Saturday, December 14, 2013

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 11

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை இலங்கை அரசு மீறும்போது,கச்சத் தீவு ஒப் பந்தத்தை இந்தியா ஏன் முறித்துக் கொள்ளக்கூடாது? -#மதிமுக அ.கணேச மூர்த்தி 

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை என்ன?

இந்தியாவுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு மீறியே வந்திருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்திய அரசு கச்சத் தீவு ஒப் பந்தத்தை ஏன் முறித்துக் கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற மக்கள் அவை யில் 31.8.2010 அன்று கழக உறுப்பினர் அ.கணேசமூர்த்தி வினா எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:

அவைத் தலைவர் அவர்களே!

தமிழகக் கடலோர மீனவர்களின் நிலை குறித்து இந்த அவையின் கவனத்தை ஈர்க்கும் தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு அளித்ததற்கு நன்றி.

இந்தியக் கடல் எல்லைக்குள் நமது சொந்தக் கடல் பகுதியில் தமிழக மீனவர் கள் தாக்கப்படுவது பற்றி இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவருவது இது முதல் முறையல்ல.

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொட ரிலும் தமிழக அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்பிரச் ச னையை கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது வாடிக்கையாகவே உள்ளது. எனக்கு முன்னால் டாக்டர் எம்.தம்பி துரை அவர்களும், டி.ஆர்.பாலு அவர்களும் குறிப்பிட்டதுபோல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்ததற்குப் பின்தான் இலங்கைக் கடற்படை தமிழக
மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், கொடும் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும், 22 தடவை தமிழக மீனவர்கள் மீது கொடூரத் தாக்கு தல் நடத்தியுள்ளனர். செல்லப்பன் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து இந்தக் கொடூரத் தாக்குதல் நடைபெறுவதும் மீனவர்கள் கொல்லப்படுவதும் இந்த அரசுக்குத் தெரியுமா? என அறிய விரும்புகிறேன்.அப்படியானால், என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டது? இல்லையென்றால் தமிழக மீனவர்களைக் காப் பாற்ற என்ன நடவடிக்கை எடுக்க எண்ணியுள்ளீர்கள் என்பதையும் அறிய விரும்புகிறேன்.

ஒரு நாட்டின் கடற்படை இன்னொரு நாட்டின் குடிமகனைத் தாக்கிக் கொல் கிறது என்றால் அந்த நாட்டின் இறையாண்மையே தகர்க்கப்படுவதாக இல் லையா?

நமது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அவமதிப்பாகாதா? நமது நாட்டின்
குடிமக்களையும் இறையாண்மையையும் காப்பாற்ற இந்திய அரசாங்கம் என் ன நடவடிக்கை எடுத்துள்ளது? இந்திய நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவது இந்திய அரசாங்கத்தின் கடமை அல்லவா?

அப்படியானால், தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாகவே கருதுவது இல் லையா? தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதியாக ஆக்கப்படுவதற்கு முன்பே
கச்சத் தீவு தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.தமிழர்களாகிய நாங்கள் உங்களோடு சேர்ந்த பிறகுதான் கச்சத் தீவில் எங்களுக்கு உள்ள உரிமையை நாங்கள் இழந்தோம். இந்தியா என்கின்ற நாடு உருவாவதற்கு முன்பாகவே கச்சத் தீவு தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. தமிழக மீனவர்கள் எதிர் கொள்ளும் தாக்குதல் பிரச்சனைகளை முழுமையாகத் தடுத்திட உண்மையாக
நீங்கள் குரல் கொடுப்பதில்லை.


இந்தத் துயரமான பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவர கச்சத்தீவு பிரச்ச னையை மறு சிந்தனைக்குட்படுத்துவதே தீர்வாகும்.

நாம் பல ஒப்பந்தங்களை இலங்கை அரசோடு செய்து கொண்டோம். அந்த ஒப் பந்தங்களை இலங்கை அரசு மீறி உள்ளது. இராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அவற்றில் ஒன்றாகும். நமது பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமை யை மதிக்காதபோது, கச்சத் தீவு ஒப்பந்தத்தை இந்திய அரசு ஏன் முறித்துக் கொள்ளக் கூடாது என்பதையும், இலங்கையை எச்சரிக்கத் தவிர்ப்பதற்கான
காரணத்தையும் அறிய விரும்புகிறேன்.

அ.கணேசமூர்த்தி எம்.பி., இவ்வாறு உரையாற்றினார்

மதிமுக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரின், நாடாளுமன்ற உரை -பாகம் 10

No comments:

Post a Comment