்திர மாநாடு. ஒரு தேர்தலை சந்திப்பதற்கு முன்பாக நடக்கிற மாநாடு
விருதுநகர் மாநாடு.

சமூக நீதி கேட்டுப் பெறுகிற பிச்சையல்ல. இந்த மண்ணிலே பிறந்த மனிதர் களுக்கு அடிப்படை உரிமை அதை மறுப்பதை நாம் எதிர்கிறோம்.

இராவண காவியத்திலே புலவர் குழந்தை சொன்னார்.

“ஏடுகை இல்லாரில்லை,
நாடுகை இல்லாரில்லை,
நற்றமிழ் வளர்ச்சியம்மா”

என்று இராவண காவியத்திலே புலவர் குழந்தை சொல்கிறார்.அதாவது முட் டாளும், சோம்பேறியும் இல்லாத ஒரு மனித இனம் வாழ்ந்த வரலாறு உண்டு.
அது எப்போது என்றால் இராவணன் ஆட்சி காலத்திலே என்று இராவண காவி யத்திலே புலவர் குழந்தை சொல்கிறார்.

புலவர் கபிலன் சொல்கிறார்,

ஒரு பனைமரத்திலே இரண்டு பாளை முளைக்கிறது. ஒரு பாளையிலே கலை யம் கட்டினால் அங்கு கள்ளு வடிகிறது.இன்னொரு பாளை சீவாமல் விட்டால் அங்கு நொங்கு காய்க்கிறது. நொங்கு திங்கிறவன் மேல் சாதி காரன். கள்ளு
குடிக்கிறவன் கீழ் சாதிக்காரன் என்பது என்ன நீதி? நொங்கோ கள்ளோ ஒரு பனைமரத்து பால் அல்லவா?மனிதகுலம் என்பது ஒன்றல்லவா? என்று புலவர்
கபிலன் சொல்லுகின்றார்.

இன்றைக்கு சமூகம் எப்படி இருக்கின்றது என்றால், திவ்யா என்ற ஒரு இளம் பெண் தாலி அறுத்தாலும் கவலை இல்லை.ஒரு இளவரசன் செத்தொழிய வேண்டும் என்று துரத்துகிறது இன்றைய சமூகம். 150 ஆண்டுகளுக்கு முன் னால் பிறந்த எங்கள் நாராயணகுரு தேவர் சொன்னார்,நம்பூதிரிகளும், நாயர் களும் உன்னை கீழ்ச்சாதிக்காரர்கள் என்று சொல்லுகிறார்கள் என்று வருத் தப்படாதே, உன்னைவிட கீழ்சாதி என்று சொல்லப்படுகிறசாணார், தீயர், புல யர், பறையர்,இவர்களெல்லாம் மனிதர்கள் அல்லவா? அவர்களை நீ மதிக்கக்
கற்றுக்கொள். ஈழவனாக இருப்பவன் உன்னைவிட கீழே கிடப்பவனை நீ சம மாக நடத்து. ஒரு மேட்டை வெட்டி பள்ளத்திலே போட்டு சமப்படுத்து என்று
சொன்னார்.

அந்த நாராயணகுரு தெய்வவழிபாட்டை மறுக்கிறபோது,நாராயணகுரு தேவர் சொன்னார்,ஈழவமக்கள் வாழ்கிற இந்த பகுதியிலே நான் ஒரு சிவனை பிர தி ஷ்டை செய்யப்போகிறேன் என்று. நம்பூதிரிகள் சொன்னார்கள், நாராயணகுரு ஒரு கீழ் சாதிக்காரன் உனக்கு எப்படி சிவ பிரதிஷ்டை செய்ய உரிமை இருக்கி றது என்று கேட்டபோது,நான் ஈழவனுக்கான பிரதிஷ்டை செய்திருக்கிறேனே தவிர, நான் நம்பூதிரிக்கான சிவனை பிரதிஷ்டை செய்ய வில்லை என்று மறுத்தார்.


இப்படி எல்லாம் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காக எத்தனையோ ஞானிகள் தோன்றி வாதிட்டு இருந்தாலும் கூட அந்த
நாராயணகுரு தேவருடைய வம்சாவழியினரால் நடத்தப் பட்ட வைக்கம் போராடத்தில்தான் ஈரோட்டு சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்
தலைமையேற்று களம் அமைத்தார்.

அதன் பிறகுதான் நாட்டிலே இருந்த நல உரிமைச்சங்கம்,நீதிக்கட்சி இவைக ளால் ஏற்பட்ட எழுச்சி. தமிழ்நாட்டிலே வறுமையான மாவட்டம் இராமநாத புரம் மாவட்டம். இந்த மாவட்டத் தினுடைய ஜில்லா போர்டு பிரசிடெண்டாக இருந்த நீதிக் கட்சியைச் சார்ந்த தலைவர் அய்யா பட்டிவீரன்பட்டி செளந்தர
பாண்டியனார் தான் பேருந்துகளிலே பயணம் செய்வதற்கு தாழ்த்தப்பட்ட வர் களை அனுமதிக்கா விட்டால் ஜில்லா போர்டு பிரசிடெண்ட் என்கிற முறையி லே இந்த பஸ் பெர்மிட்டை நான் இரத்து செய்வேன் என்று சொன்னார்.

அய்யர் வருகைக்காக ஒரு திருமணம் காத்திருக்கிறது.அய்யர் வரவில்லை. தாலி கட்டவேண்டும். செளந்தரபாண்டியனார் சொல்கிறார். அய்யருக்காக
காத்திருந்து காலத்தைப் போக்காதே. நம்முடைய குலத்துக்கு அடிமைத் தொ ழில் செய்கின்ற குடிமகனை அழைத்து வா.அவனை வைத்து இந்த தாலியைக் கட்டு. நீ பிள்ளை பெற்று பெருமையோடு வாழலாம் என்று சொன்னார்.

மதுரை மீனாட்சி அம்மன்கோவில் ஆலய பிரவேசம் செய்யக்கூடாது என்று சொன்ன காலம்.பத்தாயிரம் மீனவர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ளே
புகுந்து போராடக் கூடிய ஒரு சூழ்நிலை. அடித்துக் கொல்லுவோம் என்று சாதி வெறியர்கள் அச்சுறுத்திய காலத்தில்தான் விடுதலைப் போராட்ட வீரர் பசும் பொன் அய்யா முத்துராமலிங்கத் தேவர் என்னுடைய தலைமையிலே இந்த ஆலயப்பிரவேசம் நடக்கும். தடுப்பது யாரென்று பார்ப்போம் என்று சொல்லி அழைத்து வந்தார்.

மீனாட்சி அம்மன் சொட்டு சொட்டாக கண்ணீர் சிந்துவதாக சொன்னார்கள்.அது ஆனந்த கண்ணீராகத்தான் இருக்குமென்று முத்துராமலிங்கத்தேவர் அதற்கு விளக்கம் கொடுத்தார்.என்னுடைய மக்கள் இவ்வளவு காலம் என்னை தரிசிக் காமல் இருந்து விட்டார்களே, என்று அந்த தாய் கண்ணீர் விடுகிறாள் என்று அதற்கு விளக்கம் சொன்ன பிறகு அனைவரும் அடங்கிப் போனார்கள். சமூக விடுதலை இன்னும் தீர்ந்துவிட வில்லை.

இன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கை, அன்னிய முதலீடு, இதெல்லாம் சமூக நீதிக்கு எதிரானது. பிற்பட்ட சமுதாயத்தின் தலைவர் சரத் யாதவ் சொல் கிறார்.நீதிமன்றங்களின் போக்கு சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது என்று.அவர் நாடாளுமன்றத்திலே உறுப்பினர்களை திரட்டுவோம் என்று சொல்கிறார்.

நாளைய பிரதமர்யாராகவும் இருக்கலாம். மறுமலர்ச்சி திமுக வின் பொதுச் செயலாளர் வைகோ என்கின்ற ஒரு சிங்கம் கலிங்கப்பட்டியிலே காத்திருக் கிறது. அந்தப் பிரதமர் யாராக இருந் தாலும் சரி நாம் சந்திப்போம்.

எதிர்கால சமுதாயத்தை வழி நடத்துவதற்கு இந்த தமிழ் நாட்டில் இருக்கிற எல் லோருக் கும் துணையாக இருக்கிற ஒரே தலைவர் நமது தலைவர் வைகோ
மட்டுமே. இவர் தந்தை பெரியாரின், அண்ணாவின் அடையாளம், இனமான அண்ணன் வைகோ அவர்களின் கரத்தை இந்த நாட்டிலே வாழ்கிற தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து மறுமலர்ச்சி திமுக வை பலப்படுத்த வேண்டிய ஒரு காலச் சூழ்நிலை இன்றைக்கு நாட்டி லே கனிந்து வருகிறது.

கரூர் மாநாடோ, விருதுநகர் மாநாடோ இந்த எழுச்சிக்கு என்ன காரணம்? இந்த உற்சாகத்திற்கு என்ன காரணம்? தமிழ் இனத்தின் கையிருப்பு வைகோ என்ற
ஒருவர்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கை இந்த நாட்டு மக்களிடத்திலே உரு வாகி இருக்கிறது.

தமிழ் இனத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தமிழர் களுக்கு இருக்கிற ஒரே பொக்கிஷம் வைகோ. மறுமலர்ச்சி திமுகதான் திராவிட இயக்கத்தின்
மிச்சம். நன்றி வணக்கம்.

இவ்வாறு வாகை முத்தழகன் உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment