Monday, May 27, 2013

தியாக வரலாறு படைத்த காசி ஆனந்தன் பாடல்கள் தமிழர் இல்லந்தோறும் ஒலிக்கட்டும்! -பகுதி 2

நமது நியாயமான கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். இளை ஞர்களிடம் எடுத்துச்செல்வோம்.கல் லூரி மாணவர்களின் கவனத்தைக் கவரு கின்ற வகையிலே கொண்டு செல் வோம். நம்பிக்கையோடு இந்தப் பணியில் ஈடுபடுவோம்.-வைகோ (25.10.10)

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

பிரபாகரனை உயிரோடு பிடிக்காவிட்டாலும் கொன்று பிடிப்பது என்று முடிவெ டுத்தபோது, ஒரு கமாண்டோகூட உயிரோடு திரும்பாமல் அழிக்கப்பட்ட போ து, அந்தச் சண்டையிலே குண்டு பாய்ந்ததனால்.... நீண்ட நாட்கள் மருத்துவ மனையில் இருக்க நேர்ந்ததற்குப்பிறகு, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம்
நடந்து முடிந்ததற்குப் பிறகு, நவம்பர் மாதத்தில் கூடிய நாடாளுமன்றத்தில், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, தொடங்கி வைத்து ஐம்பத்தைந்து நிமிடங்கள் நான் பேசி இருக்கிறேன்.

அந்தப் பேச்சுக்குத்தான் இந்தியப் பிரதமர், ‘இந்திய இராணுவத்தை விமர்சித் தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்’ என்றார்.


‘என்ன விளைவுகள் ஏற்படும்? உயர்ந்தபட்ச தண்டனை, தூக்குதண்டனைதான். அதற்கும் தயாராக இருக்கிறேன்’ என்றேன். (பலத்த கைதட்டல்)

சிங்கள பூதம் விழுங்கும்

இந்திய அரசு செய்த துரோகப் பட்டியல் நீண்டுகொண்டேபோகும். ஆனால், இந் திராகாந்தி அம்மையார் ஈழத்துக்கு ஈடற்ற முறையிலே உதவினார்கள். அதற் குப்பிறகு பொறுப்புக்கு வந்தவர், தன்னுடைய சுயநலத்திற்காக,தான் சிக்கிக் கொண்ட ஊழல் வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக, மக்கள் கவனத் தைத் திருப்புவதற்காக, ஒப்பந்தத்தைக் கொண்டு போய்த்திணிப்பதற்காக, பிர பாகரன் அவர்களை ஏமாற்றி அழைத்துக்கொண்டு வந்து, உங்களை ஏகப்பிரதி நிதியாக அறிவிக்கப் போகிறோம் என்று ஏமாற்றி அழைத்துக்கொண்டு வந்து, ஒப்பந்தத்திலே இவர்களே கையெழுத்துப் போட்டார்கள்.


அந்தக்கட்டத்தில், ‘இந்திய மக்களை நாங்கள் நேசிக்கிறோம். இந்திய இராணு வத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்த, துப்பாக்கியை நீட்ட நாங்கள் விரும்பவில்லை.
இந்திய மக்களை நேசிக்கிறோம். திணிக்கப்பட்ட ஒப்பந்தத்தை நாங்கள் ஏற் றுக்கொள்கிறோம். ஆனால், இந்த ஒப்பந்தத்தை,சிங்கள இனவாத பூதம் விழுங் கிவிடும்’ என்று 1986ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 4ஆம் தேதி சுதுமலை பொதுக் கூட்டத்தில் பிரபாகரன் பேசினார்.

இரண்டாம் தேதி, இந்தியப் பிரதமர் கடற்கரையிலே பேசுகிறார். அந்தக்கூட்டத் தில் கலந்து கொள்ள விரும்பாத தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு எம்.ஜி. ஆர். அவர்கள் அமெரிக்காவுக்கு மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் புறப்படு கிறார். விமான நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெட்டி எல்லாம் போய்விட்டது. அவர்தான் போக வேண்டும். ஆனால், முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர்.கடற்க ரைக் கூட்டத்திற்கு வந்தே ஆக வேண்டும் என்று டெல்லி அவருக்குக் கடு மை யான நிர்பந்தத்தைக் கொடுத்தது, அவரைப் பக்கத்திலே வைத்துக்கொள்ள வேண்டும் என்று, அதன் காரணமாக எம்.ஜி.ஆர். அந்தக் கூட்டத்துக்குப் போ னார்.

அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் டில்லியைஆதரித்துப் பேச வில் லை. இது கானகத்திலே, அடர்ந்த காட்டிலே, மாவீரர் திலகம் பிரபாகரன் சொன் னது. நான் திரும்பிச் சொல்லுகிறபோது, எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்தேன். கட் டிப் பிடித்துக் கொண்டு அழுதார் என்று சொன்னார். இது நூற்றுக்கு நூறு சத்தி யமான வார்த்தை.

எம்.ஜி.ஆர். கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதார். ‘இந்தஒப்பந்தத்தில் எனக்கு விருப்பம் இல்லை. இந்த ஒப்பந்தத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல் லை’ என்று சொன்னார். எம்.ஜி.ஆர். அவர்கள் செய்த உதவியை நாங்கள் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது என்றார் பிரபாகரன்.

இங்கே குறிப்பிட்டார்கள், கருணாநிதியின் கபட நாடகங்களை. 50 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று விளம்பரத்துக்காகத்தானே செய்தார்? அள்ளிக் கொ டுத்தாரே எம்.ஜி.ஆர். நான் கூடக் கேட்டேன்.‘நீங்கள் இன்னமும் எம்.ஜி.ஆரை யே பாராட்டிக்கொண்டு இருக்கிறீர்களே? அடுத்து ஆட்சி மாறுமானால் கலை ஞர் கருணாநிதிதானே வருவார். நீங்கள் இதைக் கொஞ்சம் யோசித்து நடவடிக் கை எடுத்தால் என்ன?’ என்று கிட்டுவிடம் நான் கேட்டேன். கிட்டு அவர்களைத் தனி வீட்டுக்காவலில் வைத்தபோது, சந்திக்கச் செல்ல இருமுறை போராடி னேன்; மாலையில் விடுவிக்கப்பட்டேன்.

அடித்தளம் அமைக்க, அள்ளிக் கொடுத்த வள்ளல்

அமெரிக்காவில் இருந்து எம். ஜி.ஆர். உத்தரவு போட்டார். கிட்டுவிடம் கேட்ட தற்கு - பையன்க எல்லாம் சாப் பிடனும் இல்லே? ‘ஒரு நாளைக்கு பத்து ரூபா இருந்தா மூனு வேளை சாப்பிட லாம் அண்ணே’ என்று சொன்னேன். ‘இந்த ஜிப்பு பேக்கிலே இருக்கு, ஐம்பது இலட்சம் எம்.ஜி.ஆர்.கொடுத்தார். (கைதட் டல்) அடுத்தவாரம் வரச்சொல்லி இருக்கிறார். ஐந்து கோடி கொடுப்பாரு. (கை தட்டல்) கலைஞரை இப்படிக் கொடுக்கச் சொல்லுங்களேன். (சிரிப்புச் சத்தம்) கலைஞரையும் உதவி செய்யச் சொல்லுங்க’ என்றார்.

நான் கண் கலங்கினேன். கிட்டு, நான் சொன்னது தவறு.கலைஞர் செய்ய மாட் டார்.பத்து ரூபாய் கொடுத்துட்டு நூறு ரூபாய் விளம்பரம் செய்ய முடியுமான்னு பார்ப்பாரு.(கைதட்டல்)

சரி. அப்படி உதவினார் என்று சொன்னாரே பிரபாகரன்.முதல் முதலாக எம்.ஜி. ஆரைப் பார்க்கப் போனபோது,அவர் ரொம்ப நம்பிக்கை வைக்கவில்லை. ‘வரச்
சொன்னாரு.கியூ பிராஞ்சில் துக்கையாண்டி மூலம் தகவல் வந்தது.சரி,போய்ப் பார்த்து என்னன்னு கேட்டுப் பார்ப்போம். ஐந்து இலட்சம் கொடுப்பாரா? என்று
போனோம். எங்களை நன்றாக வரவேற்று, இனிப்பு, காபி கொடுத்து உபசரித்து, நன்றாகப் பேசிவிட்டு, அடுத்துஎன்ன தேவை? என்று கேட்டார்.

கேக்கறதுதான் கேக்கிறோம். ஒருகோடி கேட்டுவைப்போமே என்று நினைத் து, ஒரு கோடி இருந்தால் உதவியாக இருக்கும்’ என்றோம். ‘சரி நாளைக்கு ஐம் பது இலட்சம் வாங்கிக்குங்க. ஒருவாரம் கழிச்சு ஐம்பது இலட்சம் வாங்கிக்குங் க’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர்.(கைதட்டல்)

அப்படி அள்ளிக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர். ஈழவிடுதலை யுத்தத்தை நடத்துவதற் குக் களம் அமைத்துக்கொடுத்தார். அப்படி அவர்கள் களம் கண்டு, அரசு அமைத் து, எல்லாத் துறைகளும் அமைத்து, வேளாண் துறை, மருத்துவத்துறை,கலால் துறை - காவல் துறை -நீதித்துறை -கல்வித்துறை என எல்லாத் துறைகளை யும் அமைத்து,அறிவிக்கப்படாத ஒரு அரசை நடத்தினார்களே விடுதலைப்புலி கள்.

ஏ... படு பாவிகளே! அவர்களை அழித்தீர்களே, அந்த அரசை நிர்மூலம் செய்தீர் களே, வல்லரசுகளின் ஆயுத பலத்தைத் திரட்டிக் கொடுத்தீர்களே, ஆயிரம் கோடி பணம் கொடுத்தீர்களே, தளபதிகளை அனுப்பினீர்களே,யுத்தத்தை நடத் தியது இந்திய அரசுதானே?

துரோகத்துக்கெல்லாம் துரோகம் 

அந்தப் பஞ்சமா பாதகத்துக்காகத்தானே, அந்தக்கொலைகாரப் பயலை அழைத் துக்கொண்டு வந்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலே -உலகம் அவ னைக் கண்டிக்கிறது என்பதற்காக, இனக்கொலை புரிந்தவன் என்ற குற்றச் சாட்டுக்கு ஆளாகி, கூண்டிலே நிறுத்தப்படுவான் என்பதற்காக,யுத்தத்தை நாம் தானே இயக்கினோம்,நாம் சொன்ன வேலையைத்தானே செய்தான் என்று கொலைகாரன் ராஜபக்சேவைப் பாதுகாப்பதற்காக காமன் வெல்த் விளையாட் டுப் போட்டிகளிலே,இங்கிலாந்து நாட்டு அரச குடும்பத்தவர் தொடங்கி வைத்த விளையாட்டுப் போட்டியிலே கடைசி நாளில் அவனை அழைத்துக்கொண்டு வந்து சிறப்பு விருந்தினர் ஆக்கினீர்களே, இது நீங்கள் இதுவரை செய்த துரோ கத்துக்கெல்லாம் உச்சகட்ட துரோகம்.

ஏ... இந்திய அரசே! இதையெல்லாம் செய்து, இந்தியாவின் ஒருமைப்பாட்டை நீ காப்பாற்றவா நினைக்கிறாய்? இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து வந் துவிட்டதென்று சொல்லி, இலங்கையின் ஒருமைப்பாட்டைக்காப்பாற்றுவதற் காக ஆயுத உதவி செய்ததை ஒப்புக்கொண்ட இந்தியப்பிரதமரே, இலங்கை யின் ஒருமைப் பாட்டைக் காப்பாற்றுவதற்காக,இந்திய ஒருமைப்பாட்டைக் காவு கொடுக்காதீர்கள். (கைதட்டல்).

எந்த வழக்குக்கும் பயப்படுகின்றவர்கள் இங்கு யாரும் கிடையாது. அதைத் தான் ஒரு தொலைக்காட்சியிலே இரண்டு நாளைக்கு முன்பு போட்டான். என் ன வைகோ பேசிட்டாரு, அண்ணன் நெடுமாறன் பேசிட்டாரு,நாங்கள் இறை யாண்மைக்கு எதிரானவர்களா? எது இறையாண்மை? இரண்டு ராஜ துரோக வழக்கு போட்டிருக்கிறது கலைஞர் கருணாநிதி அரசு.இந்தியாவுக்கு நாங்கள் ராஜ துரோகிகளா? தேசத் துரோகிகளா? 124-ஏ தேசத்துரோகக் குற்றச்சாட்டு.
நிரூபிக்கப்பட்டால் ஆயுள்கால சிறை தண்டனை.

தேசத்துரோகக் குற்றச்சாட்டு எதற்கு? நீங்கள் செய்த துரோகத்தைச் சொன்ன தற்கா? இந்திய அரசு செய்த துரோகத்தை, இத்தாலிய எஜமானிக்கு அடிமை களாக -கொத்தடிமைகளாக மாறி, இந்திய அரசுசெய்த துரோகத்தைச் சொன்ன தற்கா? உண்மையைத்தானே சொன்னோம்?

இந்த வழக்கைப் போட்டது, மன்மோகன்சிங் அல்ல! கலைஞர் கருணாநிதி! சீமானை அடைத்து வைத்துஇருப்பது மன்மோகன்சிங் அல்ல, கலைஞர் கரு ணாநிதி.

இனத்துரோகி

அதனால்தான் அண்ணன் நெடுமாறன் சொன்னார்.வரலாற்றில் நீங்கள் எத்த னையோ பட்டங்களைப் பெற்றீர்கள். நீங்கள் தேடிச்சென்று பட்டங்களைக்
கொடுக்கச்சொல்லி வாங்கிக்கொண்டீர்கள். ஆனால்,கலைஞர் அவர்களே, ‘இனத்துரோகி’ என்ற இந்தக் குற்றச்சாட்டில் இருந்து நீங்கள் தப்ப முடியாது.
(கைதட்டல்)

நான் இன்னொன்றையும் சொல்கிறேன். கவிஞர் காசி ஆனந்தன் அவர்களே! இந்தத் தமிழகத்திலே இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக்
கருதாதீர்கள். அந்த இளைஞன்தான் முத்துக்குமார் என்பதை மறந்து விடாதீர் கள். (கைதட்டல்) கைதட்டுவதற்குக் கூட்டம் எவ்வளவு என்ற கணக்குப் பார்க் காதீர்கள்.பதினேழு இளைஞர்கள் தாங்கள் உயிர்களை நெருப்புக்கு தந்து இருக் கிறார்கள் தமிழ் நாட்டிலே. உணர்ச்சி செத்துப்போய்விடவில்லை. உணர்ச்சி இருக்கிறது. நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது.அது வெடிக்கும். இது மான உணர்ச்சி உள்ள பூமி. வீரம் விளைந்த பூமி. எப்படி அந்த உணர்ச்சி அழிந்து போகும்? 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கட்டிக்காக்கப்பட்ட மானமும் வீரமும் ஒரு போதும் அழியாது. இடைக்காலத்திலே மேகம் மறைப்பதைப் போலத் தெரிய லாம். சதிகாரக் கூட்டம் வெற்றி பெறுவதைப் போலத்தெரியலாம்.

இந்த உயிர்க்கவிதைகள் எப்படி உணர்ச்சி உண்டாக்குகிறதோ, அதைப்போல, ஈழ விடுதலைக்கு உயிர் கொடுக்கவல்ல கவிதைகள் இவை. காட்டிக்கொடுப் பவன் எங்கே? இழுத்துக் கொண்டுவா அவனை! தூணிலே கட்டு! சாட்டை எடுத் துவா! சாகும்வரை அடி, பின்பு கொளுத்து. இங்கே சந்தானம் அதனைச் சொன் னார். நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு, சோற்றுப் பிழைப்பு.

வீர உணர்வுகளை ஊட்டுகின்ற கவிதைகளை நீங்கள் தந்து இருக்கிறீர்கள்.அது மட்டும் அல்ல. அவருடைய குறுங்கதைகள். குருவிக்குஞ்சு கேட்கிறது, தாயி டம். அம்மா, நமக்கு சிறகு இருக்கு. வானத்தில் பறக்க முடிகிறது. இந்த மாட் டுக்கு ஏனம்மா சிறகில்லே? காசி ஆனந்தன் சொல்கிறார், தாய்க்குருவி வாய் வழியாக.வானத்தில் புல் முளைத்தால், மாட்டுக்குச் சிறகு முளைக்கும். (கை தட்டல்) இதைக் காசி ஆனந்தனைத் தவிர வேறு எவரும் சொல்ல முடியாது. (கைதட்டல்)

கூழாங்கல் சொல்கிறது. அந்த இரத்தினக்கல்லுக்கு  கண்ணாடிப்பேழையிலே இவ்வளவு மதிப்பா? இவ்வளவு மதிப்பை எனக்கேன் தருவது இல்லை?

எழுச்சி ஒலி

அப்போது கவிஞர் சொல்கிறார். அது எத்தனையோ ஆண்டுகளாக மண்ணுக்கு உள்ளேயே மறைந்து இருந்து தன்னைத்தானே தயார்படுத்திக்கொண்டு வந்த தனாலே அது இன்றைக்கு இரத்தினக்கல்லாக ஜொலிக்கிறது.எனவே, நிறை வாகும்வரை மறைவாக இரு.(கைதட்டல்) இதுதான் பிரபாகரனுக்கும் இன் றைக்குப் பொருந்தும். (பலத்த கைதட்டல்)

இந்த ஒலிதான், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்களின் எழுச்சி ஒலி. (கைதட்டல்) பிரபாகரன் வாழ்கிறார், இந்தப் பூமிப்பந்தில் ஓரிடத்தில் இருக் கிறார்.(ஆரவாரம்) தான் வாழும் காலத்திலேயே தமிழ் ஈழம் படைப்பார் (ஆர வாரம்) 

அதனால்தான் அஞ்சி நடுங்குகிறது இந்திய சர்க்கார். தமிழ்நாட்டைச் சேர்த்து விடுவார்கள் என்று அஞ்சி நடுங்குகிறது. பொய்யான ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுக்கிறது. விடுதலைப் புலிகளை தடை செய்ய தீர்ப்பு ஆயத்தில் கொண்டு வருகிறது.

எதற்குத் தடை? தமிழ்நாட்டையும் சேர்ந்து அகண்ட தமிழகம் அமைக்கத் திட்ட மாம். அடப் பைத்தியக்காரர்களே! முட்டாள்களே! அப்படி எந்தக் காலத்திலே சொன்னார் பிரபாகரன்?

தமிழ் ஈழம் நல்ல ஒழுக்கமும் மானமும் உணர்ச்சியும் உள்ள தமிழ் ஈழமாக, ஈழத்துத் தமிழ் மக்கள் வாழும் தமிழர்களின் தேசமாக இருக்கட்டும். இந்தக் கலப்படம் போய் அதைக் கெடுத்துவிடக்கூடாது. (ஆரவாரம்)

‘வடக்கும் கிழக்கும் ஈழத்தமிழர்களின் தாயகம்; தமிழர்கள்தாம் அந்த மண்ணின் பூர்வீகக்குடிகள் என்று, ’என்று இந்திராகாந்தி அம்மையாரே நாடாளுமன்றத் தில் சொன்னார். அது, அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு கடைசியாகப் பேசிய பேச்சு, ஈழத்துக்காகப் பேசிய பேச்சு, மாநிலங்கள் அவையிலே பேசிய பேச்சு.

உலகத்தில் இத்தனை நாடுகள் மலர்ந்து இருக்கிறதே? ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய நாடுகள் வந்து விட்டன. ஏன் தமிழனுக்கு ஒரு தேசம் இருக்க முடியாது? கொசாவா ஏற்படுகிறபோது, பாலஸ்தீனமும், கிழக்கு தைமூரும் உருவாகிற போது, பங்களாதேஷ் உருவாகிறபோது, தமிழ் ஈழம் ஏன் உருவாக முடியாது?

நான் விசாரணை தீர்ப்பு ஆயத்தின் நீதிபதியிடம் கேட்டேன். அவர் மேற்கு வங் காளத்தைச் சேர்ந்தவர்.விக்ரம்ஜித் சென். தமிழ்நாட்டையும் சேர்த்து அவர்கள்
தமிழீழம் கேட்பதாகச் சொல்கிறார்கள் என்றபோது, மாட்சிமை தங்கிய நீதிபதி அவர்களே! வங்காள தேசம் உருவாகிறபோது அப்படிச் சொன்னார்களா? கல் கத்தாவையும் சேர்த்து மேற்கு வங்கத்தையும் சேர்த்து,வங்கதேசம் அமைப்ப தாகச் சொன்னார்களா? என்றேன்.

நீதிபதி சிரித்துக் கொண்டே ‘அப்படிக்கூட ஒரு பேச்சு வந்தது. ஆனால், நடக்க வில்லை” என்றார். (பலத்த சிரிப்பு)

நிறைவாகும்வரை, மறைவாக இரு

ஈழத்தில் தமிழ் இனத்தை அழிப்பதற்குத் துரோகம் செய்தது இந்திய அரசு. இலட் சக் கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. ஈராக்கிலே ஜார்ஜ் புஷ் செய்த
கொடுமைக்கு, இலட்சக்கணக்கான ஈராக்கியர்களின் படுகொலைக்கு வெள் ளை மாளிகையின் அதிபராக இருந்தவர் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கேள்வி உருவாகிவிட்டது. டாலர் நாட்டு அதிபருக்கே இந்தக் கதி என் றால், சுண்டைக்காய் பயல் இந்த ராஜபக்சேவுக்கு என்ன கதி ஏற்படும்? எவ னும் தப்ப முடியாது.

உலகெங்கும் உணர்ச்சி உள்ள தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களது உணர்ச் சிகளை ஊட்டி வளர்க்கக்கூடிய கவிதைகளைத் தரக்கூடிய இந்தக் கவிஞர் இருக்கிறார். அதனால்தான் சொன்னார். ‘நிறைவாகும்வரை மறைவாக இரு.’ அவர் நிறைவானவர்தான். மீண்டும் தமிழ் ஈழ விடுதலைப்போருக்கான நிறை வான காலம் வரும்வரை, மறைவாக இருப்பார். இதை நான் சொல்லவில்லை. காசி ஆனந்தன் எழுதிய கவிதையைத்தான் சொன்னேன்.

ஏற்றிவிட்ட ஏணியைக் கீழே பிடித்துத் தள்ளி விடுகிறான் அல்லவா? அதற்கு இவர் சொல்கிறார். பட்டம் பறக்கிறது. அழகாகப் பறக்கிறது. பட்டம் பறந்து போகிறபோது அதற்கு திமிர் வந்துவிட்டது. அதிகாரத்திமிர். ஆணவம். எதற்கு இந்த நூல் கயிறு? நமக்கு எதற்கு இது? நாம்தான் இவ்வளவு உயரம் வந்து விட் டோமே என்று, நூல் கயிறை அறுத்து விட்டது. அதன் பின்னர் பட்டம் அங்கும் இங்கும் அலைந்து, முள்ளின்மேல் விழுந்து கிழிந்து போனது. குறுங்கதை.

கவிஞர் காசி ஆனந்தன் சொல்லுகிறார்:

‘ஏற்றி வைத்தவனை மறக்கிறவன் இறக்கி வைக்கப்படுவான்.’ (கைதட்டல்)

அந்த வரிசையிலேதான்,

பகைவனே!
என்னை மண்ணில் புதைத்தாய்!
என் மண்ணை எங்கே புதைப்பாய்?

இப்படி, காசி ஆனந்தன் கவிதைகள் ஒவ்வொன்றும் சிந்தனைக்கு வலு சேர்ப் பவை. அவர் கவிதைகள், குறுங்கதைகள், அவர் வடித்து இருக்கின்ற ‘ஜெயத் துக்கான கடிதம்’ இவை எல்லாம் ஈழ விடுதலைப் போராட்ட களத்தின் இலக் கியங்கள். சாகா வரம் பெற்றவை.

கவிஞர் காசி ஆனந்தன் அவர்களே! தமிழ் உள்ளவரை உங்களுடைய பெயர் இருக்கும். (கைதட்டல்) தமிழ் ஈழம் மலரப்போவது உறுதி. கவிஞர் காசி ஆனந் தனை -புதுவை இரத்தினதுரையை யார் மறக்க முடியும்?

காசி ஆனந்தன் அவர்களே, நீங்கள் நல்லூர் கந்தசாமி கோவில் திடலிலே திலீ பன் துளி நீரும் பருகாமல், கணைக்கால் இரும்பொறையைப்போல, உண்ணா
விரதம் இருந்தான் அல்லவா? அப்போது தலைவர் வந்து பார்த்தார் அல்லவா? பல்லாயிரக்க ணக்கான மக்கள் மாரடித்து அழுகிறார்களே, அப்போது நீங்கள் அங்கே சொன்னீர்கள்.

திலீபன் அழைப்பது சாவையா?
இந்தச் சின்ன வயதில் இது தேவையா?
இந்தப் பிள்ளையின் உயிர் பிழைக்காதா?
பிரளயம் வந்து முளைக்காதா?

என்று பாடினீர்களே, இன்றைக்குச் சொல்லுகிறேன் கவிஞர் அவர்களே! அப் போது இந்த மாதிரி டி.வி.டி கிடையாது. சி.டி. கிடையாது. அபபோது ஒளிநாடா பெரிய அளவில் இருக்கும். அதைப் போட்டுப்பார்ப்பார்கள். பெரிய இயந்திரம் மாதிரி இருக்கும். அதை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒரு டாக்சி வைத்துக் கொண்டு, ஒவ்வொரு தலைவரின் வீட்டிலும் போட்டுக் காட்டினேன். நல்லூர் கந்தசாமி கோவில் திடலில் திலீபன் உண்ணாவிரதம் இருப்பதை, மக்கள் அழுவதை நீங்கள் பேசுவதைப் போட்டுக் காட்டினேன்.

என்.டி.ஆர். முதல் அமைச்சர். அவர் விடிகாலை 5 மணிக்கு என்னை வரச் சொன்னார். தெலுங்கு தேசம் எம்.பி களை வரச்சொன்னார். அவருக்குப் போட் டுக் காட்டினோம்.வாஜ்பாய் வீட்டுக்குப் போய் போட்டுக்காட்டினோம். அத் வானி உட்பட எல்லா தலைவர்களையும் வரச்சொன்னார். ஒவ்வொரு தலைவ ரின் வீட்டுக்கும் கொண்டு போய் அந்த ஒளி நாடாவைப் போட்டுக் காட்டி னோம். எவ்வளவு கொடுமை நடக்கிறது, இந்திய இராணுவம் செய்யும் கொடு மை, எவ்வளவு தமிழ் மக்கள் சாகிறார்கள் என்று எடுத்துச் சொன்னோம்.

அன்றும் கொடுமை செய்தார்கள். தொடர்ந்து துரோகம் செய்தார்கள். இப்போது துரோகத்தின் உச்சக்கட்டமாக, உலகம் அந்தக் கொடியவன் மீது கண்டனத் தைப் பொழிகிற போது, இந்தியா சிவப்புக் கம்பளம் விரிக்கிறது.

இன்றைக்குக்கூடப் பாருங்களேன். செஞ்சிலுவைச்சங்கத்திலே கொடுத்த பொருட்களைப் பறிக்கிறார்கள்.செஞ்சிலுவைச் சங்கத்தின் மேலாளரான அந்த
வெளிநாட்டுப் பெண்மணி அழுது இருக்கிறார். உலகம் இப்போதுதான் கொஞ் சம் ஈழத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. இப்போது நமக் கு வேலை ரொம்ப அதிகம்.

உணர்வுகளைப் பரப்புவோம்!

இந்த உணர்வுகளைப் பரப்புவோம். அரசியல் எல்லைகளையெல்லாம் கடந்த ஒரு வேண்டுகோள் இது. தமிழகம் பூராவிலும் இந்த உணர்வைப் பரப்ப வேண் டும். என்னை வெளி நாடுகளுக்கு அழைக்கிறார்கள். எங்கும் நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.ஆறரைக் கோடி தமிழர்கள் இருக்கின்ற இங்கு, முடிந்த அளவுக்கு உணர்வுகளைப் பரப்புவோம். இங்கே உள்ள மக்களிடம் உணர்ச்சிகளை பரப்புகிறோம். இங்குள்ள இளைஞர் களிடம் இனஉணர்வைப் பரப்புவோம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது. கணினியைப் பயன்படுத்து கின்ற திறமையான உணர்வுள்ள இளைஞர்கள் இலட்சக்கணக்கில் தமிழகத் தில் இருக்கிறார்கள். யாரும் இல்லை என்று நினைத்துவிடாதீர்கள்.

நான் விமானத்தில் போகிறபோது, ஒவ்வொரு முறையும் பக்கத்து இருக்கை யில் அமர்ந்து இருக்கின்ற இளந்தோழர் என்னிடத்தில் பேசுகின்றபோது, அவ ரது உணர்வு கொந்தளிப்பதைப் பார்க்கிறேன். இப்படி உணர்வு பூர்வமான இளைஞர்கள் இலட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கவி தைகள் போய்ச் சேரட்டும். இந்தப் பாடல்கள் போய்ச் சேரட்டும்.

களத்தில் கேட்கும் கானங்களும், புயல் கால ராகங்களும் திரும்பப்போய்ச் சேரட்டும். மீண்டும் ஒரு புயல் கால ராகங்களை நீங்கள் படைக்க வேண்டும். இப்போது, அது ரொம்பத் தேவை.இந்த எட்டுப் பாடல்களைப்போல் இனி ஒன்று அந்த நெருப்பும் வரவேண்டும். தமிழ் ஈழ விடுதலை நெருப்புப் பாடல்களும் வர வேண்டும். அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கின்ற பொறுப்பை, அண் ணன் நெடுமாறன் தலைமையில் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். (கைதட்டல்) அந்தக் கடமையை நாங்கள் செய்கிறோம். முத்துகுமாரை நெஞ்சில் வைத்து
ஆராதனை செய்கின்ற கூட்டம் இது. (கைதட்டல்). 

இல்லந்தோறும் ஒலிக்கட்டும்

கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள்,பாடல்கள்,நம் வீட்டிலே ஒலிக்க வேண் டும். நாம் பயணிக்கும் வாகனங்களில் ஒலிக்க வேண்டும். இவற்றைக் கேட்டு
நம் பிள்ளைகளுக்கு உணர்ச்சி வரும். திருமண வீடுகளில் இதைப் பரிசாகக் கொடுங்கள்.இப்பாடல்களைப் பரப்புவோம். நமது நியாயமான கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். இளைஞர்களிடம் எடுத்துச்செல்வோம்.கல் லூரி மாணவர்களின் கவனத்தைக் கவருகின்ற வகையிலே கொண்டு செல் வோம். நம்பிக்கையோடு இந்தப் பணியில் ஈடுபடுவோம்.

ஏன் முடியாது? 28 பேருடன் கானகம் சென்று பாசறை அமைத்த பிரபாகரன் தான் இலட்சக்கணக்கான படைகளை வீழ்த்த முடிந்தது என்பதை மனதில்
கொண்டு செயலாற்றுவோம். கவிஞர் காசி ஆனந்தனின் கவிதைகள், அதற் கான பயணத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

No comments:

Post a Comment