முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..
பல்லாயிரக்கணக்காகத் திரண்டு இருக்கின்ற மக்களுக்கு, நாளை தமிழகத்தில் நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன? என சூளுரைக்கின்ற நிகழ்ச்சியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுவிலக்குப் பிரச்சார நடைப் பயண நிறைவு நாள் கூட்டமாக நடைபெறும் இந்த மக்கள் சங்கமத்துக்குத் தலை மை தாங்குகின்ற கழகத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர், கழகத்தின் மாவட்டச் செயலாளர், அடக்குமுறைக் கு அஞ்சாத வேங்கை என் ஆருயிர்ச் சகோதரர் கணேசமூர்த்தி அவர்களே, இன் னும் பல்லாயிரம் பிறைகண்டு வாழ்க! நூறாண்டு வாழ்க! மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்திற்கு வலிமையான அரண்களை வார்ப்பித்து வாழ்க! என்று இலட்சோப இலட்சம் தொண்டர் களினுடைய வாழ்த்துகளை, எந்நாளும் பிறந்தநாளை கொண்டாடாத அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா னால்,அதற்கு அனுமதிக்காத, பண்புடைய வரான, இந்நாளில் எங்கள் வாழ்த்துகளைப் பெற் றுக்கொண்டு இருக்கின்ற கழக அவைத்தலைவர் ஆருயிர் அண் ணன் திருப்பூர் துரைசாமிஅவர்களே, கழகப் பொருளாளர் ஆருயிர்ச் சகோதரர் டாக்டர் மாசி லாமணி அவர்களே, துணைப் பொதுச்செயலாளர் மூன்று போர்ப் படை நடைப் பயணத்திலும் நம் கண்மணி களை விழியை இமை காப்பதுபோல் காத்து உடன் வந்துள்ள என் ஆருயிர் இளவல் மல்லை சத்யா அவர்களே, இந்த மூன்றுஅணி களையும் வார்ப்பித்து தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் பணியாற்றி வரு கிற வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆருயிர் தம்பி ஜீவன் அவர்களே,