Tuesday, May 7, 2013

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகளுக்கு ஆதரவாக மதிமுகவினர் முற்றுகை

முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, வறட்சி நிவாரணத் தொகையை வழங்கக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை திங்கள் கிழமை முற்றுகையிட்டனர்.


கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட காளாம்பட்டி, குமரெட்டையபுரம், சரவணாபுரம் ஆகிய பகுதிகளில் மானாவாரியில் பூமியில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம் ஆகியவற்றை அப்பகுதியினர் பயிரிட்டிருந்தனர். போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டு, விளைச்சலின்றி போய்விட்டது.


நிவாரணம் கேட்டு, அரசுக்கு கோரிக்கையை அளித்தோம். அரசு பரிசீலனை செய்து ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. கிராமங் களில் முறையாக கணக்கெடுப்பு செய்யாமல் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகத்தில் இருந்தபடியே கணக்கெடுப்பு செய்துள்ளனர்.

இதனால் பயிர் செய்யப்பட்ட நிலங்களுக்கு முழுமையாக நிவாரணம் கணக்கி டப்படவில்லை.

உடனடியாக வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் முழுமையாக கணக்கெடுப்பு செய்து, அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறி, அப்பகுதி கிராம மக்கள் கயத்தாறு முன்னாள் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதிமுக மாநில விவசாய அணிச் செயலர் அ.வரதராஜன் முன்னிலை வகித்தார்.

காளாம்பட்டி ஊராட்சித் தலைவர் ராகவன், கயத்தாறு மதிமுக ஒன்றியச் செயலர் கணபதிபாண்டியன், மதிமுக கட்சியின் மாநில தீர்மானக் குழு உறுப்பினர் கிருஷ்ணசாமிபாண்டியன், கழுகுமலை மதிமுக நகரச் செயலர் வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர், போராட்டக் குழுவினர் கோட்டாட்சியர் கதிரேசனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

No comments:

Post a Comment