Saturday, May 4, 2013

ஐ.நா. மன்றத்திலும் அவரது குரல் ஒலித்திட வாழ்த்துகிறேன்!

வைகோ, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில்

தமிழ் ஈழ மக்களின் குரலாக ஒலித்திருக்கிறார்!

ஐ.நா. மன்றத்திலும் அவரது குரல் ஒலித்திட வாழ்த்துகிறேன்!


“சுதந்திரத் தமிழ் ஈழம்; பொது வாக்கெடுப்பு” நூல் மற்றும் ஒளிப்படக் குறுந் தட் டு வெளியீட்டு நிகழ்ச்சி, 13.04.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பழ.நெடுமாறன் அவர்கள் நிகழ்ச்சி யில் ஆற்றிய உரை வருமாறு:

சகோதரர் வைகோ அவர்கள் சுதந்திரத்தமிழ் ஈழம் குறித்த பொது வாக்கெடுப் பை ஐ.நா.சபையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிருந்து பெல் ஜியத்திற்குச் சென்று, அதனுடைய தலைநகரான பிரஸ்ஸ்ல்சில் ஐரோப் பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில், இந்தக் குரலை ஓங்கி ஒலித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்.அதற்காக தமிழர்கள் அவருக்கு நன்றிக் கடன் செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.



பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் மூலம் ஈழத் தமிழ் மக்களின் விருப்பம் என்ன என்பதை உலகம் அறிந்து, அதன்படி நடந்து கொள்ள வேண் டும் என்பதைத்தான் சகோதரர் வைகோ அவர்களும் நானும் வலியுறுத்தி வரு கிறோம். ஆனால்,இதை விமர்சனம் செய்ய வருபவர்கள் வரலாறு தெரியாமல் விமர்சனம் செய்கிறார்கள். உலகத்திலே இப்படி யாரும் இதுவரை கேட்டது இல்லை. அது எப்படி நடத்த முடியும் என்று நம்முடைய காங்கிரஸ் நண்பர்கள் பேசும்போது வருத்தமாக இருக்கிறது.

உலக வரலாறும் உங்களுக்குத் தெரியாது. இந்தியாவின் வரலாறும் உங்களுக் குத் தெரியவில்லை. இன்றைய காங்கிரஸ் தோழர்களுக்கு காங்கிரஸ் கட்சி யின் வரலாறும் தெரியாது. 1947 ஆம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் என இரண் டாக பிரிப்பதற்கு முன்னால், அது குறித்து அன்றைக்கு காங்கிரஸ் - முஸ்லிம் லீக் தலைவர்களிடம் வைஸ்ராய் மெளண்ட் பேட்டன் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்.

வடமேற்கு எல்லைப்புற மாநிலம் என்று அழைக்கப்பட்ட எல்லைப்புற மாநி லத்தில் அப்துல் கபார்கான் என்கிற எல்லைப்புற காந்தி என்று மதிக்கப்பட்ட
தலைவருக்கு மக்களிடம் பெரும் செல்வாக்கு இருந்தது. அவர் காங்கிரசில்
இருந்தார். ஆனால், ஜின்னா கேட்ட பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற
மாகாணம் உள்ளடங்கியது. சிந்து, பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகா ணம் இவையெல்லாம் சேர்த்துதான் அன்றைக்கு மேற்கு பாகிஸ்தான் கேட் டார்கள். கிழக்கு வங்காளத்தைப் பிரித்து கிழக்கு வங்காளம் என்று உருவாக்கு வதுதான் ஜின்னாவின் திட்டம்.

ஆனால், வடமேற்கு எல்லைப்புற மாகாண முஸ்லிம்கள் எல்லைக் காந்தி
அப்துல் கபார்கானுக்குக் கட்டுப்பட்டு, அந்த மாநில சட்டமன்றத் தேர்தல் 1946
இல் நடைபெற்ற போது, அங்கே அவர்கள் காங்கிரசை வெற்றிபெற வைத்து, அப்துல் கபார்கானின் சகோதரர் டாக்டர் கான்சாகிப் தலைமையிலே அமைச் சரவை அமைக்கப்பட்டு இருக்கிறது. அப்துல் கபார்கான் என்ன சொல்கிறார், நாங்கள் முஸ்லிம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கவில்லை. ஆக வே எங்கள் மாநிலத்தை அதனுடன் சேர்க்கக் கூடாது.இந்தியாவுடன்தான் நாங்கள் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

ஜின்னா என்ன சொன்னார், அங்கே இருப்பவர்கள் அத்தனைபேரும் நூற்றுக்கு நூறு முஸ்லிம்கள். வேறு யாரும் அங்கே கிடையாது. எங்களுடைய இந்த பாகிஸ்தான் எல்லைக்குள் தான் வடமேற்கு எல்லைப்புற மாநிலம் இருக்கி றது. மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது இருந்த நிலைமை வேறு, இன்றைக்கு இருக்கிற நிலைமை வேறு.இன்றைய தினம் அங்குள்ள முஸ்லிம் கள் எல்லாம் என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று அவர் கூறினார். ஆகவே, பாகிஸ் தானை அவர்கள் ஆதரித்துக் கொண்டு இருக் கிறார்கள் என்றார்.

அப்போது வைஸ்ராய் மெளண்ட் பேட்டன் பிரபு ஒரு முடிவுக்கு வந்தார். எல் லைப்புற மாகாண மாநிலங்களில் எல்லாம் பொது வாக்கெடுப்பு நடத்துவது. அதன் தீர்ப்பு என்னவோ, அதன்படி இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அந்த மாநிலங்களைச் சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்து,1947 ஆம் ஆண் டு தொடக்கத்தில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் அன்றைக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மையோரின் விருப்பத்திற் கேற்ப பாகிஸ்தானோடு சேர்வது என்று பெரும்பான்மையினர் அளித்த தீர்ப்புக் கு இணங்க பாகிஸ்தானுடன் சேர்க்கப் பட்டது.

இந்தியாவிலேயே பொது வாக்கெடுப்பு நடந்தது தெரியாதவர்கள் காங்கிரஸ்
காரர்கள். தமிழ் ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இன் றைக்கு சகோதரர் வைகோ அவர்களும், நானும்,கொளத்தூர் மணி அவர்களும், மற்றவர்களும் பேசினால், இவர்கள் சொன்னால் அது நடந்துவிடுமா? இவர்கள் கேட்டால் கொடுத்து விடுவார்களா? என்றெல்லாம் அவர்கள் பேசுகிறார்கள்.

சகோதரர் வைகோ இந்தப் பேச்சிலே எந்தெந்த உலக நாடுகள் பொது வாக்கெ டுப்பு மூலம் தனித் தனி நாடாகின என்று தெளிவாகச்சொல்கிறார். இந்தோ னேசி யாவின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு தைமூரில் ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்தியது. அது இன்றைக்கு தனி நாடாக, தனிக் கொடியுடன் விளங்கு கிறது. அதைப்போல கொசாவோ, தெற்கு சூடான் என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார் வைகோ.

ஒரு தேசிய இனம், அந்த தேசிய இனத்தை உள்ளடக்கிய ஒரு நாட்டுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பதை ஐ.நா. பட்டயமே வலியுறுத்தி இருக்கிறது. ஐ.நா. பட்டயத்தில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.ஐ.நா. பட்டய மானது, 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் நாள் வகுக்கப்பட்டது என்பதை சகோ தரர் வைகோ அவரது பேச்சிலே விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

1917 ஆம் ஆண்டு அக்டோபர் புரட்சி, இனப்புரட்சி என்று அழைத்தானே பாரதி.
அந்த அக்டோபர் புரட்சி வெடித்தபோது, அதன் விளைவாக ஜார் ஆட்சி வீழ்த்தப் பட்டு, அங்கே தலைவர் லெனின் அவர்களின் தலைமையிலே சோவியத் ஆட் சி அங்கு உருவான போது, முதன் முதலாக அங்கே லெனின் அவர்கள், தேசிய இனங்களுக்குள்ள சுய நிர்ணய உரிமையை இந்த அரசு ஏற்றுக்கொண்டி ருக் கிறது. உலகம் முழுவதும் எங்கெங்கு அடிமைப்பட்ட தேசிய இனங்கள் விடு தலை பெறுவதற்காக குரல் கொடுக்கிறார்களோ, போராடுகிறார்களோ அவர் களுக்கு சோவியத் நாடு முழுவதுமாக துணை நிற்கும் என்று பகிரங்கமாக அறி வித்தார்கள்.

1917 ஆம் ஆண்டில் உலகத்தின் நிலைமை என்ன? ஆசியாவிலும், ஆப்பிரிக்கா விலும் ஏராளமான நாடுகள் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் காலனி நாடுகளாக விளங்கிக்கொண்டு இருந்தன. அந்தக் காலகட்டத்தில் லெனின் அவர்களின் அந்த அறிவிப்பு மக்களுக்கெல்லாம் மிகப்பெரிய உற்சாகத்தை உந்துதலைக் கொடுத்தது.நமக்காக குரல் கொடுக்க ஒரு நாடு உருவாகிவிட்டது. அந்த நாட் டின் விடுதலையால் நாமும் விடுதலை பெற்ற மக்களாக நடமாட முடியும் என்ற எண்ணமும் எழுச்சியும் ஆசியஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த அனைத் து மக்களுக்கும் வந்தது.

லெனின் அவர்கள் விடுத்த இந்தப் பிரகடனத்தால் தான் பிற்காலத்தில் ஐ.நா. சபையே ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கட்டம் ஏற்பட்டது என்பதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டும். ஸ்வீடன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நார் வே எப்படிப் பிரிந்தது? டென்மார்க் நாட்டின் பிடியிலிருந்து ஐஸ்லாந்து எப்படிப்
பிரிந்தது? பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை எல்லாம் பிரிந்தன.

நம்முடைய காலத்திலே நாம் பார்த்தோமே, 1995 சோவியத் ஒன்றியம் 1914 புரட்சிக்குப் பின்னால் உருவான சோவியத் ஒன்றியம் 75 ஆண்டுகள் உலகத் தில் மிகச் சிறந்த வல்லரசாக விளங்கிய சோவியத் ஒன்றியம், ஜெர்மனியின் நாஜி படைகளை மண்டியிட வைத்த சோவியத் ஒன்றியம், உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அடிமைப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி ய சோவியத் ஒன்றியமே என்ன ஆயிற்று?

அதிலிருந்த தேசிய இனங்கள் சோவியத் அரசியல் சட்டத்தின்படி அளிக்கப்பட் டிருந்த பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயம் என்பதை அந்த நாடு கள் ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு குடியரசாகவும் பிரிந்து, இறுதியிலே சோவி யத் ஒன்றியமே இல்லாமல் போய்விட்டதே! நம்முடைய காலத்திலேயே இத னைப் பார்த்தோமா இல்லையா?

எல்லாவற்றையும் பார்த்த பின்னரும்கூட இன்னமும் தமிழ் ஈழம் சாத்தியமா?
என்று கேட்பதும், அதெல்லாம் பகற்கனவு என ஏளனம் செய்வதும் வரலாறு தெரியாதவர்களின் கூற்றாகும். அவர்களுக்கெல்லாம் வரலாறை தெரிவிப்ப தற் காகத்தான் சகோதரர் வைகோ அவர்கள் இந்த உரையை ஐரோப்பிய நாடா ளுமன்றத்திலேயே பேசியிருக்கிறார்.

1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், அமெரிக்காவில்
உள்ள சிகாகோ நகரில் ஐ.நா.பேரவையை உருவாக்குகிற முயற்சி நடைபெற்ற போது, நாற்பத்து ஒன்பது நாடுகள் தான் பங்கெடுத்து இருக்கின்றன. அந்த உண் மையை அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆனால், இன்றைக்கு 199 நாடுக ளுக் கு மேலே ஐ.நா.வில் அங்கம் வகிக்கிறது. இந்த நாடுகள் எல்லாம் ஆகாயத்தில் இருந்து பூமியில் விழுந்தனவா என்றால் இல்லை.

இருந்த நாடுகள் இரண்டாக, மூன்றாகப் பிரிந்து இன்னும் பலவகையாகப்பிரிந் து இத்தனை நாடுகள் உருவாகி, ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கின்றன. இந் நாடு களின் கொடி ஐ.நா.பேரவையின் முற்றத்திலே இன்றைக்கு கம்பீரமாகப்
பறப்பதை நாம் பார்க்கலாம். 199 நாடுகள் உருவானபிறகு தமிழ் ஈழம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்கள், இன்னும் சிறிது காலத்திற்குள் ஐ.நா.சபை முற் றத்தில் தமிழ் ஈழத்தின் கொடி பட்டொளி வீசிப் பறப்பதை நிச்சயம் பார்ப்பார் கள்.


தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரனை ஒரு பயங்கரவாதி என்றெல்லாம் சித்தரித்தவர்கள், அதே பிரபாகரனை ஐ.நாவுக்கு அழைத்து அங்கே பேச வைக் கப் போகும் நாளும் வந்துகொண்டிருக்கிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத்தையும் இப்படித்தான் சொன்னார்கள். ஒரு பயங்கரவாதி என்று அமெரிக்காவே சித்தரித்தது. ஆனால், அன்றைக்கு ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியினால், ஐ.நா. பேர வை யில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இஸ்ரேலியப் பிரதிநிதிகளும் இங்கே வந்து பேசி அவர்களின் கருத்தையும் நாம் தெரிந்துகொண்டதுபோல, நாம் பாலஸ்தீன அரேபிய மக்களின் கருத்துகளையும் அறிந்துகொள்வதற்கு
வசதியாக யாசர் அராபத் அவர்களை இந்த மன்றத்துக்கு அழைக்க வேண்டும்
என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அமெரிக்கா என்ன செய்தது. ஐ.நா. சபை இருப்பது அமெரிக்காவில்
உள்ள நியூயார்க்கில். யாசர் அராபத் அவர்கள் அமெரிக்கா வருவதற்கு அமெ ரிக் கா விசா வழங்க மறுத்து விட்டது. சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்பது போல், விசா கொடுக்காவிட்டால், அவர் இங்கு வரமுடியாது, வந்து பேச முடியாது என்பதற்காக இந்தத் தந்திரத்தைக் கையாண்டது.

ஆனால், மீண்டும் ஐ.நா. சபை கூடிய போது ஆசிய-ஆப்பிரிக்க நாடுகள் தீர் மா னம் கொண்டுவந்தன. யாசர் அராபத் எங்கு வந்து பேச முடியுமோ அங்கு ஐ.நா. சபையைக் கூட்டுங்கள் என்று தீர்மானம் போட்டார்கள்.ஜெனீவாவிலே ஐ.நா. சபையின் கிளை அலுவலகத்தில் பேரவை கூடியது, அதில் யாசர் அராபத் முழங்கினார். இது தான் வரலாறு.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் சகோதரர் வைகோ அவர்கள் பேசி யது என்பது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாகும். உலகம் முழுவதும் இருக் கக்கூடிய தமிழர்களுக்கு பெருமை அளிக்கக்கூடிய செய்தியை அவர் செய்தி ருக்கிறார். இதற்கு ஒப்புமை சொல்லவேண்டுமானால், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால், ஐ.நா. சபை அமைப்புக் கூட்டம் 1945 இல் நடக்கிறது.

அன்றைக்கு காங்கிரஸ் கட்சின் சார்பில்,வி.கே.கிருஷ்ண மேனனும், ஜவஹர் லால் நேருவின் அருமைத்தங்கை விஜயலட்சுமி பண்டிட்டும் அனுப்பப் பட் டார்கள். அவர்கள் ஐ.நா.சபைக்கு வெளியே இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்கான அறிக்கையை விளக்கி ஆங்கிலத்திலே துண்டு அறிக் கையை அச்சடித்து வைத்துக் கொண்டு ஐ.நா. பேரவைக்கு வருகிற அனைத்து நாட்டுத் தலைவர்களிடமும் கொடுத்தார்கள்.உள்ளே போய் பேச முடிய வில் லை.காரணம் இந்தியா அடிமைப்பட்ட நாடு என்பதனாலே.

ஆனால் இன்றைக்கு தமிழ் ஈழத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடா ளுமன்றத்தில் போய் அங்கு உறுப்பினர்கள் நடுவிலே பேச முடியாவிட்டா லும்கூட, அவர்கள் சார்பில் நம்முடைய சகோதரர் வைகோ அவர்கள் போய்ப் பேசியிருக்கிறார். அந்தத் தமிழ் ஈழ மக்களின் குரலை அங்கே ஒலிக்க விட்டு  வெற்றிகரமாக திரும்பி இருக்கிறார். அவரை உலகத்தமிழர் களின் சார்பிலே மனமாரப் பாராட்டு கிறேன்.

ஐ.நா. மன்றத்திலும் உங்கள் குரல் ஒலிக்கும் வகையிலே உங்களுடைய
தொண்டு வளரட்டும் வளரட்டும் என்று வாழ்த்துகிறேன்.

பழ.நெடுமாறன் அவர்கள் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment