Sunday, May 12, 2013

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 1



மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப்பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் 19 ஆண்டுகளைக் கடந்து 20 ஆம் ஆண்டில் பிரவேசிக்கக்கூடிய இந்த இனிய நாளில் உங்களைக்காணவும்,உங்க ளிடத்தில் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவுமான அரியதோர் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்திருக்கிறது. நெடுந்தூரத்துக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யில் பெருமளவில் மக்கள் திரண்டு இருக்கிறார்கள்.

கடந்த காலச் சம்பவங்கள் மின்னல்போல் தோன்றி மறைகின்றன. நினைத்துப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. ஒரு நாள் இரு நாள் அல்ல. பத் தொன்பது ஆண்டு களை நாங்கள் கடந்து வந்து இருக்கிறோம். தடிகொண்ட ஐய னார் திடலில் 1993 நவம்பர் 19 ஆம் தேதி புதுக்கோட்டை நகர வரலாற்றில்
இல்லாத அளவுக்கு மக்கள் பிரளயமாகத் திரண்டிருந்தனர்.இலட்சக்கணக் கா னவர்கள் திரண்டு இருந்தனர். அந்த நாள் எனக்கு மறக்க முடியாதது. 

பதினேழு வருடங்களுக்கு முன்னர் அதே நவம்பர் 19 ஆம் நாளில்தான் நான் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து, மிசா கைதியாக சேலம் மத் திய சிறைக்கு மாற்றப் பட்டேன். அண்ணன் கோ.சி.மணி அவர்கள் அதே நாளில் திருச்சி மத்திய சிறையில் இருந்து, சேலம் மத்திய சிறைக்கு மாற்றப் பட்டார். ஏற்கனவே சேலம் மத்திய சிறையில் இருந்த வீரபாண்டி ஆறுமுகம் அங்கிருந்து வேறு சிறைக்கு அனுப்பப்பட்டு இருந்தார்.

1993 ஆம் வருடம் நவம்பர் 19 ஆம் தேதி இங்கே உங்களைச் சந்திக்கின்ற வாய்ப் புக் கிடைத்தது. நவம்பர் 11 ஆம் தேதி இரவு வேளையில், திராவிட முன்னேற் றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் நீக்கப்பட்ட செய்தி. பொழுது விடிந்தால் தீபாவளி. பட்டாசு வேட்டுகள் எழுப்புகின்ற புகை யோடு, நான் நீக்கப்பட்ட செய்தியும் காற்றோடு கலந்து மறைந்துவிடும் என்ற ஆரூடம் கணிக்கப்பட்ட நிலை.நான் கடந்த காலச் சம்பவங்களை இன்றைக்கு விவரிக்க விரும்ப வில்லை.

நீண்ட தூரம் வந்துவிட்டோம் ஆனால், என் அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்களே, என்னுடைய சகோதரர்கள் தங்கள் கருத்தை, விருப்பத்தை சகோதரி டாக்டர் ரொஹையா உட்பட தங்கள் ஆதங்கத்தை எல்லாம் சொன்னார்கள். நான் அவர் களுக்குத் தெரிவிக்கிறேன். நமக்கு உரிய இடத்தைத் தமிழகம் தந்திருக்கிறது.
இல்லாவிட்டால் இவ்வளவு பெருந்திரளான கூட்டம் வந்திருக்காதே.போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று நமக்காகவே நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே முயல்வோம்.எதிர்காலப் பணிகளைப் பற்றி
திட்டமிடுவோம்.

நான் ஏற்கனவே கூறியதுபோல், இந்த இயக்கத்தைத் தமிழக மக்கள் எங்கே
வைத்துப் பாதுகாக்கிறார்களோ அங்கிருந்தவாறே பணி செய்வோம்.நாட்டு மக் களின் ஒட்டுமொத்த நல்லெண்ணத்தைப் பெற்று தலைநிமிர்ந்து நிற்கிறோம் நாம். இதற்காக அதிகமான முட்களை சுமந்திருக்கிறோம்.

வாழ்க்கை என்பதே இன்பமும் துன்பமும் கலந்ததுதான். இது முதுவேனிற் காலம். இளவேனில் மறைந்து முதுவேனில் காலம். முதுவேனிலுக்குப் பின் னால், வசந்தம் வரும். வாடைக் காற்று வீசும். அதற்குப் பிறகு மழைக்காலம் வரும். அது இயற்கையின் பருவத்துக்கு ஏற்றவாறு வளர்ந்துகொண்டே இருக் கும். வாழ்க்கையும் அப்படித்தான்.துயரங்கள் இல்லாத முகங்கள் இல்லை. கண்ணீர் இல்லாத வாழ்க்கை இல்லை.

காண்டேகர் என்ற அருமையான எழுத்தாளன். நான் பள்ளி நாட்களில் விரும் பிப் படித்த மராட்டிய நாவலாசியரியர் காண்டேகர் சொல்லுவதைப் போல, புயல் இல்லாத கடல் இல்லை. தீ இல்லாத வேள்வி இல்லை. புண் இல்லாத போராட்டம் இல்லை. அப்படித்தான் நம்முடைய வாழ்வும். நம்மைப் பொறுத்த மட்டில் மகிழ்ச்சியைத் தருவதும் இந்த மே திங்கள் தான். துன்ப இடிகளை நெஞ் சில் வீசுவதும் இந்த மே திங்கள் தான். இந்த மே திங்களினுடைய தலைநாளில் தான் உலகத்தின் பாட்டாளி வர்க்கம் உரிமைப் போர்க்கொடியை ஏந்தி நிற்கிறது.

உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்.நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல் லை. உங்கள் மீது பூட்டப்பட்டு இருக்கக்கூடிய விலங்குகளைத் தவிர என்று காரல் மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்சும் அகிலத் தொழிலாளர்களை ஒருங்கி ணைப்பதற்காக அழைத்தார்களே... அதைப்போல மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தின் கண்மணிகளே, நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை.இனி
அடையப்போவது வெற்றிகளும்,பெருமையும் தவிர எதுவும் இல்லை.தமிழக மக்கள் நம்மை நன்றாகச் சோதித்துப் பார்த்துவிட்டார்கள்.நம்மைப் புடம் போட் டுப் பார்த்து விட்டார்கள். அக்னிப் பரீட்சைகளில் நாம் தேறி வந்திருக்கிறோம். இனியும் நமக்கு சோதனை வைக்க மாட்டார்கள்.

தமிழகத்தை நாலா பக்கத்திலும் சூழ்ந்திருக்கக்கூடிய பேராபத்து களிலிருந்து மீட்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கும் இருக்கின்றது.அறிவாசான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் திராவிட இயக்கத்தினுடைய அடுத்த
பரிமாணமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீறுகொண்டு எழுந் து செம்மாந்து நடை போடுகிறது. நான் திராவிட இயக்கத்தின் பல அமைப்பு களாக இருக்கின்ற தோழர்களுக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங் கள் வலுவாக இருப்பது, உரிமைக்குப் போராடுவது, மேலும் களத்தில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புவது, உங்கள் உள்மனதில் மகிழ்ச்சி யைக் கொடுக்கும் என்பதை நான் நன்றாக அறிவேன்.

எட்டுத் திசைகளிலும் ஆபத்து சூழ்ந்திருக்கிற நேரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இருபதாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கின்றது. நாங்கள் கடந்து வந்த பாதையில் முட்கள் தைத்திருக்கின்றன. கூரிய முட்கள்
மீது விழுந்து நாங்கள் இரத்தம் கொட்டியிருக்கிறோம். கண்ணீர் பொங்கிய பத் தொன்பது வருடங்கள்.குருதித் துளிகள் சிந்திய பத்தொன்பது வருடங்கள்.தாங் கமுடியாத இழப்புகள், துயரங்களைச் சுமந்த பத்தொன்பது வருடங்கள். அதே நேரத்தில் மகோன்னதமான சாதனை களையும் நாங்கள் பெற்றிருக் கிறோம்
என்பதற்கு புலவர் செவந்தியப்பன் அவர்கள் இங்கு கோடிட்டுக்காட்டினார்கள். எங்கள் நாணயம் எதற்கும் சமரசம் செய்யாத ஒன்று. அதை அவர் இங்கு குறிப் பிட்டார். பொதுவாழ்க்கையில் அதுதானே வேண்டும்.

நாங்கள் தலைநிமிர்ந்து நிற்கிறோமே, எங்கள் நேர்மை சந்தேகத்திற்கு அப்பாற் பட்டது. எங்கள் தன்னலமற்ற பொதுவாழ்வு எவராலும் விமர்சிக்க முடியாதது. நாங்கள் எங்கள் குடும்பங்களை முன்னிறுத்தவில்லை. வாரிசுகளை முன்னி றுத் தவில்லை.இந்த இயக்கம் நான் வழிபடுகிற இடம்.எல்லோரும் என் தோழர் கள்.எல்லோரும் என் சகாக்கள். எல்லோரும் என் சகோதரர்கள். இங்கு சாதி,
மதத்துக்கு இடமில்லை. அண்ணாவினுடைய உண்மையான வார்ப்புகளாக நாங்கள் நிற்கிறோம்.எத்தனை ஆபத்துகள் தமிழகத்தைச் சூழ்ந்து வந்தன.அவற் றி லிருந்து தமிழகத்தை மீட்பதற்கு நாம் ஒவ்வொரு கட்டத்திலும் போராடி யிருக்கிறோம்.

இன்றைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நிலைமை கவலை தருகிறது. ஒவ்வொரு நாளும் வரக்கூடிய அறிவிப்புகள் அண்மையில் கலிபோர்னியா பல்கலைக் கழ கத்தில் ஒரு ஆராய்ச்சியாளன் தெரிவிக்கிறான்.உலகம் ஆயிரம் ஆண்டுகளாக
சந்திக்காத பயங்கரமான வறட்சியையும், அதன் விளைவாக ஏற்படப் போகிற கொடிய உணவுப் பஞ்சத்தையும் சந்திக்கப்போகிறது.அந்தக் கொடிய வறட்சிப் பேரழிவைத் தருவதாக இருக்கும். அதனால் ஆசியக் கண்டத்தின் இந்தியா வி னு டைய பல பகுதிகள் பாதிக்கப் படும். இத்தகைய சூழலில் தான் நாம் இருக்கிறோம்.

பெருமைமிகு தமிழர் நிலைமை இன்றைக்குப் பாழாகிக் கிடக்கிறது.தமிழ் நிலத் தை பல வகை திணைகளாக வகுத்த தமிழ்ப் புலவர் பெருமக்கள், குறிஞ்சி,முல் லை, மருதம்,நெய்தல் என்றும் தேரிக்காடுகள் சில பகுதிகளில் பாலை என்றும் அதன் திணைகளாக வகுத்து விட்டுப் போனான். இன்று அதற்கு ஆபத்து வந்தி ருக்கிறது. எல்லாம் பாலை நிலம் ஆகிவிடக்கூடாது.குறிஞ்சியின் பெருமை யைப் பேசுகிற போது, சந்தன மரங்களும், அந்த சந்தன விருட்சங்களுக்குப் பக் கத்தில் அடர்ந்து கிடக்கக்கூடிய காடுகளுக் குள்ளே ஓடித் திரிகின்ற விலங்கு
களும், விளைகின்ற சந்தனத்தை எடுத்து அனுப்புகின்ற பாங்கும், அந்த மலை வளத்தைக் குறிக்கக்கூடிய குறிஞ்சிப் பாட்டுகளும், அதைப் போல காடு வேய்ந் திருக்கக்கூடிய முல்லை.அந்த முல்லையில் ஓடித்திரிகின்ற மான்கள். முல் லை நிலத்தில் கிடைக்கக்கூடிய செழிப்பான பொருட்கள். திரும்புகிற திசை யெல் லாம் செந்நெல் வயல்கள், கரும்புத் தோட்டங்கள். பச்சைப் பசேல் என்று மரகதக் கம்பளம் விரித்தார் போன்ற மருத நிலம்.

நெய்தல் நிலம், கடலுக்குள்ளே முத்துகள். அந்த ஆழிப்பெருங்கடலில் பாய்ந் தோடுகின்ற மீன்கள். களம் செலுத்துகின்ற தமிழர்கள் இது நெய்தல். அருகில் சில பகுதிகளில் மணலாக திரிந்திருக்கக்கூடியது பாலை. எல்லாம் அழிக்கப் பட்டு வருகின்றதே!

எந்தப் பகுதியும் இன்றைக்குப் பாதுகாப்பாக இல்லை. மேலும் மேலும் ஆபத்து வருகிற காலத்தில், நமக்கு ஆதிபத்திய உரிமையுள்ள நீர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பெற்று வந்த காவிரி நீர். பொன்னி நதியின் நீர். அதை இழக் கின்ற அபாயம் வந்திருக்கின்றது. ஐந்து மாவட்டங்களுக்கு ஆபத்து வந்த போ து, தெற்குச் சீமை பாழாகி விடுமோ என்ற பயம் வந்தபோது, கேரளம் அக் கிரம மாக நம்முடைய உரிமையாகிய பென்னி குக் கட்டிய முல்லைப் பெரி யா று அணையை உடைப்பதற்குத் திட்டமிட்டபோது, அவன் அணையை உடைப்ப தற்கு பணத்தை ஒதுக்குகிறான் என்று கேள்விப்பட்டபோது, நான் ஊர் ஊராக
நடந்திருக்கிறேன். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் மக்களைச் சந்தித் திருக் கிறேன். வருகிற ஆபத்தைத் தடுக்காவிட்டால் இந்த ஐந்து மாவட்டங் கள் அழிந்துபோகும் என்று கவலைப்பட்டிருக்கிறேன்.கம்பம் அப்பாஸீம் நானும் 578 கிராமங்களுக்குச் சென்றிருக்கிறோம்.

எண்ணற்றப் போராட்டக் களங்களைக் கண்டோம். அதனுடைய விளைவாக வே பத்து இலட்சம் பேர் திரண்டார்கள். இன்னும் ஆபத்து நீங்கவில்லை. கேர ளம் சட்டம் இயற்றியது. பென்னி குக் அணையை உடைப்பதற்கு இவன் பணம்
ஒதுக்கியிருக்கிறான். கரிமருந்தை சேகரித்து வைத்திருக்கிறான். தருணம்
பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தானோ, அதே சட்டத்தை மத்திய அரசு சட்டமாக்க முயல்கிறது.

தமிழகத்துக்கு தமிழ் இனத்துக்குப் பெருங்கேடு

பத்து வருடமாக நான் நாடாளுமன்றத்தில் இல்லை என்று சகோதரர் தமிழ் மாறன் தன் ஆதங்கத்தை இங்கே வெளிப்படுத்தினார். நான் அதை ஒரு இழப் பாகக் கருதவில்லை. 2004 முதல் 2013 வரை இந்த பத்தாண்டுகள் தமிழ்நாட்டுக் கு பெரும் கேடுகள், தமிழ் இனத்துக்கு பெரும் கேடுகள், துரோகங்கள் இழைக் கப் பட்ட காலம். இந்தக் காலத்தில்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முல்லைப்
பெரியாறு அணையில் தமிழ் நாட்டுக்குத்தான் உரிமை உண்டு. அணையின் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பை கிழித்து குப் பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அணையை உடைப்பதற்கு எங்களுக்கு அதி காரம் உண்டு. இதில் எந்தச் சட்டமும், நீதிமன்றமும் தலையிட முடியாது என்று கேரளத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார்கள்.

இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஏற்கனவே என் மீது இரண்டு வழக்கு கள் இருக்கின்றன. மத்திய அரசுக்குச் சொல்கிறேன், இறையாண்மைக்குச் சவால் விட்டு, இந்தியாவினுடைய எந்த சிவில் கோர்ட்டும் தலையிடமுடி யாது. எங்கள் மாநிலத்துக்குள் இருக்கக்கூடிய எந்த அணையையும் பராமரிக்க மட்டுமல்ல, அதை உடைப்பதற்கு அதிகாரம் உண்டு என்று 2006 மார்ச் 16 ஆம்
தேதி கேரள சட்டமன்றத்தில் அந்த மசோதாவை சட்டமாக்கினார்களே,இது நாட்டின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கக்கூடியது. இறையாண்மையை சவா லுக்கு அழைக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை குப்பையில் போடுகிறது. அந்த சட்டத்தை செல்லாததாக்க நடவடிக்கை எடுத்தீர்களா? இல்லை. 

அதற்கு மாறாக அணை பாதுகாப்பு மசோதா என்ற சட்டத்தை நிறைவேற்ற மத் திய அரசு தருணம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இந்தச் சட்டம் நிறைவேற் றப் பட்டால், இந்தியாவில் பெரும் அவலத்துக்கும், துன்பத்துக்கும் ஆளாகப் போவது தமிழ்நாடு மட்டும் தான். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், காவி ரியில் நாம் பெற்று வருகிற உரிமையைக்கூட இழக்க நேரிடும். இந்தச் சட்டத் தின் படி எந்த ஒரு மாநிலமும் தன் எல்லைக்குள் இருக்கக் கூடிய அணைக் கட்டை பராமரிக்க வோ, அதுபற்றி எந்தவிதமான முடிவும் எடுக்கவோ அந்த மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு மத்திய அரசுக்கு இருக்கக்கூடிய
அதிகாரத்தையும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, அந்தந்த மாகாணங் களுக் கு அதிகாரம் உண்டு என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறார் களே,

நான் மாநில சுயாட்சிக் கொள்கையை நாடாளுமன்றத்தில் முழங்கியவன்.
அண்ணாவின் கொள்கையை ஏற்றுக் கொண்டவன். நாட்டின் ஒருமைப் பாட் டை ஏற்றுக் கொண்டிருக்கிற நிலையில், மாநிலங்களுக்கு அதிகாரம் வேண் டும் என்று கேட்கிறவன். 

தமிழகம் பாலை நிலமாகுமே!

ஆனால், மத்திய அரசுக்கு இருக்கக் கூடிய இந்த அதிகாரத்தை மாநிலத்துக்கு தந்துவிட்டு, அரபிக் படலில் வீணாகும் இரண்டாயிரம் டி.எம்.சி. தண்ணீரில் ஒரு டி.எம்.சி. தண்ணீரைக்கூட தமிழ்நாட்டுக்குத் தர முடியாது என்பார்கள். கர் நாடகம் இன்னும் துரோகம் செய்யும். காவிரியில் தண்ணீரை விட மறுப்பது மட்டுமல்ல, தென்பெண்ணை ஆற்றுக்குக் குறுக்கேயும் வருகிற தண்ணீரைத்
தடுக்க முற்படுகிறார்கள். ஆந்திரம் அக்கிரமம் செய்யும். பாலாற்றுத் தண்ணீ ரை வழிமறிக்கும். மூன்று பக்கத்திலும் நாம் சூழப்பட்டு இருக்கிறோம். அப்படி யானால், தமிழகம் பாலை நிலமாகுமே? நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள்
வாழ்வு என்னாகும்.
                                                                                                                   தொடரும்..................

No comments:

Post a Comment