கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில், பெங்களூரில் 18.10.2009 அன்று நடைபெற்ற, ‘தமிழ் ஈழ விடுதலை ஆதரவு’ மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்புரை
ஆற்றினார், கழகப் பொதுச் செயலாளர் வைகோ. அவரது உரையில் இருந்து...
கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் முன்னெடுத்து நடத்துகின்ற இந்த மாநாட் டில், இந்தப் பரந்த மைதானத்தில், எரிமலையின் சீற்றத்தை நெஞ்சிலே தேக்கி யவாறு நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். உணர்ச்சி ததும்புகிற இந்த மாநாட் டில், பல்லாயிரக்கணக்கிலே திரண்டு இருக்கின்றீர்கள். உங்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
ஈழத்திலே நமது சொந்த உறவுகள், குற்றுயிரும் குலையுயிருமாக வதைபடு கின்ற நேரத்தில், மனித நேயத்தோடு, அந்தக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று உங்களோடு சேர்ந்து குரல் கொடுத்த கன்னட சகோதரர் களுக் கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பல்லாயிரக்கணக்கில் உணர்ச்சிப் பிழம்பாகத் திரண்டு இருக்கிறீர்கள். திகைப் பும், வியப்பும் மேலிடுகின்றன. எங்கு நோக்கினும் இளைஞர் கூட்டம், வாலிபப் பட்டாளம்.உங்களைப் பார்க்கின்றபோது, என் மனதில் மிகுந்த நம்பிக்கை எழு கிறது. இது தமிழர்க்கு இருள் குவியும் நேரம்.ஆனால், இதுவே நமக்கு நேர்த் தியான நேரம். It is our darkest hour; but, It is also our finest hour.
மார்ச் மாதம் 1 ஆம் தேதி, கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்து இருந்த கண்டனப் பேரணியில் நான் கலந்து கொள்ள ஆயத்தமாகிக் கொண்டு இருந்த வேளையில், வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்று இருந்த பிரணாப் முகர்ஜி, கொலைபாதகன் இராஜபக்சேயின் ஊதுகுழலாகப் பொய் உரைத்து, தமிழர்களுக்கு வஞ்சகம் இழைத்த கொடுமையைக் கண்டித்து, அலைபாயும் கடலோரம் முத்துநகரில், கருங்கொடி ஏந்திய கண்டனப் போராட் டத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டைச் சிறைக் கொட்டடியில் பூட் டப்பட்டதால், அன்றைக்கு உங்களைச் சந்திக்கின்ற வாய்ப்பை நான் பெற
முடியவில்லை.
இந்த நானிலத்தில் நாதியற்றுப் போய்விடவில்லை ஈழத்தமிழ் இனம் என்பதை உணர்த்துகின்ற வகையில், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்து இருக் கின்ற கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கத்துக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பூமிப்பந்திலே பல்வேறு நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் ஒன்றை மறந்து விடக் கூடாது. யூதர்கள் இப்படித்தான் சிதறிக் கிடந்தார்கள். வேட்டையாடப்
பட்டார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்தது அவர்களுடைய துய ரம். அவர்களுக்கு, ஒருவர் பேசுகின்ற மொழி இன்னொருவருக்குத் தெரியாது.

நம்முடைய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகின்ற இராசன் அவர்கள் குறிப்பிட் டதைப்போல, உணர்ச்சி உள்ள தமிழர்களின் உள்ளங்கள் எரிதழலாக மாறு கின்ற காட்சியைப் பார்க்கிறேன். இந்த இருள் நீடிக்க முடியாது. உலகமெல் லாம் வாழுகின்ற தமிழர்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கின்ற வேளையில் உங்க ளை நான் பெங்களூருவில் சந்திக்கின்றேன்.
வீர வணக்கம் தெரிவிக்கின்ற வேளையில் குறிப்பிட்டீர்கள். 26 ஆண்டுகளுக்கு முன்னர், 1983ஆம் ஆண்டு, கோலார் தங்கவயலில் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு. தேளும், பாம்பும், நட்டுவாக்காலியும் கிடக்கின்ற அடர்ந்த காடுகளுக்கு உள்ளே நுழைவதற்கு எவரும் சித்தமாக இல்லாத வேளையில், தமிழர்கள்
அங்கே வந்தனர். உயிரைப் பற்றிக் கவலைப்படாமல்,அஞ்சாமல் உழைத்துச் சுரங்கம் வெட்டினர். மண்ணுக்கு உள்ளே கிடக்கின்ற தங்கத்தை வெட்டி எடுத் துத் தந்தனர். இந்த மண்ணைப் பொன் விளையும் பூமியாக ஆக்கினர்.
அப்படி உழைத்த தமிழர்களுக்கு, குண்டாந்தடியும்,துப்பாக்கிச் சூடும் பரிசாகக் கிடைத்தபோது, தமிழர்கள் அங்கே இரத்தம் சிந்தியபோது, அந்தச் செய்தி ஒரு
நள்ளிரவு நேரத்திலே எனக்குத் தொலைபேசியிலே பெங்களூருவில் இருந்து தமிழர்கள் தெரிவிக்க,நாடாளுமன்றம் கூடியபோது, சபையை நடத்தவிடாமல்,
போர்க்குரல் எழுப்பிய வைகோதான் இன்றைக்கு உங்கள் முன்னாலே நிற் கின்றான்.
கன்னட சகோதரர்களே! உரிமைகளுக்காகப் போராடுவது வேறு. எங்கள் உரி மை களை நிலைநாட்டிக் கொள்ளப்போராடுவது வேறு. தமிழகத்தில் நாங் கள் காவிரி உரிமைக்காகப் போராடுகிறோம்; ஒகேனக்கல் உரிமைக்குப் போராடு கிறோம். ஆனால், கர்நாடகத்தில் வாழுகின்ற எங்கள் தமிழ்ச் சகோதரர்கள், இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதர வாக இங்கே போராட்டங்களை நடத்துவது கிடையாது. அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அவர்கள் இந்த மண்ணுக்கு விசுவாசமாகத்தான் இருந்து வந்து இருக்கிறார்கள். அப்படித்தான் அவர்கள் இருக்க வேண்டும்.
என்னுடைய பேச்சு மொழி பெயர்க்கப்பட்டு, முதல் அமைச்சருக்குப் போகும். யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்றான் எங்கள் தமிழ்ப்புலவன். அந்த உணர் வோடுதான், தமிழர்களாகிய நாங்கள், உலகம் முழுமையும் பரவிக் கிடந் தா லும், வாழுகின்ற நாட்டுக்கு விசுவாசமாகத்தான் இருக்கிறோம். நாங்கள் நட் புக் கரங்களைப் பற்றிக் கொள்பவர்கள்; விருந்தோம்பும் பண்பு நிறைந்தவர்கள். நண்பர்களின் கண்ணீரைத் துடைப்பவர்கள், மனிதநேயம் மிக்கவர்கள்.
கர்நாடகத்தில் வாழுகின்ற என் தமிழ்ச் சகோதரர்களே,நீங்கள் இங்கே பாது காப் பாக இருக்க வேண்டும், நலமாக இருக்க வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அதைத்தான் நான் விரும்புகிறேன். சில வேளைகளில்,சில கன்னட அமைப்புகள் நம்மீது ஆத்திரம் காட்டுகிற போதுகூட, வேற்றுமையை விதைக் கிற போதும்கூட, நீங்கள் அந்த உணர்ச்சிக்கு இடம் கொடுத்து விடக்கூடாது. ஒரு சகோதரனாக, உங்கள் நலனில் அக்கறை உள்ளவனாக நான் கேட்டுக் கொள்கிறேன்.இதைத்தான், இங்கே உள்ள கட்சிகளின் அரசியல் தலைவர் களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
எங்கள் தமிழ்ச் சகோதரர்கள், இந்த மண்ணுக்காக உழைத்து இருக்கிறார்கள். மண்ணைப் பொன்னாக்கி இருக்கிறார்கள். கர்நாடகம் ஏற்றம் பெறுவதற்காகத்
தங்கள் உழைப்பைத் தந்து இருக்கிறார்கள்.அவர்கள் நலனில் நாங்கள் அக் கறை கொண்டு உள்ளோம்.

நாங்கள் வீரம் மிக்கவர்கள், மரணத்துக்கு அஞ்சாதவர்கள். மானத்துக்காக உயி ரைத் தருவோம். அப்படிப் பட்டமான உணர்ச்சி உள்ள கூட்டம்தான், இங்கே
வாழுகின்ற என் தமிழ்ச் சகோதரர்கள். அவர்கள், உங்கள் சகோதரர்கள். வெள் ளத் தால் பாதிக்கப்பட்ட கன்னட சகோதரர்களுக்கு உரிய உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய இந்தியா ஆயுதம் வழங் கியது; ரடார் கொடுத்தது;இராணுவ நிபுணர்களை அனுப்பி உதவியது. புலி களின் கப்பல்களை நடுக்கடலில் தகர்த்தது. அவர்களுடைய ஆயுதங்கள்,அவர் களுடைய படை அணிகள் இருக்கின்ற இடங்களை, செயற்கைக் கோளில் இருந்து படமாக எடுத்து, சிங்களவனுக்குத் துப்புக் கொடுத்து உதவியது. இந்தி யக் கடற்படை, தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வில்லை. சிங்களக் கடற் படை யின் கூலிப்படையாகவே செயல்பட்டு வருகிறது. இத்தனை துரோகங் களை இந்தியா செய்தது.
ஆனால், ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் என்ன சொல்லுகிறது? இலங்கை யில் மனித உரிமைகள் மீறப்பட்டு உள்ளன. லட்சக்கணக்கான தமிழர்களைக்
கொன்று குவித்து விட்டாய்; மூன்று லட்சம் தமிழர்களை வதை முகாமில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்கிறாய். இந்த நிலை நீடிப்பதால் அப்பா வித்தமிழர்களைப் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து இருக்கிறார்கள். எனவே, இலங்கைக்குப்பொருளாதாரத் தடை விதிப்பது பற்றிப் பரிசீலிப்பதாக,
இன்றைய மாலை ஏடுகளில் செய்தி வந்து இருக்கிறது.அதற்கு முன்பாக, இலங்கையில் இருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படுகின்ற ஆடை களுக்கு இதுவரையிலும் வரிச்சலுகை, வரி விலக்கு கொடுத்து வந்ததை நிறுத் தப் போவதாக அறிவித்து இருக்கிறது.ஜி.எஸ்.பி. பிளஸ் என்கிற அந்த வரி விலக்கின் மூலம் 2.4 பில்லியன் டாலர்கள் இலாபம் இலங்கைக்குக் கிடைக் கும். அது இப்போது கிடைக்காமல் போய்விடுமோ என்று கருதித்தான், மன் மோ கன் சிங்கோடு திட்டம் போட்ட ராஜபக்சே, ஒரு குழுவை அனுப்பு. அந்தக்
குழுவுக்கு நாங்கள் குறிப்பிட்ட இடங்களைக்காட்டுகிறோம் என்று திட்டம் வகுத்தான்.
அடப்பாவிகளே, தமிழர்களைக் கொன்று குவித்த கொடியவன்; சிங்களவர் களைக் கொண்டு போய், நம்முடைய தமிழர்களின் தாயகத்தில் கொண்டு போய்க் குடி அமர்த்துவேன் என்று கொக்கரிக்கின்ற சிங்களவன்;அப்படிப்பட்ட கொடியவன் ராஜபக்சேவின் அரண்மனையில், அவன் சக்கரவர்த்தியைப் போலக் கால்மேல் கால் போட்டுக் கொண்டு, ஆணவத்தோடும்,திமிரோடும் பேச, ஏளனம் செய்ய, எக்காளமிட, அவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு இங்கே வந்து, சர்வதேச விதிகளின்படி முகாம்கள் இருக்கின்றன என்று அறிக்கை
விட்டு இருக்கிறீர்களே, இது துரோகத்துக்கெல்லாம் துரோகம்! இலட்சக் கணக் கான தமிழர்களைக் கொன்று குவித்தவன், கொலைகாரன் ராஜபக்சேவின் கை களையா பற்றுகிறீர்கள்? ரத்தம் கொதிக்கவில்லையா?

துரோகத்துக்கெல்லாம் துரோகம்!

இந்தியாவின் பகைவன் யார்?
இந்தியாவின் பகைவன் என்று பாகிஸ்தானைக்காட்டுகிறீர்களே? நான்கு முறை சண்டை வந்ததே? ஆனால், கிழக்கே செஞ்சீனம் அருணாசலப் பிரதே சத் துக்கு உள்ளே நுழைந்துவிட்டது. இந்திய ஒன்றியத்தின் முக்கியமான இரா ணுவ மையமான அருணாசலப் பிரதேசத்துத்துக்கு உள்ளே இந்தியப் பிரதமர் போகலாமா? என்று கேட்கிறான். காஷ்மீரைத் தனிநாடு என்று பிரச்சாரம் செய் கிறான்.
மறந்துவிடாதே 1962 ஐ. பண்டித நேருவஞ்சிக்கப்பட்டதை மறந்து விடாதே.
பாண்டுங் மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கையைப் பார் அறிய முழங்கிவிட்டு நேரு திரும்பி வந்ததற்குப்பிறகு, சீனாக்காரன் முதுகில் குத்தியதை மறந்து விடாதே.இன்றைக்கு அவன், அருணாசலப் பிரதேசத்துக்குச்சொந்தம் கொண் டாடுகிறான். இந்தியாவில் ஏற்படுகின்ற கலவரங்களுக்கு அவன் எல்லா உத வி யும் செய்வான். அவன், இப்போது இலங்கையில் தளம் அமைத்து விட்டான். எங்கள் இராமேஸ்வரம் மீனவர்களை, மண்டபம், நாகை, வேதாரண்யத்தில் இருந்து செல்லுகின்ற எங்கள் மீனவர்களை, சிங்களப் படகிலே வந்து சுட்டுக் கொல்லுகிறான் சீனாக்காரன்.
நாம் தமிழகத்தில் ஆறரைக் கோடித் தமிழர்கள் இருக்கிறோம். உங்களைப் போல பெங்களூரிலே, கர்நாடகத்திலே, உலகின் மற்ற பல நாடுகளிலே சித றிக் கிடக்கின்ற தமிழர்களையும் சேர்த்து நாம் ஒன்பது கோடிப்பேர் இருக்கி றோம். ஒரு சுண்டைக்காய் நாட்டுக்காரன், நாம் மூச்சு விட்டால் பறந்து போ கின் ற பதர் போல இருக்கின்ற சிங்களத்துக்காரன், நம்முடைய கடலில், நமது எல்லைக்கு உள்ளே வந்து சுடுகிறான். இன்றைக்குச் சாயங்காலமும் வந்து சுட்டு இருக்கிறான். என்ன துணிச்சல்?
இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைக் காக்க வில்லை. இலங்கைக் கடற் படையோடு சேர்ந்துகொண்டு, கடல் புலிகளை அழிப்பதற்கு மட்டும் அல்ல,
ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு மட்டும் அல்ல, நம் தாய்த் தமிழகத்து மீனவர் களையும் சுட்டுக் கொல்லுவதற்குக் கங்காணி வேலை பார்க்கிறது என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். முள்வேலி முகாம்களில் மூன்றரை
இலட்சம் தமிழர்கள் வதைபடுவதற்குக் காரணமே, இந்தியாவின் மன்மோகன் சிங் அரசுதான்! ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மன்மோகன்சிங் அரசுதான்
பொறுப்பு ஏற்க வேண்டும்.
மகாபாரத இதிகாசத்திலே, அரக்கு மாளிகைக்கு உள்ளே தீயில் சிக்கிக்கொண்ட பஞ்ச பாண்டவர்கள் அழிந்தார்கள் என்று கெக்கலி கொட்டினான் துரியோத னன். எரிந்து சாம்பலாகி விட்டார்கள் என்றான். ஆனால், அவர்கள் மீண்டு வந் தார்கள். குருசேத்திரப் போர்க்களத்துக்கு வந்தார்கள். துரியோதனன் கூட்டத் தை வீழ்த்தினார்கள், வெற்றி பெற்றார்கள்.அதைப்போல, மீண்டு வருவார்கள் விடுதலைப் புலிகள்.மீண்டும் தங்கள் புலிப்படையைக் கட்டமைத்து, பிரபா கரன் தலைமையிலே வருவார்கள், வெற்றி பெறுவார்கள்.
பாண்டுங் மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கையைப் பார் அறிய முழங்கிவிட்டு நேரு திரும்பி வந்ததற்குப்பிறகு, சீனாக்காரன் முதுகில் குத்தியதை மறந்து விடாதே.இன்றைக்கு அவன், அருணாசலப் பிரதேசத்துக்குச்சொந்தம் கொண் டாடுகிறான். இந்தியாவில் ஏற்படுகின்ற கலவரங்களுக்கு அவன் எல்லா உத வி யும் செய்வான். அவன், இப்போது இலங்கையில் தளம் அமைத்து விட்டான். எங்கள் இராமேஸ்வரம் மீனவர்களை, மண்டபம், நாகை, வேதாரண்யத்தில் இருந்து செல்லுகின்ற எங்கள் மீனவர்களை, சிங்களப் படகிலே வந்து சுட்டுக் கொல்லுகிறான் சீனாக்காரன்.
நாம் தமிழகத்தில் ஆறரைக் கோடித் தமிழர்கள் இருக்கிறோம். உங்களைப் போல பெங்களூரிலே, கர்நாடகத்திலே, உலகின் மற்ற பல நாடுகளிலே சித றிக் கிடக்கின்ற தமிழர்களையும் சேர்த்து நாம் ஒன்பது கோடிப்பேர் இருக்கி றோம். ஒரு சுண்டைக்காய் நாட்டுக்காரன், நாம் மூச்சு விட்டால் பறந்து போ கின் ற பதர் போல இருக்கின்ற சிங்களத்துக்காரன், நம்முடைய கடலில், நமது எல்லைக்கு உள்ளே வந்து சுடுகிறான். இன்றைக்குச் சாயங்காலமும் வந்து சுட்டு இருக்கிறான். என்ன துணிச்சல்?
இந்தியக் கடற்படை தமிழக மீனவர்களைக் காக்க வில்லை. இலங்கைக் கடற் படையோடு சேர்ந்துகொண்டு, கடல் புலிகளை அழிப்பதற்கு மட்டும் அல்ல,
ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு மட்டும் அல்ல, நம் தாய்த் தமிழகத்து மீனவர் களையும் சுட்டுக் கொல்லுவதற்குக் கங்காணி வேலை பார்க்கிறது என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். முள்வேலி முகாம்களில் மூன்றரை
இலட்சம் தமிழர்கள் வதைபடுவதற்குக் காரணமே, இந்தியாவின் மன்மோகன் சிங் அரசுதான்! ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும் மன்மோகன்சிங் அரசுதான்
பொறுப்பு ஏற்க வேண்டும்.
மகாபாரத இதிகாசத்திலே, அரக்கு மாளிகைக்கு உள்ளே தீயில் சிக்கிக்கொண்ட பஞ்ச பாண்டவர்கள் அழிந்தார்கள் என்று கெக்கலி கொட்டினான் துரியோத னன். எரிந்து சாம்பலாகி விட்டார்கள் என்றான். ஆனால், அவர்கள் மீண்டு வந் தார்கள். குருசேத்திரப் போர்க்களத்துக்கு வந்தார்கள். துரியோதனன் கூட்டத் தை வீழ்த்தினார்கள், வெற்றி பெற்றார்கள்.அதைப்போல, மீண்டு வருவார்கள் விடுதலைப் புலிகள்.மீண்டும் தங்கள் புலிப்படையைக் கட்டமைத்து, பிரபா கரன் தலைமையிலே வருவார்கள், வெற்றி பெறுவார்கள்.
பூமிப்பந்திலே பல்வேறு நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் ஒன்றை மறந்து விடக் கூடாது. யூதர்கள் இப்படித்தான் சிதறிக் கிடந்தார்கள். வேட்டையாடப்
பட்டார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்தது அவர்களுடைய துய ரம். அவர்களுக்கு, ஒருவர் பேசுகின்ற மொழி இன்னொருவருக்குத் தெரியாது.
யூகோஸ்லோவியாவில் இருந்த யூதன் பேசுவது,ஃபின்லாந்து நாட்டிலே வாழ்ந் த யூதனுக்குப் புரியாது. பிரெஞ்சு நாட்டு யூதன் பேசுவது, சுவிட்சர்லாந்து நாட்டு யூதனுக்குப் புரியாது. யூத மொழியை மறந்தேவிட்டார்கள். ஆயினும் அவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். படை அமைத்தார்கள். ஆயுதம் வாங்கப் பணம்
திரட்டினார்கள். இஸ்ரேல் என்ற யூதர்களின் தாயகத்தை உலக வரைபடத்தி லே உருவாக்கிக் காட்டினார்கள்.
அதுபோல, நமது தமிழ் இனம் ஒன்று சேர வேண்டும். ஈழத்தமிழர்கள் நம் கண் முன்னாலேயே அழிக்கப்பட்டு விடக் கூடாது. அது அவர்களது தாயகம். மானத் தோடும், உரிமையோடும் வாழ்வதற்கு உரிய மண். தமிழ் ஈழம் என்பது, இந்தி யாவுக்கு என்றைக்கும் பாதுகாப்பு அரணாகத்தான் இருக்கும். இன்றைக்கு இலங்கையிலே சீனர்கள் உள்ளே நுழைந்துவிட்டார்கள். பாகிஸ்தானும் நுழைந்து விட்டது. எதிர்காலத்தில், இந்தியாவுக்குத் தெற்கில் இருந்தும் ஆபத் து வரப் போகிறது. சிங்களவன் என்றைக்கும் உனக்கு நண்பனாக இருக்க மாட் டான். இந்த நிலையில், ஈழத்தில் நமது சொந்தச் சகோதர சகோதரிகளை நாம் பாதுகாப்போம். அவர்களது தாயகத்தை வென்று எடுப்பதற்குத் துணை நிற்போம்!
ஓ இளைஞனே வா
தமிழ் இளைஞனே வா
ஈழத்து இளைஞனே வா
நமது பட்டயம் உயரட்டும்; நமது முரசம்ஒலிக்கட்டும்
come all with cold steel
ஆயுதங்களோடு வாருங்கள்;
come all with hot fire
நெருப்புத் தழலோடு வாருங்கள்
Come all with the spirit of Eelam’s desire
விடுதலை தாகத்தோடு வாருங்கள்
Be gone from Eelam O aggressor Be gone
ஓ ஆக்கிரமிப்பாளனே, ஈழத்தை விட்டு வெளியேறு!
மடிந்த மாவீரர்களின் கல்லறைகள் மீது ஆணை.
தமிழ் இனக்கொலை செய்த கொடியவன் ராஜபக்சேயை,பன்னாட்டுக் குற்ற வாளிக் கூண்டிலே நிறுத்துவோம். நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜிகள்
நிறுத்தப்பட்டதைப் போல, சர்வதேச நீதிமன்றத்தில் சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் நிறுத்தப்பட்டதைப்போல, ரத்த வேட்டையாடிய நம் குலப்பகைவர்களைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம். அதுவரை தமிழர்களுக்கு ஓய்வு இல்லை!
வைகோ இவ்வாறு உரையாற்றினார்.

Oh Youth of our land come,follow, join them
bring up the banner and marshal our band
நமது பட்டயம் உயரட்டும்; நமது முரசம்ஒலிக்கட்டும்
come all with cold steel
ஆயுதங்களோடு வாருங்கள்;
come all with hot fire
நெருப்புத் தழலோடு வாருங்கள்
Come all with the spirit of Eelam’s desire
விடுதலை தாகத்தோடு வாருங்கள்
Be gone from Eelam O aggressor Be gone
ஓ ஆக்கிரமிப்பாளனே, ஈழத்தை விட்டு வெளியேறு!
மடிந்த மாவீரர்களின் கல்லறைகள் மீது ஆணை.
தமிழ் இனக்கொலை செய்த கொடியவன் ராஜபக்சேயை,பன்னாட்டுக் குற்ற வாளிக் கூண்டிலே நிறுத்துவோம். நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜிகள்
நிறுத்தப்பட்டதைப் போல, சர்வதேச நீதிமன்றத்தில் சூடான் அதிபர் ஒமர் அல் பசீர் நிறுத்தப்பட்டதைப்போல, ரத்த வேட்டையாடிய நம் குலப்பகைவர்களைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவோம். அதுவரை தமிழர்களுக்கு ஓய்வு இல்லை!
வைகோ இவ்வாறு உரையாற்றினார்.
No comments:
Post a Comment