Tuesday, December 17, 2013

அண்ணாவின் ..மதி ! பாகம் 2

மாணவர்களைப் பெருமளவில் தி.மு.கழகத்தில் இணைத்த பெருமை மதியழ கன் அவர்களையே சாரும். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகம் தமிழகத் தின் கல்லூரிகளில் எல்லாம் தொடங்கப்பட்டு செயல்படவும் - ஆட்சி மாற்றத் திற்கான கிளர்ச்சிகளில் அணிதிரண்டு போராடும் மதியழகனின் மகத்தான பணியே காரணமாய் அமைந்தது.இத்தகைய செயல்திறம் மிகுந்த மதியழகன் அவர்களை கழகத்தின் அடுத்தகட்ட தலைவராக்கிட அறிஞர் அண்ணா செய லில் இறங்கினார். 19.11.1955 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் திராவிட மாணவர் முன்னேற்றக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு எழுச்சியுடன்
நடைபெற்றது. அந்த மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, “நண்பர் மதியழகன் எனக்கு நிரம்ப தேவைப்படுகிறார்.மதியழகன் நல்ல வளர்ந்துவிட்ட நாற்று; இதனை எடுத்து வேறொர் இடத்தில் நட்டு நல்ல மணி
களாகப் பெருகி அதை அடைவதற்கு வகை செய்ய வேண்டும் என்று கருதுகி றேன்” என்ற தன் உள்ளக்கிடக்கையை அறிவித்தார்.

முதன் முதலாக, உடுமலை சட்டமன்ற தொகுதியில் 1957 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலில் போட்டியிட்ட மதியழகன் அவர்கள் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் ஏற்பட்ட வருத்தம் மதியழகன் அவர்களை
விட அண்ணாவுக்கு அதிகமானது.இதனை அப்போது உடுமலையில் நடை பெற்ற வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அண்ணா வெளிப்ப டுத்தினார்.“நாடறிந்த கழகத் தலைவர்களில் ஒருவரான தம்பி மதியழகனின்
தோல்வி கண்டு நான் மிகவும் வருந்துகிறேன். நான் காஞ்சி புரத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைக் கூட என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சுவை மிகுந்த கரும்பை வெட்டும் போது, கையில் காயம்பட்டது போல் தம்பி மதியழ கனின் தோல்வி - என்னை மிகவும் பாதித்துள்ளது. தோல்வி என்பதைப்பற்றி கவலைப்படாமல் துவண்டுபோகாமல் தம்பி மதியழகன் கழகத்திற்கும் தமிழ்
நாட்டிற்கும் சிறப்பாக பணியாற்றுவார். உடுமலைப் பேட்டை வாக்காளர்கள்
இனிமேலாவது சாதிசார்பின்றி, யார் உண்மையான பிரதிநிதியாக செயல்படு வார் என்று சீர்தூக்கி வரும் தேர்தலில் தி.மு.கழகத்திற்கு வாக்களிக்க வேண்டு மென கேட்டுக் கொள்கிறேன்” என்ற அண்ணாவின் பேச்சு - மதியழகன் மீது கொண்டிருந்த பாச உணர்ச்சியை வெளிப்படுத்தியது.


அறிஞர் அண்ணா, மதியழகன் அவர்களை கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற உயர்ந்த இடத்தில் அமர்த்தி அழகு பார்க்கவும் விரும்பினார். குழு மனப்பான் மை, போட்டி,சதிச்செயல்கள் என அப்போதைய நிலையில் அண்ணனின் எண் ணம் ஈடேறவில்லை. 25.09.1960 அன்று சென்னையில் நடை பெற்ற கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்களே இதனைக் குறிப்பிட்டு மனம் திறந்து பேசினார். “தோழர் மதியழகன் அவர்கள் பொதுச் செயலாளராக வர வேண்டும் என நான் பெரிதும் விரும்பினேன். நான் பொதுச்செயலாளராக இருந்த போது, துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பேற்று திறம்படபணியாற் றியவர் அவர்! அவரது ஆற்றல்கள் மேலும் நல்ல வகையில் நாட்டுக்கும் நமக் கும் பயன்பட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால்,சில நிலைமைகள் கார ணமாக நான் இந்தப் பொறுப்பை ஏற்கிறேன்” என்று குறிப்பிட்ட அண்ணா மீண் டும் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். தலைமைக் கழக
செயலாளராக அப்போது மதியழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருணாநிதி - ஈ.வெ.கி.சம்பத் ஆகிய கழக முன்னணி தலைவர்களின்குழு மனப் பான்மையால் கழகம் அழிந்துவிடுமோ என்று அச்சம் அனைவரையும் பிடித்து
உலுக்கிய காலத்தில்,மதியழகனின் பொறுப்பான செயல்பாடு கழகத்தைநெருக் கடியில் இருந்து மீட்டது. 26.02.1961 அன்று திருவொற்றியூரில் நடைபெற்ற கழ கக் காவலர் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்களே இதனைச் சுட்டிக்காட்டி னார் “தி.மு.கழகம் உடைந்து பட்டிருக்குமானால், நாட்டு விடுதலை இன்னும் இரண்டு தலைமுறைக்குத் தள்ளிப் போடப்பட்டிருக்கும். கழகம் அழிந்துவிடு மோ என்று நான் அஞ்சி இருந்த நேரத்தில், என் வாழ்நாள் முழுவதும் என்றென் றும் நினைத்து மகிழும் வகையிலும் நன்றி பாராட்டும் முறையிலும் தோழர் மதியழகன் அவர்கள் தமது திறமையான யோசனைகளால் கழகத்தைக் காப் பாற்றியுள்ளார். அதற்காக நாம் அவரைப் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டு
இருக்கிறோம்” என்று அண்ணாவால் நன்றியுணர்வோடு பாராட்டப்பட்ட பெரு மைக்கு உரியவர் மதியழகன்.

இதனைப்போல மற்றொருமுறை தி.மு.கழகத்திற்கு சங்கடம் ஏற்பட்டது. முது குளத்தூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயராலும், இமானுவேல்
சேகரன் பெயராலும் ஏற்பட்ட சாதிக்கலவரம், இதனால் ஏற்பட்ட துப்பாக்கிசூடு, உயிர் இழப்பு,உடமை இழப்பு என கொந்தளிப்பான நிலைமை நாட்டையே உலுக்கியது. சூலை 4 முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற கலவ ரம், துப்பாக்கி சூடு,காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசு அறிவித்த காவல் துறை சட்டத்தின் திருத்தம் இவைகளையெல்லாம் விவாதிக்க சட்ட மன்றம் கூடியது. முதன் முதலாக தி.மு.க. சட்டமன்றத்தில் நுழைந்து - அறிஞர் அண்ணா அவர்கள் எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். சோச லிஸ்டு கட்சித் தலைவர் நல்லசிவம், கம்யூனிஸ்ட்கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் ஆகியோர் இணைந்து ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார்கள்.

இத்தகைய சூழ்நிலையில், அறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றம் கூடுவ தற் கு சில நாட்கள் முன்பு கழக முன்னணியினர்களையும் சட்டமன்ற உறுப்பினர் களையும் அழைத்து அறிவகத்தில் இரண்டு நாட்கள் இதுகுறித்து விவாதித்தார். முத்துராமலிங்கத் தேவர் பக்கம்தான் நியாயம் என்று சிலரும், இமானுவேல் சேகரன் பக்கம்தான் நியாயம் என்று சிலரும் அப்போது பேசினார்கள். “யார் தரப்பில் நியாயம் என்று கண்டுபிடிப்பது நமது பணியல்ல;அது விசாரனைசெய்  கின்ற அதிகாரி களின் பணி; அந்தப் பணியை நாம் கையில் எடுத்துக் கொண் டால் பற்பல விபரீதங்கள் ஏற்படக் கூடும். சில சமுதாயங்களுக் கிடையிலே இடையறாத பகை உருவாவதற்கு நாம் காரணமாகி விடுவோம். எனவே அரசு தரப்பில் ஏற்பட்டுவிட்ட குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவதோடு நிறுத்திக்
கொள்வதுதான் நல்லது. அதுதான் தி.மு.கழகத்திற்கு மட்டுமல்ல,தமிழகத்தின் வருங்காலத்திற்கும் நன்மை தருவதாக அமையும்” என்று மதியழகன் அறி வார்ந்த வகையில் தன் கருத்தை எடுத்து வைத்தார். எதிர் அணியினர் கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நாம் தனித் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

காங்கிரசு ஆட்சியின் கையாலாகத் தனத்தையும், அரசின் தவறான அணுகு முறைகளையும் மக்கள் விரோத செயல்களையும் கண்டித்து நாம் நீதி விசார ணை கேட்க வேண்டும். அதே நேரத்தில் கம்யூனிஸ்ட் அணியின் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் நாம் பயன் பட்டுவிடக் கூடாது. தி.மு.கழத்திற்கு தனியான தொலை நோக்குப் பார்வை தேவை. அதை நாட்டுக்குத் தெளிவாக்கிட வேண் டும் என்றும் எடுத்துரைத்து “மக்கள் விரோத ஆட்சி ஒருபுறம் அரசியல் மாய் மாலம் புரியும் கம்யூனிஸ்டுகள் ஒருபுறம் என்று இரண்டு முனைகளையும் முறியடிக்கும் விதமாக மூன்றாவது சக்தியாக கழகம்தான் மாற்றுசக்தி, மாற் றுக்கட்சி, மாற்றுக்களம் எனும் தொலைநோக்கு முடிவினை எடுக்க வேண் டும்” என்றும் மதியழகன் அக்கூட்டத்தில் வற்புறுத்தினார்.

“மதி கூறிய கருத்து எனக்கும் உடன்பாடானதுதான். இருவரில் எவர்பக்கம் வா திட்டாலும் அரசின் தவறுகள் சுட்டிகாட்டாப்படா மலேயே மறைக்கப்பட்டு விடும். தனிப் பட்டவர்கள் செய்யும் தவறுகளை விட, அரசு செய்கிற தவறுகள் தாம் சமுதாயத்தை மிகவும் பாதிக்கக் கூடியவை.எனவே அதைப்பற்றி பேசுவ தான் பொறுப்புள்ள எதிர்க் கட்சிகளின் பணியாக இருக்கும்” என்று அறிஞர் அண்ணா அவர்களும் தெளிவாக அப்போது குறிப் பிட்டார். இதன் அடிப்படை யில் முடிவுகள் எடுக்கப் பட்டன.

திட்டமிட்டவாறு சட்டமன்றம் கூடியது. விவாதங்கள் நடை பெற்றன. அனைவ ரும் தங்கள் கருத்தை வலியுறுத்தினார்கள்.வாக்கெடுப்பு நடக்கும் வேளையும்
வந்தது. அறிஞர் அண்ணா அவர்கள் Point of Clarification என்று கழகத்தின் முடிவி னை விளக்கிட எழுந்தார். அனைவரின் விழிகளும், செவிகளும் அண்ணாவை நோக்கித் திரும்பின; அண்ணா பேசுகிறார்: “கழகம் கோரிய நீதி விசாரணை
மறுக்கப்பட்டதால் இந்த சர்க்கார் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது உறுதி. அதே சமயம் நான் கலந்து கொண்ட அலுவல் ஆய்வுக்குழு, பொதுக்குழு மரபை உடைப்பது எனக்கு உடன்பாடு அல்ல.கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாண சுந்தரம், முதலமைச்சர் காமராசர், போலிசு அமைச்சர் பக்தவச்சலம் இருவரும் தான் முதுகுளத்தூர் கலவரத்தைத் தூண்டிவிட்டார்கள் என்று கூறும் கருத்து எங்களுக்கு உடன்பாடு அல்ல.

எனவே திமுக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்தோ,எதிர்த்தோ வாக்க ளிக்காது.அதே சமயம் எங்களது நியாயமானகோரிக்கையான நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக் கை ஏற்கப்படாததற்கு தி.மு.க. எதிர்ப்பை தெரிவிக்கிறது.மிருகபலம் என்று எண்ணிக்கையில் மிகுந்த காங் கிரசு சட்டமன்ற கட்சி சார்ந்த அரசை தோற்க டிக்க முடியாது என்று தெரிந்தும், கொடுத்த உறுதி மொழியை மீறி கொண்டு வரப் பட்ட நம்பிக்கை இல்லா தீர் மானத்தை ஆதரிக்கும் நிலையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.எனவே மூன்றாவது சக்தி என்ற பொறுப்பில்எங்கள் எதிர்ப்பை தெரிவித்து,எனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய் கிறேன்” இவ்வாறு பேசிவிட் டு,அறிஞர் அண்ணா அவர்களும்,கழக சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப் பு செய்தனர். தி.மு.கழகத்தின் தனித் தன்மையை அன்று அனைவரும்  வியந்து பாராட்டினார்கள்! இதன் பின்னணியில் மதியழ கன் அவர்களுக்கும் பங்கு இருந்தது என்பதுதான் உண்மை.

அறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப்பின்னர் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் போட்டி நிலவிய அந்தக் காலகட்டத்தில்,கலைஞர் அணி, நாவலர் அணி, மதியழகன் அணி என பிரிந்து நின்ற அந்த சூழலில், அறிஞர் அண்ணா அவர்களே மனம் நொந்துபோன சம்பவத்தை தனது ஆதரவாளர்களிடையே மதியழகன் குறிப்பிட்டார்கள். 1964 ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா அவர்களும், மதியழகனும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்த சமயத்தில், சட்டமன்ற மேலவை உறுப்பினர் பொறுப்பில் கழகம் சார்பில், தனது இணை
பிரியா நண்பர் காஞ்சி சி.வி. இராசகோபாலை நிறுத்தி வெற்றிபெறச் செய்ய அண்ணா விரும்பினார்.அவரது விருப்பம் வெளியில் இருந்த சிலரால் புறந்தள் ளப் பட்டது. இந்த நிலையில் தனது மனவருத்தத்தை சிறைக் குறிப்பாக 15.11. 1964 காஞ்சி இதழில் அண்ணா பதிவு செய்து இருந்தார். அந்த கடித வரிகளை
மதியழகன் அங்கு படித்துக் காட்டினார்.

“10.03.1964 மாலை நாவலரும் கருணாநிதியும் வந்திருந்தனர்.மேலவைக்கு எவர் எவரை கழகம் ஆதரிப்பது என்பது பற்றி கருணாநிதியும் நாவலரும் கூறி னர்.கழகத்தின் சார்பில் எடுக்கப்படும் எந்த முடிவும் நான் என்னிச்சையாகவோ எனக்கு ஏற்படக்கூடிய விருப்பு வெறுப்பினை மட்டும் கணக்கிட்டோ மேற் கொள்வதில்லை என்றாலும் எனக்கென்று ஏதேனும் ஒரு விருப்பம் எழுகிறது என்றால் அதனை நிறைவேற்றி வைக்கும் விருப்பம் கழகத்தினர் சிலருக்கு
இருப்பதில்லை என்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து வருந்துகிறேன். வருந்தி என்ன பயன்! காரணம் என்னவென்று ஆய்வதிலே என்ன பயன்! நிலை மை அவ்விதம்! அவ்வளவு தான்.

அவர்களுக்கு பதில் ஏதும் கூறக் கூடிய நிலையிலும், இடத்திலும் (இன்று) நான் இல்லையே, எனவே நான் என்ன சொல்ல இருக்கிறது. கழக நிலைமைகளுக்கு ஏற்றவாறு செய்யுங்கள் எனச் சொன்னேன்” இதுதான் அண்ணாவின் கடிதம்.

இதனை நினைவுபடுத்திவிட்டு மதியழகன் பேசினார். “அறிஞர் அண்ணாவிற் காக எதையும் கழகத்தினர் செய்வர், கட்டுப்பாடு காப்பர்,கழகத்தை சேதப்படுத்த
மாட்டார்கள் என்று தொண்டர்கள் பலர் அழுத்தமாக நம்புகிறார்கள்.ஆனால், நிலைமை அதுவல்ல.சாதாரண எம்.எல்.சி. பதவிக்காக ஒருவரை தேர்ந்தெடுக் கும் அண்ணாவின் விருப்பத்தையே வினாக்குறியாக்கிய சிலர் 5 ஆண்டுகளுக் கு முன்பு, அதுவும் அவர் கழகத் தொண்டர்களின் தனிப்பெரும் தலைவராக இ ருந்த போதே! ஆனால் இன்று புத்தனாகிய மேய்ப்பர் இல்லை.ஆடுகள் மோதிக் கொள்ளட்டும் இடையில் ரத்தம் குடித்துவிடலாம் என்று நரிகள் வெளியில் காத்துக்கிடக்கும் காலம்.ஆடுகளுக்கும் உண்மையாக நிலைமைகள் புரியவில் லை. எனவே இப்படி கழகத்திற்காக கழக நிலைமைகளுக்காக கழகம் உடை படக்கூடாது என்பதற்காகத்தான்,நான் இந்த முடிவை எடுத்தேன்.இதில் எனக்கு வருத்தமில்லை. கழகம், கழகம் மட்டும்தான் என்முன் நிற்கிறது. பதவி, பட்டம்,
படாடோபம், அதிகாரம், ஆள்,அம்பு, முன்னாளில் செய்த தியாகம் அனுபவித்த நெருக்கடி இதெல்லாம் என் நினைவில் வரமறுக்கின்றன. இந்த நிலைமையில்
பாதகங்கள் இருப்பினும் இதுதான் காலத்திற்கு உகந்த முடிவு என்று கூறி முதல்வர் பதவியை மறுத்துப் பேசினார் மதியழகன்.

கலைஞரின் கடந்த கால நடவடிக்கைகள் எப்படி இருப்பினும் அண்ணாவிற் குப் பின்னால் நாம் கலை ஞரை ஒரு மனதாக முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத் த பின்னர் கழகத்தைக் கருதியாவது நமது ஒட்டுமொத்த நல்லெண்ணத்தைக் கருதியாவது எல்லோ ரையும் ஒன்றாக அணைத்துச் செல்வார் என்று நம்பு வோம். அண்ணா தந்த இந்த அருமையான மக்கள் இயக்கம். நாம் பாடுபட்டு கட்டிக் காத்த கருவூலம் வருங்கால நமது சந்ததிக்கு, தமிழ் சாதிக்கு,சாதாரண கிராமத்து ஏழைகளுக்கு ஒரு நன்மை வருகிறதென்றால் நம்மை முன்னிருத் தாமல்,நமது இயக்கத்திற்கு,எந்தத் தியாகத்தையும் செய்ய நாம் தயாராக இருக் க வேண்டும். நான் சித்தமாக இருப்பதுபோல நீங்களும் இருக்க வேண்டும். நமது இந்த முடிவினால், கலைஞர் முதல்வர் ஆனபிறகு இப்போது உள்ள அல் லது தற்காலிகமாக இருக்கும் அணுகுமுறை மாறினால் இது நமது இயக்கம்! அறிஞர் அண்ணா ஜனநாயக வழியில் உருவாக்கிய இயக்கம். நமக்கு உள்ளே பேசித்தீர்க்க வழியுண்டு.அப்படியே ஒரு வரைமுறையற்ற நிவாரணம் இல்லா போக்கு வந்தால், நாம் கழகத்திற்காக,மறைந்த நம் அண்ணனுக்காக இதைத் தாங்கிக் கொள்ளப் பழக்கப்படுத்திக் கொள்வோம்”என்று கலைஞர் கருணாநிதி
அவர்களுக்காகப் போட்டியில் இருந்து விலகும் முடிவை அறிவித்தார் மதியக ழகன்.

அமைச்சர் கே.ஏ.மதியழகன் அவர் களின் ‘பொதிகை’ இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் -அண் ணாவின் நண்பர் எஸ்.ஜே.இராமசாமி, கோவை செழியன்,சாதிக்பாட்சா, பண் ருட்டி எஸ்.இராமச்சந்திரன், பவானி சட்டமன்ற உறுப்பினர் இராஜா,திருமதி சத்தியவாணி முத்து,இரா.செழியன், உ.பில்லப்பன்,திருச்சி எம்.எஸ். வெங்கடா சலம் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள். மதி யழகன் அவர்கள் “அண்ணாவின் எண்ணித்துணிக கருமம்” என்ற கட்டுரையை முழுவதுமாக படித்துக் காட்டிவிட்டு தன் முடிவினை விளக்கினார். “கழகம் கல கலத்துப்போனால்,கலைந்து போனால் காலத்துக்கும் இழிநிலை, பழிச்சொல்,  ஏளனம் கிளம்பும்” கொள்கை தூய்மை யானது. ஓர் நாள் வெற்றிபெற்றே தீரும் என்ற தன்மை வாய்ந்தது,அவசரப்பட்டு முடிவு எடுப்பது மிகுந்த தீமையைத் தரும்.பரிகாரம் தேடும்போது பிரச்சினையின் சகல கோணங்களையும் கவ னிக்க வேண்டும்.விருப்பு வெறுப்பு மட்டும் நமது அளவுகோலாகி விடக் கூடா து” என்ற அண்ணாவின் மணிவாசகங்களையும் மதியழகன் எடுத்துச் சொன் னார்.

“அறிஞர் அண்ணாவின் மறைவு நாம் எதிர்பாராதது. கழகம் ஆட்சி அமைத்து இரண்டே ஆண்டுகள் தான் ஆகின்றது. நம்முடன் இருக்கும் சுதந்திராக் கட்சி
யினரும்,இராஜாஜியும் காமராசர் மீதிருந்த கோபத்தால்,விரக்தியால், பழிவாங் கும் உணர்ச்சியால் நம்மை ஆதிரித்தனர். அவை இன்று மாறி காமராசரும்,
ராஜாஜியும் ஒன்று சேரும் நாள் விரைவில் வரலாம். சந்தர்ப் பங்களும் போய் விட வில்லை.பெரியாருக்கு காணிக்கையாக்கிய இந்த அரசை, நமது அண்ண னின் எண்ணத்தை பட்டுப்போகக்கூடாது. காங்கிரசு இன்னும் பட்டுப்போகவில் லை. கழகமும்,கட்டுக்கோப்பும் மிக முக்கியம்.அதற்காக நம் சுய நலத்தை விட் டுவிட்டு தொலை நோக்குப்பார்வையை எடுக்கத்துணிவு வேண்டும்” என்றெல் லாம் இலட்சிய வேட்கையுடன் குறிப்பிட்டுத்தான் போட்டியைத் தவிர்த்தார் மதியழகன்.

“நாவலர் உணர்ச்சிவசப்படக் கூடியவர், கழக சட்டமன்ற உறுப்பினர் யாராவது வழி முறைகளை மீறி பரிந்துரை செய்து சலுகைகள் பெற விரும்பினால் பதவி யையே வேண்டாம் என உதறிவிடும் கோபக்காரர். எனவே அண்ணாவின் ஆட் சி கட்டுக் கோப்புடன் நடத்திட தற்போதைய சூழ் நிலையில் நாவலர் முதல மைச்சராக வேண்டுமா என சிந்தியுங்கள்” என்று இரா.செழியன் அவர்கள் அப் போது கருத்து தெரிவித்தார். போட்டி இருப்பின் தான் போட்டியிட விரும்பவில் லை என்றுதான் நாவலரும் அப்போது முடிவெடுத்தார். மக்கள் திலகம் எம்.ஜி. ஆர். ஆதரவும், ‘தினத்தந்தி’ சி.பா.ஆதித்தனாரின் உதவியும் கருணாநிதி அவர் களுக்கு கிடைத்த சூழ்நிலையில் முதல்வராகவும், கட்சித் தலைவராகவும் அவர் வரமுடிந்தது.

ஆனால், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாவலர் இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதிய ழகன் போன்றவர்களெல்லாம் கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டதும், இத னால் ஒவ்வொருமுறையும் கழகம் பிளவுபட்டதும், இறுதியாக நமது தலைவர் வைகோ அவர் களை ஒதுக்கியும், விலக்கியதால் மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவானதும், சுய நலனும் சூதுமதியும் எதேச்சதிகாரமும் கொண்ட கலைஞர் கருணாநிதியின் நடவடிக்கை களால்தான்.என்பதுதே கடந்த கால வரலாறு.

அண்ணாவின் கொள்கைகளுக்கு கடுகளவும் தொடர்பில்லாத, அவர் பெயரை முகமூடியாகக் கொண்ட அம்மையார் ஜெயலலிதாவின் அடிமைகள் கூட்டம்,
அண்ணாவின் கொள்கைகளைப் பற்றி கவலைப்படாமல் தன் குடும்பத்தினருக் காக கார்ப்பரேட் வணிக நிறுவனமாகிவிட்ட கருணாநிதியின் குழுமம் ஆகிய வைகளை வீழ்த்தி அண்ணாவின் ஆட்சியை நம் இலட்சியத் தலைவர் வைகோ
தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கப் போகிறது என்பதுதான் எதிர்கால வரலாறு!

வாழ்க கே.ஏ.மதியழகன்! வெல்க அவர்தம் இலட்சிய வேட்கை!!

கட்டுரையாளர் :- ஆ.வந்தியத்தேவன் மதிமுக  வெளியீட்டுச் செயலாளர்

No comments:

Post a Comment