Wednesday, May 15, 2013

தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்த இந்திய அரசின் முகத்திரையைக் கிழிப்போம்!- பகுதி 2

வாலிபர் கூட்டத்தை அழைக்கிறேன், இளைஞர் கூட்டத்தை அழைக்கிறேன். முத்துக்குமார் போன்ற வீர இளைஞர்களின் தியாகத்தை எண்ணிப் பாருங்கள்
-வைகோ (27.10.2009)


முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழர்களை விடுவிக்கக்
கோரியும்,இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்தும்,  இலங்
கை த் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் நான்கு முனை களில் இருந்தும் திருச்சியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பிரச் சாரப் பயணத்தில்தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கழகப் பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் பங்கேற் றனர்.இராமேஸ்வரத்திலிருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்ட கழகப் பொதுச் செயலாளர் வைகோ 27.10.2009 அன்று இராமநாத புரத் தில் திரண்டிருந்த மக்களிடையே ஆற்றிய உரையிலிருந்து...


பகுதி1 யின் தொடர்ச்சி ....

தீர்மானம் போட்டபிறகு ராஜபக்சே வந்தான். பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த பின் வாசலுக்கு வந்தான்.செய்தியாளர்களைச் சந்தித்தான். நிருபர்கள்
கேட்டார்கள், தமிழ்நாடு சட்டசபை போர்நிறுத்தம் வேண்டும் என்று ஒருமன தாக தீர்மானம் போட்டு இருக்கிறதே, அதுபற்றி பிரதமர் உங்களிடம் பேசினா ரா? என்று கேட்டதற்கு, அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? ரொம்பத் திமிரோடு எகத்தாளமாகச் சொன்னான். போர் நிறுத்தமா? அந்தப் பேச்சுக்கே
வேலைகிடையாது. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுகிறவரை சண்டை நிற்காது என்று சொல்லிவிட்டுப் போனான்


போர் யார் யாருக்கு நடக்கிறது? நான் கேட்கிறேன்.போர் நிறுத்தம் என்ற வார்த் தையை எதற்குப் பயன்படுத்தினீர்கள்? போர்நிறுத்தம் யாருக்கும்? யாருக்கும்?
சிங்கள இராணுவத்துக்கும், ராஜபக்சேவின் முப்படை களுக்கும் தமிழ் ஈழ விடு தலைப் புலிகளுக்கும் என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை. அப்படியானால் போர் நிறுத்தம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றினீர்களே, விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் நடக்கின்ற யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானே தீர்மானம்? அவன் விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்டுகிறவரை சண்டை நிற்காது என்று சொல் லி விட்டுப் போனானே! நீங்கள் எதிர்ப்புக் காட்டினீர்களா?

தமிழக சட்டசபைத் தீர்மானத்தைக் காலில்போட்டு மிதிக்கிறானே, அவனுக்கு என்ன தைரியம்? அவன் கொழும்புக்குச் சென்று சொன்னால்கூட கொஞ்சம் பர வாயில்லை எனலாம். நமது ஊரில் நமது தலை வாசலில் நின்றுகொண்டு உடம்பை முறுக்கி என்ன திமிரோடு சொல்லிவிட்டுப் போனான்?மான உணர்ச் சியே நமக்கு இல்லையா?

இந்தத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டிய முதலமைச் சர் அவர்களே, யுத்தத்தை நிறுத்துவதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன?

இன்றைக்கு எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது என்கிறீர்கள். இன்ப நாளிது என்று ஆனந்தப்பள்ளு பாடுகிறீர்கள். சுமூகத் தீர்வு வந்துவிட்டது என்கிறீர்கள்.
சகோதரச் சண்டை ஓடி ஒளிந்தது என்று எழுதுகிறீர்கள்.அப்படியானால் உங் கள் உள்மனதில் அடிமனதில் ஒரு வக்கிரமான எண்ணம் இருந்து இருக்கிறது. புலிகள் அழிய வேண்டும் என்ற எண்ணம். வேறு என்ன இருந்திருக்கமுடியும்? அதனால்தான், எல்லாம் முடிந்துவிட்டது, இன்றைக்கு எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது என்கிறீர்கள். என்ன தீர்வு? இதற்கு முன்பு இருந்த அரசுகள் வெளிப்படையாகச் சொல்லப் பயந்ததை ராஜபக்சே சொல்கிறான்.தமிழர் களுக்கு பூர்வீகத் தாயகமே கிடையாது என்கிறான். தமிழர்கள் ஒரு தேசிய இன மே கிடையாது என்கிறான். இது சிங்களர் தேசம்.இங்கே தமிழர்கள் எந்த உரி மை யும் கொண்டாட முடியாது என்று ராஜபக்சே பகிரங்கமாகச் சொல்லி விட் டான். ஆக, ஐம்பதாண்டு காலப் போராட்டம் வீண்தானா? இதுவரை கொடுக்கப் பட்ட உயிர்கள் எல்லாம் வீண்தானா? சிந்தப்பட்ட இரத்தம் வீண்தானா? எத்த னை அற்புதமான இளைஞர்கள் தங்கள் உயிர்களைக் கொடுத்து இருக்கிறார் கள், எத்தனை இளம் பெண்கள் தங்கள் உயிர்களைக் கொடுத்து இருக்கிறார் கள், எத்தனைத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

சரத் பொன்சேகாவும்,கொத்தபய இராஜபக்சேவும் கொட்டமடிக்கிறார்கள். இங் கு இருந்து அனுப்பப்பட்ட தூதுக்குழு எம்.பி.க்கள் அவர்களோடு கை குலுக்கு கிறார்கள். இதயம் உடைந்துபோன நிலையில் கேட்கிறேன், நீங்கள் யாரோடு கை குலுக்கினீர்கள்? கொத்தபய இராஜபக்சேவும், பொன்சேகாவும்தான் செம் மணியில் அத்தனை பேரையும் கொன்று குவித்தவர்கள். செம்மணியில் புதை குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் - தமிழர்களிலே வய தானவர்களின் எலும்புகள், பெண்களின் எலும்புகள், குழந்தைகளின் எலும்பு கள் -அதில் பல எலும்புக் கூடுகள் கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்த நிலை யில் தோண்டி எடுக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் சென்று அதை வெளியே கொண்டு வந் தார்கள். அந்தக் கொடுமையைச் செய்தவர்கள் சரத் பொன்சேகாவும் - கொத்த பய இராஜபக்சேவும். இவனும் சிங்கள இராணுவத்தில் அன்றைக்கு இருந்தான். அவர்கள் செய்த படுகொலை களை மறந்துவிட்டீர்களே? அதை இந்த உலகம்
மறந்துவிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இவ்வளவுபேரின் சாவுக்கும் காரணமாக இருந்து, இனி ஈழத்தமிழர்கள் உரி
மைக்குப் போராடவே முடியாது என்கிற அளவுக்குக் குரல் வளையை நெறித்து விட்டோம் என்று கொக்கரிக்கின்ற ராஜபக்சே, ‘நாங்கள் அழித்து விட்டோம்; அதை வந்து பார்த்துவிட்டுப் போங்கள் என்று உங்களை அழைத்தான். நீங்கள் சென்றீர்கள். எதற்குச் சென்றீர்கள்?

இதுவரை செவிடாகிப் போயிருந்த உலகத்தின் செவிகள் லேசாகத் திறக்க ஆரம் பித்தன. இதுவரை குருடாகிப் போயிருந்த உலகத்தின் கண்கள் லேசாகத் திறக்க ஆரம்பித்தன. ஈழத்தில் கொடுமைகள் நடக்கின்றன, மனித உரிமைகள் மீறப்படுகின்றன, பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் கற் பழிக்கப்படுகிறார்கள், இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்து வதற்கு உல கம் முன்வரவேண்டும் என்ற குரல் எழுந்த போது ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது.

இனி இலங்கையில் இருந்து வருகிற பொருள்களுக்கு வரிச்சலுகை கிடை யா து என்று. இனிமேல் இலங்கையில் இருந்து வருகிற ஆயத்த ஆடைகளுக்கு வரிச்சலுகை கிடையாது. இந்த ஆண்டு வரிச்சலுகை கொடுக்கப்போவது இல் லை. ஏனென்றால், இலங்கையில் முள்வேலி முகாம்களில் மூன்று இலட்சம் தமிழர்கள் உரிமையற்றுத் தவிக்கிறார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மா னித்தது. வருகிற நவம்பர் 4 ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்போகிறது.

இப்பொழுதுதான் இந்த வஞ்சகத் திட்டத்தை நடத்தினார்கள். அதற்குக் கருவி யாகக் கருணாநிதி பயன்பட்டார்.இவ்வளவு தமிழர்களைக் கொன்றது பற்றி, ஐக்கிய நாடுகள் மன்றத்தில் விவாதம் வேண்டும்.விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வந்த போது, அதை எதிர்த்து ஓட்டுப்போட்டது இந்தியா.நாம் தமிழர் கள் இங்கே ஆறரைக்கோடி பேர் இருக்கிறோம். ஆனால், விசாரிக்க வேண்டும் என்று சொன்ன நாடுகளில், தமிழர்கள் குடிமக்கள் அல்ல. விசாரிக்க வேண்டும் என்று சொன்ன நாடுகள், விடுதலைப் புலிகளைத் தடை செய்த நாடுகள். விசா ரிக்க வேண்டாம் என்று சொன்ன நாடு இந்தியா.

நான் இராமநாதபுரத்தில் இருந்து பேசுகிறேன்.இந்தியாவின் குடிமக்கள் நாங் கள் என்ற அடிப்படை உணர்வை மறந்து விடாமல்தான் பேசுகிறேன்.

ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யப்போகிறது என்று அறிந்த மாத்திரத்தில் தூதுக்குழுவை அனுப்பினார். இது ராஜபக்சேவின் திட்டம். தூதுக்குழு சென்றது. அங்கு விருந்து உபசாரத்தில் திளைத்தது. பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தது. கை குலுக்கியது. தாளம் போட்டது.இல்லை இல்லை - நாங்கள் பெரிய விருந்து சாப்பிட வில்லை, சம்சாவும் டீயும்தான் சாப்பிட்டோம் என்றும் சிலர் சொன் னார்கள்.

ஆனால்,அவனைப் பார்த்தபோது, உங்கள் இரத்தம் கொதிக்கவில்லையா கொல்லப்பட்ட தமிழச்சியின் உருவம் உன் முன்னால் தெரியவில்லையா?அவ னுக்குப் பின்னால் கொல்லப்பட்ட தமிழனின் உருவம் உன் மனதை உறுத்த வில் லையா? அவன் கைகளைப் பார்க்கிறபோது, இந்தக் கைகள் தமிழ்ப்பிள் ளை களைக் கொன்று குவித்த இரத்தம் தோய்ந்த கரங்கள் என்ற எண்ணம் ஏற் படவில்லையா? உணர்ச்சி செத்துப் போய் விட்டதா?

சர்வதேச விதிகளின்படி அகதிகள் கவனிக்கப் படுகிறார்கள் என்று இந்தத் தூ துக்குழு கூறியதாக,இலங்கை அரசு அறிக்கை வைத்தான்.பாருங்கள். ஐரோப் பா கண்டம் அவனுக்குத் தடைவிதிக்க முற்படுகிறது.

அந்தத் தடையை உடைப்பதற்கு இந்தியா முயற்சிக்கிறது.பொருளாதாரத்தடை கொண்டுவர வேண்டிய இந்தியா, வெளிநாட்டுக்காரன் தடையை உடைப்ப தற்கு உதவுகிறது. சிங்களத்துக்காரனுக்கு கைக்கூலி வேலை பார்க்கிறார் இந் தியப் பிரதமர் மன்மோகன் சிங்.தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்மீது எந்த வருத்தமும் கிடையாது. நான் மதிக்கின்ற நபர்தான்.

ஆனால்,அவர் செய்கிற காரியம், இந்த அரசு செய்த உதவி.எப்படி மன்னிக்க மு டியும் உங்களை? எங்கள் மக்களைக் கொல்வதற்கு நீங்கள் அத்தனை உதவி களையும் சிங்களத்துக்காரனுக்குச் செய்தீர்கள். இவ்வளவு செய்து தமிழ் மக்க ளைக் கொன்றுகுவித்து, சாகடித்து இத்தனை ஆண்டுகால போராட்டத் தையும் அழிக்க முற்பட்டு இனி என்றைக்குமே அவன் நிரந்தர இருளில் இருக்க வேண்டுமா?

எங்கள் அன்புத் தோழர்களே, ஒருகாட்சி குறுந்தகட்டில் வந்திருக்கிறது. நான்
காவல் துறை நண்பர்களுக்குச் சொல்கிறேன். புலிகள்படம் போட்ட குறுந்தகடு கள் வெளியிடக்கூடாது என்று தலைமைச் செயலாளர் அறிக்கை விட்டார், கரு ணாநிதியின் யோசனையைக்கேட்டு. நான் உங்களுக்குச் சொல்கிறேன். நீங்க ளும் தமிழர்கள்தான்.உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும் அந்த உணர்ச்சிகள்தான் இருக்கும். யாருக்கும் தெரியாமல் அந்தக் குறுந்தகட்டை உங்கள் வீட்டில் போட் டுப் பாருங்கள்.தமிழ் உணர்வு உள்ள காவல்துறை அதிகாரிகளுக்குச் சொல்கிறேன்.

அதற்காக காவல்துறையைத் தூண்டிவிட்டான் வைகோ. கட்டுப்பாட்டை உடைப்பதற்கு முயற்சித்தான் என்று வேண்டுமானாலும் அரசு என்னைக் குற் றம் சாட்டட்டும். நாங்களும் தமிழர்கள்தான் என்ற உணர்வோடு பாருங்கள். முத்துக்குமாரை எண்ணிப்பாருங்கள்.24 வயதில் திருமணமாக வேண்டிய வா லிபன் எதற்காகத் தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி நெருப்பில் குளித்தான்? இன்றைக்கு இந்த நெருப்பு வெயிலில் நிற்கிறீர்கள். நெருப்பில் வெந்தானே முத்துக்குமார்.

இன்றைக்குப் பக்கம் பக்கமாக கவிதை எழுதுகிறாரே மாநாட்டுக்காக? வர்ணிக்
கின்றாரே? அண்ணன் நெடுமாறனை நெடுமரம் என்று இடித்து உரைக்கிறாரே?
நான் கேட்கிறேன், இந்த 14 பேர் தீக்குளித்தபோது உங்களுக்கு உணர்ச்சி இல் லையா? 14 பேர் தமிழ்நாட்டில் தீக்குளித்தார்களே, திராவிட முன்னேற்றக் கழ கத் தைச் சேர்ந்த 2 பேர் உள்பட 14 பேர் தீக்குளித்து இறந்தார்கள். யாருக்காவது இரங்கல் தெரிவித்தாரா முதல் அமைச்சர்?

உயிராயுதமாக என்னைத் தருகிறேன் என்றான் முத்துக்குமார். என் சக தமிழர்
களைக் கேட்கிறேன். இலங்கையில் கொல்லப்படுகிற பெண் உங்கள் சகோத ரியாக, தாயாக இருக்கிறாள் என்று எண்ணிப் பாருங்கள். அங்கே கொல்லப்
படுகிறவன் உங்கள் தகப்பனாக உங்கள் மாமனாக மச்சானாக அண்ணனாக
இருக்கிறான் என எண்ணிப் பாருங்கள். அங்கே கொல்லப்படுகிற குழந்தை நீங் கள் பெற்றெடுத்த பச்சைப் பிள்ளையாக இருப்பதாக எண்ணிப் பாருங்கள் என்று சொல்லிவிட்டுத் தானே தீக்குளித்தான்.

அப்படித் தீக்குளித்த அந்த தியாகிகளை நினைத்துக் கொண்டு பாருங்கள். இழுத் துக் கொண்டுவருகிறான். வெள்ளையர்கள் மருதுபாண்டியர்களைக் கொன்ற தை நினைக்கிறபோது இரத்தம் கொதிக்கிறது. ஆனால், அவன்கூட அந்த இழி செயலைச் செய்யவில்லை. வெள்ளைப் படைகள் தமிழ்ப் பெண்களைக் கற்ப ழிக்கவில்லை.வெள்ளைப் படைகள் தமிழ்க் குழந்தைகளைக் கொன்று குவிக்க வில்லை. அவன் கொடுமைப்படுத்தினான். ஆனால், மருது பாண்டியர்களை அவமானப்படுத்த வில்லை. சின்னமருதுவை கூண்டில் கொண்டு சென்றான். ஆனால், நிர்வாணப்படுத்தி அல்ல.

ஆனால்,அங்கே இலங்கையில் வாலிபர்களைக் கைகளைக் கட்டி இழுத்து வரு கிறான். கைகளைப் பின்புற மாக வளைத்து அந்தக் கைகளுக்கு விலங்கு போட் டு பூட்டி, அதில் ஒரு கயிற்றையும் கட்டி வைத்து இருக்கிறான்.என்ன காரணம் தெரியுமா? இப்படி ஏராளமானவர்கள் ஒன்றாகக் கயிற்றால் கட்டப்பட்டு இருக் கிறார்கள். அதில் ஒரு பகுதியை அறுத்து இழுத்துக் கொண்டு வருகிறார்கள்.

ஆடையற்றக்கோலத்தில்,அம்மணக்கோலத்தில்,பிறந்தமேனியாக, கொஞ்சம்
யோசியுங்கள். நாஜிகள் இந்தக் கொடுமையை யூதர்களுக்குச் செய்யவில்லை. உலகில் இந்தக் கொடுமை வேறு எங்கும் நடக்கவில்லை. இந்த உலகத்தில் காட்டுமிராண்டி களாகத் திரிந்த மனிதர்கள் மானத்தோடு வாழ்வதற்கு ஆடை அணிகின்ற கலையை இந்த அகிலத்துக்கே தந்தவன் தமிழன். நம் மூதாதையர்.

ஆனால், அந்தத் தமிழனை நிர்வாணக் கோலத்தில் இழுத்துவந்து மண்டியிடச்
சொல்லி, பின்னால் நின்று எட்டி மிதிக் கிறார்கள். அந்த வீரப்பிள்ளைகள் அப்
பொழுதும் சத்தம் போடாமல் முனகாமல், கூச்சல்போடாமல் இருக்கிறார்கள்.
பிடறியில் சுடுகிறான். அப்படியே செத்து விழுகிறார்கள். இரத்த வெள்ளத்தில்
கிடக்கிறார்கள்.

இப்படி எட்டுபேர் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சி, குறுந்தகட்டில் இருக்கிறது.
இணையத்தில் இருக்கிறது.இது உண்மைக்காட்சி என்று அமெரிக்க நிபுணர்கள் சொல்லிவிட்டார்கள்.ஆனால், தமிழக முதலமைச்சர் ராஜாதி ராஜ ராஜமார்த் தாண்ட ராஜகுலதிலக கருணாநிதியிடத்தில் கேட்டவுடன் சொல்கிறார், ‘இது பழையபடம் மாதிரி தெரிகிறதே’ எனக் கேலி செய்கிறார்.திராவிட முன்னேற் றக் கழகத்தின் பழைய தோழர்களுக்குச் சொல்கிறேன்.

இதே இராமநாதபுரம் சீமையிலேதான், சத்தியந்திரேன் வரவேற்புக்குழுத்தலை வராக இருந்தபொழுது, இந்த வைகோ பேசினான். 1983 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி பேசினான். அந்த இராமநாதபுரம் மாநாட்டில் பேசியபோது, இன் றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற பழைய தோழர்களுக் குச் சொல்கிறேன்.

அன்றைக்கு அந்தக் கூட்டத்தில் பேசும் போது சொன்னேன். ‘பிரபாகரனே, தமிழ்த் தாயின் தலைமகனே வா; இது தாயின் மடி என்று இந்தத் தமிழகத்து மண்ணுக்கு வா! உன்னை நான் அழைக்கிறேன்! இராமநாதபுரம் மாநாட்டில் இருந்து அழைக்கிறேன் வீரமறவர் உலவிய சீமையில் இருந்து உன்னை அழைக்கின்றேன்! தாயின் மடி என்று வா! உன் காயங்களை எங்கள் கண்ணீ ரால் குளிப்பாட்டு கிறோம்! உன் காயங்களுக்கு நாங்கள் முத்தமிடுகிறோம்! என்று பேசிய பேச்சை இன்றைக்கு நினைத்தாலும் அந்தப் பேச்சைக் கேட்டு நான் வழிந்தோடிய கண்ணீரைத் துடைக்காமல் இருந்தேன் அண்ணா! என்று நேற்றைக்கு இரவுகூட பழனிசாமியும், நென்மேனி ஜெயராமனும் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அந்த உணர்ச்சி இந்த உடம்பில் உயிர் இருக்கின்ற வரை இருக்கும்.

இது அரசியலுக்காகவோ, ஓட்டுக் காகவோ, சுயநலத்துக்காக வோ அல்ல.உல கத்தின் புராதனமான கலாச்சாரத்தை வளர்த்த தமிழ் மண்ணில் பிறந்தோம். தமிழகத்தில் உணர்ச்சி செத்துப் போகாது.நிச்சயமாகச் சொல்வேன். இதற்குப்
பிறகும் ஈழத்துத் தமிழர்களை அழித்துவிட்டோம் என்று நினைத்தால்,விழ விழ எழுவோம், ஒன்று விழ ஒன்பதிண்மராய் எழுவோம். ஓராயிரம் பேராய் எழு வோம், இன்னும் எழுவோம்.

எங்களைப் பொறுத்தமட்டில் விடுதலைப்புலிகளை என்றைக்கும் ஆதரிப்பவர் கள். அவர்கள் அழிந்துவிடவில்லை. அழிக்க முடியாது. அந்த மண்ணில் புல் பூண்டு முளைத் தாலும்கூட சிங்களவனுக்கு அடிமைச் சேவகம் செய்ய அனு மதிக்காது.

ஆகவே,இந்தத் தமிழகத்தில் தமிழ்நாட்டு மக்களிடத்தில் தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைச் சுட்டிக் காட்டவே வந்து இருக்கிறேன்.அங்கு கொன்றது மட்டுமல்ல, நமது மீனவர்களை நாள்தவறாமல் சுடுகிறானே,அரசா நடக்கிறது? நாங்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? பாகிஸ்தான் காரன் மும்பையில் துப்பாக்கிச் சூடு நடத்தினான். பாகிஸ்தான் தேசியக் கொடியைப் போட்டுக் கொண்டுவந்து துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.தீவிரவாதிகள்வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அவர்கள் தண்டிக் கப்பட வேண்டியவர்கள். அதற்காக, பாகிஸ்தானோடு போர் புரிவதற்கும் தயார் என்று முண்டா தட்டிய மத்திய அரசைக் கேட்கிறேன்.

பாகிஸ்தான் அரசு சொன்னதா? எங்கள் கொடி போட்ட கப்பலில் அவர்கள் வந் தார்கள் என்று. கிடையாதே? ஆனால், இங்கே இலங்கை அரசின் கொடி பறக் கின்ற கப்பலில் சிங்களக் கடற்படைக்காரன் வந்து நாள்தவறாமல் எங்கள் மீன வர்களைச் சுடுகிறான். தொழிலுக்குப் போக முடியவில்லை.கடலுக்குப் போக முடியவில்லை. சிங்கள அரசுக்கு பக்கத் துணையாக இருந்து தமிழர் களுக்கு துரோகம் செய்கின்ற இந்திய அரசின் முகத்திரையைக்கிழிப்பதுதான் எங்களு டைய வேலை.

ஆகவே, அன்புக்குரிய தமிழ் மக்களே, குற்றவாளிக்கூண்டில் கொலைகாரன்
ராஜபக்சே நிறுத்தப்படுவதற்கு உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் ஒன்று திரள வேண்டும். எல்லாம் முடிந்து விட்டது. போர் முடிந்துவிட்டது.புலி கள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சிலர் நினைத்துக் கொண்டு இருக்கலாம்.
இப்பொழுது இருள் சூழ்ந்த நேரம். ஆனால், இதுவே உன்னதமான நேரம். இப் பொழுதுதான் - எப்படி பீனிக்ஸ் பறவை எழுமோ அதைப்போல, உணர்ச்சி-புதிய உணர்ச்சி - வீறுகொண்ட உணர்ச்சி - உலகம் முழுவதும் இருக்கின்ற தன்மான உணர்ச்சி உள்ள தமிழர்கள் உள்ளத்தில் உதிக்கின்றது.நாம் ஒரு சேரஎழுவோம். தமிழ் ஈழத்தை வென்றெடுக்க, விடுதலைப்புலிகள் போர் தொடுப்பார்கள். அந்த வீரச்சமரை பிரபாகரன் நடத்துவார். வெல்வார்.

விதியே விதியே என்செய நினைத்தாயடா என் தமிழ்ச் சாதியை என்றானே
முண்டாசுக் கவிஞன், சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந் தை இரங்காத பாவிகள் அல்ல நாங்கள் என்ற உணர்வோடு எழுவோம். வாலி பர் கூட்டத்தை அழைக்கிறேன், இளைஞர் கூட்டத்தை அழைக்கிறேன். முத்துக்
குமார் போன்ற வீர இளைஞர்களின் தியாகத்தை எண்ணிப் பாருங்கள்.ஈழத்துத் தமிழர்களின் போராட்டம் முடியவில்லை. முன்னைவிடக்கொடுமையாக அவர் களை அடிமை களாக்க முயற்சிக்கின்றான். முள்வேலி முகாம்களில் இருந்து அவர்களை மீட்பது மட்டுமல்ல, பூட்டப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்து எறிவது ஒன்று தான் நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.

எங்களைப் பொறுத்தமட்டில் இறையாண்மை உள்ள தமிழ் ஈழம் அதுவே தீர் வாக முடியும். கொசோவா பிறக்கிறபோது, மாண்டிநீரோ தனி நாடாகிறபோது, கிழக்கு தைமூர் தனி நாடாகிறபோது, வங்கதேசம் உதிக்கிற போது, ஏன் தமிழர் களுக்குத் தனிநாடு கூடாது? இந்தக் கேள்வியை ஒவ்வொரு வாலிபனும் எண் ணிப் பார்க்க வேண்டும்.கொதிக்கும் நெருப்பு வெயிலையும் பொருட் படுத் தா மல், இந்த எளியவனின் பேச்சைக்கேட்ட உங்கள் அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

கொடியவன் ராஜபக்சேவைக் கூண்டில் நிறுத்துவோம். தமிழக மீனவர்களைக்
காப்போம். ஈழத்தமிழர் உரிமைப்போருக்கு என்றைக்கும் தோள் கொடுப்போம். இன்றைய நிகழ்ச்சி மருத்துவர் அய்யா இராமதாஸ் சென்னையில் தொடங் கினார். அண்ணன் நல்லகண்ணு முக்கடல் தாலாட்டும் குமரியில் தொடங்கி னார். அண்ணன் பழ.நெடுமாறன் கோவையில் தொடங்கினார்.நாளை மறுநாள் மாலையில் மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சியில் சந்திக்கின்றோம். திரண்டு வந்த மக்கள் கூட்டத்துக்கு நன்றி. தமிழ் ஈழ மக்களுக்கு என்றைக்கும் துணை நிற்போம்!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment