முந்தைய பதிவை படிக்க இங்கே அழுத்தி படித்துவிட்டு வரலாமே
முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..
பகுதி 3 யின் தொடர்ச்சி ....
ஒ லிக்கிறது. இந்த நிலைமை இப்படியே நீடித்தால் எங்கே வாழப்போகிறோம். இதை எல்லாம் சிந்தித்தார்களா? மணலை கொள்ளை யடிப்பவர்கள். தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொள்வதற்கு வருங்கால சமுதாயத்தையா
அழிப்ப து?
புலவர்கள் கடந்த கால இலக்கியங் களைப் பற்றிப் பேசுவார்கள்.குறிஞ்சி, முல் லை, மருதம், நெய்தல் இருந்தது.தேரிக் காடுகள் பாலையாகத் திரிந்தது. எத் தனை திணைகள். கவிஞர்கள் எத்தனை விதமான பாடல்களை எழுதினார்கள். ஒவ்வொரு திணைக்கும் என்ன விளக்கம். இனி திணைகள் இருக்குமா குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் இருக்குமா? எல்லாம் பாலை தான்.
சந்தன மரங்களும், அழகிய விருட்சங் களும் ஓங்கி வளர்ந்திருக்க மந்திகள்
அங்கே தாவிப்பாய்ந்துகொண்டிருக்க,அங்கே கிடைக்கின்ற சந்தனத்தை வெளி தேசங்களுக்கு அனுப்புகிற அளவுக்கு செல்வம் சிறந்திருக்க,குறிஞ்சி திணை பாடப்பட்டது. மலை, மலை சார்ந்த இடம் குறிஞ்சி எனப்பட்டது. காடுகள், அந்த காடுகளுக்குள் ஓடித்திரிகிற மான்கள், அந்த காடுகளில் கிடைக்கின்ற பொருட் கள், வேட்டைக்குச் செல்கின்றவர்கள்.அந்தக் காடுகளும் செழிப்பாக இருந்தது.
அதை முல்லை நிலம் என்றார்கள்.செந்நெல் வயல்கள் செழித்திருந்த தோட் டங்கள் அதை மருத நிலம் என்று வர்ணித்தார்கள். கடல் அலைகளில் துள்ளி விளையாடுகிற மீன்கள், கடலுக்கு அடியில் சிப்பிகளுக்குள்ளே முத்துக்கள், நெய்தல் நிலப் பெருமை பேசியது. தமிழர்கள்தான் முதல் கடலோடிகள். அது எங்கள் கரிகாலன் காலத்துக்கு முன்னாலே உலகத்தில் முதன் முதலாக கடல் வழிப் பயணம் செய்யக்கூடியதை கிரேக்கர்கள் கண்டுபிடிக்கவில்லை. தமிழர் கள் தான் கண்டுபிடித்தார்கள். இன்றைக்கு இந்த இயற்கைச் செல்வம் எல்லாம்
அழியக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
விவசாயிகள் இனி நமக்கு வாழ்வு இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். விவசாயிகளினுடைய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முயன்ற போது, நம் நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர் களும், விவசாயிகளுக்காக போராடக்கூடிய காசியண்ணக்கவுண்டர், பொன் னை யன் போன்றவர் களும், ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் நடத்தியபோது, நானும் அந்தப் போராட்டத்துக்கு வந்து சேர்ந்தேன்.
எங்கேயாவது பிரச்சினை என்றால் 108க்கு போன் போடுவார்கள். தீ பற்றிக்
கொண்டது என்றால், தீயணைப்புத் துறைக்குப் போன் போடுவார்கள். அது மாதிரி எங்காவது மக்களுக்கு பிரச்சினை என்றால், வைகோவுக்கு போன் போடுங்கப்பா வருவார். போராடு வதற்கு அவர்தான் சரியான ஆள் என்கிறார் கள். ஓட்டுப் போடுகிறார்கள், போடவில்லை. அது இரண்டாவது. இவர் வந்தா தான் போராட்டத்துக்கு சரியாக இருக்கும். சரியாக நிற்பார் என்கிறார்கள். முல் லைப் பெரியாறுக்குப் போராடி இருக்கிறார், உலகக் கோடீஸ்வரனை எதிர்த்து ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக வைகோ போராடியிருக்கிறார். எங்களிடம் பணமே கிடையாது. அடுத்த மாதம் தாயகத்தில் சம்பளம் போட வழியில்லை.
ஐம்பதாயிம் கொடுத்தால் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். ஐம்பது கோடி கொடுத்தது மாதிரி நினைத்துக்கொள்கிறேன். வருகிற வழியில் கொஞ்சம் நிதி கொடுத்தார்கள். நான் நமது எம்.பி.யிடம் சொன்னேன், இந்த மாதத்தை எப்படி யாவது ஓட்டிவிடலாம் என்று. எனக்கு இந்த இலட்சக்கணக்கான தொண்டர் கள் இருக்கும்போது, இதைவிட எதற்கு இந்தப் பணம்? எங்களுக்கு என்னப் பிரச் சினை? இருபது வருடம் அல்லவா கட்சி நடத்தி இருக்கிறோம்.
தொண்டன் ஆரம்பித்த கட்சி.பத்தொன்பது வருடமாக இரண்டு மலைபோல் இருக்கின்ற கட்சிகளை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிற இயக்கம். தரணி எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் போற்றுகிற இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம் இருக்கிறது. வாழ்க்கையில் எனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? இவ்வளவு சகோதரர்கள், இவ்வளவு தொண்டர்கள். இவர்கள் ஒவ் வொரு வரும் கோடி கோடியான பணத்துக்கு நிகரானவர்கள்.
ஸ்பார்ட்டாவில் மொத்தம் முன்னூறு பேர்தான் நின்றார்கள். மறுமலர்ச்சி தி. மு. க.வில் உள்ள தொண்டன் அப்படிப்பட்டவன். பெரிய ஓட்டு வங்கி இல் லை.
மல்லிகைப் புரட்சி எகிப்தில் வருமென்று எவர் ஆரூடம் சொன்னது? முக நூலில் கொண்டுவந்ததுதான். எகிப்தில் இலட்சக்கணக்கில் திரண்டார்கள். எந் தக் கட்சியும் கிடையாது. டுனிசியாவில் புரட்சி வந்ததே, எப்படி வந்தது? அது போல் எந்தக் கட்சியும் இல்லாத இளைய தலைமுறை, மாணவர் உலகம்
ஈழத்துக்காக போர்க்கொடி ஏந்தி இருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும் அந்தக் கரங்கள் போர்க்கொடி உயர்த்தும்.அப்போது இதுவரை வகுக்கப்பட்ட வரை யரை கள் எல்லாம் உடைந்து தரைமட்டமாகும். இதுதான் வாக்கு வங்கி. இது தான் அமைப்பு. இவர் களுக்குத்தான் கட்சி, இவர்களுக்குத்தான் ஓட்டு, இதை யாரும் மாற்ற முடியாது என்பதை, வருங்காலத் தலைமுறை நினைத்தால் மாற்ற முடியும்.
இளையோர் உள்ளத்தில் - எந்தக்கட்சியையும் சாராத இளையோர் நெஞ்சில் ஒரு தேடல் இருக்கிறது.அவர்கள் ம.தி.மு.க.வினர் அல்ல. ஒரு தேடல் இருக் கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்-அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்துக்கும் கொள்கைகளுக்கு எதிராக என்று நான் கூற மாட்டேன். அந்த கட்சிகள் போகிற போக்கினால் ஏற்பட்ட வேதனையினால், ஒரு மாற்று வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த இரண்டும் பெரிய கட்சிகள், வாக்கு வங்கி உள்ள கட்சிகள். ஆண்ட கட்சிகள். அரசு பொறுப்பில் இருந்த கட்சிகள். ஒரு தேடல் இருக்கிறது.அதிருப்தியும் இருக்கிறது.அது மெது வாக, வேகமாக வளர ஆரம்பித்து இருக்கிறது. அந்தத் தேடலுக்கான விடை என்ன என்கிறபோது, அதற்கு தகுதியுள்ள இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக் கிறேன். இதை முடிவுசெய்ய வேண்டியது இந்த இளைஞர்கள்.
எப்படி ஜூனியர் விகடனில் மார்க் போட்டார்களே, தமிழ் ஈழத்துக்காக தொடர்ந் து ஆதரித்த கட்சி என்கிற போது, ம.தி.மு.க.வுக்கு 49.7 என்றார்கள்.எனக்கே அதில் கொஞ்சம் ஏமாற்றம் தான். இவ்வளவுதானா? நான் மற்றவர்கள் யாரை யும் குறை சொல்ல வில்லை. நாங்கள் கொள்கைகளுக்காகவே வாழ்ந்து வந்தி ருக்கிறோம்.
கெயில் பிரச்சினையில் நாங்கள் போராடியபோது, அவர்கள் குழாய் களைக் கொண்டுவந்து பதிக்கிறபோது,அந்தத் தாய்மார்கள், எங்களை அந்தக் குழியில் போட்டு புதைத்து விடுங்கள் என்று அழுதபோது, ஒரு ஏக்கர் வைத்து இருக் கின்ற விவசாயி வாழ்வு சூன்யமாகிற போது, கருணை உள்ளத்தோடு இதைத் தடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு விண்ணப்பம் போட்டோம். கோ ரிக் கை விடுத்தோம். அவல் பூந்துறையில் கூட்டம் போட்டுப்பேசினோம். முத லமைச்சர் அவர்கள் கருத்துக்கேட்பு நடத்த வேண்டும் என்று சொன்னோம்.
கருத்துக் கேட்பும் முறையாக நடைபெற்றது. நல்லது என்றால், நல்லது என்று சொல்லி விடுவோம். ரோஜா என்றால் ரோஜா என்று சொல்லி விடுவோம். ரோஜாவை ரோஜா என்று அழைப்போம், மண் வெட்டியை மண்வெட்டி என்று அழைப் போம். கருத்துக்கேட்பு முறையாக நடைபெற்றது, எனக்குத் தெரிந்து
கெயில் நிறுவனப் பிரச்சினையில் மட்டும்தான். நல்ல முடிவெடுத்தார்கள்.
அவர்கள் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார்கள். ஆனாலும் கூட குழாய்களை அகற்றிவிட்டு, நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். முதலமைச்சர் அவர்களே இந்த நாட்டின் இலட்சோப இலட்சம் விவசாயிகள் நொறுங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று விருதுநகரில் என் தலை மையில் உண்ணாவிரதம் இருந்தோம். நிவாரணம் வழங்கினீர்களா? இல்லை யே! டெல்டா பகுயிலேயே இன்றைக்கு ஏமாற்றம்தான். வாழ்வு எப்படி?
விவசாயிகள் எப்படி வாழ்வது.அவர்களுக்கு நிவாரணம் தருவதற்கு நடவடிக் கை எடுங்கள். மத்திய அரசிடம் நிதியைக் கொடு? என்று கேளுங்கள். கூட்டுற வுக் கடனை இரத்து செய்யுங்கள். நாங்கள் அதைச் செய்யச்சொன்னால், கூட்டு றவு அமைப்பையே சேதப்படுத்துவதா? நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று நடப்பது ஜனநாய விரோத நடவடிக்கை. மிகவும் தவறான நடவடிக்கை. எல்லா
அதிகாரமும் எங்களுக்குத்தான். நாங்கள் வைத்தது தான் சட்டம் என்றால்,இப் படிச் சொன்னவர்கள் வரலாற்றில் பல எச்சரிக்கைகளை தந்துவிட்டுப் போய்
இருக்கிறார்கள். கூட்டுறவுக் கடன்களை இரத்து செய்யுங்கள். தேசிய வங்கிக்
கடன்களை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும்.
நாதியற்றுப்போய்விட்டோம் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். யானைக் குத் தன் பலம் தெரியாது. அவர்கள் என்ன செய்ய முடியும் என்று இருக்கிறார் கள். நான் விவசாயப் பெருமக்களுக்குச் சொல்கிறேன். உங்கள் கரங்கள் உறுதி வாய்ந்த கரங்கள், நெஞ்சுறுதி படைத்த கரங்கள்.பலருக்கு சோறு போட்ட கரங் கள். பிறரை வாழ வைத்த கரங்கள். உங்களுக்காக பாடுபடுவதையும், குரல்
கொடுப்பதையும் விட எங்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எனவே
இந்தச் சூழலில் தமிழக அரசுக்கு அதை ஒரு விண்ணப்பமாக வைக்கிறோம். நீ
வேறு பிரச்சினையைச் சொல்லிவிட்டு, அதற்கு விடை சொல்லாமல் போய்
விட்டாயே என்று நினைக்கக்கூடாது.
கேரளம், ஆந்திரம், கர்நாடகம் வஞ்சிக்கிறது. மத்திய அரசு துரோகம் செய் கிற து. இப்பொழுது தலைக்குமேல் கத்தியாகத்தான் அவர்கள் அணை பாதுகாப் பு மசோதாவை சட்டமாக்கப் போகிறார்கள். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட் டால், இந்தியாவில் மிகப்பெரிய அழிவுக்கு ஆளாகப் போவது நம்முடைய மாநி லம்தான். அக்கிரமமாக கேரளத்துக்காரன் கொண்டுவந்த சட்டத்தை இரத்து செய்வதற்குப் பதிலாக அதே சட்டத்தை மத்திய அரசாங்கம் சட்டமாக்கப்போ கிறது. என்ன கொடுமை பாருங்கள். கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த அதி கா ரங்களுடன் இருக்கிறார்கள். இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால், சோவியத் ரஷ்யாவைப் போல இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று நான் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் நேரிடையாகவேச் சொல் லி யிருக்கிறேன்.அதனால், இறையாண்மைக்கு ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்தைப் பேசுகிறான் என்று மத்திய அரசாங்கத் தினுடைய உளவுத்துறை எழுதிக் கொண்டு இருக்கலாம். நான் பிரதமரிடத் திலேயே சொல்லி இருக் கிறேன். நடக்கப் போவதைச் சொல்லி இருக்கிறேன்.
கடமை தவறிய மத்திய அரசு
சோவியத் ரஷ்யா உடையும் என்று 1990 ஆம் ஆண்டு திருச்சி மாநாட்டில் பேசி ய போது எல்லோரும் கேலி செய்தார்கள்.இரண்டு வருடத்தில் 15 நாடுகளாகி
விட்டது. இந்திய பூபாலத்தில் எங்கள் உரிமைகளை அழிப்பதற்கு பக்கத்து மாநி லங்கள் வஞ்சகம் செய்தால், தடுக்க வேண்டிய கடமையில் அதைச் செய்யத்
தவறினால் மத்திய அரசாங்கம் எங்களுக்கு எதற்காக? தேவை இல்லையே!
மத்திய அரசினுடைய போக்கு எப்படிப் பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை
சொல்கிறேன். அண்ணன் புலமைப்பித்தன் அவர்கள் 1980களில் என்னிடம் பேசி யதைச் சொன்னார். 1986 ஆம் வருடம் நவம்பர் 26. நம் போற்றுதலுக் குரிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள்.
அந்த நாளில் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கான கவன ஈர்ப்புத் தீர்மா னத்தைக் கொண்டு வந்து உரையாற்றுகிற போது நான் சொன்னேன், எங்கள் மன்னர்கள்,எங்களுடைய மூதாதையர்கள் படை யெடுத்துச் சென்று சிங்கள வர் களை விரட்டியவர்கள். எங்கள் ராஜ ராஜசோழன் இங்கே இருந்து கப்பல்
படையை அனுப்பி தென்கிழக்கு ஆசியா எங்கும் பரவி படை நடத்தியவன்.ஈழத் தில் வெற்றிக்கொடியை நாட்டிய வன், சிங்களவனை விரட்டியவன் என்று கூறி விட்டு, நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன்.
இந்த நாடாளுமன்றத்தின் வெளிச் சுவரின் உள்பக்கச் சுவர்களிலே அருமை யான அஜந்தா வண்ண ஓவியங்களைப் போல வரலாற்றுச் சித்திரங்கள் தீட் டப்பட்டு இருக்கின்றன.அதில் ஒரு சித்திரம், மகாராணா பிரதாப் சிங் போர்க் களத்தில் அவரின் உடம் பெல்லாம் அம்புகள் பாய்ந்த நிலையில் அவரை சுமந் து கொண்டுபோன குதிரை ஒரு கால் வெட்டுப்பட்ட நிலையில் கீழே விழுந்து இறந்துபோனது. மூர்ச்சைத் தெளிந்து எழுந்து பார்த்துவிட்டு, என் சகோதரனே, நீ இறந்துவிட்டாயா? என்று அவன் அழுதான். அந்தக் கவிதையை எழுதி வைத் தி ருக்கிறார்கள். அந்தப் பெயரைத் தான் ஜெய்பூருக்குப் போகிற இரயிலுக்கு வைத்து இருக்கிறார்கள்.சாட்டக் எக்ஸ்பிரஸ் என்று. மகாராணா பிரதாப் சிங் கினுடைய குதிரையின் பெயர் சாட்டக்.
நான் நாடாளுமன்றத்தில் சொன்னேன், மகாராணா பிரதாப் சிங்கினுடைய அந் தப் போர்க்கள தியாக மயமான காட்சி, குதிரை செத்துக்கிடக்கிறது,அவன் அழு கிறானே அதற்குப் பக்கத்தில் ஒரு படம் இருக்கிறது. அந்தப் படத்தில் மணி முடி தரித்த மன்னன் ஒருவன் கடற்கரையில் நிற்கிறான். அவன் கரம் கடலை நோக்கியவாறு இருக்கிறது.கடலில் மரக்கலங்கள் செல்கின்றன.அங்கே புலிக் கொடி பறக்கிறது. வேலும், வாளும் தாங்கிய வீரர்கள் இருக்கிறார்கள். the expedi tion of Raja Raja Chola to Srilanka என்று கீழே எழுதி வைத்திருக்கிறார்கள். நாங்கள்
இன்றைக்கு இந்தியா என்ற அமைப்புக்குள் இருக்கிறோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகள் இப்படி அழிக்கப்படுகிறார்கள் என்று நான் பேசிய ஒருவார காலம் கழித்து, அந்தப் படத்தை அங்கேயிருந்து அகற்றி விட்டார்கள்.இப்போது அந்தப் படம் கிடையாது. நான் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டேன், அது எங்கே இருக்கிறது என்றே தெரிய வில்லை. அட, பைத்தியக்காரர்களே!
படத்தை அகற்றினீர்கள், இராஜீவ் காந்தியினுடைய பாட்டன் எழுதிய புத்தகத் தை தீ வைத்துக் கொளுத்து வீர்களா?
பண்டித ஜவஹர்லால் நேரு நைனிடால் சிறையில் இருந்து தன் மகள் பிரிய தர்ஷினி இந்திராவுக்கு எழுதிய உலக சரித்திரக் கடிதங்கள் என்று தமிழில்கூட மொழி பெயர்த்து இருக்கிறார்களே, அந்தக் கடிதத்தில் சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி எழுதுகிற போது, the Choa Empire had a mighty powerful navy என்று. வலிமையான
கப்பல்படை இருந்தது. சோழர்களின் கப்பல் படையில் யானை களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவுக்கு அந்தப் போர்க்கப்பல்கள் பலம் வாய்ந்த வையாக
இருந்தன என்று, நேரு எழுதிய புத்தகத்தை அழித்துவிடுவீர்களா? புத்தகத்தை எல்லாம் இனி தீ வைத்து அழிக்க முடியாது.
அலெக்சாண்ட்ரியா நூலகம் கொளுத்தப் பட்டதைப்போல, யாழ்ப்பாண நூல கத்தை கொடிய சிங்களவர்கள் கொளுத்தியதைப்போல, இனிமேல் நூலகங் களை அழித்துவிட முடியாது.காரணம், எல்லா நூல்களும், இணைய தளங் களில் கொண்டுவந்துவிட்டார்கள். அந்த வரலாற்றை மறைத்து விடுவீர்களா? இங்கே அண்ணன் புலமைப் பித்தன் அவர்கள் கேட்டார்களே! இத்தனை தமிழர் களைக் கொன்று குவித்ததற்குப் பிறகு என்ன பதில் என்று கேட்டார். 1983 ஆம்
வருடத்தில் வெலிக்கடைச் சிறையில் நடைபெற்ற சித்திரவதைகளைச் சொன் னபோது, உங்கள் முகம் எவ்வளவு வாடிப்போயின என்று பார்த்தேன். 2010, 2011, 2012, 2013 இல் நடைபெற்றது முள்ளிவாய்க் காலுக்குப் பிறகு. ஈழத்துத் தமிழ் இளைஞர்களை, தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவத்தினர் கொண்டுபோய் எப்படி கொடுமை செய்கிறார்கள் என்று உலகத்தினுடைய மனிதஉரிமை கண் காணிப்பகம் பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு அறிக்கை தந்து இருக்கிறது. நீங்கள் இணையதளத்தில் பார்க்கலாம்.
இப்பொழுது 2010க்குப் பிறகு, ஈழத்தமிழ் இளைஞர்களைக் கொண்டுபோய் பழுக் கக் காய்ச்சிய இரும்புகளைக் கொண்டுபோய் உயிர்த் தலத்தில் சொருகி கொடு மை செய்கிறார்கள்.இதை நான் சொல்லவில்லை. மனித உரிமைகள் ஆணை யம் பிரமாண வாக்கு மூலத்தோடு சொல்லியிருக்கிறது.கொடூரமான முறை யில் அவர்களை சித்ரவதை செய்து, சின்னச் சின்ன இரும்புக் குண்டுகளைச் செலுத்தி சித்ரவதை செய்திருக்கிறார்கள். நான் விடுதலைப்புலிகள் இயக்கத் தைச் சேர்ந்த முன்னாள் வீரர் என்று எழுதி கையெழுத்து வாங்கியிருக்கிறார் கள்.பதினாறு, பதினேழு வயது பெண்களைக் கொண்டுபோய், அதைச் சொல் லவே முடியாது. அந்தப் பெண் பிள்ளைகள் கொடுத்த வாக்கு மூலத்தைப் படிக் கவே முடியவில்லை.இந்தக் கொடுமைகள் இப்பொழுதும் நடக்கிறது.
நான் 1998 ஆம் வருடத்தில் மனித உரிமைக் கமிசன் துணைத் தலைவர் ஜோர் ஸ்டிடம் போய் நடராஜர் சிலையைக் கொடுத்துவிட்டு, இது கலைப் பொக்கி சம். தமிழ்நாட்டில் இதை கடவுளாக வழிபடுகிறார்கள். இது மிகவும் அழகானது என்றேன். எப்பொழுதும் இதை என் டேபிளிலேயே வைத்துக் கொள்வேன் என் றார். அவரிடத்தில் ஒருமணி நேரம் பேசினேன். அப்பொழுது சொன்னேன்,
முழுமையான மதுவிலக்கை வலியுறுத்தி, கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தொண்டர் அணி - இளைஞர் அணி - மாணவர் அணி
தோழர்கள் பங்கேற்ற, மூன்றாம் கட்ட விழிப்புணர்வுப் பிரச்சார நடைப் பய ணம், பொள்ளாச்சியில் தொடங்கியது. ஈரோட்டில் 28.04.2013 அன்று நிறைவு
பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ ஆற்றிய உரை வருமாறு..
பகுதி 3 யின் தொடர்ச்சி ....
குடிநீர் இல்லை....
மணலை அள்ளிக்கொண்டுபோய் விற்றீர்களே, எங்கே இருக்கிறது நிலத்தடி நீர்.குடிக்கத் தண்ணீர் கிடையாது. வருகிற வழியெல்லாம் வேதனைக்குரல்ஒ லிக்கிறது. இந்த நிலைமை இப்படியே நீடித்தால் எங்கே வாழப்போகிறோம். இதை எல்லாம் சிந்தித்தார்களா? மணலை கொள்ளை யடிப்பவர்கள். தங்கள் கஜானாக்களை நிரப்பிக் கொள்வதற்கு வருங்கால சமுதாயத்தையா
அழிப்ப து?
புலவர்கள் கடந்த கால இலக்கியங் களைப் பற்றிப் பேசுவார்கள்.குறிஞ்சி, முல் லை, மருதம், நெய்தல் இருந்தது.தேரிக் காடுகள் பாலையாகத் திரிந்தது. எத் தனை திணைகள். கவிஞர்கள் எத்தனை விதமான பாடல்களை எழுதினார்கள். ஒவ்வொரு திணைக்கும் என்ன விளக்கம். இனி திணைகள் இருக்குமா குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் இருக்குமா? எல்லாம் பாலை தான்.
சந்தன மரங்களும், அழகிய விருட்சங் களும் ஓங்கி வளர்ந்திருக்க மந்திகள்
அங்கே தாவிப்பாய்ந்துகொண்டிருக்க,அங்கே கிடைக்கின்ற சந்தனத்தை வெளி தேசங்களுக்கு அனுப்புகிற அளவுக்கு செல்வம் சிறந்திருக்க,குறிஞ்சி திணை பாடப்பட்டது. மலை, மலை சார்ந்த இடம் குறிஞ்சி எனப்பட்டது. காடுகள், அந்த காடுகளுக்குள் ஓடித்திரிகிற மான்கள், அந்த காடுகளில் கிடைக்கின்ற பொருட் கள், வேட்டைக்குச் செல்கின்றவர்கள்.அந்தக் காடுகளும் செழிப்பாக இருந்தது.
அதை முல்லை நிலம் என்றார்கள்.செந்நெல் வயல்கள் செழித்திருந்த தோட் டங்கள் அதை மருத நிலம் என்று வர்ணித்தார்கள். கடல் அலைகளில் துள்ளி விளையாடுகிற மீன்கள், கடலுக்கு அடியில் சிப்பிகளுக்குள்ளே முத்துக்கள், நெய்தல் நிலப் பெருமை பேசியது. தமிழர்கள்தான் முதல் கடலோடிகள். அது எங்கள் கரிகாலன் காலத்துக்கு முன்னாலே உலகத்தில் முதன் முதலாக கடல் வழிப் பயணம் செய்யக்கூடியதை கிரேக்கர்கள் கண்டுபிடிக்கவில்லை. தமிழர் கள் தான் கண்டுபிடித்தார்கள். இன்றைக்கு இந்த இயற்கைச் செல்வம் எல்லாம்
அழியக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது.
விவசாயிகள் இனி நமக்கு வாழ்வு இல்லை என்று நொறுங்கிக் கிடக்கிறார்கள். விவசாயிகளினுடைய நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க முயன்ற போது, நம் நாடாளுமன்ற உறுப்பினரும், அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர் களும், விவசாயிகளுக்காக போராடக்கூடிய காசியண்ணக்கவுண்டர், பொன் னை யன் போன்றவர் களும், ஒன்றாகச் சேர்ந்து போராட்டம் நடத்தியபோது, நானும் அந்தப் போராட்டத்துக்கு வந்து சேர்ந்தேன்.
வைகோவைக் கூப்பிடு!
எங்கேயாவது பிரச்சினை என்றால் 108க்கு போன் போடுவார்கள். தீ பற்றிக்
கொண்டது என்றால், தீயணைப்புத் துறைக்குப் போன் போடுவார்கள். அது மாதிரி எங்காவது மக்களுக்கு பிரச்சினை என்றால், வைகோவுக்கு போன் போடுங்கப்பா வருவார். போராடு வதற்கு அவர்தான் சரியான ஆள் என்கிறார் கள். ஓட்டுப் போடுகிறார்கள், போடவில்லை. அது இரண்டாவது. இவர் வந்தா தான் போராட்டத்துக்கு சரியாக இருக்கும். சரியாக நிற்பார் என்கிறார்கள். முல் லைப் பெரியாறுக்குப் போராடி இருக்கிறார், உலகக் கோடீஸ்வரனை எதிர்த்து ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக வைகோ போராடியிருக்கிறார். எங்களிடம் பணமே கிடையாது. அடுத்த மாதம் தாயகத்தில் சம்பளம் போட வழியில்லை.
ஐம்பதாயிம் கொடுத்தால் கண்ணில் ஒத்திக்கொள்ளலாம். ஐம்பது கோடி கொடுத்தது மாதிரி நினைத்துக்கொள்கிறேன். வருகிற வழியில் கொஞ்சம் நிதி கொடுத்தார்கள். நான் நமது எம்.பி.யிடம் சொன்னேன், இந்த மாதத்தை எப்படி யாவது ஓட்டிவிடலாம் என்று. எனக்கு இந்த இலட்சக்கணக்கான தொண்டர் கள் இருக்கும்போது, இதைவிட எதற்கு இந்தப் பணம்? எங்களுக்கு என்னப் பிரச் சினை? இருபது வருடம் அல்லவா கட்சி நடத்தி இருக்கிறோம்.
தொண்டன் ஆரம்பித்த கட்சி.பத்தொன்பது வருடமாக இரண்டு மலைபோல் இருக்கின்ற கட்சிகளை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிற இயக்கம். தரணி எங்கும் வாழ்கின்ற தமிழர்கள் போற்றுகிற இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம் இருக்கிறது. வாழ்க்கையில் எனக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? இவ்வளவு சகோதரர்கள், இவ்வளவு தொண்டர்கள். இவர்கள் ஒவ் வொரு வரும் கோடி கோடியான பணத்துக்கு நிகரானவர்கள்.
ஸ்பார்ட்டாவில் மொத்தம் முன்னூறு பேர்தான் நின்றார்கள். மறுமலர்ச்சி தி. மு. க.வில் உள்ள தொண்டன் அப்படிப்பட்டவன். பெரிய ஓட்டு வங்கி இல் லை.
மல்லிகைப் புரட்சி எகிப்தில் வருமென்று எவர் ஆரூடம் சொன்னது? முக நூலில் கொண்டுவந்ததுதான். எகிப்தில் இலட்சக்கணக்கில் திரண்டார்கள். எந் தக் கட்சியும் கிடையாது. டுனிசியாவில் புரட்சி வந்ததே, எப்படி வந்தது? அது போல் எந்தக் கட்சியும் இல்லாத இளைய தலைமுறை, மாணவர் உலகம்
ஈழத்துக்காக போர்க்கொடி ஏந்தி இருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும் அந்தக் கரங்கள் போர்க்கொடி உயர்த்தும்.அப்போது இதுவரை வகுக்கப்பட்ட வரை யரை கள் எல்லாம் உடைந்து தரைமட்டமாகும். இதுதான் வாக்கு வங்கி. இது தான் அமைப்பு. இவர் களுக்குத்தான் கட்சி, இவர்களுக்குத்தான் ஓட்டு, இதை யாரும் மாற்ற முடியாது என்பதை, வருங்காலத் தலைமுறை நினைத்தால் மாற்ற முடியும்.
இளையோர் உள்ளத்தில் - எந்தக்கட்சியையும் சாராத இளையோர் நெஞ்சில் ஒரு தேடல் இருக்கிறது.அவர்கள் ம.தி.மு.க.வினர் அல்ல. ஒரு தேடல் இருக் கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்-அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்துக்கும் கொள்கைகளுக்கு எதிராக என்று நான் கூற மாட்டேன். அந்த கட்சிகள் போகிற போக்கினால் ஏற்பட்ட வேதனையினால், ஒரு மாற்று வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இந்த இரண்டும் பெரிய கட்சிகள், வாக்கு வங்கி உள்ள கட்சிகள். ஆண்ட கட்சிகள். அரசு பொறுப்பில் இருந்த கட்சிகள். ஒரு தேடல் இருக்கிறது.அதிருப்தியும் இருக்கிறது.அது மெது வாக, வேகமாக வளர ஆரம்பித்து இருக்கிறது. அந்தத் தேடலுக்கான விடை என்ன என்கிறபோது, அதற்கு தகுதியுள்ள இயக்கமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தன்னை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நான் நினைக் கிறேன். இதை முடிவுசெய்ய வேண்டியது இந்த இளைஞர்கள்.
எப்படி ஜூனியர் விகடனில் மார்க் போட்டார்களே, தமிழ் ஈழத்துக்காக தொடர்ந் து ஆதரித்த கட்சி என்கிற போது, ம.தி.மு.க.வுக்கு 49.7 என்றார்கள்.எனக்கே அதில் கொஞ்சம் ஏமாற்றம் தான். இவ்வளவுதானா? நான் மற்றவர்கள் யாரை யும் குறை சொல்ல வில்லை. நாங்கள் கொள்கைகளுக்காகவே வாழ்ந்து வந்தி ருக்கிறோம்.
முறையாக நடந்த கருத்துக்கேட்பு
கெயில் பிரச்சினையில் நாங்கள் போராடியபோது, அவர்கள் குழாய் களைக் கொண்டுவந்து பதிக்கிறபோது,அந்தத் தாய்மார்கள், எங்களை அந்தக் குழியில் போட்டு புதைத்து விடுங்கள் என்று அழுதபோது, ஒரு ஏக்கர் வைத்து இருக் கின்ற விவசாயி வாழ்வு சூன்யமாகிற போது, கருணை உள்ளத்தோடு இதைத் தடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு விண்ணப்பம் போட்டோம். கோ ரிக் கை விடுத்தோம். அவல் பூந்துறையில் கூட்டம் போட்டுப்பேசினோம். முத லமைச்சர் அவர்கள் கருத்துக்கேட்பு நடத்த வேண்டும் என்று சொன்னோம்.
கருத்துக் கேட்பும் முறையாக நடைபெற்றது. நல்லது என்றால், நல்லது என்று சொல்லி விடுவோம். ரோஜா என்றால் ரோஜா என்று சொல்லி விடுவோம். ரோஜாவை ரோஜா என்று அழைப்போம், மண் வெட்டியை மண்வெட்டி என்று அழைப் போம். கருத்துக்கேட்பு முறையாக நடைபெற்றது, எனக்குத் தெரிந்து
கெயில் நிறுவனப் பிரச்சினையில் மட்டும்தான். நல்ல முடிவெடுத்தார்கள்.
அவர்கள் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார்கள். ஆனாலும் கூட குழாய்களை அகற்றிவிட்டு, நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். முதலமைச்சர் அவர்களே இந்த நாட்டின் இலட்சோப இலட்சம் விவசாயிகள் நொறுங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று விருதுநகரில் என் தலை மையில் உண்ணாவிரதம் இருந்தோம். நிவாரணம் வழங்கினீர்களா? இல்லை யே! டெல்டா பகுயிலேயே இன்றைக்கு ஏமாற்றம்தான். வாழ்வு எப்படி?
விவசாயிகள் எப்படி வாழ்வது.அவர்களுக்கு நிவாரணம் தருவதற்கு நடவடிக் கை எடுங்கள். மத்திய அரசிடம் நிதியைக் கொடு? என்று கேளுங்கள். கூட்டுற வுக் கடனை இரத்து செய்யுங்கள். நாங்கள் அதைச் செய்யச்சொன்னால், கூட்டு றவு அமைப்பையே சேதப்படுத்துவதா? நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று நடப்பது ஜனநாய விரோத நடவடிக்கை. மிகவும் தவறான நடவடிக்கை. எல்லா
அதிகாரமும் எங்களுக்குத்தான். நாங்கள் வைத்தது தான் சட்டம் என்றால்,இப் படிச் சொன்னவர்கள் வரலாற்றில் பல எச்சரிக்கைகளை தந்துவிட்டுப் போய்
இருக்கிறார்கள். கூட்டுறவுக் கடன்களை இரத்து செய்யுங்கள். தேசிய வங்கிக்
கடன்களை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும்.
நாதியற்றுப்போய்விட்டோம் என்று விவசாயிகள் நினைக்கிறார்கள். யானைக் குத் தன் பலம் தெரியாது. அவர்கள் என்ன செய்ய முடியும் என்று இருக்கிறார் கள். நான் விவசாயப் பெருமக்களுக்குச் சொல்கிறேன். உங்கள் கரங்கள் உறுதி வாய்ந்த கரங்கள், நெஞ்சுறுதி படைத்த கரங்கள்.பலருக்கு சோறு போட்ட கரங் கள். பிறரை வாழ வைத்த கரங்கள். உங்களுக்காக பாடுபடுவதையும், குரல்
கொடுப்பதையும் விட எங்களுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது? எனவே
இந்தச் சூழலில் தமிழக அரசுக்கு அதை ஒரு விண்ணப்பமாக வைக்கிறோம். நீ
வேறு பிரச்சினையைச் சொல்லிவிட்டு, அதற்கு விடை சொல்லாமல் போய்
விட்டாயே என்று நினைக்கக்கூடாது.
கேரளம், ஆந்திரம், கர்நாடகம் வஞ்சிக்கிறது. மத்திய அரசு துரோகம் செய் கிற து. இப்பொழுது தலைக்குமேல் கத்தியாகத்தான் அவர்கள் அணை பாதுகாப் பு மசோதாவை சட்டமாக்கப் போகிறார்கள். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட் டால், இந்தியாவில் மிகப்பெரிய அழிவுக்கு ஆளாகப் போவது நம்முடைய மாநி லம்தான். அக்கிரமமாக கேரளத்துக்காரன் கொண்டுவந்த சட்டத்தை இரத்து செய்வதற்குப் பதிலாக அதே சட்டத்தை மத்திய அரசாங்கம் சட்டமாக்கப்போ கிறது. என்ன கொடுமை பாருங்கள். கேரளத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த அதி கா ரங்களுடன் இருக்கிறார்கள். இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தால், சோவியத் ரஷ்யாவைப் போல இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று நான் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் நேரிடையாகவேச் சொல் லி யிருக்கிறேன்.அதனால், இறையாண்மைக்கு ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்தைப் பேசுகிறான் என்று மத்திய அரசாங்கத் தினுடைய உளவுத்துறை எழுதிக் கொண்டு இருக்கலாம். நான் பிரதமரிடத் திலேயே சொல்லி இருக் கிறேன். நடக்கப் போவதைச் சொல்லி இருக்கிறேன்.
கடமை தவறிய மத்திய அரசு
சோவியத் ரஷ்யா உடையும் என்று 1990 ஆம் ஆண்டு திருச்சி மாநாட்டில் பேசி ய போது எல்லோரும் கேலி செய்தார்கள்.இரண்டு வருடத்தில் 15 நாடுகளாகி
விட்டது. இந்திய பூபாலத்தில் எங்கள் உரிமைகளை அழிப்பதற்கு பக்கத்து மாநி லங்கள் வஞ்சகம் செய்தால், தடுக்க வேண்டிய கடமையில் அதைச் செய்யத்
தவறினால் மத்திய அரசாங்கம் எங்களுக்கு எதற்காக? தேவை இல்லையே!
மத்திய அரசினுடைய போக்கு எப்படிப் பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை
சொல்கிறேன். அண்ணன் புலமைப்பித்தன் அவர்கள் 1980களில் என்னிடம் பேசி யதைச் சொன்னார். 1986 ஆம் வருடம் நவம்பர் 26. நம் போற்றுதலுக் குரிய தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள்.
அந்த நாளில் நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கான கவன ஈர்ப்புத் தீர்மா னத்தைக் கொண்டு வந்து உரையாற்றுகிற போது நான் சொன்னேன், எங்கள் மன்னர்கள்,எங்களுடைய மூதாதையர்கள் படை யெடுத்துச் சென்று சிங்கள வர் களை விரட்டியவர்கள். எங்கள் ராஜ ராஜசோழன் இங்கே இருந்து கப்பல்
படையை அனுப்பி தென்கிழக்கு ஆசியா எங்கும் பரவி படை நடத்தியவன்.ஈழத் தில் வெற்றிக்கொடியை நாட்டிய வன், சிங்களவனை விரட்டியவன் என்று கூறி விட்டு, நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன்.
இந்த நாடாளுமன்றத்தின் வெளிச் சுவரின் உள்பக்கச் சுவர்களிலே அருமை யான அஜந்தா வண்ண ஓவியங்களைப் போல வரலாற்றுச் சித்திரங்கள் தீட் டப்பட்டு இருக்கின்றன.அதில் ஒரு சித்திரம், மகாராணா பிரதாப் சிங் போர்க் களத்தில் அவரின் உடம் பெல்லாம் அம்புகள் பாய்ந்த நிலையில் அவரை சுமந் து கொண்டுபோன குதிரை ஒரு கால் வெட்டுப்பட்ட நிலையில் கீழே விழுந்து இறந்துபோனது. மூர்ச்சைத் தெளிந்து எழுந்து பார்த்துவிட்டு, என் சகோதரனே, நீ இறந்துவிட்டாயா? என்று அவன் அழுதான். அந்தக் கவிதையை எழுதி வைத் தி ருக்கிறார்கள். அந்தப் பெயரைத் தான் ஜெய்பூருக்குப் போகிற இரயிலுக்கு வைத்து இருக்கிறார்கள்.சாட்டக் எக்ஸ்பிரஸ் என்று. மகாராணா பிரதாப் சிங் கினுடைய குதிரையின் பெயர் சாட்டக்.
ராஜ ராஜ சோழன் ஓவியம்
நான் நாடாளுமன்றத்தில் சொன்னேன், மகாராணா பிரதாப் சிங்கினுடைய அந் தப் போர்க்கள தியாக மயமான காட்சி, குதிரை செத்துக்கிடக்கிறது,அவன் அழு கிறானே அதற்குப் பக்கத்தில் ஒரு படம் இருக்கிறது. அந்தப் படத்தில் மணி முடி தரித்த மன்னன் ஒருவன் கடற்கரையில் நிற்கிறான். அவன் கரம் கடலை நோக்கியவாறு இருக்கிறது.கடலில் மரக்கலங்கள் செல்கின்றன.அங்கே புலிக் கொடி பறக்கிறது. வேலும், வாளும் தாங்கிய வீரர்கள் இருக்கிறார்கள். the expedi tion of Raja Raja Chola to Srilanka என்று கீழே எழுதி வைத்திருக்கிறார்கள். நாங்கள்
இன்றைக்கு இந்தியா என்ற அமைப்புக்குள் இருக்கிறோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகள் இப்படி அழிக்கப்படுகிறார்கள் என்று நான் பேசிய ஒருவார காலம் கழித்து, அந்தப் படத்தை அங்கேயிருந்து அகற்றி விட்டார்கள்.இப்போது அந்தப் படம் கிடையாது. நான் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்துவிட்டேன், அது எங்கே இருக்கிறது என்றே தெரிய வில்லை. அட, பைத்தியக்காரர்களே!
படத்தை அகற்றினீர்கள், இராஜீவ் காந்தியினுடைய பாட்டன் எழுதிய புத்தகத் தை தீ வைத்துக் கொளுத்து வீர்களா?
பண்டித ஜவஹர்லால் நேரு நைனிடால் சிறையில் இருந்து தன் மகள் பிரிய தர்ஷினி இந்திராவுக்கு எழுதிய உலக சரித்திரக் கடிதங்கள் என்று தமிழில்கூட மொழி பெயர்த்து இருக்கிறார்களே, அந்தக் கடிதத்தில் சோழ சாம்ராஜ்யத்தைப் பற்றி எழுதுகிற போது, the Choa Empire had a mighty powerful navy என்று. வலிமையான
கப்பல்படை இருந்தது. சோழர்களின் கப்பல் படையில் யானை களை ஏற்றிச் செல்லக்கூடிய அளவுக்கு அந்தப் போர்க்கப்பல்கள் பலம் வாய்ந்த வையாக
இருந்தன என்று, நேரு எழுதிய புத்தகத்தை அழித்துவிடுவீர்களா? புத்தகத்தை எல்லாம் இனி தீ வைத்து அழிக்க முடியாது.
அலெக்சாண்ட்ரியா நூலகம் கொளுத்தப் பட்டதைப்போல, யாழ்ப்பாண நூல கத்தை கொடிய சிங்களவர்கள் கொளுத்தியதைப்போல, இனிமேல் நூலகங் களை அழித்துவிட முடியாது.காரணம், எல்லா நூல்களும், இணைய தளங் களில் கொண்டுவந்துவிட்டார்கள். அந்த வரலாற்றை மறைத்து விடுவீர்களா? இங்கே அண்ணன் புலமைப் பித்தன் அவர்கள் கேட்டார்களே! இத்தனை தமிழர் களைக் கொன்று குவித்ததற்குப் பிறகு என்ன பதில் என்று கேட்டார். 1983 ஆம்
வருடத்தில் வெலிக்கடைச் சிறையில் நடைபெற்ற சித்திரவதைகளைச் சொன் னபோது, உங்கள் முகம் எவ்வளவு வாடிப்போயின என்று பார்த்தேன். 2010, 2011, 2012, 2013 இல் நடைபெற்றது முள்ளிவாய்க் காலுக்குப் பிறகு. ஈழத்துத் தமிழ் இளைஞர்களை, தமிழ்ப் பெண்களை சிங்கள இராணுவத்தினர் கொண்டுபோய் எப்படி கொடுமை செய்கிறார்கள் என்று உலகத்தினுடைய மனிதஉரிமை கண் காணிப்பகம் பிப்ரவரி 26 ஆம் தேதி ஒரு அறிக்கை தந்து இருக்கிறது. நீங்கள் இணையதளத்தில் பார்க்கலாம்.
இப்பொழுது 2010க்குப் பிறகு, ஈழத்தமிழ் இளைஞர்களைக் கொண்டுபோய் பழுக் கக் காய்ச்சிய இரும்புகளைக் கொண்டுபோய் உயிர்த் தலத்தில் சொருகி கொடு மை செய்கிறார்கள்.இதை நான் சொல்லவில்லை. மனித உரிமைகள் ஆணை யம் பிரமாண வாக்கு மூலத்தோடு சொல்லியிருக்கிறது.கொடூரமான முறை யில் அவர்களை சித்ரவதை செய்து, சின்னச் சின்ன இரும்புக் குண்டுகளைச் செலுத்தி சித்ரவதை செய்திருக்கிறார்கள். நான் விடுதலைப்புலிகள் இயக்கத் தைச் சேர்ந்த முன்னாள் வீரர் என்று எழுதி கையெழுத்து வாங்கியிருக்கிறார் கள்.பதினாறு, பதினேழு வயது பெண்களைக் கொண்டுபோய், அதைச் சொல் லவே முடியாது. அந்தப் பெண் பிள்ளைகள் கொடுத்த வாக்கு மூலத்தைப் படிக் கவே முடியவில்லை.இந்தக் கொடுமைகள் இப்பொழுதும் நடக்கிறது.
நான் 1998 ஆம் வருடத்தில் மனித உரிமைக் கமிசன் துணைத் தலைவர் ஜோர் ஸ்டிடம் போய் நடராஜர் சிலையைக் கொடுத்துவிட்டு, இது கலைப் பொக்கி சம். தமிழ்நாட்டில் இதை கடவுளாக வழிபடுகிறார்கள். இது மிகவும் அழகானது என்றேன். எப்பொழுதும் இதை என் டேபிளிலேயே வைத்துக் கொள்வேன் என் றார். அவரிடத்தில் ஒருமணி நேரம் பேசினேன். அப்பொழுது சொன்னேன்,
தொடரும் ............
No comments:
Post a Comment