Sunday, May 19, 2013

நாட்டு மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்று நாம் நிமிர்ந்து நிற்கிறோம்! பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.

மறுமலர்ச்சி திமுகவின் 20 ஆம் ஆண்டுத் தொடக்கவிழாவையொட்டி,06.05.2013 அன்று புதுக்கோட்டையில், மாபெரும் கழகப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட இந்நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர்
வைகோ ஆற்றிய உரை:

பகுதி 2 தொடர்ச்சி ....


எதிர்காலம் ஒளிமயமாகக் காட்சி அளிக்கிறது...
தமிழக மக்கள் நமக்கு வெற்றியைத் தருவார்கள்!

2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டு காலத்தில் இந் தியத் தலைமை அமைச்சரிடத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் முன் வைத்த கோரிக்கைகள் பல.

உலகத்தில் எந்த மூலையில் தமிழனுக்குத் துன்பம் என்றாலும், நாங்கள் துடிக் கிறோம்.அமெரிக்காவுக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய கரபியன் கடலில் உள்ள
கிராண்ட் கேமன் தீவில் 530 தமிழர்கள் சிக்கிக்கொண்டார்கள். ஒரு புயல் வீசி
கடல் சூழ்ந்துகொண்ட நிலையில், மற்ற நாடுகளில் இருந்து எல்லோரும் மீட் டுக்கொண்டு போய்விட்டார்கள்.
2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி எப்படியோ ஒரு தொலைபேசியில்
எனக்குத் தகவல் வந்தது. அப்போது பிரதமர் வாஷிங்டன்னில் இருக்கிறார்.
தகவல் தெரிந்து பிரதமரிடத்தில் தொடர்புகொண்டு, 530 தமிழர்கள் கிராண்ட் கேமன் தீவில் தவிக்கிறார்கள்.ஹெலிகாப்டர்களை அனுப்பி எப்படியாவது அவர்களை மீட்டுக் கொண்டு வாருங்கள் என்று சொன்ன போது, பக்கத்தில் இருந்த இந்தியத்தூதர் ரோனன் சென்னிடத்தில் தொலைபேசியைக் கொடுத்து வைகோ பேசுகிறார் என்றார். மறு நாள் அங்கே இருந்து ஹெலிகாப்டர்கள், விமானங்கள் சென்று தமிழர்களை மீட்டு வந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பால் ஜார்ஜ் நாடார் என்பவருக்கு வழக் கு ஒன்றில் சவுதி அரேபியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. தச்சுத்
தொழிலாளியான அவருக்கு வழக்காடுவதற்கு வசதியில்லை. மரண தண்ட னை நிறைவேற்றப்பட்டுவிடும் என்ற நிலையில், தினமணி பத்திரிகையில்
செய்தியைப் பார்த்துவிட்டு, நான் வெளி விவகார அமைச்சரைச் சந்தித்தேன்.

எங்கள் தமிழகத்தைச் சேர்ந்த பால்ஜார்ஜ் நாடார் என்ற ஏழை தச்சுச் தொழிலா ளியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும். சவுதிய அரேபிய மன்னருடன் உடனடி யாக நீங்கள் தொடர்பு கொண்டால் காப்பாற்றி விடலாம் என்றேன். அதைத் தொடர்ந்து நரசிம்மராவ் சவுதி அரேபிய மன்னருக்கு மடல் அனுப்பினார். அந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டு, உயிர் காப்பாற்றப்பட்டது.
அவருடைய துணைவியார் நாங்கள் உங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார். பலரிடத்தில் காப்பாற்றச்சொல்லி கேட்டோம். கண்ணீர் விட்டோம். நீங்கள் தினமணி செய்தியைப் பார்த்துவிட்டு என் கணவர் உயிரைக் காப்பாற்றி யிருக்கிறீர்கள். எங்கள் உயிர் உள்ளவரை இந்த நன்றியை மறக்க மாட்டோம் என்று எழுதிய இன்லெண்ட் கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக் கிறேன்.அவர் விடுதலை பெற்று வந்த பிறகு கலிங்கப்பட்டிக்கு வந்தார். நன்றி
சொல்ல வந்தேன் என்றார். எங்கிருந்தாலும் யாராக இருந்தாலும் தமிழர் களைக் காக்க வேண்டும் என்று துடிக்கிறோம். எந்த இடத்தில் ஆபத்து வந்தா லும் அதைத் தடுக்க வேண்டும் என்று துடிக்கிறோம்.

19 ஈழத் தமிழர்கள் துபாயிலிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப் பட்டால் கொல்லப்படுவார்கள் என்ற ஆபத்தான செய்தி வந்தது. அழுது கதறிக்கொண் டே தொலைபேசியில் பேசினார்கள். கரிணி என்கிற பெண், அண்ணா இசைப் பிரியாவைப் போல் என்னையும் ஆக்கிவிடுவார்கள் என்றார்.நான் விடுதலைப் புலிகளினுடைய தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றியவள். என்னைக்
கொழும்புக்கு அனுப்பப் போகிறார்கள். எனக்கு சொல்லவே பயமாக இருக் கிறது என்றாள். என்னை நாசப்படுத்தி கொன்றுவிடுவார்கள் அண்ணா. பேச
முடியவில்லை அண்ணா என்று அழுது கொண்டே பேசினாள். அன்றைக்கு
பெங்களூரில் ஈழத்தமிழர்களுக்கான பொதுக்கூட்டம்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் இடத்தில் அவசரமாக நான் பேச வேண்டும் என்று சொன்னபோது தொடர்பு கிடைத்தது. பேசினேன். சில காலமாக நான் உங்களை கடுமையாக நிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு எம்.பி. கூட கிடையாது. ஆனாலும் என்னை ஒரு பொருட்டாக மதித்து என்னுடன் பேச முன் வந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். இப்படி ஒரு ஆபத்து காத்திருக்கிறது. அவர்களை அனுப்பினால் கொடூரம் விளையும்.அந்தப் பெண்ணுக்கு பெரும் கேடு விளையும் என்றேன். நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கிருந்தவாறே
யஷ்வந்த் சின்கா, ஜஷ்வந்த் சிங் ஆகியோரிடம் பேசினேன். அவர்கள் இரு வரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்கள். அவர்கள் இருவரும் இப்பொ ழுது இருக்கிற வெளிவிவகார அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்கள்.

அந்தக் கடிதம் எனக்கு வந்திருக்கிறது.பிரதமர் 15 ஆம் தேதி எனக்குக் கடிதம்
எழுதியிருக்கிறார். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கே இருந்து வேறு
நாடுகளுக்கு அனுப்புவதற்கு மனித உரிமை கமிஷன் மூலமாக ஏற்பாடு நடக் கிறது என்று குறிப்பிட்டார். அதே துபாயில் இருந்து அந்தத் தங்கை மீண்டும் பேசுகிறபோது, அண்ணா அன்றைக்கு அழுதுகொண்டே பேசினேன். இப்பொ ழுது உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது தெரியவில்லை என்றார்.

எத்தனைப் பிள்ளைகள் ஈழத்தில் கொல்லப்பட்டார்கள். எத்தனை இசைப் பிரி யாக் கள் நாசமாக்கப்பட்டார்கள். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். இந்தியாவின் காங்கிரஸ் அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது. நேற்று இன்றல்ல, 1987 ஆம் ஆண்டில் இருந்தே இந்த துரோகம் தொடர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒரு பிரச்சினையை இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.

காமன்வெல்த் மாநாடு நவம்பர் 17,18 தேதிகளில் கொழும்பில் நடத்தப் படுவ தாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.அப்படி நடத்தப்பட்டால் 54 நாடுகளைக் கொண் டிருக்கக்கூடிய காமன்வெல்த் அமைப்புக்கு அடுத்த இரண்டு வருடத்திற்கு கொலைக்காரக் கொடியவன் மகிந்த ராஜபக்சேதான் தலைவராக இருப்பான். இது சகிக்கக் கூடியதா? காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கை தூக்கி எறியப்பட வேண்டும். இலங்கை அகற்றப்பட வேண்டும். இதே காமன்வெல்த் தில் தென்னாப்பிரிக்கா இருந்தபோது, நெல்சன் மண்டேலா ரோபன் ஹை லாண்ட் தீவு சிறையில் இருந்த போது, கருப்பர்கள் ஒடுக்கப்பட்டபோது, நிற வாத கொடுமை நடந்தபோது, வெள்ளை அரசாங்கத்தை எச்சரிப்பதற்கு, தென் னாப்பிரிக்கா அரசாங்கத்திற்கு எந்தப் பொருளும் இனி யாரும் தரக்கூடாது, வாங்கக்கூடாது, ஏற்றுமதி, இறக்குமதி இருக்கக்கூடாது என்று காமன்வெல்த் நாடுகளினுடைய மாநாட்டில் கர்ஜனை செய்துவிட்டு வந்தார், இந்தியப் பிரத மர் ராஜீவ்காந்தி.பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் அவரைப் பாராட்டினார்கள்.

வடமராட்சி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ள முடியாமல், எரு மை என்ற பெயர்கொண்ட கவச மோட்டார்கள் இத்தனை ஆயுதங்களை தென் னாப்பிரிக்காவிடம் இருந்து வாங்கியிருக்கிறான் இலங்கைக் காரன்.

ஜெயில் ஏர்வேஸ் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்து நின்றதே, அந்த விமானத்தில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்கு ஆயுதங்கள் குவிக்கப் பட்டிருந்தது. எரிபொருள் நிரப்ப வேண்டுமென்று விமானநிலையத் தில் விமா னத்தை நிறுத்தினார்கள். அங்கு சென்ற சுங்க அதிகாரிகள் அந்த விமானத்தை நிறுத்தி விட்டார்கள். இலங்கையின் உள்துறை அமைச்சர் அன் றைக்கு உங்களைச் சந்திக்க வந்திருந்தார். விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப் பட்டு அது கொழும்புக்குப் போகும் என்று நீங்கள் கூறினீர்கள். எங்கள் தமிழர் களைக் கொன்று குவிப்பதற்கான ஆயுதங்களோடு போனது. இந்த அக்கிரமத் தை நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள் என்று பிரதமர் இராஜீவ்காந்தியிடம் கேட் டேன்.

அதற்கு அவர் சொன்னார், அதில் ஆயுதங்கள் இல்லை, வெறும் வெடி மருந்து தான் இருந்தது என்று. அந்த வெடிமருந்து எங்கள் மக்களை அழிப்பதற்குத் தா னே? என்றேன். அதற்கு அவர் அப்படி ஒன்றும் தமிழர்களை அழிப்பதற்கு என் று அதில் எழுதவில்லை என்றார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுக்கக்கூடாது என்று முழங்குகிற
பிரதமர் அவர்களே, அதில் மட்டும் இந்தியா மீது வீசுவதற்கென்று எழுதியிருக் கிறதா? பிரதமர் இல்ல வளாகத்துக்குள்ளேயே சீறி வந்ததே தோட்டாக்கள். அந் தத் தோட்டாவில் எழுதியிருந்ததா? என்று கேட்டேன்.

தீலிபனை சாகடித்தது திட்டமிட்டுச்செய்த துரோகம். நான் நெஞ்சால் போற்று கிற, தலைவனாக ஏற்றுக்கொண்டிருக்கிற உலகத் தமிழர்களுக்கு சரித்திரத் தில் பெரும் புகழைத் தேடித் தந்த, பிரபாகரன் அவர்கள் கட்டி எழுப்பிய தமிழ் ஈழத்தை சிதைப்பதற்காகத்தானே நீங்கள் இவ்வளவு கொடுமைகளைச் செய்தீர் கள். அவரை வஞ்சகமாக ஏமாற்றி அழைத்துக் கொண்டுவந்து அசோகா ஹோட் டலில் சிறை வைத்தீர்கள்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பதைத் திணித்தீர்கள்.அவர் ஏற்கவில்லை. அவரைச் சந்திக்க எவருக்கும் அனுமதியில்லை.இலங்கையில் இருந்த இந்தி யத் தூதர் தீட்சித், இந்தோ-ஸ்ரீலங்கா ஒப்பந்தப் பிரதியைக் கொண்டுபோய் கொடுத்தார்.ஆண்டன் பாலசிங்கமும், பிரபாகரன் அவர்களும் இருந்தார்கள். யோகி உடன் இருந்தார். அப்போது அந்த ஒப்பந்த நகல் கொடுத்து, திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். இந்த ஒப்பந்தம் எங்களுக்குப் பெரிய வஞ்சகம். இதை
ஏற்க முடியாது என்றார் பிரபாகரன்.

அப்போது தீட்சித் ஹூட்கா பிடித்துக் கொண்டே இந்தப் புகை முடிவதற்குள்
உங்களை நசுக்கி விடுவோம் என்று திமிரோடு சொன்னான் என்று ஆண்டன்
பாலசிங்கத்தை நான் இலண்டனில் சந்தித்தபோது சொன்னார். இதைச் சொன் ன வுடன் தம்பியினுடைய கைகளை இறுகப் பற்றினேன்.நெருப்பாக கண்கள் ஜொலித்தன என்றார்.

திட்டமிட்டு அவர்கள் மீது இந்த ஒப்பந்தத்தைத் திணிக்கிற கால கட்டத்தில் அவரை சந்திக்கச் சென்ற போது, எனக்கு அந்த அசோகா ஹோட்டல் அறைக் குள் போவதற்கு அனுமதியில்லை. இந்திய அரசு பிரபாகரனை சிறை வைத்தி ருக் கிறது என்ற செய்தியை நான் பத்திரிகை களுக்குக் கொடுத்தேன். மறுநாள்
காலை தொலைபேசியில் அவர் பேசுவார் என்று பேபி சுப்பிரமணியம் சென் னை யில் இருந்து தகவல் கொடுத்தார்.

அவர் என்னோடு 33 நிமிடம் உரையாடியதை நான் பதிவு செய்து வைத்து இருக் கிறேன். அதன் பிறகு அவர்களை கொழும்புக்கு அழைத்துக்கொண்டு போகிற போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை பிரபாகரன் சந்தித்தார். அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இதற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று எம்.ஜி. ஆர். அழுதார்.1989 இல் நான் வன்னிக்காடுகளில் பிரபாகரனோடு இருந்தபோது இதைச் சொன்னார்.

பிரபாகரன் சுதுமலை கூட்டத்தில் பேசுவதற்கு அங்கு சென்றுவிட்டார். ஆகஸ்ட் 4 சுதுமலை கூட்டம். 02 ஆம் தேதி கடற்கரையில் இராஜீவ்காந்தி கூட் டம். எம்.ஜி.ஆர். சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுவிட்டார். விமான நிலை யத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த பொழுது உளவுத்துறை அதிகாரிகளும், உயர் அதிகாரிகளும் வந்து, நாளைய கூட்டத்தில் நீங்கள் கலந்துகொண்டு விட் டுத் தான் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று பிரதமரிடம் இருந்து தக வல் என்றனர்.வற்புறுத்தித் திரும்ப அழைத்துக்கொண்டு வந்தார்கள். அந்த மேடை யில் உட்கார வைத்தார்கள். அவர் மனமுடைந்தவராக உட்கார்ந்திருந்தார்.அப் பொழுது அங்கு பேசுகிறபோது, அன்றைய பிரதமர் இராஜீவ்காந்தி உண்மைக்கு மாறான பலவற்றைச் சொல்லிவிட்டுப் போனார். இதற்குப் பிறகுதான் நிலை மை விபரீதமானது.

நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்.இந்தியாவை எதிர்த்து நாங்கள் துப்பாக்கி
ஏந்தத் தயாராக இல்லை. ஆனால் எங்கள் மீது ஒரு வல்லரசு ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. தன்னைத்தானே தியாகம் செய்து, கட்டிய எழுப்பிய எங்கள் ஈழத் தைச் சிதைப்பதற்கு எங்கள் மீது திணிக்கிறது. சிங்கள இனவாத பூதம், இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும். எங்கள் பாதுகாப்பை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. எங்கள் மக்களைப் பாதுகாக்கிற பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறதுஎன்று சொன்னார்.

அது முடிந்து ஒரு வாரத்திற்குள் ஜெயவர்த்தனே சொன்னான் வடக்கு-கிழக்கு ஒப்பந்தத்திற்கு எதிராக நான் பிரச்சாரம் செய்வேன் என்று சொன்னான். இந்தக்
கொடுமைகள் நடக்கின்ற காலத்தில் தான் திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்.இன்றைக்கு ஈழத் தாயகம் அழிக்கக் கூடிய அளவுக்கு குடியேற்றம் இன்றைக்கும் நடைபெற் றுக் கொண்டு இருக்கிறதே அதை எதிர்த்துத்தான் அன்றைக்கு திலீபன் உண் ணாவிரதம் இருந்தார். ஐந்து கோரிக்கைகளை வைத்திருந்தார். அந்த உண்ணா
விரதத்தின் போது துளி நீரும் பருகவில்லை.

உண்ணாவிரதம் தொடங்கவிருக்கும் நாளுக்கு முதல்நாள் இந்திய இராணுவத்
தளபதி ஹர்கிரத்சிங்கை தீட்சித் தொலைபேசியில் அழைத்து பிரபாகரனை நீங்கள் சந்திக்கப் போகிறீர்களா? என்று கேட்கிறார்.அதற்கு ஆம், அழைத்திருக் கிறோம், மரியாதை நிமித்தமாக அவர் நாளைக்கு பார்க்க வருகிறார் என்கிறார். வரும் பொழுது அவரை சுட்டுக்கொன்று விடுங்கள் என்கிறார் தீட்சித்.

அதிர்ச்சியடைந்த ஹர்கிரத் சிங், இந்தத் துரோகத்தை நாங்கள் செய்ய மாட் டோம், இந்திய இராணுவம் அதைச் செய்யாது.அழைப்புக்கொடுத்துவிட்டு,முது கில் சுடுகிற துரோகத்தை நாங்கள் செய்ய மாட்டோம் என்கிறார். உனக்கு மேல் பொறுப்பில் உள்ள தளபதியிடம் கேட்டுவிட்டு அடுத்துப்பேசு என்கிறார் தீட்சித். 

திபேந்தர் சிங்கிடம் பேசுகிறார், அதற்கு அவர் கன்னத்தில் அடித்தாற் போல் சரி யாகச் சொன்னாய், அவனுக்கு திரும்பவும் அதையே கூறு என்றார். மீண்டும் தீட்சித்தை அழைத்து ஒரு போதும் இந்தத் துரோகத்தைச் செய்ய மாட்டோம் என்றார். அப்போது இது என்னுடைய உத்தரவு இல்லை, டெல்லியினுடைய உத்தரவு என்று தீட்சித் கூறினார். அப்படியானால், யாருடைய உத்தரவு? பிரத மர் உத்தரவு. இதை எழுதி வைத்திருக்கக்கூடிய ஹர்கிரத் சிங் இன்னும் உயி ரோடுதான் இருக்கிறார், டெல்லியின் புறநகர் பகுதியில். இந்தியாவின் தலை யீடு என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கிற புத்தகம் இன்னும் கடைகளில்
கிடைக்கிறது.

அப்படியானால் துரோகம் இழைத்தவர்கள் யார்? திலீபனை சாகடித்தவர்கள் யார்? ஒரு நிமிடம் திலீபனை போய்ப் பார்த்திருப்பாரா தீட்சித். திலீபன் 26 ஆம் தேதி இறந்துபோனான்.புலிப்படைத் தளபதிகள் 17 பேர் வந்த கடற்புறா என்ற படகை, சிங்களக் கடற்படை வழிமறித்து கைது செய்த போது அவர்களிடம் ஆயுதம் இல்லை.அவர்களைக் கொண்டுபோய் பலாலியில் பூட்டினார்கள். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினேழு தளபதிகள் உயிருக்கு ஆபத்து வரக் கூடாது என்று அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியத்தளபதிகள் கட்டுக்காவல் போட் டார்கள்.5 ஆம் தேதி கட்டுக்காவலை விலக்கிக்கொள்ளுங்கள் என்று டெல்லி உத்தரவிட்டது. இந்திய இராணுவத் தளபதிகள் விருப்பம் இல்லாமல் கட்டுக் காவலை விலக்கிக்கொண்டார்கள். 

கட்டுக்காவல் விலக்கிக்கொள்ளப்பட்டவுடன்,சிங்களச் சிப்பாய்கள், பயனட்
பொருத்தப்பட்ட துப்பாக்கிகளோடு இந்தப் பதினேழு பேரை நோக்கி வேகமாக வந்தார்கள். பன்னிரண்டு பேரிடம் தான் நச்சுக் குப்பிகள் இருந்தது. மற்றவர் களிடம் இல்லை. எல்லோரும் இந்த நச்சுக் குப்பிகளைக் கடித்தார்கள்.சிங்கள சிப்பாய்கள் புலிகளின் வாயிலுள்ள குப்பிகளைப் பிடுங்க முயற்சித்தார்கள். அதற்குள் அந்தப்பன்னிரண்டு பேருக்கும் உயிர் போய்விட்டது.இரண்டு நிமிடத் தில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேரும் இறந்துபோனார்கள்.மீதமுள்ள ஐந்து பேர் பின்னர் காப்பாற்றப் பட்டார்கள். அவர்களில் ஒருவரை வன்னிக் காட்டில் சந்தித்தேன். 2012 இல் இலண்டனில் நடந்த மாவீரர் நாள் நிகழ்ச்சிக்குச் சென்றபோது பின்னர் சந்தித்தேன்.

இந்தக் கொடூரமான துரோகத்துக்கு இந்திய அரசுதான் காரணம் என்று நாடாளு மன்றத்தில் நான் குற்றம் சாட்டினேன். எங்கள் தமிழ் மக்களை அழிப்பதற்கு இந்திய இராணுவத்தை ஏவியிருக்கிறீர்கள். எங்கள் பெண்கள் அங்கே நாசமாக் கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பிணங்கள் எல்லாம் சாலைகளில் கிடக்கிறது. அனைத்து இடங்களிலும் பிரேத வாடை அடிக்கிறது.இந்தக் கொடூ ரமான தாக்குதலுக்கு இந்திய இராணுவம் காரணம் என்று பேசுகிறபோது, 12 புலிப்படை தளபதிகள் சாவுக்கு நீங்கள் காரணம் என்றபோது, பதில் சொல்ல முடிய வில்லை நட்வர்சிங்கால். இந்திய இராணுவத்தைப் பற்றி விமர்சிக்கக்
கூடாது, விமர்சித்தால் விளைவுகள் விபரீதமாகும் என்று நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் கூறினார்.விளைவுகள் என்ன விபரீதமாகிவிடும்? என்ன விளைவுகள் சொல்லுங்கள் என்று நான் கேட்டேன்.

ஈழத்தில் இருக்கக்கூடிய எங்கள் தொப்புள்கொடி உறவுகளை இந்திய இராணு வமே கொலை செய்யுமானால்,அதை நான் விமர்சிப்பேன். அப்படி விமர்சிப்பது தேசத் துரோக குற்றச்சாட்டு என்றால், அந்தக் குற்றச்சாட்டை என் மீது சுமத் தலாமே. அதிகபட்ச விளைவுகள் என்ன இருக்க முடியும்? அதிகபட்ச விளைவு என்பது தூக்குத் தண்டனை ஒன்றுதான். அதற்கு நான் சித்தமாக இருக்கிறேன் என்று நான் இந்திய நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன்.

தூதராக வந்த ஜானியை இந்திய இராணுவம் சுட்டுக்கொன்றது. நடுக்கடலில் கிட்டுவை சாகடித்தது. இத்தனை துரோகங்களும் நிகழ்த்தப்பட்ட பின்னர், அரண்யத்துக்குள்ளே படைகளை அழைத்துச் சென்று முப்படைகளை உருவாக் கினாரே பிரபாகரன்.

1998 இல் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் தலைமைதாங்கிய அனைத்துக் கட் சிக் கூட்டத்தில், சோனியாகாந்தியும், மன்மோகன் சிங்கும் ஈழத்தமிழர்கள் படு கொலைக்கு முழு அளவில் உதவி செய்துவிட்டு, வெளி விவகார அமைச்சராக இருந்துவிட்டு, தற்போது ஜனாதிபதி பதவிக்குள் ஒளிந்துகொண்டு இருக்கிற பிரணாப் முகர்ஜி இவர்கள் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்திருந்தார்கள்.அந்தக்
கூட்டத்தில் பதினெட்டு நிமிடம் எனக்குப் பேசுவதற்கு வாய்ப்புக் கொடுத்தார் அடல் பிகாரி வாஜ்பாய்
                                                                                                           தொடரும் ...................

No comments:

Post a Comment