Monday, May 6, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 2

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே


முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 1 யின் தொடர்ச்சி ....

காலை பத்திரிகையை படிக்கிறபோது சில நிமிடங்கள் வேறு செய்தியைப்
படிக்க முடியவில்லை. அந்த ஏழைத்தாயையும் தகப்பனையும் தான் நினைத் தேன். நிலத்தை குத்தகைக்கு எடுத்து, வேளாண்மை தொழில் செய்யலாம் என் று இரத்தத்தை வியர்வையாகக் கொண்டு மேனியை வருத்தி உழைக்கிற போ து, ஆயிரம் அடி குழிதோண்டினாலும் தண்ணீர் கிடைக்காது என்கிற அள வுக்கு நிலத்தடி நீர் அபரிக்கப்பட்டுவிட்டதே! இந்தச் சூழலில் ஒரு ஆழ்குழாய் கிணறு
அமைத்து, அதில் கிடைக்கின்ற தண்ணீரைக்கொண்டு, குத்தகை நிலத்தில் விவசாயம் செய்து, தானும் தன் குடும்பமும் பிழைக்கலாம் என்று சின்ன பூசாரி நினைத்தார்.


அவருடைய பிள்ளைகளில் கடைசி அழகான குழந்தை அந்த ஆழ்குழாய் கிணற் றில் விழுந்து இறந்துவிட்டது. இந்தச் செய்தியைப் படிக்கிறபோதே மேலும்
வாசிக்க முடியவில்லையே. கீழே இருந்து அந்தக் குழந்தை அப்பா அம்மா காப் பாற்றுங்கள் என்று கூச்சல் போடுகிறாள். அப்பொழுது அந்த பெற்ற தாய் தந் தை யின் மனம் எப்படித் துடித்திருக்கும். அந்தத் தாய் புடவையைக் கழற்றி ஆழ் குழாயினுள் போடுகிறாள் அந்தப் புடவையை பற்றிக்கொண்டு வந்து விடாதா? என்று. குழந்தை அந்தப் புடவைத் தலைப்பை பற்றிக்கொண்டு கொஞ்சதூரம் மேலே வந்து, திரும்பவும் கீழே விழுந்து விடுகிறாள்.

இயந்திரங்களைக் கொண்டு வந்து பக்கத்தில் குகை அமைத்து தீயணைப்பு வீரர் கள், அங்கிருந்த மக்கள் அனைவரும் வந்து காப்பாற்றி விடலாம் என்று போராடுகிறார்கள். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுக்கொண்டே இருக் கிறது தோழர்களே. கொஞ்சம் கொஞ்சமாக அந்த அழுகைச் சத்தம் ஓய்கிறது. படிக்கிற நமக்கே மனம் பதறும்போது, அந்தத் தாயை எண்ணிப் பாருங்கள்! அதற்குப் பிறகு மிகுந்த சிரமப்பட்டு அந்தக் குழந்தையை மேலே கொண்டு வந்து சிகிச்சைக்குக் கொண்டு போனார்கள். மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறிவிட்டார்கள்.

இந்தக் கொடூரமான மரணம் படிக்கிற போதே நம்மை திகைக்கச் செய்கிறதே.
அந்தத் தாய் தகப்பனை நினைக்கிறேன்.மரணம் நொடிப்பொழுதில் உயிரைப்
பறிக்கிறபோது ஏற்படுகிற வேதனை, இப்படிப்பட்ட கொடுமையான மரணம்
ஏற்படுகிறபொழுது, வாழ்நாளெல்லாம் மரணம் தானே அந்தத் தாய்க்கு. என வே, இப்படிப்பட்ட ஆழ்குழாய்கள் அமைக்கின்றபோது, அதை தக்க விதத் தில்
பலகைகளைப் போட்டு மூட வேண்டும் என்று எச்சரிக்கைகள் செய்யப்பட லாம். ஆனால், அந்தக் கொடுமையான மரணம் நிகழ்ந்ததை நினைக்கிறபோதே மனம் துன்பத்தில் பரிதவிக்கிறதே. இப்பொழுது தமிழக மக்களிடத்தில் முன்
வைக்கிறேன். சின்னஞ்சிறுமி தனலட்சுமி ஆழ்துளை குழாயில் விழுந்து துடி துடித்து இறந்து போகிறாள்.அந்த தாய் தகப்பன் கண்ணீரைத் துடைக்க முடியாது.

இதேபோல் ஒரு குழந்தை. அந்தக் குழந்தைக்கும் வயது ஏழு தான். பள்ளி விடு முறை என்பதால் தன்னந்தனியாக வீட்டில் இருக்கிறாள். உலையிலே அரிசி
போடுவதற்காக, பெற்ற பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக அவளின் தாய்
வேலைக்குச் செல்கிறார். திருப்பூரில் டெய்லர் வேலை முடித்து திரும்பி வீட் டிற்கு வந்த தாய், அவளது ஏழு வயது மகள் கிழித்துப்போட்ட நார் போல் சின் னா பின்னப்படுத்தப்பட்டுக் கிடக்கிறாள். குழியில் நேர்ந்த மரணத்தைவிட, மிகக் கொடூரமான துன்பம். 

இந்தக் குழந்தை இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மதுவின் கொடூர விளைவாக மிருகமாகி விட்ட வர்கள், மனித உணர்வுகளை இழந்துவிட்டவர்கள் பட்டப் பகல் ஒன்றரை மணிக்கு குடித்துவிட்டு வந்த மூன்று பேர் அந்தக் குடிசைக்குள் சென்று அந்த சின்னஞ்சிறு குழந்தையை நாசமாக்கி இருக்கிறார்களே! இந்த மதுக்கடை களை மூடுவதை விட வேறு என்ன வேலை என்று கேட்பதற்கு இத்தகைய
காரணங்கள் போதாதா? குமாரபாளையம், பள்ளிபாளையம் என்று வழிநெடுக இலட்சக்கணக்கான தாய்மார்கள், பெண்கள், அழுது கதறும் சகோதரிகளைக் கண்டேன்.


ஒரு நாள் போவதற்குள்...

அண்ணன் திருப்பூர் துரைசாமி அவர்கள் குறிப்பிட்டதைப்போல, கழுத்திலே
போட்டிருக்கக்கூடிய மஞ்சள் கயிறு, கசங்கிய சேலையுடன், காலுக்கு செருப் பில்லாத அந்த ஏழைச் சகோதரி அனல் பாயும் நெருப்பு வெயிலில் என் கை களைப் பற்றிக்கொண்டு, இந்தக் கடைகளை மூடச் செய்யுங்கள். நாங்கள் வாழ முடியாது. நாங்கள் நிம்மதியாக இருக்க முடியாது. எங்கள் குடும்பத்தில் ஒரு நாள் கூட நிம்மதியில்லை. ஒரு தாய் என் கைளைப் பற்றிக்கொண்டு சொன் னார், ஒரு நாள் போவதற்குள் ஒரு வருடமாக இருக்கிறதய்யா எங்களுக்கு
என்று.

புலமைப்பித்தன் சிறந்த கவிஞர். சந்த நடைகளுடைய அவருடைய வார்த்தை
களிலே நான் பிரமித்துப்போய் இருக்கிறேன். அந்தக் கவிதை வரிகளை எழுது வது மட்டுமல்ல, அதை உச்சரிக்கின்ற தொனியில் கவிதை வரிகள் உள்ளி ருந்து வருகிறபோதுதான், கவிதை வரிகள் உயிரோட்டமாக இருக்கும். உயி ரோட்டமாக, சத்திய வேள்வியாகத் தருகின்ற இரத்தத்தின் அடித்தளத்திலிருந் து பீறிட்டு வரக்கூடிய கவிதையைத் தரக்கூடியவர் தான். எழுதப்படிக்கத் தெரி யாத ஏழைத் தாய் ஒரு வரியில் சொல்லிவிட்டாள். ஒரு நாள் போவது ஒரு வருடமாக இருக்கிறதய்யா இந்த சாராயத்தால் என்று.

ஒவ்வொரு நாளும் எங்களுக்குத் துன்பம், ஒவ்வொரு நாளும் எங்களுக்கு
வேதனை என்று புலம்புகிறார்களே, அதைப்போலத்தான் இந்தப் பள்ளி பாளை யத்துக்குள் நுழைகிறபோது ஐம்பதுக்கும் மேற்பட்ட சகோதரிகள் என்னிடத் தில் வந்து முறையிடுகிற போது சொன்னது, ஐயா, எங்கள் பெண் பிள்ளை களை, மூன்று, நான்கு வயது சின்னஞ்சிறுசுகளைக்கூட இனிமேல் பாதுகாப் பது கஷ்டமாக இருக்கிறதய்யா என்று. அவர்கள் ஐம்பது பேரல்ல, இந்த நாட் டில் இருக்கக்கூடிய கோடிக்கணக் கான தாய்மார்களின் குரல்தான் இவர்களின் குரல்.

பருவமடைந்த பெண் இரவு வேளைகளில் அணிகலன்கள் அணிந்து கொண்டு பத்திரமாக வீடு திரும்புகிற நாள் தான் உண்மையான சுதந்திரம் என்று மகாத் மா காந்தி பேசியதாக பல மேடைகளில் தெரிவிப்பார்களே. பருவ மங்கை களை பத்திரமாக போய் விட்டுத் திரும்ப வேண்டும் என்று சொன்ன காலம் வேறு. இன்றைக்கு என் சகோதரிகள் கேட்கிறார்கள், மூன்று, நான்கு, ஐந்து வயது பெண் குழந்தைகளை இனிமேல் நாங்கள் வீட்டில் பத்திரமாக பார்க்க முடியாதே என்று. டெல்லியிலே நடைபெற்ற சம்பவங்களை இங்கே குறிப் பிட்டார்கள்.

மனித நேயம் அற்றுப் போனதா?

ஒரு மாதத்துக்குள் தமிழகத்தில் எத்தனை சம்பவங்கள்? காங்கேயத்தில் ஒரு சின்னஞ்சிறிய சிறுமியை நாசமாக்கி விட்டான், ஒரு வயது முதிர்ந்த குடி காரன். இந்தக் கொடுமைகளில் இருந்து மீட்கப்பட வேண்டாமா? இந்தக்கொடு மைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டாமா? மனித நேயமே அற்றுப்போய்விட்டதா?

மனித நேயத்தைப் பற்றி பேசி நான் மேடைக்கு வந்தவன். என் கிராமத்துக்கு
அண்ணல் காந்தியாரின் பெயரன் பூமிதான இயக்கத்துக்காக வருகிறார் என்று, அண்மையில் 102 வயதில் மறைந்து போனாரே சர்வோதயத் தலைவர் ஜெகன் நாதன். ஒடுக்கப்பட்ட தலித்துகளுக்காக இங்கும் நிலங்களை வாங்கிக் கொடுத் து, பீகாரிலும் புரட்சி நடத்தி நிலங்களைப் பெற்றுத் தந்து விளம்பரம் இல்லாம லேயே வாழ்ந்தாரே. அவரது துணைவியார் கிருஷ்ணம்மாள் உடல்நலக் குறை வினால் வாழ்த்து வதற்கு வர முடியவில்லை. காந்தி கிராமத்தில், அவரது வீட் டில் மார்ட்டீன் லூதர் கிங் மனைவியோடு வந்து ஒன்பது நாள் தங்கியிருந்தார். அந்த ஜெகன்நாதன், மகாத்மா காந்தியின் பெயரன் கிருஷ்ணதாஸ் காந்தி யோ டு வருகிறார் என்று, என்னுடைய பள்ளி ஆசிரியர்கள், மூன்றாம் வகுப்பு ஆசி ரியர் சட்டமுத்தன், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாணிக்க வாசகமும் மகாத் மா வின் பெயரன் நம் ஊருக்கு வருகிறார். 

நம் சுத்துப் பட்டியில் உள்ள அத்தனை கிராமத்திலிருந்தும் பல்லாயிரக் கணக் கான மக்கள் நம் கிராமத்துக்குத்தான் வரப்போகிறார்கள். இரவில் காந்தி பெய ரன் நம் ஊரில்தான் தங்குகிறார். ஊர் மந்தையில் தான் கூட்டம். இந்தக் கூட்டத் தில் நீ பேசவேண்டும் என்று சொல்லி, என்னை பேச்சுக்கு தயார் செய்து,எழுதிக்
கொடுத்து அதை மனனம் செய்ய வைத்து, கூட்டத்தைக் கண்டு கவலைப் படா தே! அஞ்சாதே! இவ்வளவு பெரிய கூட்டத்தில் எப்படிப் பேசுவது என்று நினைக் காதே! துணிச்சலாகப் பேசு! குரலை உயர்த்திப் பேசு, கையை உயர்த்திப் பேசு என்று எனக்கு எட்டு வயதில் பயிற்சி கொடுத்தார்களே. அந்த முதல் பேச்சில் கடையேழு வள்ளல் களைப் பற்றித்தான் நான் பேசினேன்.மனிதநேயத்தைப் பற்றித்தான் நான் பேசினேன். என் வாழ்க்கையில் சின்னஞ் சிறு வயதில். அந்த மனிதநேயத்தை எண்ணி நான் வியந்திருக்கிறேன்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றாரே வடலூர் வள்ள லார். முல்லைக்குத் தேர்கொடுத்த பாரியை நினைத்து, குளிரில் நடுங்கிய மயி லுக்குப் போர்வை தந்த பேகனை நினைத்து, மடியிலே விழுந்த மணிப் புறா வைக் காப்பாற்றுவதற்காக இயற்கை எனக்கு பசியைப் போக்குவதற்காகக்
கொடுத்ததை நீ எப்படி அபகரிக்கலாம் என்று வல்லூறு கேட்டதற்காக, தன்
மேனியின் சதையை அறுத்துக் கொடுத்தான் சிபி என்று சொல்கிற இலக்கியத் தைப் படித்து, இந்த மனித நேயம் தழைத்தது எங்கள் தமிழகத்தில். 

அந்தத் தமிழ் நாட்டிலா இந்தக் கொடுமை? பண்பாடு அனைத்தும் அழிந்து நாச மாகிப்போய்விட வேண்டுமா? இந்தக் கேள்விகள் மனதில் இன்றைக்கு பூதாகர மாக எழுகின்றன. 

நான் சாதிகளைக் கடந்தவன். தந்தை பெரியார் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த் தாரே தவிர, ராஜாஜியை கடைசி வரை நண்பராக வைத்தி ருந் தார். வர்ணா சிரமக் கொள்கையை உடைப்பதற்குப் போராடினார். நான் ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு விளைகிற துன்பத்தைப் பற்றிக் கவலைப்படு கிறே ன். முப்பத்தாறு அக் ரகாரம் இருந்த ஊரில் இப்பொழுது ஏழு வீடுகள் தான் பாக்கி இருக்கிறது. அந்த வீட்டில் இருக்கிற கொடுமையை எண்ணி நான் கவலைப் பட்டேன். சுற் று லாத் துறையில் பணியாற்றிவிட்டு, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராக ஊதியம் பெறாமல் வாழ்ந்தார். மனைவி இறந்து விட்டார் என்பதனால், நீர்க்கடன் செய்ய வருகிறார்.அவருக்கு இரண்டு மகள்கள்.

மூத்த மகளுக்குத் திருமணமாகி, மகளும் மருமகனும் சிற்றுண்டிக் கடை வைத்து இருக்கிறார்கள். அவள் பெயர் ஜெயஸ்ரீ, இரண்டாவது மகள் பெயர் பத் மஸ்ரீ. காரியம் முடிந்து திருப்பதி செல்வதற்கு முன்பு மூத்த மகளைப் பார்க்கச்
செல்கிறார். பெயர்த்தி சாக்லெட் வாங்கித் தரச்சொல்லி கேட்கிறாள்.சாக்லெட் வாங்கித் தருகிறேன் என்று, பகல் 2 மணிக்கு தன் இளைய மகள் பத்மஸ்ரீயை அழைத்துக்கொண்டு இந்த இராமன் செல்கிறார். அந்த நேரத்தில் குடிபோதை யில் நான்கு பேர் மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள். அந்த நான்கு பேரும் அவர்களை வளைத்துக்கொள்கிறார்கள். பின்னர், அந்த இளம் பெண்ணை மிரட் டி கையைப் பற்ற முனைகிறார்கள். அவள் கூச்சல் எழுப்புகிறாள். ஏன் இந்த அநி யாயம் செய்கிறீர்கள் என்று. அருகில் இருப்பவன் இரும்புக் குழாயை எடுத் து மண்டையை உடைக்கிறான். இரத்தம் கொட்டி கீழே விழுகிறாள் அவரது
இளைய மகள் பத்மஸ்ரீ. இரத்தத்தில் கிடக்கிற அந்தப் பெண்ணின் தலை முடி யைப் பிடித்து ரோட்டில் இழுக்கிறான்.

மகாகவி பாரதி எழுதியது அதை இலக்கியமாக பார்ப்பவன் நான்.ஹோமரின் இலியட்டை இலக்கியமாகப் பார்ப்பவன். அப்படி இலக்கியமாகப் பார்ப்பதனால் தான், பாஞ்சாலி சபதத்திலே பாரதி எழுதுகிறபோது, அக்கிரமத்தை தடுக்க வேண் டும் என்று சொன்னார். நான் இராமாயணம், மகாபாரதத்தை உண்மைச் சம்பவங்கள் என்று பேசுவதில்லை. அர்ச்சுணனின் கண்ணுக்கு அம்பின் நுனி யும், குருவியின் கழுத்தும் தெரிந்தது என்று கடற்கரையில் 1964 இல் மலேசியா
போய்விட்டு வந்து அண்ணா பேச வில்லையா, தம்பிகளுக்கு.

நீண்ட கருங்குழலை பற்றி இழுத்து வருகிறான் துச்சாதனன்.

‘வீரமிலா நாய்கள் விலங்கா மிளவரசன் 
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே, 
பொன்னை யவ ளந்தப் புரத்தினிலே சேர்க்காமல், 
நெட்டை மரங்களென நின்று புலம்பி னார்’

என்றார் பாரதி.

இங்கே பட்டப்பகலில், மண்டை உடைந்து இரத்தத்தில் கிடக்கின்ற ஒரு பெண் ணை தலைமுடியைப் பிடித்து இழுக்கிறான். பெற்ற தகப்பன் கண் முன்னால், அவர் தடுக்க கூக்குரலிடு கிறார். தலையைப் பிளக்கிறான் அதே இரும்புக் குழா யில். மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் அவரும் விழுகிறார். அட்சயா என் கிற இந்த சின்னக்குழந்தை இந்தக் காட்சியைப் பார்த்ததற்குப் பிறகு, ஆபத்து வருகிற போது, பேச்சு வராது. ஆனால், அந்தக் குழந்தை வீட்டிற்குப் போய் பத றிப் பதறி துடிக்கிறது. இரத்தத்தில் இருப்பதை சொல்ல முடியாமல் சொல் கிறது.

விபரம் தெரிந்து அவர்கள் வருகிறார்கள்.மக்கள் கூடுகிறார்கள். மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்கிறார்கள், மாலையில் இராமன் இறந்துபோனார்.
இதுவும் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம்-வெங்கட்டபுரத்தில்தான் நடத்தி இருக்கி றது. இந்தச் சம்பவங்கள் நாள்தோறும் நடக்க வேண்டுமா? எங்கே போகிறோம் நாம்? என்ன பாதுகாப்பு இருக்கிறது. என்னுடைய தங்கைப் போன்ற, தாயைப் போன்று வயது முதிர்ந்தவர்கள் இந்த மதுக்கடையை மூடினால்தான் நிம்மதி யாக வாழ முடியும் என்று சொல்கிறார்கள். உன்னை நம்புகிறோம் என்கிறார் கள். நீ போராடு என்கிறார்கள். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கிறது. இவன் போராடுவான். இவன் சமரசம் செய்துகொள்ள மாட்டான் என்ற நம்பிக் கை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தொடரும்............

No comments:

Post a Comment