இமைப்பொழுதும் நீங்காது என் இதயத்துடிப்போடும் இரத்தச் சுழற்சி யோடும் கலந்துவிட்ட கண்ணின்மணிகளே!
இருபதாவது வருடம் நம்மைக் கட்டியம் கூறி வெற்றிக்கரம் கோர்க்க வீறு கொண்டு அழைக்கிறது.மலைகளையும் நகர்த்தி இருக்கிறோம் மனவலிமை யால். அப்பப்பா... ஒன்றா இரண்டா...எத்தனை தடைகள்? எத்தனை சோதனை கள்? எத்தனை வேதனை பாய்ந்த துயரங்கள்? எத்தனை தோல்விகள்? எத்தனை இருட்டடிப்புகள்? எத்தனை ஏகடியப் பேச்சுகள்? எத்தனை ஏளனச் சொற்கள்?ஏன் எத்தனை எதிர்பாராத துரோகங்கள்? அனைத்துக்கும் முகம் கொடுத்து,எதிர் கொண்டு முன்னேறி இருக்கிறோம்!
இத்தனை இடர்ப்பாடுகளுக்கும், துன்பச் சூழல்களுக்கும் இடையில் நாம் சாதித் தவை இமயம் நிகர்த்தவை. கடந்து வந்த பாதையை மனதில் படியவிடும் போது, நானே திகைக்கிறேன்.பிரமிக்கிறேன். நாம் தானா? நமது இயக்கம் தா னா? எப்படி முடிந்தது? அனைத்துமே உங்களின் வைரம் பாய்ந்த நெஞ்சுறுதி யால். தன்னலமற்ற களப்பணியால். கடைபிடித்த கட்டுப்பாட்டால்.கண்ணியம் நிறைந்த கடமையால். பேரறிஞர் அண்ணாவின் வார்ப்புகள் நாம் என்ற வரலா று படைத்துள்ளோம்.
அறிவாசான் தந்தை பெரியார், தமிழர்களின் சகாப்தமான அறிஞர் அண்ணா உருவாக்கி காத்து வளர்த்த திராவிட இயக்கத்தின் உண்மையான அடுத்த பரி மாணம், மறுமலர்ச்சி தி.மு.க என்பதை நிலைநாட்டி விட்டோம். நெருப்பில் தான் தங்கம் ஒளிர்கிறது. அனலின் வெப்பத்தில் தான் சங்கு வெண்மை தரு கிறது. உலையில் தான் ஆயுதம் கூர்மை பெறுகிறது. அது போலவே நமக்கு நேரிட்ட ஒவ்வொரு சோதனையும் நம் இயக்கத்திற்கு வலிவும், உரமும் தந் துள்ளன.
2011 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை நாம் புறக்கணித்த போது இனி இந்தக் கட்சி கலகலத்து பலமிழந்து காலத்தால் புறக்கணிக்கப் பட்டுவிடும் என் றே பலரும் கணித்தனர். ஆனால், நிலைமையோ அதற்கு நேர்மாறாகத் திரும் பியது. முன்னிலும் பன்மடங்கு வலுவோடும், வேகத்தோடும் நமது இயக் கத் தை அறப்போர்க் களங்களில் கொண்டுபோய் நிறுத்தினோம்.கடலோடும் பரத வர்களின் இரத்தக் கண்ணீரைத் துடைக்கக் களமாடினோம்.
தமிழ்க் குலத்தை எங்கெல்லாம் துன்பம் தாக்குகிறதோ? அதைத் தடுக்க முனை முகத்து முதற் சிப்பாயாக நின்றோம். ஊழலில் திளைத்து கோடி கோடியாய் கொள்ளைப் பணம் குவித்து,அதிகார அரசியலில் கொட்ட மடிப்பது தான் இந்தப்
பொதுவாழ்க்கையா? என்று நல்லோர் புண்பட்ட மனதுடன் சபிக்கத் தொடங்கி யுள்ள சூழலில், ஊழல் கரையான் அரிக்கமுடியாத நேர்மை நெருப்பாய் நிமிர்ந் தோம் என்பதற்கு நாட்டு மக்களும், வரலாறும் கண்கூடாக கண்ட சாட்சியம்
தான் உலகக் கோடிஸ்வரனின் கொள்ளை நிறுவனமான ஸ்டெர்லைட் நாச கார நச்சாலையை எதிர்த்து மக்கள் மன்றப் போராட்டங்களில் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வாதங்களில் நாம் கம்பீரமாக போர் தொடுத்த முறையே ஆகும்.
பென்னிக் குக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவும், தென் தமிழ்நாட்டு மக்களுக்கு சூழ்ந்த ஆபத்தைத் தடுக்கவும் இடையறாது நாம் தொடுத்த அறப்போரும், மக்கள் சக்தியைத் திரட்டிய களப்பணியும் தான் நம் மீது அலாதியான ஈர்ப்பை தமிழக மக்களிடம் ஏற்படுத்தியது.
கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கப்படும் என்று அன்றையப் பிரதமர் இரா ஜீவ்காந்தி 1988 நவம்பர் 21 ஆம் தேதி அறிவித்தபோது, அதனை எதிர்த்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அடியேன் வைகோ மட்டும்தான் என்ற தகுதி யோடு அணுஉலையை எதிர்த்துப் போராடுகிறோம்.
நொறுங்கிக் கிடக்கும் விவசாயிகளின் துயர் துடைக்கவே மின்வெட்டைக் கண்டித்துப் போராட்டம். உரவிலை உயர்வை எதிர்த்து உண்ணாவிரதம். விவ சாயிகளுக்கு நிவாரணம் கேட்டு உண்ணாநிலை அறப்போர். காவிரி யிலும், தென்பெண்ணையிலும் வஞ்சிக்கும் கர்நாடகத்தை எதிர்த்துக் கிளர்ச்சி. பாலாற் றுத் தண்ணீரை வழி மறிக்கும் ஆந்திரத்தை எதிர்த்துப் போராட்டம்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தின் செளகத் ராய் என்பவன் தயாரித்த அப்பட்டமான பொய் மாய்மாலப் படமான “அணை 999” படத்தை தமிழகத்தில் திரையிட ஒத்திகைப் பார்த்த நாளன்றே கண்மணிகள் அதிரடிப் படையாய் தடுத்த வீரச் செயல் தான் படத்தைத் தடை செய்யும் நிலைமை யைத் தந்தது.
அண்மையில் கெயில் நிறுவனம் கொங்கு மண்டல விவசாயிகளின் வாழ் வைச் சூறையாட முனைந்த போது, அதைத் தடுக்கக் களம் கண்டோம். தமிழக
அரசு சரியான முடிவெடுக்க நாமும் ஓர் காரணமானோம் என்று அம் மண்ட லத்து மக்கள் பாராட்டு.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை கழகம் உதித்த நாள் முதல் ஆதரித்தே வரு கிறோம். அதற்காக ஏற்பட்ட இன்னல்களை உவகையோடு ஏற்றோம். கழகத் தின் முதல் மாநில மாநாட்டில் 1995 ஜூலை 1 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே “சுதந்திரத் தமிழ் ஈழம் தான் தீர்வாகும்” என்பதாகும். அந்தத் தீர்மானத்தை நானே முன்மொழிந்தேன்.
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென்று கழக மாநாடு களில், பொதுக் குழுவில் தீர்மானம். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என தீர்ப்பாயத்தில் நானே வாதங்களை முன்வைத்துப் போராடினேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் புலிகள் மீதான தடையை நீக்க ரிட் மனு தாக் கல் செய்து வாதிட்டேன். தீர்ப்பு நிலுவையில் உள்ளது.பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று தமிழர் உயிர் காக்க தொடக்கத்தில் இருந்தே போராடி வரு கிறோம். உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் இராம்ஜெத் மலானியை உயர்நீதி மன்றத்தில் வாதிடச் செய்து தடை ஆணை பெற்றோம்.
‘சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதில் உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் வாக்களிக்க ஐ.நா. மன்றம் வழிகாண வேண்டும்’என்ற கருத்தை முதன் முதலாக பதித் தவன் உங்கள் சகோதரன் வைகோ என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்க வோ ஒருக்காலும் இயலாது.
இன்று தமிழ்நாடெங்கும் “மீண்டும் 65” இனி அரங்கேறுவதற்கான அறிகுறி தெரிகிறது. இலட்சக்கணக்கான மாணவர்கள் கட்சிகளைக் கடந்து தமிழ் ஈழ உரிமைப் போர்க்கொடி ஏந்திவிட்டனர். ‘தலைவர் பிரபாகரன் வாழ்க! விடு தலைப் புலிகள் வெல்க!’ என்ற முழக்கம் வீதி எங்கும் கேட்கிறது. இப்படிக் கேட்க எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
தமிழ் ஈழ மக்களைக் கொன்று குவிக்க, எங்கள் இனத்தை கருவறுக்க கொக்க ரிக் கும் சிங்களக் கொடியவன் ராஜபக்சேவுக்கு உதவாதீர்! ஆயுதங்கள் தராதீர்! என்று 2004 முதல் இந்தியப் பிரதமரைத் திரும்பத் திரும்ப நேரில் சந்தித்து
முறை யிட்டவன், மன்றாடியவன். நீங்கள் துரோகம் இழைத்தால், ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். இந்திய ஒருமைப்பாடு நொறுங்கிச் சிதறும் என்று
எச்சரித்தவன் நான்.
2004 முதல் 2006 வரை அந்த மூன்றாண்டு காலத்தில், இந்தியாவில் காங்கிரஸ்
தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் எழுத்து மூலமாக இப்படி எதிர்ப்பை நம் அளவிற்கு ஏன் அதில் 5 விழுக்காடுகூட வேறு எவருமே செய்யவில்லை என்பதை இணைய தளத்தின் மூலம், கணினி மூலம், ஏடு களின் மூலம் நன்றாகவே தெரிந்துகொள்ளலாம்.
புதிய திருப்பம் ஏற்பட்டு வருகிறது. ‘சுதந்திரத் தமிழ் ஈழம்’ பொதுவாக்கெடுப் புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகி றார். நல்லதை வரவேற்போம்! அல்லதை எதிர்ப்போம்! என்ற முறையில், அதனை வரவேற்கிறோம்.
கரூரில் கடந்த செப்டம்பரில் மாநாடு! விந்திய சாத்புரா மலைச்சரிவில் உள்ள சாஞ்சி நோக்கி நம் படையெடுப்பு! இந்தத் துணிச்சல் நமக்கே உரித்தானது என் று தமிழர் உலகம் பாராட்டுகிறது.மூன்று மாநிலங்களைக் கடநது நெருப்பு வெ யிலில் நெடுஞ்சாலையில் போர்க்களம் கண்டோம், கொடியவன் ராஜ பக்சே வருகையை எதிர்த்து. இனி இந்திய மண்ணுக்குள் இராஜபக்சே வந்தால், பிரத மர் வீட்டை முற்றுகையிடுவோம் என்று சூளுரைத்தோம்.
அதன்படியே கொடிய நம் பகைவன் பீகாருக்குள் நுழைந்தபோது, பிரதமர் வீட் டை முற்றுகையிடும் போர் நடத்தினோம். அதனால், டெல்லி வந்து பிரதம ரைச் சந்திக்கும் திட்டத்தை இரத்துசெய்து விட்டு, கட்டாக் வழியாக பீகார் போனான் ராஜபக்சே!
திருப்பதி மலையிலும், அடிவாரத்திலும் நம் தோழர்கள் ஆயிரம் ஆயிரமாக ராஜபக்சே வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர் நம் கழகத்தினர். ராஜபக்சே முகத்திற்கு எதிரேயே கறுப்புக்கொடி உயர்த்தி கண்டன
முழக்கம் செய்து எச்சரித்தனர் நம் கண்மணிகள்.
இன்று நாட்டு மக்களின் ஒட்டுமொத்தக் கவனமும் நம் பக்கம் திரும்பி வரு கிறது. நமது நம்பகத் தன்மை ஓங்கி வளர்ந்துள்ளது. தமிழகத்தை நாசமாக்கி வருகிற மக்களின் வாழ்வைச் சீரழித்து வருகிற மதுவெனும் நச்சுச் சூழலில் இருந்து நம் தாயகத்தை மீட்க அறப்போர் நடத்துகிறோம்.
ஒன்பதாண்டுகளுக்கு முன்பு மது போதையை எதிர்த்து மூவாயிரம் தொண்டர் அணியினருடன் 1,400 கிலோ மீட்டர் நடைப்பயணம் மேற்கொண்டோம். மூன் று கட்ட நடைப்பயணத்தில் 1,130 கிலோ மீட்டர், சகாக்களுடன் நடந்து இருக் கிறேன். நெருப்பு வெயிலில் கை குழந்தை களுடன் காத்திருந்து வரவேற்ற நம் அன்னையர், ஏழைச் சகோதரிகள் விழிகளில் பொங்கும் கண்ணீரோடு சகோதர பாசத்துடன் என் கரங்களைப் பற்றிக்கொண்டு மதுக் கடைகளை மூட வேண் டும் என்ற கதறல், இப்படி கால் கடுக்க நடந்தபோது இதுவரை கடந்த தூரத்தை
நினைக்கிறேன்.
தென் திருப்பேரை முதல் நெல்லை வரை 40 கி.மீ.
குமரி முதல் சென்னை வரை 1,600 கி.மீ.
திருவைகுண்டம் முதல் தூத்துக்குடி வரை
(குக்கிராமங்கள் வழியாக) 120 கி.மீ.
பூம்புகார் முதல் கல்லணை வரை
(பல குக்கிராமங்கள் வழியாக) 180 கி.மீ.
நெல்லை முதல் சென்னை வரை 1,400 கி.மீ.
மதுரை முதல் கூடலூர் வரை 150 கி.மீ.
உவரி முதல் மதுரை வரை
(பல கிராமங்கள் வழியாக) 470 கி.மீ.
கோவளம் முதல் மறைமலை நகர் வரை
(பல கிராமங்கள் வழியாக) 350 கி.மீ.
பொள்ளாச்சி முதல் ஈரோடு வரை
(பல கிராமங்கள் வழியாக) 310 கி.மீ.
------------------------
4,620 கி.மீ.
இது தவிர்த்து, 18 ஆயிரம் கிராமங்களுக்குள்ளும், நகர வீதிகளிலும் கொடி ஏற்றி வைத்த தூரம் எவ்வளவு? இருக்கும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.
நான் பிறந்த புண்ணிய பூமியான பொன்னான மண்ணைத் தொட்டு வணங்கி நடக்கிறபோது, மனதுக்குள் எவ்வளவு மகிழ்ச்சி! அதை அனுபவிக்கிற நான் தான் உணர முடியும்!
என்னோடு வந்தால், கண்ணீர் துளிகளும்,வியர்வைத் துளிகளும் மாத்திரமே காத்திருக்கும்.போராட்டக் களங்களும், துன்பமான அணிவகுப்பு களும் மாத் திரமே வரவேற்கும் என்று, 1993 அக்டோபர் 18 இல் கூறினேன். அதே உணர் வோடு, என்னோடு கரம்பற்றி உடன் வருகின்றீர்கள். கழகத்தின் மூலபலம் நீங்கள் தான்.
பத்தொன்பது மாத காலம் வேலூர் சிறையில் இருந்தபோது, 18 ஆயிரம் கடிதங் கள் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 2002 நவம்பர் முதல் 2004 பிப்ரவரி வரை சிறையில் இருந்தவாறே வாரந்தவறாமல், உங்களுக்கு சங்கொலி மூலம் கடி தம் எழுதியுள்ளேன். எனக்குத் தெரிய தொண்டர்களுக்கு வாரந்தோறும் கட்சி ஏட்டின் வாயிலாக கடிதம் சிறையில் இருந்து எவரும் எழுதியதாக நான் அறிய வில்லை.
கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கும், பொதுக்குழுவிற்கும் சிறைக் குள் இருந்தே நீண்ட உரையைத் தயார் செய்து அனுப்பி வைத்ததும், வேறு எந்தக் கட்சியிலும் இதுவரை நடந்தது இல்லை. நாம் வித்தியாசமானவர்கள். பலம் வாய்ந்த சக்திகளின் எதிர்ப்புக்கு மத்தியில் பயணிக்கிறோம். நம்மை அழிக்க முயன்றவர்கள் எல்லாம் தோற்றுப் போனார்கள்.
இருபதாவது வருடத்துக்குள் பிரவேசிக்கிறோம். மே-6 நம் இயக்கம் உதித்த உன்னதமான நாள்.அந்த நாளில் காணும் இடமெல்லாம் நம் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். பழைய கொடி மரங்களில் வண்ணம் தீட்டி பொலிவுள்ள நமது பதாகைகளைப் பறக்க விடுங்கள்.
மறுமலர்ச்சி கொடிப்பயணம் நான் மேற்கொண்டு ஊர் ஊராக வந்து கொடி ஏற் றினேன். தோழர்களே! நீங்கள் அந்தப் பணியை முன்னெடுத்துச் செல்லுங்கள். இனி முக்கியமான கோரிக்கைக்கு வருகிறேன்! காரணம் இல்லாமல் இவன் இவ்வளவு பீடிகை போட மாட்டானே என்பது கண்ணின் மணிகளான உங்க ளுக் குத் தெரியும்!
நான் யாரிடத்தில் போய் கேட்பேன்! என் சகோதர சகோதரிகளே! உங்களிடம் தானே நிதி கேட்பேன். உங்கள் கரங்கள் அள்ளி வழங்கியதால்தான் கழகத் திற்கு கட்டிடங்கள், நீங்கள் தந்த நிதியால் போட்டியிட்ட களங்கள், விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் ஈழத்தமிழர்களுக்காக நாம் செய்த செலவு எவரும் கற்பனை செய்ய முடியாத பெருந்தொகை, மூன்று தமிழர் உயிர்காக்க, பெரும்
பொருட்செலவு ஆழிப்பேரலை தாக்கிய போதும், தானே புயல் வீசியபோதும், கனரா வங்கியில் கடன் பெற்று தமிழக அரசுக்கு இருபது இலட்சம் கொடுத் தோம். இருமுறையும் முதன் முதலாக நாம்தான் கொடுத்தோம்.
கழகத்தின் அன்றாடப் பணிகளுக்கும், தாயகத்தை இயக்குவதற்கும் பணம் தேவைப்படுகிறது.வங்கியில் விதை நெல்லாக நாம் வைத்திருக்கின்ற வைப் புத் தொகையை செலவழிக்கவும் முடியாது.
ஒருசில மாதங்களில் எப்படி எல்லாமோ சிரமப்பட்டு சமாளித்து வருகிறேன். உங்களுக்குத் தான் எவ்வளவு பொருட்செலவு? மாவட்டச்செயலாளர்களுக்குத் தான் எவ்வளவு செலவு? மாநாடு என்றால், செலவு, பொதுக்கூட்டம் என்றால்
செலவு, நடைப்பயணம் என்றால் பெருஞ்செலவு, இரவு வேளைகளில் ஒளிசிந் தும் விளக்குகள். எந்த இடத்திலும் நமது மாவட்டச் செயலாளர்களோ, நிர்வா கிகளோ மிரட்டி பணம் கேட்டார்கள், கட்டாய வசூல் செய்தார்கள் என்று எதிரி கள்கூட இதுவரை சொல்ல முடியவில்லையே! அந்தப் பண்பாடு தானே கழகத் தின் மரியாதையை உயர்த்துகிறது.
இவ்வளவு செலவுக்குப் பின்னரும், நிதி கேட்டால் முகம் சுளிக்காமல் மாவட் டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் புன்முறுவலுடன் அக்கோரிக்கையை ஏற்பதும், அப்பணி செய்யமுனைவதும் என் வாழ்வில் எனக்குக் கிடைத்த
பெரும் பேறல்லவா?
இதோ கழக வளர்ச்சி நிதி - தேர்தல் நிதி திரட்ட வேண்டிய அவசியம் வந்து விட்டது. கழகத்தின் 20 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவின்போதே நிதி வசூல் பணியையும் தொடங்கிட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானித் தோம்.நன்கொடைச் சீட்டுகள் தயாராகிவிட்டன. தலைமை நிர்வாகிகள், மாவட் டச் செயலாளர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் வழங்குவார்கள்.
ஒரு கருத்தை அழுத்தமாக உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நமது இயக் கத்தின் சார்பில், நிதி கேட்டால், எந்த இடத்திலும், எவரும் முகம் கோணாமல் பரிவோடு தங்களால் முடிந்ததைத் தருகிறார்கள். எனவே, திட்டமிட்டு முறை யாக நிதி வசூல் பணியில் ஈடுபட்டால், நீங்கள் எதிர் பார்ப்பதைவிட அதிகமாக திரட்டலாம்.நன்கொடைச் சீட்டுகளை பெற்றுச் செல்கிற நிர்வாகிகள், மாவட் டச் செயலாளர்கள் அறிவிக்கும் காலத்திற்குள் வசூலிக்கப்பட்ட தொகை யை யும், எஞ்சிய நன்கொடை சீட்டுகளையும் ஒப்படைத்து விட வேண்டும்.
இம்முறை இக் கடமையில் பிழை நேர்ந்தாலோ, மீதமுள்ள நன்கொடைச் சீட்டு கள் முறையாக சேர்க்கப்படாவிட்டாலோ அதற்காக அவர்கள் பின்னாளில் வருந்தும் நிலை ஏற்படும். அதனை தவிர்த்துக்கொண்டு எச்சரிக்கையோடு கடமை ஆற்ற வேண்டுகிறேன்.
“முன்னேறிச் செல்; அதிகாரத்தைக் கைப்பற்று!” என்ற கரூர் மாநாட்டுப் பிரகட னம் நமது இலக்காகும். அந்த இலக்கை வெல்வோம்! இருபதாம் அகவையில் நம் மீது வெற்றியின் வெளிச்சம் பிரகாசிக்கத்தான் போகிறது
எழுச்சிச் சங்கொலிக்கும் உங்கள் பணிகள் வளரட்டும்!
பாசமுடன்
வைகோ

No comments:
Post a Comment