சிங்களவனுக்கு அடிமையாக தமிழன் வாழமுடியாது!
ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில் சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டித்தும், தமிழர்களின் துயர் துடைக்கக் கோரியும் இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கத்தின் சார்பில், சென்னையில் 24.7.2009 அன்று பழ.நெடுமாறன்
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று கழகப் பொதுச்
செயலாளர் வைகோ ஆற்றிய உரை...
மனிதகுல வரலாற்றில் பல அவலங்கள் பேரழிவுகள் உலகில் நடைபெற்று இருக்கின்றன.ஆனால், தமிழர்களின் வரலாற்றில் இப்படிப்பட்ட பேரழிவு,தமிழ் இனம் கொடியோரால் படுகொலை செய்யப்படுகின்ற அவலம்,இதுவரை நடந் தது இல்லை.இயற்கையின் சீற்றத்தால், கடல் கோளால் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னால் தமிழனின் நிலம் கடலில் அமிழ்ந்து போனதால், பெருந்துயர் நேர்ந்து இருக்கிறது.
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்று, பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்கடலுக்கு உள்ளே அமிழ்ந்து
கிடக்கின்ற காவிரிப்பூம்பட்டினம், பாபிலோனைவிடப் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல் கிறார்கள்.
ஆனால், தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஆண்டு களின் வரலாற்றில், இப்படிப் பல்லாயிரக் கணக்கான மக்களை, கொலைக்களத்தில் குற்றுயிரும்
குலையுயிருமாகப் படுகொலை செய்த அவலம் இதுவரை நடந்ததே கிடை யாது. ஆனால், நாம் வாழும் காலத்தில் தான் அது நடந்துவிட்டது.
உலகம் சுருங்கி ஒரு கிராமத்தைப்போல் ஆகிவிட்டது என்று சொல்லப்படுகிற இந்தக் கணினிகளின் காலத்தில், கண்மூடிக்கண்திறப்பதற்குள் தகவல்கள் பரிமாறப்படுகின்ற இந்த அறிவியல் யுகத்தில், நினைத்தமாத்திரத்தில் தலை யிட்டுத் தடுக்க முடிகின்ற அளவுக்குப் பன்னாட்டு அமைப்புகள் உருவாகி
இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அணு ஆயுத வல்லரசு என்கின்ற பெருமை யை நாம் குடிமக்களாக இருக்கிற இந்தத் துணைக்கண்டம் பெற்று இருக்கின்ற இந்தச் சூழலில், நம் கண்முன்னால், நம் காதுகள் கேட்கின்ற வகையில், தொட் டுவிடும் தூரத்தில் கடலுக்கு அப்பால் இருக்கின்ற நமது உறவுகள், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டு, இரத்தக் களறியில் துடித்துத் துவண்டு குழந்தை கள் பெண்கள் உள்பட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை
செய்யப்பட்டனர். அந்தச் சடலங்கள் சரியாக புதைக்கப்பட வில்லை, மண் ணில் புதைபட்டும் புதைபடாமலும் அந்தப் பிணங்கள் காணப்படுகின்றன என் று வான்வெளியில் பறந்துவந்த விமானத்தில் இருந்து,மிகநவீன சக்தி வாய்ந்த
கேமிராக்கள்மூலம் புகைப்படங்களை எடுத்து, இலண்டனில் இருந்து வெளி வருகிற செய்தித்தாள் வெளியிட்டு இருக்கின்றது.
இவ்வளவு கொடுமையும் திடீரென்று ஒரேநாளில் நடந்துவிடவில்லை.ஐம்பது ஆண்டுகளாக சிங்களவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்ய வேண்டிய நிலை மைக்குத் தமிழர்கள் ஆளாக்கப்பட்டு, ரோமானியஅடிமைகளைப்போல் இவர் கள் நடத்தப்படுவார்கள் என்ற நிலையில்,உரிமையற்று மானம் இழந்து நாம் வாழத் தயாராக இல்லை, நாங்கள் சம உரிமையுள்ள மக்களாக வாழவே துடிக் கிறோம், போராடுகிறோம் என்றுஅறவழிப் போராட்டம்,நாடாளுமன்றம் முன்பு போராட்டம் என்று அனைத்தும், துப்பாக்கி முனையில் எதிர்கொள்ளப்பட்டு நட்டநடு வீதிகளில் தமிழர்களின் பிணங்கள் விழுந்ததற்குப்பிறகு, உயிரை விட
மானத்தையும் கற்பையும் உயர்வாகப் போற்றுகின்ற நமது சகோதரிகள் அழிக் கப்படுவதைக் கண்டு கொதித்துப்போன தமிழர்கள், இனி நாங்கள் தனித்து ஒரு தேசமாக வாழ்வது ஒன்றுதான் தீர்வு என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஆனால், இந்திய அரசு திட்டமிட்டு கடந்த ஐந்தாண்டு காலமாகச் செய்த துரோ கம் அதில் கடந்த பத்துமாத காலமாக இலங்கையில் சிங்கள இராணுவம் நடத் திய கொலைவெறித் தாக்குதல் அனைத்துக்கும் ஆயுதம்கொடுத்து - ரேடார் கொடுத்து - பணமும் கொடுத்து அந்த பணத்தின்மூலம் பலநாடுகளில் இருந்து ஆயுதங்கள் வாங்குவதற்கு ஏற்பாடும் செய்து கொடுத்து - அந்த யுத்தத்தை
நடத்துவதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி ஆலோசனைகளை வழங்கி மூர்க்கத்தனமாகத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.
விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லி தமிழ்மக்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட படுகொலை செய்யப்பட்ட அந்தக் காலத்தில் தமிழகம்
துடித்தது. அதன் விளைவாகத்தான் தமிழகச் சட்டமன்றத்தில்கூட ஒருமன தா கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒட்டு மொத்தத் தமிழகமும் என் பின் னால் அணி வகுக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கேட்டாரே, நீங்கள் எல்லாம் ஆதரவு தரமாட்டீர்களா என்றாரே, யார் ஆதரவு தரவில்லை?
எதிரும்புதிருமாக இருக்கின்ற அண்ணா தி.மு.க. உங்கள் தீர்மானத்தை ஏற்க வில்லையா? துருவங்களைப்போல் இயங்குகின்ற கட்சிகள் ஒன்றுசேர்ந்து உங்கள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லையா? தமிழகச் சட்டமன்றத்தில் 234 எம்.எல்.ஏக்களின் ஏகோபித்த தீர்மானம் என்பது ஆறரைக்கோடித் தமிழர்களின்
தீர்மானம்தானே?
அந்தத் தீர்மானத்தைக் காலில் போட்டு மிதித்தானே ராஜபக்சே? பிரதமர் மன் மோகன் சிங் வீட்டு வாசலில் நின்றுகொண்டு சொன்னானே, கொதிக்க வேண் டா மா தமிழக முதல்வர்? இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிக் கொடுத்த சட்ட மன்றத்தில் முதல்வராக இருக்கக் கூடியவர்? எங்கள் தமிழகத்தையே இழிவு படுத்து கிறீர்கள். இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் குரல். யுத்தத்தை நிறுத்து வதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று ஏன் நீங்கள் சொல்லவில்லை? கடைசி வரையில் கபட நாடகம் ஆடினீர்கள், வேறென்ன?
அதன் விளைவாகவே இந்திய அரசு இன்றுவரை, இந்த நிமிடம்வரையில் போரை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. இலங்கை அரசு போரை நடத்தியது, அதன்விளைவாக தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற கருத்தை யும் சொல்லவில்லை. ராஜபக்சே என்ன வாசிக்கிறானோ அதை பிரணாப்முகர் ஜி இங்கே வந்து வாசித்தார். அவன் என்ன சொன்னானோ, அதை இவர் இங்கு சொன்னார். இந்திய அரசின் உதவிகளால், நாங்கள் இந்தப் போரில் புலிகளைத் தோற்கடித்து விட்டோம் என்று இலங்கை அமைச்சர்கள் சொன்னார்கள். பசில்
ராஜபக்சே சொன்னான். கொத்தபயா இராஜபக்சே சொன்னான். இந்தியப் பிரத மர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில் எனக்கு நாங்கள் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற இராணுவ உதவி செய்திருக்கிறோம்என்கிறார்.
இன்றைக்கு மூன்றரை இலட்சம் மக்கள் மின்வேலி முகாம்களுக்குள் வதை படு கிறார்கள். மருந்து இல்லை, உணவு இல்லை. இயற்கை உபாதைகளைக்
கழிப்பதற்குக் கூட ஒரு சரியான ஏற்பாடு இல்லை.உலகத்தில் எந்தச் சிறைச் சாலையிலும் எந்தக் குற்றச்சாட்டில் ஒருவன் கைது செய்யப்பட்டு அடைக்கப்
பட்டாலும் அவனுக்கு உரிமைகள் உண்டு என்று ஐ.நா.மன்றத்தின் மனித உரி மை பிரகடனமே தெரிவிக்கின்றது.
ஆனால், இலங்கையில் சித்ரவதை முகாம்களில் அவதிப்படுகிறார்களே, அவர் கள் மனிதர்களைப் போல நடத்தப்படவில்லையே? மிருகங்களைவிடக் கொடு மை யாக அல்லவா நடத்துகிறார்கள்? அங்கே இருந்து வருகிற தகவல்கள் அதைத்தானே சொல்கின்றன? ஆக,இவ்வளவு கொடுமையும் நம் கண்முன் னால் நடக்கிறபோது, உலக சமுதாயம் இன்னும் கண்மூடிக்கொண்டு இருக்கி றது. லேசாக ஒரு விழிப்புணர்வு வந்தது.உலக நாடுகள் பதறி யுத்தத்தை நிறுத் தக் கூறின.
விடுதலைப் புலிகளைத் தடைசெய்த நாடுகள் -அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட் ட நாடுகளும் யுத்தம் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.ஆனால், இந்திய அரசு மட்டும் கோரிக்கை வைக்கவில்லை. இந்திய அரசு குறுக்கே நிற் கின்றது.இனப்படுகொலை செய்த ராஜபக்சே மீது விசாரணை நடத்த வேண் டும் என்று கோரிக்கையைத் தடுப்பதற்கும், இந்திய அரசுதான் நடவடிக்கை எடுக்கின்றது. ஐ.நா.மன்றத்தில் இந்திய அரசு இலங்கை அரசுடன் கைகோர்த் துக் கொண்டு நிற்கிறது.
இதனுடைய விளைவுதான் இவ்வளவு துயரமும்.அருமைச் சகோதரர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வீரபாண்டியன் கூறியதைப்போல, பிரச்சனை தீர்ந்து
விடவில்லை. தமிழர்களின் இரத்தம் சிந்திய பூமியில் அவர்களை அழித்துவிட லாம் என்று நினைக்காதே. அங்கே முளைக்கிற புல் பூண்டுகூட சிங்களவன்
ஆதிக்கத்தை ஏற்காது, சிங்களவனுக்கு அடிமையாக தமிழன் இருக்கமுடியாது.
சிங்களவர்கள் ஆதிக்கத்துக்குள் அங்கு தமிழர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்றவகையில் இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க நாங்கள்
இராணுவ உதவி செய்தோம், இன்னும் செய்வோம் என்று இந்திய அரசு சொல் லு மானால், தமிழர்கள் தனித்தேசம் அமைத்து வாழ்வதற்கு, அவர்கள் தனித் தேசம் அமைப்பதற்கு நாங்கள் எல்லா உதவிகளும் செய்வோம்.எங்கள் சக்திக் கு ஏற்ற வகையில் செய்வோம்.அந்தவகையில்தான் தமிழர்களின் முகவரி யைத் தரணிக்கு தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரனின் படத்தை இங்கே இளைஞர்கள் ஏந்தி வந்து இருக்கிறார்கள். இந் தப் படம் கையில் மட்டும் அல்ல, தன்மான உணர்வுள்ள கோடிக்கணக்கான தமிழர்களின் இதயச்சுவரில் இயற்கைத்தாய் வரைந்து இருக்கிற சித்திரம்தான்
பிரபாகரனின் படம். அது அழியாத உயிர் ஓவியம். மறந்து விடாதீர்கள்.
ஐக்கிய நாடுகள் மன்றம் தலையிட வேண்டும் என்று ஏன் சொல்கிறோம்? அப் படித்தான் கிழக்குத் தைமூரில் ஐ.நா.மன்றம் தலையிட்டது. கொசோவாவில் தலையிட்டது.அதைவிடக் கொடுமையாகத் தமிழ்த் தேசிய இனம் இலங்கைத் தீவில் வதைபடுகிற நேரத்தில், மனித உரிமைகள் குழிதோண்டிப் புதைக்கப் படுகிற கொடுமையைத் தடுக்க வேண்டிய கடமை ஐ.நா.மன்றத்துக்கு உண்டு. அந்தக் குரலை இங்கிருந்து மட்டுமல்ல, உலகத்தில் இருக்கிற எல்லா நாடு களிலும் சிதறிக் கிடக்கின்ற தமிழர்கள் எழுப்புகிறார்கள்.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர், இலங்கையில் சென்று பார்வையிட்டு வந்து அங்கு சித்ரவதை நடக்கிறது என்றார். இலங்கை உச்சநீதிமன்றத்தின்
முன்னாள் தலைமை நீதிபதி, ‘சிங்களவர்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட முகாம் களில் தமிழர்கள் படுகின்ற அவதி விவரிக்க முடியாதது’ என்றார். ஆனால்,
இந்திய அரசு மாத்திரம் நடந்த அனைத்தையும் திரைபோட்டு மறைத்துவிட்டு, நாங்கள் பணம் கொடுக்கிறோம் என்கிறீர்களே எதற்குப் பணம்?யாருக்குப் பணம்?
சிங்கள அரசுக்கு நீங்கள் கொடுக்கின்ற பணம் அனைத்தையும், அவர்கள் நிர் வாகத்துக்கு செலவழிக்க வேண்டிய பணத்துக்கு உங்கள் பணத்தின் மூலமாக
ஈடுகட்டிக் கொண்டு, மேலும் மேலும் உலகநாடுகளில் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதற்குத்தான் நீங்கள் உதவினீர்கள். சீனாவில் இருந்தும் பாகிஸ்தானில்
இருந்தும் -இஸ்ரேலில் இருந்தும் - ரஷ்யாவில் இருந்தும் - ஈரானில் இருந்தும் இலங்கை அரசு ஆயுதங்களை வாங்கிக் குவித்து இருபது நாடுகளின் ஆயுத உதவியோடு இந்தப் போரை நடத்தினார்கள். உலகம் தடை செய்து இருக்கிற பயங்கர ஆயுதங்களைக் கொண்டு போரை நடத்தினார்கள்.

அங்குதான் சித்ரவதை முகாம் என்றால், இங்கே நமது அண்ணன் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல் செங்கல்பட்டில் சித்ரவதை முகாமா? எத்த னை ஈழத் தமிழ்க் குடும்பங்கள் கணவனைப் பிரிந்த மனைவிமார்கள், பெற்றோ ரைப் பிரிந்து பிள்ளைகள், அவர்களை வதைபடு கின்ற முகாம்களில் வைத்து
அடிப்படை உரிமைகள்கூடஇல்லாமல் கொடுமைப் படுத்துவது அக்கிரமத் துக் கெல்லாம் உச்சகட்டம்.அவர்கள் உண்ணாநோன்புப் போராட்டம் நடத்துகிறார் கள். மனிதாபிமான உணர்வு கொஞ்சம்கூட இன்றி, ஈவு இரக்கம் இன்றி தமிழக அரசு செயல்படுகிறது.

இந்த முகாம்களில் இருக்கிறவர்கள் மீது என்ன வழக்கு? உடனடியாக விசாரிக் கப்படுவதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், விசார ணை என்ற பெயரில் அவர்களைக் கொண்டு போய் மாதக்கணக்கில், வருடக் கணக்கில் முகாமில் அடைத்துவைத்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல், அவர்கள் குடும்பங்கள் எல்லாம் இங்கும் அங்கும் நிர்மூலமா கின் ற கொடுமையைக் காண்கிறோம். இந்த அக்கிரமத்தைக் கண்டிக்கின்றோம்.
இது தாயின் மடி என்று வந்திருக்கும் ஈழத்தமிழர்களை எந்தக்காரணத்தை முன் னிட்டும் திருப்பி அனுப்பக்கூடாது. அண்ணன் நெடுமாறன் அவர்களும், ஐயா
ராமதாஸ் அவர்களும் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், ஆண்டுகள் சிலவற்றுக்கு முன்னாலேயே உயர்நீதிமன்றம் தீர்ப்பைத் தெளிவாகக் கொடுத் து இருக்கின்றது. அதைமீறி நீங்கள் செயல்பட முடியாது.இருப்பினும் அப்படிப் பட்ட முயற்சியில் சிலர் ஈடுபட்டு,அரசுக்கு ஆலோசனைகளை கூறிக்கொண்டு இருப்பதாக நாங்கள் அறிகிறோம்.

அதைப்போலவே, இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு இந்திய இராணுவ வீரர்களை அனுப்பப்போவதாக வெளி விவகாரச் செயலாளர் சிவ சங்கர மேனன் அறிவித்து இருக்கிறார். ஏற்கனவே இராணுவத் தளபதிகளை அனுப்பி ஆயுதங்கள் கொடுத்து -நிபுணர்களை அனுப்பி - பலாலி விமான தளத் தைப்புதுப்பித்துக் கொடுத்துத் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு முழுக் க முழுக்கக் காரணம் மன்மோகன் சிங் அரசு.
அவர்களுக்குப்பிறகு பயிற்சியும் கொடுத்தீர்கள் -இங்கிருந்து நிபுணர்களையும் அனுப்பினீர்கள் -இப்பொழுது கண்ணிவெடியை அகற்றப்போகிறோம் என்ற பெயரில் சிங்கள இராணுவத்தோடு கைகோர்த்துக்கொண்டு காடுகளில் போய், ஈழத் தமிழர்களை விடுதலைப் புலிகளை வேட்டையாட வேண்டும் என்று ஈழத் தமிழ் விடுதலை இயக்கத்தின் ஆணிவேர் எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்று துடிக்கிறீர்கள்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இருந்து எவனும் அங்கே செல் லக் கூடாது. யாரையும் அனுப்பக் கூடாது. அப்படிப் போகின்றவர்களுக்கு எது நேர்ந்தாலும் இந்திய அரசுதான் பொறுப்பு. சிங்களவன் தமிழர்களை நிரந்தர மாக அடிமையாக்க நினைக்கிறான். அதற்கு உதவி செய்வதற்கு, காடுகளில் போராடுகிற பயிற்சி பெற்ற இந்திய இராணுவப் பிரிவினரை அனுப்பப் போகி றீர்கள். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்திய அரசு அங்கே நுழையக் கூடா து, நுழைய உரிமை கிடையாது. ஏற்கனவே செய்த துரோகத்தை மேலும் தொட ராதே. தமிழர்கள் நெஞ்சில் விபரீத விதைகளை விதைக்காதே.
நாங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், இலங் கையில் ஒருமைப் பாட்டைக் காப்பாற்றப் போகிறோம் என்று இந்திய ஒரு மைப்பாட்டுக்கு வேட்டு வைக்கின்ற வேலையில் நீ ஈடுபட்டுவிட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.வருங்காலத் தமிழ் இளைஞர்கள் இப்படி எல்லாம்
அமைதியாக இருக்க மாட்டார்கள். வினை விதைத்து இருக்கிறீர்கள். இவ்வ ளவு தமிழர்கள் சாவுக்குக் காரணம் இந்திய அரசு. இந்தக் கொடுமைக்கு மன் னிப்பே கிடையாது.
அமைதியாக இருக்க மாட்டார்கள். வினை விதைத்து இருக்கிறீர்கள். இவ்வ ளவு தமிழர்கள் சாவுக்குக் காரணம் இந்திய அரசு. இந்தக் கொடுமைக்கு மன் னிப்பே கிடையாது.
உலக நாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்புகிற வேலையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஈடுபடும். ஹிட்லர் யூதர்களுக்கு இழைத்த கொடு மைகளை விட எங்கள் ஈழத்தமிழ் மக்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக் கிறார்கள். யூத கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்த கொடுமை யை ஹிட்லர் செய்யவில்லை, நாஜிகள் செய்யவில்லை. ஆனால், சிங்களக் கொடியோன் செய்தான், ராஜபக்சேவின் கொடியகூட்டம் செய்தது.
உலகத்தில் நாதி அற்றுப் போய்விடவில்லை தமிழ் இனம் என்ற உணர்வை தமிழர்களே ஏற்படுத்துங்கள். இது ஓட்டுக்கேட்கின்ற கூட்டம் அல்ல. கட்சிக்கு ஆதரவு திரட்டுகின்ற கூட்டமும் அல்ல. அந்த நோக்கமும் எங்களுக்குக் கிடை யாது.
இந்த இனம் அழிக்கப்பட்ட கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டுமா? என்று எண்ணிப் பாருங்கள். இளைஞர்களே, கணிப்பொறியில்
ஈடுபட்டு இருக்கிற இளைஞர்களே, இன்றைக்கு ஒரு புதிய விழிப்புணர்வு வேக மாக ஏற்பட்டு வருகிறது. இளந்தமிழர் உள்ளத்தில் ஏற்பட்டு வருகிறது, அது
கொந்தளிப்பாக இருக்கிறது. இல்லையேல் முத்துக்குமார் தீக்குளித்து இருக்க மாட்டான் - பதினான்கு பேர் தீக்குளித்து மடிந்து இருக்க மாட்டார்கள். பதி னான்கு பேர் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தந்து இருக்கிறார்கள்.

இங்கே, நெருப்பாகத் தகிக்கின்ற வெயிலில் நீங்கள் நிற்கிறீர்கள். அவர்கள் உடலையும் உயிரையுமே நெருப்புக்குத் தந்தார்கள். அந்தத் தியாகம் வீண் போய் விடாது. அந்த உணர்ச்சி வீண் போய்விடக் விடாது.அவர்களது உடல் களைச் சிதையில் வைக்கும்போது என்ன முடிவு எடுத்தோமோ, அந்த முடி வில், நம் தொப்பூள்கொடி உறவுகளை, நம் இரத்த பந்த உறவுகளை, ஈழத்தமிழ் மக்களை வதைபடும் மக்களை துன்பதுயரத்தில் ஆளாகின்ற மக்களை, நானி லத்தில் நமது அவலத்தைக் கேட்பதற்கு யாருமே இல்லையா என்று அழுது அரற்றிப் புலம்பிக் கொண்டு இருக்கும் மக்களைக் காப்பதற்கு, தமிழ்ச் சமுதா யமே, தன்மான உணர்வுள்ள தமிழர்களே நீங்கள் துணையாக இருக்க வேண்டும்.
ஒரு யானைக்குட்டி தவறி மலையின் சரிவில் உருண்டு விட்டதாம். தாய் யானை அதன் குட்டியைக் காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிறது. அது ஒரு பெரும் பள்ளத்தில் விழுகிறது உயிர் பிரிகிறது. குட்டி யானையைக் காப்பாற் றச் சென்ற தாய் யானை செத்து விட்டது. யானைக்கூட்டம் திரண்டு விட்டது. கூக்குரல் எழுப்புகிறது. பிளிறுகிறது. மக்கள் கூடுகிறார்கள். அந்தக் குட்டி யானையை வேறுயாரும் நெருங்கிவிடக் கூடாது என்று மற்ற யானைகள் காவல் காக்கின்றன.
தமிழா, அந்த யானைகளுக்கு இருக்கின்ற உணர்ச்சிகூடவா நமக்கு இல்லாமல் போய்விடும்? நிச்சயமாக இருக்கிறது. இல்லாமற்போய்விடாது. ஆகவே, இந் தக் கட்டத்திலாவது, நம் வாழ்நாளில் ஒரு பேரழிவுக்கு ஆளாகி இருக்கக்கூடிய நம் தமிழ் ஈழ உறவுகளைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் ஒருசேர எழுவோம்.
ஐக்கிய நாடுகள் மன்றம் நேரடியாகத் தலையிட்டு, தமிழர் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நேரடிப் பார்வையில் அதற்கான ஏற்பாடுகளைச்செய்து,
தேவைப்பட்டால் அதற்கான படை வரிசைகளை அனுப்பி, தமிழர்கள் பகுதி யைப் பாதுகாத்து முகாம்களில் இருக்கிற மக்கள் அங்கிருந்து விடுவிக்கப் பட் டு அவர்களது தாயக மண்ணில் அவர்களது பாட்டனுக்குப் பாட்டன் முப்பாட் டன் காலத்து மண்ணில், அவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட மண்ணில் அவர்கள் மீண்டும் குடி அமர்த்தப்பட வேண்டும். ஆனால், தமிழர்கள் பகுதிகளில் எல் லாம் சிங்களவர்கள் குடியேற்றம் தொடங்கப்பட்டு விட்டது. கிழக்கில் குடி யேற் றம் போல வடக்கில் தொடங்கி விட்டான். சிங்கள இராணுவ முகாம் களை அமைக்கின்றான். சிங்களக் குடியேற்றம் நம் கண்முன்னே நடக்கிறது. இதைத் தடுக்கத்தான் திலீபன் உயிர் நீத்தான். சொட்டுத் தண்ணீரும் பருகாமல் மடிந்ததான் திலீபன்.
பாலஸ்தீனத்தில் யூதக்குடியேற்றம் கூடாது என்கிறதே உலகம். அதைப்போல தமிழ் மண்ணில் சிங்களக் குடியேற்றம் கூடாது. இது உலக நாடுகள் தலையிட
வேண்டிய பிரச்சனை. ஐ.நா.மன்றம் தலையிட வேண்டிய பிரச்சனை. இந்திய அரசு இந்தக் கட்டத்திலாவது செய்துவரும் துரோகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்து, தமிழ் மக்கள் அனைவரும் துயரக் கடலில் தவிக் கின்ற ஈழத்தமிழர்களைக் காக்க நம்மை நாமே ஒப்படைத்துக் கொண்டு அனைத்து வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம். அனல்வீசும் வெயிலிலும்
திரண்டு வந்து இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவருக்கும் இதுதான் எனது வேண்டுகோள்.
வைகோ இவ்வாறு உரையாற்றினார்.
No comments:
Post a Comment