நெல்லை மாநகர் மாவட்ட ம. தி.மு.க.மற்றும் மறுமலர்ச்சி தொழிலாளர் முன் னணி சார்பில், 1.5.2013 அன்று,நெல்லை - பாளையங்கோட்டையில் மே தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில்,கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை யில் இருந்து....
உலகத் தொழிலாளர்களே, ஒன்று படுங்கள்;
நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை;
உங்களைப் பூட்டி இருக்கின்ற அடிமை விலங்குகளைத் தவிர!
1993 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ஆம் நாள், நான் நேசிக்கின்ற பூமியாகி ய இந்தப் பரணி ஆற்றங்கரையில்,தம்பி டேவிட் திருமண வரவேற்பின் போது, நீங்கள் பெறப்போவது எதுவும் இல்லை; என்னோடு வந்தால், கண்ணீர்த் துளி களும், வியர்வைத் துளிகளும் , துன்பங்கள் நிறைந்த போராட்டக் களங்களும்,
உங்களை அல்லல்படுத்து கின்ற அணிவகுப்புப் பயணங்களும் தான்; அதற்குச் சித்தமானவர்கள் மட்டும் என்னோடு கரம் கோர்த்து வாருங்கள்; பட்டம், பதவி கள் தர இயலாது; மலர்கள் பதிக்கப்பட்ட பாதையில் நீங்கள் நடக்க முடியாது; துணிவுள்ள வீரர்கள் என்னோடு வாருங்கள் என்று நான் சொன்னேன்.
இவை, வரலாற்றில் என் மனதைக்கவர்ந்த, களங்களின் மாவீரன் கரிபால்டி யின் சொற்கள். இருபதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றோம்.இரத்தம் பொங்கிய இருபது ஆண்டுகள், கண்ணீர் பொங்கிய இருபது ஆண்டுகள். வியர் வைப் பெருமழை கொட்டிய இருபது ஆண்டுகள். தோல்விகள், இருட்டடிப் புகள், ஏளனப் பேச்சுகள், ஏகடிய வார்த்தைகள், நினைத்துப் பார்க்க முடியாத இடங்களில் இருந்து எங்கள் மீது பாய்ந்த துரோகங்கள் அனைத்தையும் முகம் கொடுத்து எதிர்கொண்டு, இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள், அறிஞர் சி.சு. மணி அரங்கத்துக்கு எதிரே பரந்து இருக்கின்ற இந்த ஜவகர் திடலில், என்னை
வார்ப்பித்த இந்தப் பாளையங்கோட்டை மண்ணில் திரண்டு இருக்கின்ற இந்த
இன்பக் காட்சி.
இப்போது என் தோழர்களுக்குச்சொல்லுகிறேன்; இனி நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை.இனிப்பெறப்போவதெல்லாம் வெற்றிகள்தாம். (பலத்தகைதட் டல்) முன்னேறிச்செல்வோம்; மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஒருநாள் இம்மாநிலத் தின் அதிகாரத்தைக் கைப்பற்றும். அந்த உறுதியைப் பறைசாற்றுகின்ற விதத் தில், இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கின்ற, பல நாள்கள் பாடுபட்டு உழைத்த நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச்சகோதரர் பெரு மாள் மற்றும் கழக நிர்வாகிகள், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணித் தோழர் கள், எந்தப்பொறுப்பிலும் இல்லாத தம்பிமார்கள்,சக்திக்கு மீறித் தங்கள் கைப் பொருளைச் செலவழித்து, இந்த மாநகரத்தின் எல்லாத் திசைகளிலும் மறுமலர் ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலுவை அறிவிக்கின்ற வகையில் ஏற் பாடு செய்தவர்கள், கொடி கட்டியவர்கள், தோரணம் கட்டியவர்கள், நெஞ்சை உருக்குகின்ற வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை, பட்டயங்களை அமைத் தவர்கள், அனைவரின் கரங்களையும் பற்றி என் கண்களில் ஒற்றிக் கொள்கின் றேன். உங்களால்தான் இந்த இயக்கம் இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கின் ற து.என் நெஞ்சின் அடிவாரத்தில் இருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
தமிழகத்தில் அரசியலில் ஒரு மாற்று சக்தி வேண்டும் என்கின்ற தேடல்,இளை ய உள்ளங்களில் அரும்பி இருக்கின்றது. திராவிட இயக்கத்தின் அடுத்த பரிமா ணமாக, பெரியார் அண்ணா வகுத்த பாதையில் நாங்கள் கம்பீரமாக நிற்கின் றோம். நாங்களே மாற்று என்று இப்போது நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால், அந்தத் தேடலுக்கு விடை எது? என்கின்றபோது,அதற்கு உரியவர்க ளாக எங்களை ஆக்கிக் கொள்கின்ற விதத்தில்,அதற்கான முயற்சிகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறோம்.
மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்; ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி என்று, கவிஞன் பாரதி பாடினான்.
அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அண்ணா எழுதுகிறார்: செஞ்சதுக்கத்தில்
நடைபெற்ற மே தின அணிவகுப்பை மனதில் கொண்டு எழுதுகிறார்.
Oh the mighty revolution which crushed the capitalism. Liberty Equality fraternity
முதலாளித்துவத்தை நசுக்குவதற்காக எழுந்த, வலிமை வாய்ந்த புரட்சி. சுதந் திரம், சமத்துவம், சகோதரத்துவம், கருத்தைக் கொடுத்த சர் ஜான் மார்சலின்
கருத்தில் இருந்து, பெர்னார்ட் சாவின் ஆப்பிள் கார்ட்டையும் சுட்டிக் காட்டிப்
படைத்து இருக்கின்ற அந்தக் கட்டுரையை, என் அருமைத் தம்பிமார்களே, மாணவக் கண்மணிகளே, ஒரு நொடிப் பொழுதில் நீங்கள் இணையதளத்துக் குள் சென்று படித்துப் பாருங்கள்.
அதற்கு அடுத்த ஆண்டு, 1934 இல், அகில இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ்,
இலட்சுமணபுரியில் நடக்கின்றது. அந்த மாநாட்டுக்கு, அறிஞர் அண்ணா அவர் கள், பாசுதேவ் அவர்களோடும், ஆல்பர்ட் ஜேசுதுரை அவர்களோடும் செல் கிறார். அவர்கள் தொழிற்சங்கத்தலைவர்கள். அந்த மாநாட்டில் அண்ணா பேச அழைக்கப்படவில்லை.அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் அற்புதமாக உரை ஆற்றக் கூடிய தமிழகத்தில்அவருக்கு நிகரான பேச்சாளர்கள், இருபதாம் நூற் றாண்டில் தோன்றியது கிடையாது. அந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஒரு தீர்மானத்தை முன்மொழிய யாரும் முன்வராத சூழலில், யாரை முன்மொழியச் செய்வது என்கிறபோது, அறிஞர் அண்ணாவை அழைக்
இந்த வரலாற்றின் போக்கில், தொழிலாளர்களின் உரிமைக்காகத் திராவிட இயக்கம் போராடி வந்தது.திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு, மே தின விழாவில் பேசுகிறார். 50 இல் பேசுகிறார், 51 இல் பேசுகிறார்.
1952 செப்டெம்பர் 10 இல், பொன்மலையில் தந்தை பெரியாரை அழைத்துக் கொண்டு வந்து, தொழிலாளர்கள் மே தின விழா நடத்தினார்கள்.12 ஆம் தேதி சர்க்கரைச் செட்டியார் கொடி ஏற்றுகிறார். தோழர் இராமமூர்த்தி உரை ஆற்று கிறார். தோழர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்குகிறார். 13 ஆம் தேதி, கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் கலைநிகழ்ச்சி.70,000 பேர் திரண்டார் கள். தலைமை வகித்துப் பேசுகிறார் அறிஞர் அண்ணா.அது கூட்டுறவுச் சங்கத் தின் விழாவாக இருந்தாலும், தொழிலாளர் விழாவாகவே நடைபெறுகிறது. சரித்திரப் பிரசித்தி பெற்ற உரையை நிகழ்த்தினார் அண்ணா.
இப்படித் திராவிட இயக்கம் தொழிலாளர்களின் உரிமைப் போர்க்கொடியை
உயர்த்தியது மட்டும் அல்ல, அவர்களுக்காகப் போராடி வந்து இருக்கின்றது. அதனால்தான், மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார் அண்ணா. அப் போது சிதம்பரம் பூங்காவில் அவர் ஆற்றிய உரையை இங்கே அவைத் தலை வர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்கள் நினைவு படுத்தினார்.
அண்ணாவின் வார்ப்புகள் நாங்கள். மே தினத்துக்கு அகில இந்திய அளவில்
விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் மாநிலங்கள் அவைத் தலைவர். 1990 ஆம் ஆண்டு ஏப் ரல் 30 ஆம் நாள் வியாழக்கிழமை.அவரது அறைக்குச் சென்றேன். ‘ஐயா,இன்று, பிரதமர் கேள்வி நேரத்தின் போது அவைக்கு வருகிறார். கேள்வி நேரம் முடிந்த வுடன் என்னைப் பேச அனுமதியுங்கள். ஒரு முக்கியமான பிரச்சினையைப் பேச விழைகிறேன்’ என்றேன். அவர் என்னை மிக நேசித்தவர். நான் அவரிடம் மிகுந்த அன்பு பாராட்டியவன். அவர் அனுமதி அளித்தார்.
அப்போது பிரதமர் வி.பி.சிங். பிரதமர் அவர்களே, நாளை மே தினம். அதை விடு முறை நாளாக நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.இந் தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவரான குருதாஸ் தாஸ் குப் தா அவர்களிடம் முன்பே எனது கோரிக்கையை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தேன். அவரும் ஆதரித்துப் பேசினார்.
ஜனதா தளம் கட்சியின் கமல் மொரார்க்கா ஆதரித்துப் பேசினார்.அதன்பிறகு, பிரதமர் எழுந்து சென்று விட்டார். நான் உடனடியாக இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு, செளத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றேன். அவர் ஜப்பானியக் குழுவோடு பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள் அவசரமாக பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று,பிரதமரின் செயலாளரிடம் கேட்டுக்கொண்டேன். ஜப்பானியக் குழுவினர் விடைபெற்றுச் சென்றவுடன் எங்களை அழைத்தார்.
மே தின விடுமுறையை இன்றே நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். தொழிலாளர் நலத்துறை
அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்,பிற்பகலில் இரண்டு அவைகளுக் கும் வந்து, மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். இது ஒரு சாதனை அல்ல; செய்ய வேண்டிய கடமை. செய்த பணிகளில் ஒன்றாக அதை இங்கே சுட்டிக் காட்டுகிறார்கள்.
நவரத்தினங்களுள் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார்
மயமாக்க முயன்றார்கள். ஏறத்தாழ 30,000 தொழிலாளர்களின் வாழ்வில் இடி விழும் நிலைமை. பொதுத்துறை நிறுவனங்களுள் அரசுக்குப் பெரும் இலாபத் தைக் கொடுக்கின்ற நிறுவனம்.வடநாட்டுப் பெருமுதலாளிகள் கைப்பற்ற முயன்றார்கள். மத்திய அரசு தன் பங்குகளை விலக்கிக் கொள்ளுகின்ற நிலை மை. அதை எதிர்த்துப்போராட்டம் எழுந்தது. அனைத்துத்தொழிற்சங்கங்களும் போராடினார்கள்.நாடாளுமன்றத்தில் மூன்று முறை கேள்விகள் எழுப்பப்பட் டன. ஆயினும் முடிவு மாறவில்லை.
நான் 23 தொழிற்சங்கங்கள் கையெழுத்து இட்ட, பிரதமருக்கு எழுதப்பட்ட கோரிக்கை மனுவை ஆருயிர்த்தம்பி செந்திலதிபன் அவர்கள்,அதிகாலை நேரத்தில்,சென்னை விமான நிலையத்தில் என்னிடம் கொண்டு வந்து கொடுத் தார். நாடாளுமன்றத்தில் நான் கோரிக்கை வைத்தேன். அனைத்துக்கட்சிகளும் ஆதரித்தார்கள். அந்தத்துறையின் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர் களைச் சந்தித்தேன்.ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது; இனி எதுவும் செய்ய முடியாது.ஒருவேளை பிரதமர் தலையிட்டால்தான் முடியும் என்றார்.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வைக்காப்பாற்றித் தாருங்கள்; அரசுக்கு லாபம் ஈட்டித் தருகின்ற நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியா ருக்குத் தாரை வார்ப்பதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத் தேன். இன்னும் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்.அவை எல்லாவற்றையும் இங்கே எடுத்துக்கூற இயலாது. அவரிடம் உரிமையோடு பேசக்கூடியவன் நான்.
தொழிலாளர்களின் நலன்களுக்காக நாங்கள் போராடுகின்றோம். நாட்டு மக் களின் நலன்களுக்காகப்போராடுகின்றோம்.அதற்காகத்தான் பொது வாழ்வுக்கு வந்தேன், அண்ணாவின் இயக்கத்துக்கு வந்தேன். இன்றைக்குத் தமிழகத்தைப் பலமுனைகளிலும் சூழ்ந்து இருக்கின்ற ஆபத்துகளில் இருந்து காப்பதற்காகப் போராடு கின்றோம். தொடர்ந்து எங்கள் கடமையைச் செய்து கொண்டேஇருப் போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.
உலகத் தொழிலாளர்களே, ஒன்று படுங்கள்;
நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை;
உங்களைப் பூட்டி இருக்கின்ற அடிமை விலங்குகளைத் தவிர!
Workers of the World, Unite;
You have to lose nothing but your chains
என்று கார்ல் மார்க்ஸ் அவர்களும்,ஃபிரடெரிக் எங்கல்ஸ் அவர்களும் எழுப்பிய பிரகடனத்தின் எதிரொலியாக,இன்று புவனம் முழுவதும் மே தின முழக்கம் எழுப்பிடும் பாட்டாளி வர்க்கம் வெற்றி கீதமாக இசைத்துக் கொண்டு இருக்கின் ற உன்னதமான நேரம் இது.தொழிலாளத் தோழர்களே, இந்த நாள்,உங்களுக்கு உரிய நாள்.1993 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ஆம் நாள், நான் நேசிக்கின்ற பூமியாகி ய இந்தப் பரணி ஆற்றங்கரையில்,தம்பி டேவிட் திருமண வரவேற்பின் போது, நீங்கள் பெறப்போவது எதுவும் இல்லை; என்னோடு வந்தால், கண்ணீர்த் துளி களும், வியர்வைத் துளிகளும் , துன்பங்கள் நிறைந்த போராட்டக் களங்களும்,
உங்களை அல்லல்படுத்து கின்ற அணிவகுப்புப் பயணங்களும் தான்; அதற்குச் சித்தமானவர்கள் மட்டும் என்னோடு கரம் கோர்த்து வாருங்கள்; பட்டம், பதவி கள் தர இயலாது; மலர்கள் பதிக்கப்பட்ட பாதையில் நீங்கள் நடக்க முடியாது; துணிவுள்ள வீரர்கள் என்னோடு வாருங்கள் என்று நான் சொன்னேன்.
Forced marches, tears and sweat, sacrifice and struggles
வார்ப்பித்த இந்தப் பாளையங்கோட்டை மண்ணில் திரண்டு இருக்கின்ற இந்த
இன்பக் காட்சி.
இப்போது என் தோழர்களுக்குச்சொல்லுகிறேன்; இனி நீங்கள் இழக்கப்போவது எதுவும் இல்லை.இனிப்பெறப்போவதெல்லாம் வெற்றிகள்தாம். (பலத்தகைதட் டல்) முன்னேறிச்செல்வோம்; மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஒருநாள் இம்மாநிலத் தின் அதிகாரத்தைக் கைப்பற்றும். அந்த உறுதியைப் பறைசாற்றுகின்ற விதத் தில், இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருக்கின்ற, பல நாள்கள் பாடுபட்டு உழைத்த நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆருயிர்ச்சகோதரர் பெரு மாள் மற்றும் கழக நிர்வாகிகள், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணித் தோழர் கள், எந்தப்பொறுப்பிலும் இல்லாத தம்பிமார்கள்,சக்திக்கு மீறித் தங்கள் கைப் பொருளைச் செலவழித்து, இந்த மாநகரத்தின் எல்லாத் திசைகளிலும் மறுமலர் ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலுவை அறிவிக்கின்ற வகையில் ஏற் பாடு செய்தவர்கள், கொடி கட்டியவர்கள், தோரணம் கட்டியவர்கள், நெஞ்சை உருக்குகின்ற வாசகங்களைத் தாங்கிய பதாகைகளை, பட்டயங்களை அமைத் தவர்கள், அனைவரின் கரங்களையும் பற்றி என் கண்களில் ஒற்றிக் கொள்கின் றேன். உங்களால்தான் இந்த இயக்கம் இன்றைக்குத் தலைநிமிர்ந்து நிற்கின் ற து.என் நெஞ்சின் அடிவாரத்தில் இருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
பெருந்திரளான கூட்டம். எந்தக்கல்லூரியில் 1960 ஆம் ஆண்டு நான் புகுமுக வகுப்பு மாணவனாக வந்து சேர்ந்தேனோ, அந்தக் கல்லூரியில் முதல்வராகப் பணி ஆற்றிய அருட்தந்தை உட்பட, பேராசிரியப்பெருமக்கள் பலரும், இந்தக்
கூட்டத்தைக் கேட்க வந்து இருப்பதால், மிகவும் மனம் நெகிழ்ந்த நிலையில்,
உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.இந்த நாள், எனக்கு மகிழ்ச்சியான நாள்.

நாங்கள் நடந்து வந்த பாதையைத்திரும்பிப் பார்க்கின்றேன். மலைப்பாக இருக் கின்றது. இத்தனையும் கடந்து வந்து இருக்கின்றோமா? பலம் வாய்ந்த சக்தி களின் எதிர்ப்புக்கு நடுவிலும்கூட, நம் தோழர்களின் கடுமையான உழைப்பால், நாட்டு மக்கள் மத்தியில் நாங்கள் நம்பகத்தன்மையைப் பெற்று இருக்கின் றோம் என்பதற்கு அத்தாட்சி தான், இந்தப் பாளையங்கோட்டைக் கூட்டம்.
மக்களின் மதிப்பைப் பெற்று இருக்கின்றோம். தமிழக மக்களின் ஒட்டுமொத் தக் கவனத்தை ஈர்த்து இருக்கின்றோம்.
தமிழகத்தில் அரசியலில் ஒரு மாற்று சக்தி வேண்டும் என்கின்ற தேடல்,இளை ய உள்ளங்களில் அரும்பி இருக்கின்றது. திராவிட இயக்கத்தின் அடுத்த பரிமா ணமாக, பெரியார் அண்ணா வகுத்த பாதையில் நாங்கள் கம்பீரமாக நிற்கின் றோம். நாங்களே மாற்று என்று இப்போது நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால், அந்தத் தேடலுக்கு விடை எது? என்கின்றபோது,அதற்கு உரியவர்க ளாக எங்களை ஆக்கிக் கொள்கின்ற விதத்தில்,அதற்கான முயற்சிகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகிறோம்.
இந்த மே தினத்தைக் கொண்டாடுகின்ற அனைத்துத் தகுதிகளையும் திராவிட
இயக்கம்பெற்று இருக்கின்றது என்பதை, கழகத்தின் அவைத்தலைவர் அண் ணன் திருப்பூர் துரைசாமி அவர்கள் அழகாக இங்கே எடுத்துச் சொன்னார்கள்.
1924 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அறிவு ஆசான் தந்தை
பெரியார் அவர்கள், காஞ்சிபுரம் மாநாட்டில், தொழிலாளர்களுக்காக ஒரு தீர் மானத்தைக் கொண்டு வந்தார். அந்த இருபதுகளில், தொழிலாளர்களின் உரி மைச் சங்கநாதமாக, பெரியாரின் படைவரிசைத் தளபதிகள் முழங்கினார்கள். அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி முழங்கினார்.
மாணவக் கண்மணிகளே, அண்ணாவின் கட்டுரையைப் படியுங்கள்

1933 ஆம் ஆண்டு, பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்த பேரறிஞர் அண் ணா அவர்கள், அந்தக் கல்லூரியின் ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதி னார். அந்தக் கட்டுரையின் தலைப்பு, Moscow Mob Parade. மே தின விழாவுக்காக எழுதப்பட்ட அந்தக் கட்டுரையில், உலக வரலாற்றின் போக்கைத் திசை மாற் றிய சமூக அறிவியல் சூத்திரங்களைத் தந்த, மூலதனம் என்ற சொல்லின் மூலம், அதன் பொருளின் மூலம், பொதுஉடைமை இயக்கத்துக்கான சித்தாந் தத்தைத் தந்த கார்ல் மார்க்சின் அந்தப் பெரு நூலின் சாரத்தை,அற்புதமாக வடித் துக் கொடுத்தார்.
மாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்; ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி என்று, கவிஞன் பாரதி பாடினான்.
அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அண்ணா எழுதுகிறார்: செஞ்சதுக்கத்தில்
நடைபெற்ற மே தின அணிவகுப்பை மனதில் கொண்டு எழுதுகிறார்.
கருத்தில் இருந்து, பெர்னார்ட் சாவின் ஆப்பிள் கார்ட்டையும் சுட்டிக் காட்டிப்
படைத்து இருக்கின்ற அந்தக் கட்டுரையை, என் அருமைத் தம்பிமார்களே, மாணவக் கண்மணிகளே, ஒரு நொடிப் பொழுதில் நீங்கள் இணையதளத்துக் குள் சென்று படித்துப் பாருங்கள்.
அதற்கு அடுத்த ஆண்டு, 1934 இல், அகில இந்தியத் தொழிலாளர் காங்கிரஸ்,
இலட்சுமணபுரியில் நடக்கின்றது. அந்த மாநாட்டுக்கு, அறிஞர் அண்ணா அவர் கள், பாசுதேவ் அவர்களோடும், ஆல்பர்ட் ஜேசுதுரை அவர்களோடும் செல் கிறார். அவர்கள் தொழிற்சங்கத்தலைவர்கள். அந்த மாநாட்டில் அண்ணா பேச அழைக்கப்படவில்லை.அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் அற்புதமாக உரை ஆற்றக் கூடிய தமிழகத்தில்அவருக்கு நிகரான பேச்சாளர்கள், இருபதாம் நூற் றாண்டில் தோன்றியது கிடையாது. அந்த மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஒரு தீர்மானத்தை முன்மொழிய யாரும் முன்வராத சூழலில், யாரை முன்மொழியச் செய்வது என்கிறபோது, அறிஞர் அண்ணாவை அழைக்
கின்றார்கள். அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் ஆற்றிய ஆங்கில உரை , அந்த மாநாட்டில் அனைவருடைய உள்ளத்தையும் கவர்ந்தது.
இந்த வரலாற்றின் போக்கில், தொழிலாளர்களின் உரிமைக்காகத் திராவிட இயக்கம் போராடி வந்தது.திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு, மே தின விழாவில் பேசுகிறார். 50 இல் பேசுகிறார், 51 இல் பேசுகிறார்.
1952 செப்டெம்பர் 10 இல், பொன்மலையில் தந்தை பெரியாரை அழைத்துக் கொண்டு வந்து, தொழிலாளர்கள் மே தின விழா நடத்தினார்கள்.12 ஆம் தேதி சர்க்கரைச் செட்டியார் கொடி ஏற்றுகிறார். தோழர் இராமமூர்த்தி உரை ஆற்று கிறார். தோழர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்குகிறார். 13 ஆம் தேதி, கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் கலைநிகழ்ச்சி.70,000 பேர் திரண்டார் கள். தலைமை வகித்துப் பேசுகிறார் அறிஞர் அண்ணா.அது கூட்டுறவுச் சங்கத் தின் விழாவாக இருந்தாலும், தொழிலாளர் விழாவாகவே நடைபெறுகிறது. சரித்திரப் பிரசித்தி பெற்ற உரையை நிகழ்த்தினார் அண்ணா.
இப்படித் திராவிட இயக்கம் தொழிலாளர்களின் உரிமைப் போர்க்கொடியை
உயர்த்தியது மட்டும் அல்ல, அவர்களுக்காகப் போராடி வந்து இருக்கின்றது. அதனால்தான், மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார் அண்ணா. அப் போது சிதம்பரம் பூங்காவில் அவர் ஆற்றிய உரையை இங்கே அவைத் தலை வர் அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்கள் நினைவு படுத்தினார்.
அண்ணாவின் வார்ப்புகள் நாங்கள். மே தினத்துக்கு அகில இந்திய அளவில்
விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் மாநிலங்கள் அவைத் தலைவர். 1990 ஆம் ஆண்டு ஏப் ரல் 30 ஆம் நாள் வியாழக்கிழமை.அவரது அறைக்குச் சென்றேன். ‘ஐயா,இன்று, பிரதமர் கேள்வி நேரத்தின் போது அவைக்கு வருகிறார். கேள்வி நேரம் முடிந்த வுடன் என்னைப் பேச அனுமதியுங்கள். ஒரு முக்கியமான பிரச்சினையைப் பேச விழைகிறேன்’ என்றேன். அவர் என்னை மிக நேசித்தவர். நான் அவரிடம் மிகுந்த அன்பு பாராட்டியவன். அவர் அனுமதி அளித்தார்.
அப்போது பிரதமர் வி.பி.சிங். பிரதமர் அவர்களே, நாளை மே தினம். அதை விடு முறை நாளாக நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.இந் தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களுள் ஒருவரான குருதாஸ் தாஸ் குப் தா அவர்களிடம் முன்பே எனது கோரிக்கையை நீங்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தேன். அவரும் ஆதரித்துப் பேசினார்.
ஜனதா தளம் கட்சியின் கமல் மொரார்க்கா ஆதரித்துப் பேசினார்.அதன்பிறகு, பிரதமர் எழுந்து சென்று விட்டார். நான் உடனடியாக இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு, செளத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றேன். அவர் ஜப்பானியக் குழுவோடு பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள் அவசரமாக பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று,பிரதமரின் செயலாளரிடம் கேட்டுக்கொண்டேன். ஜப்பானியக் குழுவினர் விடைபெற்றுச் சென்றவுடன் எங்களை அழைத்தார்.
மே தின விடுமுறையை இன்றே நீங்கள் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். தொழிலாளர் நலத்துறை
அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்,பிற்பகலில் இரண்டு அவைகளுக் கும் வந்து, மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். இது ஒரு சாதனை அல்ல; செய்ய வேண்டிய கடமை. செய்த பணிகளில் ஒன்றாக அதை இங்கே சுட்டிக் காட்டுகிறார்கள்.
நவரத்தினங்களுள் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார்
மயமாக்க முயன்றார்கள். ஏறத்தாழ 30,000 தொழிலாளர்களின் வாழ்வில் இடி விழும் நிலைமை. பொதுத்துறை நிறுவனங்களுள் அரசுக்குப் பெரும் இலாபத் தைக் கொடுக்கின்ற நிறுவனம்.வடநாட்டுப் பெருமுதலாளிகள் கைப்பற்ற முயன்றார்கள். மத்திய அரசு தன் பங்குகளை விலக்கிக் கொள்ளுகின்ற நிலை மை. அதை எதிர்த்துப்போராட்டம் எழுந்தது. அனைத்துத்தொழிற்சங்கங்களும் போராடினார்கள்.நாடாளுமன்றத்தில் மூன்று முறை கேள்விகள் எழுப்பப்பட் டன. ஆயினும் முடிவு மாறவில்லை.
நான் 23 தொழிற்சங்கங்கள் கையெழுத்து இட்ட, பிரதமருக்கு எழுதப்பட்ட கோரிக்கை மனுவை ஆருயிர்த்தம்பி செந்திலதிபன் அவர்கள்,அதிகாலை நேரத்தில்,சென்னை விமான நிலையத்தில் என்னிடம் கொண்டு வந்து கொடுத் தார். நாடாளுமன்றத்தில் நான் கோரிக்கை வைத்தேன். அனைத்துக்கட்சிகளும் ஆதரித்தார்கள். அந்தத்துறையின் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர் களைச் சந்தித்தேன்.ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டது; இனி எதுவும் செய்ய முடியாது.ஒருவேளை பிரதமர் தலையிட்டால்தான் முடியும் என்றார்.
இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது; இது தனியார் கைகளுக்குப் போய்த்தான்
தீரும் என்று, அன்றைக்குத் தமிழகத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் கைவிரித் த நிலையில், எல்லா ஏற்பாடுகளும் முடிந்து கையெழுத்தாக இருந்த நிலை யில், நான் பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்தேன்.
தீரும் என்று, அன்றைக்குத் தமிழகத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் கைவிரித் த நிலையில், எல்லா ஏற்பாடுகளும் முடிந்து கையெழுத்தாக இருந்த நிலை யில், நான் பிரதமர் வாஜ்பாய் அவர்களைச் சந்தித்தேன்.
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வைக்காப்பாற்றித் தாருங்கள்; அரசுக்கு லாபம் ஈட்டித் தருகின்ற நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியா ருக்குத் தாரை வார்ப்பதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று கோரிக்கை வைத் தேன். இன்னும் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன்.அவை எல்லாவற்றையும் இங்கே எடுத்துக்கூற இயலாது. அவரிடம் உரிமையோடு பேசக்கூடியவன் நான்.
அப்படித்தான்,எங்கள் விடுதலைப்புலிகளுக்கு வருகின்ற கப்பல்களை கடலில் மறிப்பதற்கு, இந்தியக்கடற்படைக்கு என்ன வேலை? என்று அவரிடம் கேட் டேன். அதை என் நாள்குறிப்பில் எழுதி வைத்து இருக்கின்றேன். அந்தக் கப்பல் களில்,பால் பவுடர் இருக்கின்றது, துணிகள் இருக்கின்றன. ஆயுதங்களே இருந் தாலும், அதைத் தடுக்க நீங்கள் யார்? சீனாவும், பாகிஸ்தானும் சிங்களவனுக்கு ஆயுதங்கள் கொடுக்கின்றன என்று, நீங்கள்தானே கூறினீர்கள். இரண்டு கப்பல் களில் ஆயுதங்கள் போயிருப்பதாகக் கூறினீர்களே, அப்படியானால் தங்கள்
தாயக விடுதலைக்குப் போராடுகின்ற விடுதலைப்புலிகளுக்கு நீங்கள் ஆயுதங் கள் கொடுப்பீர்களா? கொடுக்க முடியாது. நெல்சன் மண்டேலா நான் ஆயுதம் ஏந்தினேன் என்று நீதிமன்றத்தில் கூறினாரே? உலகத்தில் எத்தனையோ நாடு களில் விடுதலை இயக்கங்கள் ஆயுதம் ஏந்திப் போராடி இருக்கின்றனவே என்று கேட்டேன்.இனிமேல் இந்தியக் கப்பற் படை அங்கே தலையிடாது என்று உறுதி அளித்தார்.அந்தப் பேருதவியைச் செய்தார்.

அதேபோலத்தான், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார் மயமாகாது என்று
என்னிடம் உறுதி அளித்தார். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ் வில் ஒளி ஏற்றி வைத்த கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
(கைதட்டல்). அன்றைய ஆளுங்கட்சியைத் தவிர, அனைத்துத் தொழிற்சங்கங் களும் என்னை நெய்வேலிக்கு அழைத்துப் பொதுக்கூட்டம் நடத்தி, நன்றியும் பாராட்டும் தெரிவித்ததை இன்றைக்கு நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
(கைதட்டல்). அன்றைய ஆளுங்கட்சியைத் தவிர, அனைத்துத் தொழிற்சங்கங் களும் என்னை நெய்வேலிக்கு அழைத்துப் பொதுக்கூட்டம் நடத்தி, நன்றியும் பாராட்டும் தெரிவித்ததை இன்றைக்கு நான் எண்ணிப் பார்க்கின்றேன்.
தொழிலாளர்களின் நலன்களுக்காக நாங்கள் போராடுகின்றோம். நாட்டு மக் களின் நலன்களுக்காகப்போராடுகின்றோம்.அதற்காகத்தான் பொது வாழ்வுக்கு வந்தேன், அண்ணாவின் இயக்கத்துக்கு வந்தேன். இன்றைக்குத் தமிழகத்தைப் பலமுனைகளிலும் சூழ்ந்து இருக்கின்ற ஆபத்துகளில் இருந்து காப்பதற்காகப் போராடு கின்றோம். தொடர்ந்து எங்கள் கடமையைச் செய்து கொண்டேஇருப் போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.
No comments:
Post a Comment