Monday, May 13, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 24

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

தமிழக மீனவர்கள் உயிரைக் காப்பாற்றாத ‘நொண்டி வாத்து’ 
இந்தியக் கடற்படை எதற்காக?

சிங்கள இனவெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து வருவதை வேடிக்கை பார்த்து வரும் டில்லி காங்கிரஸ் அரசு, தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையால் தாக்கப்படுவதையும், கொடூரமான முறையில் சித்ர வதை செய்து கோரமாகக் கொல்லப்படுவதையும் வேடிக்கை பார்த்து வரு கிறது.

தமிழக மீனவர்கள்,கடலில் மீன்பிடிக்கச்செல்லும் போது, நமது கடல் எல்லைக் கே வந்து அத்துமீறி மீனவர்களைக் கொல்வதும், படகுகளைத் தாக்கி அழிப்ப தும், மீன்பிடி வலைகளை அறுப்பதும் சிங்களக் கடற்படையினரின் அன்றாடத் தொழில் ஆகிவிட்டது.இந்திய மீனவர்களைக் காப்பாற்ற, நமது கடற்பிரதேசத் தில் உள்ள இந்தியக்கப்பற்படை ஒருமுறை கூட முயற்சித்தது இல்லை.கடந்த 25 ஆண்டுகாலமாக இதே அவலநிலை தான் தொடருகிறது.

கடந்த ஆண்டு 2011 ஜனவரி முதல் வாரத்தில், ஜெகதாபட்டினம் மீனவர் வீர பாண் டியன் கொல்லப் பட்டார்; ஜனவரி 22இல் நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் கழுத்தில் சுருக்கு மாட்டப்பட்டு நடுக்கடலில் கோரமாக கொல்லப்பட்டார். 2011 ஜனவரி 21 ஆம் தேதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தலைவர் வைகோ,இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த பெண் வழக்கறி ஞர் அங்கயற்கண்ணியை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டபோது, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் துயரங்கள், இனி தொடர அனுமதிக்கக் கூடாது என்று இயம்பினார்.

ஆனால், மறுநாளே ஜெயக்குமார் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இது குறித்து உடனடியாக பிரதமருக்கு தலைவர் வைகோ தொலைநகல் கொடுத்தபோது, 2011, ஜனவரி 25இல் பிரதமர், தலைவர் வைகோ அவர்களுக்கு எழுதிய பதில் கடிதத்தில் ‘தமிழக மீனவர்களைப் பாதுகாக்க இலங்கை அர சோடு பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்து இருந்தார். அதன் பின்னர் 2011, ஏப்ரல் 2இல் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள், சேவியர்விக்டஸ், அந்தோணிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீன வர் களை, இலங்கைக் கடற்படை கைதுசெய்து கொண்டு போய் சித்ரவதை
செய்து கொன்றது. ஒரு சடலம் யாழ்ப்பாணக் கரையில் கரை ஒதுங்கியது.அங் கேயே சென்று மீனவர்கள் சேவியர் விக்டஸ் சடலத்தை நல்லடக்கம் செய்து விட்டு வந்தனர். பிற சடலங்கள் ஒவ்வொன்றாகக் கடலிலே மிதந்து வந்து
கரை சேர்ந்தன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மற்றக்கட்சிகள் ஆட்சி அதிகாரத் தை பங்குபோட்டுக்கொள்ள சுற்றித் திரிந்த நேரத்தில், பலியான தமிழக மீனவர் களின் துயரத்தில் தாமும் பங்கு கொண்டு நேரில் சென்று ஆறுதல் கூறி, இரா மேஸ்வரம் மீனவர்களின் விழிநீரைத் துடைத்தவர் நமது தலைவர் வைகோ.

இராமேஸ்வரத்தின் மீனவ கிராமங்களில், இலங்கைக் கடற்படையின் கோர
கொலைப்பசிக்கு இரையானவர்களின் எளிய குடிசைகளுக்குச் சென்று தலை வர் வைகோ, மீனவக் குடும்பங்களுக்கு ஆறுதலும் தேறுதலும் தந்தார். படு கொலையான மீனவர் அந்தோணிராஜின் மனைவிக்கு பெற்றோர் இல்லை. சின்னஞ்சிறு மூன்று வயது குழந்தையுடன் வாழ்வில் இருள் சூழ்ந்துவிட்டதே என்று கதறி அழுத அந்தத் தங்கைக்கு கண்ணீருடன் ஆறுதல் கூறினார் தலை வர். அப்போது அங்கிருந்த மீனவத் தாய்மார்கள், அந்தோணிராஜின் இளம் மனைவி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து இருக்கிறாள். எங்காவது ‘டீச்சர்
டிரைனிங்’ சேர்த்துவிட்டு படிக்க ஏற்பாடு செய்தால் அந்தப்பிள்ளை பிழைத்துக்
கொள்ளும் என்று தலைவரிடம் முறையிட்டனர். ஏற்பாடு செய்கிறேன் என் றார்; அதன்படியே படுகொலையான மீனவர் அந்தோணிராஜ் மனைவிக்கு,
ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் பெற்றுத்தந்து, படிப்பிற்கான செலவை
ஏற்றார் மனித நேயர் வைகோ

.

மீனவ நண்பர்

தமிழக மீனவர்களின் துயரத்தைப் போக்கிட முப்பது ஆண்டுகளாக, தமிழ் நாட் டின் அரசியல் களத்தில் குரல் கொடுத்த மீனவ நண்பர் தலைவர் வைகோ என் பதை நாடாளுமன்றப் பதிவேட்டைப் புரட்டுகின்றபோது தெரிந்து கொள்ள முடி கிறது.நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகாலம் இடம் பெற்றிருந்த தலைவர் வைகோ அவர்கள், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் பொங்கி
எழுந்து இருக்கின்றார். கணக்கற்ற முறை தலைவர் வைகோவின் குரல் தமிழ் நாட்டு மீனவர்களுக்காக ஒலித்து இருக்கின்றது. அவற்றில் ஒரு சிலவற்றை
மட்டும் இங்கு நினைவு கூர்கிறோம்.

1991, நவம்பர் 25இல் மாநிலங்கள் அவையில், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படைத் தாக்கிய நிகழ்வு தொடர்பாக கேள்வி நேரத்தில் தலைவர் வைகோ எழுப்பிய விவாதத்தில், பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் வெளியுற வுத் துறை இணை அமைச்சராக இருந்தவர் சிக்கித் திணறியதை நாடாளு மன் றப் பதிவேட்டில் நாம் கண்டோம்.

விவாதம் வருமாறு:-

வைகோ : செப்டம்பர் மாதத்தில் 1991 இராமேஸ்வரத்திலிருந்து கடலில் மீன்
பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட் டதாக வந்த செய்தி குறித்து மத்திய அரசின் விளக்கம் என்ன? என்பதையும், தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காவண்ணம் எத்தகைய நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்பதையும் அறிய விரும்புகிறேன்.

எட்வர்டோ பெரைரோ (வெளியுறவுத் துறை இணை அமைச்சர்) : செப் டம் பர் மாதத்தில் 24 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படை
தடுத்தது என்றும், அவர்கள் தாக்கப்பட்டனர் என்றும், மூன்று மீனவர்கள் தவிர மற்றவர்கள் பின்னர் பத்திரமாகத் திரும்பி வந்தனர் என்றும் அந்த மூன்று பேர் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை என்றும் செய்தி கிடைத்துள்ளது. இனி மேல் தமிழக மீனவர்களை இலங்கை அரசு, மனிதாபிமானத்துடனும், சட்ட பூர்வமாகவும் நடத்த வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஏமாற்றம்-வேதனை

வைகோ : அமைச்சரின் அலட்சியமான பொறுப்பற்ற பதில் ஏமாற்றத்தையும்,
வேதனையையும் அளிப்பதோடு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றது. நவம்பர் 19 ஆம் தேதி மாலை இராமேஸ்வரம் மீனவர்கள் 24 பேர் நமது கடல்
எல்லைக்குள்ளேயே இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டனர். நான்கு மீன் பிடிப் படகுகள் இத்தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டன. 24 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக் கடற்படை, கப்பலில் கொண்டுபோய் ஈவு இரக்கமின்றி மிரு கத்தனமாக தாக்கினர்.அவர்கள் உடுத்தியிருந்த ஆடைகளையும் பறித்துக் கொண்டு ஒருவர்பின் ஒருவராக நடுக்கடலில் தூக்கி வீசினர். தங்களில் சில ருக்கு நீந்தத் தெரியாது என்று கூக்குரலிட்டு மீனவர்கள் மன்றாடியும் கூட, கொடூர நெஞ்சங்கொண்ட சிங்களக் கடற்படையினர் இரக்கமின்றி நமது மீன வர் களை நடுக்கடலில் தூக்கி எறிந்தனர்.

மூன்று மீனவர்கள் பலி

நீந்தத் தெரிந்த மீனவர்கள் மூன்றரை மணி நேரம் கடலில் நீந்தி, நெடுந்தீவின்
கரையை அடைந்தனர். நீச்சல் தெரியாத கோவிந்தராஜ், பாண்டி, கருப்பசாமி
ஆகிய மூவரும் கடலில் மூழ்கி இறந்தனர்.

தாக்கப்பட்டு நீந்திக்களைத்து கரை சேர்ந்த தமிழக மீனவர்களை இலங்கைத்
தமிழர்கள் மனிதாபிமானத்துடன் காப்பாற்றினர். உடுப்பதற்கு ஆடைகளும்,
பசிக்கு உணவும், தங்குவதற்கு இடமும் தந்தனர். தமிழக மீனவர்களை நன்கு
பாதுகாத்து பராமரித்து யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச்சென்று சர்வதேசச் செஞ் சிலுவைச் சங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.செஞ்சிலுவைச் சங்கத்தினர்,
மீனவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் கொண்டு சேர்த்தபின் தூதரகத் தின் மூலம் மீனவர்கள் தமிழகம் வந்து சேர்ந்தனர்.

இந்தியக் கடற்படை வேடிக்கை

இங்கு வந்தவுடன் தப்பி வந்த மீனவர்கள் ஆத்திரத்தோடும் வேதனையோடும்
நிருபர்களிடமும், அதிகாரிகளிடமும் நடந்த விபரங்களைத் தெரிவிக்கையில்,
இலங்கைக் கடற்படை தாக்கியபோது, இந்தியக் கடற்படைக் கப்பல்கள் தாக்கு தல் நடந்த இடத்திற்கு அருகில் இருந்தன. என்றாலும், தங்களைப் பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்காமல் கடற்படையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்ததாகவும் கூறினர். ஆனால், இலங்கைத் தமிழர்கள் தங்களை மனிதாபிமா னத்துடன் காப்பாற்றியதாகக் கூறினர்.

அமைச்சரின் ஆணவம்

தமிழக மீனவர்கள் மூன்று பேர் கடலில் தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டனர்.
ஆனால், நமது வெளிவிவகார அமைச்சர் அந்த மூன்று பேரும் காணாமல் போய் விட்டதாக, மிக அலட்சியமாக விளக்கம் தருகிறார். இலங்கைக் கடற் படையினர் நடத்திய கொடூரமான தாக்குதலைப்பற்றி வெறும் இடைமறிப்பு
சம்பவம் என்று அமைச்சர் ஆணவத்தோடு பதில் சொல்கிறார். மனிதாபி மா னத் தோடு இனிமேல் நடந்து கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசுக்கு இந்திய அரசு கருணை மனு போட்டதாக வெட்கமில்லாமல் அமைச்சர் இங்கே சொல்கிறார்.

தமிழக மீனவர்கள் இந்தியப் பிரஜைகள் அல்லவா? அவர்களைப் பாதுகாத்து
இலங்கைக் கடற்படை தாக்குதல் இனி நேராவண்ணம் தடுத்து நிறுத்தி, இலங் கைக்கு கடும் எச்சரிக்கை செய்ய வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டா? இல்லையா? என்று அறிய விரும்புகிறேன்.

புலிகள் பாதுகாப்பு

அமைச்சர் எட்வர்டோ பெரைரோ : தமிழக மீனவர்கள் தந்த தகவலின்படி 24
மீனவர்களை செப்டம்பர் 19இல் கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களைத் தாக்கி கைது செய் த தாகவும், கடலில் தூக்கி வீசியதாகவும், நீச்சலடித்து நெடுந்தீவை அடைந்த போது விடுதலைப்புலிகள் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுபோய் பாது காத்ததாகவும், அதன்பின் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இந்தியத் தூதரகம் சேர்ந்து தமிழகத்துக்கு திரும்பியதாகவும் மீனவர்கள் தெரி விக்கின்றனர். ஆனால், இலங்கை அரசு தரும் தகவல் இதற்கு மாறுபட் டுள் ளது.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கவே இல்லை என்றும்,விடு தலைப்புலிகள் தான் தாக்கினார்கள் என்றும் இலங்கை அரசு தெரிவித்தது. உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாது.ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்பது அல்ல பிரச்சினை. இலங்கை கடலாதிக்கப்பகுதிக்குள் நமது மீனவர்கள் நுழைந்ததால், நமது மீனவர்கள் குற்றம் சாட்டுகின்ற முறை யில் இலங்கை அரசு நடந்து கொள்ளாமல் சட்டப்படியும் சற்று மனிதாபிமானத் துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று நமது அரசு இலங்கைக்கு கூறியுள் ளது. நடந்த சம்பவம் இலங்கையில் கடலாதிக்கப் பகுதியில்தான் நிகழ்ந்துள் ளது.

வைகோ : அமைச்சரின் வாக்குமூலம் அயோக்கியத்தனமானது. (இ.காங்கிரஸ்
எம்.பிக்கள் கூச்சல், குறுக்கீடுகள்) இந்திய அமைச்சர் இலங்கை அரசுக்கு வக் காலத்து வாங்குவது வெட்கக்கேடாகும். தாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் அறிக்கையை நம்பாமல் கொடூர தாக்குதல் நடத்திய இலங்கை அரசின் அறிக் கை யை இந்த மன்றத்தில் வாசிக்கிறார். 1983 முதல் இதுவரை தமிழக மீனவர் கள் மீது இலங்கைக் கடற்படை 150 தடவைகளுக்கு மேல் தாக்குதல் நடத்தி யுள் ளது. 1987 ஆம் ஆண்டுவரை 96 தடவை இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்கியதாகவும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் உற்றதாக வும், 36 பேர் கொல்லப்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதே சபையில் 1988 ஆம் ஆண்டில் வாக்குமூலம் தந்தார்.

இந்தியக் கடல் எல்லையில்...

கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி (1991) கூட இராமேஸ்வரம் மீனவர்களான டிம் போஸ், முருகேசுவரன், சாமிக்கண்ணு, மார்ட்டின் ஆகிய நால்வரும் இந்தியக்
கடற்பிராந்தியத்திலேயே இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டு படுகாய முற்றனர் என்று தமிழக அரசே தெரிவித்துள்ளது.நமது வெளி விவகார அமைச் சர் இலங்கை அரசின் அப்பட்டமான கட்டுக்கதைகளை இம்மன்றத்தில் அவிழ்த்துவிட்டு நம்மை நம்பச் சொல்கிறார். அமைச்சர் இந்திய மக்களுக்காக பேசுகிறாரா? அல்லது இலங்கை அரசுக்காக பேசுகிறாரா?

அவைத்தலைவர் சங்கர் தயாள் சர்மா : நமது கடற்பகுதியிலேயே நமது மீன வர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என் பதுதான் கேள்வி.

அமைச்சர் பெரைரோ : உறுப்பினர் கூறுவது போல் நமது மீனவர்கள் பல முறை தாக்கப்பட்டது உண்மைதான்.

சங்கர் தயாள் சர்மா: ஆகஸ்டு 31 ஆம் தேதி தமிழக மீனவர்கள் நால்வர் இலங் கைக் கடற்படை தாக்குதலில் காயமுற்றது குறித்து உங்கள் பதிலை அறிய உறுப்பினர் விரும்புகிறார்.

அமைச்சர் பெரைரோ : அதுகுறித்த விவரங்கள் தற்போது என்னிடம் இல்லை.

வைகோ : இலங்கை அரசு தரும் விவரம் எல்லாம் அமைச்சரிடம் இருக்கிறது.
ஆனால், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவரம் அமைச்சரிடம் இல்லை. இதி லிருந்தே மத்திய அரசாங்கத்தின் அலட்சியப் போக்கும், பொறுப்பற்ற அணுகு முறையும் நன்கு புரிகிறது.

1992 ஆம் ஆண்டில் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் மீண்டும்
நிகழ்த்தப்பட்ட போது 1992, ஆகஸ்டு 5 இல், தலைவர் வைகோ, நாடாளுமன்றத் தில் பிரச்சினையை எழுப்பினார்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு
உள்ளாகி வருகின்றனர்.இந்தியக் கடல் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கடலில் இலங்கைக் கடற்படை அத்துமீறி பிரவேசிப்பதும், அட்டூழியம் புரிவதும் தமிழக மீனவர்களை மிருகத்தனமாக தாக்கிக் கொல்வதும் நமது மீனவர்களின் படகு கள், வலைகளை நாசம் செய்வதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

இதுவரை 100 பேர் சாவு

இதுவரை 150 தடவைகளுக்கு மேல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற் படைத் தாக்கியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் படுகாயப்படுத்தப்பட்டு உள்ள னர். ஏறத்தாழ 100 பேர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 16 ஆம் தேதி (1992) வேதாரண்யத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 7 தமிழக மீனவர்கள் நமது கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது
இலங்கைக் கடற்படை அப்படகைத் தாக்கி 7 மீனவர்களையும் சுட்டுக் கொன் றது. நாசமாக்கப்பட்ட அப்படகின் சிதறிய பாகங்கள் கரை சேர்ந்தன. அம்மீன வர் களின் குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளுக்கு இதுகுறித்து தந்திகள்
கொடுத்தனர்.

ஏறத்தாழ 5 மாதங்கள் கடந்துவிட்டன.அந்த 7 மீனவர்களின் பெயர்கள் வரு மாறு; ராஜாக்கண்ணு (வயது 39), பாலய்யா (வயது 32), பழனியாண்டி (வயது 23), ஆனந்தவேல் (வயது 33), சுப்பிரமணியன் (வயது 28), குட்டியாண்டி (வயது 35), ராமச்சந்திரன் (வயது 30) இந்த 7 பேர் குறித்து இதுவரை எந்தத் தகவலையும் அக்குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் கொடுக்கவில்லை.நான் மூன் று நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் சென்றிருந்தபோது, அந்த துயரத்தை
வெளியிட்டு என்னிடம் முறையீடு கொடுத்தனர்.இலங்கைக் கடற்படை இப்படி வெறியாட்டம் போடுவதைத் தடுக்க இந்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற் கொள் ளவில்லை என்பதுதான் எனது குற்றச்சாட்டு ஆகும்.

இலங்கை அரசிடம் சரணாகதி

கடந்த ஆண்டு (1991) நவம்பர் 25 ஆம் தேதி இதே பிரச்சினை குறித்து ஆதாரங் களுடன் இந்த அவையில் நான் மத்திய அரசைக் குற்றம் சாட்டிய போது, இந்தி ய வெளிவிவகார அமைச்சர் தனது பதிலில், இலங்கை அரசுக்கு கருணை மனு போடப் போவதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய அவைத்தலைவர்
(சங்கர் தயாள் சர்மா) குறுக்கிட்டு தமிழக மீனவர்களைக் காப்பாற்றுவது குறித் து அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை. கடலில் மீன் பிடிக்கும் உரி மை ஆயிரக்கணக்கான ஆண்டு களாக தமிழக மீனவர்கள் அனுபவித்து
வரும் அடிப்படை உரிமையாகும்.கச்சத்தீவை டெல்லி அரசுதான் இலங்கைக் கு தாரை வார்த்துக் கொடுத்தது. நெருக்கடி நிலை காலத்தில் இந்திய அரசுதான் மீன்பிடிக்கிற உரிமைகளையும் இலங்கை அரசிடம் சரணாகதி ஆக்கியது.

மத்திய அரசின் கடற்படை இந்தப் பிராந்தியத்தில் என்ன செய்து கொண்டிருக் கிறது? தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படைத் தாக்குவதை, படகுகளை சுடுவதை ஒவ்வொரு முறையும் இந்தியக் கடற்படை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஜெயந்தி நடராசன் (இ.காங்) : இந்தியக் கடற்படையை விமர்சிக்கக்கூடாது.
இராணுவத்தை விமர்சிப்பதை கோபால்சாமி எப்போதுமே வழக்கமாகக்
கொண்டிருக்கிறார்.

இராணுவம் புனிதமானது அல்ல

வைகோ:இந்திய இராணுவமும், கடற்படையும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட
புனித பசுக்கள் அல்ல. இந்தியக் கடற்படை அநீதிக்கு உடந்தையானால், அக்கிர மத்தைத் தடுக்காவிடில் விமர்சிக்கத்தான் செய்வேன். தமிழக கடலோரப் பகுதி களில் வாழ்கின்ற மீனவர்களை அச்சுறுத்தவும், கடலுக்கு மீன்பிடிக்க வராமல் பீதியை உருவாக்கி பயமுறுத்தவும், இலங்கைக் கடற்படையினர் நடத்தும் கொடூர தாக்குதல்களை தடுக்காமல் இப்படி வேடிக்கை பார்ப்பதன் மூலம் இந்தியக் கடற்படை அந்த நோக்கத்தை ஊக்கு விக்கிறது என்று குற்றம் சாட்டு கிறேன்.

(காங்கிரஸ் எம்.பிக்கள் குறுக்கீடு; கூச்சல்)

வைகோ : இதுவரை ஒரு தடவையாவது தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற் படையை இந்தியக் கடற்படை தடுத்தது உண்டா? தமிழக மீனவர்களைப் பாது காக்காமல் நொண்டி வாத்துகளாக இந்தியக் கடற்படை வேடிக்கைப் பார்க்கி றது என்று மீண்டும் குற்றம் சாட்டுகிறேன். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பண மும் சேர்ந்துதான் இந்தியாவின் முப்படைகளுக்கும் சேர்த்து செலவழிக்கப் படு கிறது. தமிழக மீனவர்கள் இந்தியப் பிரஜைகள் தானே, அவர்களைப் பாதுகாக்க இந்திய அரசும், மாநில அரசும் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டன என குற்றம் சாட்டுகிறேன்.நான் குறிப்பிட்ட 7 மீனவர்களைப் பற்றிய உண்மை நிலை யை இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இனி எதிர்காலத்திலாவது தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

1995 ஆம் ஆண்டில்....

சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்த போது 1995, பிப்ரவரியில், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தலைவர் வைகோ, பிர தமர் நரசிம்மராவுக்கு கடிதம் எழுதினார். தந்தி அனுப்பினார். இதற்கு பிரத மர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வைகோவுக்கு பதில் கடிதம் எழுதி னார். அதன் பின்னரும், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர். எனவே இந்தப் பிரச்சினையை 1995, மார்ச் 16 ஆம் தேதி தலைவர் வைகோ, நாடாளுமன்றத் தில் எழுப்பினார்.

மீனவர் படுகொலைதொடர்கிறது

“தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இந்தியக்கடலாதிக்கப்
பகுதிக்குள்ளேயே நுழைந்து தாக்குவதும், படுகொலை செய்வதும் தொடர் நிகழ்ச்சிகளாகிவிட்டன. இந்த மன்றத்தில் இதுகுறித்து எண்ணற்ற முறை நான் பேசி இருக்கிறேன். தமிழக மீனவர்களை இந்திய அரசு காப்பாற்றத் தவறி விட்டது என்று குற்றம் சாட்டி உள்ளேன். கண்டனம் செய்துள்ளேன்.

1983 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 118 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்
படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். 390 தாக்குதல்கள் நடை பெற் றுள்ளன. 500க்கும் மேற்பட்ட படகுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. பழந்தமிழ் நாட்டின் உரிமைப்பிரதேசமும் இந்தியாவின் ஒரு பகுதியுமான கச்சத்தீவினை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்தது மன்னிக்க முடியாத மாபெரும் தவறான நடவடிக்கையாகும்.

பிரதமர் கடிதம்

தமிழக மீனவர்கள் இப்படி தாக்கப்படும் கொடுமையினைத்தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரசிம்மராவுக்கு கடிதம் எழுதினேன், தந்தி கொடுத்தேன். பிப்ரவரி 18 ஆம் தேதி (1995) பிரதமர் நரசிம்மராவ் இதுகுறித்து எனக்கு பதில் கடிதம் எழுதியிருந்தார். தமிழக மீனவர்களின் அவலநிலை குறித் து நான் தெரிவித்து இருந்த விவரங்களை வெளிவிவகார அமைச்சரின் கவனத் திற்கு அனுப்பி உள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அக்க டி தத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் கடிதம் எழுதி அனுப்பிய பின்னரும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற் படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தியக் கடற்படையினர் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.நம்நாட்டுக் கடற்படையின் கண் முன்னாலேயே, தமிழக மீனவர்களை இலங்கைக் கடற் படை தாக்குவதும், படுகொலை செய்வதும் சர்வ சாதாரணமாக நடைபெறு கிறது.

1991 அக்டோபரில் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைக் கைது செய்து கொண்டு போய், அவர்களின் கப்பலில் சித்ரவதை செய்து நிர்வாணப்படுத்தி கடலில் தூக்கி வீசியும், மீனவர்கள் கடலில் நீந்தித் தப்ப முயன்றபோது துப் பாக்கிச் சூடு நடத்திக் கொன்றனர். இவை அனைத்தையும் இந்தியக் கடற்படை யினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். தப்பி வந்த மீனவர்கள் செய்தி யாளர்களிடம் இந்த விவரங்களைத் தெரிவித்தனர்.

கடமை தவறியது ஏன்?

சொந்த நாட்டுப் பிரஜைகளைக் காப்பாற்ற வேண்டிய கடற்படை கடமை தவறி யது ஏன்? குடிமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை அல்ல வா? தனது குடிமக்களின் உயிருக்கு பிரிதொரு தேசத்தினரால் ஆபத்து நேரிடு மானால், வெகுண்டெழுந்து தன் நாட்டு மக்களின் உயிரையும் உரிமைகளை யும் காப்பாற்ற ஒவ்வொரு நாடும் துடிப்பதை உலகில் காண்கின்றோம். தமிழக மீனவர்களின் உயிரையும் நலன்களையும் காப்பாற்ற இந்திய அரசு தவறி விட் டது. உடனடியாக இந்திய அரசு தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.இலங்கைக்கு எச்சரிக் கை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங் க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.வெளிவிவகார இணை அமைச்சர்
பாட்டியா இங்கே அமர்ந்து இருக்கின்றார். நான் எழுப்பிய பிரச்சினைக்கு அமைச்சர் விளக்கம் வேண்டும்.

அமைச்சர் பாட்டியா : இப்பிரச்சினை குறித்து எழுதி அனுப்புங்கள்.

வைகோ : தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொல் வது அமைச்சருக்கு இதுவரை தெரியாதோ? பிரதமரே இதுகுறித்து உங்களுக்கு தெரியப் படுத்தி உள்ளதாக எனக்கு கடிதம் எழுதி உள்ளாரே? இந்தப்பிரச்சினை குறித்து இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அமைச்சரின் பதிலை அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் பாட்டியா : இலங்கை அரசுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

புதுடெல்லியில் எப்போது ஆட்சி மாறினாலும், தமிழக மீனவர்களைப் பொறுத் தவரை காட்சி மாறவில்லை என்பதை இருபது ஆண்டுகளுக்கு முன்பே, மாநி லங்களவையில் தலைவர் வைகோ எழுப்பிய இவ்விவாதம் உணர்த்துகிறது. அன்றைக்கு பிரதமர் நரசிம்மராவ்; வெளியுறவு இணை அமைச்சர் எட்வர்டோ பெரைரோ; இன்றைக்கு பிரதமர் மன்மோகன்சிங்; வெளியுறவுத்துறை அமைச் சர் எஸ்.எம்.கிருஷ்ணா. 

அன்று நரசிம்மராவ் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறிய தைப் போலவே, இன்று மன்மோகன்சிங் அமைச்சரவையில் உள்ள வெளியுற வுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடத்தான் செய்வார்கள்; கச்சத்தீவை திரும்பப் பெற முடியாது என்று கூறுகிறார். காங்கிரஸ் கட்சி என்றைக்கும் தமிழனுக்கு ஆதரவாக இருந்தது இல்லை.

தலைவர் வைகோ அவர்களின் குரல் தமிழ் இனத்தின் குரலாக ஒலித்தது
என்பதையே நாடாளுமன்ற சரித்திரம் காட்டுகிறது.

தொடரும்.........

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment