ஸ்டெர்லைட் ஆலை குறித்து பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது!
ஆலையை அகற்றும் எங்கள் தர்ம யுத்தம் தொடரும்!
வைகோ அறிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தின் இன்றைய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்தின் ஆணையை எதிர்த்து ஆலை நிர்வாகம், தமிழகத்தில் உள்ள மேல் முறையீட்டு ஆணையத்தில்தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும், அந்த ஆணையத்தின் தீர்ப்பின் மீதுதான், பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் இருக்கின்றன என்று இந்தத் தீர்ப்பாயத்தில் ஆட்சேபனை தெரிவித்திருந்தேன், அதுகுறித்து தீர்ப்பு ஆயம் தந்துள்ள பதில் விளக்கம் என்ன என்பதை தீர்ப்பின் முழு விவரம் கிடைத்தால்தான் தெரியும்.
தற்போது தீர்ப்பு ஆயம் ஆலையைத் திறக்குமாறும் அதற்கு முன் நேரில் கண் காணிக்க ஒரு நிபுணர் குழுவையும் அறிவித்துள்ளது.
ஆலையின் இலாப நட்டத்தைப் பற்றியும் இந்தியாவுக்குக் கிடைக்கிற வருமா னத்தைப் பற்றியும் தீர்ப்பு ஆயம் கூறி உள்ளது. இந்தியாவில் மூன்று மாநிலங் கள் தாமிர உற்பத்தியைப் பற்றி கருதாமல், ஆலையை அனுமதிக்கவில்லை யே? தென் தமிழ்நாடுதான் அதற்குப் பழி ஆவதா? நாட்டின் வருமானத்தைவிட மக்களின் உயிரும், உடல் நலமும் உன்னதமானது என்பதால் நச்சு புகை கக்கும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 17 ஆண்டுகளாகப் போராடு கிறேன். நீதிக்கான போராட்டம். பொதுமக்களின் நல்வாழ்வுக்கான போராட் டம், எத்தனை தடைகள் வந்தாலும் மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து போராடு வோம்.
உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு சாதகமாக ஏப்ரல் 2 ஆம் தேதி தந்த தீர்ப்பை எதிர்த்து, நான் ஏற்கனவே சீராய்வு மனு உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறேன்.
எனவே, மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடுவேன். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து வழி களிலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான எனது தர்ம யுத்தம் தொடரும்.
No comments:
Post a Comment