Tuesday, May 7, 2013

சூழும் இருள் அகலும்! தமிழ் ஈழம் மலரும்!

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், 20.8.2009 அன்று சென்னை புல்லா அவென்யூவில் மாபெரும் மக்கள் திரள் பொதுக் கூட்டம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, கழகப் பொதுச் செய லாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப் பினர் ஸ்டாலின் குணசேகரன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன், சூர் யதீபன், இராஜேந்திர சோழன், மெல்கியோர், மு.தெய்வநாயகம், ம.நடராசன்
ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றிய இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுக் கூட்டத்தில், ஈழத்தமிழர்கள் வாழ்வு உரிமைக்கான உலகத் தமிழர் பிரகடனம் வெளியிடப்பட்டது.இந்தப் பிரகடனத்தை வைகோ உணர்ச் சிப் பொங்க வாசிக்கையில், திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்க ளும் , தமிழ் உணர்வாளர்களும், தீப்பந்தங்களை ஏந்தி முழங்கினர். இந்த உணர்ச்சிமிகு நிகழ்வில் வைகோ ஆற்றிய உரை...



தமிழர்களின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்குகின்ற நாளாக இந்தநாள் அமைந்து இருக்கிறது. அண்ணன் நெடுமாறன் அவர்கள் தலைமை யில், ஐயா மருத்துவர் ராமதாஸ் அவர்கள் முன்னிலையில், இங்கே வெளியி டப் பட்ட பிரகடனம் தமிழர்களுக்கு அடுத்த கடமை என்ன என்பதை எடுத்துக் காட்டி சூளுரைக்கச் செய்கின்ற பிரகடனம்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் 1976 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வட்டுக் கோட்டைப் பிரகடனத்தைப் போல, 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி சுது மலையில் தமிழர்கள் வரலாற்றில் அழியாத புகழைப்பெற்றிருக்கின்ற தமிழ னுக்குத் தரணியில் ஒரு முகவரியைத் தேடித்தந்திருக்கக்கூடிய வீரத்தலை வர் பிரபாகரன் செய்த பிரகடனத்தைப் போல, இன்றைக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக, இந்தப் பிரகடனம் இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது.

அண்ணன் நெடுமாறன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, இது வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகில் மட்டுமல்ல,அலைகடல்தாண்டி அவனி எங்கும் இருக்கக் கூடிய இலட்சோபலட்சம் தமிழர் களுக்கும் அறை கூவல் விடுக்கின்ற, அழைப்பு விடுக்கின்ற பிரகடனம் ஆகும்.காரிருள் சூழ்ந்து இருக்கின்ற நேரத்தில், ஈழத்தமிழர் வாழ்வை அடிமை இருள் வளைத்து இருக் கின்ற நேரத்தில், அந்த இருளைக் கிழித்து எறிவதற்கு உயிர்களையும் தரு வோம் என்று இந்த வீரர்கள் இங்கே கைகளில் தீப்பந்தங்களை ஏந்தினார்கள்.

தமிழகத்தில் கலகம் விளைவிக்க அல்ல - வன்முறை நடத்த அல்ல - ஆனால், தொட்டு விடும் தூரத்தில் இருக்கிற, நம் உறவுகள் அழிந்து கொண்டு இருக்கிற
நேரத்தில் அவர்கள் நாதியற்றவர்கள் அல்ல நானிலத்தில் என்பதைத் தாய்த் தமிழகம் உலகத்தமிழர்களுக்கு எடுத்துக்காட்டுகின்ற விதத்தில் இந்தநிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பேரவலம் அங்கே நடந்து முடிந்தது மட்டுமல்ல,நாளுக்குநாள் அவலம் தொடர் கிறது. இந்த வேளையில் மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலி வதைமுகாம் களில் அடைபட்டுக் கிடக்கிறார்களே, அங்கு குழந்தைகளுக்கு உணவில்லை -
பிள்ளைக்கும் உணவில்லை -தாய்க்கும் உணவில்லை -தந்தைக்கும் உணவில் லை - நோய்க்கு மருந்தில்லை - சராசரி மனிதனுக்குத் தேவையான அடிப் படை வசதிகள் எதுவுமே அங்கு இல்லை.

பெருமழை பெய்வதாக, அந்த மழை வெள்ளத்தோடு மனிதக்கழிவுகளும் மிதப் பதாக, இதயத்தைப் பிளக்கக்கூடிய சோகச்செய்திகள் வந்தவண்ணம் இருக் கின்றன. நம் கண்முன்னாலேயே ஒரு அழிவு நடந்து முடிந்துவிட்டது. தமிழ் ஈழத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலைப்புலிகளை அழிக்க, உலகத்தில்
பல நாடுகளில் வாங்கிக்குவிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு, மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்த இந்திய அரசுதந்த ஆயுதங்களோடு, உலகம் தடை செய்திருக்கக்கூடிய ஆயுதங்களை இரசாயனக் குண்டுகளை எந்தப் போர்க் களத்திலும் இதுவரை அகிலத்துநாடுகள் சந்தித்திராத குண்டு வீச்சு களை கொடியவன் ராஜபக்சே நடத்தினான்.

இலட்சக்கணக்கானவர்கள் மடிந்தார்கள். அந்த மண்ணே பிணக்காடாகி விட்ட து. கண்ணீர்க் கடலில் தத்தளிக்கிற அந்த மக்கள் இரத்தச் சகதியில் கொல்லப் பட்ட கொடுமையை எண்ணி இந்தத் தமிழகத்தில் இருக்கிற மக்கள் அழுவதற் குக் கூட உரிமை கிடையாதா? இயல்பாக எழுகின்ற ஆத்திர உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்குக்கூட அனுமதிக்க மாட்டீர்களா? இந்தக் கொடுமைகளை
எடுத்துச்சொல்லக்கூடாதா? 

தலைமைச் செயலாளர் சார்பாக அறிக்கை வெளியிடச் செய்த முதலமைச் சரைக் கேட்கிறேன். ஈழத்தில் நடைபெற்று இருக்கிற அவலம், இந்த இனம் கரு
அறுக்கப்படுவதற்கு அவன் நடத்திய இனக்கொலை, அவன் பயன்படுத்திய ஆயுதங்கள், மண்ணின் மானம்காக்க மறத்தமிழர் கூட்டமாகப் போராடினார் களே, கழுத்திலே நச்சுக் குப்பிகளைக் கட்டிக்கொண்டு எத்தனை ஆயிரம் இளம் பிள்ளைகள் அழிந்தனர். எத்தனை இளம் தங்கைகள் அழிந்தனர்.

அப்படிப் படுகொலைக்கு ஆளான மக்கள் நடத்திய வீரப்போராட்டத்தை, வீர வரலாற்றைச் சொல்லக் கூடாதா? பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டு விட்டதா?
என்ன நோக்கம் உங்களுடைய அறிவிப்புக்கு? 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எதுவும் இங்கே பேசிவிடாதீர்கள் எனச் சட்டமன் றத்தில் இதோபதேசம் செய்த மதிப்புமிக்க முதலமைச்சர் அவர்களே, அப்படி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் எழுமானால், ராஜபக்சேவுக்கு ஆத்திரம் ஏற் பட்டுவிடும். அதனால் மேலும் தமிழர்களுக்கு இடர்விளையக் கூடும் என்றீர் கள். என்ன அறிவுரை? இனி, அவன் எந்த ஆக்ரோசத்தில் அழிக்கப் போகிறான்?

இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்து,பச்சிளம் குழந்தைகளையும் பாலகர்களையும் கொன்றுகுவித்து, நம் சொந்தச் சகோதரிகளை நாசப்படுத்தி, யூதர்களுக்கு இழைக்கப்படாத கொடுமைகளையும் செய்துமுடித்து மீதமிருக் கிற தமிழர்களையும் அழித்து, நிரந்தர அடிமை இருளில் தள்ளுவதற்கு, திட்டம் போட்டிருக்கிறானே, இனி என்ன ஆக்ரோசத்தில் செய்யப்போகிறான்?

இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ராஜ பக்சே அறிவிக்கிறான்.சிங்கள இனம் மட்டுமே இங்கு வாழும், ஆளும். வேறு
இனமே கிடையாது என்கிறான். இனத்தின் பெயரால் இனி தேர்தலில் எந்தக் கட்சியும் போட்டியிடு வதற்கும் தடை என்கிறான். பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகளாக தமிழர்கள் வாழும் பூர்வீகத் தாயகமாம் தமிழர் பூமியில் சிங்களக் குடியேற்றம் நடைபெறு கிறதே. இவ்வளவு கொடுமைகள் நடக்கின்ற வேளை யில் இத்தனை மக்கள் செத்ததற்குப்பிறகு சொல்கிறார், சுமூகத் தீர்வு ஏற்பட்டு விட்டது இலங்கையிலே என்று. அதை பாழ்படுத்துவதற்கு சிலபேர் முயற்சிக் கிறார்கள் என்று கூறுகிறாரே முதலமைச்சர். யார் அவர்கள் சொல்லுங்கள்,
வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

சுமூகத்தீர்வு ஏற்பட்டுவிட்டது என்று சொல்லும் முதலமைச்சர் அவர்களே, மூன்று இலட்சம் மக்கள் இந்த நிமிடத்திலும் குற்றுயிரும் குலை உயிருமாக
வதைபட்டுக் கிடக்கிறார்களே, இதுதான் சுமூகத் தீர்வா? இளம்தமிழ்ப் பெண் கள் பாலியல் கொடுமை களுக்கு ஆளாக்கப் பட்டு நாசமாக்கப்பட்டு சிங்களக்
கொடியோர் கரங்களில் அந்த மலர்கள் அழிக்கப்படுகிறதே... இதுதான் சுமூகத் தீர்வா? இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு காடுகளுக்குள் இழுத்துச் செல்லப் பட்டு படுகொலை செய்யப் படுகிறார்களே... இதுதான் சுமூகத்தீர்வா?

நினைக்கவே நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. புதுவை இரத்தினதுரை என்கின்ற அருமையான கவிஞன் நம் வீரத்தமிழன் முத்துக்குமார் மடிந்தபோது நெஞ்சைப்பிளக்கும் கவிதையைத் தந்தானே, அந்தக் கவிஞன். அந்தக் கவிஞ னும் சித்ரவதை செய்யப்பட்டு கொலையுண்டு இருக்கக்கூடும் என்று செய்தி வருகிறதே... உள்ளம் பதறுகிறதே... பாவேந்தனைப் போன்ற கவிஞன், மான உணர்ச்சி கொண்ட கவிஞன் அவன் கொலையுண்டு மடிந்தான் என்று கூட செய் திவருகிறது. விடுதலைப்புலிகளின் இளம் தலைவர்கள் அங்கே சித்ர 
வ தை முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு அழிக்கப்படுகிறார்கள் என்று செய்தி வருகிறது.

சர்வதேச கடத்தல்காரனைப்போல ராஜபக்சே கோலாலம்பூருக்கே தன் கொடி யோர் கூட்டத்தை அனுப்பி, குமரன் பத்மநாபனை அக்கிரமமான முறையில் அங்கே இருந்து கைதுசெய்து கொண்டுவந்து அடைத்து வைத்து இருப்பது மட் டுமல்ல, உலகில் எந்த தேசத்துக்குள்ளும் அவனுடைய கரம் நீளும் என் கி றான். ஏன், கடல்தாண்டி தமிழ் நாட்டுக்குக்கூட வரலாம் சிங்களக் கூலிப் படை. அந்த அளவுக்கு இவ்வளவு அக்கிரமம் நடைபெறுகிறது. முதல்வரே, இதைத் தான் நீங்கள் சுமூகத்தீர்வு என்கிறீர்களா?

ஆக, தமிழர்கள் அழிக்கப்பட்டு மேலும் கொலைகளத்தில் நிறுத்தப்பட்டு இருக் கிற நேரத்தில், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை தமிழனுக்கு உண்டு. இது கட்சி எல்லைகளைக் கடந்து - தன்னலநோக்கமும் இன்றி, இந்தத் தலை வர் கள் இங்கே திரண்டு இந்தப் பிரகடனத்தை வெளியிட்டு இருக்கிறோம். அடக்குமுறை மூலமாகவோ சட்டத்தின் மூலமாகவோ எங்களை மிரட்ட
முடியாது.

பிரபாகரன் படத்தைப் பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறையை ஏவுகிறீர் கள். பிரபாகரன் பெயரைக் குறிப்பிடக்கூடாது என்று சொல்கிறீர்கள். இப்படிப் பட்ட இலட்சியத்தை முழங்கக்கூடாது என்று சொல்லி அழிக்க நினைத்த ஆதிக் கவாதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கிறார்கள். (பலத்த கை தட்டல்) பெயரைச் சுவரில் இருந்து நீ அழித்துவிடுவாய். தமிழ்நாட்டில் இலட் சக்கணக்கான வாலிபர்களின் இதயச்சுவரில் எழுதப்பட்டு இருக்கிற பெயர் தான் பிரபாகரன் - பிரபாகரன் - பிரபாகரன். அழித்துவிடுவீர்களா? (பலத்த கை
த ட்டல்) 

எதற்காக உத்தரவு? தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக அதன் கொள் கையைப் பேசலாம். ஆதரித்துப் பேசலாம். அந்த இயக்கத்துக்கு ஆதரவாக
ஆயுதம் திரட்டக்கூடாது. அந்த இயக்கத்தின் அப்படிப்பட்ட நடவடிக்கைகளை இங்கே இருந்து நாம் நடத்தக்கூடாது. ஆனால், ஆதரித்துப் பேசுவதில் தவறு இல்லை என்றுதானே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதைத்தான் அண் ணன் நெடுமாறன் அவர்கள் இங்கே குறிப்பிட்டார்கள்.

எத்தனையோமுறை - கோபாலபுரத்தார் மிரட்டிப் பார்த்தார். ஐயா இராமதாஸ்
அவர்களும் - நெடுமாறன் அவர்களும் -நாங்களும் - இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியினரும் - தமிழ் உணர்வாளர்களும் -அனைத்து இடங்களிலும் பிப்ரவரி 4 ஆம் தேதி இலங்கைக்குச் சுதந்திர நாள். தமிழனுக்கு அடிமை விலங்கு பூட்டப் பட்ட நாள் என்று ஆர்த்தெழுந்து போராட்டம் நடத்துவதற்கு பொது வேலை நிறுத்தம் என்றபோது அன்றைக்கும் மிரட்டிப் பார்த்தார். எச்சரிக்கைக் கடிதத் தை அனுப்பிப் பார்த்தார்.

இப்பொழுது தொடர்ந்து இந்த உணர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்று
நினைக்கின்றீர்களா? பேச்சுரிமையை கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்ப
வேண்டும் என்று முடிவுகட்டி விட்டீர்களா? ஆகவேதான், சுமூகத்தீர்வு என்பது
ஏற்படவில்லை. ஏற்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தமிழ் ஈழம்
மலரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

அதற்கு ஆதரவாக தாய்த் தமிழகத்து மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு முயற் சிக்கிறோம்.நடைபெற்ற அக்கிரமங்களை கொடுமைகளை இந்த மக்க ளிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது நம் கடமை. உணர்ச்சி செத்துப்போய் விடவில்லை. தமிழ்நாட்டில் 14 பேர் தீக்குளித்து மடிந்தார்கள். ஒவ்வொரு தீக் குளிப்புச் சம்பவத்தின்போதும் காவல்துறை அதிகாரியைவிட்டு அதைக் கொச் சைப்படுத்தினீர்களே, முதலமைச்சர் அவர்களே!

இந்தத் துரோகத்தை தமிழர் வரலாறு ஒருபோதும் மறக்காது. நீங்கள் செய்த
துரோகத்தை - இந்திய அரசு செய்த துரோகத்தை -மன்மோகன் சிங் அரசு செய்த துரோகத்தை -வரலாறு மன்னிக்காது. தமிழர்களைக் கொன்று குவிக்கின்ற கொடுமையை நடத்திவிட்டு, இப்பொழுது அழுகையும் கண்ணீருமாக இருக் கிற இந்த நேரத்தில், தமிழர் உள்ளமெல்லாம் வெந்து கொண்டு இருக்கக்கூடிய நேரத்தில், அவர்களுக்கு நாதி எங்கே இருக்கிறது என்று இங்கே திரும்பிப்
பார்க்காமல் எங்கே பார்ப்பார்கள்?

அங்கே வதைமுகாம்களில் இருக்கக்கூடிய தமிழர்கள் - நம் ஓலக்குரல் கடல் தாண்டி தாய்த் தமிழகத்து செவிகளில் விழாதா என்று ஏங்குகின்றார்கள். இந்தப் பூமிப்பந்தில் சிதறிக்கிடக்கின்ற தமிழர்கள் எல்லாம் தாய்த்தமிழகம் நம்மைக் காக்க முன்வராதா என்று ஏங்குகிறார்கள். அந்த உணர்வோடுதான் இந்த இனத் தைக் காக்க எழுவோம் என்று நாம் கூடியிருக்கிறோம்.

யூதர்கள் அழிக்கப்பட்ட வேளையில்...உலகெங்கும் சிதறிக்கிடந்த யூதர்கள் ஒன்று சேரவில்லையா? அதைப்போல தமிழகத்தில் இருக்கின்ற தமிழர்களும் உலகத் தமிழர்களும் ஒருசேர எழுவோம். அவர்களைக் காப்பதற்கு முனை வோம். கொலைகாரன் ராஜபக்சே கூட்டத்தை சர்வதேச நீதிமன்றக் குற்றக் கூண்டிலே நிறுத்துவதற்கு முனைவோம்.ராஜபக்சேவின் கூட்டம் நினைக்க லாம். அங்கே இருக்கக்கூடிய ஈழத்தமிழ் போராளிகளை அழித்துவிட்டோம் என்று நினைக்கலாம். ஒருக்காலும் அழிக்க முடியாது. அங்கு தமிழ் மண்ணில் .  புல்பூண்டு இருக்கின்ற வரையில் அந்த வீர உணர்ச்சி, விடுதலை உணர்ச்சி தான் இருக்கும். அதை ஒருபோதும் அழிக்க முடியாது. ஆகவே இந்த உறவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொண்ட உறவு.

அடக்குமுறையின் மூலமாகவோ இந்தப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதன் மூலமாகவோ, சரித்திரத்தில் எந்தச் சர்வாதிகாரியும் நினைத்ததை சாதித்தது இல்லை. கட்டபொம்மன் பெயரைச் சொல்லக்கூடாது. அவன் பெயரை உச்சரிக்கக்கூடாது என்று பெயரையே அழிப்பதற்குபாஞ்சாலக் குறிச்சி பெயரே இருக்கக்கூடாது என்று சொன்னான். நாடோடிப் பாடல்களில்
கட்டபொம்மன் உலவினான்.

புராணத்தில் நாராயணன் என்ற பெயரையே சொல்லக் கூடாது என்றானாம் இரணியன். சொல்வேன் என்றான் பிரகலாதன்.எங்கேயடா இருக்கிறார் உன் னுடைய நாராயணன் என்று கேட்டான் இரணியன். அவர் தூணிலும்இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றான் பிரகலாதன். இந்தத் தூணிலா என்றவாறு
உடன் எட்டி உதைத்தானாம் தூணை... தூண்பிளந்ததாம்... சிம்மம் வந்ததாம். இது புராணம். நாங்கள் நம்பாத புராணம். ஆயினும் ஒரு செய்தி.

எந்த அடக்குமுறையின் மூலமாகவும் இந்த உணர்வை அழிக்க முடியாது. கோடிக்கணக்கான தமிழர்களின் இதயத்தில் உயிரோவியமாக தீட்டப்பட்ட பெயர்தான் பிரபாகரன் என்பதை மறந்துவிட வேண்டாம் (பலத்த கைதட்டல்) ஆகவே உங்களுடைய மிரட்டலுக்கோ அச்சுறுத்தலுக்கோ அஞ்சுகிற கூட்ட மல்ல இது. உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை அச்சமில் லை என்று சொல்கிறகூட்டம். காராகிருகத்தைக் காட்டி எங்களை மிரட்ட முடி யாது.

கோடிக்கணக்கான தமிழர்கள் உள்ளத்தில் கனன்று கொண்டு இருக்கக்கூடிய உணர்ச்சிக்கு உயிர் வடிவம் கொடுக்கின்ற வகையில் செய்யப்பட்ட பிரகடனத் துக்கு தாய்த் தமிழகத்துத் தமிழர்களே ஆதரவுதாரீர். தமிழ் ஈழத்தில் சூழ்ந்த இருளை அகற்ற தமிழர்களின் அடிமை விலங்கை உடைக்க அவர்கள் துயரத் தைப்போக்க அவர்களுக்கு நாம் எந்நாளும் தோள் கொடுப்போம். துணை நிற் போம். அடக்கு முறைகளுக்கு அஞ்சமாட்டோம். 

மலர்க தமிழ் ஈழம்... மலரட்டும் தமிழ் ஈழம்...

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இவ்வாறு உரை ஆற்றினார்.

No comments:

Post a Comment