Wednesday, May 8, 2013

அடிமை வாழ்வை ஒருபோதும் ஈழத்தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்! தமிழ் ஈழம் மலரும்...பகுதி 1

‘இலங்கையில் தமிழின அழிப்பு’ குறித்த கருத்தரங்கம், சென்னை - மயிலை
மாங்கொல்லையில் 10.10.2009 அன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத் துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழர் தேசி யப் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கழகப் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழ் இன உணர்வாளர்கள் பங்கேற்றுச் சிறப்புரை யாற்றி னர். இந்நிகழ்வில் வைகோ ஆற்றிய உரை...

இருதயத்தை ஆழப்பிளக்கின்ற துக்கத்தின் நிழலில் இங்கே கூடி இருக்கிறோம். ஆறாத் துயரத்தோடும் ஆற்றுப்படுத்த முடியாத வேதனையோடும் அழுது புலம்புகிற ஓலமிடுகின்ற ஈழத்தமிழர்களின் அபயக்குரல் கடல் அலை ஓசை கடந்து வரும் அவலத்தைப் போக்கக் கருதி திரண்டு உள்ளோம். தமிழர்கள் எங் கெல்லாம் வாழுகிறார்களோ, அங்கெல்லாம் வேதனைத் தீ நெஞ்சிலே பற்றி எரிந்து கொண்டு இருக்கிற நேரத்தில், மயிலையில் நாம் கூடி இருக்கிறோம்.


தமிழ் இனத்தை அழிக்கின்ற கொடிய திட்டத்தை, சிங்கள இனவாத அரசு அரை நூற்றாண்டுக் காலமாக அரங்கேற்றி, அதன் உச்சகட்டமாக இலட்சக்கணக் கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, அந்த இரத்தத்தின் ஈரம் இன்னும்கூட உலராத வேளையில், முள்வேலி முகாம்களில் மூன்று இலட்சம் தமிழர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக வதைபடும் நேரத்தில், தாய்த்தமிழகத்தின் தலைநகரத்தில் நாம் கூடி இருக்கிறோம்.

வீடுகளில் இருந்து எங்கள் உரையைக் கேட்டுக் கொண்டு இருக்கிற அன்பிற்கு உரியவர்களே, தன் குடும்பத்தினரை ஜெர்மனிய வதை முகாம்களில் பலி கொடுத்த யூத இனத்தைச் சேர்ந்த மருத்துவர் எலின் சாண்டர் அம்மையார் இருதயத்து வேதனையைப் பிழிந்து இங்கே ஆங்கிலத்தில் உரை ஆற்றினார். அது தமிழில் அச்சிட்டு இங்கே தரப்பட்டு இருக்கிறது

அன்று நாஜிகள் - இன்று ராஜபக்சே கூட்டம்; அன்று நாங்கள் யூதர்கள் இன்று தமிழர்கள்’ என்று அவர் சொல்கிறார். அப்படியானால், ஆஸ்ட்விச் தாகோ என்ற கொடிய வதை முகாம்களை, பல்லாயிரக் கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த விஷ வாயு அறைகளில் உயிர் முடித்த அந்த முகாம்களைப் பார்வையிட வாருங்கள் என்று நாஜிகளின் தலைவர் ஹிட்லர் அழைப்பு விடுத் தால், அமெரிக்க நாட்டில் இருந்து யூதர்கள் போவார்களா? எதைப் பார்வை யிடுவதற்கு அழைக்கின்றான் ராஜபக்சே?



இலட்சக்கணக்கானவர்களை நான் கொன்று குவித்து முடித்து விட்டேன்; தமிழ் இனத்தை அழித்து விட்டேன்; இனி அவர்கள் அடிமைகளாக என் காலடியில் கிடக்க வேண்டும்; அடைத்து வைத்து இருக்கின்றேன்; பட்டி களில் அடைத்து வைத்து இருப்பதைப் பார்வையிடு வதற்கு வா’ என்று அழைக்கிறானா? அந்த அகந்தையும் ஆணவமும் ராஜபக்சேவின் மண்டைக் கொழுப்பும் திமிரும் ஊட் டப்பட்டதால், எச்சில் காசுக்குக் கைக் கூலியாக,சென்னை மாநகரத்துக்கு வந்த துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, என்ன எகத்தாளமாக செய்தியாளர் களிடம் சொன்னான்: ‘முகாம்களைப்பார்வையிடுவதற்கு எங்களுக்கும் அழைப்பு கிடைக்குமா?’ என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்

எங்கே? கொழும்பில் அல்ல, கண்டியில் அல்ல,அனுராதபுரத்திலே அல்ல;இந்த மயிலை உள்ளிட்ட சென்னைப்பட்டணத்தில், தமிழர்களின் தலைநகரத்தில்
கேட்டார்கள்.அதற்கு, என்ன இறுமாப்போடு அவன் பதில் சொன்னான்? ‘நீங்கள் எல்லாம் பார்வையிடு வதற்கு அவையொன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல’
என்று.

‘யுத்தத்தை நிறுத்த வேண்டும்’ என்று தமிழ்நாடு குரல் கொடுத்தபோது, சட்ட மன்றம் தீர்மானித்த போது, தமிழகம் பொங்கி எழுந்தபோது, முத்துக்குமார் உள் ளிட்ட 14 பேர் உயிர்களை தந்தபோது எரிமலையாக தமிழர்கள் உள்ளம் சீறிய போது, மொத்தத் தமிழகமும் திரண்ட போது, எதிரும்புதிருமாக இருந்த அரசி யல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து சட்டமன்றத்தில் யுத்தத்தை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு செய்வதற்கு இந்தச் சட்டமன்றம் தீர்மானிக்கிறது என்று கூறியதற்குப் பிறகு, ஆறரைக்கோடி தமிழர்கள் அரசியல் கட்சிகளால்
பிளவுபட்டுக் கிடக்கலாம், வேறுபாடுகள் இருக்கலாம், ஒரு நந்தவனத்தில் ஆயிரம் மலர்கள் பூக்கலாம் ஆயிரம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், அனைவரையும் ஒன்றுதிரட்டி, இதோ தமிழ் நாட்டில் ஆறரைக் கோடி பேரும் ஒன்றுதிரண்டு நிற்கிறோம், யுத்தத்தை நிறுத்தச் சொல்கிறாயா இல் லையா? நீ கொடுத்த ஆயுதம்தானே? நீ வகுத்துக் கொடுத்த போர்த்திட்டம் தானே? யுத்தத்தை நிறுத்தா விடில் விபரீதம் விளையும் என்று சொல்லவேண் டிய கடமையை, கருணாநிதி செய்தாரா?

அனைத்துத் தமிழர்களும் ஒன்றுசேர்ந்து நின்றபோது, அரசியல் கட்சி எல்லை களைக் கடந்த இளைஞர்கள் உயிர்களைத் தந்தபோது கருணாநிதி கடமை ஆற் றவில்லையே? இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லவில்லையே? அமெரிக் கா சொன்னபோது, விடுதலைப் புலிகளைத் தடைசெய்த ஐரோப்பிய ஒன்றியம் சொன்னபோது, பிரித்தானியம் சொன்னபோது, அகிலத்து நாடுகள் எல்லாம் சொன்ன போது, ஏழுகோடித் தமிழர்கள் குடிமக்களாக இருக்கின்ற இந்திய நாட் டு அரசு ஏன் போரை நிறுத்து என்று சொல்லவில்லை?

ஏனென்றால், இந்தப் போரை நடத்தியது இந்திய அரசு,திட்டம் வகுத்துக்கொடுத் தது இந்தியா. ஆயுதம் தந்தீர்கள், ராடார்கள் தந்தீர்கள், பணத்தை அள்ளிக்
கொடுத்தீர்கள், திட்டத்தை வகுத்துக் கொடுத்தீர்கள். தகவல் பரிமாற்ற ஒப்பந் தம் போட்டீர்கள், புலிகளுக்கு வந்த கப்பல்களை கடலில் மூழ்கடிக்க முழு முதல் உதவியைச் செய்தீர்கள். இவ்வளவும் செய்து, யுத்தத்தை நடத்தி இவ்வ ளவு மக்களையும் கொன்று குவித்ததற்குப் பிறகு, தமிழ் மக்கள் உள்ளத்தில் கொதிக்கின்ற தணலை அணைப்பதற்கான முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு
இருக்கின்றது. அது நடக்காது.

எரிமலையை நீ அணைத்து விட முடியாது. அதனால் தான் நான் சொல்கிறேன். யார் அழைத்து யார் செல்வது? செல்கின்றவர்கள் ஆள்கின்ற கூட்டணியைச் சேர்ந்தவர் கள். மே 17 ஆம் தேதி வரையில் யுத்தத்தை முனைப்பாக நடத்தி அதற்குள்ளாக முடித்து விட வேண்டும், விடுதலைப்புலிகளை அழிப்போம்,தமி ழர் களை அழிப்போம் என்று யுத்தத்தை நடத்துவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டு வஞ்சகம் புரிந்த இந்திய அரசின் அங்கமாக இருக்கிற கட்சிகளின் பிர திநிதிகள், போர் முனையில் கரம்கோர்த்த கட்சிகளின் பிரதிநிதிகள்தான் இப் போது அங்கே செல்கிறார்கள். 

நான் கேட்கிறேன்: மகாத்மா காந்தியின் சீடர்களை வா என்று கோட்சே அழைத் தால் செல்வார்களா? இவ்வளவு தமிழர்களைக் கொன்றுவிட்டு, இத்தனை ஆயி ரம் தமிழர்களின் பிணங்களை மண்ணிலே போட்டுவிட்டு அதற்குமேல் நின்று கொண்டு ராஜபக்சே கருவுகிறான். இந்த இலங்கைத் தீவில் தமிழ் ஈழம் தமிழர் தாயகம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று சொல்லி விட்டான்; தமிழர் தாயகம் என்ற உணர்வுக்கு இடம் இல்லை; தமிழ் இனம் என்ற சொல்லுக்கு இடம் இல்லை என்று சொல்லி விட்டான். இது சிங்களவர் தேசம்; இனி பெளத் தம் ஆட்சி செய்யும் என்று சொல்லிவிட்டான். தமிழர்களின் புராதனமான ஊர் களுக்கு, பெளத்த பெயர்களைச் சூட்டப்போவதாக புத்த குருமார்கள் கொக்கரிக் கின்ற காட்சியை இன்றைக்குப் பார்க்கிறோம்.

தமிழர்கள் மீன்பிடிக்க வழி இல்லை; தமிழர்கள் விவசாயம் செய்ய வழிஇல்லை தமிழர்கள் வாழ வழி இல்லை; தமிழர்கள் குடியிருந்த வீடுகளில் வசிக்க வழி
இல்லை. எதற்கு இந்த முகாம்? பார்வையிடச் செல்கிறீர் களே, எதற்காகப் பார் வையிடச் செல்லவேண்டும்? 

சொந்த நாட்டு மக்களை, முள்வேலி முகாமில் அடைத்து வைத்து இருக்கி றான். ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும். அவர்கள் அந்த நாட்டுக் குடி மக்கள் என்று அவன் கருதுகிறானா? ரோமானிய அடிமைகளைப் போல் அல் லவா நடத்துகிறான்? 

எதற்காக அவன் முள்வேலிகளில் அடைத்து வைத்து இருக்க வேண்டும். முகா மில் அடைக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழ் இனத்தை அழிக்க வேண்டும்
என்று இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக சிங்களவன் போட்ட திட்டம்.

ஆகவே, நடந்து இருப்பது இனப் படுகொலை. உலகம் மன்னிக்க முடியாத படு கொலை. இந்த இனக்கொலை குற்றத்தைச் செய்தவர்கள் கூண்டில் நிறுத்தப் பட வேண்டும். சூடான் அதிபரை கூண்டில் நிறுத்தியதைப் போல், நாஜிகளை நூரெம்பெர்க் நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்தியதைப் போல், ராஜபக்சே கூட் டத் தை கூண்டில் நிறுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.

ஆனால், அதை மறக்கடிக்கச் செய்வதற்கு, நீர்த்துப்போகச் செய்வதற்கு முயற் சி கள் நடக்கின்றன. தமிழர்களே, மே திங்கள் நிகழ்ச்சிகளைப்பற்றி வர்ணிக்கி றபோது, இலண்டனில் வெளிவருகிற ‘டைம்ஸ்’ பத்திரிகை சொன்னது,சானல் 4 தொலைக் காட்சி படம்பிடித்துக் காட்டிற்று. 20,000 தமிழர்களின் உடல்கள், சரி யாகப் புதைக்கப்படாமல் மண்ணுக்கு வெளியில் அழுகிக் கிடக்கின்றன என்று சொன்னானே? எத்தனை குறுந் தகடுகள்? எத்தனை காட்சிகள்? அதே தொலைக் காட்சி சேனல் 4, நாம் தாங்க முடியாத ஒரு வேதனையை அந்தக் குறும்படத் தில் காட்டியபொழுது, எத்தனை பேர் பார்க்க முடிந்தது?

கரிகாலன் வழி வந்த தமிழன், கல்தோன்றி முன் தோன்றாக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி என்ற பட்டயம் பெற்று இருந்த தமிழன், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிர் வாணமாக இழுத்து வரப்பட்டான்.தீபாவளிக்குப் புத்தாடை வாங்குகின்ற என் தமிழ்க் குலமே! நீங்கள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். அது உங்கள் விருப்பம்.

உலகத்துக்கே ஆடை அணிகின்ற கலையை முதன் முதலில் கற்றுக் கொடுத்த வன் தமிழன். காட்டு மிராண்டியைப்போல நிர்வாணமாக அலையக்கூடாது
என்று, பட்டுத்துணிகளை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்தவன் தமிழன்.அவனை நிர்வாணமாக இழுத்து வந்தார்கள். பின்னால் கைகளைக் கட்டி, கண்களைக்
கட்டி இழுத்துக்கொண்டுவந்து, காலால் எட்டி உதைத்துச் சுட்டுக் கொன்றானே இதைவிடவா ஒரு கொடுமை நடக்க முடியும்?

எலின் சாண்டரின் குடும்பத்தினர் நாஜிகளால் கொல்லப் பட்டார்கள். ஆனால், நாஜிகளின் முகாம்களில்கூட இப்படிப்பட்ட காட்சிகள் இடம் பெறவில்லை. நிர் வாணப் படுத்தி சுட்டுக்கொன்ற கொடுமையை விடவா இன்னொரு அக்கிரமத் தை தமிழ் இனத்துக்கு அளிக்க முடியும்? அதைப்பற்றிக் கேட்டால், தமிழ்நாட் டின் முதல் அமைச்சர் சொன்னார் ‘இது பழைய படங்களைப்போல தெரிகிறதே, மத்திய அரசு இதுபற்றி விசாரிக்க வேண்டும்’ என்கிறார்.

கொஞ்சமாவது உங்களுக்கு விசனம் இருந்ததா? தாய்மார்கள் இந்தக் கூட்டத் திற்கு வந்து இருக்கிறார்கள். கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். என் அன்பிற் குரிய சகோதரிகளே, தாயைத் தெய்வமாக மதித்து வழிபட்ட தமிழர் பண்பாட் டுத் தளத்தில் இருந்து கேட்கிறேன். போர்க்களத்தில் இந்தியா கொடுத்த ஆயுத பலத்தோடும் - சீனா கொடுத்த ஆயுதபலத்தோடும் - உலகநாடுகள் தந்த ஆயுத பலத்தோடும் - உலகில் இதுவரை இவர்களுக்கு நிகரான வீரர்கள் போர்க்களத் துக்கு வந்ததில்லை என்று சொல்லப்பட்ட சாகசம் புரிந்த விடுதலைப்புலிகள் 
                        
தொடரும் .........

No comments:

Post a Comment