இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத் தைத் தடை செய்திருப்பதால் மற்ற உலக நாடுகளும் தடை செய்துள்ளன. இலங்கைத் தமிழர்கள் ஆறுதலும்,உதவி யும் பெற இந்தியாவிற்கும் வர முடியாதநிலை உள்ளது.இதையும் கடந்து
இந்தியாவிற்குள் வருகின்றவர்கள் விடு தலைப்புலிகள் என்று சொல்லி சிறை முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ள னர். தமிழர்கள் கண்ணீரில் மிதக்கிறார் கள்.
எனவே, நீதியின் கதவைத் தட்டுவதற்காக இந்தத் தீர்ப்பாயத்தின் முன்பாக உள்ளேன்.
தீர்ப்பாயம் முன்பு வைகோ வாதம்
முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே.
மாண்புமிகு நீதிபதி அவர்களே!
திரு. பிரபாகரன் அவர்கள் உரையாற்றுகின்ற மேடையில் அமைக்கப்பட்டுள்ள வரைபடத்தை ஒருகணம் பாருங்கள். தமிழ் ஈழத்தின் எல்லைகளைக் குறிக் கின்ற இப்படத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள்தான் தமிழ் ஈழமா கக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?
20.10.2010 அன்று ஊட்டியில் நடைபெற்ற விசாரணையின்போது உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் பி.கே. மிஸ்ரா அவர்களைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தபோது, அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொண்டார். மேலும், அவ்வாறு தடை செய்யப்பட்ட அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில்தான் நாடு கடந்த தமி ழீழ அரசின் தொடக்க விழா நடைபெற்றது என்பதையும் ஒப்புக் கொண்டார்.
மாண்புமிகு நீதிபதிஅவர்களே!
நான் தாக்கல் செய்துள்ள சான்றாவணங்களின் தொகுப்பு - 1, பக்கம் 67-இல் தங் கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். நாடு கடந்த தமிழீழ அரசின் வரை படம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதி களை உள்ளடக்கியதாக தமிழ் ஈழம் அமைந்துள்ளது.
மாண்புமிகு நீதிபதி அவர்களே!
நார்வே நாட்டு அரசு இலங்கையில் அமைதி ஏற்படுத்த இலங்கை அரசுக்கும்
விடுதலைப்புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியது. விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்தது. விடுதலைப் புலிகள் இந்தியாவின் ஒரு பகுதியான தமிழ்நாட்டை தமிழீழத் தோடு இணைத் துக் கொள்கின்ற ஆவணங்களைக் கண்ணுற்று இருப்பார்களேயானால் அமை திப் பேச்சு வார்த்தையை அந்தக் கணமே கைவிட்டு இருப்பார்கள்.நார்வே அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்யவில்லை. இந்திய அரசின் பொய்ப் பிரச்சாரத்தை முடக்க இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
கனம் பொருந்திய நீதிபதி அவர்களே!
25.10.2010 அன்று இந்தத் தீர்ப்பாயத்தின் முன் தாக்கல் செய்த 3-ஆவது உறுதி மொழி ஆவணத்தில் (Affidavit) 10.10.2008 அன்று ஆஸ்லோவில் நடைபெற்ற ‘தெற்கு ஆசியாவில் அமைதியும் சமாதானமும்’ என்ற தலைப்பில் நடை பெற் ற பன்னாட்டுக் கருத்தரங்கில் நான் ஆற்றிய உரையைக் குறிப்பிட்டுள்ளேன். அப்பன்னாட்டுக் கருத்தரங்கில் நோபல் பரிசு பெற்றவர்களும், ஐரோப்பிய நாடு களில் இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
அதே தொகுப்பில் 19.10.1998 அன்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்பு நான் சமர்ப்பித்த மனுவையும் குறிப்பிட்டுள்ளேன்.அதில் இலங்கையில் சிங் கள அரசால் நடத்தப்படுகின்ற இனப் படுகொலை பற்றியும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் தெரிவித்துள்ளேன்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து பிறப்பிக்கப்பட்டுள்ள இந்திய அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது காரணம், இலங்கையில் நிலவுகின்ற கொந்தளிப்பான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, விடுத லைப்புலிகளின் ஆதரவாளர்கள் அந்த இயக்கத்திற்கும், அவர்களின் நோக்கத் திற்கும் ஆதரவு திரட்ட தடையை மீறி ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருவது தமிழகத்தில் ஓர் அமைதியற்ற நிலையை உருவாக்கவும், பாதுகாப் புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற வகையிலும் அமைந்துள்ளது என்பது ஆகும்.
மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வஞ்சிக்கப்படுகின்ற - ஒடுக்கப்படுகின்ற நிலை உலகில் வேறு எந்தப் பகுதிகளில் ஏற்பட்டாலும் உலகந்தழுவிய கண் டனக் குரல் எழும். மனித உரிமை மீறுகின்றவர்கள் பல்முனை தாக்குதலுக்கு ஆளாவார்கள். பாலஸ்தீனத்திலும், கொசாவாவிலும் அதுதான் நிகழ்ந்தது.
மனிதாபிமான அடிப்படையில் இனப் படுகொலை எங்கு நடந்தாலும் இனம், ஜாதி, நாடுகள் எல்லையைத் தாண்டி சுதந்திரத்தை விரும்புகின்ற மக்கள் தங் கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொப்புள் கொடி உறவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள், தமிழ் இனத்தைக்
கொன்று குவிக்கின்றவர்களின்மீது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிப் படுத்துவது இயற்கை தானே!
அப்படிப்பட்ட உணர்வை வெளிப்படுத்துவது குற்றம் இல்லை. அதுதான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.
‘பொடா’ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர்ச்சிறையில் 19 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்ட போது என் பெயரில் நானே உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். பின்னர் பிரபல மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்கள் அந்த வழக்கில் என் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மாண்புமிகு நீதிபதி அவர்களே!
2004 (9) உச்ச நீதிமன்ற வழக்குகள் தீர்ப்பின் பக்கம் 580-இல் பத்தி 74-இல் என்னு டைய ரிட் மனுவிலே எழுப்பிய முக்கிய வினா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அத்தீர்ப்பில் இந்த வழக்கில், பல முக்கியமான வினாக்கள் எழுப்பப்பட் டிருந்தபோதிலும் இரண்டு வினாக்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப் பட் டுள்ளது.
(i) பயங்கரவாத தடைச்சட்டம் 2002, பிரிவு 21 (1) மற்றும் (3) அரசியல் சட்டப் பிரிவு 19 (1) (a) மற்றும் 19(1) (c) பிரிவுக்கு முரணானதா? அரசியல் சட்டத்திற்கு முரணானதா?
(ii) இலங்கையில் வாழும் தமிழர்களின் ஏகப் பிரதிநிதியாகப் பன்னாட்டு அமைப் புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற் குத் தார்மீக அடிப்படையில் அனுதாபம் தெரிவிக்கின்ற செயல் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் 2002-இன்படி தீவிரவாத இயக்கத்திற்கான ஆதரவாகுமா? அச் செயல் காரணமாக அரசு தனி மனித உரிமையைப் பறிக்க அனுமதிக்கலாமா?
என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பத்தி 46-இல் தெரிவித்திருப்பதாவது:
மனுதாரர்கள் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் 2002-இல் பிரிவு 20, 21, 22-இன்படி குற் றச்செயல்களுக்குக் குற்றம் செய்யும் நோக்கம் (mensrea) இருக்க வேண்டும் என் ற அவசியம் இல்லை என்பதால் அந்தச் சட்டப் பிரிவுகள் தவறுதலாகப் பயன் படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளதால் அதை அரசியல் சட்டத்துக்கு விரோதமா னது என்று அறிவிக்கக் கோரி உள்ளார்கள். அட்டார்னி ஜெனரல் பிரிவு 21 மற் றும் உட்பிரிவுகள் தண்டனை வழங்குவதைக் குறிப்பிடுவதால் அதனை உள் ளது உள்ளபடியே அமுலாக்கம் செய்ய வேண்டும். பொதுவாக, சட்டத்தின் பொருள் விளக்கம் குறித்த நெறிகள் பின்பற்றுவதற்கு உண்டான நெறிமுறை யைப் பின்பற்ற வேண்டும். மேலும், பிரிவு 21-இன்படி எந்தப் பேச்சும் அல்லது செயலும் குற்ற நடவடிக்கைக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது.வெறும் தார் மீக ஆதரவு பொடா சட்டத்தின்படி குற்றமாகாது. ஆனால், அச்செயல் தொடர்ச் சியாகத் தீவிரவாத இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நடவடிக்கைகள் பிரிவு 21-இன் வரம்புக்கு உட் படாது. எனவே சட்டம் செல்லும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பத்தி 49-இல் குறிப்பிட்டு உள்ளதாவது:
பாராளுமன்றம் குறிப்பிடுகையில் ‘தீவிரவாதச் செயல்’ என்பதே குற்ற நோக் கத் துடன் நடைபெற வேண்டும். அப்படி இருக்கையில் ஒரு நபர் “வெளிப்படை யாக” (பிரிவு 20); அல்லது “ஆதரவு அளிப்பது” அல்லது “ஏற்பாடு, நடத்துவது”
அல்லது “உதவி செய்வது” மற்றும் “ஏற்பாடு” அல்லது “கூட்டம் நடத்துவது” அல்லது “கூட்டத்தில் பேசுவது” (பிரிவு 21) போன்ற செயல்கள் தீவிரவாத நட வடிக்கைகளுக்குத் துணைபோகக் கூடிய செயலாக இல்லாமல் இருக்கும் நிலை யில் அல்லது தீவிரவாதச் செயல் புரிவதற்கு உடந்தையாக இல்லாத நிலையில் குற்றச் செயலாகக் கருத முடியுமா? என்ற கேள்விக்கு உச்ச நீதி மன்றம் குற்றமாகாது என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ள 3, 4 மற்றும் 5-ஆம் காரணங்கள் விடு தலைப்புலிகளின் மீதான தடையை நீட்டிப்பதற்கு உகந்ததாக ஏற்றுக் கொள்ள
முடியாது. தமிழ்நாட்டிற்குள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளார்கள் என்பதற்குத் தகுந்த ஆதாரம் இல்லை.
மாண்புமிகு நீதிபதி அவர்களே!
28.10.2010 அன்று நடைபெற்ற விசாரணையில் ‘கியூ’ பிரிவு அதிகாரியைக்குறுக் கு விசாரணை செய்தேன்.அப்போது மே 2008 முதல் இன்றுவரை சட்டவிரோத
நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் பிரிவு 10(a)(1)-இல் விடுதலைப்புலிகள் இயக் கத்தைச் சார்ந்த எவரேனும் கைது செய்யப்பட்டு உள்ளார்களா என்று கேட்ட போது கைது செய்யவில்லை என்று தெரிவித்தார். எனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்த எவரும் மே 2008 முதல் இன்று வரை தமிழ்நாட்டுக்குள் வரவில்லை என்பது உறுதியாகின்றது.
“சட்டவிரோத நடவடிக்கை” என்பதற்கான விளக்கம் சட்டவிரோத நடவடிக் கை (தடுப்புச்) சட்டம் பிரிவு 2 உட்பிரிவு (1) (o)-இல் தெளிவாகக்குறிப்பிடப்பட்டு உள்ளது.
சட்டவிரோதச் செயல் என்பது
(i) இந்தியாவின் ஒரு பகுதியைத் துண்டாடுவதற்கு அல்லது ஒரு பகுதியைப் பிரித்துக் கொண்டு செல்வதற்குத் துணைபோதல், அப்படியொரு நிலையை உருவாக்கத் தூண்டுதல் போன்ற நடவடிக்கை களில் தனி நபரோ அல்லது
குழுவாகவோ ஈடுபடுவது; அல்லது
(ii) இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக் கின்ற, கேள்விக்குறி யாக்குகின்ற, உரிமையை விட்டு விடுகின்ற நடவடிக்கை; அல்லது
(iii) இந்திய நாட்டின் மீது வெறுப்பை உண்டாக்குகின்ற நடவடிக்கையைத் தூண் டுதல்;
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடைக்கான அடித்தளமாக, சொல்லப் படுகின்ற அடிப்படைக் காரணமாகச் சொல்லப்படுவது தமிழ் ஈழத்தோடு தமிழ கத் தை இணைக்க முயற்சி என்று சொல்லப்படுகின்றது. அதன்மூலம் இந்திய நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கின்ற முயற்சி செய்யும் செயலாகக்கருதப்படுகின்றது. இந்த நிகழ்வை உறுதிப்படுத்து வதற்கு அரசு எந்த ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை. எனவே, தடைக்கா க அரசு ஆணையில் சொல்லப்பட்ட காரணங்கள் நொறுங்கிப் போய் விட் டன.
எனவே, தடையை நீட்டிப்பது அர்த்தமற்றது.
முக்கியமான தலைவர்களுக்கு, உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர்க ளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்ற மத்திய அரசின் அச்சம் என்பது
சட்டவிரோதச் செயல் என்ற வரையறைக்குள் வராது.
மாண்புமிகு நீதிபதி அவர்களே!
சமீபத்தில் 27.08.2010 அன்று நியூசிலாந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கிய மான தீர்ப்பை உங்கள் பார்வைக்கு அளிக்கின்றேன்.
1993-ஆம் வருடம் ஜனவரி மாதம், எம்.வி. யகாட்டா (MV Yahatta)) என்ற கப்பலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னணித் தளபதி கிருஷ்ணகுமார் சதா சிவம் (கிட்டு) மற்றும் 10 பேர் பயணம் செய்தார்கள். சென்னையிலிருந்து 440 நாட்டிகல் மைல் தொலைவில் சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டி ருந்த போது இந்தியக் கடற்படையால் சூழப்பட்டார்கள். அப்போது கிட்டு உள் பட மற்றும் சிலர் மரணத்தைத் தேடிக் கொண்டார்கள். ஒருவர் கடலில் குதித்த போது இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.
அவரை விசாகப்பட்டினம் நீதிமன்றம் ஜூன் 1996-ஆம் ஆண்டு ஜூன் மாதம் விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டில்
மூன்று ஆண்டு தண்டனை விதித்துள்ளது.தண்டனைக்குப் பிறகு நியூசிலாந்து நாட்டுக்குச் செல்ல அனுமதி பெற்று 13.9.2001 அன்று நியூசிலாந்து சென்றடைந் தார். பிறகு அகதியாக ஏற்றுக் கொள்ள அகதிகள் நிலை குறித்த மேல் முறை யீட்டு அதிகாரிக்கு மனு செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது.
அந்த இலங்கைத் தமிழர் மறு ஆய்வுக்காக நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தை அணுகினார். அங்கும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தார்.
24.05.2010 அன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழுமம், தலைமை நீதி பதி இலியாஸ், பிளன்சார்டு, டிப்பிங், மெக்கிராத் மற்றும் ஆண்டர்சன் ஆகி யோர் விசாரித்துத் தீர்ப்பு வழங்கினர்.
அந்தத் தீர்ப்பின் பத்தி 92-இல் குறிப்பிட்டுள்ளதாவது:

குறிப்பிட்ட அக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும், இலங்கையின் வடகிழக்கில் சுதந்திரமான தமிழ்த் தேசத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இருந்தார்கள். இலங் கை அரசை நிர்பந்தித்து மேற்படி அரசியல் மாற்றத்திற்கு அரசை வலியுறுத் துவதைத்தான் தங்களது தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு இருந்தனர்.
இதுபோன்ற சிறப்பியல்புகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அரசியல் அமைப் பாக பரிணமித்துள்ள போதிலும் சில சமயங்களில் ஏற்க மறுக்கும் முறைகளில் தங்களது நோக்கத்தை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர் என் பது மறுக்க முடியாது. உச்சநீதிமன்றம் இலங்கைத் தமிழருக்கு அகதி நிலை யை வழங்கியது.
நியூசிலாந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சம் விடுதலைப்புலிகள் அமைப்பை அரசியல் அமைப்பாக அங்கீகாரம் செய்துள்ளது. தீவிரவாத இயக்க மாக அறிவிக்கவில்லை.
மாண்புமிகு நீதிபதி அவர்களே!
மேற்சொன்ன நியூசிலாந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் ரணமாகி விட்ட இதயங்களுக்கு மருந்தாக ஆறுதலும், தேறுத லும் தருகின்ற தீர்ப்பாக அமைந்துள்ளது.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
செய்யப்பட்டதை அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றம், கொளத்தூர் மணி பேசியது சட்டப்படி குற் றம் ஆகாது என்று கூறி, விடுதலை செய்துவிட்டது என்பதையும், அந்த நீதிமன் றத்தின் தீர்ப்பையும் இந்தத் தீர்ப்பு ஆயத்தில் சமர்ப்பிக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; பேரழிவு நிகழ்ந்துள் ளது. எங்களுடைய சகோதரிகளும் தாய்மார்களும் கொடூரமாகக் கற்பழிக்கப்
பட்டு கொல்லப்பட்டார்கள். இலட்சக்கணக்கான தமிழர்கள் வான்வெளியாகக் குண்டெறித் தாக்குதல் மூலமாக தயவு தாட்சண்யமில்லாமல் கொல்லப் பட் டார்கள். உலக நாடுகளின் அமைப்புகளால் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயு தங்களையும் விமானத்தின் மூலமாகவும், பீரங்கி மூலமாகவும் பயன்படுத்தி
எண்ணற்ற மக்களைக் கொன்று ஒழித்தனர். இலட்சக் கணக்கான மக்கள் உண வின்றி, மருந்தின்றி இறந்தனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல பன்னாட்டுப் பத்திரிகையாளர்கள் அனும திக்கப்படவில்லை; செஞ்சிலுவைச் சங்கம் அனுமதிக்கப்படவில்லை; ஐக்கிய
நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மேடம் லூயிஸ்
ஆர்பர் தமிழர்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று பார்வையிட அனுமதிக்க வில்லை.
டப்ளினில் உள்ள தீர்ப்பாயமும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசு புரிந் துள்ள இனப் படுகொலையை வெளியுலகுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருகின்றன.
எனவே, மேற்கூறிய சூழ்நிலையில் இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத் தைத் தடை செய்திருப்பதால் மற்ற உலக நாடுகளும் தடை செய்துள்ளன. இலங்கைத் தமிழர்கள் ஆறுதலும், உதவியும் பெற இந்தியாவிற்கும் வர முடி யாத நிலை உள்ளது.இதையும் கடந்து இந்தியாவிற்குள் வருகின்றவர்கள் விடு தலைப்புலிகள் என்று சொல்லி சிறை முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ள னர். தமிழர்கள் கண்ணீரில் மிதக்கிறார்கள்.
எனவே, நீதியின் கதவைத் தட்டுவதற்காக இந்தத் தீர்ப்பாயத்தின் முன்பாக உள்ளேன்.
மாண்புமிகு நீதிபதி அவர்களே!
விடுதலைப்புலிகளின் மீதான தடையை உறுதி செய்யாமல், தடையை நீக்க வேண்டுகிறேன்.
வைகோ இவ்வாறு வாதம் புரிந்தார்.

No comments:
Post a Comment