Sunday, December 15, 2013

ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கு அணைந்தது!

சங்கொலி தலையங்கம்

“என் வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்திற்காகவே என் னை அர்ப்பணித்து இருக்கிறேன். வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிராக நான் போ ராடி இருக்கிறேன்.கருப்பர் ஆதிக்கத்துக்கு எதிராக நான் போராடியிருக்கிறேன்.
எல்லோரும் ஒற்றுமையாக வாழக்கூடிய,எல்லோருக்கும் சமமாக வாய்ப்பு கள் கிடைக்கக்கூடிய, ஜனநாயகப்பூர்வமான,சுதந்திரமான சமூகம் என்ற இலட் சியத் தையே நான் போற்றி வந்திருக்கிறேன். நான் அடைய நினைப்பது இந்த இலட்சியத்தைத்தான். நான் வாழ நினைப்பது இந்த இலட்சியத்துக் காகத்தான். தேவை என்றால் என் உயிரையும் துறக்க நினைப்பது இந்த இலட்சியத்துக் கா கத்தான்.”

தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு தென்னாப்பிரிக்கா உச்ச நீதிமன்றத்தில்
நிறுத்தப்பட்டபோது, 1964 ஏப்ரல் 23 ஆம் நாள் மேற்கண்டவாறு முழங்கினார் நெல்சன் மண்டேலா.

டிசம்பர் 6 ஆம் நாள், மாமனிதர் நெல்சன் மண்டேலா மூச்சுக்காற்று நின்றது. உலகின் கோடான கோடி ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதர்சமான ஒளிவிளக்கு அணைந்தது.மனிதகுல வரலாற்றின் மகத்தான சகாப்த நாயகர் நிரந்தர ஓய் வை நாடிச் சென்று விட்டார். தென்னாப்பிரிக்க கருப்பர் இன மக்களின் அடி மைத் தளையை அறுத்தெறிந்து சுதந்திர மனிதர்களாக இம் மண்ணில் உலவு வதற்காக தமது சுதந்திரத்தை இழந்து 27 ஆண்டுகள் சிறைக்கொட்டடியில் அடைபட்டும் வாடாத கருப்பு மலர் உதிர்ந்துவிட்டது.

தமது தாயகத்தின் விடுதலைக்கான போராட்டத்தை தலைமை தாங்கி வழி
நடத்திய பல தலைவர்கள் போராட்டம் வெற்றியடைந்து, ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்தபோது, வாழும் காலம் வரை அல்லது மக்கள் புறக்கணித்து ஆட்சி பீடத் திலிருந்து அகற்றும் வரை பதவியில் நீடித்தார்கள்.ஆனால், நெல்சன் மண்டே லா அதிலும் வரலாறு படைத்துக் காட்டினார். ஆயுட்காலம் வரை தென்னாப் பிரிக்கா அதிபராக உலா வரும் வாய்ப்பை மக்கள் கொடுக்கத்தயாராக இருந்த போது, ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருந்துவிட்டு வெளியேறியவர் மண் டேலா. காலமெல்லாம் எந்த வெள்ளை இனத்தவரின் நிறவெறி கொடுமைக்கு ஆட்பட்டாரோ, அந்த வெள்ளை இனத்தவர்கள் மீது தாம் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் வெறுப்பை உமிழாமல்,அரவணைத்து அன்பு பாராட்டிய பெருமகன் மண்டேலா. அவரது வாழ்க்கை வரலாறு உலக மக்களுக்கு பாடமாக விளங்கு கிறது.

மண்டேலா தமது இளமைக்காலத்திலேயே கல்லூரியில் பயின்ற காலத்தில், அரசியலில் ஈடுபாடு கொண்டார். ஃபோர்ட்ஹரே கல்லூரியில் மாணவர் வேலை நிறுத்தம் ஒன்றை முன்நின்று நடத்தியதற்காகவே அவர் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் விட்வாட்டர்ஸ்ராண்டு பல்கலைக் கழ கத்தில் இளங்கலை முடித்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றக் காலத் தில் டிரான்ஸ்காயிலிருந்து 1941 இல் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு மண்டேலா வந்து சேர்ந்தபோது தான் தென்னாப்பிரிக்காவில் கருப்பர்கள் வாழும் நிலை அவர் நெஞ்சில் கனலை மூட்டியது.மண்ணின் மைந்தர்களான கறுப்பின மக் கள் ஆகப் பெரும்பான்மையான மக்கள் வறுமை யில் உழன்றார்கள். வெள்ளை யர்கள் சிறுபான்மையினரை ஆதிக்கம் செலுத்தி,கருப்பினத்தவரை அடிமைப்ப டுத்தி அடக்கி ஒடுக்கினார்கள். சேரிப் பகுதிகளுக்குத் துரத்தப்பட்ட கருப்பின மக்கள், வெள்ளை ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கும், காவல்துறை யின ரின் ஓயாத தொல்லைகளுக்கும் ஆளானார்கள். கருப்பின மக்கள் மண்புழுக் களைப் போல் நெளிந்து கிடக்கும் அவலம் கண்டு அறச் சீற்றம் கொண்ட மண் டேலா, தமது இன மக்களின் சுயமரியாதை வாழ்வை மீட்டெடுக்க ஏதாவது செய்திட வேண்டும் என்று துடித்தார்.

வால்டர் சிசுலு, ஆலிவர் டாம்போ போன்ற நண்பர்களுடன் இணைந்து ‘இளை ஞர் கழகம்’ கண்டார் மண்டேலா. தென்னாப்பிரிக்க சுதேசி மக்களின் உரிமை களுக்காகப் போராடிய ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இளைஞர் கழக உறுப்பினர்கள் மண்டேலா உள்ளிட்டோர் இணைந்து துடிப்பாகச் செய லாற் றினர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போராட்ட முறைகளில் மாற்றம் வேண்டும் என்று மண்டேலாவும் அவரது நண்பர்களும் வலியுறுத்தினர்.

1948 இல் ஆட்சிக்கு வந்த தேசிய கட்சி இன ஒதுக்கல் (Apartheid) கொள்கையை சட்டபூர்வமாக்கியது.அரசியல் உரிமைகளும் குடிமை உரிமைகளும் வெள்ளை யர்களுக்கு மட்டுமே; பெரும்பான்மையான கருப்பின மக்களுக்கு வாழும் உரி மை உள்ளிட்ட எந்த உரிமைகளும் இல்லை என்று ‘இனஒதுக்கல்’கொள்கை யை பிரகடனம் செய்தது.இதன்படி குழுப்பகுதிகள் சட்டம் இயற்றப்பட்டு ஆப் பிரிக்கர்கள் அவர்கள் வசித்து வந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நகரப் பகுதிகள் சட்டம் கொண்டு வந்து, ஆப்பிரிக்கர்களின் நடமாட்டத்தைக்
கட்டுப்படுத்தினர்.

பொது இடங்களில் கருப்பின மக்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. மருத் துவமனைகள், பொது நூலகங்கள்,கலை அரங்குகள்,உணவு விடுதிகள், விளை
யாட்டு அரங்குகள் போன்றவற்றில் கருப்பின மக்களுக்கு இடம் இல்லை. வி லங்கினும் கீழாய் நடத்தப் பட்டனர்.கருப்பின தொழிலாளர்கள் தொழிற் சா லைகளில் நசுக்கப்பட்டனர்.

வெள்ளை இனத்தவரின் கொடுங்கோல் அரசாட்சி தீவிரமடையும் போது அதற் கு எதிரான போராட்டங்களும் தீவிரம் அடைந்தன. ஆப்பிரிக்க தேசிய காங்கி ரஸ் கருப்பர்களின் உரிமைகளுக்கு போராடி வந்தபோது, மண்டேலா வால்டர் சிசுலு அந்தோன் லெம்பேது, ஆலிவர் டாம்போ போன்ற இளைஞர்கள் புதிய செயல் திட்டங்களை உருவாக்கி, போராட்டங்களை தீவிரம் அடையச் செய்த னர். சட்ட மறுப்பு, சட்ட மீறல், வேலை நிறுத்தம், புறக்கணிப்பு,ஒத்துழை யா மை போன்ற புதிய போராட்டமுறைகளால் தேசிய விடுதலை இயக்கம் மக்கள் இயக்கமாக பரிணமித்தது.

வழக்கறிஞர் தகுதி பெற்ற மண்டேலா தமது நண்பர் ஆலிவர் டாம்போவுடன் சேர்ந்து,ஒடுக்கப்பட்ட கருப்பர் இன மக்களுக்காக நீதிமன்றங்களில் சட்டப் போராட்டத்தையும் நடத்தினார். இன ஒதுக்கல் என்பது சட்டபூர்வம் ஆக்கப் பட்ட நாட்டில் அதை எதிர்த்து சட்டப் பாதுகாப்பை தமது மக்களுக்கு உறுதி
செய்திட வாதாடினார். ஆனால், நிறவெறி அரசின் கொடூரத்திற்கு முன்னால் அவை வெற்றிபெற முடியவில்லை. தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர் கள் உருவாக்கிய தென்னாப்பிரிக்க இந்திய காங்கிரசும்,ஆப்பிரிக்க தேசிய காங் கிரசுடன் இணைந்து நிறவெறி கொடுமைகளை எதிர்த்து போராடி வந்தன. 1950 மே முதல் நாளன்று டிரான்ஸ்வால் மாநிலத்தில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள் மீது வெள்ளை நிறவெறி அரசு அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 தொழிலாளர்கள் பலி ஆனார்கள்.இதனைக் கண்டித்தும் இன ஒதுக்கல் கொள்கைகளை எதிர்த்தும் 1950 ஜூன் 26 ஆம் நாள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. அன்றிலிருந்து ஜூன் 26 என்பது தென்ஆப்பிரிக்க விடுதலை நாளாக கருப்பின மக்களால் கொண் டா டப்பட்டது. நிறவெறி அரசின் மிகவும் கொடிய ஆறு இன ஒதுக்கல் சட்டங் களை எதிர்த்து சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. 1953 வரை இச்சட்ட
மறுப்பு இயக்கம் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரங்களில் சுமார் 8,500 தொண்டர்கள் இன ஒதுக்கல் சட்டங்களை மீறி சிறை சென்றனர். இந்த இயக்கம் நடைபெற்றபோது தொண்டர் படைத் தலைவராக நெல்சன் மண்டேலா களப்பணி ஆற்றினார்.

சட்ட மறுப்பு இயக்கம் நடத்தியதற்காக தண்டிக்கப்பட்ட இருபது தலைவர் களில் மண்டேலாவும் ஒருவர். கம்யூனிஸ்டுகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு, மண்டேலா உள்ளிட்டோருக்கு ஒன்பது மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட் டது. மண்டேலா தடை செய்யப்பட்டவர் என்று அரசு அறிவித்தது. இதனால் காவல்துறை கண்காணிப்புக்கும், கட்டுப்பாடுகளுக்கும்  ஆளானார்.அவர்
பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவோ, உரையாற்றவோகூடாது. பத்திரி கைகளில் எழுதக் கூடாது.அரசு அனுமதியின்றி நடமாடவே கூடாது என்று கடுமையான நிபந்தனைகள் விதிக்கப் பட்டன.

ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசின் டிரான்ஸ் வால் மாநில கிளைக்குத் தலைவ ராக தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டேலா, கூட்டங்களில் பங்கேற்கவும், ஜோகன் ஸ்பர்க்கை விட்டு வெளியே செல்வதற்கும் அரசு தடை விதித்தது. காங்கிரஸ் பொறுப்புகளிலிருந்து விலகிட வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. 1953 இல் டிரான்ஸ்வால் மாநில மாநாட்டில் தலைமை வகிக்க வேண்டிய மண் டே லா தடை உத்தரவால் பங்கேற்க முடியவில்லை. அவரது தலைமை உரை
மாநாட்டில் வாசிக்கப்பட்டது.



பழங்குடிகளாகப் பிரிந்து கிடந்த ஆப்பிரிக்க மக்களை ஒன்றுபடுத்தி நிறவெறி அரசுக்கு எதிராக ஓரணியில் திரட்டுவதற்கு 1956 ஜூனில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஜோகன்ஸ்பர்க் அருகே கிளிப் டவுனில் தேசிய மாநாட்டை கூட்டி யது. அரசின் தடையால் மண்டேலா பங்கேற்கா விட்டாலும் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட அம்மாநாட்டில், ‘சுதந்திர சாசனம்’பிரகடனம் செய்யப்பட்டது. “தென் ஆப்பிரிக்கா அதில் வாழ்கிற எல்லோருக்கும் சொந்தம். கருப்பருக்கும் வெள்ளை யருக்கும் சொந்தம்” என்று சுதந்திர சாசனம் திட்டவட்டமாகக் கூறி யது. இதைத் தயாரிப்பதில் பின்னணியில் இருந்த மண்டேலா உள்ளிட்ட முக்கி யத் தலைவர் கள் மீது தேசத் துரோகக் குற்றஞ்சாட்டி வெள்ளை அரசு கைது செய்தது. 1957 இல் நடைபெற்ற பேருந்துப் புறக்கணிப்பு இயக்கம் 1958 இல் நடந்த நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஆகியவற்றில் மண்டேலா முக்கியப் பங்கு வகித்தார்.

கருப்பர்களுக்காக கொண்டுவரப்பட்ட கடவுச் சட்டங்களை எதிர்த்து 1960 மார்ச் சில் நாடு முழுவதும் போராட்டம் நடத்திட ஆப்பிரிக்க தேசியகாங்கிரஸ் அறை கூவல் விடுத்தது. 1960 மார்ச்சு 21 ஆம் நாள் கருப்பர்கள் வாழும் ஷார்ப்வில் நக ரில் காவல் நிலையத்துக்கு வெளியே ஐந்தாயிரம் மக்கள் கூடினார்கள். சட்ட மறுப்பு என்ற வகையில் தமது கடவுச்சீட்டுகளை ஒப்படைப்பதற்காக அவர்கள் காத்திருந்தார்கள். அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை சொல்ல வில்லை. ஆனால்,பெரும் காவல் படையுடன் வந்த கர்னல் பீனார் என்ற அதி காரி அப்பாவி கருப்பின மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தர விட்டார். இயந்திரத் துப்பாக்கிகள் குண்டு மழை பொழிந்தன. 69 பேர் துடிதுடித்து மாண் டனர். 186 பேர் படுகாயமுற்று உயிருக்குப் போராடினர்.

அதே நாளில் லாங்கா என்ற இடத்திலும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இரு வர் கொல்லப்பட்டனர். 49 பேர் காயமுற்றனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், நிறவெறி அரசின் துப்பாக்கிச்சூடு படுகொலைகளைக் கண்டித்து மார்ச்சு 28 இல் கண்டன வேலை நிறுத்தம், கடவுச் சீட்டுகளைக்கொளுத்தும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.வேலை நிறுத்தம் தென்னாப்பிரிக்காவை நிலை குலையச் செய்தது. தொழிலாளர்கள் முழுமையாக பணிக்குச் செல்லவில்லை.தென்னாப் பிரிக்க வெள்ளை அரசுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந் தன. ஐ.நா. பாதுகாப்பு மன்றம் தென்னாப்பிரிக்கா அரசைக் கண்டித்துத் தீர்மா னம் நிறைவேற்றியது. இந்நிலையில் நிறவெறி அரசு ஆப்பிரிக்க தேசிய காங் கிரஸ் அமைப்பைத் தடை செய்தது. இதனால்,நெல்சன் மண்டேலா தலை மறைவானார்.1961 மே 31 இல் தென்னாப்பிரிக்காவை குடியரசாக அறிவிக்க நிறவெறி அரசு முடிவு செய்தது. இதற்கு முன்னால், அனைத்து மக்களின் பிரதி நிதிகளும் பங்கேற்கும் தேசிய மாமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆப்பி ரிக்க தேசிய காங்கிரஸ் கோரியது.இந்நிலையில் அனைத்து ஆப்பிரிக்கர்கள்
பங்கேற்ற மாநாடு பீட்டர் மாரிட்ஸ்பர்க்கில் நடைபெற்றது. 1400 பிதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் நெல்சன் மண்டேலா திடீரென்று போய் பங் கேற்றார்.தலைமறைவாக இருக்கும் மண்டேலா மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சி உரை ஆற்றினார். வெள்ளை அரசைப் பணிய வைக்க பொது வேலை நிறுத்தத்திற்கு மாநாடு அழைப்பு விடுத்தது. இதற்கான நடவடிக்கைக் குழு அமைப்பாளராக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனால்,எரிச்சல் அடைந் த வெள்ளை அரசு, மண்டேலாவை கைது செய்ய துடித்தது. அரசின் அடக்கு மு றையை மீறி 1961 மே 29,30,31 மூன்று நாட்கள் தென்னாப்பிரிக்காவில் மா பெ ரும் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. கருப்பின மக்கள் மீது காவல் துறை தாக்குதல் நடத்தியது.குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து மக்களை கொடூ ரமாக அரசப் படைகள் தாக்கின. ஆயிரக்கணக் கானவர்கள் கைது செய்யப் பட்டனர்.

நிறவெறி அரசின் அடக்குமுறைகள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் இவற்றைக் கண்ட மண்டேலா, தலைமறை வாக இருந்தபடியே பத்திரிகைகள் வாயிலாக அறிக்கை வெளியிட்டார்.

“வன்முறை கலவாத எமது போராட்டத்தை அப்பட்டமான வன்முறை கொண் டு நசுக்குவதே அரசின் பதில் என்றால், எமது உத்திகளை கவனமாய் மறுபரி சீலனை செய்ய வேண்டியிருக்கும். என்னைப் பொறுத்தவரை அகிம்சைக் கொள்கை என்னும் இந்தப் பிரச்சினையில் ஓர் அத்தியாயம் முடிவுக்கு வந்து
கொண்டிருப்ப தாகவே தோன்றுகிறது” என்று மண்டேலா அறிக்கையில் குறிப் பிட்டு இருந்தார்.மகாத்மா காந்தி அடிகளின் அகிம்சை கொள்கையையே கடை பிடித்து நிறவெறி அரசை பணிய வைக்க முடியும் என்றுதான் மண்டேலா அற வழிப் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

ஆனால், ஷார்ப்வில் நகரில் நிறவெறி அரசு நடத்திய படுகொலைகள் அப்பாவி கறுப்பர்கள் மீது ஏவப்படும் அரச பயங்கர வாதம் இவற்றை எதிர்கொள்ள நிற வெறி அரசுக்கு புரியும் மொழியில் பதிலடி கொடுக்க ஆயுதப்போராட்டம் தேவை என்பதை மண்டேலா உணர்ந்தார். புரட்சிகர அமைப்பு ஒன்றை மண் டேலா உருவாக் கினார். 1961 டிசம்பர் 16 ஆம் நாள், ஆப்பிரிக்க தேசிய காங்கி ரசின் ஆயுதப் படையாக‘உம்கேண்டா வெசிஸ்வெ’ அதாவது ‘தேசத்தின் ஈட்டி’ என்ற புரட்சி அமைப்பு உருவானது. ஆயுதப் பயிற்சிக்காகவும், ஆதரவு திரட்டு வதற்காகவும் எத்தியோப்பியா, அல்ஜீரியா,லிபியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு நெல்சன் மண்டேலா இரகசியமாக பயணமானார். வெளிநாட்டுப் பயணத்தை
வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நெல்சன் மண்டேலாவை 1962 ஆகஸ்டு 5 ஆம் நாள் நிறவெறி அரசு கைது செய்தது. அவர் மீது தேசத் து ரோகக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் மண்டேலா தாமே வழக்கில்
வாதாடினார். 1961 ஏப்ரல் 23 ஆம் நாள்,நீதிமன்றத்தில் மண்டேலா தமது வர லாற்றுச் சிறப்புமிக்க வாக்குமூலத்தை அளித்தார். அதில் கருப்பின மக்களின் மனித உரிமை களுக்காகவும், சுயமரியாதை வாழ்வுக்காவும் தாம் நடத்திய
போராட்டங்கள் ‘தேசத்தின் ஈட்டி’ புரட்சிகர படை நடத்திய வன்முறை போ ராட்டங்கள் அனைத்தையும் நியாயப் படுத்தினார்.

1964 ஜூன் 14 ஆம் நாள் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். ராபன் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட மண்டேலாவும் அவரது சக தோழர்களும் அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த சிறையில் 7x 7 கொட்டடியில் அடைக்கப்பட்டனர். கொடூரமான சிறை விதிகள் நடை முறையில் இருந்த அங்கே, மண்டேலா 27 ஆண்டு காலம் சிறைவாசம் மேற் கொண்டார்.

நெல்சன் மண்டேலாவிற்கு உலகம் முழுவதும் உள்ள நாடுகள் ஆதரவு நல்கி ன. அவரது விடுதலைக்கான குரல் ஓங்கி ஒலித்தது. காலம் மாற்றத்திற்கு கட் டியம் கூறியபோது, 1990 பிப்ரவரி 11 ஆம் நாள், மண்டேலா விடுதலை செய்யப் பட்டார். மண்டேலாவின் தன்னலமற்ற தியாகத்தால் தென்னாப்பிரிக்க கருப் பின மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர். 80 ஆண்டுகால நிற வெறி ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக 1994 இல் நடந்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று, முதல் கருப்பின அதிபராக மண்டேலா பதவி ஏற்றார். ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருந்துவிட்டு பின்னர் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்.

நெல்சன் மண்டேலாவின் போராட்டங் களும்,தியாகங்களும் விடுதலைக் கா கப்போராடிக் கொண்டிருக்கின்ற மக்களுக்குத் திசைகாட்டும் கலங்கரை விளக் கமாக எந்நாளும் இருக்கும் அந்த வெளிச்சத்தில் போராட்டக் களத்தில் நிற்கும் தேசிய இனங்கள் விடியலை நோக்கி முன்னேறும். உலகத் தலைவரான ‘நெல் சன் மண்டேலா’ வரலாறு நெடுகிலும் வழிகாட்டிக்கொண்டே இருப்பார்.

‘வாழ்க நெல்சன் மண்டேலா!’

No comments:

Post a Comment