Thursday, May 2, 2013

போட்டியிட்ட அனைத்து இடத்திலும் மதிமுக வெற்றி

கோவில்பட்டி கூட்டுறவு வங்கி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடத்திலும் ம.தி.மு.க. வெற்றி

கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கி நிர்வாக்குழு உறுப் பினர்களுக்கான தேர்தல் புதுரோடு நகராட்சி பள்ளியில் வைத்து நடைபெற் றது. இந்த வங்கியில் மொத்தம் 18,734 பேர் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் அதிமுக, மதிமுக என மொத்தம் 32 பேர் இந்ததேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டனர்.

நகராட்சி பள்ளியில் 4 வாக்கு பதிவு சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்றது. மொத்தம் 2004 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த வாக்குகள் எண்ணும் பணி நேற்று நகராட்சி பள்ளியில் வைத்து நடைபெற்றது. மதிமுக நகர செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ் தலைமையிலான அணியினர் முன்னனி யில் இருந்தனர், இறுதியில் ஆர்.எஸ். ரமேஸ் தலைமையிலான அணியினர் அனைவரும் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.



வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பெற்ற வாக்குகள் விபரம்
கமலாவதி- 684 

மாரியம்மாள்- 672

ரெங்கநாயகி- 641

காளியம்மாள் - 656

சாமிதாஸ் - 662

ஸவராஜா -678

பால்ராஜ் - 674

ராஜேந்திரன் - 706

ஆர்.எஸ்.ரமேஸ் - 743

சர்க்கரையப்பன் - 690

சரவணன் - 678.

ஆளும் கட்சியின் கடுமையான சவால்களை மீறி வெற்றி பெற்ற மதிமுக வினர்க்கு வாழ்த்துகள் ..

No comments:

Post a Comment