ஸ்டெர்லைட் வழக்கு:
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வைகோ வாதம்
தூத்துக்குடியில் உள்ள நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து, ஸ் டெ ர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு சென்னையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசார ணை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்று (08.05.2013) விசாரணைக்கு வந்தது. இந்த மேல்முறை யீட் டு மனுவை தீர்ப்பாயம் விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில்தான் முறையீடு செய்ய வேண்டும் என்றும் சட்ட விதிகள் திட்டவட்டமாகக் கூறுவதால், இதை விசா ரிக்கக்கூடாது என்று சென்னை அமர்விலேயே வைகோ ஆட்சேபணை தெரி வித்திருந்தார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தீர்ப்பாயத்துக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்று வாதிட்டது.
தற்போது தமிழ்நாட்டில் நீதியரசர் மாசிலாமணி அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு ஆணையத்தில், தமிழ்நாடு மாசுக் கட் டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் செயலாளர் சி.ரெங்கசாமி அவர்களும், அண் ணா பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் தனசேகரன் அவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, மேல்முறையீட்டு ஆணையம் முழுமையாகச் செயல்படுவதால், இந்த வழக்கை தீர்ப்பாயம் விசாரிக்க அதி காரம் இல்லை; எனவே, ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனு தள் ளுபடி செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தின் சார்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.
ஆலை மூடப்பட்டுள்ளதால், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கில் ஆலைக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும், மார்ச் 23 ஆம் தேதி அன்று வேண்டுமென்றே ஒரு பிரச்சினை உருவாக்கப்பட்டு, அதனால் ஆலை மூடப்பட்டது என்றும், ஆலை நிர்வாகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை மறுத்து வைகோ அவர்கள் தீர்ப்பாயத்தில் கூறியதாவது:
“நான் இந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, 17 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன். சென்னை உயர்நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்திருந் தேன். உச்ச நீதிமன்றத்திலும் இந்த வழக்கில் என் வாதங்களை முன் வைத்தி ருக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலை - நிலம், நீர், காற்று மண்டலத்தை நச்சு மயம் ஆக்கி வருவதால், மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் ஆபத் தை விளைவிக்கிறது.
மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளி யேறிய நச்சுப் புகையினால், தூத்துக்குடி மாநகரத்து மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். மூச்சுத் திணறலும், தொண்டை அடைப்பும் ஏற்பட்டு, அவதிப் பட்டார்கள். அதனால்தான் ஆலை மூடப்பட்டது.
இந்த ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்படும் நிலத்து மண், நீர் ஆகியவற் றின் மாதிரிகளை உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் அமெரிக்காவில் இருக்கும் டாக்டர் மார்க் செர்னைக் அவர்களுக்கு அனுப்பி வைத்து, அவர் ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச் சூழல் நாசமாவதையும், அதனால் மனிதர்களுக்கு புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என்பதையும் தந்த ஆய்வறிக்கையை உச்ச நீதிமன்றத்திலும் நான் தாக்கல் செய்தேன்”
என்றார்.

உடனே, தீர்ப்பாய நீதிபதி சுதந்திரகுமார், அந்த விபரங்களை இங்கேயும் நீங்கள் முன் வைக்கலாம் என்றார்.
இதற்கு இடையில், சென்னை தீர்ப்பாயம் அமைத்திருந்த நிபுணர் குழுவின் அறிக்கை இன்று டெல்லி தீர்ப்பாயத்தில் தாக்கலானது. அதனுடைய பிரதி களை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
வழக்கு விசாரணை மே 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி. தேவதாஸ் அவர்களும், தலை மைக் கழகத்தின் டெல்லி வழக்கறிஞர் ஆனந்த செல்வம் அவர்களும் இன்றைய விசாரணையில் பங்கேற்றார்கள்.
No comments:
Post a Comment