Friday, May 3, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 21

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


இந்தியாவின் ‘மைலாய்’ வல்வெட்டித்துறை - வைகோ

மைலாய்’! வியட்நாமின் அழகியஅமைதியான ஒரு சிறிய கிராமம். வியட் நா மை ஆக்கிரமித்து அடாவடி யுத்தம் செய்து கொண்டிருந்த அமெரிக்க இராணு வம் திடீரென ஒரு நாள் இந்த கிராமத்தினுள் நுழைந்தது.ஏதுமறியாத அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கானோரை அமெரிக்கப் படைகள் சுட்டுக் கொன்றது. மைலாய் கிராமம் முழுமையாகவே எரித்து அழிக்கப்பட்டது. ‘மைலாய் துயரம்’ என்று அழைக்கப்படும் இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றியவன் அமெரிக்க இராணுவத்தளபதி ‘காலி’ என்பவன்.

மைலாய் படுகொலை உலகத்தின் கவனத்திற்கு வந்தபோது வியட் நாமியர் களை விட, அமெரிக்க மக்களே கொதித்து எழுந்தனர். அமெரிக்கப் பத்திரிக்கை கள், அமெரிக்க இராணுவத்தின் படுகொலைகளைக் கண்டித்து எழுதின.


அமெரிக்க செனட்டில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பினர்.
மைலாய் படுகொலைகள் நிகழ்த்திய இராணுவ வெறியர்கள் தண்டிக்கப்பட
வேண்டும் என்று அமெரிக்க மக்கள் போர்க்குரல் எழுப்பினர். அமெரிக்க அரசு
மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்தது. இராணுவத்தளபதி காலி,இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டான்.


இந்தியாவின் மைலாய் - ‘வல்வெட்டித்துறை’

வியட்நாம் போரில் அமெரிக்காவுக்கு ஒரு மைலாய் என்றால், இலங்கையில்
இந்தியா நடத்திய போரில், இந்தியாவுக்கு ஒரு ‘வல்வெட்டித்துறை! 

ஆம். இலங்கையில் அமைதியை நிலைநாட்ட, இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி அனுப்பி வைத்த அமைதிப்படை, வல்வெட்டித்துறையில் நிகழ்த்திய கொடூரம், மகாத்மா காந்திஅடிகள் பிறந்த நாட்டின் மீது உலக நாடுகள் கண்டனம் தெரி விக்க வேண்டிய நிலையை உருவாக்கிற்று.

வல்வெட்டித்துறை, மாவீரன் பிரபாகரன் பிறந்த ஊர் அல்லவா?

விடுதலை இயக்கத் தளகர்த்தர்கள் பலரை ஈன்று புறந்தந்த சிறப்புக்குரிய ஊர் அல்லவா?

அதனால் தான் இந்திய இராணுவம் வெறிபிடித்த நாய் போல அவ்வூரின் மீது
பாய்ந்தது.

1989 ஆம் ஆண்டு ஆகஸ்டு 2,3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இந்திய இராணுவம்,
வல்வெட்டித்துறையில் நுழைந்து, அப்பாவிப் பொதுமக்கள் 63 பேரை கொடூர மாகக் கொன்றது. கற்பை உயிரெனக் கருதும் தமிழ்க்குலப் பெண்களை பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது இந்திய இராணுவம்.123 வீடுகளை நெருப் பு வைத்துக் கொளுத்தி முற்றாகச் சாம்பல் ஆக்கியது. 20க்கும் மேற்பட்ட மீன் பிடி இயந்திரப் படகுகளையும் 176 மீன்பிடி வலைகளையும் எரித்து நர்த்தனம்
ஆடியது. ஐம்பதுக்கும் மேற்பட்ட போக்குவரத்து வாகனங்களை எரித்து சாம் பல் ஆக்கியது.

மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு போட்டுவிட்டு வீடு வீடாகச்சென்று,அரும் பு மீசை முளைத்த மாணவர்களைக் கைது செய்து,கொதிக்கின்ற தார் சாலை யில் படுக்க வைத்தனர். பின்னர், அங்கேயே சில வாலிபர்களை தலையில் துப் பாக்கியால் சுட்டு சாகடித்தனர். மீதமிருந்தவர்களை ஒரு பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதை செய்தனர். பின் னர் ஒவ்வொருவராக சுட்டுக் கொன்றனர்.இவ்வாறு 34 தமிழ் இளைஞர்கள்
இரத்தவெறி பிடித்த ராஜீவ்காந்தியின் இராணுவத்தால், ஈவு இரக்கமற்று சித்தி ரவதை செய்து கொல்லப்பட்டனர்.

வீடு வீடாக நுழைந்து இந்திய இராணுவத்தினர் தமிழ்ப் பெண்களின் கற்பைச் சூறையாடினர். ஏனென்றால் இந்த இளைஞர்களும், இளம் பெண்களும், இந்திய இராணுவத்தின் பார்வையில் விடுதலைப்புலிகள்!..

ஒரு தாயின் கதறல்

இந்திய அமைதிப்படையின் அட்டூழியத்திற்கு ஒரு தமிழ்த்தாயின் வாக்குமூல மே சாட்சி.வல்வெட்டித்துறை ‘உடுப்பட்டி வீரபத்திரர் கோயிலடியைச் சேர்ந்த
இந்திரா என்ற 36 வயதுப் பெண் தனது ஆறுவயது மகனுடன் வீட்டில் தனித்து
இருந்தார். அந்தக் கொடூரம் குறித்து அவர் அளித்த சாட்சியம்.

“எனது கணவர் யாழ்ப்பாணத்தில் வேலைக்குப்போனவர், ஊரடங்குச் சட்டத் தினால் வீட்டிற்குத் திரும்பவில்லை. நானும் எனது மகனும் வீட்டில் இருந்த போது இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த நான்கு சீக்கியர்கள் எனது வீட்டுக் குள் வந்து என் வீட்டைச் சோதனையிடப் போவதாகக் கூறினார்கள். நான் உடனே வீட்டை விட்டு வெளியே வந்து முற்றத்தில்நின்றேன். அப்பொழுது ஒரு சிப்பாய், எனது முதுகில் துப்பாக்கியினால் தள்ளிப்பிடித்தபடி, அறைக்குள்
போகுமாறு கூறித்தள்ளினான்.

எனது ஆறு வயது மகன் பயத்தினால் வெளியே ஓடிப்போய் அழுது கொண்டு
நிற்க, மற்றைய சிப்பாய் அவனைப் பிடித்து இழுத்து வந்து ஒரு மூலையில்
உட்காரவைத்தான். இரண்டு சீக்கியர்கள் என்னை ப் பிடித்து அறைக்குள் இழுத் தார்கள். ஒருவன், நான் சத்தமிடாதபடி என் வாயை அமுக்கிப் பிடித்தான். மற்ற வன் எனது ஆடைகளைக் கழற்றி மானபங்கப்படுத்தினான். எல்லாம் முடிந்து போகும்பொழுது, அந்த வெறிபிடித்த சிப்பாய், என் அருகில் வந்து இதுபற்றி எவரிடமாவது முறையிட்டாய் என்றால் உங்கள் எல்லோரையும் குடும்பத் துடனேயே சுட்டுத்தள்ளி விடுவேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினான்”

வல்வெட்டித்துறையில் மட்டுமல்ல, தமிழீழம் முழுதும் இந்திய அமைதிப்படை
நடத்திய அக்கிரமங்கள்தான், ஒருதாயின் வாக்குமூலமாக,இந்திய இராணுவத் தின் முகத்தில் காரி உமிழ்ந்து கொண்டு இருக்கின்றது.

லண்டன் பத்திரிக்கை தந்த அதிர்ச்சி செய்தி

வல்வெட்டிதுறையில் இந்திய இராணுவம் நடத்திய பச்சைப் படுகொலை களை , கற்பழிப்புகளை, தமிழர்களின் வீடுகளை தீ வைத்து நாசப்படுத்திய
கொடுமைகளை, லண்டனிலிருந்து வெளிவரும் ‘டெய்லி டெலிகிராஃப்’
பத்திரிக்கை உலகிற்கு அம்பலப்படுத்தியது.

“இந்த நாசவேலை மைலாயை விடக் கொடுமையானது. அங்கே அமெரிக்கப்
படைகள் நிதானம் இழந்து வெறியாட்டம் ஆடின. இலங்கையின் வல்வெட்டித் துறை கிராமத்தில் இந்தியப்படையினர் திட்டமிட்டுச் செயல்பட்டு இருக்கின் றனர். ஆட்களைப் படுக்க வைத்து முதுகில் சுட்டுக் கொன்றுள்ளனர்” வல்வெட் டித்துறையில் இந்தக் கோர சம்பவம் நடந்து 13 நாட்களுக்குப் பின்னர் அங்கு
சென்றிருந்த, லண்டன் பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கை செய்தியாளர்,
டேவிட் ஹவுங்கோ, வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் நடத்திய
வெறியாட்டங்களை வெளிப்படுத்தினார். மேலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி ரிக்கை செய்தியாளர் ரீட்டா செபாஸ்டியனும், வல்வெட்டித்துறையில் இந்திய
இராணுவத்தினரின் அட்டூழியங்களை, தனது கட்டுரை மூலம் அம்பலப் படுத் தினார். 

இவ்வளவு பத்திரிக்கைகள் வல்வெட்டித்துறை துயரங்களை அம்பலப்படுத்திய போதும் இந்திய அரசு, சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. சர்வதேச பொது மன்னிப்புச் சபை, ஐக்கிய அமெரிக்க மனித உரிமை கள் கண்காணிப்புக்குழு போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும்கூட இந்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.

நேர்மையான விசாரணை தேவை

1989, ஆகஸ்டு 17 ஆம் நாள் மாநிலங்களவையில் தலைவர் வைகோ அவர்கள், வல்வெட்டித்துறையில் இந்திய அமைதிப்படை நிகழ்த்திய கொடூரபடுகொலை களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள். நேர்மையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் கள்.

அவர் ஆற்றிய உரை இதோ!

“தற்போதைய இலங்கை நிலவரம் குறித்து இந்திய-இலங்கை அரசுகளின்
பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
செய்ய வேண்டும் என்றும் முழுமையான விவாதம் நடைபெற வேண்டும் என் றும் இந்தக் கூட்டத்தொடரின் தொடக்கத் திலேயே தி.மு.க. நாடாளுமன்றத்
தலைவர் முரசொலிமாறன் இம்மன்றத்தில் வலியுறுத்தினார்.அப்போது விவா தம் நடைபெறும் என்றும், உடனடியாக மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய் யும் என்றும் நாடாளுமன்றத்துறை அமைச்சர் இம்மன்றத்தில் வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை அறிக்கையும் இல்லை. விவாதமும் இல்லை.
இலங்கைப் பிரச்சினை குறித்து ராஜீவ் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
மூடுமந்திரமாகவே உள்ளன.

இப்பிரச்சனையை இந்த அரசு நாடாளுமன்றத்தில் இருட்டடிப்பு செய்கிறது. கொழும்பு நிலவரம் குறித்து இங்கு ஒரு உறுப்பினர் பேசினார். ஆனால் கடந்த ஆகஸ்டு 2 ஆம் நாள் ஈழத்தமிழர் சரித்திரத்தில் கண்ணீரும், செந்நீரும் ஓடிய கறுப்பு நாள் ஆகும்.

விடுதலை இயக்கத்தின் தொட்டிலான வல்வெட்டித்துறையில் கடந்த ஆகஸ் டு  2 ஆம் நாளில் இந்திய இராணுவம் ஒரு பயங்கரமான தாக்குதலை நடத்தி
உள்ளது. ஏறத்தாழ 60 அப்பாவித் தமிழர்களை குரூரமான முறையில் மிருகத் தனமான வெறிப்போக்கில் வீடுகளில் புகுந்து ஆண்,பெண்,வயோதிகர், குழந் தைகள் என்ற வித்தியாசம் இல்லாது சுட்டுக்கொன்று இருக்கிறது. இனப்படு கொலை நடத்தி இருக்கிறது.

நூற்றுக்கணக்கான தமிழர் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்தி சாம்பல் ஆக்கி
உள்ளது. கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளை நாசமாக்கி இருக்கிறது.
மின்சார படகுகள், மீன்பிடி வலைகள் எல்லாம் நாசம் செய்யப்பட்டுவிட்டன.
ஈழத்தின் சரித்திரத்திலேயே இப்படிப்பட்ட கொடூரமான கொலைகள் ஒரு ஊரையே நாசம் செய்யும் அக்கிரமம் இதுவரை நடைபெற்றது இல்லை. லண் டன் பி.பி.சி வானொலி இப்படுகொலைகள் குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.

நடுநிலையாளர்களை, மனசாட்சி உள்ள பத்திரிக்கை நிருபர்களை, நீதிமான் களை வல்வெட்டித்துறைக்குச் செல்ல அனுமதித்தால், நியாயமான நேர்மை யான விசாரணை நடைபெறுமானால் தமிழர்களுக்கு இந்திய இராணுவம் இழைத்த கொடுமைகள் உலகத்துக்கு வெட்ட வெளிச்சம் ஆகும். இந்திய இரா ணுவம் இதோடு தனது வெறித்தாக்குதலை நிறுத்தியாக வேண்டும் என இம் மன் றத்தின் மூலம் இந்திய அரசை வலியுறுத்துகிறேன்.

எம்.எம்.ஜேக்கப்: (நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்) லண்டன் பி.பி.சி வானொலியில் சொல்லப்படும் செய்தியை வைத்து எதுவும் கூற முடியாது.

வைகோ: அகில இந்திய வானொலியைவிட பி.பி.சி.வானொலியை ஆயிரம் மடங்கு நம்பலாம்.

அமைச்சர் ஜேக்கப்: இலங்கைப் பிரச்சனை விவாதிக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கைகளை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கிறேன். உறுப்பினர்களின் உணர் வுகளை வெளிவிவகார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

வைகோ: நாடாளுமன்றத்துறை அமைச்சர் இக்கூட்டத்தொடரில் இதே வாக் குறுதியை பலமுறை சொல்லிவிட்டார். இலங்கைப் பிரச்சினை குறித்து பிரத மர் அலுவலகத்தில் தலைமறைவு நடவடிக்கையாகவே எல்லாம் நடக் கிறது. நாடாளுமன்றத்தை பிரதமர் மதிப்பதே இல்லை என்பதற்கு இதுவே எடுத்துக் காட்டு.

மாநிலங்களவையில் மூன்றாவது முறையாக வைகோ

1989 டிசம்பரில் வி.பி.சிங். தலைமையில் தேசிய முன்னணி அரசு பதவி ஏற்றது.
இதன் பின்னரும் நாடாளுமன்றத்தில் இந்திய அமைதிப்படையின் செயல்பாடு கள் குறித்து நடைபெற்ற விவாதங்களில் தலைவர் வைகோ, தனது நிலைப் பாட்டில் உறுதியாக நின்று இந்திய இராணுவத்தின் மீது கண்டனக்கணைகளை ஏவினார்.

1990, மார்ச் மாதத்தில் மூன்றாவது முறையாக தலைவர் வைகோ, மாநிலங் களவை உறுப்பினராக பொறுப்பு ஏற்றார். தி.மு.க. ஆதரவுடன் தேசிய முன் னணி ஆட்சி இருந்தாலும்,ஆளும் தரப்பில் இருந்தவாறு, தமிழ் இனத்தைக் கருவறுத்த இந்திய இராணுவத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ பொங்கி எழுந்தார்.

1990, மார்ச் 29 இல், மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில், காங்கிரஸ்
எம்.பிக்கள், தி.மு.க.விற்கு எதிரான புகார்களைக் கூறியபோது, தலைவர்
வைகோ தக்க பதிலடி கொடுத்தார்.

திருமதி ஜெயந்தி நடராசன்: (இ.காங்) இந்திய அமைதிப்படைக்கு எதிராக
கடுமையான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்துள்ளது. இந்திய அமைதிப்படை ஐந்தாயிரம் தமிழர்களைக் கொன்றதாக..

வைகோ: அதில் என்ன தவறு? அது உண்மைதான்.

புதுவை நாராயணசாமி: (இ.காங்) தமிழக முதலமைச்சர் இந்திய அமைதிப் படை நாடு திரும்பியபோது, வரவேற்பு விழாவுக்கு செல்லவில்லை. உள்துறை
அமைச்சரிடமிருந்து பதில் வரவேண்டும்.கோபால்சாமி இந்தியஅமைதிப்படை
குறித்து கூறியதற்கு..

வைகோ:பலமுறை நான் கூறிவிட்டேன்.உங்களுக்கு என்ன பதில் வேண்டும்?
கே.வி.தங்கபாலு: (இ.காங்) கோபால்சாமி கருத்தை மத்திய அரசு ஆதரிக் கிறதா? தி.மு.க. நிலையை நீங்களும் ஆதரிக்கிறீர்களா? பிரதமரின் நிலைப் பாடு என்ன?

ஜெயந்தி நடராசன்: இது குறித்து நாம் விவாதிக்க வேண்டும். அரசின் நிலைப் பாடு மாறி இருக்கிறது. அமைச்சர் கூறுவதிலிருந்து அவர் கோபால்சாமி பேசி யதை சரி என்று ஒப்புக் கொள்கிறார் என்று தெரிகிறது.

வைகோ:நான் கூறியதில் உறுதியாக இருக்கிறேன்

சுப்பிரமணியசாமி: கோபால்சாமி இனப்படுகொலை என்ற வார்த்தையை
உபயோகித்தார், அதையே திரும்பவும் கூறுகிறார்.

வைகோ: வல்வெட்டித்துறையில் இந்திய அமைதிப்படை இனப்படுகொலை
நடத்தியது. அதற்கான ஆதாரங்களை நான் தரத்தயார். பெண்களையும், குழந் தைகளையும் ஐ.பி.கே.எப் கொன்று குவித்தது. குழந்தைகள் வெட்டிக் கொல்லப் பட்டார்கள். இந்தக் கொடூரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் செய்தி யாக வந்தது.அப்போது நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?

பி.சிவசங்கர்: (மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் , இ.காங்) கோபால் சாமி தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

வைகோ: நான் எனது கருத்தைத் திரும்பப் பெறமாட்டேன். வருத்தப் படாதீர்கள்.

- தொடரும்........
நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment