Monday, May 13, 2013

தங்களுக்காக நான் போராடுவேன் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்பட்டு இருக்கிறது! -பகுதி 3

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே

முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..

பகுதி 2 யின் தொடர்ச்சி ....

எங்கள் அறப்போராட்டத்தில் வெல்வோம்; நிரந்தரமாக
மதுக்கடைகள் அகற்றப்படும் காட்சிகளைத் தமிழகம் காணும்!


என்னுடைய தங்கையைப் போன்ற சகோதரிகள், தாயைப் போன்று வயது
முதிர்ந்தவர்கள் இந்த மதுக்கடையை மூடினால்தான் நிம்மதியாக வாழ முடி யும் என்று சொல்கிறார்கள். உன்னை நம்புகிறோம், நீ போராடு என்கிறார்கள்.
எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், நான் போராடுவேன் என்ற நம்பிக் கை மக்கள் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கிறது. இவன் போராடுவான்.இவன் சமர சம் செய்து கொள்ள மாட்டான் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக் கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தேன். மக்கள் திரண்டார்கள் இந்தத்
தாக்கம் இல்லை. அதைப்போல சாஞ்சிப் படையெடுப்புக்குப் பின்னர் நாங்கள்
போராட்டங்கள் நடத்தினோம். மூன்று மாநிலங்களைக் கடந்து கொடியவன்
ராஜபக்சேவை உள்ளே வரவிடாதே என்று விந்திய சாத்பூரா மலைகளுக்குப்
பக்கத்தில் நெருப்பைக் கக்குகின்ற வெயிலில் நானும், என் தோழர்களும் அமர்ந்து போர் நடத்திவிட்டு வந்தோமே! அதற்குப் பிறகு அலைகள் பாடுகின்ற உவரியில் புறப்பட்டு, நான்மாடக்கூடல் மதுரையில் நிறைவு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திய பூமிநாதனும், சின்ன செல்லமும் இங்கே இருக்கிறார்கள். அந்த மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் இங்கே இருக் கிறார்கள்.அங்கு பேசுகிறபோது ஒன்றைச் சொன்னேன்.

தீ எழுக என்றாள் கண்ணகி

இந்த மாமதுரையிலே தீ எழுக! என்றாள் ஒருத்தி. நெருப்பு மழையாகப் பொழி யட்டும் என்றால் ஒரு பெண். அரசனே அறிவுகெட்டுப்போய் விட்டாயே! என்று நேருக்கு நேராகக் கேட்டாள். எரிமலை வெடித்தது. குழந்தைகள், பெண்கள், மறையோர் அவர்கள் எல்லாம் விலகிச் செல்லட்டும், நெருப்பு அவர்களைப் பற்றாமல் இருக்கட்டும். எரியட்டும் மதுரை என்று பத்தினி தெய்வம் கண்ணகி
அன்றைக்குச் சொன்னதைப்போல, நிலைமை ஏற்படும் என்று பேசினேன். இவர் ஏன் கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசுகிறார் என்று சிலர் நினைத் தார்கள். புலிகளை ஆதரித்த காலத்தில் இருந்து, காலம் நாங்கள் எதைச் சொல்கிறோமோ அதை அங்கீகரித்துக்கொண்டே வருகிறது.

சகோதரர்களே! நான் பேசவில்லை, இன்று வருகிற வழியில் இந்த டாஸ்மாக்
கடைகளை தீ வைத்துக்கொளுத்த வேண்டும் என்று தாய்மார்கள் சொல் கிறார் கள். அவர்களாகவே சொல் கிறார்கள். மதுரையில் நான் பேசியது அவர் களுக் குத் தெரியாது. மக்கள் நெஞ்சில் கனல் எழுந்திருக்கிறது. இந்த மதுக்கடை களை மூட வேண்டும். தீ வைத்துக் கொளுத்த வேண்டும். போராட்டம் நடத் துங்கள், நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம் என்கிறார்கள்.

தோழர்களே! நாங்கள் போராட்டம் எதுவும் நடத்தவில்லை. போராட்டத்துக்
காக ஆயத்தப்படுத்திக்கொள்கிறோம். கிளர்ச்சிக்காக ஆயத்தப்படுத்திக் கொண் டு இருக்கிறோம். மக்களைத் தயார் படுத்திக்கொண்டிருக்கிறான் வைகோ. முல்லைப் பெரியாறுக்கு தயாரித்ததைப்போல,ஸ்டெர்லைட்டுக்கு தயாரித் ததைப் போல, ஈழத்துக்கு தயாரித்ததைப் போல. இன்று ஒரு நாட்டின் இளைய
தலைமுறை புலிக்கொடி ஏந்தி நிற்கிறது. விடுதலைப்புலிகளை ஆதரித்த வண் ணம் இருக்கிறது. பிரபாகரன் வாழ்க என்று சொல்கிறது. இதற்கு எத்தனை
ஆண்டுகள் உழைத்திருப்பேன். அடிவயிறு வலிக்கப் பேசியிருப்பேன்.எத்தனை ஆண்டுகள் அவர்களை நேசித்திருப்பேன். இன்றைக்கு மக்களிடத்தில் இந்த எண்ணங்களை விதைத்துக் கொண்டிருக்கிறோம்.

இரண்டாவது கட்டம் மறைமலை நகரில், பாலவாக்கம் சோமுவும், சத்யாவும்
நிறைவாக நடத்திக் கொடுத்தார்கள். காஞ்சி மாவட்டத்தினுடைய நிறைவு
நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் மேடைக்குச் செல்வதற்கு முன்பு மாவீர
மகன் பாலச்சந்திரனுடைய அந்த கொடூரமான மரணத்தைச் சுட்டிக்காட்டி,வாச கங்கள் பொறிக்கப்பட்ட பதாகை களை வைத்து, ஐந்து வயது முதல் 13 வரை உள்ள ஆயிரம் சிறுவர் சிறுமிகளை அழைத்துக்கொண்டுவந்து பாலச்சந் திரனு டைய அந்த ஒளிசிந்தும் கண்கள் தாங்கி நிற்கின்ற அந்த முகப் படங்களை அந் தக் குழந்தைகளுடைய முகங்களில் பொருத்தி அமர வைத்து நாங்கள் அந்த நிகழ்ச்சியை நடத்தி னோம். ஆயிரக்கணக்கான குழந்தை களின் முகத்திலே அந்தப் படங்கள் இருந்ததே அந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில். அந்த மேடையில் நான் மனம் உடைந்து பேசியிருக்கிறேன்.இந்த இரண்டு கண்கள் மிகப்பெரிய
யுகப்புரட்சியை ஏற்படுத்திவிட்டன.

உடைந்த நிலாவைத் தவிர...

நான் எங்கு சென்றாலும் தீபச்செல்வனுடைய கவிதையைப் பேசுவதற்குக்
காரணம், தீபச் செல்வன் யாழ்ப்பாணத்துப் பல்கலைக் கழக கூட்டமைப் பினு டைய பொதுச்செயலாளராக இருந்தவன். சிங்கள வெறியர்கள் தமிழினத்தை அழித்துக்கொண்டிருந்த காலத்தில் உறுதியாக நின்றவன். அவன் தான் இந்தப் பாடலை எழுதினான். ஒரு பாலகனாகப் பிறந்ததைத் தவிர அவன் வேறு எது வும் செய்திருக்கவில்லை. அவன் அணிந்திருந்த கால்சட்டையும், மூடியிருந்த போர்வையும் தவிர வேறொன்றும் இல்லை. இனி அந்த பாலகனின் கண்களை வேறு எங்கே பார்க்கப் போகிறோம். இந்த மண்ணில் இவர்கள் பிள்ளைகளாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தப் பாவமும் செய்ய வில்லை. குற்றங்கள் நிறைந் த வானத்தில் எந்தப் பறவையும் இல்லை.பதுங்குக் குழியில் பிறந்த குழந்தை
பதுங்குக் குழியில் கொல்லப்படுகையில் எஞ்சியது எதுவும் இல்லை. இரும்புத்
துப்பாக்கிகள் நெஞ்சில் பதிகிறபோது, உடைந்த நிலாவைத் தவிர எந்த சாட்சி யமும் இல்லை. எத்தனை பாலச் சந்திரன்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கேள் வி யை அங்கு எழுப்பினோம்.

இன்றைக்கு சின்னஞ்சிறுவர்களும், சிறுமிகளும் ஈரோட்டில், கருங்கல் பாளை யத்தில், மதுவின் கொடுமையில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற காரணத்தினால் உண்ணாநிலை அறப்போர் இருந்தார்கள். அந்தக் குழந்தை களின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். என்னைப் பற்றிக் கொண்ட பிஞ்சுக் கரங்கள், சின்னஞ்சிறு மலர்களின் மொட்டுகளைப் போன்ற கரங்கள், இலட்சக்கணக்கான கரங்கள் எவ்வளவு பெருமை யாக இருக்கிறது. அந்த சின்னஞ்சிறு பிள்ளைகள் ஓட்டுப்போட வரப்போவது இல்லை. ஆனால், எவ்வளவு நேசத்தோடு ஓடிவந்து என் கரங்களைப் பற்றிக்கொள்கின்றன. வாழ்க் கையில் இதைவிட என்ன பாக்கியம் வேண்டும். எனக்கு எத்தனை பேரன் பேத்திகள் எவ்வளவு சந்தோஷம். என் வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச் சி.உடலை வருத்திக்கொண்டு எப்படி நடக்கிறீர்கள் என்று டாக்டர் மாசிலா மணி கேட்டார். இந்த சின்னஞ்சிறு பிஞ்சுகள் ஓடிவந்து என் கைகளைப் பற்றிக் கொள்கிறதே.ஓராயிரம் டாக்டர்கள் எனக்கு டானிக் கொடுப்பதைப் போல நான் நடக்கிறேன்.

குழந்தைகளின் எதிர்காலம்

சின்னக்குழந்தைகளை என் மூன்று பயணங்களிலும் பார்க்கிறேன். தொலை வில் இருந்து பார்த்து நான் கைகூப்பி வணங்குவதற்குள்ளாக அவர்கள்கைகூப் பி வணங்குகிறார்கள்.தோளில் தூக்கி வைத்திருக்கிற தாய் சொல்லிக் கொடுத் து ஒருவேளை வணங்கலாம். முதலில் கையை அசைத்துக்கொண்டிருக்கிற பொழுதே நான் கையைத் தூக்கி வணங்குகிற அந்த நொடிப்பொழுதுக்குள் தாய்
சொல்ல நேரம் கிடையாது. தாய் ஒருவேளை சொல்லியிருக்கலாம், கருப்புத் துண்டுக்காரர் நமக்கு நல்லது செய்ய வந்திருக்கிறார், நீ கையைக் காட்டு என்று. கையை அசைக்கிற அந்தக் குழந்தை, நான் கையை எடுத்து வணங்கு கின்ற அந்த நொடிப்பொழுதில் அதுவும் கைகூப்புவதைப் பார்த்து திகைத்து, திக் பிரமை அடைந்து இருக்கிறேன். இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற் றிக் கவலைப்படுகிறேன். இந்தக் குழந்தைகள் வளருகிற காலத்தில் தமிழ கத் தில் ஆபத்துகள் நீங்க வேண்டாமா?

இங்கே பல சமயங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். நான் வழிநெடு கிலும் தேவாலாயத்தைக் கண்டேன்,இஸ்லாமிய மக்களினுடை பாங்கு ஒலி யை என் காதில் கேட்டேன். இந்து கோயில்களைப் பார்த்தேன். அங்கு எழு கின்ற ஆலய மணியின் ஓசை என் செவிகளில் நுழைகிறது. நான் கேட்கிறேன். எந்த மதத்தில் மதுவை அனுமதிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.எந்த சமயம் மதுவை ஏற்றுக்கொண்டு இருக்கிறது? நீ குடித்தால் உன் தாயே உன்னை ஏற் றுக் கொள்ள மாட்டாள் என்று அறநூலான திருக்குறள் கூறுகிறது. கள் உண் ணா மை என்றாரே. மதுவை விட்டுவிடு என்றாரே. சிலப்பதிகாரத்தின் நிறை வுப் பகுதியில், எதை எதை செய்யக்கூடாது என்று பிரகடனம் செய்த இளங் கோ, மது குடிக்காதே என்று கூறியிருக்கிறாரே. சாராய பீப்பாய்களை எல்லாம் உடைத்தெறியுங்கள் என் சகாபாக்களே, அது மதீனாவின் தெருக்களில் வெள்ள மாகப் பெருக்கெடுத்து ஓடட்டும் என்று கூறினாரே ஸல்அல்லாகு அலைக்கும் வஸல்லாம் நபிகள் நாயகம். தேவாலயத்திற்குப் போகிற தோழர்களே,விவிலி யத்தில் நீதி மொழிகளைப் புரட்டுங்கள். பளபளப்பாக சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அந்த மது விரியன் பாம்பைப்போல கடிக்கும். நீ சொரணையற் றவ னாக இருப்பாய். உன் முகத்தில் அறைந்தால் உன்னை அடித்தால் தெரியாது. ஆனால் நடுக்கடலில் பாய்மரக் கப்பலில் படுத்திருப்பதைப் போல நீ நினைப் பாய்.

செல்வந்தராகப் பிறந்து...பரதேசியாய் வாழ்ந்து...

மதுவின் தீமைகள் குறித்து சமயங்கள் எல்லாம் கூறுகிறதே! நாட்டின் மாபெ ரும் தலைவர் அண்ணல் காந்தியார் கூறியதைப் பலர் இங்கே கூறி விட்டார் கள். நெருப்பு வெள்ளத்தைப்போல கொடுமை, தாயே உன் பிள்ளையை அதில் நிற்க வைத்து விடாதே! மது அதைவிடக் கொடிது என்றார். சொந்தத் தென்னை மரங்களை வெட்டிப்போட்ட பெரியார் மதுவை எதிர்த்துப்போராடியதை இங்கே நினைவூட்டுகிறேன். பக்கத்தில் இருக்கக்கூடிய திருச்செங்கோடு இராஜாஜி யின் ஆசிரமத்தில் உள்ள பேரேடைப் பாருங்கள் முதல் கையெழுத்து முதல் நன்கொடை 100 ரூபாய் ஈ.வே.இராமசாமி நாயக்கர். நூறு ரூபாய் பெரியார் கொடுத்திருக்கிறார்.உலகத்திலே பெரிய அதிசயம். ஆனால் அவர் பணத்தை தனக்காக சேர்க்க வில்லை. மக்களுக்காக வாழ்ந்தார்.செல்வந்தராகப் பிறந்து, பரதேசியைப் போல வாழ்ந்தார்.

மக்கள் நேசிக்கின்ற தலைவர்தானே பெருந்தலைவர் காமராஜர். அவர் நாட்டுக் காக உழைத்தவர்தானே.அவருடைய ஆட்சியில் மது இல்லையே? இது ஏப்ரல் 28 ஆம் தேதி.வரப்போகிறது மே 1. உலகெங்கும் தொழிலாளர்கள் தங்கள் புரட்சிக் கொடியை உயர்த்திய நாள். அந்த மே தினத்தைப் பற்றி MOSKO MOB
PARADE  என்று பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி னார் அறிஞர் அண்ணா.காரல் மார்க்சினுடைய மூலதனத்தை எழுதினாரே ஆங்கிலத்தில். அவர் பொருளாதார மேதை அல்லவா. அவர் ஆட்சியில் மது வைக் கொண்டுவந்தாரா? அனுமதித்தாரா? வருமானத் தேவை என்று நினைத் தாரா? இன்றைக்கு தமிழகம் பாழ்பட்டுப்போயிருக்கிறது.இந்த ஈரோடு நகரத் தில் மட்டும் 78 கடைகள். ஒரு நாளைக்கு எழுபது இலட்சத்துக்கு விற்பனை. மக்கள் பணம் வீண் போகிறது. ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 255 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஈரோட்டில் மட்டும் இந்த மக்கள் செலவழிக்கிறார்கள்.

உடலை அழித்து, உள்ளத்தை அழித்து,ஒழுக்கத்தைக் கெடுத்து ஒவ்வொரு
குடும்பத்துக்கும் துன்பத்தைக் கொடுத்து இவ்வளவு பணத்தைப் பறிக்கிறது அரசு. 23 ஆயிரம் கோடி கணக்கு என்று அரசு டார்கெட் நிர்ணயித்து உள்ளது. அடுத்த வருடத்துக்கு 25 ஆயிரம் கோடி. மக்கள் செலவழிப்பது 47 ஆயிரம் கோடி. இதில் யார் யாருக்குப் பணம் கிடைக்கிறது? ஆண்ட கட்சி, ஆளும் கட்சி மதுபானக் கடைகளின் பின்னால் இருப்பவர்கள் யார்? தி.மு.க.- அண்ணா தி.மு.க. நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாதவர்கள். இந்த மது அழிக்கும் என்பதனால் சொல்கிறோம். சமுதாயத்தை அழிக்கும் வருமானம் எதற்கு. இந்தக் கடைகள் மூடப்பட்டாக வேண்டும். கடைகளை மூட வைக்காமல் நாங்கள் ஓய மாட்டோம். மூட வைக்க முடியும் என்ற எண்ணம் மக்களிடம் வந்திருக்கிறது.

திரைபோட்டு...திருட்டுத்தனமாய்.....

வழக்கறிஞர் பாலு போட்ட வழக்கில் ஆறுமாதகால அவகாசம் கேட்டதே உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு.தேசிய நெடுஞ்சாலைகளில், மாநில நெடுஞ்சா லை களில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகள் அகற்றப்படவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டது. அதற்கு ஆறு மாதகாலம் அவகாசம் வேண் டும் என்று அரசு கேட்டபோது, அதற்கு வாய்ப்பே இல்லை. மார்ச் 31 ஆம் தேதிக்குள்ளாக கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னதே. கடைகளை அகற்றி விட்டதா தமிழ்நாடு அரசு?

2011 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி மத்திய அரசு சுற்றறிக்கையில் இருக் கிறது அதிகமான விபத்துகளுக்கு காரணம் மது. சாலை ஓரத்தில் இருக்கக் கூடிய மதுக்கடைகளில் உள்ள மதுவை அருந்திவிட்டு ஓட்டுவதனால்,அதிக விபத்துகள் உயிரிழப்புகள் என்று தகவல் சொல்கிறது. ஒரு வருடத்தில் மட் டும், விபத்துகளில் தமிழ்நாட்டில் மட்டும் 15, 875 பேர் இறந்து இருக்கிறார்கள். 98 சதவீதம் மது போதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்கள். இதைக் காரணம் காட்டி, ஆறு மாத காலம் தவணைகொடுக்க முடியாது. கடைகளை மூட வேண் டும் என்றதற்குப் பிறகு, திருட்டுத்தனமாக திரைபோட்டுக்கொண்டுபோய் பின்
பக்கமாக கடைகளை நடத்துகிறீர்களே.மக்கள் கிளர்ந்துவிட்டார்கள். கடையை
அகற்றச் சொல்லி போராடுகிறார்கள். ஊருக்குள்ளே கொண்டுவந்து வைப்ப தற்கு தாய்மார்கள் அனுமதிக்க வில்லை. இனி நடத்தமுடியாது.

இந்த மேடையில் ஆர்.டி.எம்.என்னிடத்தில் ஒரு பிரதியைக்கொடுத்தார். பல்ல டம் நகரத்தின் ஒரு பகுதியில் கடையை அகற்றுகிறீர்களா? இல்லையா? என்று மக்களைத் திரட்டி போராட்டம் நடத்திய தனாலே அந்தக் கடை அகற்றப்பட்டு விட்டது என்ற செய்தியை என்னிடத்தில் கொடுத்தார். இதுபோல் ஒரு மாத காலத்துக்குள் அகற்றாவிட்டால், எல்லா மக்களையும் திரட்டி, ஆங்காங்கு தாய் மார்களைத் திரட்டி கட்சிகளைக் கடந்து, இந்தக் கடைகளை அகற்று கிறா யா? இல்லையா? என்ற போர்க் களத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகம் ஈடுபடும். நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை மட்டும் மூடினால் போது மா? எங்கள் கோரிக்கை அதுவல்ல, நிரந்தரமாக மூட வேண்டும். மது வின் கொடுமையில் இருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும்.

ஆபத்துகள் நம்மைச் சுற்றி வளைத்திருப் பதைப் பற்றி அரச்சலூரிலும்,சென்னி
மலையிலும் நான் எச்சரித்தேன். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நடத் தப்பட்ட ஒரு ஆய்வு, இன்னும் எட்டு முதல் பத்து வருடங்களுக்குள் ஆயிரம் வருடத்தில் ஏற்படாத ஒரு கடுமையான வறட்சியும், பஞ்சமும் உலகத்தின் பல பகுதிகளை அழிக்கப் போகிறது என்று குறிப்பிட்டிருக்கிறது.அதில் ஆசியா கண்டத்தில், இந்தியா வினுடைய பல பகுதிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார் கள். அதில் வெகுவாகப் பாதிக்கப்படப் போவது நாம்தான். 

எட்டு முதல் பத்து வருடத்திற்குள் உலகத்திலேயே பெரும் வறட்சி வரும் என் கின்றனர். இதற்குக் காரணம் புவியில் வெப்பநிலை மாற்றம்.ஓசோன் மண்ட லத்தை நாசப்படுத்தியது. இயற்கையை அழித்தது உள்ளிட்ட பல்வேறு கார ணங் கள். அதிலும் தமிழகத்திற்கு ஏற்பட்ட கொடுமைதான் தாங்க முடிய வில் லை. ஏரி, குளங்கள், வாவிகள், நீர்த் தேக்கங்களை நம் முன்னோர் அமைத்த னர். கரிகாலன் பெயரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழகம் பாராட்டு கிறது என்றால், சிங்களவனைக்கொண்டுவந்து அணை கட்டினான்
என்று பெருமையோடு சொல்கிறோம்.ஜெர்மனிய பொறியாளர்கள் வந்து
வியந்தனர். எப்படி இப்படி ஒரு கல்லணையைக் கட்டினான் என்று.மன்னர்கள் ஆட்சியில் மக்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். அதனால்தான், ஏரி, குளங் கள் உள்ளிட்ட நீர்த் தேக்கங்களை அமைத்தார்கள். நதிப் படுகைகளைப் பாது காத்தார்கள்.
பெரியார் சொன்ன தீர்வு

இன்னொரு பக்கத்தில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் நம்மை வஞ்சிக்கின்றன. அவர்களுக்கு துணையாய் மத்திய அரசு நமக்குத் துரோகம் செய்கிறது. அந்த ஆபத்தைத் தடுப்பது என்பது அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய பிரச் சினை. அதற்கும் தீர்வு இருக்கிறது. எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கிறது. பிரச்சினையை மட்டும் சொல்லிவிட்டுப் போகிறவன் அல்ல வைகோ. தீர்வை யும் சொல்லித்தான் வாழ்க்கையில் பழகியிருக்கிறேன்.அண்டை மாநிலங்கள் வஞ்சகத்துக்கு என்ன தீர்வு? பெரியார் கடைசியாக தியாகராயர் நகரில் சொன் னது தான் தீர்வென்றால், அந்த முடிவை ஏற்றுக் கொண்டுதான் தீர வேண்டும். அவர் கொஞ்சம் கடுமையாகச் சொல்கிறார்.

நான் அப்படிச் சொல்லவில்லை. கருத்து ஒன்றாகத்தான் இருக்கும். அறம்பாடு
கின்ற கவிஞர் வேண்டும், பாவேந்தனைப் போல்,பெருஞ்சித்திரனாரைப் போல் ,  உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனைப்போல அண்ணன் புலமைப் பித்தன் அவர்கள் நெடுநாள் வாழ வேண்டும். அவர் நூறு வயது வாழ்ந்து, நூற்றாண்டு விழாவை நடத்தி அதில் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்று நினைக்கிறவன். ஒரு சாலையின் மாணாக்கர் அல்லவா நீங்கள் இருவரும்.

நான் காளிங்கராயன் கால்வாயைப் பார்க்கிறேன். சாக்கடை மண்டிக் கிடக் கிறது. அவன் பாண்டிய நாட்டில் தளகர்த்தனாக இருந்து, மந்திரியாக இருந்து, வாளேந்திப் போர் புரிந்து காளிங்கராயன் தன் பெயராலே கால்வாய் அமைத் தானே அது எப்படி கிடக்கிறது பாருங்கள். பொன்னி பாய்ந்து ஓடியிருக்கிறது. அந்தப் பொன்னி நதியில் மணலே கிடையாது. பாறை திட்டுகளுக்கு மத்தியில் இருக்கும் காவிரி நதியைப் பாருங்கள், தண்ணீர் இல்லை என்பதைவிடக் கொடுமை மணல் படுகையே இல்லை. இந்த மணல் படுகையைக் கொள்ளை
யடித்தவர்கள் யாராக இருந்தாலும் இந்த தமிழ்ச் சமுதாயத்தினுடைய முதல்
குற்றவாளிகள்-பகைவர்கள்-துரோகிகள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

                                                                                                                                 தொடரும் .....

No comments:

Post a Comment