Thursday, May 9, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 23

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே.


‘வரலாறு சரியான தீர்ப்பை எழுதும்’

தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமர் ஆனவுடன், ஈழப்பிரச்சினையில்
முந்தைய ராஜீவ் அரசின் கொள்கைகள் தூக்கி வீசப்பட்டு, இந்திய அமைதிப் படை யும் படிப்படியாக இந்தியா திரும்பியது. ஆட்சியை இழந்த முன்னாள்
பிரதமர் ராஜீவ்காந்தி, தொடர்ந்து விடுதலைப்புலிகளைக் கொச்சைப்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தது மட்டுமின்றி, இந்தியாவில் பஞ்சாப், அசாம் தீவிர வாத இயக்கங்களுக்கும் விடுதலைப்புலிகள் தமிழ்நாடு வழியாக ஆயுதங்கள்
கொடுத்து வருவதாக பயங்கரமான குற்றச்சாட்டுகளைக் கூறினார். அப்போது
தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு மீது கடும்பழி சுமத்து வதன் மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்தும் இச்செயலில் ஈடுபட்டார்.


ராஜீவ்காந்தியின் இத்தகையப் போக்கை மிகக் கடுமையாகக் கண்டித்தவர்
தலைவர் வைகோ ஒருவரே. முதல்வர் பொறுப்பில் இருந்த கலைஞர் கருணா நிதியோ, டில்லியில் வி.பி.சிங் அமைச்சரவையில் அமைச்சர் பதவி வகித்த முரசொலி மாறனோ, காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தியின் அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கடுமையான முறையில் வெகுண்டெழுந்து பதிலடி கொ டுக்காமல், “வாய்மூடி மெளனிகளாகவே” இருந்தனர்.ஆனால்,விடுதலைப் புலிகள் மீதும், தி.மு.க. ஆட்சி மீதும் ராஜீவ்காந்தி சுமத்திய குற்றச்சாட்டு களை த் தகர்த்து தவிடுபொடி ஆக்கிடத் துடித்தவர் தலைவர் வைகோ. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு பதிலடி கொடுத்து 1990, ஜூலை 26 இல் தலைவர் வைகோ கொடுத்த அறிக்கையே இதற்குச் சான்று:-

“அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து தி.மு.கழகத்தின் மீது தெரிவித் துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீய நோக்கம் கொண்ட பயங்கரமான கற் பனைக் கலந்த அப்பட்டமான பொய்களாகும்’.

இந்திராகாந்தி வழங்கிய ஆயுதம்

இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கும், மற்ற போராளி இயக்கங்களுக்கும்
முகாம்களை அமைத்துக் கொடுத்தது இந்திரா காங்கிரஸ் ஆட்சிதான் என்பதை
எவரும் மறுக்க முடியாது.உத்திரப் பிரதேசத்தில் தமிழ்ப்போராளிகளுக்கு, மத் தியில் இந்திரா காங்கிரஸ் ஆட்சி இருந்த போது முகாம்கள் அமைக்கப் பட் டு ஆயுதப்பயிற்சியும் கொடுக்கப்பட்டது. உத்திரப்பிரதேசத்தில்‘அல்மோரா’ என் னுமிடத்தில் இத்தகைய பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. 1986 ஆம் ஆண்டுக்கு முன் போராளி இயக்கங்களுக்கு இந்திரா காங்கிரஸ் அரசு ஆயுதங்கள் வழங் கிய உண்மையை ஆணித்தரமான ஆதாரங்கள் மூலமும், அசைக்க முடியாத சாட்சியங்கள் மூலமும் நிரூபிக்க முடியும்.

1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் போஃபர்ஸ் பிரச்சினை வெடித்தவுடன் அதிர்ச் சிக்குள்ளான ராஜீவ்காந்தி, அதிலிருந்து இந்த நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக,இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவோடு பேசி ஏற்படுத் திய ‘கொழும்பு ஒப்பந்தம்’ ஈழத்தமிழர்களுக்கு எந்த நீதியையும் வழங்க வில் லை. மாறாக ஈழத்தமிழர்களுடைய பலம் வாய்ந்த விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்கும் நோக்கத்துடன் இந்திய இராணுவத்
தாக்குதல் ராஜீவ்காந்தியினுடைய தனிப்பட்ட குரூர மனப்பான்மை காரண மாக நடத்தப்பட்டது. ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய சகோத ரர்களே அவர்களைத் தாக்கும் வேதனை நிறைந்த திருப்பத்திற்கு ராஜீவ்காந்தி தான் முழு முதற் காரணம்.

ராஜீவ்காந்தியின் உள்நோக்கம்

கோடி கோடியாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துக்கு ராஜீவ்காந்தி அரசு பணத்தை அள்ளித்தந்ததுடன் எண்ணற்ற கோடி ரூபாய் மதிப்புள்ள நவீன ஆயுதங்களை ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்துக்கும், இந்திய அரசு உருவாக்கிய தமிழ் தேசிய
இராணுவத்திற்கும் கொடுத்ததற்கு மத்திய அரசின் கோப்புகளில் கணக்கற்ற
ஆதாரங்கள் இருக்கின்றன. போஃபர்ஸ் பீரங்கிக் கம்பெனியிடமிருந்து இந்திய
இராணுவத்துக்கு என்று வாங்கிய கார்ல் கஸ்டாஃப் போன்ற நவீன ஆயுதங் கள், மார்ட்டர் பீரங்கிகள் ஏராளம், ஏராளம். இந்த அமைப்புகளுக்கு ராஜீவ்காந்தி
அரசு கொடுத்தது.

விடுதலைப்புலிகளை ஒழிப்பதற்காக மற்ற போராளி இயக்கங்களுக்கு கோடி,
கோடியாக ஆயுதங்களையும் பணமும் கொடுத்த ராஜீவ்காந்தி தற்போது இலங்கைத் தமிழர் குலமே பூண்டோடு அழிந்துவிடுமோ என்று அஞ்சத்தக்க
அளவுக்கு பேரபாயத்தில் தமிழனம் சிக்கித்தவிக்கும் போது, சிங்கள அரசின்
முப்படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க போதிய ஆயு தங்கள் புலிகளிடம் இல்லாத சூழ்நிலையில், பஞ்சாப் பயங்கரவாதிகளும், புலி களும், தி.மு.க.வும் ஆயுதம் தருவதாக குற்றம் சாட்டியிருப்பது ராஜீவ்காந்தி யின் உள்நோக்கத்தைத்தெளிவாகப் புலப்படுத்துகிறது.

வெந்த புண்ணிலே வேல்

இரவென்றும் பகலென்றும் பாராமல் சிங்கள இராணுவ விமானங்கள் தமிழர் பகுதிகளில் குண்டுகளை வீசி வீடுகளைத் தரைமட்டமாக்கி அப்பாவித் தமிழர் களைக் கொன்று குவிக்கின்றனர்.தெருவெல்லாம் பிணங்கள், எங்கு பார்த் தா லும் மரண ஓலம். சிங்கள அரசின் பொருளாதார முற்றுகையில் தமிழீழத்தில் பட்டினிச்சாவுகள். ஐயோ,நினைக்கவே நெஞ்சம் நடுங்குகின்றது.குண்டு வீசும் விமானங்களை எதிர்க்கத் தமிழனுக்கு ஆயுதமில்லை. வேதனை நெருப்பில் தமிழர்களின் உள்ளம் வெந்து கொண்டிருக்கும் போது அதிலே ராஜீவ்காந்தி வேல் பாய்ச்சுகிறார்.

ராஜீவ்காந்தியின் உள்நோக்கம் புரிகின்றது. புலிகள் கூண்டோடு ஒழிக்கப்பட வேண்டும். தமிழர்களின் அந்தக் காவல் அரண் தகர்க்கப்பட்டு விட்டால், அதன் பின் தமிழீழம் சுடுகாடாகும். மிச்சம் மீதியிருக்கின்ற தமிழர்கள் காலாகாலத் திற்கும் சிங்களவர்களின் கொத்தடிமைகளாக்கப் படுவார்கள். இத்தகைய விப ரீதம் நேர்ந்தால், தமிழீழம் மயான பூமியானால் இதற்கெல்லாம் தேசிய முன் னணி அரசுதான் காரணம், தி.மு.க. அரசுதான் காரணம் என்ற பயங்கரமான
பிரச்சாரத்தை நடத்தலாம். தமிழர்களின் கண்ணீரிலும், இரத்தத்திலும் ராஜீவ் காந்தி அரசியல் நீச்சல் அடிக்கத் துடிக்கிறார். இல்லையேல் பஞ்சாப் பயங்கர வாதிகளுக்கு தி.மு.க.வும், விடுதலைப்புலிகளும் ஆயுதம் தர ஏற்பாடு என்று நாக்கூசாமல் காங்கிரஸ் மேடையில் பேசுவாரா?

பாகிஸ்தான் ஆயுதங்கள்

இந்தியாவுக்கு என்றுமே உற்ற நண்பர்களாக இருக்கக்கூடிய ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு பாகிஸ்தான் சிங்கள அரசுக்கு ஆயுதங்களைத் தருகின்றது. பிரத மர் மகுடத்தை இழந்துவிட்ட காரணத்தினால் வெறிபிடித்த மனப்பான்மை யோடு ராஜீவ்காந்தி விபரீதமாகப் பேசிவருகிறார். மனசாட்சியைக் கொன்று விட்டு மனிதாபிமானத்தைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ராஜீவ்காந்தி தி.மு.க.அரசு மீதும், விடுதலைப்புலிகள் மீதும் விஷத்தைக்கக்கி இருப்பது தாங்க முடியாத வேதனையைத் தருகிறது.

முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள கலைஞர் கருணாநிதி ராஜீவ் காந் தியின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய முறையில் பதிலடி தராமல் போனதன் விளைவு, தி.மு.க. அரசு மீது ராஜீவ்காந்தி மேலும் மேலும் புகார் கூறத் தொடங் கினார்.

வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது

மத்தியில் பொறுப்பேற்றிருந்த வி.பி.சிங் அரசுக்கு பா.ஜ.க கொடுத்து வந்த ஆத ரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவை பத வி விலகியது. இந்திய சரித்திரத்தில், கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக் க ளுக்கு சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், மண்டல் குழு அறிக்கையை
நடைமுறைப்படுத்த வி.பி.சிங் ஆணையிட்டதும் அதனை எதிர்க்கும் விதமாக ராமர்கோவில் எழுப்புவோம் என்று பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி சோம நாதபுரத்தில் இருந்து (குஜராத்) ரத யாத்திரையைத் தொடங்கியதும், பின்னர் பா.ஜ.க தனது 86 எம்.பிகளின் ஆதரவை திரும்பப் பெற்றதும் வி.பி.சிங் அரசு கவிழக் காரணமாயிற்று.

மத்தியில் காங்கிரஸ் பதவி ஏற்க முடியாத நிலையில் சந்திரசேகர் பிரதமராகப்
பொறுப்பேற்க, ராஜீவ்காந்தி ஆதரவு தெரிவித்தார். காங்கிரஸ் ஆதரவுடன் சந் திரசேகர் அமைச்சரவை 1990, நவம்பர் 10இல் பதவி ஏற்றது.

ராஜீவின் விஷமப்பிரச்சாரம்

தனது ‘கைப்பாவை’ஆட்சி பிரதமர் சந்திரசேகர் தலைமையில் அமைந்த உடன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தனக் கிருந்த வெறுப்பைக் கொட்டித் தீர்த்தார். புலிகள் மீது புகார் கூறியது மாத்திர மல்ல, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக சந்திரசேகரிடமும், காங் கிரஸ் கட்சியிடமும், தெண்டனிட்டுக் கிடந்த கலைஞர் கருணாநிதி மீதும் புகார் கூறி, தி.மு.க ஆட்சியைக் கலைக்க வலியுறுத்தி வந்தார். புலிகளைத் தொடர்புபடுத்தி தி.மு.க அரசைப் பதவி நீக்கம் செய்ய, ராஜீவ்காந்தி சதித்திட் டம் தீட்டியபோது அதையும் கண்டித்து நாடாளுமன்றத்தில் எரிமலையானவர் தலைவர் வைகோ தான்.

1991, ஜனவரி 8 ஆம் நாள், மாநிலங்கள் அவையில், அசாமில் குடியரசுத்தலை வர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது குறித்த விவாதத்தில் தலைவர் வைகோ
உரையாற்றியபோது, மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

ஜனநாயகப் படுகொலை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்துவிட்டு அசாமில் குடிய ரசுத்தலைவர் ஆட்சியைப் பிரகடனம் செய்தது மத்திய அரசு செய்த ஜனநாய கப்படுகொலை ஆகும். இந்திய அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு ஜனநா யகத்தை வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படும் கொலைக் கருவியாக இடம் பெற்றிருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகை யில் மாநில அரசுகளை வஞ்சகமான அரசியல் நோக்கத்திற்காக கலைப்பது
தொடர்ந்து கொண்டேயிருப்பது இந்தியாவின் ஒற்றுமைக்கே உலை வைப்ப தாகும்.

மாநிலங்கள் மத்திய அரசின் காலனிகள் அல்ல. மாநில சுயாட்சி உரிமையை
மத்திய அரசு தடைசெய்ய முடியாது.இந்திய அரசியல் சட்ட அமைப்பின் உத்தி ரவாதத்துடன் சுயாட்சி உரிமைகள் வழங்கப்படுவதைத் தடுக்க எந்த நியாய மும் இல்லை. இதை மறந்துவிட்டு நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு என்று
சொல்லிக் கொண்டு வஞ்சம் தீர்ப்பதற்காக மாநில அரசுகளைப் பந்தாடும் போக்கு நீடிக்குமானால் ஒருமைப்பாடு நிச்சயமாகக் கேள்விக்குறி ஆகும்.

பஞ்சாப் தீவிரவாதம் வளர்ந்தது ஏன்?

பஞ்சாபில் நடந்தது என்ன? ‘அகாலி தளத்தலைவர் பர்னாலா முதலமைச்சர்
ஆக இருந்தார். குடியரசுத்தலைவர் உரையில் பர்னாலா அரசுக்கு பாராட்டு களைக் கூட ராஜீவ் அரசு கொடுத்தது. ஆனால், திடீரென்று பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறி பர்னாலா அரசு கலைக்கப்பட்டது. இதே மன்றத்தில் அந்த நேரத்தில் ராஜீவ்காந்தி அரசுக்கு எச்சரிக்கை செய்து நான் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.அதனை மேற்கோள் காட்டு கிறேன், “பஞ்சாப் தீவிரவாதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையில் அகாலி தள அரசு ஒரு தடுப்புச் சுவராக இருக்கின்றது.இத்தடுப்புச்சுவரை அகற்றினால்
தீவிரவாதிகளின் கை ஓங்கும்.விடுபடமுடியாத புதைமணலில் மத்திய அரசு சிக்கிக்கொள்ளும் அபாயம் நேரிடும்”.

காங்கிரஸ்காரர்களே உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அதனைக்கேளுங்கள். பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? இல்லையே! பர்னாலா அரசு கலைக்கப்பட்ட பின் பஞ்சாபில் படுகொலை களின் எண்ணிக்கை பல மடங்காகி உள்ளது.

காஷ்மீரில் நடந்தது என்ன?

காஷ்மீரத்திலும் காங்கிரஸ் இத்தகைய விபரதப் போக்கை மேற்கொண்டது.
தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி புரிவதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள
முடியவில்லை. மாநிலக்கட்சிகள் ஆட்சி நடத்துவதை காங்கிரஸ் விரும்ப வில்லை.அந்தக்கட்சிகளை முடிந்தால் பிளவு ஏற்படுத்தி இரண்டாக்குவது, பின்னர் அவற்றின் பலத்தை சிதைக்க எல்லா வழிகளையும் கையாள்வது, இதுவே காங்கிரஸ் கையாண்டு வரும் அராஜகமான அணுகுமுறை ஆகும்.

விளைவு என்ன? காஷ்மீரத்தில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக் கின்றது. அசாம் கன பரிசத் கட்சியின் ஆட்சியை காங்கிரசின் வஞ்சகத்தால்
மத்திய அரசு கவிழ்த்துள்ளது.

விடுதலைப்புலிகள் மீது அபாண்டமான பழி

இன்று காலை பிரதமர் சந்திரசேகர் பேசுகையில் அசாம் ஐக்கிய விடுதலை
முன்னணிக்கும், விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், நாட்டின் பல பகுதிகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு தமிழ் நாட்டிலிருந்து விடுத லைப்புலிகள் ஆயுதங்கள் தருவதாகவும் குற்றச்சாட்டை எழுப்பினார்.

இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு தேவைப்படும் அனைத்து நட வடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பைத் தர வும் தி.மு.க அரசு எப்போதும் தயாராக இருக்கின்றது.

கடந்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் விடுதலைப்புலி களுக் கு பயிற்சி முகாம் இருப்பதாக குற்றச்சாட்டை எழுப்பிக்கொண்டே இருந்தது.
அத்தகைய பயிற்சி முகாம்கள் இல்லை என்று தமிழக முதலமைச்சர் கலை ஞர் ஆணித்தரமாக மறுத்தார். காங்கிரசின் பித்தலாட்டப் பிரச்சாரம் எடுபட வில்லை. இப்பொழுது அந்தக் குற்றச்சாட்டை விட்டுவிட்டார்கள். அசாம் தீவிர வாத இயக்கம் குறித்து புதிதாக காங்கிரசாரும் - அ.தி.மு.க.வினரும் பொய் விஷத்தைக் கக்க ஆரம்பித்து உள்ளனர்.

(இந்திரா காங்கிரஸ் எம்.பிக்கள் குறுக்கீடு, கூச்சல்)

வைகோ : தமிழ்நாட்டில் புலிகளுக்கு முகாம்கள் இருப்பதாக வறட்டுக்கூச்சல்
போடும் நண்பர்கள், நான் கடந்த கால உண்மைகளைச் சொன்னால் உங்களால்
தாங்கிக் கொள்ள முடியாது. விடுதலைப்புலிகளுக்கு மட்டுமென்ன? எல்லா ஈழப் போராளிகளுக்கும் 1983க்குப் பிறகு பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உத்திரப் பிரதேசத்திலும் அமைக்கப்பட்டன.

உத்திரப்பிரதேசத்தில் ‘அல் மோரா’ என்ற இடத்தில் முகாம்கள் இருந்தன. இந் திய இராணுவத்தினர் பயிற்சி தந்தனர். இந்திய அரசாங்கம் அவர்களுக்கு ஆயு தங் கள் வழங்கியது. இவை எல்லாம் யாருடைய ஆட்சியில்? டெல்லியில் நடைபெற்ற இந்திரா காங்கிரஸ் ஆட்சியில்; மீனம்பாக்கம் விமான நிலையத் தில் பயங்கரமான வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட அப் பாவிகள் கொல்லப்பட்டனர்.அப்பொழுது தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சி? எம்.ஜி.ஆர் ஆட்சி! ஆனால், அதற்காக அ.தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை.

இ.காங்கிரஸ் எம்.பிகள் : தமிழ்நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதற்கு
நீங்கள்தான் காரணம்.

வைகோ : எந்த இயக்கமும் தமிழ்நாட்டில் வன்முறையில் ஈடுபட தி.மு.க அரசு
அனுமதிக்காது என்பதை தமிழக முதலமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித் துள்ளார். அசாம் விடுதலை இயக்கத்தை குறித்து பிரதமர் சந்திரசேகர் பேசி னார். இம்மாதம் 3 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் டெல்லிக்கு வந்து பிரதம ரைச் சந்தித்தார். அப்போது பிரதமர் அவரிடத்தில் இதுபற்றி ஏன் பேசவில்லை? தமிழக முதல்வரின் கவனத்திற்கு பிரதமர் இத்தகைய செய்திகளை முன் வைத் திருப்பாரானால் உடனடியாக தமிழக அரசு தக்க நடவடிக்கைகள் மேற் கொண்டிருக்கும்.ஆனால், ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகவும்,ஆணித் தர மாகவும், தெரிவிக்க விரும்புகிறேன்.அசாம் விடுதலை இயக்கத்திற்கு தமிழ் நாட்டில் எந்த முகாமும் கிடையாது என்பதுதான்.

இ.காங்கிரஸ் எம்.பிக்கள் : (கூச்சல்- குறுக்கீடுகள்) முகாம்கள் இருக்கின்றன.

பித்தலாட்டத்தின் உச்சக்கட்டம் :

வைகோ : பித்தலாட்டப் பிரச்சாரத்தின் உச்சகட்டம் இதுதான். ஒரு காலத்தில்
ஜெர்மானிய கம்யூனிஸ்டுகளை ஒழிக்க நினைத்த நாஜிகளின் தலைவர் ஹிட் லர் ஒரு தந்திரத்தைக் கையாண்டார். தன் ஆட்களை ஏவிவிட்டு பெர்லின்
நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு நள்ளிரவில் தீ வைத்துவிட்டு, பழியை கம்யூ னிஸ்டுகளின் மீது போட்டுவிட்டு, அதன்பின் கம்யூனிஸ்டுகளை கண்ட இடத் தில் சுடச் சொல்லி மனித வேட்டை நடத்தினான். அதைப்போல, பொய்ப் பழி போட்டு விட்டு மத்திய அரசு உளவு ஸ்தாபனங்களைப் பயன்படுத்தி, பொய்ச் சாட்சியங்களைத் தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறேன்.

தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இ.காங்கிரசும், அ.தி.மு.க வும் கூச்சல் எழுப்புகின்றன. இந்தியாவின் வடக்கு முனையும், வடமேற்கு
முனையும், வடகிழக்கு எல்லைப்புறமும் ஏற்கனவே தீப்பற்றி எரிந்து கொண் டிருக்கின்றன. இந்தியாவின் தெற்குமுனை தற்போது அமைதியாக இருக்கின் றது. தி.மு.க ஆட்சியின் மீது கைவைத்தால் தமிழ்நாடு வெடிக்கும், எரிமலை யாக மாறும் என எச்சரிக்கிறேன்.

எம்.எம்.ஜேக்கப் (இ.காங்கிரஸ்) கோபால்சாமி என்ன பயமுறுத்துகின்றாரா?

வைகோ : நாங்கள் பதட்டப்படவும் இல்லை; பயமுறுத்தவும் இல்லை.அயோக் கியத்தனமான அரசியல் நிர்பந்தத்திற்கு சந்திரசேகர் பணியமாட்டார் என்று தான் இந்த நிமிடம் வரை நம்புகிறேன். கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகத்திற்கும் சித்தமாக உள்ள இயக்கம் தி.மு.க; சர்வாதிகாரத்தை எதிர்த்து
ஜனநாயகத்தைக் காக்கும் தர்மயுத்தத்தில் 1976இல் ஆட்சியை விலையாகக் கொடுத்தோம். இருண்ட கொடும் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தோம். சிக்மகளுர் தொகுதியில் வெற்றிபெற்ற இந்திராகாந்தியை மொரார்ஜி தேசாய் அரசு நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றியபோது அதனை வன்மையாகக் கண்டித்து அறிக்கை தந்தவர் கலைஞர்.

‘மேக்பத்’ நாடகக்காட்சி

சேக்ஸ்பியரின் துன்பியல் நாடகமான ‘மேக்பத்’ நாடகத்தில் வரும் காட்சி என்
நினைவுக்கு வருகின்றது. இந்த விவாதத்தில் குறிப்பிடுவது பொருத்தமென்று கருதுகின்றேன். மன்னனைக் கொலை செய்ய மனைவி மேக்பத் திட்டம் தீட்டு கின்றாள். 

அந்தப் பொல்லாங்குக்காரி தான் நடத்தப்போகும் கொலைக்குற்றம் எவருக் கும் தெரியக்கூடாது என்று கருதி வானத்தைப் பார்த்து கூறுகிறாள். “நட்சத்தி ரங்களே, உங்கள் வெளிச்சத்தை மறைத்துக் கொள்ளுங்கள், நடைபெறப் போ கும் குற்றம் இருளில் மறையட்டும்’ அந்த சூனியக்காரி மேக்பத் கடைசியில்
அவமானத்தோடு அழிந்தது மட்டுமல்ல. அவள் யோசனையைக் கேட்டவனும்
அழிந்தான். காங்கிரஸ் கட்சிக்கு சேக்ஸ்பியரின் பாடம் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்.

(இ.காங்கிரஸ் எம்.பிகள் கூச்சல்; குறுக்கீடு)

வைகோ : ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்? நான் சூனியக்காரி மேக்பத்தைத் தானே
சொன்னேன். தரங்கெட்டவர்களின் காலடியை நத்திக்கிடக்கும் நிலைமைக்கு
காங்கிரஸ் ஆளாகி இருப்பது வெட்கக் கேடாகும்.

(இ.காங்கிரஸ் எம்.பிகள் மீண்டும் மீண்டும் குறுக்கீடு, கூச்சல்)

வைகோ : தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்யச் சொல்லி இன்று மாலை 4 மணிக் கு அறிக்கை வந்துள்ளது. வஞ்சக நரிகளின் ஊளைச் சத்தத்தை நாங்கள் அலட் சியம் செய்வோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தி.மு.க அரசு. அதனை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை விடுக்கும் காங்கிரஸ் ஆந்திராவிலே ஆட்சி நடத்துகிறது. அங்கே பத்து மாவட்டங்களின் நிர்வாகம்  நக்சல்காரர்களின் கை யிலே இருக்கின்றது.

நெருப்புடன் விளையாடாதீர்கள்

வெட்கங்கெட்டவர்களே, நீங்களா எங்கள் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யச் சொல் வது? அசாமில் ஆட்சியைக் கலைத்தீர்கள்; அங்கே இராணுவத்தை அனுப்பி உள்ளீர்கள். ஆனால், அசாம் மாநிலத்துக்குள்ளே இந்திரா காங்கிரஸ் அடி யெ டுத்து வைக்க முடியாது. அங்கே காங்கிரஸ் பிரவேசிக்குமானால் பிரம்ம புத் திரா நதியில் மூழ்கடிக்கப்படும்.

காஷ்மீரத்துக்குள்ளே காங்கிரஸ் காலெடுத்து வைக்கமுடியாது காங்கிரசுக்கு கல்லறை கட்டப்பட்டுவிட்டது அங்கே; பஞ்சாபுக்கு உள்ளே காங்கிரஸ் நுழை யவே முடியாது. அரசியல் சமாதி, காங்கிரசுக்கு கட்டப்பட்டு விட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அரசினைக் கவிழ்த்தால் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் எழுந்தே வர முடியாத புதைகுழிக்கு அனுப்பப்படும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் அதிகாரம்
இழந்து இருபத்து நான்கு ஆண்டுகள் ஆகின்றது. இனி எந்தக் காலத்திலும் காங் கிரஸ் எழுந்து வரவே முடியாது. எங்கள் ஆட்சியைக் கவிழ்த்தால் தமிழகம்
பஞ்சாபாக மாறும், அசாமாக மாறும் என்று எச்சரிக்கிறேன்.

ஜெயந்தி நடராஜன் (இ.காங்) : தமிழகம் பஞ்சாபாக, அசாமாக மாறும் என்று
கோபால்சாமி கூறியதை சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்.

உபேந்திரா (தெலுங்கு தேசம்) : கோபால்சாமி எச்சரிக்கைதான் செய்தார்.
நாடாளுமன்றத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளைச் சொல்லவில்லை.

வைகோ : நான் பாகிஸ்தானையோ, பர்மாவையோ குறிப்பிடவில்லை. பஞ்சா பும், அசாமும் இன்னும் இந்தியாவில்தான் இருக்கின்றன.நெருப்புடன் விளை யாடாதீர்கள் எனச் சொல்ல வேண்டியது என் கடமை.”

1991 இல் தி.மு.க ஆட்சியைக் கலைக்க புலிகளின் மீது வீண்பழி சுமத்திய காங் கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மத்தியில் பதவி பல்லக்கில்
உட்கார்ந்து கொண்டு, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு துணைபோன கருணாநிதியையும் நாடு பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

1991இல் மட்டுமல்ல இருபது ஆண்டுகாலம் கழித்தும், காங்கிரஸ் கட்சி மீது ஒரே அணுகுமுறை கொண்டு இருக்கின்ற தலைவர் வைகோ அவர்களையும் நாடு பார்க்கிறது.

வரலாறு சரியான தீர்ப்பை எழுதும்.

தொடரும்...

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment