தமிழர்கள் மீது தொடர்ந்து ராஜபக்சே கொடூரங்களை நடத்தி வருகிறார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்லத்திருமண விழாவில் கலந்துகொண்டு வைகோ பேசியதாவது:
திருச்சி தீரர்களின் கோட்டையாக விளங்கி வருகிறது. அண்ணாதுரை முதல் பல தலைவர்களும் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகளை திருச்சியில் தான் அறிவித்துள்ளனர். அந்த வகையில் ம.தி.மு.க. வும் முக்கிய முடிவுகளை திருச்சியில் இருந்து அறிவித்துள்ளது.
மது அருந்துவோரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலை நீடித்தால் வளமான தமிழகம் என்பது கேள்விக்குறியாகி விடும். இதுபோன்ற தொலை நோக்கு சிந்தனையில்தான் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்கள், நடை பயணம் போன்றவற்றை நடத்தி வருகிறது.
இதை சிலர் கேலி செய்து வருகின்றனர். இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தி தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 1940 ஆம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு நாடுகள் பொது வாக்கெடுப்பு நடத்தி சுதந்திர அந்தஸ்து பெற்றுள்ளன.
இலங்கையில் இன்னும் கொடூரம் தொடர்கிறது. தமிழர்கள் மீது தொடர்ந்து ராஜபக்சே கொடூரங்களை நடத்தி வருகிறார். அவரது இந்திய வருகைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பள்ளிகளில் ஆங்கில மொழி கல்வி பயிற்று விக்கப்படுகிறது.
இதே போல் அரசு கல்லூரிகளிலும் தேர்வுத் திட்டம் ஆங்கிலத்தில் வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இது அமல்படுத்தப்பட்டால் மொழி சார்ந்த அறிவு இல்லாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment