Monday, May 20, 2013

நாடாளுமன்றத்தில்... இரத்தம் கசிந்த இதயத்தின் குரல்!- பகுதி 25


பிற்படுத்தப்பட்ட வேடர் குலத்தைச் சேர்ந்த வால்மீகிதானே இராமாயணத்தை எழுதினார்.மகாபாரதத்தை எழுதிய வியாசர் யார்? பிற்படுத்தப்பட்ட மீனவர் குலத்தைச் சார்ந்தவர்தானே? பகவத் கீதையைத் தந்த கிருஷ்ணன் யார்? 
பிற்படுத்தப் பட்ட யாதவர் குலத்தில் பிறந்தவர் தானே.-வைகோ 

முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படுத்துவிட்டு வரலாமே.


திராவிட இயக்கத்தின் இலட்சிய முழக்கம்

திராவிட இயக்கத்தின் இலட்சியக்கோட்பாடுகள் எவை என்பதை தந்தை பெரி யாரும், பேரறிஞர் அண்ணாவும் வகுத்தளித்து இருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்தம்; சாதி, மதமற்ற சமத்துவ சமுதாயம் காணல்; தமிழின உரி மை; தமிழ்ப் பண்பாடு காத்தல்; மொழி உரிமை; தமிழ்நாட்டின் வாழ்வுரிமை;
சமூக நீதி; மதச்சார்பின்மை; பெண் விடுதலை; மாநில சுயாட்சி; பொருளாதார
தற்சார்பு.
இவற்றில், தமிழின உரிமைக்காக நாடாளுமன்றத்தில் தலைவர் வைகோ வீர முழக்கமிட்டதை கடந்த 24 பகுதிகளாக  தொகுத்து, வரலாற்றின் பக்கங் க ளில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டவற்றை தோழர்களின் மறுவாசிப் பிற் காகத் தந்தோம்.

திராவிட இயக்கம் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த சமூக நீதிக் கொள்கைக்காக தலைவர் வைகோ மாநிலங்களவையில் இலட்சிய முழக்கமிட்டதை இனி காண்போம்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியத் திருப்பு முனையை உருவாக்கிய ஆட்சி பிரதமர் வி.பி.சிங் அவர்களின் காலம் ஆகும். கோடானகோடி பிற்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக ‘மண்டல் குழு’ பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவோம் என்று பிரகடனம் செய்த வி.பி.சிங் அவர்களின் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். ஆனால், மண்டல் குழு பரிந்துரை நடைமுறை யை மாற்றி அமைத்திட இனி எவருக்கும் துணிச்சல் வராது. அந்தளவுக்கு தாக் கத்தை இந்திய அரசியலில் வி.பி.சிங் செயற்படுத்திய மண்டல் குழு அறிக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறை செய்யப் பட்ட பிறகு ‘மண்டலுக்கு முன்’, ‘மண்டலுக்குப் பின்’ என்று இந்திய அரசிய லில் கோடு விழுந்துவிட்டது.


மண்டல் கமிஷன்

இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் பெரிய மாநிலமாக இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் கோவிந்தவல்லபபந்த், கமலபதி திரிபாதி, என்.டி.திவாரி போன்ற உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக பதவி வகித்தனர்.
ஆனால், மிகச் சாதாரண வகுப்பைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்றோர் உ.பி.யில் உயர்சாதி ஆதிக்கத்தைத் தகர்த்து எறிந்து ஆட்சி பீடம் ஏற முடிந்தது என்றால், அதற்கு வித்திட்டது “மண்டல் கமிஷன் அறிக்கை”.
அதைப்போலவே பீகாரில் லல்லு பிரசாத் யாதவ், நிதீஷ்குமார் போன்றோர் ஆட்சி பீடம் செல்ல முடிந்தது. மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்
படுத்தியதற்காக, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் , இன்றைய நிலையில் அவர்களும் சமூகநீதியை மறுதலித்துவிட முடி யாது.

1990 ஆகஸ்டு 7 இல் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்தில் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். தேசிய
முன்னணிக்கு ஆதரவு தந்த பாரதிய ஜனதா கட்சி உடனடியாக, ரதயாத்திரை நடத்தி வன்முறைக்கு தூபமிட்டது. காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு கொள்கை யில் இரட்டை வேடமிட்டு மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்த்தது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சூழலில், 1990 அக்டோபர் 4 ஆம் நாள் தலைவர் வைகோ நாடாளுமன்றத்தில் சமூக நீதிக்காக முழக்கமிட்டார். திராவிட இயக்கத்தின் போர்வாளாக, நாடாளுமன்றத்தில் சுழன்ற வைகோ வின் உரை, இன்றைக்கும் சமூக நீதிக் கனலை நம் நெஞ்சிலே ஏற்படுத்தும்.

தந்தை பெரியார் கொள்கைக்கு வெற்றி

“பிற்படுத்தப்பட்ட-அடக்கப்பட்ட மக்களின் நீதிக்காக - உரிமைக்காக போராடி, அதில் வெற்றிகண்ட இயக்கத்தைச் சார்ந்தவன் நான். அண்மையில் வைர விழா கொண்டாடிய எங்கள் இயக்கம், இந்தக்கொள்கைக்காக 1912 ஆம்ஆண்டு முதல் குரல் கொடுத்து வந்துள்ளது. திராவிட இயக்கத்தின் தன்னிகரில்லாத தலைவரான தந்தை பெரியார், ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தளபதி யாகத் திகழ்ந்தார். காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி
பிரதிநிதித்துவக்கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால் பெரியார் அதனை விட்டு வெளியேறினார். ஆனால், பெரியாரின் கொள்கை இன்று வெற்றி பெற் றுள்ளது. தந்தை பெரியாரின் கொள்கையை அகில இந்தியாவும் ஏற்கும் வகை யில் பிரதமர் பிரகடனம் செய்வதற்கு வழிகாட்டிய தமிழ்நாட்டைச் சார்ந்தவன் என்பதால் இதில் பேசுவதில் பெருமைப் படுகிறேன்.

இங்கு பேசிய உறுப்பினர்கள் சிலர் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். காங்கிரஸ் கட்சியின் தலைவரான இராஜீவ் காந்தியும் பொருளாதார அடிப்படை வேண்டும் என்கிறார். மண்டல் அறிக்கையில் இதுகுறித்து நிபுணர்களின் கருத்துகள் தரப்பட்டுள்ளன.மண்டல் குழு அறிக்கையின் 45 ஆவது பக்கத்தில் அறிவாற்றலும்,மதிநுட்பமும்நிறைந்த
நிபுணர் ஒருவர் இதைப்பற்றி குறிப்பிட்டுள்ளதை மேற்கோள்காட்ட விரும்பு கிறேன்.

“பொருளாதார அடிப்படையை ஏற்றுக்கொண்டால்,பிற்படுத்தப்பட்ட மக்களுக் கு பெரும் பாதகம் ஏற்படும்.பதவி உயர்வு தருவதில்கூட 3 அல்லது 4 சதவிகி தம் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்” என்றார். யார் அந்த நிபுணர்? அவர்தான் அன்றைய சட்ட அமைச்சர்.இதோ,என் எதிரில் எதிர்க்கட்சித்தலைவராக அமர்ந் திருக்கும் மதிப்பிற்குரிய சிவசங்கர் அவர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட
மக்களின் உரிமைக்குப் போராடும் உணர்வு சிவசங்கரின் உள்ளத்தில் அடித்த ளத்தில் உந்துகின்ற காரணத்தினால் நியாயத்தைச் சொன்னார்.அவரைப் பாராட்டுகிறேன். ஆனால், அவரது கட்சியின் தலைவரான இராஜீவ் காந்தி, பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு பெரும் கேடு செய்யும் வகையில் பொருளாதார அடிப் படை என்கிறாரே!

தமிழ் நாட்டிற்கு வரமுடியுமா?

நான் காங்கிரஸ் உறுப்பினர்களைக் கேட்கிறேன். பொருளாதார அடிப்படை வேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு வந்து சொல்ல துணிச்சல் உண்டா? காங்கி ரஸ் காரர்களுக்கு அந்த தைரியம் உண்டா? ஆண்மை உண்டா? என்று கேட் கிறேன். அந்தத் துணிச்சல் அவர்களுக்குக் கிடையாது. அப்படியானால், காங் கிரஸ் கொள்கைப் புரட்டர்களின் கூடாரம் அல்லவா?

தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர். அரசு பொருளாதார அடிப்படையை அமலாக்க முனைந்தபோது, அதை எதிர்த்து போர்க்குரல் கொடுத்த திராவிட முன்னேற் றக் கழகத்தோடு, தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து எதிர்த்தது. அப்படி யானால், இன்று இராஜீவ்காந்தி பொருளாதார அடிப்படை வேண்டும் என்று கேட்பது, காங்கிரஸ் போடும் இரட்டை வேடம் அல்லவா? அயோக்கியத்தனம்
அல்லவா? காங்கிரஸ் அகில இந்தியக் கட்சியா? அல்லது மாநிலக்கட்சியா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படை கூடா து என்பதை ஒப்புக்கொள்ளும் காங்கிரஸ் உறுப்பினர்கள், பிற்படுத்தப்பட்ட மக் களுக்கு மட்டும் பொருளாதார அடிப்படை தேவை என்று கூறுவது எந்த வகை யில் நியாயம்? இரண்டிற்கும் ஒரே விதமான அளவுகோல்தான் இருக்க முடி யும்.

மண்டல் குழு அறிக்கையை அமலாக்கக்கூடாது என வலியுறுத்தி, சாகும்வரை உண்ணாவிரதம் என்று ‘வசந்த் சாத்தே’ ஒரு திடீர் நாடகத்தை அறிவித்துள் ளார். (வசந்த் சாத்தே காங்கிரஸ் கட்சியின் முன்னணித்தலைவர் .மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் - கட்டுரையாளர்) தமிழ்நாட்டிலும், இதற்காக காங்கிரஸ் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்குமா? மண்டல் குழு அறிக்கையை அமலாக்க வேண்டுமா? கூடாதா? என்பதில் காங்கிரசின் திட்டவட்டமான கொள் கை என்ன?

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய சமூக நீதியை அதிகார பீடத் தில் இருந்தபோது காங்கிரஸ் வழங்கவில்லை. சமூக நீதியை நசுக்கும் நோக் கத்தில்தான், காங்கிரஸ் ஆட்சி எட்டாண்டு காலம் குப்பைத் தொட்டியில் மண் டல் குழு அறிக்கையைப் போட்டு வைத்திருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் ஏழாம் தேதி, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மகோன்னதமான நாள். ஆம்! சமூகநீதி பிரகடனம் செய்யப்பட்ட நாள். மண்டல் கமிஷனை எதிர்த்து
தமிழ்நாட்டில் போராட்டம் இல்லை. தென்னிந்தியாவில் போராட்டம் இல்லை. மராட்டிய மண்ணிலும் போராட்டம் இல்லை. ஏனெனில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை இயக்கம் இங்கெல்லாம் ஓங்கி வளர்ந்தது தான் காரணம்.

தகுதி - திறமை - மோசடி

சமூக நீதிக்கு எதிராக இந்தி வட்டாரத்தில்தான் கூச்சல் கேட்கிறது. பொருளா தார அடிப்படை வேண்டுமென்று வரட்டுவாதம் எழுப்புவோர், மண்டல் கமி ஷன் அறிக்கையை முறையாகப் படித்தது இல்லை போலும். பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர் பட்டியலைத் தயாரிக்கும் போது, சமூக, கல்வி அடிப்படையோடு,
பொருளாதார அடிப்படையையும் பரிசீலனை செய்துதான் மண்டல் கமிஷன் பட்டியலைத் தயாரித்து உள்ளது என்ற விளக்கத்தை அறிக்கையின் 52 ஆவது பக்கத்தில் காணலாம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று தீர்மானிக்க சமூக நீதி, கல்வி நீதி, பொருளாதார நீதி என்ற மூன்று அடிப்படைகளிலும் மொத்தம் 11 அளவுகோல்களை விதிகளாகக் கொண்டுதான் மண்டல் கமிஷன் பட்டிய லைத் தயாரித்துள்ளது.

தகுதி என்றும், திறமை என்றும் சில அதிமேதாவிகள் குதர்க்கவாதம் புரிகின் றனர். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தகுதி, திறமை கிடையாதா? உண்டு. இந்தி யாவில் மூன்று பெரும் இதிகாசங்களாக இராமாயணமும், மகாபாரதமும், பக வத் கீதையும் இடம்பெறுகின்றன.

பிற்படுத்தப்பட்ட வேடர் குலத்தைச் சேர்ந்த வால்மீகிதானே இராமாயணத்தை எழுதினார்.மகாபாரதத்தை எழுதிய வியாசர் யார்? பிற்படுத்தப்பட்ட மீனவர் குலத்தைச் சார்ந்தவர்தானே? பகவத் கீதையைத் தந்த கிருஷ்ணன் யார்? பிற்ப டுத்தப் பட்ட யாதவர் குலத்தில் பிறந்தவர் தானே.

பிற்படுத்தப்பட்ட மக்கள் அறிவாற்றலில், தகுதியில், திறமையில் மேல் சாதிக் காரர்களை விட எவ்வகையிலும் குறைந்தவர்கள் அல்லர். ஆனால், ஆயிர மாண்டு களுக்கு மேலாக அவர்களுக்கு சந்தர்ப்பம் தரப்படவேயில்லை. வாய்ப் புகள் வழங்கப்படவில்லை. உரிமை கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்புகளின் கதவுகளை தேசிய முன்னணி திறந்து
விட்டிருக்கிறது.

கொடுமைகளை இனியும் நடத்த முடியாது

பலநூறு ஆண்டுகளாக இந்த நாட்டில்,மதத்தின் பெயரால் ஒருவித இடஒதுக் கீடு செயல்பட்டு வந்தது. பிற்படுத்தப்பட்ட மக்கள் பலதுறைகளில் நுழைய முடி யாது.அந்த ஒதுக்கீட்டு முறையை மீறியதால்தான் ஏகலைவன் தன் கட் டை விரலை இழந்தான். சம்புகன் தன் தலையையே பறிகொடுத்தான்.ஆனால், இன்று காலம் மாறிவிட்டது.அத்தகைய கொடுமைகளை நடத்த முடியாது.

சாதி அடிப்படை கூடாது என்றும், தகுதி அடிப்படையே வேண்டும் என்றும் உப தேசம் செய்யும் பெரிய மனிதர்களைக் கேட்கிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தி லே பிறந்த ஒருவன் அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்திலே பிறந்த ஒருவன் இந்து மதக் கோட்பாடுகளை-ஆகமங்களை, அய்யந்திரிபுரக் கற்றுத் தேர்ந்து விட்டால்-ஒரு கோவில் அர்ச்சகராவதற்கு தேவையான தகுதி பெற்றுவிட் டால், அவன் கோயிலின் மூலஸ்தானத்திற்குள்ளே கர்ப்பக் கிரகத்திற்குள்ளே சென்று பூசை செய்ய ஏன் அனுமதிக்கப்படுவதில்லை?

ஆகமங்களின் பெயரால்,மனுதர்மத்தின் பெயரால் இந்த நாட்டு உச்சநீதிமன் றம் அவரைத் தடுப்பது ஏன்? இங்கு மாத்திரம் தகுதி,திறமையை ஏன் மறுக்கிறீர் கள்? இதற்கு மாத்திரம் சாதி தேவைப்படுகிறதோ? தாழ்த்தப்பட்டவன் ஆனா லும், பிற்படுத்தப்பட்ட சாதியிலே பிறந்தவனாக இருந்தாலும், தகுதியிருந் தால் அர்ச்சகராகலாம் என்பதை ஏற்றுக்கொள்ளாத இந்தச் சமூக அமைப்பில் வேலை வாய்ப்புகளுக்கு மட்டும் தகுதி பேசுவது மிகப்பெரிய பித்தலாட்ட மாகும்.

பிச்சை கேட்கவில்லை

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றுவதால், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிவிட முடியாது என்ற வாதத்தை சிலர் எழுப்புகின்ற னர். இந்தப் பெரிய நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தை மண்டல் கமி ஷன் மூலம் போக்கிவிடலாம் என்று நாங்களும் கருதவில்லை.

பிற்படுத்தப்பட்ட மக்கள் தமக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்று பிச்சை கேட்கவில்லை. இந்த நாட்டின் அதிகார அமைப்பில் நிலையாக அவர்களுக்கு உரிய இடம் வேண்டும். நிர்வாக அமைப்பின் அனைத்துத் துறைகளிலும் அவர் களுக்கு உரிய இடம் கிடைத்தாக வேண்டும். இவ்வளவு காலமும் அந்த உரி மை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாற வேண்டும் என்பதே
மண்டல் கமிஷனின் நோக்கம்.

பழனியாண்டி (இ.காங்): காங்கிரஸ் கட்சியைப் பற்றி நீங்கள்குற்றம் சாட்டு வதை மறுக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தீர்மானம் இருக்கிறது.

வைகோ: பழனியாண்டி அவர்களே! நீங்கள் ஒரு நல்ல மனிதர். பிற்படுத்தப்
பட்ட மக்களுக்காக ஆதரவு காட்டும் உணர்வு கொண்டவர். அது மட்டுமல்ல, நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறீர்கள். அதனால், மண்டல் கமிஷனை எதிர்த்து நீங்கள் பேசவே முடியாது.

(இ.காங் உறுப்பினர்கள் குறுக்கீடுகள்- கூச்சல்)

வைகோ: உங்கள் கட்சியைச் சார்ந்த வசந்த் சாத்தே மண்டல் கமிஷனை
எதிர்த்து, சென்னைக்குச் சென்று உண்ணாவிரதம் இருக்கத் தயாரா? நீங்கள் நடத்துவது வெறும் கபட நாடகம். மத்திய சர்காரின் வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டவர் களும், பிற்படுத்தப்பட்டவர்களும் எந்த அளவிற்கு வஞ்சிக் கப் படுகிறார்கள் என்பதை மண்டல் கமிஷன் அறிக்கையிலிருந்தே உணர லாம்.

மத்திய அரசின் நிதித்துறை இலாகாவில் உள்ள நிலை குறித்து மண்டல் கமி ஷன் தந்துள்ள விபரத்தை தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் படம் பிடித்துக் காட்டி உள்ளார். இந்த இலாகாவில் பணிபுரியும் முதல்நிலை அதிகாரிகளின் (Class I Officers) மொத்த எண்ணிக்கை 1008. ஒதுக்கீடு முறைப்படி - தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்கள் 227 பேர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் 66 பேர் மட் டுமே வாய்ப்பு பெற்றனர்.27 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப் படு மானால் 272 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த 1008 பேரில் ஒரே ஒருவர்தான் பிற்படுத்தப்பட்டச்சமுதாயத்தைச் சார்ந்தவர். 941 பேர் உயர் சாதிக்காரர்கள். இது மிகப்பெரிய சமூகக் கொடுமை அல்லவா?

அரசியல் சட்டத்திற்கு சவால் விடுவோரை கைது செய்க!

இதனால்தான் முதல்நிலை அதிகாரிகள் இநத நாட்டின் அரசியல் சட்டத்தை யே எதிர்த்து அறிக்கை விடுகிற அளவிற்கு ஆணவமும, துணிச்சலும் பெற் றுள் ளார்கள்.இடஒதுக்கீட்டு முறையே ஒழிக்க வேண்டும் என்றும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் இட ஒதுக்கீடு கூடாது என்றும் இந்த முதல்நிலை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற இந்தஆண்டில், அரசியல் சட்டத்தையே சவாலுக்கு அழைத்து, நாடாளுமன்றத்திற்கே அறை கூவல் விடுத்து, திமிர் பிடித்து அறிக்கை தந்திருக்கின்ற இந்த முதல்நிலை
அதிகாரிகள் மீது மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் களை காராகிருகத்திலே பூட்ட வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட் கிறேன்.

உச்சநீதிமன்றம் தரும் தீர்ப்பைப்பற்றி பேசுகிறார்கள்.இந்த நாட்டின் பல மாநி லங்களில் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. 50 சத விகிதத்திற்கு மேலும் இடஒதுக்கீடு அமல் படுத்தப்படும் மாநிலங்கள் உண்டு. எங்கள் மாநிலத்தில் 69 சதவிகிதம் (தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற் படுத்தப்பட்டவர்கள்) அமலில் உள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல மாநி லங்களிலும் இதனால் சமூகநீதி வழங்கப்பட்டு இருக்கும்போது, உச்ச நீதிமன் றம் அதனை எப்படி மறுக்க முடியும்? அப்படி மறுத்தால் என்ன நடக்கும் என்ப தை இப்போதே சொல்கிறேன்.


போராட்டம் வெடிக்கும்

1951 ஆம் ஆண்டில், அன்றைய சென்னை மாநில சர்க்கார், வகுப்பு வாரி பிரதி நிதித்துவத்தை அமல்படுத்தியபோது, உச்சநீதிமன்றம் அதற்குத் தடை விதித் தது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தோளோடு தோள் நின்று
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சமூக நீதிக்காகப் போராடினார்கள்.தமிழகம் கிளர்ச்சிக் களம் ஆனது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பால்தான் முதலா வது அரசியல் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர நேர்ந்தது என்று பண்டித
ஜவகர்லால் நேரு குறிப்பிட்டார்.

1951 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் சமூக நீதிக்கு தடைவிதித்தபோது, தமிழ் நாடு போர்க்கோலம் பூண்டது. இப்போதும் உச்சநீதிமன்றம் தடைக்கற்களை எழுப்புமானால், அதை உடைத்தெறிய பயங்கரமான போராட்டம் வெடிக்கும்.
ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு,அடக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வெகுண்டெழுவார்கள். டெல்லியில் சிலபேர் தீக்குளித்தார்கள். போராட்டம்
நடக்கிறது. ஆனால், நான் எச்சரிக்கிறேன். பிற்படுத்தப்பட்ட மக்கள் நீதிக்காக நியாயம் கேட்டு நடத்தப்போகும் போராட்டம் இதைவிடப் படுபயங்கர மான தாக இருக்கும். தூங்கும் புலியை இடறாதீர்கள்.

மீண்டும் 1965 நடக்கும். 1965 இல் தான் 8 பேர் தமிழ்நாட்டில் தீக்குளித்து மடிந் தார்கள். ஆதிக்க சக்திகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பலி யானார்கள். டெல்லி யிலும் சுற்றுவட்டாரத்திலும் தீய நோக்கம் கொண்ட நாசகார சக்திகளின் தூண் டுதலால் நடத்தப்படும் போராட்டத்தைக் காரணம் காட்டி, பிற்பட்ட மக்களுக்கு சமூக நீதி மறுக்கப்படுமானால் அதனை எதிர்த்து போராட்டம் வெடிக்கும். நாட் டில் இரத்த ஆறு ஓடும் என எச்சரிக்கிறேன்.

டெல்லியில் இப்போது நடத்தப்படுகிற கலவரத்தைப் பற்றி முன்னாள் உள் துறை அமைச்சர் எஸ்.பி.சவான் தனது வருத்தத்தையெல்லாம் காட்டினார். 1984 ஆம் ஆண்டில் இதே டெல்லியில் நடந்ததை அவர் மறந்து விட்டாரா? டெல்லிப்பட்டணத்தின் வீதிகளில் 1984 ஆம் வருடம் ஆயிரமாயிரம் சீக்கியர் கள் கொல்லப்பட்டனர். கண்டதுண்டமாக பலரை வெட்டினார்கள். பலரை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள். கொளுத்திச் சாம்பல் ஆக்கினார்கள்.
அந்தக் கொலைவெறித்தனத்தை நியாயப்படுத்தும் வகையில் ஒரு பெரிய விருட்சம் சாய்கிறபோது பூமி நடுங்கத்தான் செய்யும் என்று இராஜீவ்காந்தி அறிக்கை தந்ததை இந்த நாடு இன்னும் மறக்கவில்லை.


போராட்டத்தைத் தூண்டும் காங்கிரஸ்

1984ஆம் ஆண்டு ரணகளத்தை நடத்தியவர்கள் யார்? இந்திரா காங்கிரஸ்காரர் கள்தான் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட குழு ஆய்வு நடத்தி அறிக்கை தந்தது.

டெல்லியில் 1984 ஆம் ஆண்டில் இரத்தக் களறி நடத்திய காங்கிரஸ் கூட்டம் தான் இன்றைக்கு டெல்லியில் மாணவர் போராட்டம் என்ற பெயரால் கலவ ரத்தை நடத்துகிறது என்று ஆணித்தரமாக குற்றம் சாட்டுகிறேன்.

சபீர் அகமத் சலாரியா (தேசிய மாநாட்டுக் கட்சி): இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு.

ஜகதீஷ் தேசாய் (இ.காங்): கோபால்சாமி கூறியதை நான் கடுமையாக ஆட்சே பிக்கிறேன். தான் கூறியதை கோபால்சாமி வாபஸ் வாங்க வேண்டும். எங்க ளைப் பற்றி குற்றம் சாட்ட அவருக்கு உரிமை கிடையாது.

வைகோ : உண்மை சுடத்தான் செய்யும். சொன்னதை வாபஸ் வாங்கும் பழக் கம் எனக்குக் கிடையாது. தீக்குளித்து இறந்துபோன மாணவர்களுக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன். பதட்டம் தருகிற ஒரு செய்தி பத்திரிகையில் வந்துள்ளது.

தீக்குளித்து மரணப்படுக்கையில் உள்ள ஒரு இளைஞன், கிளர்ச்சிக்காரர்கள் தன்னைச் சூழ்ந்துகொண்டு தன்மீது பலாத்காரமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்கள் என்றும், தீயை அணைக்க யாரையும் அனுமதிக்க வில்லை என் றும் மரண வாக்குமூலம் தந்துள்ளார். இச்செய்தி பத்திகையில் வெளியாகி யுள்ளது.

இ.காங் எம்.பிக்கள்: இது உண்மை அல்ல.

காங்கிரஸ் சதி

வைகோ: செப்டம்பர் 26 (1990) இந்து நாளேட்டில் பிரசுரமானதைத்தான் இங்கே குறிப்பிட்டேன். அது மட்டுமல்ல, டெல்லியில் நடைபெறும் வன்முறை கிளர்ச் சிக்கு முழுக் காரணமான காங்கிரஸ் கட்சி, ஒவ்வொரு நாளும் இந்தக் கிளர்ச் சியை நடத்த தினந்தோறும் இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவழிக்கிறது என்ப தற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன.

(இ.காங் உறுப்பினர்களின் கூச்சல்- குறுக்கீடுகள்)

வைகோ: செப்டம்பர் 16 ஆம் நாள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மூல பலத்தை சரித்திரப் பிரசித்திப் பெற்ற பிரமாண்டமான பேரணி மூலம் நிரூபித்துக்காட்டி உள்ளோம். சமூக நீதிக்கு எதிராக கிளர்ச்சி என்ற பெய ரால் இந்த அரசாங்கத்தை யார் அச்சுறுத்த நினைத்தாலும், எந்தக் கூடாரம் பிளாக் மெயில் செய்ய முயன்றாலும், தேசிய முன்னணி அரசு அதற்கு வளைந் து கொடுக்கக்கூடாது என நான் வலியுறுத்துகிறேன்.

இந்திய நாட்டின் சரித்திரத்தில் அடக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் நிக ரற்ற பதுகாவலர் என்ற நிரந்தரப் புகழுக்கு வி.பி.சிங் அவர்கள் சொந்தக்கார ரா கி விட்டார் எனக்கூறி முடிக்கிறேன்.

மீண்டும் 05.10.1990 இல் நடைபெற்ற விவாத்தில் பங்கேற்று வைகோ அவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:

“உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றித் தான் விமர்சனம் செய்யக் கூடாது. ஆனால் , தீர்ப்பையொட்டி உறுப்பினர்கள் கருத்துகளைச்சொல்லலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவசங்கர் நேற்று கூறினார்.மண்டல் கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிற உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரில் ஒரு வர்கூட தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல.

இடஒதுக்கீடு கொள்கையை வெற்றி கரமாக நிறைவேற்றி வழிகாட்டுகிற
தமிழ்நாட்டிலிருந்தோ, தென் மாநிலங்களிலிருந்தோ ஒருவர் கூட உச்சநீதி மன்ற அமர்வில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.”

தொடரும்........

நன்றிகள் 

கட்டுரையாளர் :- மு.செந்திலதிபன்

வெளியீடு :- சங்கொலி

No comments:

Post a Comment