Tuesday, May 21, 2013

தமிழகத்தை பாதுகாப்பது நமது கடமை

குமரி மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தில்லைசெல்வம் இல்ல திருமண விழா வில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அவர் பேசியதாவது:

குமரி மாவட்டம், இது புராதன தமிழர்பூமி. கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் உடன் இருக்கிற தீரர்களை இங்கு நான் பார்க்கிறேன். தமிழகத்துக்கு வழிகாட்டுகிற பூமி கன்னியாகுமரி மாவட்டம். தமிழகத்தின் நாலாபுறமும் இன்னல்கள் சூழ்ந்துள்ளன.
தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. ஆற்றுப் படுகை களில் மணல் இல்லை. மணல் சுரண்டப்படுகிறது. இனிவரும் காலங்களில் தமிழர்கள் குடிக்க தண்ணீர் இன்றி கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நாம் பேசமுடி யாது. எல்லாம் பாலைவனங்களைப்போல் ஆகிவிடும்.

வருங்கால தமிழகத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. அந்த கடமை
யை செய்கிற கட்சியாக ம.தி.மு.க. இருக்கிறது. கூடங்குளத்தில் அணு உலை விபத்து நேர்ந்தால் நாம் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியாது. அணுஉலை கதிர்வீச்சால் பேராபத்துகள் ஏற்படும். அதைப்போலத்தான் ஸ்டெர்லைட். இந்த ஆலையால் அப்பகுதியில் 10 வீட்டுக்கு ஒரு புற்றுநோயாளி உருவாகிறார். அதற்கு ஸ்டெர்லைட்தான் காரணம். அதற்காக 17 ஆண்டாக போராடி வரு கிறேன். இந்த வழக்கில் வருகிற 30ந் தேதி தீர்ப்பு வந்துவிடும்.

இதைப்போலவே இளைய தலைமுறையினர் மதுப்பழக்கத்தால் சீரழிந்து வரு வதை தடுப்பதற்காக பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தமிழக அரசியலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று எது? என்ற சிந்தனை இளைஞர்களிடையே அரும்பியிருக்கிற நேரத் தில், அவர்களது கேள்விக்கு விடையாக ம.தி.மு.க. இருக்கும்.

நாம் எடுத்திருக்கிற பிரச்சினைகளால் நாட்டின் கவனத்தை நாம் ஈர்த்துள் ளோம். ஒளிமயமான இந்த நூற்றாண்டில் பயணித்து வருகிறோம். பல வெற்றி களை பெற்றிருக்கிறோம். இன்னும் நமக்கு வெற்றித்திருமகள் ஆரம் தொடுக்க காத்துக் கொண்டிருக்கிறாள்.

மணமக்கள் முகிலரசு நித்யபிரியா ஆகிய இருவரும் பல்லாண்டு, பல்லாண்டு எல்லா நலமும், வளமும் பெற்று, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வைகோ பேசினார்.

No comments:

Post a Comment