Monday, May 6, 2013

இளைஞர்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் திரண்டு எழட்டும்

பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ‘பிரபாகரன்’ என்றே தமிழகம் பெயர் சூட்டும்! பெரியார் திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் வைகோ

அடக்குமுறை சட்டங்களைத் தகர்த்து, சிறைமீண்ட போராளிகளுக்கு வரவேற் பு அளிக்கும் பொதுக்கூட்டம், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 18. 8. 2009 அன்று, சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங் கேற்ற கழகப் பொதுச் செயலாளர் வைகோ,சிறைசென்ற தோழர்களுக்குப் பொன்னா டை அணிவித்து பாராட்டுத் தெரிவித் தார்.அவரது உரையில் இருந்து...

மே திங்கள் இரண்டாம் நாள் கொங்கு மண்டலத்தில் மாநகர் கோவையை அடுத்து உள்ள நீலம்பூர் சாலையில், ‘ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு இந்திய அரசால் அனுப்பப்படவிருந்த இந்திய ஆயுதங்களை ஏந்திவந்த இராணுவ வாக னங்களைத் தடுக்க வாரீர்’ என்று முழங்கி, உயிருக்கு ஆபத்து நேரும் என் ற போதும் அஞ்சாமல், மரணத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தமிழ் நாட் டின் தன்மான உணர்வை நிலைநாட்டிய வீரர்களான கோவை இராமகிருஷ்ணன், அருமைத் தோழர் மானமிகு இலட்சுமணன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் கோவை மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தம்பி
சந்திரசேகரன், கழகத்தின் கண்மணி வேலுசாமி, அந்தப் போர்க்களத்துக்குத் துணிந்துசென்ற குட்டிமணி என்கின்ற வீரமணி ஆகிய தோழர்கள் தேசப் பாது காப்புச் சட்டத்தின்கீழ் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட அக்கிரமத்தைக்
கண்டித்து, கோவை மாநகரில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களோடு இணைந்து ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினோம்.

ஏறத்தாழ 90 நாட்கள் கோவை நடுவண் சிறையில் அடைபட்டு மீண்டு வந்து உள்ள தோழர்களின் தன்மான உணர்ச்சியையும் வீரத்தையும் பாராட்டுகின்ற விதத்தில், தலைநகர் சென்னையில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த பெரி யார் திராவிடர் கழக நிர்வாகிகளுக்கு என்னுடைய இதயம் நிறைந்த பாராட்டு களைத் தெரிவிக்கக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.


அடக்குமுறையை எதிர்த்துப்போராடிச் சிறை சென்று மீண்டுவந்த தோழர் களுக்கு தலைநகர் சென்னையில் இன்று பாராட்டுக்கூட்டம். ஏற்பாடு செய்து இருக்கின்ற அமைப்பு பெரியார் திராவிடர் கழகம். என்ன இருந்தாலும் பழைய பாசம் கலைஞருக்கு இல்லாமலா போகும்? அவர் பெரியார் குருகுலத்தில்
வளர்ந்தவர் என்றுதானே கூறுகிறார்? பெரியாரின் சுட்டு விரலைப்பற்றித்தான் பெரியார் மாளிகையில் உலவினேன் என்று பலமுறை கூறுகிறார்?

ஆகவே,ஒரு வீரனை எப்படி பாராட்டுவது என்று அவருக்குத் தெரியும் என்ப தால்தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிற இந்த நாளில், தமிழ்நாடு அரசின் தலை மைச் செயலாளருடைய அறிவிப்பு இன்று காலை ஏடுகளில் வெளியாகி இருக்கிறது. நாங்கள் பிரபாகரனின் படத்தைக் காட்டினாலோ, பெயரைப் பயன் படுத்தினாலோ மேடை நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பினாலோ, ஒளிபரப்பினாலோ,
தொலைக்காட்சி சின்னத்திரைகளில் இடம்பெறச் செய்தாலோ மீண்டும் அடக் கு முறைச் சட்டம் பாயும் என்ற அறிவிப்பு மிகப்பொருத்தமாக இந்த நாளில் வந்திருப்பதால், சிறைசென்று மீண்டுவந்த தோழர்களை உரிய முறையில்
தமிழக முதல் அமைச்சர் வரவேற்று இருக்கிறார் என்றுதான்  நான் கருது கின்றேன்.

நம்முடைய அருமைச் சகோதரர் கோவை இராமகிருஷ்ணன் மிகத்தெளி வா கச் சொன்னார்கள். இராணுவ வாகனங்களிலே பாதுகாப்புக் கடமையைச்செய் வதற்காக வந்த இந்தியச் சிப்பாய்களைத் தாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. இந்திய இராணுவத்தினர்மீது தாக்குதல் நடத்துகின்ற திட்டம் எங்களிடம் இல் லை. ஆனால், எடுத்துச் செல்லப்படுகின்ற ஆயுதங்கள், எங்கள் ஈழத்தமிழர் களை அழிப்பதற்காக கொலைவெறியன் ராஜபக்சேவின் கைகளை வலுப்படுத் துவதற்காக, அந்தக் கொலைகாரக் கூட்டத்துக்கு அனுப்பப்படுகிறது என்ப தால் அதைத் தடுப்பதற்காகச் சென்றோம்’ என்று குறிப்பிட்டார்.

இந்திய இராணுவ வாகனங்களை எதிர்த்து அணிவகுத்து நிற்கிறார்கள். அவர் கள் கைகளில் ஆயுதம் இல்லை. ஆனால், நெஞ்சில் பாய்ந்துவரும் துப்பாக்கிக் குண்டு களாயினும் ஏந்துகிற வீரம் அந்தத் தோழர்களுக்கு இருந்தது. (பலத்த கைதட்டல்) மரணத்துக்கு அஞ்சாமல் அந்த மாவீரர்கள் களத்தில் நின்றார்கள். அந்த வாகனங்களில் வந்த சிப்பாய்கள் அவர்கள் துப்பாக்கி களைப் பயன் படுத் தி இருந்தால், வீரக்களச் சாவைத்தான் என் அருமைச் சகோதரர்கள் அன்றைக் கு அடைந்து இருப்பார்கள். அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை.

நான் அன்றைக்குச் சென்னையில்தான் இருந்தேன். அந்தச் செய்தியை அறிந்த
அடுத்த நிமிடத்தில், கைத்தொலைபேசியில் கோவை இராமகிருஷ்ணன் அவர் களை அழைத்து, ‘தமிழ்நாட்டில் தன்மானம் செத்து விடவில்லை என்று நீங்கள்
நிருபித்து இருக்கிறீர்கள். மொத்தத் தமிழகமும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டு
இருக்கிறது’ என்று சொன்னேன்.

தமிழக மக்கள் ஒன்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டு இருக்கிறார்கள்.

இந்திய நாட்டின் எல்லையைப் பாதுகாப்பதற்குச் சென்றதா இந்திய இராணு வம்? தமிழர்களின் வாழ்வின் துயரத்தை எண்ணி ஓலமிடுகிற வங்கக் கடலில், நம் கடற்கரை ஓரத்தில் கடலோரக் கிராமங்களில் இருந்து செல்கின்ற தமிழக மீனவர்களை கடலிலேயே சுட்டுக்கொல்கிற கொடியவர் களை, சிங்களக் கடற் படையை எதிர்த்து தடுப்பதற்குச் சென்றதா இந்திய இராணுவம்? இந்தியக்கடற் படை?



2004 ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்புக்கு மன்மோகன் சிங் வந்த நாள்முதல் அந்த
அரசை ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிற அம்மையார் சோனியாகாந்தியாரின்
உத்தரவின்பேரில் ஏவுதலின்பேரில், இலங்கை அரசோடு ஒப்பந்தம் போட்டுக்
கொண்டு, ஈழத்தமிழர்களின் உரிமைக் குரல்வளையை அறுப்பதற்காகப் போடப் பட்ட எழுதப்படாத ஒப்பந்தத்தின்படி ஆயுதங்களை அள்ளித்தந்தார்கள்.
எத்தனையோ முறை நாம் அதைச் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகிறபோது நமது வழக்கறிஞர் துரைசாமி அவர்களும்,
கொளத்தூர் மணி அவர்களும் குறிப்பிட்டார்களே, இன்றைக்கு மூன்று இலட் சம் மக்கள் முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு வதைபடுகிறார்கள். பெரு மழை பெய்து விட்டால், சகல பாதுகாப்போடு வாழுகிற மக்களுக்கே துன்பம் என்றால், வீடிழந்து, தங்கள் சொந்தநாட்டில், சொந்தத் தாயக மண்ணில் அடி மை களைப்போல் அடைபட்டுக் கிடக்கிறார்களே, நம் தமிழ் ஈழத்து உறவுகள், அவர்களுடைய நிலையை எண்ணிப் பாருங்கள்.

இந்த வேளையில் இங்கே மழை இல்லை; கூட்டம் பாதுகாப்பாக நடக்கிறது. அங்கே மழை கொட்டுகிறது. மலக்குழிகளில் இருக்கிற அசுத்தங்கள் அனைத் தும் வெளியேறிக் கலந்த தண்ணீர், அவர்கள் படுத்துக் கிடக்கின்ற கூடாரத்துக் கு உள்ளேயும் புகுந்து விட்டது. உண்பதற்கு உணவு இல்லை, குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை, நோய்க்கு மருந்து இல்லை. ஒருநாளல்ல, இருநாளல்ல, மாதக்கணக்கில். உலகில் எந்த இனமாவது இதைச் சகிக்குமா? எந்த இனத்திலா வது இந்தக் கேடு நடக்க முடியுமா? நாதியற்றுப் போய்விட்டார்களா ஈழத்தமி ழர்கள்? தமிழக மக்களே அருள்கூர்ந்து சிந்தியுங்கள்.

இலங்கை நாட்டில் சிங்களக் கூடாரத்தில் இருந்து வந்த உச்சநீதிமன்றத் தலை மை நீதிபதி பார்வையிட்டுச் சொல்கிறார்: ‘மனிதப் பேரழிவு நடக்கிறது. மனித உரிமைகள் அழிக்கப்பட்டுவிட்டன என்று, அரசில் உயர்பதவி வழக்கறிஞராக இருந்தவர் சொல்கிறார் என்று அங்கிருந்துவந்த சிங்களப் பெண்மணி இங்கே பேட்டி தருகிறார்.

உலகில் எங்கே யுத்தம் நடைபெற்றாலும், யுத்தத்தில் பிடிபடுகிற கைதிகள் ஒரு பக்கத்தில் கைது செய்யப்படுகின்றவர்கள் போர்க்கைதிகளாக நடத்தப்ப டுகிறபோது, அவர்கள் மனித உரிமைகளோடு நடத்தப்பட வேண்டும் என்று ஜெனீவா கன்வென்ஷன் சொல்கிறது. சர்வதேச மன்றங்கள் சொல்கின்றன. அவை எல்லாம் அங்கே மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டனவா?

நிமல்கா ஃபெர்னாண்டோ என்ற சிங்களப் பெண்மணி சொல்கிறார்: “முள்வேலி
முகாம்களுக்குள் இந்த மக்கள் வதைபடுகிறார்கள். அடிப்படை வசதிகள் எது வும் இல்லாமல், சித்திரவதைகளுக்கு ஆளாகி மடிகிறார்கள்” என்று. அப்படியா னால், போராளிகளின் நிலைமை என்ன? போராளிகள் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஈழத்தமிழ் இளைஞர்கள் அங்கிருந்து பிரித்து எடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு காடு களில் தூக்கி வீசி எறியப்பட்டும், புதைக்கவும் படுகிறார்கள். நம் ஈழத்தமிழ் சகோதரிகள் நாசமாக்கப்படுகிறார்கள்.



போரின்போது சிங்களவர்களை விடுதலைப்புலிகள் கைது செய்து வைத்து இருந்தார்கள். அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அப்படி மீண்டு வந்த யாராவது ஒரு சிங்களக் கைதியாவது, விடுதலைப்புலிகள் எங்களைத் துன்புறுத்தினார் கள், சித்திரவதை செய்தார்கள் என்று சொல்லவில்லையே? விடுதலைப்புலி கள் மனிதாபிமானத்தோடு அவர்களை நடத்தினார்கள்.

இன்றைக்குத் தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தலைமைச் செயலாளர்
அறிவிக்கின்றார். தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைப்பற்றி பேசக்கூடாது என்கிறார்.இந்தக் கூட்டத்துக்கு இன்றைக்கு ஏராளமான துப்பறியும் வீரர்கள் வந்து இருக்கிறார்கள்.மத்திய அரசில் இருந்தும் வந்து இருக்கிறார்கள். ஏனென் றால் இது ரொம்ப முக்கியமான இடம். இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த இடத்தில்தான் நான் பேசினேன். அடுத்த 48 மணிநேரத்தில் என்மீது ஒரு வழக்குப் பதிந்தது. அதற்காக நீதிமன்றப் படிக்கட் டுகளில் ஏறி இறங்கு கிறேன். அதைப்பற்றிக் கவலைப்பட வில்லை.

நம்முடைய தோழர்கள் அக்கறையாக எடுப்பதைவிட அவர்களுடைய வீடியோ
காமிராக்கள் மிகக்கவனமாக இந்தப் பேச்சுகளைப் பதிவு செய்து கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்கிறார்கள். இது நாடா அல் லது காடா? எந்த அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டும் எங்களை மிரட்ட முடியாது என்று முதல் அமைச்சருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரிசையாக வாதங்களை எடுத்து வைத்தாரே கொளத்தூர் மணி. தடை செய் யப் பட்ட ஒரு இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறு அல்ல என்று உச்சநீதி
மன்றம் தீர்ப்பு தந்தது.

வேலூர் மத்திய சிறையில் இருந்து உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கை நான்
தொடுத்தேன். அந்த வழக்குக்குத் தீர்ப்பு தருகிறபோது நீதிபதிகள் சொன்னார் கள், ‘ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதில் தவறு இல் லை. அந்த இயக்கத்திற்காகப் பேசுவதில் தவறு இல்லை. அந்த இயக்கத்துக்கு ஆதரவாக இங்கே ஓர் ஆயுதப்போராட்டத்தக்கு தயார் செய்தாலோ அல்லது இங்கே இருக்கக்கூடிய பொதுஅமைதியைக்குலைப்பதற்காக திட்டமிட்டுக் காரியங்களில் ஈடுபட்டாலோ, அந்த அமைப்பின் நோக்கத்தை அந்த அமைப்பு என்ன செயல்பட விரும்புகிறதோ அதை இங்கேயே நடத்திக்காட்டுவதற்கான வேலைகளில் ஈடுபட்டாலோ, அப்பொழுதுதான் அது தவறு என்று கூறமுடியு மே தவிர, இந்தச் சட்டத்தின் கீழ் வருமே தவிர, கருத்துகளைக் கூறுவதோ அத னுடைய இலட்சியங்களைப் பற்றிப் பேசுவதோ சட்டப்படி குற்றம் அல்ல” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புச் சொன்னதை, இதே சட்டமன்றத்தில்தான் முதல மைச்சர் மேற்கோள் காட்டினார்.

ஆக, தமிழ்நாட்டில் எதற்காக இப்பொழுது இந்த அறிவிப்பு?

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கின்றது.

ஈழத்தில் மக்கள் மடிந்து கொண்டு இருந்தபோது, கொத்துகொத்தாக செத்துமடிந்தபோது,

பச்சிளம் குழந்தைகளும் படுகொலைக்கு ஆளானபோது, நமது தாய்மார்கள் -

சகோதரிகள் நாசப்படுத்தபட்ட போது, உலகம் எங்கும் தமிழர்கள் கண்ணீர் வடித்துக் கதறியபோது, தாய்த்தமிழகம் பொங்கி எழுந்த போது, இனி உயிர் வெல்லம் அல்ல என்று முத்துக்குமார் தணலுக்குத் தன்னுயிரைத் தந்தபோது, தமிழகத்தில் 14 தமிழர்கள் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தாரை வார்த்துத் தந்த போது, உணர்ச்சி செத்துப்போய் விடவில்லை தமிழ்நாட்டில் என்பது நிலைநாட்டப்பட்டது.

14 தமிழர்கள் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தாரை வார்த்துத்தந்த ஒவ் வொ ரு தீக்குளிப்புச் சம்பவத்தின்போதும் நான் கேட்கிறேன். அப்படித் தீக்குளித் து இறந்தவர்களுக்கு ஒரு இரங்கல் கொடுப்பதற்கு முன்வரவில்லை முதலமைச் சர் அவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் இருவர் தீக்குளித்து மடிந்தார்கள். அண்ணாவின் வார்ப்புகளாக திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் உலவிய காரணத்தினால், அந்த உணர்வு மங்கிமடிந்து விடா த உண்மையான அண்ணாவின் தம்பிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் - அந்த வேதனையைத் தாங்கிக் கொள்ளமுடியாமல், உடம்பில் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு செத்துப் போனார்கள். அவர்களுக்குக்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.

அது மட்டும் அல்ல; தீக்குளித்தவர்கள் ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளிக்க வில் லை என்று கொச்சைப்படுத்துவதற்குக் காவல்துறையை முதல்வர் பயன்படுத் தினார். இதைவிட இனத்துரோகம் வேறு எதுவும் இருக்கமுடியாது. சகோதரர் விடுதலை ராஜேந்திரன் சொன்னதைப்போல், தமிழர்களின் வரலாற்றில் மன் னிக்க முடியாத மாபாதகத் துரோகத்தை இந்த முதல் அமைச்சர் செய்தார் என்று குற்றம் சாட்டுகிறேன்.

ஈழத்தமிழர்களைக் காப்பதற்கு தாய்த்தமிழகத்து மக்களே திரண்டு எழுங்கள், பொது வேலைநிறுத்தம் செய்வோம் என்று அறிவித்தோம். உடனே உச்சநீதி மன்றம் பொது வேலைநிறுத்தம் செய்யக்கூடாது, சட்டப்படி அது கூடாது என் று தீர்ப்பு அளித்து இருப்பது உங்களுக்குத் தெரியாதா? பொது வேலை நிறுத்தத் தை அனுமதிக்க முடியாது என்று முதல் அமைச்சர் தரப்பில் இருந்து அறிக்கை வந்தது.

ஆனால், அடுத்த 24 மணி நேரத்துக்குள் உச்சநீதிமன்றம் பொதுவேலை நிறுத் தத் துக்குத் தடை போட முடியாது என்று கூறியது. தடைபோட முடியாது என் று அறிவிப்பு வந்ததைக்கூட அறிந்து கொள்ளாத முதல் அமைச்சரின் உத் தர
வின்பேரில் செயல்பட்டுக் கொண்டு இருந்த தலைமைச் செயலாளர், பொது
வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு
எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினார்.சட்டப்படி நடவடிக்கை பாயும், பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என்று மிரட்டிப் பார்த்தார்.

ஈழத்தில் அங்கே படுகொலைகள் நடக்கின்றவேளையில், தாய்த் தமிழகத்தை அவர்கள் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு இருந்த நேரத்தில், பச்சைத் துரோகத் தை இவர்கள் செய்ததன் விளைவாகவே, இந்திய அரசு துணிச்சலாக தமிழீழ மக்கள்மீது நடத்தப் படுகிற தாக்குதலுக்கு ஆயுதம் கொடுத்தது. சோனியாகாந் திக்கு எப்படித் துணிச்சல் வந்தது? மன்மோகன் சிங்குக்கு எப்படி வந்தது? தமி ழர் களின் வீர உணர்ச்சியை அவர்கள் அறிந்த வர்கள்தான். ஆனால், அணை போட்டுத் தடுப்பதற்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது தமிழ்நாட்டில். மூண்டெ ழுந்து வருகின்ற கோபக்கனலை அங்கே அணைப்பதற்குக் கருணாநிதி இருக் கிறார் என்ற அசட்டுத் துணிச்சலில் அவர்கள் இந்தக் காரியத்தில் ஈடுபட்டார் கள்.

தமிழகம் ஏற்கனவே இராணுவத்தை எதிர்த்து இருக்கிறது. 1965 ஜனவரி 25
மொழிப்போர் வெடித்ததற்குப்பிறகு, இலட்சக்கணக்கான மாணவர்கள் -இளை ஞர்கள், ஆதிக்க இந்தியை எதிர்த்து போர்க்களத்தில் நின்ற வேளையில், இந்தத் தமிழகத்தின் வீர வாலிபர்கள் இராணுவத்துக்கு அஞ்சாமல் போராடினார்கள். தபால்நிலையங்கள் அவர்கள் கையில். இரயில்வே நிலையங்கள் அவர்களது கையில். எல்லைப் புறத்தைப் பாதுகாக்க வேண்டிய இராணுவம் தமிழ்நாட்டுக் கு உள்ளே துப்பாக்கிகளுடன் நுழைந்தது.

எந்தக் கோவை மண்டலத்தில் ராமகிருஷ்ணனும், தோழர்களும் இராணுவத் தை எதிர்த்து, ஆயுதம் ஏந்திச்செல்லாதே, ஆயுதத்தை எடுத்துச் செல்ல விட மாட்டோம். எங்கள் மக்களைக் கொலை செய்வதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்கள் கண்ணெதிரிலேயே எங்கள் பிள்ளைகளைக் கொல்வதற்கு நீ ஆயுதம் எடுத்துச் செல்வதா என்று தடுத்தார்களே... அதே கொங்கு மண்டலத் தில், மதுக்கரைக் காடுகளில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சுட்டுக்கொல்லப்
பட்டார்கள். இந்திய இராணுவம் துப்பாக்கிவேட்டை நடத்தியது. காக்கைக் குரு விகளைச் சுட்டுக் கொல்வதைப் போல உயிர்களைப் பறித்தார்கள். பிணங்க ளின் எண்ணிக்கைத் தெரியக்கூடாது என்பதற்காக மதுக்கரைக் காடுகளில் பிணங்களை மொத்தமாக அள்ளிப்போட்டுப் பெட்ரோலை ஊற்றிச் சாம்பலாக் கினார்கள்.

ஆக, இராணுவத்தை எதிர்த்து தமிழகம் 1965 ஆம் ஆண்டிலேயே போர்க்களத் தில் நின்றது. 1967 இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அதே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டம் மீண்டும் மாணவர் முகாமில் எழுந்தது. மீண்டும் கலவரம் வெடித்தது.கிளர்ச்சி எழுந்தது. சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ரயில் பெட்டிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

சட்டமன்றத்தில் காங்கிரஸ்தரப்பில் கருத்திருமனும், விநாயகமும், “இரயில்
பெட்டிகள் கொளுத்தப்பட்டு விட்டன...என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? உங்கள் காவல்துறை என்ன செய்து கொண்டு இருந்தது?” என்று கேட்டார்கள். அதற்கு அண்ணா அவர்கள் சொன்னார்கள்: ‘நான்கு இரயில் பெட்டிகளைக் கொளுத்தி னால் திரும்ப இரயில் பெட்டியை நாம் தயாரித்துக் கொள்ளலாம். ஒரு மாணவ னின் உயிர் போனால் அந்த உயிரைத் திரும்பப்பெற முடியாது’ என்றார். அந்தப் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா நிறைவுபெறுகிற நேரத்தில் நான் இந்த மேடையில் நிற்கின்றேன்.

அது மொழிக்கிளர்ச்சி. ஆதிக்க இந்தியை எதிர்த்து ஏற்பட்ட கிளர்ச்சி.அது தமிழர் களின் உரிமைப்போராட்டம்.ஆனால், இப்பொழுது நடைபெற்றது ஒரு இனத் தையே கருவறுத்து அழித்து நிரந்தர அடிமை இருளில் தள்ளு வதற்கான கொலைவெறியன் ராஜபக்சே வின் கூட்டம் நடத்திய இனக்கொலைப் போர்.

தமிழர்களே, நாம் வாழும் காலத்திலேயே இந்தக் கொடுமை நடந்துவிட்டது. இது 100, 200 வருடங்களுக்கு முன்பு நடக்க வில்லை. பெரியார் உலவிய தமிழ்
நாட்டில் - அண்ணா உலவிய தமிழ் நாட்டில் இன்றைக்கு உயிரோடு இருக்கிற
நமது காலத்தில் வந்துவிட்டது. உலகில் எந்த இனமும் இதை அனுமதிக்காது.
இந்த இனத்தின் தொப்பூழ்கொடி உறவை நீ துண்டித்துவிடுவாயா? இந்த உறவு ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்னால் ஏற்பட்டது. உனக்கும் எனக்கும் உறவு பிரிட்டிஷ் காரனின் இலத்திக்கம்பும் துப்பாக்கியும் கொண்டு உருவாக் கிய இந்தியாவில் நீ கொண்டு வந்து திணித்தது. அதைத்தான் தந்தை பெரியார் மூச்சடங்குவதற்கு முன்பு தியாகராயநகரில் சொன்னார். அவரது மரணசாச னமும் அதுதானே.

நான் இந்த மேடையில் கருஞ்சட்டைப் படைவீரர்களோடு நிற்பதைப் பெருமை யாகக் கருதுகிறேன். இவர்கள் சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தல் களத் துக்கு வேட்புமனு தாக்கல் செய்யப் போகாதவர்கள். இலட்சியத்துக்காக வாழு கிறவர்கள். கருப்பு உடைதரித்தோர் உண்டு, கொடுமையை நறுக்கியே திரும் பும் வாட்கள் உண்டு எனும் புகழுக்குரிய கூர்வாட்களாக பெரியாரின் போர் வாட்களாக திகழும் இலட்சிய வேங்கைகளின் மேடையில் நிற்கிறேன்.

தன்மான உணர்வுடைய தமிழர் ஒவ்வொருவரும் பெரியார் என்கின்ற பெயரை உச்சரிக்கிறபோதே தலை நிமிர்கிறாரே, எனக்கு ஒரு மான மரியாதையை உரு வாக்கிக் கொடுத்தவர் ஈரோட்டு ஏந்தல் என்று. அந்தப் பெரியார் உயிரோடு இருந்திருப்பாரேயானால், இந்தக் கொடுமையைக் கண்டு என்ன சொல்லி இருப்பார்? அண்ணா உயிரோடு இருந்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்?

இந்தக் கடல் உப்பாகப் போனது ஏன்? தமிழர்கள் வடித்த கண்ணீரால் என்று சொன்னீர்களே, அண்ணா அவர்களே! இன்று அந்தக் கடல்நீர் இரத்தக்கடலாகி விட்டது, தமிழர்களின் இரத்தக் கடலாகிவிட்டது.

இதோ, கூப்பிடு தொலைவில், தொட்டுவிடும் தூரத்துக்கு அப்பாலே இலட்சக் கணக்கான மக்கள் வதைபட்டுச் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.நாங்கள் சொரணையற்றவர்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா? எங்களுக்கு உணர் வே இல்லையா?

இராஜபக்சே அறிவிக்கிறான்; இலங்கை மண்ணில் சிங்கள இனத்தைத்தவிர இன்னொரு இனம் கிடையாது.இனம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தமிழர் தாயகம் என்பதை ஏற்கவே இயலாது. தமிழர்களுக்குப் பூர்வீகத் தாயகமே கிடையாது. இனத்தின் பெயரால் இனி எவனும் இந்த நாட்டில் அரசியல் கட்சி நடத்த முடியாது.தேர்தலில் போட்டியிட முடியாது’ என்று நேற்று முன்தினம் அறிவித்து இருக்கிறான். நாம் வாழுகிற காலத்திலேயே நம் கண்எதிரே இவ் வளவு கொடுமைகளும் நடக்கிறது.

1962 இல் சீனத்தோடு சமர்க்களத்தில் நின்றோம்.இன்றைக்கு இந்துமாக்கடலில் மேலாதிக்கம் செய்வதற்காக இலங்கைக்கு உள்ளே சீனா நுழைந்துவிட்டது. பேராபத்தைத் தலைக்குமேலே வரவழைத்துவிட்டது இந்தியா.இந்த ஆபத்தின் விளைவாக பாதிக்கப்படப்போகிறவன் உ.பி.க் காரனோ - பீகாரியோ அல்ல. எங்கள் தமிழன்.கூடங்குளத்தில் இருக்கிற தமிழன். விஜயநாராயணத்தில் இருக்கிற தமிழன். திருச்சியில் இருக்கிற தமிழன்.கல்பாக்கத்தில் இருக்கிற தமிழன்.

ஆனால், எதிர்காலத்தில் ஆபத்துவந்துவிடக்கூடும். ஆகவே நடுக்கடலில் உல க யுத்தம் மூண்டாலும் பரவாயில்லை. கியூபாவுக்கு ஆயுதங்களை ஏந்திச்செல் லுகின்ற ரஷ்யக் கப்பல்களை நாங்கள் மறிப்போம்’ என்று ஜான் கென்னடி சொன்னார்.

எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்கிவிட்டு சிங்களதேசம் என்று சொல்லத்தக்க நிலைமை வந்து விட்ட ராஜபக்சேவின் கூட்டம் சீனர் களை உள்ளே வரவழைத்துவிட்டது. அனைத்துத் துறைகளிலும் சீனர்கள். இனி சீனர்களின் துறைமுகம், போர்க் கப்பல்கள், ஆயுதங்கள். எங்கே உனக்குப்பாது காப்பு இருக்கிறது?

நாட்டுக்கு விரோதிகள் நாங்களா? கொளத்தூர் மணியா? கோவை இராமகிருஷ் ணனா? துரைசாமியா? நாங்களா எதிரிகள்? நீங்கள்தான் எதிரிகள். இந்தியாவின் பாதுகாப்புக்குக் கேடு செய்தவர்கள்.

எதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஆபத்துகள் வந்துவிடக் கூடாது என்ற தொலை நோக்குச் சிந்தனை இந்திரா காந்தி அம்மையாருக்கு இருந்தது. அவரது அடக்கு முறைச் சட்டத்தை எதிர்த்து இருக்கிறோம். சிறை சென்று இருக்கிறோம். ஆனால், ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் அவருக்கு இருந்த தெளிவான பார் வை - தொலைநோக்குச் சிந்தனை - அணுகுமுறை அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதே, இது சோனியாகாந்தியின் யோசனை..

ரஷ்யா, சீனா, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, ஈரான் ஆகிய இத்தனை நாடு களின் ஆயுதங்களையும் பயன்படுத்தித் தமிழர் களைக் கொன்று குவித்தான். தடைசெய்யப்பட்ட ஆயுதங் களைப் பயன்படுத்தினான். நச்சுப்புகை வீசுகிற ரசாயன குண்டு களையும் வீசினான். அந்தக் குண்டுகள் விழுந்த வேளையில்
மேனியெல்லாம் கருகி எலும்பெல்லாம் உருகி, அப்படியே நொடிப்பொழுதில் செத்து விழுந்தார்களாம்.

நச்சுப்புகை பரவியவேளையில், அவர்கள் சுவாசித்த நச்சுக் காற்று சிலநிமிட நேரங்களில் அவர்கள் உயிர்களைப்பறித்துச் சென்று கொத்து கொத்தாக செத்து விழுந்தார்கள். இப்படித்தான் போர்க் களத்தில் புலிகளை அவர்கள் தோற்கடிக்க முடிந்ததே தவிர, இத்தனை நாட்டு ஆயுதப்பலத்தையும் எதிர்த்து நின்றவர்
பிரபாகரன் (பலத்த கைதட்டல்).

துரைசாமி நன்றாகக் கேட்டார். தமிழ்நாட்டில் மான உணர்ச்சி உள்ள தமிழ்க் குடும்பங்கள் இலட்சோப இலட்சம் இருக்கின்றன.அங்கே மழலையின் நாதம் ஒலிக்கவேண்டும் என்று அந்த வீட்டுமக்கள் குடும்பத்தினர் ஏங்குகிற வேளை யில் குவா குவா என்கின்ற குழந்தையின் சத்தம் கேட்டவுடன் ஆஹா, மழலை
ஒன்று பிறந்தது. இந்த வீட்டின் மனையறத்தில் மணிவிளக்கு ஒன்று உதித்தது என்று மகிழ்கிற வேளையில், அந்தப் பெற்றோர், தொட்டிலிலே போடுகிற அள வுக்கு குழந்தை வளருகிற ஒருநாளிலோ அல்லது அவர்கள் தேர்ந்து எடுக்கும்
ஒரு நேரத்திலேயோ அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று கரு துகிறபோது, பிள்ளையோ ஆண் பிள்ளையாக இருக்கிறது, என்ன பெயர் சூட் டலாம் என்று அவர்கள் விரும்பி, பிரபாகரன் என்று சூட்டுகிறபோது தடுத்து விடு வாயா? (பலத்த கைதட்டல்).

அதற்கும் ஒரு சட்டமா? பிரபாகரன் என்ற பெயரை உச்சரித்தாலே குற்றம் என் றால் பிரபாகரன் என்று பெயர் வைத்தால் பெயர் சூட்டிய பெற்றோரைச் சிறை யில் போட்டு விடுவாயா?

இனி பிறக்கின்ற ஆண்பிள்ளைகளுக்கு எல்லாம், ‘வீரபிரபாகரன் என்ற பெய ரைத் தான் தமிழகம் வைக்கும். அதைத்தான் நமது கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிட்டார்கள்.

இந்திய அரசு செய்த துரோகத்தை என்றைக்கும் மன்னிக்க முடியாது. வரலாற் றில் இதை மறைக்கவும் முடியாது. கட்டபொம்மன் பெயர் இருக்கின்றவரை யில் எட்டப்பன் செய்த துரோகத்தை உலகம் பழிக்கும். பைபிளை புரட்டுகிறவர் கள் இருக்கின்ற காலம்வரை ஜூடாசின் துரோகத்தை ஞாலம் தூற்றும்.

அதைப்போல, தமிழர்கள் வரலாற்றில், கருணாநிதி அவர்களே,நீங்கள் செய்த துரோகத்துக்கு மன்னிப்புகிடையாது. அது சரித்திரத்தில் அழிக்க முடியாத கல் வெட்டாக ஆகிவிட்டது.

மேலும் மேலும் ஏன் தொடர்ந்து இந்தத் துரோகத்தைச் செய்கிறீர்கள்? ஏன் இந்தக் கொடுமை? இவ்வளவு பேர் அழிந்தது போதாதா? இத்தனை குழந்தைகள் செத்தது போதாதா? மூன்று இலட்சம் பேர் அவதிப்படுவது போதாதா? இதைப் பற்றித் தமிழ்நாட்டில் பேசக்கூடாதா?

தமிழர்கள் சிந்திய இரத்தத்தை, அவர்கள் அனுபவித்த கொடுமைகளை, பிரபாக ரனைப் பற்றிப் பேசாமல் புலிகளைப் பற்றிப் பேசாமல் அவர்களது சரித்திரத் தை எங்கே பேசுவது?

என்னையோ? இராமகிருஷ்ணனையோ? மணியையோ? நீங்கள் சிறையில் பூட்டிப் பார்க்கலாம். வருடக்கணக்கில்சிறைக்கொட்டடியை அஞ்சாது எதிர் கொண்டவர்கள் இந்தவீரர்கள். மூன்று ஆண்டுகளுக்குமேல் தடா சட்டத்தின் கீழ் அடைபட்டுக் கிடந்தவர் நமது இராமகிருஷ்ணன். தேசப் பாதுகாப்புச் சட்டத் தில் மூன்று ஆண்டுகளுக்குமேல் அடைபட்டுக்கிடந்தவர் நமது கொளத்தூர் மணி. அதற்குமேலும் பல்வேறு வழக்குகளில் ஏறத்தாழ ஐந்தாறு ஆண்டுகளுக் கு மேலே சிறையிலேயே வாடியவர்.

உங்களுடைய நோக்கம் என்ன? குறிக்கோள் என்ன? இவர்கள் வன்முறை யாளர் களா? தமிழ்நாட்டில் கலவரம் செய்தார்களா? பொதுமக்களுக்குத் தொல் லை விளைவித்தார்களா? பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் வன்முறை யில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை நேர்ந்தது, பொதுமக்கள் அவதிக்கு
ஆளானார்கள் என்று ஒன்றைச்சொல். 

இலட்சியத்துக்காகப் போராடுகிறவர்களை பாராட்ட வேண்டாமா? இப்படிப் பட்ட இளைஞர்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் திரண்டு எழட்டும்.இது பெரியார் உலவிய பூமியல்லவா? அண்ணாவின் பூமியல்லவா? அந்த உணர்வு வர வேண்டாமா?

ஈழத்தமிழர்கள் பண்பாட்டைப் பாதுகாக்கிறவர்கள். கலை, கலாச்சாரத்தை, நாகரிகத்தைக் காக்கிறவர்கள்.அதைவிட அவர்கள் சுத்தம் சுகாதாரத்தைப்
பேணு கிறவர்கள்.

கழிப்பிடத்துக்குச் செல்வதற்காக காட்டுக்குள் சென்றால் கூட மண்வெட்டி யைக் கையில் எடுத்துக் கொண்டுதான் போவார்கள். அந்த இடத்தில் ஈக்கள் மொய்க்காத அளவுக்கு அதை முதலில் மண் போட்டு மூடிவிட்டுத்தான், அடுத் து அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்தி விட்டு உடனடியாக சோப்பைப் பயன் படுத்துவார்கள்.கழிப்பிடத்துக்குச் சென்றுவந்தால் கூட அவர்கள் சுகாதாரத் தைப் பேணுபவர்கள். அப்படிப்பட்ட அந்த மக்கள் அல்லவா இந்தக் கொடுமைக் கு ஆளாகி இருக்கிறார்கள்? நரகத்திலும் கொடிய வாழ்வு.

கைது செய்யப்பட்ட போராளிகளின் நிலைமை என்ன? என்று சிங்களப் பெண் மணி கேட்கிறார். நாங்களும் அதையேதான் கேட்கிறோம். உணர்ச்சிக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஒரு அற்புதமான கவிஞர். பாவேந்தனைப் போன்ற கவிஞன். அந்தக் கவிஞன் வதைமுகாமில் சித்ரவதைக்கு ஆளானான். கொல் லப் பட்டு இருக்கலாம் என்றுகூடச் செய்தி வருகிறது. துடிக்கிறதே நெஞ்சம்?

முத்துக்குமார் தீக்குளித்தான் என்ற செய்திகேட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு நான் ஓடினேன்.அதற்குள் உயிர்பிரிந்துவிட்டது. நானும்,வேளச்சேரி
மணிமாறனும் ஓடி உள்ளே செல்கிறபோது, அப்பொழுதுதான் உயிர் பிரிந்து இருக்கிறது. அவன் உடல் கருகிய நிலையில் நாங்கள் பார்த்தோம். அதற்குப் பிறகு தான் அவரது உடலில் பேண்டேஜ் எல்லாம் போடப்பட்டது. வெளியில் கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டு இருந்தவேளையில், நடேசன்
கைப்பேசியில் பேசினார்.

முத்துக்குமார் தீக்குளித்து மடிந்துவிட்டான், உயிரற்ற சடலம் இங்கேதான் இருக் கிறது என்றபோது, உங்களிடம் புதுவை இரத்தினதுரை பேச விரும்பு கிறார் என்றார். முத்துக்குமார் இறந்ததற்கு இரத்தினதுரை அழுதுகொண்டு பேசினார். அன்றே ஒரு கவிதையை எழுதி அனுப்பியும் வைத்தார்.

முத்துக்குமார் எங்கள் வீரச் சகோதரனே போய்விட்டாயா! அவன் உடலை எங் களிடம் அனுப்பி வையுங்கள் தமிழ்நாட்டில் இருந்து அந்தத் தியாக மேனி யை நாங்கள் சுமக்க விரும்புகிறோம், எங்கள் மண்சுமக்க விரும்புகிறது அனுப் பி வையுங்கள்’ என்று எழுதினானே அந்தக் கவிஞன். அவன் சித்ரவதைக்கூடத் தில் கொலை செய்யப்பட்டு விட்டான் என்றுகூட ஒரு செய்திவருகிறது.இளங் குமரன் என்கிற பேபி சுப்பிரமணியம், வள்ளலாரின் வழிவந்தவரைப்போல உலவியவன் அல்லவா எங்கள் பேபி. அந்த பேபி சுப்பிரமணியம், யோகி இவர் கள் எல்லாருமே முகாம்களில் இருந்து பிரித்து எடுத்துச்செல்லப்பட்டு அவர் கள் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டு இருக்கலாம். அல்லது உயிர் போக்கப் பட்டு இருக்கலாம் என்றுகூட செய்திகள் வருகின்றன.

இந்திய அரசு கொடுத்த உதவியால், சிங்களனுடைய கைகள் எங்கே நீண்டு விட்டது தெரியுமா? சர்வதேசக் கோட்பாடுகள் அனைத்தையும் தகர்த்துவிட்டு, அவன் கோலாலம்பூருக்கு அனுப்புகிறான். மலேசியன் ராயல் சர்வீசின் உதவி யோடு கைது செய்கிறான் குமரன் பத்மநாபனை. அதுவும் கைது செய்ததில்கூட மிகவும் அக்கிரமமான முறையில், அவர் தாழ்வாரத்தில் கைத்தொலை பேசி யில் உரையாடிக்கொண்டு இருந்த நேரத்தில், நண்பர்கள் இன்னொரு அறை யில் அமர்ந்து இருந்தபோது, நீண்டநேரமாக வரவில்லையே என்று தேடிப் பார்த்து, வரவேற்பாளரிடம் போய் இந்த அறையில் தங்கி இருந்தவர் தொலை பேசி யில் பேசுவதற்கு வெளியே வந்தார். அவரைக் காணவில்லையே என்ற போது, ஒருவரை மயக்க நிலையில் வீல்சேரில் வைத்துக் கொண்டு போகிறார் கள். அவருக்கு உடல்நலம் இல்லை என்று கருதினோம் என்று அவர்கள் கூறு கிறார்கள்.

அதன்பிறகு செய்தி வருகிறது. கொழும்பு விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டார். நாங்கள் கைதுசெய்துவிட்டோம் என்று சிங்கள அரசு அறிவிக் கின்றது. ராஜபக்சேவின் கொலைபாதகக் கரங்கள் எல்லை தாண்டிச்சென்று சர்வதேசக் கடத்தல்காரனைப்போல கோலாலம்பூரில் சென்று கைதுசெய் கிறான். இப்பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் ருத்ரகுமாரனை நாங்கள் கைது செய்வோம்’ என்கிறான். இத்தனைக்கும் இந்திய அரசு உடந்தையாக
இருக்கின்ற காரணத்தினால் அவன் கரங்கள் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளே கூட நீளலாம். அக்கிரமம் செய்வதற்கு. அவனது கூலிப்படைகள் இங்கும் உள்ளே நுழையலாம்.

ஆகவே, தமிழ் இளைஞர்களே, தமிழ் மக்களே,இவ்வளவு பெரும் கொடுமை ஒரு பக்கத்தில் நடைபெற்று நாதியற்றுப் போய்விட்டதா நானிலத்தில் பாராண்ட தமிழ் இனம் என்று பதறுகிற வேளையில், இன்னும் மூன்று லட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் வதைமுகாமில் கிடக்கிறார்களே, அமெரிக்காகாரர் ராபர்ட் பிளேக் சொல்கிறார், அவர்களுக்கு நீதி வழங்கப்படா விடில் மீண்டும் உரிமைப்போர் வெடிக்கும். அதைத் தடுத்துவிட முடியாது’ என்கிறார்.

அவர்கள் வீடுகளை இழந்தார்கள். அவர்களது பூர்வீக மண்ணில் இருந்து,தாயக மண்ணில் இருந்து எல்லாவற்றையும் இழந்தவர்களாக வதைபடுகிறார்களே,
அவர்கள் அவர்களது இடங்களுக்குச் செல்ல வேண்டும்.அப்படி அவர்கள் தாய கத்தில் உரிமையோடு வாழக்கூடிய நிலையை உத்தரவாதத்தை ஐ.நா. மன்றம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சர்வதேச நாடுகள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

யூதர்களைவிடக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு விட்டோம் நாம். நாம் யூதர்களின் எல்லாப் போராட்ட முறைகளையும் அவர்களுடைய தற்காப்பு நடவடிக்கை களையும் ஆதரிக்கவில்லை. இஸ்ரேலின் போக்கில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வேட்டை யா டப் பட்ட யூதர்களுக்கு ஒரு நாட்டை அமைப்பதற்கு உலகின் மூலை முடுக் கில் சிதறிக்கிடந்த யூதர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தார்கள்.

அந்த உணர்ச்சி தமிழனுக்குக் கிடையாதா?

உலகில் மூத்த இனம். உலகில் முதலில் தோன்றிய இனம்.நாகரிகத்தை, கலை யைக் கற்றுத்தந்த இனம். இன்றைக்கு நானிலத்தில் இதைப்போல நலிந்து நாச மாகிக்கிடக்கின்ற ஒரு இனம் எதுவுமே கிடையாது.எனவேதான் தோழர்களே, போராட்டக் களத்துக்குச் சென்ற இந்த வீரர்கள், அடுத்தக் களத்துக்குத் தயார்
என்று அறிவித்துவிட்டு உட்கார்ந்து இருக்கிறார்கள்.

‘திரண்டு வாருங்கள் சிறைக்கு, போராட வாருங்கள்’ என்று இங்கே கோவை இராம கிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார். தமிழ்நாட்டில் தமிழர்களிடம் உணர்ச்சி செத்துப்போய்விட்டது என்றோ, மங்கிப்போய்விட்டது என்றோ, அழிந்துபோய் விட்டது என்றோ யாரும் தப்புக்கணக்குப்போட வேண்டாம். முத் துக்குமாரின் மேனியைப் பற்றி எரித்த நெருப்பைப்போல, இலட்சக் கணக் கான வாலிபர்களின் இதயத்தில் அந்த உணர்ச்சித் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறது.

தீக்குளித்து இறந்த மாவீரர்களின் கல்லறை மீது ஆணையிட்டுச் சொல்வோம். நானிலத்தில் எங்கும் நடக்காத கொடுமைகளுக்கு ஆளாகி வதைபடுகிற, கண் ணீரும் கம்பலையுமாக சின்னாபின்னமாகிக்கொண்டு இருக்கிற நம் தமிழ் ஈழ உறவுகளைக்காப்பதற்கு நாம் கடமையாற்ற முன்வருவோம். அதற்காக நாம் உறுதி மேற்கொள்வோம். அதற்கு ஏற்ற இடம், பெரியாருக்குத் தொண்டு செய் கிற வீரர்கள் இருக்கிற இந்த மேடை என்பதை எடுத்துக்கூறி,

தமிழ் ஈழம் காக்க, ஈழத்தமிழர்களைக் காக்க, அந்த ஈழத்தமிழர்களைக் காப்பதற் குப் போராடுகின்ற விடுதலைப்புலிகளை, உலக சரித்திரத்தில் அவர்களுக்கு
நிகரான தியாகங்கள் எவரும் செய்ததில்லை, அவர்களை இதயத்தில் ஏந்திப் போற்றுவோம் எனக்கூறி, மலர்க தமிழ் ஈழம். அதற்கு நாம் தொடர்ந்து போராடு வோம் என்று சொல்லி, இந்த வாய்ப்பைத்தந்த பெரியார் திராவிடர் தோழர் களுக்கு என்னுடைய உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment