Sunday, May 5, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 1

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பல்லாயிரக்கணக்காகத் திரண்டு இருக்கின்ற மக்களுக்கு, நாளை தமிழகத்தில் நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை என்ன? என சூளுரைக்கின்ற நிகழ்ச்சியாக, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுவிலக்குப் பிரச்சார நடைப் பயண நிறைவு நாள் கூட்டமாக நடைபெறும் இந்த மக்கள் சங்கமத்துக்குத் தலை மை தாங்குகின்ற கழகத்தின் ஆட்சிமன்றக்குழுச் செயலாளர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர், கழகத்தின் மாவட்டச் செயலாளர், அடக்குமுறைக் கு அஞ்சாத வேங்கை என் ஆருயிர்ச் சகோதரர் கணேசமூர்த்தி அவர்களே, இன் னும் பல்லாயிரம் பிறைகண்டு வாழ்க! நூறாண்டு வாழ்க! மறுமலர்ச்சி திரா விட முன்னேற்றக் கழகத்திற்கு வலிமையான அரண்களை வார்ப்பித்து வாழ்க! என்று இலட்சோப இலட்சம் தொண்டர் களினுடைய வாழ்த்துகளை, எந்நாளும் பிறந்தநாளை கொண்டாடாத அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுமா னால்,அதற்கு அனுமதிக்காத, பண்புடைய வரான, இந்நாளில் எங்கள் வாழ்த்துகளைப் பெற் றுக்கொண்டு இருக்கின்ற கழக அவைத்தலைவர் ஆருயிர் அண் ணன் திருப்பூர் துரைசாமிஅவர்களே, கழகப் பொருளாளர் ஆருயிர்ச் சகோதரர் டாக்டர் மாசி லாமணி அவர்களே, துணைப் பொதுச்செயலாளர் மூன்று போர்ப் படை நடைப் பயணத்திலும் நம் கண்மணி களை விழியை இமை காப்பதுபோல் காத்து உடன் வந்துள்ள என் ஆருயிர் இளவல் மல்லை சத்யா அவர்களே, இந்த மூன்றுஅணி களையும் வார்ப்பித்து தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் பணியாற்றி வரு கிற வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆருயிர் தம்பி ஜீவன் அவர்களே,



நெடுநாட்களுக்கு முன்னர் என்னை தொலைபேசியில் அழைத்து ஈழத்தில் நடக் கின்ற கொடுமைகளை, தமிழர் களை சூழ்ந்துவிட்ட மரண பயங்கரத்தை
உங்களுக்குத் தெரிவிக்கின்றேன் என்று அவர் தொலைபேசியில் தகவல் தந்த
மறுநாள் நாடாளுமன்றத்தில், இந்திய அரசுக்கு எங்கள் தமிழர்களைக் காக்க
கடமையாற்றுங்கள் என்று கூறியதோடு, என் உரைகள் பதிவுசெய்யப்பட்ட
நூலில் அடிக்கோடிட்டு, இந்தத் தகவல் மேலவைத் துணைத் தலைவராக இருக் கின்ற மாபெரும் கவிஞர் புலமைப்பித்தன் கொடுத்த தகவலின் பேரில்
நான் நாடாளுமன்றத்தில் உரைஆற்றியது என்று நான் யாரைக் குறிப்பிட்டே னோ, அவரை நான் அதிகமாக நேசிப்பதற்கான காரணங்களில் ஒன்றை இந்த மேடையில் சொல்லுவது உசிதமாக இருக்கும் என்பதனால் தெரிவிக்க விழைகிறேன்.

உலக வரலாற்றில் இதற்கு நிகரான ஒரு கொரில்லா போராளி, ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத பலத்தை எதிர்த்து நிற்கக்கூடிய களம் கண்டவன், நான் போற்றுகின்ற தலைவன் பிரபாகரனைத் தவிர இன்னொருவன் இல்லை. தம்பி என்று ஒரு காலத்தில் அழைத்து, பிறகு தலைவனாக ஏற்றுக்கொண்ட வர். அவரை அவரது இல்லத்தில் அண்ணன் புலமைப் பித்தன் அவர்களுடைய
வாழ்க்கைத் துணைவியார் சொந்த வீட்டுப் பிள்ளையைப் போல் உபசரித்து,
வரும் வேளையெல்லாம் அவருக்கும்,உடன் வருகின்ற புலிகளுக்கும்விருந்து
சமைத்து உணவு படைத்து அந்த வீடு புலிகளின் பாசறை என்று ஆக்கிய அந்த
ஒரு தகுதிக்காகவே ஈரோட்டில் நிறைவு செய்வதற்கு நீங்கள் வாருங்கள் என் று நான் அழைத்ததன் பேரில் அவர் வந்திருக்கிறார்.2130 கிலோ மீட்டர் தொலை வு, மதுவை எதிர்த்து நான் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கின்றேன்.

2004 ஆம் ஆண்டு, வேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், பாய்ந் தோ டு கிற தாமிரபரணி நதிக்கரையில் இருந்து பத்தொன்பது மாவட்டங்களைக்
கடந்து, 1400 கிலோ மீட்டர் மூவாயிரம் தொண்டர்படை தம்பிமார்களோடு,தமி ழகத்தில் கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்த வேளையில், மதுவின் பிடி யிலிருந்து தமிழகம் மீட்கப் பட வேண்டும். இளம் தலைமுறை இந்தச் சுழலில் சிக்கி அழிந்துவிடக் கூடாது என்று கட்சியை முன்னிறுத்தாமல், நான் நடைப் பயணம் மேற் கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து கரூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் மாநாட்டுப் பிரகடனத்தின்படி, ஐந்து கட்டப் போராட்டங்களை அறிவித்து, இன்று மூன்றாவது கட்ட நடைப்பயணத்தை நிறைவு செய்கிற பொழுது, இந்த மூன்று நடைப்பயணத்திலும் நான் 1130 கிலோ மீட்டர் நடந்திருக்கின்ற இந்தச் சூழலில், இந்த மூன்று கட்டப் பிரச்சாரப் பயணத்திலும் கோடிக்கணக்கான மக்களின் செவிகளிலே ஒலித்த பாடல், அவர்களது இதயங்களை ஊடுருவிய பாடல், எண்ணற்ற நெஞ்சங்களை உலுக்கிய சோகமான பாடல் இவற்றைத் தந்த படைப்பாளி என்ற தகுதியோடு, இங்கே அரிய உரைதனை நிகழ்த்தி திரா விட இயக்கத்தினுடைய இனமானக் குரலை சங்கொலித்து அமர்ந்திருக் கின்ற
மரியாதைக்குரிய அண்ணன் புலவர் புலமைப் பித்தன் அவர்களே. மேடையில்
அமர்ந்திருக்கின்ற மாவட்டச் செயலாளர் களே, அரசியல் ஆலோசனைக்குழு,
ஆய்வுமய்ய உறுப்பினர்களே, மூன்று அணிகளை முன்னின்று நடத்திய தள கர்த்தர்களே, நடைப்பயணத்தில் பங்கேற்ற என் நேசத்திற்குரிய தம்பிமார் களே, அன்புடைய தாய்மார் களே, அருமைச் சகோதரிகளே, வெள்ள மெனத் திரண்டிருக்கின்ற தமிழ்ப் பெருமக்களே, இல்லங்களிலே இருந்து என் உரை யைச் செவிமடித்துக் கொண்டு இருக்கின்ற பாசமிகு சகோதரிகளே, பெரியவர் களே, மதிப்புமிக்க பத்திரிகை யாளர்களே, ஊடகவியலாளர்களே, கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றல் அதுவே படை. கண் இமைத்தல் வீர னுக்கு இழுக்கு என்பதனால், பாய்ந்து வரும் ஈட்டிக்கும் இமைகொட்டாது மார் புகாட்டும் கூட்டம் எங்கே அது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தின் இளம் வேங்கைகள் கூட்டம் என்று, ஆண்டுகள் பலவாக நான் மேடை தோறும் முழங்கு கின்ற தகுதியைத் தந்திருக்கின்ற வாலிப வேங்கைகளே, வணக்கம்.

பொள்ளாச்சியில் தொடங்கி ஈரோடு வரையிலும் வழிநெடுகிலும் செய்யப்பட்ட ஏற்பாடுகள், நமது மாவட்டச் செயலாளர்கள் குகன் மில் செந்தில்,எழுபத்து ஏழா வது அகவையைக் கடந்து கொண்டிருக்கின்ற இந்த இயக்கத்தின் முன்னோடி களில் ஒருவரான ஆர்.டி.மாரியப்பன், டி.என்.குருசாமி, இந்த ஈரோடு மாவட்டத் தில் இலட்சக்கணக்கான மக்களைச் சந்திப்பதற்கு, இந்த மிகப்பெரிய கூட்டத் தை ஏற்பாடு செய்திருக்கின்ற ஈரோடு மாவட்டக்கழகச் செயலாளர் கணேச மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டி ருக்கின்றேன்.



மதுவை எதிர்த்து குழந்தைகள் அறப்போர்

வாட்டுகின்ற வெயிலில், நெருப்பு மழைபொழிகின்ற நாட்களில் நானும் என் தம்பிமார்களும், கால் கடுக்க கொப்புளங்கள் எங்களை வருத்த நாங்கள் நடந் துவந்தபோதும் பயணக் களைப்பு எங்களுக்குத் தெரியவில்லை. வழிநெடு கி லும் இலட்சக்கணக்கான மக்களைச் சந்தித்தோம். இந்த நிகழ்ச்சிக்கு வருவ தற்கு முன்பு தோழர் பொன்னையனும், கண.குறிஞ்சியும் இந்த ஈரோடு நகரத் தின் நுழைய வாயிலான கருங்கல்பாளையத்தில், பாரதி கடைசியாக உரை யாற்றிய அந்த மண்ணில், மதுவை எதிர்த்து குழந்தை களை அமர வைத்து உண்ணாநிலை அறப்போரை நடத்தினார்கள்.மாணவர்கள் கலந்துகொண்டார் கள்.சின்னஞ்சிறு குழந்தைகள் அங்கே அமர்ந் திருக்கக் கண்டேன்.

நான் எண்ணற்ற போராட்டக்களங்களுக்குச் சென்றிருக் கிறேன். உண்ணா நிலை அறப்போரில் பலரை வாழ்த்தியிருக்கிறேன். இரண்டு வயது, மூன்று வயது சின்னஞ்சிறு குழந்தைகள் நாள் முழுக்க பட்டினி கிடந்து உண்ணாநிலை அறப்போர் நடத்தியது பெரியார் பிறந்த இந்த பூமியில்தான் நடந்திருக்கிறது. அவர்களுக்கு வாழ்த்துச்சொல்லிவிட்டுத்தான் நான்வந்தேன். வருகிற வழி யில் தமிழ் ஈழ விடுதலைக்காகவும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் களமாடிய ஒரு நல்ல இலட்சியவாதியான இளைஞன் படுகொலை செய்யப் பட்ட பிறகு, எந்த படிப்பகத்துக்கு என்னை அழைத்துச் சென்றாரோ அந்தப் படிப் பகத்துக்கு உள்ளே அவரது திருஉருவப் படத்துக்கு மாலை சூட்டுவதற்காக அங்கே சென்றேன்.

இளம் வயதில் கணவனை இழந்து தாங்கிக் கொள்ளமுடியாத துக்கத்தை விம் மல்களாலும், வேதனை களாலும் கண்ணீரோடு அந்த திருஉருவப் படத்துக்கு பக்கத்தில் நின்றிருந்த அந்த தங்கையையும்,அவர்களது இரண்டு பிள்ளை களை யும் கண்டேன். கணவனை இழந்த, சகோதரியே உனக்கு ஆறுதல் சொல்லக் கூடிய சக்தி யாருக்கும் கிடையாது.

உன்னுடைய அருமையான பிள்ளைகள் வளர்ந்து, உன் கண்ணீரைத் துடைக்
கட்டும் என்று கூறிவிட்டு வந்தேன். மரணம் தவிர்க்க முடியாதது. நொடிப்
பொழுதிலே வந்து கவ்விக்கொண்டு செல்லக்கூடியது. ஆனால் நாம் நேசிக்
கின்றவர்கள் மறைகிறபோது, தாங்க முடியாத துக்கத்துக்கு ஆளாகிறோம்.
யாரிடத்தில் மிகப் பிரியமாக இருக்கிறோம், யார் நம்மிடத்திலே அன்பு செலுத் துகிறார்களோ, அவர்கள் மறைகிறபோது, அந்த வேதனை மரணத்தைவிட கொடுமையாகவே இருக்கிறது. மனிதநேயம் கொண்டவர் களுக்கு எங்கே துன்பம் ஏற்பட்டாலும், நெஞ்சம் துடிக்கும், கண்கள் கலங்கும்.

அன்புத்தோழர் அசன் இப்ராகிம்

இங்கே நமது அவைத்தலைவர் அவர்கள் குறிப்பிட்டதுபோல், நான் இந்த
நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வந்த செய்தி பேரிடியாக என்னைத் தாக்கியது.
1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி - சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் 1965 இல் மாணவர்கள்அணிதிரண்டு வந்தார்களே, எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்று சீறி வந்த சிவகங்கை வேங்கை யினுடைய தொண்டைக்குழியில் பாய்ந்ததே துப் பாக்கி ரவை. அவன் இரத்தம் சிந்திய இடத்தில் எழுப்பப்பட்ட சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அன்று இரவு சிதம்பரத்தில் நடைபெற்ற பிரம் மாண்டப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிவிட்டு, இரவோடு இரவாக நான் நெல்லைக் குச் சென்று, மறுநாள் மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற கடையநல்லூர் பொதுக் கூட்டத்தில், நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப் பட்ட சூழல் 1975 ஜூன் 25 லோகநாயகர், ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டவர்கள் சிறைப் படுத்தப்பட்ட காலம்.

இசுலாமிய பெருமக்கள் திரண்டு இருந்த கடையநல்லூர் கூட்டத்தில் உரை யாற்றி முடித்ததற்குப் பின்னர், தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று தன்
தந்தையாரை அருகில் உட்கார வைத்து இசுலாமிய மக்களுக்கே உரித்தான
பண்பாட்டோடு ஒரு உன்னதமான விருந்தைத் தயாரித்து, எனக்கு அருகில்
அமர்ந்து உணவு படைத்து, அழகு பார்த்து, சிரிக்கச் சிரிக்கப் பேசினார்.

ஜனவரி 30 இல் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது, தமிழகத்தின் தெற்குச் சீமையில்
முதலாவது கைது செய்யப்பட்டவன். கைது செய்யப் போகிறார்கள் என்று
தெரிந்து என் இல்லத்தின் வாயிலிலே வந்து உட்கார்ந்து, அதற்கும் சிலஆண்டு களுக்கு முன்னால் பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த அந்தக் காலகட்டத் தில், நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாணவர் இயக்கத்தில் பணியாற் றத் தொடங்கிய போது, நெல்லை மாவட்டத்தில் என்னோடு கரம்பற்றி வந்து கொண்டு இருந்த மாணவத் தோழர்களில் ஒருவனாகவே இருந்து, சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற அந்த மந்தகாச புன்னகையைத் தவிர, அசன் இப்ராகிம் முகத் தில் நான் எதையும் பார்த்தது இல்லை.

1993 இல் நான் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டபோது, என் னோடு கரம் கோர்த்தவர்களில் ஒருவராக வந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், தான் திரட்டிய செல்வத்தில் பெரும் பகுதியைக் கண்மணி களுக் கு அள்ளி வழங்கி, தோற்போம் என்று தெரிந்து சட்டமன்றத் தேர்தலில் வேட் பா ளராகப் போட்டி யிட்டு, தன் பணத்தைச் செலவழித்து, தோற்று, தோற்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிந்தே தன் துணைவியார் மருத்துவராக இருந்த வரை, நகர சபை தலைவராக போட்டியிட வைத்து, சொந்தப் பணத்தை செல வழித்து, கட்சிக்காகவே தன்னை ஒரு மெழுகு வர்த்தியாக, ஆக்கிக்கொண்ட என் இனிய சகோதரன் கழகத்தினுடைய அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்
டாக்டர் அசன் இப்ராகிம். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் மகளி னு டைய திருமணத்தை நான் முன்னின்று நடத்தி வைத்தேன். நான் இந்த நிகழ்ச் சிக்குப் புறப்படுவதற்கு முன்பு உயிர் நீத்தார் என்ற செய்தி கேட்டு, அதில் இருந்து மீளமுடியாத வனாக இருக்கிறேன்.

நாளை காலை நான் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணைக்காக தீர்ப்பாயத்திற்குச் செல்ல வேண்டும். நீதிபதி 25 ஆம் தேதி என்றபோது, மதுவை எதிர்த்து நான் பாதயாத்திரை நடத்துகிறேன். 29 ஆம் தேதி வழக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்றதனால், அவரும் அதை ஏற்றுக்கொண்டு, அடுத்த வாய்தா தீர்ப்பாயத்தில் நடக்கும் என்றார்.ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடக்கக்கூடிய அந்த வழக்கில் நாளை காலை பத்து மணிக்கு நான் சென்னை தீர்ப்பாயத்தில் இருக்க வேண்டும்.

என் நெஞ்சுக்கு இனியவன், ஆண்டுகள் பலவாக பழகியவன் அசன் இப்ராகிம்.
அந்தக் குடும்பம் கண்ணீரில் கதறுகிற போது, அந்த பிள்ளைகள் துடிக்கிற போ து, எத்தனை வருடங்கள் என்னை நேசித்தான். எனவே நான் இந்த நிகழ்ச் சியை முடித்துக்கொண்டு தெற்கு சீமையில் இருக்கக்கூடிய புளியங்குடிக்குச் சென்று அவரது சடலத்துக்கு மாலை வைத்துவிட்டு, விடிவதற்குள் மதுரை வந்து சேர்ந்து, அங்கிருந்து காலை விமானத்தில் புறப்பட்டு பதினோரு மணிக்குள் ளாக தீர்ப்பாய நீதிமன்றத்தில் நிற்க வேண்டிய நிலையில் இப்பொழுது உங்கள்
முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படும், வாழ்க்கை மலர்கள் விரித்த பாதைஅல்ல. அது துன்ப முட்கள் நிறைந்த பயணம். இதே ஈரோட்டில்,என்னுடைய அன்புச் சகோதரர் இன்னொரு இயக்கத்தில் இருந்தாலும், நாட்டின் விடுதலை வேள்வி யில் தணலாகத் தன்னை ஆக்கிக்கொண்டவர்களைப் பற்றி புத்தகங்களைத் தந் திருக்கின்ற ஈரோடு சிந்தனையாளர் பேரவையின் சார்பில் என்னை அழைத்து புத்தகத் திருவிழாவில் பேச வைத்தாரே ஸ்டாலின் குணசேகரன்.

அந்த நிகழ்ச்சியில் பேசுகிறபொழுது,வாழ்க்கையைப் பற்றிச் சொன்னேன். ஷெல்லியின் கவிதையைப் பற்றிச் சொன்னேன். நான் வாழ்க்கையின் முட்கள் மீது விழுந்துவிட்டேன். என் மேனியில் இருந்து இரத்தம் சிந்துகிறது. வாழ்க் கைப் பயணம் முட்கள் நிறைந்தது. அதிலே விழுந்து கிடக்கிறேன் என்ற கவி தையைச் சொன்னேனே அதுபோலத்தான், ஒவ்வொருவர் வாழ்விலும் துன்ப மும், துயரமும் கலந்துதான் இருக்கிறது. மாடமாளிகையில் இருந்தால் என்ன? மண் குடிசையில் இருந்தால் என்ன? துன்பங்கள் பல வழிகளில் தாக்குகின்றன. அப்படிப்பட்ட துன்பங்களே நிறைந்த வாழ்க்கையில் ஒவ்வொரு முகத்திற்குப் பின்னாலும் கண்ணீர் கதை இருக்கிறது. சோகம் இருக்கிறது. தாங்க முடியாத மன அழுத்தம் இருக்கிறது.

நிலம் நடுங்குகின்றபோது, எரிமலை வெடிக்கின்றபோது, ஆழிப்பேரலை நிகழ் கிறபோது, விபத்துகள் ஏற்படுகிற பொழுது உயிர்கள் பறித்துச் செல்லப் பட்டு விடுகின்றன. எனவே மனித குல வாழ்க்கையில் மரணம் தவிர்க்க முடியாது
என்றபோதும், அது கொடூரமாக தாக்குகிறபோது மனம் வதைபடுகிறது.

                                                                                                                        தொடரும் .....

No comments:

Post a Comment