Saturday, May 4, 2013

தமிழ் இனத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றவராகத் திகழ்கிறார் வைகோ!-தமிழருவி மணியன்

நேர்மையாளராக, நெறி சார்ந்தவராக, தமிழ் இனத்துக்காகத்

தன்னை அர்ப்பணிக்கின்றவராகத் திகழ்கிறார் வைகோ!


தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, கழகப் பொதுச்செயலா ளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட விழிப்புணர் வுப்பிரச்சாரத்தையொட்டி, 18.04.2013 அன்று உடுமலைப்பேட்டைப் பொதுக்கூட் டத் தில் தமிழருவி மணியன் அவர்கள் உரை மணியன் ஆற்றினார்.

விவரம் வருமாறு:

அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் 2016 இல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிகிறபொழுது, தமிழகத்தின் கோட்டையில் முதல்வராகஅமர இருக் கின்ற என் நெஞ்சு நெகிழ்ந்த நிலையில், மிகுந்த பாசத்தோடு,ஒரு தலைவனை, காமராஜருக்குப் பிறகு நான் நேசித்துக்கொண்டிருக்கிறேன் என்றால், அந்தத் தலைவனாக இருக்கிற வைகோ அவர்கள் உள்ளிட்ட இந்த மகத்தான அவை
யை நான் வணங்கி மகிழ்கிறேன்.



நண்பர்களே, இது அரசியல் கூட்டம் இல்லை. வாக்குகளுக்காக நாக்கு யாகம்
நடத்துகிற இடம் இல்லை. ஆனால், ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண் டும். இருண்டு கிடக்கக்கூடிய இந்தத் தமிழ்ச் சமுதாயம் வெளிச்ச வண்ணம் வந்து சேர்வதற்கான வழிகளைத் திறந்து வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

2011 சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பு ஒரு ஆண்டு முழுவதும் நான்
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக எழுத்து யுத்தம் நடத்தினேன். சென்ற இடங்களில் எல்லாம் நாக்கு யாகம் செய்தேன். அதனுடைய நோக்கம்
எள் மூக்கின் முனையளவும் நான் பயன்பெற வேண்டும் என்பதற்காக அல்ல. தமிழகத்தைப் பற்றிப் படர்ந்திருக்கின்ற பெரு நோயாக உள்ள திராவிட முன் னேற்றக் கழக ஆட்சி, இன்னும் ஐந்து ஆண்டுக் காலம் தமிழகத்தில் தொடர்ந்தி ருந்தால்,ஒட்டுமொத்தத் தமிழகமும் கருணாநிதி குடும்பத்தால் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கும். எனவே அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சமூக நீதி உள்ள ஒவ்வொருவருக்கும் இருப்பதாக நான் நினைத்தேன். நம்பினேன். எழுதினேன். பேசினேன்.

அதே நேரத்தில், திராவிட முன்னேற்றக்கழக ஆட்சி வீழ்கிறபொழுது அந்த
இடத்தில் அதிகார நாற்காலியில் வந்து அமரக்கூடிய வாய்ப்பு அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் செல்வி ஜெயலலிதா அவர்க ளுக்குத் தான் உண்டு என்பதை அறிந்துதான் நான் எழுதினேன், பேசினேன்.
நண்பர்கள் பலர் அப்பொழுது கேட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று நீங்கள் எழுதுகிறீர்கள், பேசுகிறீர்கள், மகிழ்ச்சிக் குரியது. அந்த ஆட்சி அகற்றப்படுகிறபொழுது, அந்த நாற்காலியில் ஜெயல லிதா வந்து அமர்வதற்கு ஏற்றாற்போல் எழுதுகிறீர் களே; ஜெயலலிதா எந்த வகையில் மேம்பட்டவர் என்று கேட்டார்கள்.

நண்பர்களே, மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரசை சுதந்திரப் போராட்டச்
சூழலில் தலைமை ஏற்று நடத்திய பொழுது, அகில இந்திய காங்கிரஸ் கட்சி யில் நீண்ட நெடுங்காலம் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, காந்தியின் உள்ளத்தில் தனி இடம் பெற்றவராக விளங்கியவர் ஆச்சாரிய கிருபளானி. தொண்ணூ று வயது கடந்த நிலையில் ராஜ்பவனில் நான் அவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த பொழுது - அப்பொழுது நான் ஜனதா கட்சியின் பொதுச்செ யலாளராக இருந்தேன் - ஜனநாயகம் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து
கொண்டிருக்கிறதே, இதற்கு மாற்று என்ன? என்று எங்களுடைய மனக் காயங் களை அவரிடம் வெளிப்படுத்திய போது, அவர் ஒன்று சொன்னார். சாகும்வரை என்னால் மறக்க முடியாத சில வேத வாசகங்களில் அதுவும் ஒன்று.

“ஜனநாயகத்தில் முழுக்க முழுக்க நன்மை என்பது ஒரு பக்கமும்; முழுக்க முழுக்க தீமை என்பது மறுபக்கமும் நிற்பதற்கான வாய்ப்பே கிடையாது. என வே இது நன்மை என்று நாம் அதை ஏற்று, இது தீமை என்று நிராகரிப்பதற் கான சூழலும் கிடையாது.நமக்குள்ள வாய்ப்பு என்ன? பெரிய தீமை, சிறிய தீமை என்று இரண்டு இருக்கிற பொழுது, பெரிய தீமையைப் புறந்தள்ளி விட்டு, சிறிய தீமையைத் தேந்தெடுப்பதைத் தவிர வேறு வழி ஜனநாயகத்தில் கிடையாது” என்று சொன்னார். எனவே தான் சிறிய தீமையைத் தேர்ந்தெடுத்தோம்.


அரசியல் மாற்றம்

நான் அப்பொழுதே சொன்னேன், 2011 ஐ பொறுத்தவரையில் ஆட்சி மாற்றம்
நிகழ வேண்டும். 2016 இல் அரசியல் மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும் என்று. ஆட்சி மாற்றம் நாம் நினைத்தபடி நிகழ்ந்துவிட்டது. இனி அரசியல் மாற்றம்
நாம் நினைக்கிறபடி நிகழப்போகிறது. நண்பர்களே, நான் ஒன்றும் ஜோசியன்
இல்லை. எதையும் என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். தன்னம்பிக்கை யோடு சொல்கிறேன், தலை நிமிர்ந்து சொல்கிறேன். காரணம் நான் குளிர் சாத ன அறைக்குள்ளேயே இருந்து கொண்டு சமூகத்தின் நாடியைப் பிடித்துப் பார்ப் ப வன் இல்லை. சாதாரண மக்களுடன் சாதாரணமானவனாக சங்கமித்துக் கிடப்பவன். எனவே, சாதாரண மக்களின் மன உணர்வை துல்லியமாக அறியக் கூடிய வாய்ப்பு எனக்கு இருக்கிறது என்பதனால் சொல்கிறேன்.

தமிழருவி மணியனுக்கு வைகோ முதலமைச்சர் ஆவதனால் என்ன நன்மை இருக்கிறது? நீங்கள் முதலமைச்சரானால் உங்கள் பக்கம்கூட நான் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பதை இந்த இடத்திலேயே சொல்கிறேன். நான் தொண்ட னாக பொதுவாழ்வைத் தொடங்கிய இடம் காமராஜருடைய காலடியில். நான் கற்றது காந்தியம். இதோ காந்தி சிலை இருக்கிறது. மனசாட்சி உள்ள காங்கி ரஸ் காரர்களை நான் கேட்கிறேன். இந்த காந்தி சிலையைப் பராமரிக்க வேண் டும் என்கிற எண்ணமாவது உங்களுக்கு வந்திருக்கிறதா?

அக்டோபர் 2 ஆம் தேதியும், ஜனவரி 30 ஆம் தேதியும் காந்தியை நினைத்து
அடுத்த நாளே மறந்துவிடக்கூடிய மனிதர்களுக்கு நடுவில், மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் அவர் கள் இந்த காந்தியின் சிலையை செப்பனிட்டு, சீரமைத்து அந்த இடத்தில் குவிந் து கிடக்கக்கூடிய குப்பைகளை அகற்றி, தூசுதட்டி, துப்பரவு செய்து காந்திய வழி யில் நடக்கக்கூடிய ஒரு பெரியார் தொண்டன், அவருடைய கழுத்தில்
மாலை யிடுவதற்காக களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

நான் காந்தியவாதி. காந்தியத்தைக் கற்றவன். கற்றுக்கொண்டு இருப்பவன்.
காமராஜரை காதலித்தவன். காமராஜருடைய காலடியில் அரசியலை நடத்தத் தொடங்கியவன். எனக்கென்று ஒரு செப்புக் காசும் இந்த உலகத்தில் பெற வேண்டும் என்ற ஆசையே இல்லாதவன். சாகும் வரை என் பிறப்பு முடிகிற கடைசி நாள் வரை, எந்த அரசு சார்ந்த பதவியிலும் ஒரு கணம்கூட இருக்க மாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு பொதுவாழ்வில் நடக்கக் கூடியவன்.
நான் சொல்கிறேன், ஆசைப்படுகிறேன். நீங்கள் முதல்வராக வேண்டும் என்று.
எதற்காக, தமிழகம் நலன் அடைய வேண்டும் என்பதற்காக. கால்கடுக்க நடக் கிறீர்களே, மது இல்லா மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கால் கடுக்க
நடக்கிறீர்களே. மது இல்லா மாநிலம் எப்போது வரும்? திராவிட முன்னேற்றக்
கழக ஆட்சியில் மது இல்லா மாநிலத்தை இந்தத் தமிழகம் சந்திக்க முடியுமா?
மதுவைக் கொண்டுவந்ததே கருணாநிதி தானே!

மாநிலக் கல்லூரியில் படித்தேன்.வைகோ மாநிலக் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே செல்கிறார், நான் உள்ளே பாதம் பதிக்கிறேன். கல்லூரி மாணவனாக இருந்தபொழுது பீர் பாட்டில் எப்படி இருக்கும், ரம் எப்படி இருக்கும், விஸ்கி யின் நிறம் என்ன என்று எனக்குத் தெரியாது. பிராந்தி எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஒரு இளைய தலைமுறை அறியாமல் இருந்ததுதானே மது. அன்று நான்கு கல்லூரி மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப் படுத்த வேண்டும் என்று நினைத்தால்,அதிக பட்சம் ஒரு உணவகத்தில்சென்று
தேநீர் அருந்துவார்கள். தேநீர்க் கோப்பையைக் கையில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்கள்.

முதல் குற்றவாளி கருணாநிதி

இன்றைக்கு ஒவ்வொருவர் கையிலும் மது பாட்டிலைக் கொண்டுவந்து கொடுத்த முதல் குற்றவாளி யார்? கருணாநிதி. வைகோ சொன்னார், எனக்கு எந்தத் தலைவரிடமும் பகைமை இல்லை என்று. நான் பக்குவப்பட்டு விட் டேன் என்றார். எனக்கும் எந்தப் பகையும் கருணாநிதியிடம் கிடையாது.நானும் பக்குவப் பட்டவன்தான். 

ஆனால், நண்பர்களே ஒன்று தெரியுமா உங்களுக்கு? இந்திய அரசியலிலேயே
மிக அதிகமான கோபக்காரராக இருந்தவர் அகில இந்தியாவில் ஜவஹர்லால் நேரு. நான் நெருங்கிப் பார்த்திருக்கிறேன், தமிழக அரசியலில் மிகப்பெரிய கோபக்காரராக இருந்தது காமராஜர். இவர்கள் ஏன் கோபக்காரர்களாக இருந் தார் கள் தெரியுமா? எவன் ஒருவன் மண்ணை,மண்ணின் மக்களை மனம் முழு வதும் நேசிக் கிறானோ, அவன் அன்பின் காரணமாக அதிகமாகக் கோபப்படு வான். அன்பு காரணமாகத்தான் இந்தக் கோபம், நேருவிடம் இருந்தது. காமராஜ ரிடம் இருந்தது. வைகோவுக்கும் இருக்கிறது.

வரலாற்றின் செய்திகளை நீங்கள் திரைபோட்டா மறைத்துவிட முடியும்?தமிழ் நாட்டில் மதுவை கொண்டுவந்த களங்கம் நிறைந்த வரலாறு யாருக்குச் சொந் தம்? கருணாநிதிக்குத்தானே.கருணாநிதி கொண்டுவந்தார். எம்.ஜி.ஆர். அப் போது எதிர்த்தார். பிறகு எம்.ஜி.ஆரும் ஆட்சியிலே கொண்டு வந்தார். இன்று ஜெயலலிதாவும் மதுவைக் கொண்டுவந்திருக்கிறார்.

நண்பர்களே, அங்குமிங்குமாக சிந்தனையைச் சிதற விடாமல், நான் வழங்கு கிற மிக முக்கியமான கருத்துகளை நீங்கள் கேட்க வேண்டும்.உண்மை எப் பொழுதும் சுடும்.உண்மையை மட்டும்தான் இங்கே பதிவு செய்கிறேனே தவிர, நான் சொல்வதில் எங்காவது வரலாற்றில் பிழை இருந்தால், எனக்கு நீங்கள் சுட்டிக் காட்டலாம். தமிழகத்தில் மதுவைக் கொண்டுவந்தது கருணாநிதி தானே! அதை கருணாநிதி யாலேயே மறுக்க முடியாதே! சரி எம்.ஜி.ஆர்., கரு ணாநிதி இருந்த பொழுது மதுவுக்கு எதிராகப் பேசியவர் தானே! 1983 இல் இந்த டாஸ்மாக்கை தொடங்கி வைத்ததே எம்.ஜி.ஆர். தானே.எம்.ஜி.ஆர். தான் டாஸ் மாக்கை தொடங்கினார். மதுவை ஒட்டுமொத்த மாக வியாபாரம் செய்வதற் கான அடித்தளத்தை அமைத்து, அதற்கென்று ஒரு நிர்வாகத்தை உருவாக்கிய வர் எம்.ஜி.ஆர்.. இன்றைக்கு இந்த டாஸ்மாக் கடையினுடைய நிலைமை எங்கே போயிருக்கிறது என்று பாருங்கள். நமது ஜெயலலிதாவின் ஆட்சியில். நான் மிகவும் வருத்தத்தோடுதான் இந்தச் செய்திகளைப் பதிவு செய்கிறேன்.

மரியாதைக்குரிய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சொல்கிறேன், ஏழு
கோடிக் கு மேற்பட்ட மக்கள் தமிழகத்திலே இருக்கிறார்கள். அவரது சாதனை இப்பொழுது எதை நோக்கிச் செல்கிறது? தொகுக்கப்பட்டிருக்கின்ற ஆய்வ றிக் கையின் அடிப்படையில் சொல்கிறேன், ஏழு கோடி மக்களில் இன்றைக்கு தமி ழகத்தில் ஒரு கோடி பேர் குடிக்கிறார்கள். ஏழு பேர் நடந்து சென்றால், ஏழு பேரில் ஒருவன் குடிகாரனாக இருக்கிறான்.

ஆனால், ஜெயலலிதாவின் நோக்கம் என்ன? கருவூலத்தை நிரப்பியாக வேண் டும். இன்றைக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூல மா க வருவாய் வருகிறது. ஆனால், ஜெயலலிதா அரசு 24 ஆயிரம் கோடி ரூபாய் வருவதைப் பார்த்து மகிழ வில்லை. ஜெயலலிதா கோபப்படுகிறார்.ஏன் தெரியு மா? நான் ஒரு இலக்கு நிர்ணயித்தேனே, அந்த இலக்கை நீங்கள் ஏன் நிறை வேற்றவில்லை? நிர்ணயிக்கப்பட்ட இலக்கு என்ன? 2012-2013 நிதி ஆண்டில் நிர் ணயிக்கப் பட்ட இலக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் கடைகளில் வந் தாக வேண்டும். 24 ஆயிரம் கோடி தானே வந்திருக்கிறது. ஆயிரம் கோடி குறைந் து விட்டதே? யாரெல்லாம் முறையாக கூவிக் கூவி விற்கவில்லை யோ அவனை யெல்லாம் சஸ்பெண்ட் செய்கிறது இந்த அரசு. அப்படியென் றால் யோசியுங்கள் நண்பர்களே,ஏழு கோடி தமிழனின் குடும்பங்களில் ஒரு கோடி மக்களைத் தானே குடிக்க வைத்திருக்கிறோம். ஏழு கோடி மக்களும் எப்பொழுது குடிப்பது?

ஆட்சியாளரின் நோக்கம் வருவாய் மட்டும்தானா?

காரணம் கொஞ்சம் யோசியுங்கள். ஒரு கோடி மக்கள் குடித்தால், ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் மூலம் வந்துவிடுகிறது. ஏழு கோடியும் குடித்து விட்டால், ஒரு இலட்சத்து இருபத்து எட்டாயிரம் கோடி ரூபாய் அரசுக் கு வந்து சேரும். தமிழக அரசின் வரவு-செலவு திட்டமே ஒரு இலட்சத்து இரு பதாயிரம் கோடி தான். ஆனால், ஏழு கோடி மக்களையும் குடிக்கச் செய்தால், ஒரு இலட்சத்து இருபத்து எட்டாயிரம் கோடி அரசுக்கு வரும். உண்மை தான். அதை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? ஒட்டுமொத்தத் தமிழர்
சாதியின் வாழ்வாதாரம் முழுவதும் பறிக்கப்பட்டுவிட்ட பிறகு, நீங்கள் எத்த னை சமூக நலத் திட்டங்களைச் செய்தால் என்ன? எத்தனை இலவச திட்டங் களைக் கொடுத்தால் என்ன? அதன் மூலம் பயன்பெறுவதற்கு தமிழன் உயிரோ டு இருக்க மாட்டானே! நீங்கள் கொடுக்கிற இலவசங்களைப் பெறுவதற்கு கையேந்துவதற்குக்கூட தமிழ் நாட்டில் மனிதர்கள் உயிரோடு இருக்க மாட் டார்களே! இதுதான் பொறுப்புள்ள ஒரு அரசுக்குரிய இலக்கணமா? ஒரு ஆட்சி யாளருடைய நோக்கம் வருவாய் ஒன்று மட்டும் தானா?

சென்ற ஆண்டின் சாலை விபத்தில், இந்தியாவில் ஒரு இலட்சத்து முப்பத்து
நாலாயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். நான் சொல்வதெல்லாம் தகவல்கள்.
யூகங்கள் அல்ல, தகவல்கள். இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்த வர் கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்து முப்பத்து நான்காயிரம் பேர். உலகத்தி லே யே அதிகமான வாகனங்கள் ஓடக்கூடியது அமெரிக்கா, உலகத்திலேயே அதிகமான மக்கள் தொகை கொண்டது சீனா. ஆனால், அமெரிக்காவைவிட, சீனாவைவிட உலகத்திலேயே அதிகமான சாலை விபத்தில் இறந்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றிருப்பது இந்திய தேசம். இந்தியாவில் சாலை விபத்து களில் மிக அதிகமாக இறந்தவர்கள், மாநில வாரியாக கணக்கெடுத் தால் நம்முடைய தமிழ்நாடு. சென்ற ஆண்டு நடந்த சாலை விபத்துகளில், குடித்த தனால் விபத்துக்கு உள்ளாகி இறந்தவர்கள் மட்டும் 15 ஆயிரம் பேர்.
இங்கே கூடியிருக்கின்றவர்கள் யோசிக்க வேண்டும். 15 ஆயிரம் பேர் சாலை
விபத்துகளில் இறந்திருக்கிறார்கள்.ஒரு அரசு அதை எப்படிப்பார்க்க வேண் டும்? 15 ஆயிரம் பேர் இறந்தார்கள் என்று பார்ப்பது அரசுக்குரிய லட்சணமல்ல.
ஆட்சியாளருக்குரிய இலக்கணமும் அல்ல. 15 ஆயிரம் பேர் இறந்து விட்டார் கள் என்றால், 15 ஆயிரம் பேரின் குடும்பத் தலைவர்கள் இறந்து விட்டார்கள். 15 ஆயிரம் குடும்பங்களில் இருக்கக்கூடிய பெண்கள் விதவை களாகிவிட்டார் கள். 15 ஆயிரம் குடும்பங் களில் இருக்கக்கூடிய பிள்ளைகள் தந்தையை இழந் து, எதிர்காலத்தைப் பற்றிய வெளிச்சத்தை இழந்து வீதியில் அனாதைகளாக நிற்கக்கூடிய சூழல் வந்துவிட்டது. யோசியுங்கள்.

நண்பர்களே, சாலை விபத்துகள் கூடிக் கொண்டே போகிறது. இந்திய நாட்டில்
சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கியக்காரணம், மது அருந்தி விட்டு, வாக னம் ஓட்டுவதுதான் என்று எல்லா மாநில அரசுகளுக்கும் ஒரு தாக்கீது வழங் கியது. தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருந்தால் அவற்றை மூடி
விடுங்கள் என்று மத்தியில் இருந்து தாக்கீது வருகிறது. இந்த அரசு அது குறித் து கவலைப்படவில்லை.வழக்கறிஞர் பாலு என்பவர் பொதுநல வழக்கை சென் னை உயர்நீதிமன்றத்தில் கொண்டுபோகிறார். ஒரு இலட்சத்து முப்பத்து நாலா யிரம் பேர் சாலை விபத்தில் இறந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலே 15 ஆயிரம் பேர் இறந்திருக் கிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் மது. எனவே, நெடுஞ்சாலை களில் இருக்கக்கூடிய மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்.

நீதிக்குத் தலைவணங்கு

நீதிமன்றம் யோசிக்கிறது. நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கக்கூடிய இரண்டு நீதி பதிகள் வழங்கியிருக்கிற தீர்ப்பு என்ன? தேசிய நெடுஞ்சாலைகள் மட்டும் அல்ல. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கக்கூடிய மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை இந்த அரசு மதித்ததா?

தீர்ப்பை அரசு மதித்தாக வேண்டும்.இந்தியாவின் ஜனநாயக அமைப்பில் நீதி மன்றத்தின் முன்னால் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் தலைவணங்கியாக வேண்டும். இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் சர்வாதிகாரியாக விளங்கிய இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றத்திலே இருந்த சின்கா என்ற நீதிபதி எழுதிய தீர்ப்புதான், இந்திய அரசியலின் தலை யெழுத் தையே மாற்றியது.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், வைகோ சொன்னால் கேட்க வேண் 
டா ம், மணியன் சொன்னால் கேட்க வேண்டாம், யார் சொன்னாலும் கேட்க வேண்டாம் என்று இருக்கலாம். ஆனால் நீதிமன்றம் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று இருக்க முடியாது. என்ன நடந்தது? தேசிய நெடுஞ்சாலை களில் ஐநூறுக்கு மேற்பட்ட மதுக்கடைகள் அடையாளம் காணப்பட்டு அவை மூடப்பட வேண்டும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் என்றது நீதிமன்றம். நீங் கள் சிந்திக்க வேண்டும். மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் இந்த மதுக்கடைகள்
மூடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மூடுவதற்கு ஆறு
மாதம் அவகாசம் கொடுங்கள் என்று அரசு கேட்கிறது. அவகாசம் எல்லாம்
கிடையாது என்று நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு கூறிவிட்டது. உயர்நீதிமன்றத் தின் தீர்ப்பு தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும் என்பதாகும்.

இந்த அரசு எப்படி யோசிக்கிறது? நீதிமன்றம் தீர்ப்பில் ஒன்றைத் தெளிவாகப் பதிவு செய்கிறது. தேசிய நெடுஞ்சாலை களில், மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருந்தால் மூடி, அங்கிருந்து வெகு தூரத்தில் நீங்கள் அந்தக் கடைகளை மாற்ற வேண்டும் என்கிறது. கடைகளை இடம்பெயரச் செய்ய வேண்டும். அதை இந்த அரசு சிக்கெனப் பிடித்துக் கொண்டது. இப்பொழுது இது தேசிய நெடுஞ்சாலை என்று வைத்துக் கொள்ளுங்கள்.அங்கே ஒரு மதுக்கடை
இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தலைவணங்கித் தான் ஆக வேண்டும்.
இல்லையென்றால், ஆட்சி நாற்காலியே ஆட்டம் கண்டுவிடும்.நீதிக்கும் தலை வணங்க வேண்டும். அதே நேரத்தில் வருவாயும் குறையக்கூடாது. ஆக என்ன செய்தது இந்த அரசு? அங்கிருந்து நூறு அடி தள்ளி பக்கத்தில் ஏதேனும் வீடு
இருந்தால், அந்த வீட்டைப் பிடித்து, அல்லது கடை இருந்தால், அந்தக் கடை யைப் பிடித்து அங்கே டாஸ்மாக் கடையை வைக்கும் படி கூறுகிறதே, இது பொறுப்புள்ள அரசு செய்கிற செயலா? அவ்வளவு அவசிய மானதா?
மதுக்கடைகள்.

நான் தெளிவாக,இன்னும் வன்மையாகவே சொல்கிறேன்.இந்த மதுவின் தீமை களை நாம் அத்தனை பேரும் அறிந்திருக்கிறோம் அல்லவா? நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பே நீங்கள் யோசிக்க வேண்டும்.நண்பர்களே தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய வாக்காளர்களில் இங்கு சரிபாதி யாக பெண்மக்கள் இருக்கிறார்கள். இரண்டு கோடி வாக்காளர்கள் பெண் மக்களாக இருப்பார்கள்.
மாணவர்களிடம் அஞ்சும் மத்திய அரசு

மாணவர்களைப் பார்த்து நான் மிகவும் அன்போடு சொல்கிறேன். நீங்கள் வீதிக்கு வந்த பிறகுதான், ஈழம் குறித்து உலகமே சிந்திக்கக்கூடிய சூழலை உரு வாக்கினீர்கள். தன் வாழ்க்கை முழுவதும் வைகோ இதற்காகவே வேள்வி நடத்தினார். அவர் உரமாக விழுந்தார், நீங்கள் மரமாக எழுந்து நின்றீர்கள். அப் படி எழுந்து நின்றதனுடைய விளைவு, மத்திய அரசே உங்களைப்பார்த்து அஞ்சு கிறது.நாடாளுமன்றத் தேர்தல் வருமானால்,இந்த காங்கிரசுக்குப் பக்கத்திலே போய் தெரியாமல் நின்றால்கூட, தோல்வி என்பது நம்மால் தவிர்க்கமுடியாது என்று கருணாநிதி கலங்கக்கூடிய அளவுக்கு, எந்தக் கட்சியும் இன்றைக்கு காங்கிரஸ் பக்கத்தில் போய் நிற்பதற்கு தயங்குகிறது. நண்பர்களே சாதிகளை
அடிப்படையாக வைத்து மக்களிடையே தீண்டாமையைக் கொண்டுவந்தால்,
அது சமூகக் கேடு. ஆனால், அரசியல் அரங்கத்தில் காங்கிரசிடம் நீங்கள் தீண் டாமையைக் கடைப்பிடித்தால் அது நாட்டிற்கு நலம் பயக்கக்கூடிய ஒன்று.

நான் தெளிவாக ஒன்றைப் பதிவு செய்கிறேன். 1952 தொடங்கி இன்று வரை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. சட்டமன்றத்தேர்தல்கள் நடந் திருக்கின்றன.ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் ஏதோ ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு பலபேர் போயி ருக் கிறார்கள். பேசினார்களா? என்று மட்டும் கேட்கக்கூடாது. இந்தியாவி லே யே உறங்குவதற்கு சுகமான இடம் நாடாளுமன்றம் என்று தெளிவாக அறிந்த வர் கள் தமிழ்நாட்டிலே இருந்து காங்கிரஸ் சார்பில் செல்பவர்கள் தான். அவ் வளவு சுகம். அவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளே உட்கார்ந்து விவாதித் ததை விட, மைய மண்டபத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த நேரம்தான் அதிகம்.

ஆனால், இனி வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு புதிய வரலாறு தமி ழகத்தால் உருவாக்கப்பட இருக்கிறது. அடுத்த நாடாளுமன்றம் கூடுகிற பொழு து, தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் சார்பாக ஒரு மனிதனும் இல்லாத முதல் நாடாளுமன்றமாக அது அமையும்.மதுவுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழக மும் இன்று ஏன் திரண்டு இருக்கிறது? யோசியுங்கள். இதுவரைக்கும் டாஸ் மாக் கடைகள் திறக்கப்பட்ட பொழுதெல்லாம் தமிழகத்திலே இருக்கக்கூடிய பெண்மக்கள் பெரியதாக கிளர்ந்தெழுந்து கடைகளுக்கு முன்னால், போராடிய தாக வரலாறு இல்லை. ஆனால், இப்பொழுது நெடுஞ்சாலையில் இருக்கக் கூடிய டாஸ்மாக் கடையும் அகற்றப்பட்டு, ஊருக்கு உள்ளே எங்காவது கொண் டு வரப் பட்டால், உடனடியாக அங்கே திரண்டு போர்க்கோலம் பூணக்கூடிய வர்கள் பெண்மக்களாகத்தான் இருக்கிறார்கள்.இது ஜெயலலிதா அரசுக்குஅடிக் கிற முதல் எச்சரிக்கை மணி. பெண் மக்கள் உங்களுக்கு எதிராகப் புறப்படுகி றார் கள், புரிந்துகொள்ளுங்கள்.

மதுக்கடைகளை நீங்கள் மையமாக வைத்தே கருவூலத்தை நிரப்புவது என்று நினைத்தால், ஒரு கட்டத்தில் அந்தக் கருவூலம் இருக்கக்கூடிய அரசே உங்க ளுக்கு இல்லாத சூழல் வரும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவச் சகோதரர்களுக்குச் சொல் கிறேன், உங்களுக்கு மிக முக்கியமான
கடமை இன்னொன்று இருக்கிறது. ஈழம் சார்ந்து நீங்கள் தெருவுக்கு வந்தது
என்பது சரி.தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் போர்க்குரல் கொடுத் திருப்பது மிகச் சரி.

இந்த மண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கக்கூடிய இன
உணர்வை மொழிப் பற்றை மீட்டெடுப் பதற்கு புறப்பட்டிருக்கிற ஒவ்வொரு
மாணவனின் பாதத்திலும் நான் தலைவைத்து வணங்கத் தயாராக இருக்கி றேன். அதே நேரத்தில் நண்பர்களே, உங்கள் சமுதாயம் தான் இந்த மதுவினா லே மிக மோசமாக பாதிக்கப்பட இருக்கிறது.

ஒரு கோடி வாக்காளர்களாக மாணவர்கள் இன்றைக்கு தமிழகம் முழுவதும்
இருக்கிறார்கள். பதினெட்டு வயதாகி கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கிற
ஒவ்வொருவரும் ஒரு வாக்காளராக இருக்கிறார். அரசியல் நிலையை எழுதக் கூடிய ஆயுதம் அவர்கள் கையிலே இருக்கிறது.

இந்த ஒரு கோடி மாணவர்களும், இரண்டு கோடி பெண் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து வாக்குச் சாவடிக்குச் செல்கிறபொழுது மதுக்கடை களைத் திறந்து வைத்த கருணாநிதிக்கும், மதுக்கடைகளை நடத்திக்கொண்டு இருக்கிற ஜெய லலிதா வுக்கும் நாங்கள் வாக்களிப்பது இல்லை என்று அவர்கள் முடிவெடுத் துவிட்டால், அரசியல் மாற்றம் நிச்சயம் வரும்.

மது இல்லா மாநிலம்

மது இல்லாத ஒரு மாநிலம் வேண்டும் இல்லையா? அந்த மது இல்லாத மாநி லத்தை வரவழைப்பதற்கு ஒரு ஆள் வேண்டுமா? இல்லையா?நாற்காலி இருக் கிறது. நாற்காலியில் இருப்பவர் களை அகற்றி விடுகிறோம். அகற்றி விட்ட பிறகு அந்த நாற்காலியை வெறுமனே வைத்துக்கொண்டு நாம் என்ன இராம னுக்குப் பின்னால் பரதன் செருப்பு வைத்து ஆண்டதைப் போலவா ஆண்டு கொண்டிருக்க முடியும்? அங்கு ஒரு மனிதன் உட்கார வேண்டுமல்லவா? அந்த மனிதன் யார் என்பது தான் என் சிந்தனைக்குள் சதா சர்வகாலமும் கூடு கட்டிக்
கொண்டிருக்கிறது.

பிளாட்டோ சொன்னதுதான்,கிங் ஃபிலாசபர், ஃபிலாசபர் கிங் என்று சொன்னார். எவன் ஆட்சியாளனாக இருக்க வேண்டும்? தத்துவமேதை ஆட்சியாளனாக இருக்க வேண்டும் என்றான். தத்துவமேதை என்று சொன்னதற்குக் காரணம் என்ன? தத்துவம் அறிந்தவன் வாழ்வைப்புரிந்தவன். வாழ்வைப் புரிந்தவன் பற் றற்றவனாக மட்டும்தான் இருப்பான். அவனுக்கு பணத்தின் மீது பற்று இருக் காது. பதவியின் மீது பற்று இருக்காது. சுயநலம் இருக்காது. எனவே, பற்றற் றவன்தான் நாற்காலியில் அமர வேண்டும் என்று 2,300 ஆண்டுகளுக்கு முன் னால் பிளாட்டோ சொன்னான்.

நான் பார்க்கிறேன் தமிழகத்தில் வாரிசு அரசியலை வளர்க்காத ஒரு தலைவன்
யார்? ஆம். தமிழகத்தில் இன்று என் கண் முன்னால் பார்க்கிறபோது வைகோ
தெரிகிறார். ஊழலற்ற ஒரு மனிதனாக,நடந்து முடிந்த பாதையில் ஊழலின்
நிறம் படியாத ஒரு மனிதனைத்தான் அந்த இடத்தில் கொண்டுபோய் உட்கார
வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறபொழுது, அப்படி ஒரு மனிதன் யாராக இருக்கிறார், இந்த ஒரு மனிதரைத் தான் நாம் பார்க்கிறோம்.

நண்பர்களே, நேர்மையாளனாக, நெறி சார்ந்தவனாக, ஒழுக்கம் உள்ளவனாக,
வாரிசு அரசியலை வளர்க்க விரும்பாத வனாக, பதவி மோகம் பிடித்து அலை யாதவனாக, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்துக்காகவும் தன்னை முற்றாக அர்ப் பணிக்கக்கூடியவனாக ஒரு மனிதன் என் கண்ணில் தென்படுகிறான். 

அந்த மனிதனை நான் ஓவியமாகத் தீட்டுகிறபொழுது வந்து நிற்கக் கூடிய வடி வம் தான் வைகோ. இந்த வைகோவுக்கு இப்பொழுது இருந்தே நீங்கள் மகுடம் தயாரிப்பதற்குப் புறப்பட வேண்டும்.

நம்மை நாம் நம்ப வேண்டும்

நான் முதலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து
வைகோவின் பின்னாலே நடந்து நடந்து கால்கள் மட்டும் தேயவில்லை, வாழ் வே தேய்ந்துபோன அந்தத்தொண்டர் களுக்குச் சொல்கிறேன்,முதலில் நீங்கள்
நம்பிக்கை கொள்ளுங்கள். என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை என்றால், வேறு எவன் என் மீது நம்பிக்கை வைப்பான். நான் எதிர்பார்ப்பது, நாம் நம்ப வேண்டும். ஒவ்வொரு தொண்டனும் நம்ப வேண்டும். இந்த மண்ணில் அரசி யல் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய மனிதர் நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய எங்கள் தலைவர் வைகோதான் என்று.

என்னிடத்தில் தமிழகத்தில் முக்கியமான ஒரு அரசியல் தலைவர் கேட்டார்.
நீங்கள் என்ன எல்லோரையும் விட்டு விட்டு வைகோவைப் போய் ஆதரிக்கி றீர்கள்? என்று கேட்டார். நான் சொன்னேன், நான் முதலமைச்சராக வரவேண் டும் என்று சொல்லவே இல்லை, எங்கேயும். இப்பொழுது ஒன்றும் இல்லை நண்பர்களே, ஐந்து பேரை வைத்துக்கொண்டு ஒரு கட்சி தொடங்கினால் கூட அவன் தன்னை ஒரு முதல்வனாக நினைத்துக்கொண்டுதான் புறப்படவே செய் கிறான். அந்தக் கனவு எனக்கில்லை. அந்த இடத்திற்கு வருகிற ஆசையும் இல்லை. அப்படி என்றால் யார் இருப்பது? நான் வைகோவைச் சொல்கிறேன்.

சாதி பார்த்து அரசியல் செய்யாத மனிதன் வைகோ. மதம் பார்த்து அரசியல்
செய்யாத மனிதன் வைகோ. நண்பர்களே, இன்றைக்கு சாதி மதங்களைக் கடந் து மனிதம் பார்த்து ஒரு நேர்மையான அரசியலை இந்த மக்களுக்கு முன்னா லே கொண்டு போய் நிறுத்துவதற்காக வேள்வி நடத்துகிற வைகோவை நான் சாதிகளைக் கடந்தும், மதங்களைக் கடந்தும், தமிழ் இனம் சார்ந்த ஒரு மனித னாகப் பார்ப்பதனால், இந்த இனத்தின் நன்மைக்கு அவர் வரவேண்டும் என்று சொல்கிறேன்.

இன்னொரு தலைவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது கேட்டார். சிரித் துக்கொண்டே கேட்டார். மணியன்,‘வைகோ நல்லவர் என்கிறீர்கள்.அதில் ஒன் றும் மாற்றுக் கருத்து இல்லை. வைகோ நல்லவர். வைகோ நேர்மை யாளர். வைகோ கடும் உழைப்பாளி.வைகோ போர்க்குணம் கொண்டவர்.வைகோ இடை யறாமல் போராடிக்கொண்டிருப்பவர். எல்லாம் சரி. ஆனால்,ஒன்று யோசித்தீர்களா?’ என்று கேட்டார்.அவரைப் பற்றி அத்தனை நல்ல செய்தி களை யும் நீங்கள் சொல்லி விட்டீர்களே. பிறகு என்ன யோசிப்பது என்றேன். இல்லை அவர் களமாடுகிற இடங்களை தயவு செய்து யோசியுங்கள் என்றார். என்ன என்று கேட்டேன்.

ஒரு நாளும் மூடப்போவதே இல்லை கூடங்குளம் அணுமின் நிலையம். அதை
மூட வேண்டும் என்று அங்கே போய் நிற்கிறார்; ஒரு நாளும் வரப்போதில்லை
தமிழ் ஈழம். அது கிடைக்க வேண்டும் என்று அதற்காகக் குரல் கொடுக்கிறார்.
அவர் எவ்வளவு தெளிவாகச் சொல்கிறார் என்று பாருங்கள். ஒரு நாளும் வரப் போவதில்லை தமிழ் ஈழம், அதற்காக அவர் குரல் கொடுத்துக்கொண்டு இருக் கிறார். 

ஒரு நாளும் மூடப்போவதில்லை இந்த கூடங்குளம் அணுமின் நிலையம் அதற் காகப் போய் போராடுகிறார். ஒரு நாளும் மதுக்கடைகள் மூடப்போவ
தில்லை அதற்காக நடந்துகொண்டு இருக்கிறார். எவை எல்லாம் இந்த மண் ணில் நடப்பதற்கு வாய்ப்பே இல்லையோ? அவற்றை மட்டும் தான் தேர்ந் தெ டுத்து அந்த மனிதர் தன் வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறார். இது உங்க ளுக்குப் புரியவில்லையா என்று கேட்டார்.

தலைமை.... ஆளுமை... புரட்சி...

நான் சொன்னேன், நண்பரே நடக்கக் கூடியது எல்லாம் செய்து முடிப்பதற்கு
சாதாரண மனிதர்களாலேயே முடியும். ஒரு நோஞ்சான் எழுந்து நின்று ஒரு வனை கீழே தள்ளிவிட முடியும் என்றால், அதை செய்வதற்கு ஒரு பலவா னைத் தேடிக்கொண்டு புறப்படு வானா? நடக்க முடியாது என்று சொல்லக் கூடியவற்றை நடத்திக் காட்டுவதற்குப் பெயர்தானே தலைமை. அதற்குப் பெயர்தானே ஆளுமை. அதற்குப் பெயர்தானே புரட்சி. அதற்குப் பெயர்தானே சரித்திரம். 

நடக்காது என்று சொன்னீர்கள்,ஸ்டெர்லைட் மூடப்பட்டுவிட்டதே! யோசியுங் கள். 500 கோடி அல்ல, 5,000 கோடி கொடுத்தும் வைகோவை விலைக்கு வாங்கி விட முடியும் என்றால், ஸ்டெர்லைட் திறக்கப்படுமே! விலை வைக்க முடி யாத ஒரு மனிதன் வைகோ என்கிற காரணத்தினாலேதான் இன்று ஸ்டெர் லைட் மூடப்பட்டிருக்கிறது. மூடப்படாது என்று சொன்ன ஸ்டெர்லைட் மூடப் பட்டது இன்று. கிடைக்காது என்று சொல்கிற தமிழ் ஈழம் கிடைக்கப்போகிறது நாளை. மதுக்கடைகளை மூடுவதற்கு வாய்ப்பே கிடையாது என்றீர்களே, இந்த
மதுக்கடைகள் மிக விரைவில் மூடப்படு கின்ற சூழலை வைகோ கொண்டு வந்து சேர்ப்பார்.

தாய்மார்கள் அத்துணை பேரும் இன்றைக்கு வைகோ அவர்களை நெஞ்சிலே வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே நான் சொல்கிறேன், நிறைவாகச்
சொல்கிறேன், இந்த மதுவின் தீமையை யோசியுங்கள். எங்கே இந்தத் தமிழகம்
போய்க் கொண்டிருக்கிறது. கேட்போர் நெஞ்சு உருக, ஒரு அரசியல் செய்தி யைக்கூட கலக்காமல், முழுக்க முழுக்க மதுவின் தீமைகளை மட்டும் நெகிழ்ந்த குரலில் பேசிவிட்டு, அவர் உட்கார்ந்துவிட்டார்.

நண்பர்களே முன்பெல்லாம் காதல் செய்வார்கள். காதலிலே தோற்று விட் டால், ஆசிட் வீசுவானா? இன்று ஆசிட் வீசுகிறான். ஆசிட் வீசுவதற்குப் புறப் படுகிற ஒரு பையன் குடித்து விட்டுத்தான் அந்தக் காரியத்தில் ஈடுபடுகிறான். குடிக்காமல் இருந்தால்,தன்னுடைய நேசத்திற்கு உரியவள் அவள். தன்னு டை ய காதலை அவள்மீது தான் செலுத்தினோம். அவளுடைய உருவத்தை சிதைக் க வேண்டும் என்கிற நினைவு அவனுக்கு வராது. அந்த நினைவு வருவதற்குக் காரணம், அவன் தன்னை மறக்க நினைக்கிறான்,மதுவைக் குடிக்கிறான்.

நேற்று பாலியல் தவறு என்றால், கற்பழிப்போடு முடியும். இன்று பாலியல்
தவறு என்றால், கொலைசெய்து விட்டுத்தான் அடுத்த காரியத்தைப் பார்க்கி றான். ஏன் கொலை செய்தான்? அவன் அவனாக இல்லை. ஒரு உயிரை அவ் வளவு எளிதாக எடுத்துவிட வேண்டும் என்று உணர்வு உள்ளவன் எவனுமே சிந்திக்க மாட்டான். உணர்வு மழுங்கடிக்கப்பட்ட நிலையில், அவன் கற்பழித் துவிட்டு கொலைசெய்கிறான். 

கூலிப் படையை எடுத்துக்கொள்ளுங்கள், அதற்கு முன்பு கூலிப் படை என்று நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? பதினெட்டு வயது, இருபது வயது, இரு பத்தைந்து வயது இளைஞர்கள் இன்றைக்கு கூலிப்படை களாக மாறி விட்டார் கள். எவரையும் கொல்லுவதற்குத் தயாராகிவிட்டார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுப்பது போய், ஒரு இலட்சம் கொடுங்கள் என்று வாக்குறுதி வாங்கிவிட்டு , பத்தாயிரத்தை கையிலே வீசினால் போதும், சர்வ சாதாரணமாக கொலை செய்துவிட்டு வருகிறான். அவன் அப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? அவன் குடித்துவிட்டுத்தான் அந்தக் காரியத்தில் ஈடுபடுகிறான். அத்தனை
சமூக விரோதச் செயல்களும் குடியின் மூலமாகத்தான் நடந்துகொண்டு
இருக்கின்றன.

பெற்ற பிள்ளையை காமத்தோடு பார்ப்பதற்கு ஒரு சாதாரண மனிதனால் சாத் தியப்படுமா? அவன் குடிப்பதால் தான் அந்தக் காரியம் நடக்கிறது. எனவே ஒரு சாதாரணக் காரியத்தை எடுத்துக்கொண்டு ஒரு வேள்வியை நம்முடைய
வைகோ அவர்கள் நடத்தவில்லை. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமும் பாதிக் கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகை யில் இந்த மதுவினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மதுவினால் பாதிக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கக்கூடிய மக்களும் சிந்திக்க வேண்டும்.

இரண்டே இரண்டு செய்திகள் தான் ஒவ்வொருவருக்கும் முன் இருக்கிறது.
என்ன தெரியுமா? ஒன்று குடிக்கும் இடத்தை நோக்கி நடக்காமல் இருக்க வேண் டும். யாருமே டாஸ்மாக் கடைக்குப் போகவில்லை என்றால், டாஸ் மாக் கடை மூடப்படும். 

ஆனால், அது நடக்காது என்கிறபொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? டாஸ் மாக் கடைகளை வைத்திருப்பவர்கள் யாரோ அவர்களை வீட்டுக்கு அனுப்பி னால், நம் வீட்டில் இருந்து வெளியே போனவர் களை நாம் பாதுகாப்பாக வீட் டிற்குள்ளே கொண்டுவந்து சேர்க்க முடியும். சிந்தியுங்கள். நான் இப்பொழுது வைகோ சொன்னதுபோல், வாக்குகளைக்கேட்பதற்காக அவர் நடக்கவில்லை.
வாக்குகள் கேட்பதற்காக இந்த மேடை போடப்படவும் இல்லை.

பண்பாட்டைப் படுகுழியில் தள்ளிய கருணாநிதி

எந்தத் தனி மனிதரையும், இழித்தும் பழித்தும் பேசுவது நம்முடைய நோக்கம்
இல்லை.கருணாநிதி மீது நமக்குக் கோபம் இல்லை. மதுக்கடைகளைக்கொண் டு வந்து தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டின் ஆணிவேரை அறுத்தெறிந்த மனி தர் என்பதனால், அவர் மீது நமக்குள்ள வருத்தத்தைப் பதிவு செய்கிறோம். மீண் டும் அவர் எந்தக் காலத்திலும் அரசியலிலே எழுந்து நிற்கக்கூடாது என்று நான் நினைப்பதற்குக் காரணமே இந்தப் பண்பாட்டைப் படுகுழியில் தள்ளி விட் டார் என்பதுதான்.

ஜெயலலிதா ஆயிரம் சலுகைகளை அள்ளி வழங்கலாம். ஆனால், ஒரு குடம்
பாலில், ஒரு துளி விசம் என்று வந்து விட்டால், அந்தப் பாலை எவனாவது
குடிக்க முயல்வானா? எனவே இந்த டாஸ்மாக் கடை என்பது ஜெயலலிதா வின் ஆட்சியில் இருக்கக் கூடிய விசம்.ஜெயலலிதாவின் ஆட்சியில் பற்றி
படர்ந்திருக்கிற களங்கம்.

எனவே ஜெயலலிதா மதுக்கடைகளை மூடட்டும். வைகோ நடந்ததனால்,இந்த
மதுக்கடைகள் மூடப்பட்டது என்று ஒரு நாளும் வைகோ வாய் திறந்து சொல் ல மாட்டார். தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய மதுக்கடைகளின் எதிர்ப்பாளர்கள்
நாங்கள் குரல் கொடுத்ததாலேதான் இது மூடப்பட்டது என்று யாரும் சொல்ல
மாட்டோம். ஜெயலலிதா மதுக்கடை களை மூடட்டும். அந்தப் பெருமை ஜெய லலிதாவுக்கே போய்ச் சேரட்டும்.எங்களுக்கு தமிழகம் பிழைத்தால் போதும்.

நத்தம் விஸ்வநாதன் என்கிற ஒரு நல்ல மனிதர் அமைச்சராக இருக்கிறார். அவர் சொல்கிறார், எல்லா மாநிலங்களிலும் மதுக்கடைகள் மூடப்படட்டும். அதற்குப் பிறகு நாம் யோசிப்போம் என்கிறார். நான் நத்தம் விசுவநாதனிடம் கேட்கிறேன்.எல்லா மாநிலங்களிலும் லாட்டரிச் சீட்டு இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா லாட்டரிச் சீட்டை முற்றாக ஒழித்தார் என்று பெருமை பேசுகிறீர் களே, மற்ற மாநிலங்களில் லாட்டரி சீட்டு இருக்கிற பொழுது தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு இருப்பதில் என்ன தவறு என்று கேட்க வில்லையே? சரி நான் கேட்கிறேன், மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் எல்லாம் குடித்து அழிவதாக வே இருக்கட்டும்.அவர்கள் குடித்து அழிகிறார்கள், எனவே தமிழ்ச் சாதியும் குடித்து அழிய வேண்டும் என்று சொல்வது நியாயமா?அவர்கள் அழிந்தாலும், எங்கள் தமிழ் இனத்தை வாழ வைப்பதற்காகவே நாங்கள் மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லுகிற ஆட்சி நடக்க வேண்டும்.

நான் நினைக்கிறேன் அப்படி ஒரு மாற்றம் இந்தத் தமிழகத்தில் வர வேண்டும் என்றால், இருப்பவர்களை வைத்து நடக்காது. ஆள்பவர்களை மாற்ற வேண் டும். ஆள்பவர்களை மாற்றுவது நாளையே அல்ல, நான் ஏற்கனவே மறை மலை நகரில் சொல்லி விட்டுப் போனதை இப்பொழுதும் சொல்கிறேன், 2016 வரை சகோதரி செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருக்க வேண் டும். அவர் இருக்க வேண்டும்.

ஏனென்றால் அந்த இடத்திற்கு கருணாநிதி பரிவாரம் வராமல் பாதுகாக்க அந்த நாற்காலியை அவர் வைத்திருக்க வேண்டும். 2016 இல் சட்டமன்றத் தேர்தல் வருகிற பொழுது நாம் அனைவரும் இந்த மது இல்லாத மாநிலம் என்ற ஒன் றை உருவாக்க வேண்டும் என்று யோசித் தோமே, அது நிறைவேற வேண்டும் அல்லவா? 

தமிழ் ஈழம் குறித்து இந்திய அரசினுடைய வெளிவிவகாரக் கொள்கையை மாற் றக்கூடிய அளவுக்கு ஒரு போர்க்குரல் கொடுக்கின்ற, ஒரு மிகப்பெரிய தளகர்த்தனாக இருக்கக் கூடிய மனிதன் முதல்வராக வந்து நிற்க வேண்டும். அது நடக்க வேண்டு மல்லவா? இப்படி ஒவ்வொன்றாக, நீங்கள் சிந்திக்கச் சிந்திக்க அந்த இடத்தில் வைகோ என்கிற மனிதனைக்கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று நினையுங்கள். ஒரு வரி சொல்கிறேன்.நெஞ்சுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள்.

எதை நீங்கள் பாவித் தீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறுகிறீர்கள்.பைபிளை எடுத்துக் கொள்ளுங்கள் எதை ஒருவன் சதா சர்வ காலமும் சிந்திக்கிறானோ அவன் அதுவாகவே ஆகிவிடுகிறான் என்று கர்த்தர் சொல்கிறார்.

நீங்கள் சதா சர்வ காலமும் 2016 வரை சிந்தித்துக் கொண்டே இருங்கள். அரசி யல் மாற்றம் நிகழ வேண்டும். அந்த மனிதன் ஓடினாலும், ஓடுகிற மனிதனை
தேடிப் பிடித்து இழுத்துக்கொண்டுவந்து அந்த நாற்காலியில் அமர்த்துவது அவ ருக்காக அல்ல. ஒட்டுமொத்த தமிழ்ச் சாதியின் நலனுக்காக என்று நீங்கள் சிந்திப்பதை இப்பொழுதில் இருந்தே, இன்றிலிருந்தே தொடங்குங்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

தமிழருவிமணியன் இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment