Thursday, May 23, 2013

ஈழத்தமிழர்கள் அநாதைகளா ? நீதியின் கதவை தட்டுகிறேன்...பகுதி 2


இந்திய அரசே நாங்கள் ஈழத்திற்கு நம்பிக்கை துரோகிகள் தான் என ஒப்புகொண்டு உள்ளது ....

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.


அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டு உள்ள இரண்டாவது காரணம், இலங்கை யில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அதன் நோக்கத்திற்கும் ஆதரவு திரட்ட, தடையை மீறி ஊர்வலங்கள், ஆர்ப் பாட்டங்கள் நடத்தி வருவது, தமிழகத்தில் ஓர் அமைதியற்ற நிலையை உரு வாக்கவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையிலும் அமைந்து உள்ளது என்பது ஆகும்.


ஜனநாயகத்தில், ஆளுகின்ற அரசு, எல்லா அரசியல் கட்சிகளும், மக்களும் தன் னைப் பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. கருத்துச் சுதந்திரமும், எதிர்ப்பைத் தெரிவிப்பதும் ஜனநாயகத்தின் முக்கிய மைல் கற்கள் ஆகும். உச்ச நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் வழங் கிய தீர்ப்பில், ‘விடுதலைப் புலிகளுக்குத் தார்மீக அடிப்படையில் ஆதரவு
வழங்குவது குற்றம் ஆகாது’ என்று தீர்ப்பு அளித்து உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில், குடிமக்கள் அனைவரும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரேவித மான கருத்தைத்தான் சொல்ல வேண்டும் என்று ஆளுங்கட்சி கட்டாயப்படுத்த முடியாது.

இந்த வேளையில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் எழுந்து,‘எந்த விதத்தில் வைகோ பாதிக்கப்பட்ட தரப்பாக முடியும்? என்று கேட்டார்.

நீதிபதி விக்ரம்ஜித்சென்: நீங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப் பினரா?

வைகோ : நான் உறுப்பினர் இல்லை.

நீதிபதி விக்ரம்ஜித்சென் : நீங்கள் ஏன் உறுப்பினராகச் சேரவில்லை?

வைகோ : அது தேவை இல்லை. தமிழ் ஈழம் அடையவேண்டும் என்ற அவர் களுடைய நோக்கத்தை ஆதரிக்கின்றேன். நாட்டுப்பற்றைப் பொறுத்தவரை
நான் யாருக்கும் இளைத்தவன் அல்ல. இந்தியாவின் ஒருமைப்பாட்டை விரும் புகிறவன் நான்.விடுதலைப்புலிகளின் தாகமான தமிழ் ஈழத்தை நான் ஆதரிக் கின்றேன் என்பதற்காக, விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழக அரசாங்கம் என்மீது தேச விரோ த நடவடிக்கைகள் என்று கூறி, இரண்டு வழக்குகளை இந்தியத் தண்டனைச் சட்டம் 124 (ய) மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்சட்டம்) சட்டம் 1967 13 (1) (b) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான
வழக்குகளை நான் நீதிமன்றத்தில் சந்தித்து வருகின்றேன்.

எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெறிப்பதற்கு,அரசு இந்தத் தடை உத்திர வைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

எனவே, இரண்டாவது காரணமும் நொறுங்கிப்போய்விட்டது.

மூன்றாவது காரணமாகச் சொல்லப்பட்டு இருப்பது என்னவென்றால், இலங் கையிலே விடுதலைப்புலிகளின் இயக்கம் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப் பட்ட நிலையில்/ எஞ்சியுள்ள எல்.டி.டி.இ., போராளிகள் / முன்னணித் தலைவர் கள், தமிழ்நாட்டில் தனித் தமிழ் ஈழ நடவடிக்கையில் ஈடுபடுவதும் எதிரிகளை யும், நம்பிக்கைத்துரோகிகளையும் பழிவாங்கும் நோக்கத்தோடு ஒன்றுசேர்த்து வருகின்றார்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.

மேலும், நம்பிக்கைத் துரோகிகள் என்று இந்திய அரசையும் எதிரிகள் என்று இலங்கை அரசையும் குறிப்பிட்டு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபட வில் லை. தமிழ் ஈழம் உருவாக்குவோம் என்று சொல்லப்படுவதாக எடுத்துக்கொண் டாலும், அது சட்டவிரோதச் செயலாகக் கருத முடியாது.இந்தியாவின் ஒரு பகுதியைத் துண்டாடுகின்ற நடவடிக்கையோ அல்லது செயலோ இல்லாத,
வரையில் ஓர் இயக்கத்தைச் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச் சட்டம்) சட்டத்தில் தடை செய்வது அவசியம் இல்லாதது.

நடுவண் அரசே அரசாங்கமே தயாரித்து உள்ள அரசு அறிக்கையில், நம்பிக் கைத் துரோகி என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளது. இது.தன்னுடைய மனசாட்சி உறுத்தலினால் வெளிப்பட்ட கருத்தாகவே கருதுகிறேன்.

ஆனால், இந்தியா செய்தது நம்பிக்கைத் துரோகம்.

நீதிபதி விக்ரம்ஜித் சென் : யார் சொன்னது?

வைகோ : மாண்புமிகு நீதிபதி அவர்களே, இதை நான் சொல்கிறேன். ஈழத் தமி ழர்களுக்கு இந்தியா செய்தது நம்பிக்கைத் துரோகம். நான் இந்தியாவின் பிரத மர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பல கடிதங்கள் எழுதி உள்ளேன். இந்திய அரசு ஈழத்தமிழர்களுக்குச் செய்தது நம்பிக்கைத் துரோகம் என்று குறிப் பிட்டு உள்ளேன்.அதற்கு 2008 அக்டோபர் 2 அன்று பிரதமர் எனக்கு எழுதிய கடி தத்தில், ‘இலங்கையின் ஒற்றுமையைக் காப்பாற்ற இந்தியா இராணுவ உதவி வழங்கியது’ என்று தெரிவித்து இருந்தார்.

பிரதமருக்கு நான் எழுதிய கடிதங்களும், அதற்குத் தரப்பட்ட பதிலையும் ‘குற் றம் சாட்டுகிறேன்’ (I Accuse) என்ற புத்தகத்தில் தொகுத்து உள்ளேன். அந்தப் புத்தகத்தையும் இந்த மனுவோடு இணைப்பாகச் சேர்த்து உள்ளேன்.

எனவே, மூன்றாவது காரணமும் நொறுங்கி விட்டது என்று குறிப்பிட விரும்பு கிறேன்.

மேற்குறிப்பிட்டு உள்ள அரசு ஆணையில் சொல்லப்பட்டுள்ள நான்காவது கார ணமான,‘எஞ்சியுள்ள எல்.டி.டி.இ., போராளிகள் / தலைவர்கள் கள்ளத் தோணி யின் மூலமாக இந்தியாவுக்குள், குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்தை அடைந்து, ஒன்றுசேர்ந்து திட்டம் வகுக்கும் களமாக தமிழ்நாட்டைப்பயன்படுத்தும் வாய்ப்பை மறுக்க முடியாது. கடல்வழியாக இலங்கை அகதிகள் என்ற போர் வை யில், எஞ்சியுள்ள எல்.டி.டி.இ., போராளிகள்,இந்தியாவில் நுழைந்து விடும் வாய்ப்பையும் ஒதுக்கிவிட முடியாது என்று கூறப்பட்டு உள்ளது.சந்தேகத்தின் அடிப்படையிலும் வேறு சில நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்பதாலும் ஓர் இயக்கத்தைத் தடை செய்துவிட முடியாது. ஊகங்களின் அடிப்படையில் ஓர் இயக்கம் சட்டவிரோதச் செயலில் ஈடுபடும் என்று அனுமானிக்கக் கூடாது.

தமிழக அரசாங்கம், விடுதலைப்புலிகள் ரகசியமாக தமிழகத்தில் நுழைகிறார் கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தைச் செய்து வருகின்றது. இது முழுக்கமுழுக்க ஒரு பொய்ப் பிரச்சாரம்.

ஏன் இந்தத் தடையை எதிர்க்கிறேன்? சிங்கள அரசின் இனப்படுகொலை களில் இருந்து தப்பிப்பதற்காக ஆண், பெண் மற்றும் இளை ஞர் கள் தமிழகத்திற்கு வருகின்றனர். ஆறுதலுக்காகவும், தஞ்சம் புகுவதற்கா கவும் வருகின்ற தமிழர் கள், தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, அரசின் பிடியிலே துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகின்றனர்.அவர்கள் சிறைக்கொட்டடிக்கு அழைத்துச் செல் லப்படுகின்றனர்; அல்லது இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படு கின்றனர்.

இந்தத் தடை ஆணையால் இலங்கைத் தமிழர்கள்,சர்வதேச அகதிகளாக ஆக் கப்பட்டு உள்ளனர்.இந்தத் தடை தமிழர்களைக் கண்ணீர்க் கடலில் தூக்கியெ றிய அரசுக்குப் பயன்படுகிறது. எனவே, இந்த நான்காவது காரணத்தைத் தீர்ப் பாயம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.

மத்திய அரசின் தடை ஆணையில்,ஐந்தாவது காரணமாக குறிப்பிடப்பட்டு உள் ளது யாதெனில், விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய நாட்டின் அரசி யல் தலைவர்களும் அதிகாரிகளும்தான் காரணம் எனக்கூறி, இணையதளங் களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றும், இத்தகைய பிரச்சாரம், முக்கி யமான தலைவர்களுக்கு, உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர்களுக்குப் பாதகத்தை உண்டாக்கும் என்றும் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலே தெரிவிக்கப்பட்டு உள்ள ஐயப்பாடு, சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப் புச் சட்டம்) சட்டத்தின் எந்தப் பிரிவுக்கும் உட்படாது; சட்டவிரோத நடவடிக்கை யாகவும் கருத முடியாது; அதன் அடிப்படையில் விடுதலைப்புலிகள் இயக்கத் தைத் தடைசெய்ய காரணமாகக் கொள்வதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

இது இணையத்தளத்தின் காலம். புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் அல்ல; மனி த உரிமைஆர்வலர்களும் சிங்கள இனவெறி அரசு நடத்துகின்ற இனப் படு கொலை யைக் கண்டித்து வருகின்றனர்.

இந்த வேளையில், டப்ளினில் அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆயத்தைப் பற்றிச் சொல் ல விழைகிறேன். இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக 2010 ஜனவரி 14, 15 -இல் டப்ளினில் விசாரணை நடைபெற்றது. 10 பன்னாட்டு நீதிபதி கள் அடங்கிய குழு அந்த விசாரணையை மேற்கொண்டது. அதில் 2-ஆவது இடத்தில் இருந்தவர், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதி பதி ராஜேந்திர சச்சார் ஆவார்.

அந்த விசாரணையின் முடிவில், ஜனவரி 16-ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த டப்ளின் பன்னாட்டுத் தீர்ப்பாயம், இலங்கை அரசு போர்க்குற்றங்களைப் புரிந்தது என்றும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டு உள்ளன என்றும் தீர்ப்பு வழங்கியது.

ஐ.நா. சபையின் செயலாளர் பான்-கி-மூன் மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத் தார்; மதிப்பிற்குரிய மூன்று பேர் நியமிக்கப்பட்டனர்.

1) மருஸ்கி தரிஸ்மன், இந்தோனேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரல்

2) மேடம் யாஸ்மின் சுகா, தென் ஆப்பிரிக்காவின் மனித உரிமை ஆர்வலர்

3) ஸ்டிவென் ராட்னர், அமெரிக்காவின் முன்னணி வழக்கறிஞர்

ஆனால் நடந்தது என்ன?

மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவையில் இடம் பெற்று உள்ள கேபினட் அமைச்சர் ஒருவர், இந்த நியமனத்தை எதிர்த்ததுடன், ஐ.நா.வின் செயலாளர்
பான்-கி-மூனை ‘அனைத்து உலக விபச்சார புரோக்கர்’ - International Pimp) என்று போர்டு எழுதி வைத்துக்கொண்டு உண்ணாநிலை இருந்து,மூவர் குழு அமைத்த தற்குக் கண்டனம் தெரிவித்தார்.

இந்திய அரசியல் தலைவர்களும், அதிகாரத்தில் இருப்பவர்களும் விடுதலைப் புலி களின் தோல்விக்குக் காரணம் என்ற பிரச்சாரம் சட்டவிரோதச் செயல்
ஆ காது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச் சட்டம்) சட்டத்தின் வரை
யரைக் கு உட்படாது. உயர் பாதுகாப்பு வழங்கப்படும் முக்கியமான தலைவர் களின் பாதுகாப்பை, ஒரு இயக்கத்தைச் சட்டவிரோத இயக்கமாகத் தடை செய் ய சொல்லப்படும் காரணங்களுள் ஒன்றாகக்கருத முடியாது. சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச் சட்டம்) சட்டம் சொல்கின்ற சட்டப்பிரிவுகளுக்குள் முக்கியமான தலைவர்களின் பாதுகாப்பு இடம் பெறவில்லை.

மாண்புமிகு நீதிபதி அவர்களே!

விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீட்டிப்பதற்காக அரசாங்கத்தால் சொல்லப்படுகின்ற காரணங்கள் ஏற்புடையது அல்ல. எனவே,மாண்புமிகு தீர்ப்பு ஆயம் என்னை இந்த வழக்கில் மனுதாரராகச் சேர்த்து உரிய நியாயம் வழங்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மாண்புமிகு தீர்ப்பு ஆயம், 2010 மே 14 தேதியிட்ட, தடை ஆணையை ஏற்றுக் கொள்ளாமல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறி வைகோ தனது வாதத்தை முடித்துக்கொண்டார்.

நீதிபதி விக்ரம்ஜித் சென் அவர்கள், வைகோ மனு மீதான தீர்ப்பு, பின்னர் வெளி யிடப்படும் என்று கூறினார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற அக்டோபர் 5-ஆம் நாள் சென்னை யிலும், அக்டோபர் 20-ஆம் நாள் ஊட்டியிலும் நடைபெறும் என்று, நீதிமன்றப் பதிவாளர் டி.ஆர்.நாக்பால் அறிவித்தார்.

பின்னர் செப்டெம்பர் 27 திங்கட்கிழமை,நீதிபதி விக்ரம்ஜித்சென் அவர்கள், வைகோவினுடைய விண்ணப்பத்தின் மீது பிறப்பித்து உள்ள ஆணையில்,விடு தலைப்புலிகள் அமைப்பின் பிரதிநிதியாக வைகோ இல்லாததால், சட்ட விரோ த நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், விதி 4,உட்பிரிவு 3 இன்படி, அவர்,இந்த வழக் கில் தன்னையும் ஒரு தரப்பினராக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதற்கு இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதே நேரத்தில், ஜமாத்-இ-இஸ்லாமி குறித்த வழக்கில், தீர்ப்பு ஆயம் என்பது, அரசாங்கத்தின் ரப்பர் ஸ்டாம்பாகக் கருதுவதற்கு இடம் கொடுக்காத வகை யில், நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், தடை குறித்த சர்ச்சையில், முரண்பட்ட கருத்துகளைத் தரும் சாட்சியங்களின் நம்பகத்தன்மையின் அடிப் படையில், உண்மையைக் கண்டு அறிய வேண்டும் என்று உச்சநீதிமன்றம்
தீர்ப்பு வழங்கி உள்ளது.

எனவே, நம்பகத்தன்மை உள்ள ஒருவர், அரசாங்கத்தின் கருத்துகளுக்கு மாறு பட்ட, எதிரான கருத்துகளை, தங்கள் வாதத்தின் மூலம் முன்வைப்பதற்கும் வாய்ப்பை, நான் நிராகரிக்க மாட்டேன்’ என்று ஆணை பிறப்பித்து உள்ளார்.

எனவே, அரசாங்கத்தின் கருத்துக்கு எதிரான கருத்தை,தீர்ப்பு ஆயத்தில் வாதங் களின் மூலமாக முன்வைப்பதற்கும், அப்படிச் சொல்லுகின்றவரின் நம்பகத் தன்மையைக் கருதி, வாய்ப்பு அளிக்கவும் இடம் உண்டு என்று உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்து இருப்பது, நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும் என்று வைகோ கருத்துத் தெரிவித்துஉள்ளார்.

No comments:

Post a Comment