Friday, May 10, 2013

பாகப்பிரிவினை - அறிஞர் அண்ணா

தமிழர் தமிழ்நாடு, தமிழ்நாடு தமிழருக்கே என்று நாம் கூறிவந்தபோது தமிழர் என்றால், தனி இனம், ஆரியத்தின் கலப்புக்கு முன்பு உயர்ந்த பண்புகளுடன் வாழ்ந்த இனம், என்பதை வலியுறுத்தி வந்தோம்.

வெறும் பொழி மட்டுமல்ல தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள், என்ப தை விளக்கி வந்தோம். தமிநாடு தமிழருக்கே என்றபோது, தமிழ்நாடு இன்று மதம், அரசியல், பொருளாதாரம் எனும் துறைகளிலே முறையே, ஆரியர்,வெள் ளையர், வட நாட்டார், என்பவைகளால் பாழாக்கப்படுகிறார்கள் என்பதை எடுத் துக்காட்டி இந்தநிலை மாறினால் மட்டுமே தமிழ்நாடு வளமாக வாழ முடியும், இதற்குத் தமிழ்நாடு தனி அரசுரிமை பெறவேண்டும் என்பதை விளக்கினோம்.


தமிழர் தனி இனம், தனியான வாழ்க்கை முறை கொண்டவர்கள் என்பதை மே லும் ஆராயும்போது, ஆந்திரரும் கேரளரும் இது போன்ற நிலை கொண்டவர் களே, இவர்களும், தமிழரைப்போலவே, ஆரியத்துக்குப் பலியானவர்கள், வட நாட்டுப் பொருளாதாரத்துக்கு இரையாகிறர்கள் என்பதையும் எடுத்துக்காட்டி அவர்களும் தங்கள் நாட்டை, பார்ப்பன - பனியாப் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும் என்று கூறினதோடு, கூட்டு முயற்சி செய்யவேண்டும் என்றோம். 

கூட்டு ஆட்சி நடத்தலாம் என்றோம் இவ்வளவுக்கும் ஆதாரமாக, இன்று தமி ழர், தெலுங்கர், கேரளர், என்று மொழிவழி வேறு வேறாகக் காணப்படும் மூவ ரும், திராவிடர் என்ற மூல மனத்தவர் என்பதை விளக்கியதோடு, மொழி யும் கூடத் தமிழிலிருந்தே மற்றவை என்பதையும் கூறினோம்.

கூறினோமென்றால், வெட்டிப் பேச்சாக அல்ல. நிலநூல், மொழிநூல் மனப் பண்பு நூல், வரலாறு ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டு கூறினோம். 

திராவிடநாடு, திராவிடருக்கே என்ற கூறலானோம். தமிழருக்கு, எவ்விதமான புதுவாழ்வு தேவை என்ற விரும்பினோமோ, அதே விதமான புதுவாழ்வு ஆந்தி ரருக்கும், கேரளருக்கும் வேண்டும் என்று கூறினோம் என்று பொருள். மூவ ரும், இன்றுள்ளதுபோல மதத்திலே ஆரியருக்கும், அரசியல் பொருள் இயலி லே டில்லிக்கும் அடிமைப்பட்ருப்பது ஒழிக்கப்பட்டு, தமிழகமும், ஆந்திரர் ஆந் திர நாடும்,கேரளர் கேரளமும் அமைத்துக்கொண்டு,தத்தமது எல்லையில் தத்த மது விருப்பப்படி வாழ்ந்துகொண்டு வருவதுடன், மூவரும் கூட்டாக நின்று, பொதுவான காரியங்களையும் மூன்று இடங்களின் முன்னேற்றத்துக்கான காரியத்தையும் கவனிக்கவேண்டுமென்றும் கூறினோம்.

தமிழ்நாடு தமிழருக்கே என்ற உரிமை முழுக்கத்தை அன்பழைப்பாக்கியபோது, அது திராவிடநாடு என்று வளர்ந்தது.

இங்குக் கவனிக்கவேண்டியது மூலநோக்கத்தை.

அந்த மூலநோக்கம், ஆரீய ஆங்கிலேய வடநாட்டுப் பிணைப்பிலிருந்து விடு பட வேண்டும் என்பது.

இந்த மூல நோக்கத்தை ஏற்றுக்கொள்ள ஆந்திரமும் கேரளமும் இசைந்தால், திராவிடநாடு எனும் அளவுக்குத் தரணி விரிந்திருக்கும்.

அவர்கள் இசையாவிட்டால், தமிழகம் என்ற அளவோடு இருக்கும். ஆனால், அதுதான் முக்கியம் - அளவு குறைந்து இருப்பினும் மூலநோக்கம் முறியாது - தனி அரசுரிமை இருக்கும். இந்த விளக்கத்தைக் கவனியாததாலேயே பலரிடையே குழப்பம் உண்டாகிறது.

துவக்கத்தின்போது கிளம்பிய கேலிக் கண்டனத்தை நாம் புறக்கணித்து விடு கிறோம். இன்றுள்ள நிலையைக் கவனிக்கவேண்டியதே முக்கியம். திராவிட நாடு திராவிடருக்கே என்ற பேச்சுக்க் எதிப்பு பல ரகம்.

1, பாரத் வர்ஜத்தைப் பிளக்கக்கூடாது என்று பேசுபவர்கள். நமது அனுதாபம் அவர்கட்கு, ஏனெனில் அவர்களின் பாரத்வர்ஜம் தேய்ந்துவிட்டது.

2. திராவிடர், திராவிடர் என்று இங்கே கூறி என்ன பயன்? ஆந்திரர் ஏற்றுக் கொண்டனரா? கேரளம் இசைகின்றதா? ஏன் நாமாக, வலிய வலிய அவர் களுக் காகப் பேசவேண்டும்? நம் காரியத்தைக் கவனிப்போம். தமிழ்நாடு வரை பேசு வோம் என்று கூறுபவர்கள் இவர்களிலும் இரு வகை உண்டு.

(அ) ஆந்திரமும் கேரளமும் சென்று திட்டத்தை விளக்கவில்லையே என்ற வருத்தத்தால் பேசுபவர்கள்,

(ஆ) பேசிப் பயன் கிடையாது, ஆந்திரரும், கேரளரும், தமிழருடன் கூடி வாழவேமாட்டார்கள் என்று எண்ணுபவர்கள்.

3. தமிழ்நாடு என்று மொழிவாரிதான் பிரியவேண்டும் உள்விவகாரத்தைக் கவ னிக்க உரிமைவேண்டும். ஆனால் மத்திய சர்க்கார் ஒன்று வேண்டும். அது இந்திய சர்க்காராக இருக்கவேண்டும். பாகிஸ்தான் மத்திய சர்க்காரோடு இணைந்திருக்கவேண்டும் என்பவர்கள் அதாவது.

உறவுக்கு எல்லை இமயம்
உரிமைக்கு எல்லை வேங்கடம்
என்று பேசுபவர்கள்

இந்த மூன்று வகையினரின் பிரச்சாரம், பிரச்சனையைச் சிக்கலாக்கத்தானே செய்யும்.

இந்த சிக்கலை நீக்கவேண்டியது நமது கடமை. எனவேதான், இந்தக் கிளர்ச்சி யின் வளர்ச்சியை விளக்கினோம். மூல நோக்கத்தை எடுத்துக் காட்டினோம்.

பாகப் பிரிவினை தேவை - என்று மட்டும் கூறவில்லை - பிரிகிறபாகம் எப்படி இருக்கவேண்டும் என்பதை கூறுகிறோம்.

நாடு தேவை என்று எல்லையை மட்டும் கூறவில்லை - நாட்டிலே என்ன நிலை இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

இங்கிருந்து அதுவரையில் என் நாடு என்று அம்பு எய்வது மட்டுமல்ல இங்கு இன்று இந்நிலை இருக்கிறது. அது நல்ல நிலையல்ல; நான் நல்ல நிலைமை யடைய வேண்டுமானால் இன்னின்ன பிணைப்புகளிடமிருந்து, ஆரியம், ஆங் கிலம், வடநாடு எனும் பிணைப்புகளிலிருந்து ஜெபமாலை, துப்பாக்கி, தராசு எனும் கருவிகளைக் கொண்டு நமது வளத்தைக் கருக்கும் தொடர்பு களிலி ருந்து விடுபடவேண்டும் என்று கூறுகிறோம்.

நாம் கோருவது, புது அரசு முறை - வெறும் சர்வே செய்து எல்லைக்கல் நாட்டு வது அல்ல.

நமது இலட்சியம், மொழியால் மட்டுமல்ல; இனத்தால், அதாவது தனியான வாழ்க்கை முறையினால் சித்தரிக்கப்படும் நாடு ஆகும்.

இந்த மூல நோக்கத்தை, ஆந்திரமும் கேரளமும் ஏற்றுக்கொள்ளும் என்று நம்பு கிறோம் - ஏற்றுக்கொள்வதிலே அந்த இரு மக்களுக்கும் நலன் இருக் கிறது என்ற நம்புகிறோம், அவர்கள், டில்லியுடன் இணைந்து இருப்பதைவிட, கூட் டாட்சியாக நம்மோடு இருப்பது நல்லது என்று எண்ணுகிறோம். இதை எடுத் துக் கூறும் அளவுக்கும், நமக்கும் அவர்களுக்கும் பாத்தியதை, உறவு, ஒரே இனம் என்ற உரிமை இருக்கிற காரணத்தால்.

அவர்கள் அடியோடு இந்த அன்பழைப்பை ஏற்க மறுத்தால் என்ன ஆகும்? நமது மூலநோக்கம் கைவிடப்பட மாட்டாது தமிழகம் வரையிலேனும், நாம் இன்பத் திராவிடம் - (புது முறையான சமுதாய பொருளாதார, மத ஆட்சி முறை) இருக்கும். 

திராவிடம் என்பது நிலப்பரப்பை மட்டுமல்ல, வாழ்க்கைத் தத்துவத்தைக் காட் டும் சொல். ஆரியம்! என்ன பொருள்? ஒரு இடமா? இல்லை! ஒருவகை வாழ்க் கை முறை. திராவிடம்? வாழ்க்கை முறை. அத்துடன், வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு பூபாகம் - தரணி.

இந்த வாழ்க்கை முறை, பண்பாடு, ஆந்திரம், கேரளம் ஆகிய பகுதிகளிலும் இருக்கவேண்டும் என்பது நமது ஆசை அது ஈடேறாவிட்டால் வாழ்க்கை முறையையே விட்டு விடுவோம் என்றல்ல அர்த்தம் - ஏற்றுக் கொள்ள இயும் இடம் வரையில் அமைப்போம் என்று பொருள்.

தஞ்சையின் வீழ்ச்சிக்குக் காரணம் வெங்காண்ணா எனும் வேதியன் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும். தேரிந்து சிலர் கூறினாலும் எவ்வளவு பேரு டைய செவியில் வீழ்ந்து சிந்தனையைக் கிளறுகிறது? பிறந்தது தமிழகத்தில், வாழ்ந்தது! தமிழகத்தில்! பழகியது தமிழருடன்! பேசியது தமிழ் மொழி! எனினும் தமிழகத்தின் பூந்தோட்டத்தை, மராட்டியருக்குக் காட்டிக் கொடுத் தான் கயவன்! அன்னிய ஆதிக்கத்தைப் புகுத்தினான்.

ஆரியத்தின் அணைப்பில் அவதியுற்ற திராவிடம்

இங்கு நெடுங்காலமாகவே, ஆரியத்தின் அணைப்பிலிருந்து விடுபட, திரா விடம் பலமுறை முயன்றிருக்கிறது. சில நேரத்தில் செயலற்று இருந்தது என்ற போதிலும், அடியோடு சரண் புகுந்ததில்லை. அடிக்கடி தனித்தமிழ், வேளாள நாகரிகம், உண்மைச் சைவம், பண்டை நாகரிகம் என்று பல்வேறு தலைப்புகளிலே கிளம்பிய இயக்கங்கள் யாவும், மூல முயற்சியின் சிறு சிறு பதிப்புகளேயாகும். இவை ஒவ்வொன்றும், தேவை, பலனுமுண்டு இவை களால் என்ற போதிலும், இவை, மக்களில் ஒரு சிலரால் மட்டுமே உணரக் கூடியதாக இருந்த காரணத்தால், மூலமுயற்சியை இந்த இயக்கங்கள் பலப்படுத்த முடியவில்லை. ஒவ்வொன்றும், தனித்தனி இயக்கங்களாக மாறிவிட்டன. முரண்பாடுகளாகவும் தெரியலாயின.

No comments:

Post a Comment