Wednesday, May 15, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 5

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு  வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 4 யின் தொடர்ச்சி ....

அப்பொழுது சொன்னேன், எங்களுடைய கோயில்கள்,எங்களுடைய தேவால யங்கள் என்று இன்றைக்கு நாங்கள் எதை நினைக்கமுடியும்.அதற்காக உங்கள் கதவைத்தட்டுகிறோம். எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்
பாருங்கள். யாழ்ப்பாணத்துக்குப் பக்கத்தில் எங்களுடைய பெண்கள், வயதான வர்கள் கொடூரமாகக் கொல்லப் பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள். கைகளுக் கு விலங்கு போட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜபக்சே என் கிற கொடியவன் இராணுவத்தில் இருந்தவன். கிருசாஞ்சி படுகொலை  சம்ப வத்தில் கற்பழித்துக்கொல்லப்பட்ட வழக்கில் அவன் சொல்லி விட்டான் நிறை ய பேரை இப்படி புதைத்து இருக்கிறோம் என்று கோர்ட்டில் சொல்லிவிட்டான்.



இந்த ரிப்போட்டையும் நான் கொடுத்துவிட்டு, நீங்கள் கொசாவாவில் எண்பது முஸ்லிம் கொல்லப்பட்டதைக்கண்டறிய மண்ணைத் தோண்டி எடுத்து எண் பது முஸ்லிம்களினுடைய எலும்புக் கூடுகளை வெளியே கொண்டுவந்துகொ சா வாவில் செய்ததை உலகத்துக்கு அறிவித்தீர்களே,அதை யாழ்ப்பாணத்து
செம்மொழிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டேன். பதினைந்தாவது நாளில் அவ்விதத்திலே, நான் மிகச் சாதாரணமானவன் தான். ஆனால், நான் எடுத்து வைத்த முறை அவர் மனதை உலுக்கி விட்டது. நான் சொல்வது உண்மை என்று நினைத்தார். ஒரு மத்திய அரசு கேட்கவில்லை. ஒரு தனி மனிதனாகக் கேட்டேன். ஒரு சாதாரண நபராகக் கேட்டேன். அதே நிபுணர் குழுவைப் பதி னைந்தாவது நாள் அனுப்பி வைத்தார். நானூறுக்கும் மேற்பட்ட எலும்புக்கூடு கள் உள்ளே இருந்து தோண்டி எடுக்கப்பட்டு அதற்கு காரணமானவன் அந்த உண்மையை வெளிஉலகிற்கு கொண்டுவந்தவன். அடியேன் வைகோதான்.

அதைப்போன்ற கொடுமைகள் எவ்வளவோ நடத்தப்பட்டிருக்கின்றன. காமன் வெல்த் அமைப்பினுடைய மாநாடு நவம்பர் 17, 18 ஆம் தேதிகளில் இலங்கை யில் நடக்கபோகிறது. அங்கே நடத்தக்கூடாது என்ற குரல் எழுந்து இருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து நேற்றைக்கு முன்தினம் இலண்டனில் ஒரு ஆலோ சனை கூட்டம் நடந்தது. காமன்வெல்த்தில் உள்ள 54 நாடுகளின் அதிபர்கள் கூட்டம் அல்ல. முன்கூட்டி ஆலோசிக்கின்ற கூட்டம். அதற்கு அவ்வளவு ஒன் றும் அதிகாரம் கிடையாது. ஆகையினால், அதனுடைய செகரட்டரி ஜெனரல் கமலேஷ் சர்மா இலங்கையில் தான் நடக்கும் என்று தெரிவித்திருக்கிறார். அவர் ஒரு இந்தியர். நான் 2001 இல் ஐ.நா.சபையில் பேசுகிறபோது, இந்தியா வினுடைய சார்பில் இருந்தவர் இந்த கமலேஷ் சர்மா. அவர்தான் இந்த காமன் வெல்த் அமைப்புக்கு செயலாளராக இருக்கிறார்.

காமன்வெல்த் மாநாடு இலங்கையில்தான் நடக்கும். அதில் மாற்றம் கிடை யாது என்று சொல்கிறார். ஆனால், நேற்றைக்கு முன்தினம் அந்த நிகழ்ச்சி நடக் கிறபோது, இலண்டனில் இருக்கிற ஈழத்தமிழர்கள் அறப்போர் ஆர்ப்பாட் டம் நடத்தினார்கள். அந்த ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு கனடாவினுடைய வெளிவிவகார அமைச்சர் வந்தார். அவர், காமன்வெல்த் மாநாடு இலங்கை யில் நடத்தக்கூடாது என்று ஏற்கனவே கனடா அறிவித்து இருக்கிறது. எங்கள் பிரதமரும் அறிவித்துவிட்டார். அங்கு நடத்தக் கூடாது என்பதில் உறுதியாக
இருப்போம். பிரித்தானிய அரசும் அந்த முடிவுக்கு வரவேண்டும். நாங்கள்
உங்களுக்கு பக்க பலமாக இருப்போம் என்று கனடாவின் வெளிவிவகார
அமைச்சர் இலண்டனில் போராட்டத் தோழர்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.

எங்கள் தாய்மார்கள் கொல்லப்படுவதற்கு, எங்கள் குழந்தைகள் கொல்லப் படு வதற்கு, புலிப்படையை அழிக்கிறோம் என்று சொல்லி ஏழு அணு ஆயுத வல் லரசுகளின் படைகளைக் கொண்டு போய் அவர்களைத் தோற்கடித்தனர். உல கத் தில் யாராலும் ஜெயிக்க முடியாத வல்லமையோடு பிரபாகரன் இருந்தார். பின்னங்கால் பிடரியில் அடிபட வடமராச்சியில் இருந்து ஓடினான் சிங்களத் துக் காரன். கண்டி வரைக்கும் பிரபாகரன் வருவார் என்று பயந்துபோய் கிடந் தான்.

அப்படிப்பட்ட அவர்களை ஏழு அணுஆயுத வல்லரசுகளின் ஆயுத பலத்தைப் பெருக்கிக் கொடுத்து சேட்லைட் கேமராக்கள் மூலமாக அவர்களின் நகர்வு களை துல்லியமாகக் கண்டுபிடித்துக்கொடுத்து முப்படைத் தளபதிகளை
திரும்பத் திரும்ப அனுப்பி புலிகளுக்கு வந்த 16 கப்பல்களை கடலில் மூழ்கடித் து யுத்தத்தை இந்தியாவே நடத்தியது. வி.கே.சிங்குக்கு அங்கே என்ன விருது? வி.கே.சிங்குக்கு யுத்த சேனா விருது எப்படிக்கொடுத்தாய்?

அப்படியானால் யுத்தத்தை நடத்தியவன் நீதானே? எங்கள் குழந்தைகள் சாவுக் கு நீதானே காரணம். எங்கள் பாலச்சந்திரன்கள் மரணத்துக்கு நீ தானே கார ணம். எங்கள் இசைப்பிரியாக்களின் கொடூர முடிவுக்கு நீதானே காரணம்.இலட் சக் கணக்கான தமிழர்கள் பசியும் பட்டினியுமாக செத்ததற்கு நீதானே காரணம். இலட்சக் கணக்கான தமிழர்கள் குண்டு வீச்சிலே கொல்லப்படுவதற்கு நீ தானே காரணம். பல்லாயிரக்கணக்கான பெண்களின் மானம் சூறைபாடப் பட் டதற்கு நீ தானே காரணம். ஒரு முறை இல்லை, இரு முறை இல்லை. பதி னெட் டு முறை பிரதமரே, உங்களிடத்தில் வந்து மன்றாடினேனே. பலாலி விமான தளத்தைப் புதுப்பிக் காதீர்கள் என்று.

ஜனாதிபதி மாளிகையில் ஒளிந்திருப்பவர்

ஜனாதிபதி மாளிகைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறாரே ஒரு மனிதர், மேற்கு
வங்காளத்தைச் சேர்ந்தவர். அவர் தான் அன்றைக்கு வெளிவிவகார அமைச்சர்.
இவர் என்ன ஜனாதிபதியையே தாக்கிப் பேசுகிறார் என்று நினைக்காதீர்கள்.
ஜனாதிபதியை தாக்கவில்லை. உள்ளே ஒளிந்துகொண்டிருப்பவரை தாக்கு கிறேன். ஜனாதிபதி பதவியில் இருந்துகொண்டுள்ள அன்றைய வெளிவிவகார அமைச்சர் அவரும் சேர்ந்துதானே இந்தக் கொடுமையைச் செய்தார். இராணுவ அமைச்சராக பலாலி விமான தளத்தைப் பழுது பார்த்துக் கொடுத்தார்.

செஞ்சோலையில் 67 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு தானே காரணம். நீ விமான தளத்தைப் பழுது பார்த்து கொடுக்கப்போய்தானே ஸ்கை பர் ஜெட் விமானங்கள் அங்கே இருந்து வந்து குண்டு வீசின. அந்தக் குழந்தை கள் சாவுக்கு யார் காரணம்?

நான்கு ஈழ நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்ட நடு வீதியில் சுட்டுக் கொல்லப் பட்டார்களே அதற்கு யார் காரணம்? ஜோசப் பரராஜசிங்கத்தை சர்ச்சுக்குள் ளே யே போய் சுட்டுக் கொன்றார்களே, கண்டித்தீர்களா? மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே, நான் மன்றாடிக் கேட்கவில்லையா? நீங்கள் இதுமாதிரி செய்தீர்கள் என்றால், வருங்காலத் தலைமுறை என்னைப் போல் பேசிக்கொண்டிருக்க
மாட்டார்கள். ஒருமைப்பாடு உடைந்து நொறுங்கிப்போகும். அது மட்டுமல்ல,
இந்தத் துரோகத்துக்கு மன்னிப்பு கிடையாது என்று எழுத்து மூலமாக கொடுத் திருக்கிறேன். நீங்கள் செய்த துரோகத்துக்கு மன்னிப்பு கிடையாது.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து தென்னாப்பிரிக்காவை வெளியேற்ற வேண் டும் என்று இந்தியா எவ்வளவு பாடுபட்டது தெரியுமா? நான் கருப்பர்கள் போராட்டத்தை ஆதரிப்பவன். உலக வரலாற்றில் நான் மதிக்கின்ற மாமனிதர் களில் ஒருவர் நெல்சன் மண்டேலா. தென் ஆப்பிரிக்கா நிற வேற்றுமையின் காரணமாக கறுப்பர்களை அழிக்கப் பார்க்கிறது. வெள்ளை அரசாங்கம் கொடு மை செய்கிறது. அதற்குப் பொருளாதாரத் தடை கொண்டுவர வேண்டும் என்று 1987 இல் ஹராரே மாநாட்டில் பேசியவர் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி.

ஹராரேவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் தென் ஆப்பிரிக்காவுடன்
காமன்வெல்த் நாடுகள் எந்தத் தொடர்பும் வைக்கக்கூடாது. எந்தப் பொருளும் அனுப்பக் கூடாது. அவர்களுடன் எந்த விதமான பொருளாதார வர்த்தக ஒப்பந் தமும் யாரும் செய்யக்கூடாது என்று முழங்கிவிட்டு வந்தார். இந்தியப் பிரதமர் ஹராரேவில் பிரமாதமாகப் பேசிவிட்டு வந்திருக்கிறார் என்று நாடாளுமன்றத் தில் ஸ்டேட் மென்ட் கொடுத்தார் தவான். நான் கிளாரிபிகேசனுக்கு எப்பவும் முதல் லெட்டர் கொடுத்துவிடுவேன். அது கட்சி அடிப்படையில் அல்ல. யார்
முதலில் கொடுக்கிறார்களோ அவர்கள் தான்.

பிரதமர் இராஜீவ்காந்தி ஹராரேயில் பேசியதைப்பற்றி எல்லாம் பாராட்டினார் கள். இந்தியாவின் பிரதம மந்திரி அவர்களே, தென்னாப்பிரிக்காவுக்கு யாரும் எந்தப் பொருளாதார உதவியும் வழங்கக்கூடாது என்று ஹராரேவில் போய் முழங்கிய பிரதமர் அவர்களே, தென்னாப்பிரிக்கா சிங்களவனுக்கு ஆயுதங்கள் காசுக்கு விற்றிருக்கிறான். தென் ஆப்பிரிக்காவில் இருந்து இவ்வளவு ஆயுதங் களையும் சிங்கள அரசு வாங்கியிருக்கிறது. சிங்கள அரசினுடைய பணம் தென் ஆப்பிரிக்காவுக்குப் போகிறது. தென் ஆப்பிரிக்காவுடன் எவரும் பொருளாதார
ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று நீங்கள் முழங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.


சிங்கள அரசு பணம் கொடுத்து ஆயுதம் வாங்குகிறது. பணம் வெள்ளை அரசுக் குப் போகிறது. ஆயுதம் எங்கள் மக்களைக் கொல்கிறது. இதைக் கண்டிப் பீர் களா? சிங்கள அரசுக்கு, அவர்கள் ஆயுதம் விற்பனை செய்யக்கூடாது என்று இந்தியா முடிவெடுத்து அனுப்பி வைக்குமா? இதற்கு நேர்மையான பதில் தேவை என்று கேட்டேன். I want a straight categorical reply from Prime Minister என்று கேட் டேன். இதையே இரண்டாவது முறையும் கேட்டேன். I can’t understand your English என்றார் பிரதமர். உன் ஆங்கிலம் புரியவில்லை என்று எளிமையாக மடக்கி விட்டார் என்று காங்கிரஸ்காரர்கள் மகிழ்ந்தார்கள்.அதிகமான காங்கிரஸ்காரர் கள் வரவேற்றார்கள். நல்ல நோக்கத்திற்காக நடக்கிறீர்கள் என்று எனக்கு
ஆத ரவு தெரிவித்திருக்கிறார்கள். நான் சில பேர் செய்த தவறுகளைச் சொல் கிறேன். அவர்கள் உடனே, மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

பிரதமர் அவர்களே நான் பட்டிக்காட்டு ஆங்கிலம் பேசுகிறவன்தான் என்று சொன்னேன். நான் சாதாரண பட்டிக்காட்டுப் பள்ளிக் கூடத்தில் படித்தவன். நீங் கள் டேராடூன் பள்ளிக்கூடத்தில் படித்தவர். உங்கள் அளவுக்கு தகுதி எனக்குக் கிடைக்க வில்லை. இவர் டேராடூனில் தேர்வாக வில்லை என்பது எனக்குத் தெரியும்.நம்மை கிண்டல் செய்கிறான் என்று அவருக்கு கோபம் வந்து இந்தி யில் பேச ஆரம்பித்துவிட்டார்.

எனக்கு இந்தி தெரியாது. இந்தியில் பேசியவுடன்,இராஜீவ்காந்தி மடக்கி விட் டார் என்று காங்கிரஸ் எம்.பி.கள் எல்லாம் ஒரே கூச்சல் போட்டார்கள். சத்தம்
ஓய்ந்தவுடன் நீ என்னய்யா பேசினாய் என்று, நான் தமிழில் கேட்டுவிட்டு, நான்
பேசுவது உனக்குப் புரிகிறதா என்றேன்.உடனே பார்வார்டு பிளாக் கட்சித்தலை வர் சிட்டபாசு எழுந்து சபாஷ் சரியான போட்டி. இராஜீவ்காந்தி இந்தியில் பேசி யது இவருக்குப் புரிய வில்லை. இவர் தமிழில் பேசியது அவருக்குப் புரிய வில்லை.

கரிகாலன், இராஜராஜன் உலவிய மண்ணில் இருந்து வந்தவன்.பெரியாரின் பூமியில் இருந்து வந்தவன்.அண்ணாவின் படையில் வார்ப்பிக்கப் பட்டவன். இந்த உணர்வோடு நாங்கள் போராடி வந்தோமே,


காமன்வெல்த்தில் இலங்கை இருக்கக்கூடாது

ஹராரேவில் காமன்வெல்த் மாநாட்டில் தென் ஆப்பிரிக்கா இருக்கக்கூடாது
என்று சொன்ன இந்திய அரசே, உன்னுடைய நிலை என்ன? 2009 இல் ஜெனீவா வில் திருட்டுத்தனமாகஅவனை ஆதரித்து ஓட்டுப்போட்டு விட்டு, தமிழகம் கொந்தளித்ததனால், தீர்மானத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறீர்கள். உலகத் தில் இந்தியாவைப் போல் ஜகஜாலப் புரட்டன் எவனும் இருக்க முடியாது.

ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவரவில்லையே.இப்பொழுது காமன் வெல்த் தில் இந்திய அரசினுடைய நிலை என்ன? காமன்வெல்த் மாநாட்டை கொழும்பு வில் நடத்தக்கூடாது என்பதல்ல என்னுடைய கோரிக்கை. காமன்வெல்த் அமைப்பில் இலங்கை இருக்கக்கூடாது என்பது தான் எங்கள் கோரிக்கை.இதற் காக உலகத்தைத் தயார் செய்வோம்.காமன்வெல்த் நாடுகளைத் தயார் செய் வோம். எதற்கு காமன்வெல்த்? இதற்கு மேலும் கொடுமை செய்தால் காமன் வெல்த்தை விட்டு இந்தியா வெளியேற வேண்டும். இன்றைக்கு இருக்கக் கூடிய அரசாங்கம் மாயாவதி கையிலும், முலாயம்சிங் கையிலேயும் இருக்கிறது.

நாங்கள் இந்தியா என்ற அமைப்புக்குள் ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொண்டு சில கோரிக்கைளை வைக்கிறோம். டேம் 999 மாதிரி அக்கிரமத்தைச் செய்யா தே! அண்டை மாநிலங்கள் அக்கிரமம் செய்ய அனுமதிக்காதே! எங்களுக்கு கேடு செய்ய அனுமதிக்காதே! இன்னொரு தேசத்திற்குப் போகிற தண்ணீரை யே ஒருவர் தடுக்க முடியாது. கேரளா தண்ணீரை கொடுக்காவிட்டால் எப்படிப்
பிழைப்பது. ஏன் முடியாது. நீங்கள் பதின்மூன்று சாலைகளை மறிப்பதற்கு
வந்தீர்களே! தமிழ்நாட்டு வியாபாரிகள் பத்து நாட்கள் காய் கறி, பழங்கள் எதை யும் அனுப்பவில்லை. அந்த வியாபாரிகள் நட்டத்தைத் தாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.இது அவர்களைச் சாகடிப்பதற்காக அல்ல. கொஞ்சம் மிரட்டுவதற்குதான். நம் பொருள் ஒன்றுகூட இல்லாமல் அவன் வாழ முடியாது.

கடல்வழியாக கர்நாட கா, விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டுவந்து ஒப்ப டைத்துவிடுவார்களா? ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைத்திருக்கிறது. நிலத்தைத் தவிர அவனுக் கு எல்லாம் இருக்கிறது. கடல் இருக்கிறது. அதிக மான நதிகள் இருக்கிறது.உனக்குக் கிடைக்க வேண்டிய அரிசி, பருப்பு, பால், காய் கறி, முட்டை, இறைச்சி எல்லாமே எங்களுடையது தான். உன்னுடன் நாங்கள் சண்டை போடவில்லை. நீங்கள் ஒரு சகோதர மாநிலம்தான். நீங்கள் நன்றாக இருங்கள். கடலில் போய் வீணாகும் தண்ணீரைக் கொடுக்க மாட் டேன் என்கிறாய். அணையை உடைக்க வேண்டும் என்கிறாய்.

பாம்பாற்றின் குறுக்கே அணையைக் கட்ட வேண்டும் என்ற தால்தான் உனக்கு எந்தப் பொருளும் தரக்கூடாது என்று முடிவெடுத்தார்கள். நம்மைப் பொறுத்த
மட்டில், தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காக்கக்கூடிய அந்த நிலைமையை நீங்கள் உருவாக்க வேண்டும். இளைஞர்கள் உருவாக்க வேண்டும். உங்களால் உருவாக்க முடியும். அப்படிப்பட்ட உறுதியோடு போராடுவோம்.

ராஜபக்சே கூட்டத்தை கூண்டில் நிறுத்து வோம். ஆதாரங்கள் இருக்கின்றன.
படுகொலைக் காட்சிகள் ஆதாரங்கள் இருக்கின்றன. சேனல்-4 ஆதாரங்கள்
இருக்கின்றன. அசைக்க முடியாத சாட்சியங்கள் இருக்கின்றன. சிங்களவனோ டு சேர்ந்து வாழ முடியாது. அடிமை நுகத்தடியை உடைத்தெறிவோம்.சுதந் திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும். உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள் அந்தந்த தேசங்களில் ஓட்டுப்போட வழிவகை அமைக்கப்பட வேண்டும் என்று பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்சில் அடியேன் வைகோ முதன் முதலாக தரணியில் வைக்கப்பட்ட கருத்து. இதை நான் ஆணித்தரமாகச் சொல்வேன்.

முன்பெல்லாம் இதை நான் பேசுவது கிடையாது. சொன்னதனால் பேசுகிறேன். இந்தக் கருத்தை இதற்கு முன்பு யார் வைத்தது. இருந்தால் சான்றுகாட்டுங்கள். 2004, 2005, 2006 மூன்று வருடப் பத்திரிகையைப் புரட்டுங்கள்.இந்திய அரசு துரோ கம் செய்யக்கூடாது என்று எந்தக் கருத்தும் எங்களைத் தவிர யாரும் வைத்தது இல்லை. மறுமலர்ச்சி தி.மு.க. தான் ஆயுதம் கொடுக்காதே, ரடார் கொடுக் கா தே, ஈழத்தமிழர்களை சாகடிப்பதற்கு பலாலி விமான தளத்தைப் புதுப்பித்துக் கொடுக்காதே என்று எழுத்து மூலமாக எதிர்ப்புத்தெரிவித்த தகுதியுடைய கட்சி திராவிட இயக்கத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் மட்டும் தான்.

இந்த நிலைமைகளை அறவழியில் உருவாக்குவோம். நான் கூறுவது அறவழி. எதிர் காலத்து இளைஞர்கள் வழியைத் தேர்ந்தெடுப்பது அவர்கள் கையில் இருக்கிறது. அறமும் மறமும் என்று துறைமுகத்தில் பேசினேன்.அதில் முடிக் கும் போது சொன்னேன், தந்தை செல்வா அறம்; பிரபாகரன் மறம் என்று. இளைய தலைமுறையினரே,மாணவச் செல்வங்களே நீங்கள் அரசியலில் என்ன முடிவு வேண்டு மானாலும் எடுங்கள்.

நான் தீபச் செல்வன் கவிதை வெளியீட்டு விழாவில் பேசுகிறபோது சொன் னேன், 4 x 400 எல்லா விளையாட்டுப் போட்டிகளும் பழகிப்போய் விட்டது. கல் லூரியில் 4 x 100 என்று சொன்னால் முதலில் நூறு மீட்டர் ஒருவர் ஓடி வரு வார். அதே போன்று நூறு நூறு மீட்டர் என்று நான்கு பேர் ஓடி வருவார்கள். நானும் என் தோழர்களும் முதல் நூறு மீட்டர்களில் ஓடி வந்திருக்கிறோம். முடிந்த மட்டும் ஓடி வந்திருக்கிறோம். பேட்டனை உங்களிடத்தில் கொடுக் கிறேன். முன்னெடுத்துக் கொண்டு செல்லுங்கள் இளைஞர்கள்.

நான் இதைத் தான் சொன்னேன், வயது முதிர்ந்த உமர் முக்தா அவன் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டபோது, கீழே விழுந்த மூக்குக் கண்ணாடியை ஐந்து
வயதுப் பிள்ளை எடுத்துக்கொண்டு ஓடியது போன்ற காட்சியைத் திரைப் படத் தில் அமைத்திருப்பார்கள். அது போல நீங்கள் இளைஞர்கள், வாலிபர்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

இன்றைக்கு படுகொலை செய்யப்பட்ட அந்த சகோதரனுடைய படிப்பகத்துக்
குள்ளே நுழைந்தபோது, வைக்கப்பட்டு இருந்த உலக வரலாற்றின் மகாபுரு ஷர்களின் படங்களை எல்லாம் பார்த்தேன்.அதில் பகத் சிங்கினுடைய படமும்
இருக்கிறது. அந்தப் பேச்சை இமயம் டி.வி.யில் பொருளாளர் அவர்கள் பார்த்து விட்டு, இந்தப் பேச்சு என்னை மிகவும் உலுக்கி விட்டது என்றார். பகத் சிங் தூக் கிலிடப் படுவதற்கு முன்பு அவன் எழுதிய டைரி.அந்த டைரியின் அருமை யான வாசகங்கள். அதில் அவர் சொல்கிறார், ஒரு தேசத்துக்கு யார் சிறந்த பிர ஜை. ஸ்பார்ட்டாவில், தெர்மாபிளே யுத்தத்துக்கு முன்னூறு பேர் அங்கிருந் து தேர்தெடுக்கப்பட்டார்கள். அதில் ஒரு சிறந்த வீரனுக்கு இடம் கிடைக்க வில் லை. அவர் தேர்வு செய்யப்பட வில்லை தெர்மாபிளே யுத்த களத்துக்கு யுனி டாஸ் தலைமையில்.அவன் சொன்னான், என்னைவிட சிறந்த வீரர்கள் இந்த ஸ்பார்ட்டாவில் முன்னூறு பேர் இருக்கிறார்கள் என்று பாராட்டிவிட்டுப் போனான். அவன் சிறந்த பிரஜை.

அடுத்து சிறந்த தாய் யார்? என்று பகத் சிங் எழுதுகிறார், கிரேக்கத்தில் ஸ்பார்ட் டாவில் ஒரு யுத்தம் நடந்தது.ஒரு தாய் தன்னுடைய ஐந்து புதல்வர்களும்அந்த யுத்த களத்துக்கு போய் விட்டார்கள். அப்பொழுது ஒருவன் வியர்க்க விறு விறுக் க வந்தான். பணிந்து வணங்கி நா குழறியவாறே அந்தத் தாயிடத்தில் ஏதோ சொல்ல முயன்றான்.ஏன் பதறுகிறாய் சொல்ல வந்ததைச்சொல் என் றாள் அந்தத் தாய். தயங்கித்தயங்கிச் சொன்னான், உங்கள் ஐந்து பிள்ளைகளும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று. அட மடையனே அதையா நான் கேட்டேன். யுத்தத்தின் முடிவு என்ன என்றாள், யுத்தத்தில் நாம் ஜெயித்துவிட்டோம் என் றான். அதைச் சொல் முதலில் என்றாள் அந்தத் தாய். நான் இப்பொழுது கிரேக்க தேவதையின் கோயிலுக்குள் சென்று படையல் செய்யப் போகிறேன் என்று போனாள்.அவள்தான் சிறந்த தாய் என்று பகத் சிங் எழுதுகிறான்.

இந்தத் தாய்மார்களை ஈழத்தில்தான் நீங்கள் பார்க்க முடியும். சிவக்கொழுந்தம் மாள் என்று ஒரு தாய். அந்தத் தாயினுடைய நான்கு பிள்ளைகளும் விடுத லைப் புலிகள் அமைப்பில் மாவீரர்களாகச் சென்று களத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள்.முள்ளிவாய்க்கால் சண்டையின் போது கடைசி மகனும் கொல் லப் பட்டுவிட்டான்.நான்கு பிள்ளைகளும் இறந்து விட்டார்கள்.

தகரக் கொட்டகை உடைய மாணிக் பாம் அகதி முகாமுக்கு அந்தத் தாயைக் கொண்டு வருகிறார்கள். தகரக் கொட்டைக் குள்ளே சிவக்கொழுந்தம்மாளைப் போடுகிறார்கள். ஒரு பையன் அவன் உயிருடன் இருக்கிறானா? செத்துவிட்டா னா என்று இதுவரைக்கும் தெரியவில்லை. மாவீரர்களாக இறந்தார்கள் அல்ல வா! மூன்று புலிகள். அவர்களின் புலிப்படை சீருடைகளை பத்திரமாக வீட்டில்
வைத்திருந்திருக்கிறாள் இந்தத் தாய். மூன்று புலிப்படைகளின் சீருடைகளை
தகரகொட்டகையில் அந்தத் தாய் தொங்கவிட்டு, அதற்குக் கீழே குத்து விளக்கு ஏற்றுகிறாள். இராணுவ அதிகாரி வருகிறான். புலிப்படை சீருடை களையா இங்கே வைத்திருக்கிறாய் என்கிறான். நான் அப்படித்தான் வைத்து இருப்பேன் என்கிறாள் துணிச்சலாக. பகத் சிங் எழுதிய வீரத்தாயை அந்த சிவக்கொழுந்தம் மாள் வடிவில் பார்க்கிறேன்.

ஜோதிமணி என்று இன்னொரு அம்மா.அவருடைய இரண்டு பிள்ளைகளும்
புலிப்படையில் மாவீரர்களாக இறந்துவிட்டார்கள். அந்த வீரர்களினுடைய
இரண்டு கல்லறைகளை உடைத்து விட்டார்கள். ஸ்டாலின் குணசேகரன் நடத் திய நிகழ்ச்சியில் பேசியபோது நான் சொன்னேனே. விடிகாலைப் பொழுதில்
குண்டுகள் என் மார்பில் பாயும். என் மேனியில் இருந்து பீறிட்டு அடிக்கின்ற
இரத்தம் இந்த விண் வெளியை வான் வெளியை சிவப்புமயமாக்கட்டும்.

நான் சுடப்பட்டதற்குப் பிறகு, என்னை மண்ணில் புதைத்ததற்குப் பிறகு சில
காலம் கழித்து அங்கே ஒரு பூ மலரும். அந்த வழியாகப் போகிறவர்களே, அந்தப் பூவை உங்கள் நாசியில் வைத்து முகருங்கள். என் ஆன்மாவை நீங்கள்
வருடுவதாக நான் மகிழ்வேன் என்றானே ஜோ ரசோ.இந்தக் கூட்டத்தில்தானே
பேசினேன். இன்றைக்கு மதிக்கப்பட வேண்டிய கல்லறைகள் இருக்கிறதா?
எல்லாளன் கல்லறை தரைமட்டமாக்கப்பட்டது. திலீபன் கல்லறை தரைமட்ட
மாக்கப்பட்டது. மாவீரர் துயிலகங்கள் தரைமட்டமாக்கப்பட்டது.

அதனால்தான் கவிஞர் காசிஆனந்தன் சொன்னார், பகைவனே எங்களை மண் ணில் புதைத்தாய், எங்கள் மண்ணை நீ எங்கே புதைப்பாய்? என்று. கல்லறை களை நொறுக்கினால் அந்த மண் அங்கேதானே இருக்கும். அந்த மண்ணுக்குள் இருந்து எழுந்து வருவார்கள். அந்தத் தாய், தன்னுடைய இரண்டு பிள்ளைகளி னுடைய கல்லறை களும் உடைத்து நொறுக்கப்பட்டு விட்டதால், இரண்டு கற் களைக் கொண்டு வந்து அந்த வதை முகாமுக்குள் பூட்டப்பட்ட இடத்தில்,
இரண்டு கற்களை வைத்து அதன் அருகில் இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்திருக்கிறாள்.

வந்தவர் களிடம் இது இரண்டும் என் பிள்ளைகள் என்று கூறுகிறாள். இந்த உணர்வுகள் வீறுகொண்டு எழுந்திருக்கிறபோது,சுதந்திரத் தமிழ் ஈழத்தையும் நம் கண்ணால் காண்போம். தாய் தமிழகத்தின் மறுமலர்ச்சியையும் கண்ணால் காண்போம். மதுக்கடை களை நிரந்தரமாக அகற்றுகின்ற அந்தக்காட்சியையும் தமிழகம் காணும்.வெல்வோம் என்ற நம்பிக்கையோடு விடைபெறு கிறேன்.

பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment