Tuesday, May 14, 2013

தமிழ் இனத்துக்கு துரோகம் இழைத்த இந்திய அரசின் முகத்திரையைக் கிழிப்போம்!- பகுதி 1

இலங்கையில் முள்வேலி முகாம்களில் வதைபடும் தமிழர்களை விடுவிக்கக்
கோரியும்,இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்தும்,  இலங்
கை த் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகத்தின் நான்கு முனை களில் இருந்தும் திருச்சியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வுப் பிரச் சாரப் பயணத்தில்தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கழகப் பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் பங்கேற் றனர்.இராமேஸ்வரத்திலிருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்ட கழகப் பொதுச் செயலாளர் வைகோ 27.10.2009 அன்று இராமநாத புரத் தில் திரண்டிருந்த மக்களிடையே ஆற்றிய உரையிலிருந்து...

நடுப்பகல் நேரம், நெருப்பாகக் கொதிக்கின்ற உச்சிவெயில் உச்சந்தலையைப் பிளக்கிறது. ஒருசிலர்தான் கூட்டத்துக்கு இந்த நேரத்தில் வருவதற்கு வாய்ப்பு இருக்கும் என்று கருதினாலும், நிகழ்ச்சியில் திரண்டு இருக்கிறவர்களைப் பார்க்கிறபோது, இது கொதிக்கும் வெயிலா? அல்லது பெளர்ணமி நாளில் வீசு கின்ற பால்நிலவின் ஒளியா? என்று திகைக்க வைக்கிற அளவுக்கு உணர்ச்சி உள்ள தமிழர் கூட்டம், இராமநாதபுரத்தில் திரண்டு இருப்பதைக் காண்கிறேன்.



முள்வேலி முகாம்களுக்கு உள்ளே மூன்று இலட்சம் தமிழர்கள் வதைபடு கிறார் கள்; அடிப்படைவசதிகள் இல்லாமல் அல்லல்களை அனுபவித்துத் துயர்ப்படுகிறார்கள்; குடிநீர் வசதி இல்லை, பச்சைக் குழந்தைகளுக்குப் பாலுக் கும் வழியில்லை, பசிக்கு உணவு இல்லை, நோய்க்கு மருந்து இல்லை. நரக வேதனையை, துன்பத்தை துடிதுடித்து அனுபவித்துக் கொண்டே அழுது புலம் புகின்றார்களே, அந்த அவலக் குரல் ஓலக் குரல் நம் காதுகளில் விழவில்லை யா? நம் இதயச் சுவர்களில் எதிரொலிக்கவில்லையா?

இந்த வேதனைகள் ஒரு பக்கத்தில் மனதைப்பிடித்து ஆட்டுகிற நேரத்தில், பிரச் சனையைத் திசை திருப்புவதற்கு மன்மோகன் சிங் அரசும் கருணாநிதி அரசும் மேற்கொள்கின்ற முயற்சிகள், மேலும் வேதனையைத் தருகிறது.

ஒரு கோரிக்கைக்காக போராட்டம் நடைபெறும். பத்து கோரிக்கைகளை வைத் துப் போராட்டம் நடத்துவார்கள். போராட்டம் உச்சகட்டத்துக்குச் செல்கிற போது தான் காவல்துறை கைது செய்யும். சிலவேளைகளில் கைது செய்தவர் களை சிறைக் கொட்டடியில் பூட்டுவார்கள். பிறகு இன்னொரு கோரிக்கை எழும். சிறையில் அடைக்கப்பட்டவர்களை எல்லாம் விடுதலை செய் என்ற கோரிக்கைக் குரல் வலுவாகக் கேட்கும். பிறகு ஆட்சியாளர்களோ, அதிகார வர்க்கமோ நாங்கள் கோரிக்கையை ஏற்று அவர்களைச் சிறையில் இருந்து விடுவிக்கப்போகிறோம் என்று ஒரு அறிவிப்பைச் செய்வார்கள். பிறகு சிறை யில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

ஆனால், அவர்கள் எந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடி சிறை சென்றார் களோ, அந்தக் கோரிக்கைகளை மறக்கடித்துவிட்டு, கோரிக்கையை ஏற்று சிறையில் இருந்து விடுவித்து விட்டோம் என்று அடக்குமுறை ஆட்சியாளர் கள் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்.அதேபோலத்தான், இப்பொழுது ஈழத் தமிழர் பிரச்சனையும் இப்படி ஒரு நிலைக்கு ஒரு புதிய பரிணாமத்துக்கு வந் திருப்பது மனதுக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது.

முள்வேலி முகாம்களுக்கு உள்ளே அடைபட்டு வதைபடுகின்ற தமிழர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்த வேண்டும்; அவர்கள் பிறந்த மண்ணில், வாழ்ந்த இடங்களில், புராதனமான வீடுகளுக்குத் திரும்பச்சென்று வாழ்வதற்கு உரிய சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்பது இப்பொழுது ஏற்பட்டு இருக்கிற கோரிக்கை. இதுவே பிர தான கோரிக்கை அல்ல. உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக, வதைமுகாம் களில் இருந்து ஒருசில நூறு பேர்களை அனுப்புவதாக போக்குக்காட்டிவிட்டு, ஒருசிலர் ஒருநாளைக்கு 20,000 என்பதும், முப்பதாயிரம் என்பதும், 68,000 பேர் என்பதும் இப்படி மந்திரிமார்கள் அறிக்கை விடுவதும், அரசுகள் அறிக்கை விடு வதும், ஏதோ ஈழத்தமிழர்கள் கண்ணீர் எல்லாம் துடைக்கப்பட்டு, கருனை உள்ளத்தோடு ராஜபக்சே மடிப்பிச்சை போடுவதைப்போல, தமிழர்கள் வாழ்வுக் கு ஏதோ வழி கொடுத்துவிட்டதைப்போலத் தம்பட்டம் அடிக்கின்ற நிலைமை மிகமிக வெட்கக்கேடானது.

எத்தனைத் தமிழர்களைக் கொன்றான் ராஜபக்சே? மன்னிக்கப் போகிறோமா? எத்தனை குழந்தைகளைக் கொன்றான்? விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன் றான். எத்தனை வயது முதிர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்? அத்தனையும்
மறந்துவிடப் போகிறதா தமிழ் இனம்?

முள்வேலி முகாம்கள் அமைவதற்கு யார் காரணம்?மூன்று இலட்சம் தமிழர் கள் வதை முகாம்களில் வதைபட யார் காரணம்? ராஜபக்சே காரணம், மன் மோகன் சிங் காரணம், இந்திய அரசு காரணம்.முள்ளிவாய்க்கால் சண்டையில் மட்டுமல்ல, கிளிநொச்சி வீழ்ந்தபோது, முல்லைத் தீவு வீழ்ந்தபோது, விடு தலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டபோது, பச்சிளம் குழந்தைகளும் கொல்லப் பட்டு, இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொண்டுவந்து சித்ரவதை முகாம் களில் அன்றைக்கு நாஜிகள் யூதர்களை அடைத்து வைத்ததைப் போல, வதை முகாம்களில் அடைத்து வைக்கக்கூடிய சூழலை உருவாக்கியதில் இந்திய
அரசுக்குப் பங்கு இருக்கிறது.

அந்தத் துரோகத்தைக் கண்டு, உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்களின் உள்ளம் வேதனைத் தணலில் வெந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான், இங்கே இந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் நீங்கள் நிற்கிறீர்கள்.

இது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அல்ல. கட்சிக்கு ஆதரவு திரட்டுகிற கூட்ட மும் அல்ல. ஓட்டு வேட்டைக் கூட்டமும் அல்ல. நானிலத்தில் தமிழர்கள் நாதி யற்றுப் போய் விடவில்லை என்பதை உணர்த்துகின்ற கூட்டம்.

வதைமுகாம்களில் தமிழர்கள் அடைக்கப்படுவதற்கே காரணம் இந்திய அரசு. போர் முனையில் இந்தியா செய்த உதவி. ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, ராடார் கொடுத்து, யுத்தத்துக்குத் திட்டத்தை வகுத்துக் கொடுத்து, இந்திய இராணுவத் தளபதிகளை அனுப்பி வைத்து, நிபுணர்களை அனுப்பி, போரை நடத்தியதே இந்திய அரசு என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றேன்.

எனது அன்புக்கு உரிய இராமநாதபுரத்து மக்களே, இன்றைக்கு மருதுபாண்டியர் களின் புகழ் பாடுகின்ற நாள். அவர்களது வீரத்தியாகத்தைப் போற்றுகின்ற நாள். மண்ணின் மானம் காக்க அவர்கள் போராடினார்கள்.

இதோ பக்கத்தில் இருக்கிறது இராமலிங்க விலாசம். இந்த இராமலிங்க விலா சத் தில்தான் ஜாக்சனைச் சந்தித்தான் பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து வந்த வீரபாண்டிய கட்டபொம்மன். இங்குதான் வாள்கள் மோதின. இங்கு தான் தள பதி கிளார்க் கொல்லப்பட்டான். இங்கு இருந்துதான் தப்பிச் சென்றார்கள்.இங்கு தான் தானாபதி சிவசுப்பிரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார்.

போரில் பாஞ்சாலங்குறிச்சி அழிந்தது. கோட்டைகள் மண் மேடாக்கப்பட்டன. அதற்குப்பின்னர், பாளையங்கோட்டைச் சிறையை உடைத்து வெளியே வந்து,
பதினாறு மாத காலத்திற்குப்பின்னர் தப்பிவந்த ஊமைத்துரை, ஏழு நாளில் கோட்டையைச் சீர்படுத்தி, படை நடத்தி. வெள்ளைக்காரனை 60 நாள்கள் திண ற டித்து, அதன்பின்னர் வெள்ளையர்களின் பீரங்கிகள் துப்பாக்கிகள் படைபலத் துக்கு முன்னர் ஈடுகொடுக்க முடியாத நிலையில், அங்கு இருந்து புறப்பட்டு சிவகங்கைக்கு வந்தார்.

அன்றைக்கு சிவகங்கை மன்னர்கள் நாங்கள் வாழ வேண்டும், அழிந்துவிடக் கூடாது என்று கருதி இருந்தால் எட்டையபுரத்தைப்போல, புதுக்கோட்டை யைப் போல, அவர்கள் வெள்ளைக்காரனுக் குச் சாமரம் வீசியிருந்தால் அவர் களுக்கு அழிவு கிடையாது.நடுத்தெருவில் சின்ன மருதுவை கூண்டில் அடைத் துக் கொண்டு போன அவலம் நேர்ந்து இருக்காது. அவருடைய தொடை எலும் பு குண்டு பாய்ந்து முறிய, எல்லோரும் பார்க்கின்றவகையில், சின்ன மருது வை கூண்டில் அடைத்துக் கொண்டு செல்கிறோம், எங்களை எதிர்த்தால் இது தான் கதி என்று மிரட்டுவதற்காக இழுத்துக் கொண்டு போனார்கள்.

பெரிய மருதுவையும், சின்ன மருதுவையும் தூக்கில் இட்டதோடு மட்டுமல்ல, அவர்களோடு 500 பேர் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்கள். ஜாலியன் வாலா பாக்கைவிடக் கொடுமை இங்கே நடந்தது. இந்திய விடுதலை வரலாற்றில் தமிழர்கள் செய்த தியாகத்துக்கு நிகராக எவனும் செய்யவில்லை. நேதாஜியின் படையில் 40,000 பேர் தமிழர்கள்தான் இருந்தனர்.

அந்தத் தியாகத்தை இன்றைக்கு மதிக்கிறோம்.காளையார்கோவிலில் என் தலை புதைக்கப்படட்டும் என்று சொன்னாரே பெரியமருது, அந்த 27 ஆம் தேதி யை இன்றைக்குப் போற்றி வணங்குகிறோம். அவர்கள் நமது மனங்களில் வாழ்கிறார்கள். வரலாற்றில் வாழ்கிறார்கள்.மானம் காக்கப் போராடிய மருது இருவர்கள் வாழ்கிறார்கள். ஆனால், காட்டிக் கொடுத்தவர்களை உலகம் காறித் துப்புகிறது. தமிழர்களின் சரித்திரம் காறித்துப்பும். கருணாக்கள் தப்ப முடியாது, அவர்களை உலகம் காறித் துப்பும் என்பதை மாத்திரம் நான் தெரி வித்துக் கொள்கிறேன்.

ஆழிப்பேரலைத் தாவி எழுந்து தமிழர்களை அள்ளி விழுங்கியது. 25,000 தமிழர் கள் செத்தார்கள். பிரெஞ்ச் அரசு நிவாரணம் முகாம் அமைத்தது. அங்கே வேலை பார்த்த தமிழ் இளைஞர்கள் 17 பேரைச் சிங்களச்சிப்பாய்கள் சுட்டுக் கொன்றார்கள். செஞ்சோலையில் 61 சிறுமிகளைக் குண்டு வீசிக் கொன்றார் கள். நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை நட்ட நடுவீதியில் சுட்டுக் கொன் றானே சிங்களவன்.இந்தப் படுகொலைகள் எதையாவது இந்தியா கண்டித்ததா?
எல்லாம் மறந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? பத்திரிகையாளர்கள் இங்கே வந்து இருக்கிறார்கள்.

நான் கேட்கிறேன். அங்கே பத்திரிகையாளர்களுக்குச் சுதந்திரம் உண்டா? தராக் கி என்ற பத்திரிகையாளர் பட்டப்பகலில் நட்டநடு வீதியில் சுட்டுக் கொல்லப் பட்டாரே? ராஜபக்சேவின் நெருங்கிய நண்பராக இருந்த லசந்த விக்கிரம துங் கே, சொந்தமக்களையே கொல்கின்ற இந்தக் கொடுமையை நான் தெரிவிப்ப தால் ராஜபக்சே என்னைச் சுட்டுக்கொல்வான். என் வீட்டுக்குக் குண்டு வைத் தான்.நான் இறந்தபிறகு இந்த மரணவாக்குமூலத்தை என் பத்திரிகை வெளியி டட் டும் எனச்சொல்லி, இறந்தானே லசந்த விக்கிரமதுங்கே? பன்னாட்டுச்செய் தி யாளர்கள் அங்கே அனுமதிக்கப்பட்டார்களா? செஞ்சிலுவைச் சங்கம் சுதந் திரமாக சென்று உள்ளே பார்வையிட அனுமதிக்கப்பட்டதா? ஐ.நா. மன்றத்தின் பிரதிநிதிகள் எச்சரிக்கப்பட வில்லையா?

இவ்வளவு கொடுமைகளும் நடந்ததே, இந்த யுத்தம் ஏன் மூண்டது? எதற்காகப் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள்? அடிப்படையை மறந்துவிடக்கூடாது.

எதற்காக மருதுபாண்டியர்கள் போராடினார்கள்? அடிமைகளாக இருக்கக் கூடா து என்பதற்காக. எதற்காக பகத்சிங் வெடிகுண்டு ஏந்தினான்? அடிமை இருளில்
வாழ முடியாது என்பதற்காக. அப்படித்தானே தங்களுடைய இனம் மானத்தோ டும், உரிமையோடும் வாழவேண்டும் என்பதற்காக ஈழத்தமிழர்கள் போராடினார்கள்.

பிழைக்கப்போன இடத்தில் இது என்னவேலை என்று சிலர் கேட்கிறார்கள். இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்கள் பிழைக்கப் போனவர் கள் அல்ல. அவர்கள் அந்த மண்ணின் மைந்தர்கள். இந்தக் கருத்தை இந்திய நாடாளுமன்றத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் அம்மையார் இந்திரா காந்தி அவர்கள். தொலைநோக்குப் பார்வையோடு சொன்னார். வடக்கிலும் கிழக்கிலும் வாழுகிற தமிழர்கள் அந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள், அங்கு நடப்பது இனப்படுகொலை என்றார்.

ஈழத்தமிழர்கள் வலுவாக இருந்தால், தமிழர்கள் ஈழம் அரணாக எழுந்தால்,தெற் கே இந்தியாவுக்கு ஒருபாதுகாப்பு என்று இந்திரா காந்தி உணர்ந்தார், எண்ணி னார். இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்காக தமிழர்கள் காவு கொடுக் கப் பட்டு விட்டார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதுவும் உண்மையல்ல. இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்கே ஆபத்து இனிமேல்தான் உரு வாகிறது, இலங்கையில்தான் உருவாகிறது. அங்கே சீனர்களும் பாகிஸ் தானி யர்களும் வந்து கால் ஊன்றி விட்டார்கள்.

தெற்கே தமிழ் ஈழம் ஒரு அரணாக இருந்து இருக்கும்.அவர்களை திட்டமிட்டு அழித்தார்கள். உலகத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை எல்லாம் பிரயோ கித் தார்கள்.பிராணவாயு உறிஞ்சப்படும். குண்டுகள் மேலே இருந்து வந்து
வி ழும். இப்படி ஒரு கூட்டமாக இருக்கின்ற இடத்தில் குண்டுவிழுந்தால் அத்த னை பேரும் எட்டு நிமிடத்துக்குள் மடிந்து விழுவார்கள்.

நெருப்பிலே உலோகங்களை உருக்குவதைப்போல எலும்பும் தசையும் நரம் பும் அப்படியே உருகிப்போய்விடும். இப்படிப்பட்ட குண்டுகளை வீசினார்கள்.
சீனாவும், பாகிஸ்தானும், இஸ்ரேலும், ஈரானும், ரஷ்யாவும், இந்தியாவும் சேர்ந்து வழங்கிய ஆயுதபலம் கொண்டு சிங்களவன் தாக்கினான், ராஜபக்சே
தாக்கினான்.

இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்களே,இந்தக் கொடுமை களைச் செய்தவனை கூண்டில் நிறுத்த வேண்டாமா? உலகில் ஹிட்லருக்கு மன்னிப்பு உண்டா? இடி அமீனுக்கு மன்னிப்பு உண்டா? எப்படி ராஜபக்சேவுக்கு மன்னிப்பு கொடுப்பான் எவனும்? யார் இதை சகித்துக் கொண்டு இருக்க முடி யும்?

தமிழினம் நாதியற்றுப் போய்விட்டதா, மனித சமுதாயத்தில்? மனிதாபிமான அடிப்படையில்கூட எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். நமக்கோ அதை யும்தாண்டிய உறவு. தொப்பூழ் கொடி உறவு.மொழியால், இனத்தால் கலை யால், பின்பற்றும் கலாச்சாரத்தால், பண்பாட்டால், நாகரிகத்தால்,ஓடும் குருதி ஓட்டத்தால், நாடி நரம்புகளில் பின்னிப் பிணைந்து இருக்கக்கூடிய உணர்ச்சி யால், நாம் நம் சகோதரர்கள் என்கிற உணர்ச்சியோடு இதைப் பார்க்கிறோம்.

இத்தனை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது,இந்தக் கடல் அலை களுக்கு அப்பால் இருந்து அவர்கள் எழுப்பிய அழுகுரல், ஓலக்குரல், ஒருநா ளல் ல - இரு நாளல்ல - எத்தனை மாதங்கள்? அவ்வளவு கொடுமையும் தொடர்ந்து நடந்தபோது, நான் இந்த இராமநாதபுரம் பரந்த தெருவில் திரண்டு இருக்கக்கூடிய மக்களைக் கேட்கிறேன். தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றவில்லையா? கருணாநிதி அவர்களே யார் குறுக்குச்சால் ஓட்டு கிறார்கள்?

சட்டமன்றத்தில் நீங்கள் தீர்மானம் நிறைவேற்றுகிற போது அண்ணா தி.மு.க. எதிர்த்ததா? இல்லையே. நீங்கள் கொண்டுவந்த தீர்மானத்தை அரசியலில் எதி ரும் புதிருமாக இருக்கின்ற அண்ணா தி.மு.க. முழுமனதோடு ஆதரித்து நிறை வேற்றியது. மறுமலர்ச்சி தி.மு.க.வரவேற்றது. பாட்டாளி மக்கள்கட்சி வர வேற் றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றது. காங் கிரஸ் கட்சியும் வாய்மூடிக் கிடந்தது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் - 234 சட்டமன்ற உறுப்பி னர் களைக் கொண்ட தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் என்பது ஆறரைக்கோடி மக்களின் இதயக்குரல். இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டின் தீர் மானம். இந்தப் போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு இந்திய அரசு என்ன செய்தது? அந்தப் போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 48 மணிநேரத்தில், அது வும் மிக வஞ்சகமான திட்டத்தில் கருணாநிதி செய்தார். இப்படிப்பட்ட பித்த லாட்ட வேலையில் அவரைப் போன்ற திறமைசாலி, உலகத்தில் யாரும் கிடையாது. ராஜபக்சே வரப்போகின்றான் என்று தெரிந்துகொண்டு, இந்தத் தீர்மானத்தைப் போட்டார்.அவருக்குத் தெரியும், மன்மோகன் சிங் அலுவலகத் தில் இந்தத் தீர்மானத்தைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுவார்கள் என்று தெரியும். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு நான் சட்டசபையைக் கூட்டி னேன், தீர்மானம் கொண்டு வந்தேன் என்று சொல்வதற்காக ஒரு தீர்மானத் தைப் போட்டார்.

தொடரும் ............

No comments:

Post a Comment