Thursday, May 30, 2013

தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்

தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் வைகோ வாதம்

ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை மூடுமாறு, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம், மார்ச் 29 ஆம் தேதி ஆணை பிறப்பித்ததால், ஆலை மூடப்பட் டது. அந்த ஆணையை இரத்து செய்யக்கோரி, ஸ்டெர்லைட் நிர்வாகம், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் தொடுத்த வழக்கு மீதான விசாரணை, டெல்லி முதன்மைத் தீர்ப்பு ஆயத்தில் நடைபெற்று வருகின்றன. நிறைவுக் கட்ட வாதங்கள் இன்று முன்வைக்கப்பட்டன.

இந்த வழக்கில் வைகோ பின்வருமாறு வாதத்தை எடுத்து வைத்தார்:
"ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலையை குஜராத் மாநிலத்தில் நிறுவ, ஸ்டெர்
லைட் முயன்றபோது, குஜராத் மாநில அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி அனுமதி தரவில்லை. பின்னர் கோவா மாநிலத்தில் ஆலையை நிறுவ முயன் று அங்கும் அனுமதி கிடைக்காத நிலையில், மராட்டிய மாநில அரசின் அனும தியைப் பெற்று, அங்கு இரத்தினகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது. கட்டடங்கள் கட்டப்பட்டன. இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. 300 கோடி ரூபாய்க்கு மேல் இதற்காக செலவழிக்கப்பட்டது.

இரத்தினகிரி மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழங்கள் விழை கின்றன. அங்குள்ள விவசாயிகள், ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக் காற் றால் பாதிப்பு ஏற்படும் என்று ஆலையை மூடக்கோரி பெரும் போராட்டம் நடத்தினார்கள். கடப்பாறை சம்மட்டிகளோடு போய் ஆலையை உடைத்து நொறுக்கினார்கள். உடனடியாக மராட்டிய மாநில அரசு ஆலை லைசென்சை இரத்து செய்தது.

அதன்பின், ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றத்திற்குச் செல்லாமல், தூத்துக் குடியில் வந்து ஆலையை நிறுவியது.

தேசிய கடல் பூங்கா தூத்துக்குடியில் உள்ளது. தூத்துக்குடி மாநகரம், சுற்றுப் புறத்தில் வாழும் மக்களுக்கு, இந்த ஆலையால் பேராபத்து ஏற்படும் என்பத னால், தொடக்கத்தில் இருந்து நான் எதிர்த்து வருகிறேன்.

1995 ஆம் ஆண்டில் ஆலையை எதிர்த்து பிரச்சாரக் கூட்டங்கள், 1996 இல் மார்ச் 5 இல் உண்ணாவிரதப் போராட்டம், மார்ச் 12 இல் கருப்புக்கொடி போராட்டம், ஏப்ரல் 1 இல் மக்கள் பேரணி, டிசம்பர் 9 இல் உண்ணாவிரதப் போராட்டம்,

1997 பிப்ரவரி 24 இல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மறியல், ஜூன் 3, 4, 5 தேதிகளில் பாத யாத்திரை, ஆகÞடு 30 ஆம் தேதி அன்று Þடெர்லைட் ஆலை முற்றுகை என, என் தலைமையில் போராட்டங்கள் நடைபெற்றன. சிறு வன் முறை சம்பவம் கூட நடக்கவில்லை.

ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிர் இழந்ததற்கு எங்கள் போராட்டமே காரணம் என்றும், சதி வேலை என்றும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பொய்ப்பழி சுமத்தியது. எனவே, இனி போராட்டத்தை நீதிமன்றத்தின் மூலம் நடத்துவோம் என்று, உயர்நீதிமன்றத்தில் 1997 நவம்பரில் ரிட் மனு தாக்கல் செய்தேன். ஆலையை மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் 2010 இல் தீர்ப்பு அளித்தது.

பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடந்தது. உச்ச நீதி மன்றம், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்த போதும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆலையை மூட அதிகாரம் உண்டு எனக் கூறியது.

இந்தப் பின்னணியில் மார்ச் 23 ஆம் தேதி அன்று அதிகாலையில், ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால் தூத்துக்குடி மாநக ரத்தின் பல பகுதிகளிலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் மூச்சுத் திணறல், தொண்டை அடைப்பு, கண் எரிச்சல் போன்ற உடல்நலக் கேடுகளுக்கு ஆளா னார்கள். மக்கள் போராட்டம் வெடித்தது. 20 ஆயிரம் கடைகளை வியாபாரிகள் மூடினார்கள்.

29 ஆம் தேதி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.

இந்த ஆலையின் நச்சுக் காற்றால், இப்பகுதி வாழ் மக்களுக்கு புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் தூத்துக் குடி அரசு மருத்துவமனையில், 2552 பேர் புற்று நோயாளிகளாக பதிவாகி உள்ளனர்.

போபாலில் ஏற்பட்ட விஷவாயு அழிவைப் போல, தூத்துக்குடியிலும் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண் டும் என்று போராடுகிறோம்.

ஆஸ்திரேலியாவில் இருந்து Þடெர்லைட் ஆலை இறக்குமதி செய்கின்ற தாமி ர அடர்த்தியில், யுரேனியம், ஆர்சனிக் போன்ற கொடிய நச்சு உலோகங்கள் இருக்கின்றன. தூத்துக்குடி நகரத்தில் மக்கள் வசிக்கும் தெருக்கள் வழியாகத் தான் இந்தத் தாமிர அடர்த்தி எடுத்துச் செல்லப்படுகிறது.பொதுமக்களின் உடல் நிலை பற்றியோ, உயிரைப் பற்றியோ இந்த ஆலைக்கு எந்த அக்கறையும் கிடையாது.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுப் புகை வந்ததால்தான் பூக்களின் நிறம் மாறின. மரங்கள் செடிகளின் இலைகளின் நிறம் மாறின, இலைகள் உதிர்ந்தன. அந்தப் புகைப்பட ஆல்பத்தை, தீர்ப்பு ஆய நீதிபதியும், நிபுணர்களும் பார்வை யிட இதோ முன் வைக்கிறேன்.

பல்லாயிரம் கோடி கொள்ளை இலாபம் சம்பாதித்துள்ள ஆலை நிர்வாகம், இங் குள்ள தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை கொடுக்க வேண்டும். இந்தப் பகுதி வாழ் மக்களைப் பாதுகாக்க, ஆலையை நிரந்தரமாக மூட, ஸ்டெர் லைட் மேல்முறையீட்டு மனுவை, இந்தத் தீர்ப்பு ஆயம் தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன்.”

இவ்வாறு வைகோ தமது வாதத்தை எடுத்து வைத்தார்.

No comments:

Post a Comment