Saturday, May 25, 2013

கொலைகாரன் தலைமையில் காமன்வெல்த் மாநாடா? காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை வெளியேற்று!

நான் இப்போது கேள்விப்பட்டேன்.நான்கு நாள்களுக்கு முன்பு,இங்கிலாந்து
வெ ளிவிவகாரத்துறை அதிகாரிகளை ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் சந்தித்து இ ருக்கின்றார்கள்.அப்போது,அவர்களுக்குக்கிடைத்த தகவல் என்ன தெரியுமா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் வைகோ

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில்,முள்ளிவாய்க்கால் படு கொ லை யில் உயிர் ஈந்தவர்களுக்கு, 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட் டம் 17.05.2013 அன்று புரசைவாக்கத்தில் நடைபெற்றது. வடசென்னை மாவட் டக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, கழகப் பொதுச்
செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து....
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் கூட்டத்தை இங்கே நடத்திக் கொண்டு இருக் கின்றோம். 48 மாதங்கள் ஓடி மறைந்து விட்டன. படுகொலைகளை நடத்திய சிங்களக் கொடியோர் இன்னமும் கூண்டில் நிறுத்தப்பட வில்லை. நம்முடைய கடமையை முன்னெடுத்துச் செல்வதற்காக, ஒப்புக்காகவோ, சம்பிரதாயத்துக் காகவோ இந்தக்கூட்டத்தை நாம் நடத்த வில்லை.மனதில் மூண்டுஇருக்கின்ற
வேதனை நெருப்பு, ஈழத்தமிழர் களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை களுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பது மட்டும் அல்ல,இன்றைக்கும் சூழ்ந்து இருக் கின்ற ஆபத்துகளில் இருந்து அவர்களை மீட்க வேண்டிய கடமையும், பொறுப் பும் தாய்த் தமிழகத்தில் இருப்பவர்களுக்கு உண்டு என்பதை நினைவூட்டுவதற் காகத்தான் இந்தக் கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் அவலங்கள், ஏதோ ஒரு நாள், இருநாளில் நடைபெற்று
முடிந்த நிகழ்வுகள் அல்ல. இந்திய அரசு செய்த துரோகங்களால்,தொடர்ந்து இழைக்கப்பட்ட கொடுமைகளின் உச்சகட்டம்தான், முள்ளிவாய்க்கால் படு கொலைகள்.காலத்தின் அருமை கருதி, பழைய நிகழ்வுகளை நெடுநேரம் நான்
விவரிக்கப் போவது இல்லை.ஒருசிலவற்றை மட்டும் குறிப்பிட வேண்டிய தேவை உள்ளது.

1987 ஆம் ஆண்டிலேயே அந்த துரோகம் தொடங்கி விட்டது. தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை நயவஞ்சமாக அழைத்து வந்து, தில்லி அசோகா ஓட்ட லில் சிறை வைப்பதைப் போலப் பூட்டி வைத்து, ஒரு ஒப்பந்தத்தை அவர்கள் மீது திணித்தனர். நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்; இந்தியாவை எதிர்த்து
ஆயுதங்களை ஏந்த மாட்டோம் என்று கூறிவிட்டு, ஆகஸ்ட் 4 ஆம் நாள், சுது மலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்த ஒப்பந்தத்தை இந்திய வல் லரசு எங்கள் மீது திணித்து இருக்கிறது; ஆனால், சிங்கள இனவாத பூதம் இந்த
ஒப்பந்தத்தை விழுங்கி விடும் நாள் தொலைவில் இல்லை; எங்கள் மக்களைக் காப்பாற்றுகின்ற பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு இருக்கின்றது என் று தான் தேசியத் தலைவர் குறிப்பிட்டார்.



இந்தியாவின் துரோகங்கள்

திலீபனின் சாவுக்குக் காரணம் இந்தியா. அதற்குச் சில நாள்கள் முன்பு, இந்திய இராணுவத் தளபதிகளை தலைவர் பிரபாகரன் சந்திக்க வரும்போது, அவரைச் சுட்டுக் கொன்று விடு; இது தில்லியின் உத்தரவு, ராஜீவ் காந்தி அரசின் உத்தரவு என்று கட்டளை பிறப்பித்தார் இந்தியத் தூதர் தீட்சித். அந்தத் துரோகங்களின் தொடர்ச்சியாகத்தான் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 புலிப்படைத் தளபதி கள் சாகடிக்கப்பட்டனர்; அக்டோபர் 5 ஆம் நாள் அந்தக் கொடுமை நிகழ்ந்தது.

அதன்பிறகும், இந்தியப் பிரதமருக்கு எட்டுக் கடிதங்கள் எழுதினார் பிரபாகரன். தாக்குதலை நிறுத்துங்கள்; சமாதானத்துக்கான கதவுகளைத்திறந்து வையுங் கள்; போர் நிறுத்தம் அறிவியுங்கள்; பேச்சுவார்த்தைக்கு முன்வாருங்கள் என் று கேட்டு எழுதினார். ஆனால், ஒரு கடிதத்துக்குக் கூட இந்திய அரசு பதில் தர வில்லை. அன்னை பூபதி உண்ணா நோன்பு இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தியாவின் தூதர் என்று சொல்லி, பிரபாகரனைச்சந்திக்க ஜானி யை அனுப்பி வைத்தனர். அவர் பிரபாகரனைச் சந்தித்து விட்டு அங்கிருந்து திரும்பி வரும்போது இந்திய இராணுவத்தினர் சுட்டுக் கொன்றார்கள்.

அடுத்தடுத்து எத்தனையோ நிகழ்வுகள். விடுதலைப்புலிகளோடு தாய்லாந்தில் சிங்கள அரசு பேச்சு வார்த்தை என ஒரு நாடகத்தை நடத்தினார்கள். மூன்று நான்கு முறை பேசினார்கள். பின்னர் சந்திரிகா குமாரதுங்கவின் சதித்திட்டத் தால், அந்தப் பேச்சுவார்த்தைகளும் முறிந்து போயின. இலங்கைக்கு ஆயுதங் கள் கொடுக்க மாட்டோம்; பணத்துக்காக விற்கவும் மாட்டோம் என்று அடல்
பிகாரி வாஜ்பாய் அறிவித்தார்.

ஆனால், 2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற் றதற்குப் பிறகு, திட்டமிட்ட சதிகளை அரங்கேற்றினார்கள். இந்திய-இலங்கை
இராணுவம் கூட்டு ஒப்பந்தம் போட முயற்சித்தார்கள்.அதைத்தடுக்க என்னால் முடிந்த அளவுக்குப் போராடி இருக்கின்றேன்.

அந்த முயற்சிகளை எல்லாம் தொகுத்து, ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தலைப் பில் ஒரு நூலாகவும் வெளியிட்டு இருக்கின்றேன்.அந்த நூல் வெளியீட்டு வி ழாவில் பேசியதற்காக, தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. நியாயத்தைச் சொல் வ தற்காக, அந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடுவோம்.

இன்றைக்குச் சிங்கள இராணுவம் செய்த கொடுமைகளை, 87 லேயே அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவம் செய்தது. வல்வெட்டித் துறையில் அவர்கள் நடத்திய கோரத்தாண்டவத்தை, அமெரிக்க இராணுவம் வியட்நாமில் நிகழ்த்தியதுபோல, இந்தியாவின் மைலாய் வல்வெட்டித் துறை என்று அன் றைக்கு ஏடுகள் விமர்சித்தன.

2004 க்குப் பிறகு, இலங்கை இராணுவத்துக்கு ரடார்கள் கொடுத்து, ஆயுதங்கள் கொடுத்து, 1000 கோடிப் பணமும் அளித்தது இந்தியா. சீனம், இஸ்ரேல், ஈரான், பாகிஸ்தான்,ரஷ்யாவில் இருந்து ஆயுதங்களை வாங்க உதவினார்கள்.பலாலி விமான தளத்தைப் பழுது பார்த்துக் கொடுத்தனர். அங்கே இருந்து சீறிப் பாய்ந்த விமானங்கள் வீசிய குண்டு களால், செஞ்சோலையில் 61 சிறுமிகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர். இதற்குக் காரணமான இந்திய அரசு அனுதாபம் கூடத் தெரிவிக்கவில்லை.

தமிழ்ப் பெண்கள் பாலியல் வன் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டுப் படு கொலை செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் நடுவீதிகளில் சுட்டுக் கொல்லப் பட் டனர். கிறிஸ்துமஸ் நாளில் நள்ளிரவில் தேவாலயத்துக்கு உள்ளே மண்டியிட் டு ஜெபம் செய்து கொண்டு இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பர ராஜ சிங்கத்தை, தேவாலயத்துக்கு உள்ளே புகுந்து சுட்டுக் கொன்றார்கள். இதை யெல் லாம் இந்தியா கண்டிக்க வில்லை.

லசந்த விக்கிரமசிங்க உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.இதற் கெல்லாம் இந்திய அரசு உடந்தையாக இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணி அரசின் துரோகத்தை எந்தக் காலத்திலும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார் கள்.

இந்திய அரசுக்கு எச்சரிக்கை

இப்போதும், அவர்கள் கேட்கின்ற தமிழ் ஈழத்தில் தமிழகத்தையும் சேர்த்துக் கேட் கின்றார்கள் என்று ஒரு பொய்யைச் சொல்லி, விடுதலைப்புலிகள் இயக் கத்தைத் தடை செய்து இருக்கின்றார்கள். அதை எதிர்த்து நாம் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டு இருக்கின்றோம். தொடர்ந்து நீங்கள் சிங்களவர்களுக்கு உதவிக்கொண்டே இருந்தால், நீங்கள் நினைக்கின்ற அந்த ஆபத்து இங்கேயும் வந்து விடும். இந்திய ஒருமைப்பாடு தானாகவே உடைந்து போகும். தமிழகத் தின் வருங்கால இளைய தலைமுறையினர் என்னைப் போல இப்படிப் பேசிக்
கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்கள் கொதித்து எழுந்து விட்டார்கள்.

நெஞ்சம் குமுறுகிறது தோழர்களே.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் கொடு மைகள் தொடர்கின்றன. தமிழ் இனத்தின் அடையாளமே இல்லாமல் கரு அறுத்து விடவேண்டும் என்று சிங்களம் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகின்ற து. இப்போது அங்கே நடப்பது கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை. (Structural genocide).

தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடி அமர்த்துகிறார்கள். தமிழர் களின் ஆலயங்களை உடைத்து நொறுக்குகிறார்கள். 2000க்கும் மேற்பட்ட இந் துக் கோவில்களை உடைத்து நொறுக்கினார்கள்.மாவீரர்களின் துயிலகங்கள், கல்லறை களை அழித்தார்கள். இப்போது, இஸ்லாமியர்களையும் குறிவைத்து
விட்டார்கள். அவர்களையும் தாக்குகிறார்கள். தேவாலயங்களையும் நொறுக் கினார்கள். முழுக்க முழுக்க இலங்கை ஒரு பெளத்த நாடு என்று நிறுவ முயற் சிக்கின்றார்கள்.

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் அமைத்து இருந்த தமிழ் ஈழத்தில், மது
கிடையாது. விபச்சாரம் கிடையாது.களவு, குற்றங்கள் கிடையாது.தொன்மைத் தமிழர்களின் நாகரிக பூமி ஈழம். தமிழர்களின் பண்பாட்டுத் தலம் அது. மான உணர்வும், ஒழுக்கமும், அறமும் தழைத்து ஓங்கிய அந்த மண்ணை, தமிழ் இனத்தை அழிக்கின்ற வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். தமி ழரின் பண்பாட்டை, கலாச்சாரத்தை அடியோடு சிதைக்கின்ற வேலை களைச் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

நெருப்பிலே பச்சை மரங்கள் பற்றி எரிகின்ற காட்சியை இங்கே வடிவமைத்து இருக்கின்றோம் என்று தம்பி ஜீவன் சொன்னார். அங்கே பனை மரக் காடுகளை எல்லாம் அழித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.அதைத் தடுக்க வேண்டும்; தடுக்க முடியும்.

குவாதிமாலா நாட்டில் எண்பதுகளில் 82-83 இல் இரண்டு ஆண்டுகள் சர்வாதி காரியாக இருந்த நோரேஸ் மான்ட் படுகொலைகளை நிகழ்த்தினான். அங்கே இருந்த ஒரு பழங்குடியினர் 5.5. விழுக்காடு. அவர்களை அழித்து ஒழித்தான். 1771 பேர் படுகொலை செய்யப்பட்டதாக, 100 க்கும் மேற்பட்டோர் சாட்சியம்
அளித்தனர். ஏழு நாள்களுக்கு முன்பு, இந்த மே 10 ஆம் நாள், இப்போது 86 வய தான அந்த சர்வாதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை, இனப்படு கொ லை செய்ததற்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை, மனித உரிமைகளை அழித் ததற்காக மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீதிமன்றம் விதித்து இருக் கின்றது

அதைப்போல, ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு, ஆவணங்களும், சாட்சி யங்களும், சேனல் 4 தொலைக்காட்சியின் காணொளிக் காட்சிகளும் நம்மிடம் இருக்கின்றன. ஐ.நா. மன்றம் அமைத்த குழுவும் தனது அறிக்கையில் தெரிவித் து இருக்கின்றது.

இதே நாளில், நார்வே நாட்டில் கொண்டாட்டம் நடக்கின்றது. ஆம்; இன்று அவர்களுக்குத் தேசியத்திருநாள்.ஸ்வீடன் நாட்டில் இருந்து அவர்கள் தனியா கப் பிரிந்து தங்களுக் கென ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள அடித்தளமான நாள்தான் இந்த மே 17. 

இன்றைக்கு அங்கே மகிழ்ச்சிக்கொண்டாட்டங்கள், சின்னஞ்சிறார்களின் அணி வகுப்பு நடந்து கொண்டு இருக்கின்றது. அதே வேளையில் இன்னொரு பக்கத் தில் துக்கம். மனித வாழ்க்கையில் இந்த இரண்டும் ஒருசேர அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது.

புறநானுhற்றில் 194 ஆவது பாடலில்,பக்குடுக்கை நன்கணியார் இதைப் பற்றி அழகாகச் சொன்னார்:

ஓரில் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந்தண் முழவின் பாணிததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உரைப்ப
படைத்தோன் மன்ற, அப்பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ்வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தாரே,
ஒரு வீட்டில் சாப்பறை கேட்கின்றது.இன்னொரு வீட்டில் மணவிழா முரசம்
கேட்கின்றது. இதுதான் உலகம்.

தாய்த்தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர் கூட்டத்துக்குச் சொல்லுகிறேன். ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்கின்ற போர்க் கொடியைஉயர்த்திப் பிடித் து இருக்கின்ற கொலைகாரர்களைக் கூண்டில் நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கின்றது!

மாணவக் கண்மணி களுக்குச் சொல்லுகிறேன்.

காலம் மாறும். உறுதியாக நீதி கிடைக்கும். அதற்காக நாம் உறுதி எடுத்துக் கொள் கின்ற நாள்தான் இந்த மே 17. மடிந்தவர்களுக்காக வீர வணக்கம் செலுத் துகின்றோம்; அடுத்த களங்களுக்குச் செல்லுவதற்கு உறுதி எடுத்துக் கொள்
கின்றோம்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது தெரியுமா? இந்த ஆண்டு நவம்பர் மாதம், காமன் வெல்த் நாடுகளின் மாநாடு, இலங்கையில் நடக்கப்போகிறது. அதற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அமைப்பின் தலைவனாக,கொலைகாரன்
ராஜபக்சே இருக்கப் போகிறான். நம் கண் முன்னாலேயே இந்த அக்கிரமம்
நடக்கப் போகிறது.

நேற்று முன்தினம், இதுகுறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர் ஒரு கேள்வி எழுப்பி இருக்கின்றார். இலங்கை யில் இவ்வளவு கொடுமைகள் நடந்து இருக்கின்றன என்பதைச்சொல்லி இருக் கின்றார்.அந்த மாநாட்டில் இங்கிலாந்து கலந்து கொள்ளக் கூடாது என்ற குர லும் அங்கே எழுந்து இருக்கின்றது.அதற்குத் துணைப்பிரதமர் அளித்த பதில் எனக்கு வேதனை அளிக்கின்றது. எலிசபெத் மகாராணியார் இலங்கைக்குப் போகவில்லை.ஆனால், இங்கிலாந்து பிரதமர் செல்லுகிறார். வெளி விவகாரத் துறை அமைச்சர் செல்லுகிறார் என்று பதில் சொல்லி இருக்கிறார். இளவரசர்
சார்லஸ் போகக்கூடும் என்று செய்தி.

நாளை அங்கே இலண்டனில்,இலட்சக்கணக்கான தமிழர்கள் திரண்டு, காமன் வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பங்கு கொள்ளக் கூடாது என்ற முழக்கத்தை, தேம்ஸ் நதிக் கரையில் எழுப்ப இருக்கின்றார்கள்.சிங்களவனின் நுகத்தடியில்
தமிழர்களைப் பூட்டிய குற்றத்தைச்செய்தது பிரித்தானிய அரசு.

தனிக் கொடியும் கொற்றமும் அமைத்து ஆண்ட தமிழர்களை அடிமைப்படுத்தி
ஆண்டு, அங்கிருந்து வெளியேறுகின்றபோது, தமிழர்களின் இறையாண்மை யை சிங்களவனின் கைகளில் கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக்கூடாது; அந்த அமைப்பில் இருந்தே இலங்கையை வெளியேற்ற வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் கருப்பர் களுக்கு எதிராக நிறவெறிக் கொடுமைகளை நிகழ்த்திய வெள்ளையர் அரசை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து வெளி யேற் றவில்லையா? பொருளாதார முற்றுகை போட வில்லையா? ஹராரே மாநாட்டில் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி, இனவெறியைஎதிர்த்துக் கொட்டி முழக்கவில்லையா? அதைவிடக் கொடுமைகளை இன்றைக்குச் சிங்கள அரசு
செய்கிறதே? அவன் தலைமையில் மாநாடு நடத்தப் போகின்றீர்களா?

நான் இப்போது கேள்விப்பட்டேன்.நான்கு நாள்களுக்கு முன்பு,இங்கிலாந்து வெளிவிவகாரத்துறை அதிகாரிகளை ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் சந்தித்து இருக்கின்றார்கள்.அப்போது, அவர்களுக்குக் கிடைத்த தகவல் என்ன தெரியு மா? கொழும்பு மாநாட்டில் போய்க் கலந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் துடிக்க வில்லை. அந்த மாநாட்டில் கலந்து கொள்வது சரி அல்ல என்ற எண் ணமும் இருக்கிறது. ஆனால், அந்த மாநாட்டைக் கொழும்பில்தான் நடத்த வேண்டும் என்று இந்திய அரசுதான் மிகவும் வற்புறுத்துகிறது என்று சொல்லி இருக்கின்றார்கள்.

எனவே, இவர்கள்தான் துரோகிகள். இந்திய அரசுதான் துரோகி. அந்த மாநாட் டை கொழும்பில் நடத்து வதற்கு, உறுப்பு நாடுகளின் மத்தியில் ஒரு கருத்துத் திணிப்பையும் இந்திய அரசு செய்து கொண்டு இருக்கின்றது. மன்னிக்க முடி யாத துரோகத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

எனவே, ஈழத்தமிழர்களுக்கு விடியலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கட மை நமக்குத்தான் இருக்கின்றது; தாய்த் தமிழகத்துக்குத்தான் இருக்கின்றது. இந்திய அரசு இதிலே குறுக்கிடுகின்ற வரையில், இந்தப் பிரச்சினையில் உலக நாடுகள் தலையிட்டு நீதி வழங்கும் என்று ஒருக்காலும் எதிர்பார்க்க முடியாது.
இந்தத் துரோகத்தைத் தடுப்பது எப்படி? தமிழகம் பொங்கி எழுந்த பிறகும், இந் திய அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.

சுதந்திரத் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும்,நட்பு நாடு என்று சொல்லாதே, பொருளாதார முற்றுகை போடு என்று ஒருமனதாக ஒரு தீர்மானம் தமிழகச்சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு,ஏழு கோடித் தமிழர் களின் இதய நாதமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் அரசு, பச்சைத் துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு
இருக்கிறது என்றால், என்ன துணிச்சல்? என்ன மமதை? 

வேரோடும், வேரடி மண்ணோடும் இந்தத் துரோகிகள் வீழ்த்தப்பட வேண்டும். தமிழ் ஈழத்துக்குத் துரோகம் செய்த ஒருவர் கூட, நாடாளுமன்றத்துக்குச் செல் லத் தமிழகம் அனுமதிக்கக்கூடாது.

பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment