Friday, May 24, 2013

நவரத்னா தகுதிபெற்ற, என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கக் கூடாது!

வைகோ அறிக்கை!

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களிலேயே தனிச்சிறப்புமிக்க ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மின்உற்பத் தியில் ஈடு இணையற்ற நிறுவனமாகத் திகழ்கிறது. பொன்விழா கண்ட என்.எல். சி. நிறுவனம், தமிழ்நாட்டுக்கும், தென் மாநிலங்களுக்கும் 2,490 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்து அளிக்கிறது. கடந்த நிதி ஆண்டில், 1,411 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய இந்நிறுவனம், விரிவாக்கத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தி, நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துவரும் என்.எல்.சி. நிறுவனத்தை, தனியார்மயமாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு எடுத்து உள்ளது.
2002 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, என்.எல்.சி. நிறுவனத் தின் 51 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு எடுத்து, அதைச் செயல்படுத்தும் கட்டத்திற்கு வந்தபோது, நான் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களை சந்தித் து, என்.எல்.சி. பங்குகளைத் தனியாரிடம் விற்கக்கூடாது; தமிழகத்தின் நிலத் தில் அவர்கள் வியர்வையில் உருவாக்கப்பட்ட என்.எல்.சி.நிறுவனத்தை எக்கா ரணத்தை முன்னிட்டும் தனியாருக்குத் தாரை வார்க்க வழிவகுக்கும் விபரத முடிவை கைவிட வேண்டும் என்று வற்புறுத்தியதன் விளைவாக, அந்த முடி வை பிரதமர் வாஜ்பாய் அவர்கள் கைவிட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும்.

ஆனால், 2004 இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்த நாள் முதல் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு முயன்று வருகிறது.

காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தமிழகத்திற்கும் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களான காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளுக்கும் வஞ்சகம் விளைவித்து தொடர்ந்து துரோகம் செய்துவரும் நிலையில், தமிழகத்தின் கருவூலங்களுள் ஒன்றான என்.எல்.சி. நிறுவனத்தையும் பெரு முதலாளி களின் கைகளில் ஒப்படைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக ஐந்து சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முனைந்து உள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள் கைகளால், நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப் படு கின்றன. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள், ஒவ்வொன்றாகத் தனி யார் நிறுவனங்களின் பிடியில் போய்க்கொண்டு இருக்கின்றன.

தமிழ்நாடு மின்பற்றாக்குறையால் இருளில் மூழ்கிக் கிடக்கின்றபோது, தமிழ கத்திற்கு சுமார் 1,300 மெகாவாட் மின்சாரம் வழங்கி வரும் என்.எல்.சி. நிறுவ னத் தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முயற்சிக்கும் மத்திய அரசுக் குக் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், என்.எல்.சி. தொழிலாளர்கள் மற்றும் தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’                                                                                                வைகோ
சென்னை - 8                                                                                   பொதுச்செயலாளர்
24.05.2013                                                                                          மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment