செய்திகளில் இருந்து கருத்து பிறக்கிறது. செய்திகளுக்கு எப்போது பண மதிப்பு கிடைத்ததோ, அப்போ திருந்தே செய்திகளில் உயிராக இருந்து வந்த உண்மை செத்துப்போய்விட்டது.செய்திகளில் உள்ள உண்மையைக் கூட்டியோ, குறைத் தோ, மறைத்தோ கொடுப்பதன் மூலம் செய்தியைக் கொடுப்பவர் செய்தியைப் பெறுபவரை தன் விருப்பப்படி சிந்திக்க வைக்க முடியும். அணு உலை விசயத் தில் இது நடந்து வருகிறது.
அணு உலையை ஆதரித்து நீண்ட நேரம் பேசிய இளைஞனிடம், செர்னோபில்
பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, செர்னோபில் என்று எதைச்
சொல்கிறீர்கள் எனத் திருப்பிக் கேட்டார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழ கத்தில் கோடி மக்களில் ஒரு இலட்சம் பேருக்குக் கூட செர்னோபில் என்றால் என்னவென்றே தெரியாது.
உலகம் முழுவதும் அணு உலைகள் மூடப்பட்டு வருகின்றன என்ற உண்மை யோ, அமெரிக்காவில் அணு உலைகளின் வளர்ச்சி நின்று போய் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற உண்மையோ, அணுக்கழிவுகள் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆபத்தானவை என்ற உண்மையோ, மனிதனால் அரை நூற்றாண்டாக அது தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை என்ற உண்மையோ, அக்கழிவுகள் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தையே சீரழித்துக்கொண்டிருக்கின்றன என்ற உண் மையோ, அணு உலைகள் 40 ஆண்டுகளுக்கு மட்டுமே இயங்க முடியும் என்ற உண்மையோ,அதன் பிறகு அதன் மீது ஒரு கான்கிரீட் சமாதி கட்டி பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாத்து வர வேண்டும் என்ற உண்மையோ,மக்கள் எதிர்ப்பில் பல அணு உலைகளை அரசுகள் கைவிட்டிருக்கின்றன என்ற உண்மையோ இவை எவையுமே தமிழக சராசரி மக்களுக்கு தெரியாது.
அணு உலைகளை ஆதரிக்கச் சொல்லி கல்வி நிறுவனங்கள் முதல் செய்தி நிறுவனங்கள் வரை அரசின் தலையீடு உள்ளது. அதே நேரம் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மட்டும் பிரச்சார அனுமதி மட்டுப்படுத்தப்படுகிறது. இத னால் உலகில் வேறு எங்கும் இல்லாதபடி அணு உலை வேண்டும் என்று கேட் கக் கூடிய மக்கள் கூட்டம் தமிழகத்தில் மட்டுமே உருவாகியுள்ளது. ‘ஆடை இல்லாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பது போல் இங்கு அணு உலை எதிர்ப்பு காட்டப்படுகிறது.
மயாக் அணுக்கழிவுக் கொள்கலன் வெடிப்பு
இரசியாவின் அணு ஆயுதங்களுக்கு தேவையான புளூட்டோனியம் உற்பத்தி
மற்றும் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் யூனிட்டுகள் கிஸ்டிம், செல் யா பின்ஸ்க்கிலிருந்து 72 கி.மீ.தூரத்தில் அமைந்திருந்த மயாக்கில் (Mayak) செயல்பட்டு வந்தன.மிகமோசமான பராமரிப்பு காரணமாக அதன் அணுக்கழி வுக் கொள்கலன் 1957 செப்டம்பர் 29 இல் வெடித்தது. கிஸ்டிம் பேரிடர் (Kyshtym Disaster) என அழைக்கப்படும் இவ்விபத்தில் 4 இலட்சம் பேர் வரை கதிர்வீச்சு
பாதிப்படைந்தனர். கதிர்வீச்சு அடைந்த பல பகுதிகள் 45 ஆண்டுகளாக, இன்று
வரை உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதிகளாகவே உள்ளன.
சுற்றுப்புற மக்கள் மீதான கதிர்வீச்சுகள் அலட்சியம் செய்யப்பட்டதால் மக்க ளுக்கு பல உடல்நல சீர்கேடுகள் ஏற்பட்டன. மீன்கள் பாதிக்கப்பட்டன. எல்லா வற்றுக்கும் மேலாக மயாக் விபத்து 20 ஆண்டுகளுக்கும் மேல் இரகசியமாக
வைக்கப்பட்டது. அணு உலை விபத்து களுக்கான சர்வதேச அளவுகோல்படி இது அளவுகோல் 6 என வரையறுக்கப் பட்டது. 1953 முதல் 2000 வரை இங்கு
30 பெரிய விபத்துகள் நடந்திருப்பது அறியப்பட்டுள்ளது. 1958 முதல் 1991 வரை முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள், சிறுநகரங்கள் சோவியத் வரை படத்தி லிருந்தே நீக்கப்பட்டு உள்ளன.
மூன்று மைல் தீவு அணு உலை வெடிப்பு
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில், மூன்று மைல் தீவு என்னுமி டத்தில் இருந்த அணு உலை உருகியது. இவ்விபத்து 1979 மார்ச் 28 இல் நடந் தது. இது அமெரிக்காவின் மிக மோசமான அணு உலை விபத்து ஆகும்.விபத்து முடிந்து 26 மணி நேரம் கழித்து எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது என கவர்னர் வில்லியம் ஸ்கிரான்டன் III அறிவித்தார். இவரே மறுநாளில் நிலைமை மோச மாக உள்ளது என அறிவித்தார். பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது. மக்கள் வீட்டுக்கு உள்ளேயே இருக்கவும். விவசாயிகள் தங்கள் கால்நடைகளையும், தீவனங்களையும் அடைத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. 8 கி.மீ. வரை
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். பிறகு 30 கி.மீ.வரை 1,40,000 பேர் வெளியேற்றப் பட்டனர். இந்த விபத்து அளவுகோல் 5 என வரை யறுக்கப்பட்டது. கதிர்வீச்சை தூய்மைப்படுத்தும் பணிகள் ரூ.5000 கோடியில் 14 ஆண்டுகள் 1993 வரை நடந்தது. 12,000 கோடி சொத்துகள் அழிந்தன.
செர்னோபில் நோயாளிகள்
படத்தில் உள்ள இக்குழந்தைகள் அனைவருக்குமே 10 வயதுதான். செர்னோ பில் அணு உலை வெடித்த போது இவர்கள் பிறந்திருக்க வில்லை.இவர்களது பெற்றோர்கள் செர்னோபில் கதிர்வீச்சால் பாதிக்கப் பட்டவர்கள். பெற்றோர் களின் கதிர்வீச்சு மரபு வழியாகக் கடத்தப்பட்டு பிறந்த இக்குழந்தைகள் அனை வரும் கதிர்வீச்சு நோயாளிகள். இவர்களில் பலர் இறந்து விட்டனர். இப்புகைப் படம் 1996 இல் எடுக்கப்பட்டது.‘செர்னோபில் மியூசியம்’ என்று அழைக்கப்படும் உக்ரைன் நாட்டு அரசு அருங்காட்சியகத்தில் இப்படம் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துச் செய்தி முற்றிலும் இரகசியமாக வைக்கப்பட்டது. கதிர்வீச்சு கலந்த
மேகங்கள் மூலம் வெளி உலகம் உண்மை அறியாமல் தடுக்க அங்கேயே செயறகை மழை பொழிய வைக்கப் பட்டது. கருப்பு நிற மழை பொழிந்து ஆறு, ஏரி, நிலம், காடு, கட்டடங்கள் அனைத்தையும் விசமாக்கி, நிலைமையை மேலும் மோசமாக்கியது.விபத்து முடிந்து 2 நாள் கழித்து, 1500 கி.மீ. தூரமுள்ள ஸ்வீடனில் செர்னோபில் கதிர்வீச்சு கண்டுபிடிக்கப்பட்டது.உண்மையைச் சொல்லுமாறு உலக நாடுகள் கோரின. 15 நாட்களுக்குப்பிறகே அதிபர் கோர்ப சேவ் விபத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். செர்னோ பிலின் அனைத்து இரகசியங்களையும் வெளியிடுமாறு உக்ரைன், பெலாரஸ், இரஷ்ய மக்கள் தங்கள் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு கீவ் நகரில் ஆகஸ்ட் 1989 இல் பெரும் போராட்டங்களை நடத்தினர்.
பேய் நகரம்
படத்தில் உள்ள செர்னோபில் விபத்தின் போது வெளியேற்றப்பட்ட மூன்றரை இலட்சம் மக்கள் அதன்பிறகு தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை. கடந்த
26 ஆண்டுகளாக அணு உலையைச் சுற்றிலும் 30 கி.மீ.பகுதி அரசால் தடைசெய் யப்பட்ட பகுதியாகவே அப்படியே இருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு மக்கள் அங்கு திரும்ப முடியாது.(சில செய்தியாளர்கள் அரசின்
அனுமதி பெற்று, உரிய பாதுகாப்புடன் சென்று நிழற்படங்களை எடுத்து வந் துள்ளனர்) சில கிராமங்கள் மரங்கள் வளர்ந்து மண்டிக்கிடக்கின்றன. அதிக
கதிர்வீச்சடைந்த சில கிராமங்கள் அரசால் பூமியில் குழிதோண்டி புதைக்கப் பட்டு இருக்கின்றன.
அணு உலையின் அருகில் பிரிப்பியாட் (Prypiat) நகரம் ஆள் அரவமற்று பேய் நக ரமாக காட்சி அளிக்கிறது.அடுக்குமாடி கட்டடங்கள், விடுதிகள், பள்ளிக் கூடங் கள்,மருத்துவமனைகள்,திரையரங்குகள் சிதைந்து கிடக்கும் காட்சிகள் நம்மை நடுங்கச் செய்கின்றன.பல வீடுகளில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த அடையா ளங்களும் அப்படியே இருக்கின்றன. அங்குள்ள சில சுவர்களில் காதலர்களின் பெயர்கள் ஜோடியாக எழுதப்பட்டிருக்கின்றன.சிறுவர் பூங்காவில் சறுக்கு களும், விளையாட்டுக் கார்களும் இராட்டினங் களும், துருப்பிடித்து கிடக்கின் றன. அதைப் பார்க்கும்போது அதில் விளையாடிய குழந்தைகளின் மகிழ்ச்சி
மனதில் வந்த மறுகணமே, அக் குழந்தைகள் நீண்டநாள் வாழ்ந்திருக்க மாட் டார்கள் என்ற உண்மை மனதில் வலிக்கிறது.
வீடு, வாசல், குடும்பம், குழந்தைகள் என எல்லாவற்றையும் திடீரென இழந்து
நிர்க்கதியான பலர், இழப்புகளை நினைத்து, நினைத்து பைத்தியமாகி, குணப் படுத்த முடியாமல் போனார்கள்.அந்த நாட்களில் பைத்தியமானோரின் எண் ணிக்கை 1000 சதவீதம் உயர்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
செர்னோபிலின் பொருளாதார இழப்பு 24 இலட்சம் கோடி. அந்த செர்னோபில்
இந்த மனிதர்களின் மனங்களில் ஏற்படுத்தி இருக்கும் துயரங்களுக்கு என்ன மதிப்பு?
புகுசிமா அணு உலை வெடிப்பும் பாதிப்புகளும்
சப்பானில் 11 மார்ச் 2011 இல் புகுசிமா அணுஉலை விபத்து ஏற்பட்டது. 9.0 ரிக்டர் நிலநடுக்கமும், அதைத்தொடர்ந்து சுனாமியும் தாக்கியதில் புகுசிமா அணு உலை விபத்துக்குள்ளானது. அணு உலை விபத்துகளை அளவிடும் இண்டர் நேசனல் நியூக்ளியர் லெவல் ஸ்கேலின்படி ((International Nuclear Level Scale), இவ்வி பத்தும் செர்னோபிலைப் போன்றே லெவல்-7 (Leval-7) என வரையறுக்கப்பட் டது.இரவு 7 மணிக்கு ‘அணு உலை அவசரநிலை’ (Nuclear Emergency) அறிவிக்கப் பட்டது. இரவு 8.50க்கு 2 கி.மீ.க்கு அணு உலையைச் சுற்றியுள்ள மக்கள் வெளி யேற உத்தரவிடப்பட்டது.9.30க்கு 3 கி.மீ. மக்கள் வெளியேற உத்தரவு. மறுநாள் அதிகாலை 5.45க்கு 10 கி.மீ.வரை, மாலை 6.25க்கு 20 கி.மீ.வரை. மார்ச் 15 இல், 20 கி.மீ - 30 கி.மீ வரையிலான மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க உத்தரவு. மார்ச் 25 இல் 20-30 கி.மீ. மக்கள் தாமாகவே வெளியேற உத்தரவு. ஏப்ரல் 21 இல் ஜப் பான் அரசு 20 கி.மீ சுற்றுப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது.
உள்ளே நுழைந்தால் கைது, சிறை, அபராதம் என எச்சரித்தது.
அமெரிக்கா, 80 கி.மீ. வரையிலான மக்களை வெளியேற்ற ஜப்பான் அரசுக்கு அறிவுரை கூறியது. அங்கு வாழும் அமெரிக்கர்களை 80 கி.மீ.க்கு அப்பால் செல் ல அறிவுறுத்தியது. ஸ்பெயின் தம் நாட்டவரை 120 கி.மீ வெளியேறச் சொன் னது. ஜெர்மனி தம் நாட்டவரை 220 கி.மீ. தூரம் உள்ள டோக்கியோ நகருக்கும் வெளியே சென்று விடுமாறு அறிவுறுத்தியது.
உண்மையில் டோக்கியோ மக்களும் நகரைவிட்டு வெளியேற வேண்டும் என
ஜப்பான் அணுசக்தித் துறை பிரதமருக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால்
தலைநகர் டோக்கியோவின் மக்கள் தொகை 3 கோடி. இது நடந்தால் உலகில்
ஜப்பான் என்ற நாட்டின் இருப்பு கேள்விக்குறியாகி விடும் என அப்பரிந்துரை
நிராகரிக்கப்பட்டது. உலையின் கதிர் வீச்சை எப்படியாயினும் கட்டுப்படுத்து
மாறு, கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. டோக்கியோ குறித்த மிக வும் இரகசியமான இச்செய்தி, பின்னாளில் பிரதமர் நவ்டோ கான் அவர்களால் செய்தியாளர்களுக்கான பேட்டியில் தெரிவிக்கப்பட்டது.
வெளியேற்றப்பட்ட மக்கள்தொகை சுமார் 68,000 பேர் என்பது அரசு கணக்கு. இது 20 கி.மீ. வரையிலான மக்கள் தொகையை கணக்கில் கொண்டுள்ளது. ஆனால், 20-30 கி.மீ. வரையிலான மக்களும் வெளியேறி உள்ளனர். அங்கு வாழும் மக்கள் தொகை சுமார் 3 இலட்சத்திற்கு மேல். மேலும் தலைநகர் டோக் கியோவிலிருந்தும் மக்கள் வெளியேறி உள்ளனர்.
கூடங்குளம் அணு உலையும்,மக்கள் தொகை பிரச்சினைகளும்...
செர்னோபில் அணு உலையின் கதிர்வீச்சு 1500 கி.மீ. தூரம் உள்ள சுவீடன் வரை
சென்று, பல இலட்சம் மக்களின் உயிரையும், வாழ்வையும், அவர்களின் உடல் நலத்தையும், உடைமைகளையும் சீரழித்தது. புகுசிமா அணு உலைக்கதிர்வீச்சு 8500 கி.மீ. தூரம் உள்ள அமெரிக்கா வரை சென்றது. கூடங்குளம் அணு உலை யைச் சுற்றி சில நூறு கி.மீ.க்குள் பல கோடி மக்கள் வாழ்கிறார்கள்.கூடங்குளம் அணுமின் நிலையம் 40,50 ஆண்டுகள் வரை இயங்கக்கூடியது.இக்காலங்களில் இவ்வணுஉலை ஒரே ஒரு நாளில் ஒரு பேரிடரைச் சந்தித்தாலும், இக்கோடிக்
கணக்கான மக்களின் உயிரும், வாழ்வும், உடல்நலமும் உடைமைகளும் என் னாவது?
வாழ்வுரிமைக்கான போராட்டம்!
“கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப்புற மக்கள் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக வீரம் நிறைந்த
அகிம்சை வழிப் போராட்டத்தை நடத்தி உள்ளனர். அம்மக்கள் உண்மையாக வே தங்களது பாதுகாப்புக் குறித்து கவலை கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக புகுசிமா அணு உலை விபத்திற்குப் பின் இதற்கு முன் எப் போதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்பற்ற தன்மையை உணருகின்றனர். அவர்கள் வாழ்வியல் உரிமைக்காகப்போராடுகிறார்கள். அணு உலை கட்டா யம் வெளியேற்றப்படவேண்டும்.இப்போராட்டத்தில் நாம் அவர்களை வாழ்த்தி அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்” (அட்மிரல் இராம்தாஸ்,முன்னாள் கடற்படைத் தளபதி)
“வளர்ச்சி” என்ற பெயரில் “குற்றம்” “கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பப்படுவதை எதிர்த்து போராடிவரும் இடிந்தகரை கிராம மக்களுடன் நான் முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறேன். மார்ச் 2011 இல் நிலநடுக்கம் புகுசிமா அணு உலையை சேதப்படுத்திய போது நான் ஜப்பானில் இருக்க நேரிட்டது. அப்பேரி டருக்குப் பின், அணு ஆற்றலைப் பயன்படுத்தும் எல்லா நாடுகளும் தங்களது கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதாக அறிவித்து உள்ளன, இந்தியா வைத்தவிர.
நம் அரசுக்கு நகர்புற கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் தினந் தோ றும் சேரும் குப்பைகளை அப்புறப்படுத்து வதற்கான திராணி இல்லை என நம்
அரசே நிரூபித்துள்ளது. இந்நிலையில், அணுக்கழிவுகளைக் கையாளத் தனக் குத்தெரியுமென கூற அதற்கு எத்தனை தைரியம்?
இந்தியாவில் உள்ள அணு உலைகள் பாதுகாப்பானவையா? போபால் விஷ
வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்றுமே நீதி கிடைக்காது என உறுதி செய்யும் வகையில் நமது அரசு யூனியன் கார்பைட் நிறுவனத்துடன் (தற்போது டவ் கெமிக்கல்ஸ்) சேர்ந்து செய்த கூட்டுச் சதியை நாம் அறிவோம்.
ஆனால் எந்த இழப்பீட்டுத் தொகையும் அணு விபத்தினை நியாயப்படுத்த முடி யாது. கூடங்குளத்தில் நடைபெற்றுக் கொண்டு இருப்பதை ‘வளர்ச்சி’ என்கிற பெயரில் நடக்கும் ‘குற்றமாகவே’ நான் கருதுகிறேன்”.(அருந்ததி ராய், எழுத் தாளர் மற்றும் சமூக செயல் பாட்டாளர். உலக விருதான புக்கர் பரிசு பெற்ற வர்)
என்ன நியாயம்?
“இடிந்தகரை மக்களின் இடத்தில் நம்மை வைத்துப் பார்ப்போம். வீட்டின் எதி ரில் ஒரு குப்பைத் தொட்டி வைக்கப்பட்டாலே கலங்கிப்போகும் நாம், குழந்தை கள் மணலில் விளையாடும் போதே பதறிப்போகும் நாம், இடிந்தகரை மக்கள் மட்டும் அணு உலைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் குழந் தைகள் மட்டும் அணுக்கழிவுகளின் ஊடே வளர வேண்டும் என்றும் நினைப் பது எந்த வகையில் நியாயம்?” (நித்யானந்த ஜெயராமன்,சுற்றுச்சூழலியலாளர்)
இந்தியாவும் சீனாவும்!
அணு உலை சரியா? தவறா? என்ற இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டு மானால் அணு உலை பற்றிய உண்மைகளை அறிந்திருப்பது மிகவும் அவசிய மானது. இந்நூலின் நோக்கம் அதுதான்.அணு உலை குறித்த செய்திகளை அனைவரும் அறியச் செய்வது.அணு உலையை எதிர்க்கும் ஒருவர் பின்னா ளில் அணு உலையை ஆதரிப்பவராக மாறிவிடுவதில்லை. அதே நேரம்நேற்று வரை அணு உலையை ஆதரித்துக் கொண்டிருந்த பலர் பிறகு அணு உலையை எதிர்ப்பவராக மாறிவிடு கின்றனர். இதற்கு காரணம் அணு உலை குறித்த பல செய்திகளை அறிந்து கொள்வதில் பலருக்கும் ஏற்படும் காலதாமதமே.
60 ஆண்டுகளுக்கு முன், அணு ஆற்றலை வளர்ச்சிக்கு (மின்சாரத்திற்கு) பயன் படுத்தலாம் என்ற பொருளில் அவற்றை ஆதரித்த உலக மக்கள் இன்று அவற் றைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.அணு உலை பாதிப்புகளை அனுபவித்தவர் களும், அது குறித்த செய்திகளை முழுமையாக அறிந்தவர்களும் அணு உலை களைப் பற்றி புரிந்துகொண்டு உள்ளனர். மூன்று மைல் தீவு, செர்னோபில், புகுசிமா ஆகிய அணு உலை விபத்துகள் உலகமக்களின் அணு உலை ஆதர வை தலைகீழாகப் புரட்டிப் போட்டு, அணு உலை பேரிடர் குறித்து அவர்களுக் கு பாடம் கற்றுக்கொடுத்தன.புகுசிமாவிற்கு பின் தமது எதிர்கால அணுஉலைத் திட்டங்களை அனைத்து உலக நாடுகளும் கைவிட்டுவிட்டன,இந்தியாவையும் சீனாவையும் தவிர.
இந்தியாவில் அறிவியலாளர்கள், அரசு அதிகாரிகள், அரசு, அயல்நாட்டு வியா பாரிகள் என இந்த 4 ‘அ’னாவினரும் அணு உலையை ஆதரித்து, செய்தி ஊட கங் களைப் பயன்படுத்தி, தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் களின் பிரச்சாரம் எந்த அளவிற்கு நம்பிக்கைக்குரியதாக இருக்க முடியும்?
அணு உலை வியாபாரிகள்
அணு உலை வியாபாரிகள். இவர்கள் வியாபாரிகளாக மட்டும் இல்லாமல், நல்ல மனிதர்களாகவும் இருந்திருந்தால் 10 இலட்சம் மக்களைப் பலிவாங்கிய
செர்னோபில் விபத்திற்குப் பிறகு அணு உலைகளை கைவிட்டிருக்க வேண் டும்.புகுசிமா விபத்தைப் பார்த்தோ அல்லது உலக மக்களின் அணு உலை எதிர்ப்புப்போராட்டங்களுக்கு மதிப்பளித்தோ அணு உலை உற்பத்தியை நிறுத் திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் அணு உலைகளின் இந்த
இறுதிக்காலத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் குவிப்பதிலேயே
குறியாக உள்ளனர். இந்த அன்னிய முதலாளிகள், இதற்காக நாடாளுமன்ற
உறுப்பினர்களையும், அரசியல் தலைவர் களையும் விலை கொடுத்து வாங்கு
கின்றனர். திட்டச்செலவு முதல் விபத்துக்காப்பீடு வரை தங்களுக்கு சாதகமாக விதிமுறைகளையும் சட்டங்களையும் இயற்றச் செய்கின்றனர்.
விபத்து என்றால் அமெரிக்கா 1500 கோடி கொடுத்தால் போதும் என இந்தியா வில் சட்டம் இயற்ற வைக்கப்பட்டுள்ளது.இதுவும் தங்களுக்குப் பொருந்தாது
என்றும், கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தாங்கள் எதுவும் தரமுடியாது
என்று இரஷியா கைவிரிக்கிறது. இலாபம் முழுவதும் தங்களுக்கு, இழப்பு முழு வதும் அந்தந்த நாட்டிற்கு என்பதே இவர்களது வியாபாரக் கொள்கை. விபத்திற் குள்ளான புகுசிமா அணு உலைகள் காப்பீடு செய்யப்படாதவை என்பது அதிர்ச் சி செய்தி. தங்கள் பணப்பேராசைகளுக்காக உலகில் இன்னும் அணு உலை களை விற்றுக்கொண்டு இருக்கும் இந்த அணு உலை வியாபாரிகள் அணு உலைகள் குறித்து தரும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் எவ்வளவு தூரம் நம்பிக் கைக்குரியனவாக இருக்க முடியும்?.
நூல் ஆசிரியர்: ஜெ.பிரபாகரன்

(94864 86321; 90805 30200)
வெளியீடு: பென்னி குயிக் பதிப்பகம்
4/1411, செந்தில்நாதன் தெரு,
தாசில்தார் நகர், மதுரை - 20.
99944 97418
விலை: ரூ.215/-
தொடர்புக்கு: எஸ்.மகபூப்ஜான், மதுரை
(94433 75558)
4/1411, செந்தில்நாதன் தெரு,
தாசில்தார் நகர், மதுரை - 20.
99944 97418
விலை: ரூ.215/-
தொடர்புக்கு: எஸ்.மகபூப்ஜான், மதுரை
(94433 75558)
நன்றி :- சங்கொலி
No comments:
Post a Comment