Sunday, December 8, 2013

புயலலில் கிராண்ட் தீவில் சிக்கி கொண்ட தமிழர்களை மீட்டெடுத்த வைகோ

திராவிட இயக்கத்தைக் காப்பாற்றும் ஒரே தலைவர் #வைகோ தான்!

விருதுநகர் மாநாட்டில் மயிலாடுதுறை அழகிரி உரை

நமது ஒப்பற்ற ஒரே தலைவர் மதிப்பிற்கும், பாராட்டுதலுக்கும், வணக்கத் திற் கும் உரிய பொதுச் செயலாளர் அவர்களே, இந்த மேடையிலே நிறைந்திருக்கக்
கூடிய சான்றோர் பெருமக்களே,வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை,கடைசி வரை வைகோ என்று வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய
கழகத்தினுடைய வரிப்புலிகளே,உங்கள் அனைவருக்கும் முதற் கண் எனது வணக்கத்தையும்,நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே கூடியிருக்கக்கூடிய கூட்டத்தை பார்க்கின்றபோது, உள்ளபடியே நான் இப்போது அதிர்ந்து போயிருக்கிறேன். மொய் வைக்க வந்தவனுக்கு மாப் பிள் ளையாக வாய்ப்பு கிடைத்தது போல, சாமி கும்பிட வந்தவனுக்கு சங்கராச் சாரியாக வாய்ப்பு கிடைத்தது போல, பசியோடு வந்தவனுக்கு நிறைய உணவு
கிடைத்தது போல, இன்றைக்கு கூடியிருக்கக் கூடிய கூட்டத்தைப் பார்க்கின்ற பொழுது இந்த கூட்டத்திலே எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது
என்று நினைக்கிற போது, என் வாழ் நாளிலேயே மறக்க முடியாத நிகழ்ச்சியாக நான் கருதுகிறேன்.


இங்கே கூடியிருக்கக்கூடிய கூட்டத்தை பார்க்கின்றபோது நிச்சயமாகச் சொல் கிறேன்.அருமை அண்ணன் சிப்பிப் பாறை ரவிச்சந்திரன் சுட்டிக் காட்டியதைப்
போல, எந்த தொகுதியில் நின்றாலும் மறுமலர்ச்சி திமுக அந்த தொகுதி களை யெல்லாம் கைப்பற்றும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உற்சாகமாக கூடி யிருக்கக்கூடிய இளைஞர் பட்டாளத்தை இன்றைக்கு கொண்டிருக்கக் கூடிய கூட்டம்.

நான் இன்றைக்குச் சொல்கிறேன்.தமிழ் நாட்டினுடைய அரசியலில், இந்திய நாட்டினுடைய அரசியலில் ஒரு ஒழுக்கமான நேர்மையான தலைவர் இருக்கி றார் என்று சொன்னால்,அது வைகோதானே தவிர வேறு யாரும் கிடையாது.

பதவி வரும், போகும். இருந்தாலும் இன்றைக்கு ஒரு ஒழுக்கமான தலைவ ருக்கு பின்னால் நாமெல்லாம் இருக்கிறோம் என்று நினைக்கின்ற பொழுது தான்,தமிழ் வரலாற்றிலே திராவிட இயக்கம் இன்றைக்கு காப்பாற்றப் பட்டி ருக்கிறது என்று சொன்னால் அதற்கு அடிப் படையே வைகோ அவர்கள் தான்.


இன்றைக்கு தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தலைவர் என்று நாமெல் லாம் கருதிக் கொண்டு இருந்தவர் அவர்தான் கலைஞர்.அவர் சொல்லு கிறார். இன்றைக்கு சோனியாகாந்தியை பார்த்து, மணிமேகலை என்று சொல்லு கிறார். இதைவிட கொடுமை எங்கே யாவது உண்டா? மணி மேகலையின் வர லாறு தெரியாதா கருணாநிதிக்கு? ஆனால், அவர் இப்படி சொல்லுகிறார். இதைத் தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நான் சொல்கிறேன், இந்திய நாட்டினுடைய வரலாற்றில் இலங்கையிலே அங் கயற்கண்ணி அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கேள்விப் பட்டவுடன் இங்கிருந்து இந்திய நாட்டினுடைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்
களுக்கு தொலைபேசியிலே தொடர்பு கொண்டு அங்கயற்கண்ணி அவர்கள் இலங்கை இராணுவத் தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீங் கள்தான் தகுந்த பாதுகாப்புத் தர வேண்டும் என்று ஓங்கி சொன்ன ஒரே தலை வர் வைகோ மட்டும்தான்.

அதோடு மட்டுமல்ல,அடுத்த மறுநாள் காலையில் நான் உங்களை சந்திப்ப தற் கு டெல்லிக்கு வருகிறேன் என்று சொன்னபொழுது,வைகோ அங்கு விரைந்து போனபொழுது, இந்திய நாட்டினுடைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் அறைக்கு வெளியே வந்து,வாருங்கள் வைகோ..வாருங்கள் வைகோ... வாருங் கள் வைகோ... என்று You are a principle Leader  இந்திய திருநாட்டிலே கொள்கையும்
இலட்சியமும் உள்ள ஒரே தலைவர் நீங்கள் மாந்திரம்தான் என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னார்.

நான் கேள்விபடுகிறேன், 2004 இல் கருணாநிதியைப் பார்த்து சோனியா காந்தி அப்பா.. அப்பா..என்று சொன்னார்கள் என்று. அதற்கு பிறகு 2009 தேர்தலிலே
என்ன நடந்தது? கருணாநிதி எனக்கு இந்தப் பதவி வேண்டும், என் மகனுக்கு இந்தப் பதவி வேண்டும் என்று கேட்டபொழுது, கருணாநிதிக்கு முன் அகமது
படேல் கால் மீது கால் போட்டு உடகார்ந்திருந்தார். ஆனால் நம் தலைவர்
வைகோவை இந்திய நாட்டினுடைய பிரதமர்மன்மோகன்சிங் அவர்கள் எழுந்து மரியாதையுடன் You are a principle Leader என்று சொல்கிறார் என்றால், நான் சொல் கிறேன். தமிழ்நாடு இன்றைக்கு வைகோவின் பக்கம் திரும்பி இருக்கிறது. நான்
கேட்கிறேன். இன்றைக்கு திமுக எங்கே போய்க் கொண்டிருக்கிறது. அதை நினைத்துப் பார்க்க வேண்டும். அதைத்தான் குல்தீப் நய்யார் சொன்னார்.பத்தி ரிகை பேட்டி ஒன்றில், நீங்கள் 90 வயதைக் கடந்தவர்கள். அப்படி கடந்த வந்த பொழுது நீங்கள் தமிழ் நாட்டினுடைய அரசியலை இன்றைக்கு கூர்ந்து கவனித் துக் கொண்டு இருக்கிறீர்கள். அப்படி இருக்கின்ற பொழுது இங்கே இருக்கக் கூடிய திமுகவுக்கும் மாற்று எது என்று குல்தீப் நய்யார் அவர் களை கேட்ட பொழுது, அவர் சொன்னார்.

ஒரே மாற்றம் என்று சொன்னால் அது மறுமலர்ச்சி திமுகதான்.தலைவர் வைகோ தான் என்று குல்தீப் நய்யார் சொல்லுகிறார் என்று சொன்னால், நான் சொல்லுகிறேன். நீங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல, அமெரிக்காவிலே கர்பீயன் கடலிலே மிகப்பெரிய புயல் அடித்தது. அங்கே கிராண்ட் தீவு என்று சொல்லக் கூடிய தீவிலே தமிழர்கள் மாட்டிக் கொண்டார் கள்.

உடனே வைகோ அவர்களுக்குதான் செய்தி வருகிறது.அவர்களை அங்கிருந்து மீட்பதற்காக வைகோ அவர்கள் இந்திய நாட்டினுடைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு தொலைபேசியிலே தொடர்பு கொண்டு என்னுடைய தமிழ் மக்கள் இன்றைக்கு வாடிக்கொண்டு இருக்கிறார்கள்.புயலிலே மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னபொழுது,பிரதமர் அவர்கள் அமெரிக்க பிரதமருக்கு தொடர்பு கொண்டு பேசி அடுத்த இரண்டு மணி நேரத்தில் கர்பீயன் கடலிலே சிக்கித் தவித்த தமிழர் களை மீட்டெடுத்த தலைவர் இந்திய வரலாற் றிலே அவர்தான் வைகோ மட்டும்தான்.

இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலே இருக்கக் கூடிய தமிழனுக்கு எந்த இடத்தில் ஒரு ஆபத்து நேர்ந்தாலும் அங்கே ஓடோடி சென்று காப்பாற்றக் கூடிய ஒரே தலைவர் நம் தலைவர் வைகோ மட்டும்தான்.

எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்று சொன்னால், நாங்கள் நிதி வசூலுக்குச் சென்றிருந்தோம்.அங்கே ஒரு கடைக்கு சென்று அய்யா நிதி தாருங்கள். நாங் கள் தேர்தல் களத்திலே நிற்க போகிறோம் என்று சொன்ன பொழுது, அவர் எங் களிடத்திலே பணத்தைக் கொடுத்து விட்டு சொன்னார், நம்முடைய தலைவ ருக்கு நாங்கள் தரமால் வேறு யார் தருவார்கள் என்றார்.அதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி.

தமிழ்நாட்டிலே மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரத்தான் போகிறது. அந்த அர சியல் மாற்றத்தினுடைய கதாநாயகன் வைகோதான். அதிலே எந்த மாற்றமும் கிடையாது.

இவ்வாறு மயிலாடுதுறை அழகிரி உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment